Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கைத் தீவின் விதி நந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமல்ல. இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கக்கூடிய ‘எதிர்ப்பு வெளி” எனப்படுவதும் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எனப்படுவது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தூலமான இருப்பைக் கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்ட மற்றும் ஏற்றுக்கொள்ளாத அரசுக்கு எதிரான எல்லா சக்திகளுக்கும் அது ஒரு தூலமான, திட்டவட்டமான முன்னுதாரணமாகக் காணப்பட்டது. ஆனால், அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டபோது, அப்படிப்பட்ட ஓர் இயக்கமே தோற்கடிக்கப்படலாம் எனில் மற்றவை எல்லாம் எம்மாத்திரம் என்றதொரு நிலை தோன்றிவிட்டது. யுத்தத்தில் வெற்றிபெறுவதற்காக அரசாங்கம் ம…

  2. கனவுகள் சில வேளைகளில் கலைந்து போகக் கூடியது. சில வேளைகளில் நிஜமாக நடக்கக் கூடியது. ஆனால் ஈழத்தமிழர்களின் கனவுகள் எந்த வேளைகளிலும் நிஜமானதாக தெரியவில்லை "கடைசி சண்ட முடிஞ்சு வரேக்க என்ர அப்பா ஆமீட்ட சரணடைஞ்சவர் என்றோ ஒரு நாள் அப்பா வருவார்" என்று கூறிய பிஞ்சுக் குழந்தையின் ஆசைகள் இன்று நிறைவேறாத கனவு போல மாறிவிட்டது. இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பிடுங்கப்பட்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்கள், தங்களின் உணர்வுகள் அழிக்கப்பட்டாலும் பரவாயில்லை உயிர்களை காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் நிலமை இற்றை வரைக்கும் மறைக்கப்பட்ட உண்மையாகவே இருந்து வருகின்றது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தற்போது முக்கியமான ஒரு செ…

    • 0 replies
    • 769 views
  3. சென்னையில் 3-2-2013 அன்று மக்கள் நல்வாழ்வுக் கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட “தமிழீழ இனப்படுகொலையும் தமிழ்ச் சமூகத்தின் கடமையும்” என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கத்தின் காணொளி மற்றும் நிழற்படப்பதிக் காண http://www.chelliahmuthusamy.com/2013/02/blog-post_8.html

  4. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய இந்தியப் பயணத்தை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப் போகிறார். அவரது இந்தப் பயணத்தின் நோக்கம், புத்தகாயாவுக்கும், திருப்பதிக்கும் புனித யாத்திரை செல்வது தான் என்று கூறுகிறது அரசாங்க அறிக்கை. பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகாயாவில் 1500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பௌத்த விகாரை உள்ளது. இங்கு தான் புத்தருக்கு ஞானம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள மகாபோதி விகாரையில் இருந்த வெள்ளரச மரக் கிளையில் ஒன்றைத் தான், அசோக மன்னனின் மகளான சங்கமித்தை, இலங்கைக்கு கொண்டு வந்து அநுராதபுரத்தில் நாட்டியதாகவும் வரலாறு கூறுகிறது. பௌத்தர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படும், புத்தகயாவுக்கும் இலங்கைக்கும் நெருக்கமான உறவுகள் உள்ளன. இலங்கையில் இ…

  5. ஆப்கான் – மத்திய ஆசியா – எண்ணெய் – இஸ்லாமிய தீவிரவாதம் ! in அமெரிக்கா, பன்னாட்டு நிறுவனங்கள், புதிய கலாச்சாரம், மதம், மத்திய கிழக்கு by வினவு, February 7, 2013 சவூதி இளவரசரும், பின்லாடனும், முல்லா ஒமரும், கமல்ஹாசனுக்கு வெகு காலம் முன்னதாகவே அமெரிக்காவுக்கு கைக்கூலி வேலை செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். அவர்கள் எந்த ஆஸ்கர் விருதுக்கு ஆசைப்பட்டு இதனைச் செய்தார்கள் ? “வி சுவரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரானதா இல்லையா?” என்ற கோணத்தில் மட்டுமே இப்பிரச்சினை குறித்த விவாதம் நடந்திருக்கிறது. அந்தப் படம் யாருக்கு ஆதரவானது என்பது குறித்த விவாதம் நடைபெறவில்லை. “இது அமெரிக்க ஆதரவுத் திரைப்படம்; ஆஸ்கர் விருதுக்காக அமெரிக்க கைக்கூலித்தனம் செய்திருக்கிற…

  6. சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வி – ஜெனிவா வாய்ப்பையும் தவறவிடுமா இந்தியா? 65வது சுதந்திர தினத்தில் உரையாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை கிடையாது என அறிவித்திருந்தார். இதன் மூலம் இந்தியாவுடனான சிறிலங்காவின் வரலாற்று ரீதியான உடன்பாட்டை இது மீறுகின்றது. இந்தியாவை சிறிலங்கா ஏமாற்றிவருகிறது. இவ்வாறு Firstpost.com இணையத்தளத்தில் G Pramod Kumar எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை பதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்தியாவானது சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக சமூகம் மேற்கொள்ளும் அழுத்தத்தை தடுத்தல் மற்றும் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் புறக்கணித்தல் …

    • 2 replies
    • 622 views
  7. இடையே எந்த அசம்பாவித முடிவுகளும் எடுக்கப்படாதவிடத்து, இந்திய நாட்டின் ஆட்சி பீடத்திற்கான தேர்தலுக்கு இன்னமும் 16 மாதங்களே இருக்கின்றன. பெரும்பாலும் அடுத்த ஆட்சி காங்கிரஸ் அல்லாத கட்சிகளாலேயே அமைக்கப்படும் என்றே கருத்துக்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களும், அதிருப்திகளும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில், காங்கிரசின் பிரதித் தலைவராகவும், அடுத்த பிரதமர் வேட்பாளராகளும் ராகுல் காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸ் கட்சி தற்போது, அவரது குடும்பச் சொத்தாகவே மாற்றம் பெற்றுள்ளது. இதனால், எதிர்வரும் தேர்தல் சோனியா குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தையும் சேர்த்தே நிர்ணயம் செய்யப்…

    • 0 replies
    • 750 views
  8. தமிழீழ விடுதலைப் போரில் அடுத்து என்ன? அயர்லாந்து தீப்பாயத்தின் பின்னணி அதன் தாக்கம் . விடுதலை இராசேந்திரன்..பொதுச்செயலாளர் பெரியார் திராவிடர் கழகம்.

  9. வெளியாருக்காகக் காத்திருத்தல் - நிலாந்தன் மறுபடியும், மார்ச் மாதத்தை நோக்கி ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் பெருகத் தொடங்கிவிட்டன. அமைச்சர் பீரிஸின் இந்திய விஜயம் அமெரிக்கப் பிரதானிகளின் இலங்கை விஜயம் என்பவற்றின் பின்னணியில் ஜெனீவாவில் ஏதோ பெரிய திருப்பம் ஏற்படப்போகிறது என்ற விதமாக ஊகங்களை ஊடகங்கள் உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டன. இதில் உண்மையை விடவும் ஊடகங்கள் உருவாக்கும் மாயத்தோற்றமே பெரிதாகிக்கொண்டு வருகிறது. குறிப்பாக, படித்த, பத்திரிகை வாசிக்கின்ற, இணையத் தொடர்புடைய நடுத்தர வர்க்கத்தினர் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளின் பின் எடுபடத் தொடங்கிவிட்டார்கள். தமிழர்கள் இப்படியாக வெளியிலிருந்து வரக்கூடிய மீட்சிகளுக்காக காத்திருப்பது என்பது இதுதான் முதற்றடவையல்ல. இல…

    • 2 replies
    • 1.1k views
  10. வருகிறது மீண்டும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஜெனீவா மாநாடு. இலங்கை அரசாங்கம் தொடர்பாக அமெரிக்கா இந்த முறையும் மனித உரிமை பேரவையில் விசேட பிரேரணையொன்றை முன்வைக்கவிருக்கிறது. அன்மையில் இலங்கைக்கு அமெரிக்காவின் மூன்று மூத்த அதிகாரிகள் விஜயம் செய்தனர். அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர்களான ஜேம்ஸ் முவர், விக்ரம் சிங் மற்றும் ஜேன் சிமர்மன் ஆகியோரே அவர்களாவர். அவர்கள்; கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே ஜேம்ஸ் முவர், தமது நாடு இலங்கை விடயத்தில் கடந்த வருடம் போலவே பிரேரணையொன்றை இம்முறையும் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப் போவதாக கூறினார். அமெரிக்க அரசாங்கத்தில் உள்ளவர்களைத் தவிர வேறொருவருக்கும் பிரேரணையில் என்ன வரப் போகிறது என்று இன்னமும்; தெரியாது. ஆனால் இப்போதே பலர்…

    • 1 reply
    • 907 views
  11. தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொறியினர் எமது விடுதலைப் போராட்டத்தில் அண்ணளவாக 34 இயக்கங்கள் இருந்தன. அவற்றில் கணிசமான போராளிகளும் இருந்தன. அவர்களில் பலருக்கு எமது போராட்டம் தொடர்பான கசப்பான அனுபவங்கள் இருந்தன. அவ்வமைப்புகள் மீதான விமர்சனங்களும் இருந்தவண்ணமே இருந்த போதும், இவர்களில் எத்தனைபேர் அதை ஆவணமாகவோ அல்லது விமர்சனமாகவோ பதிவு செய்துள்ளனர். இன்று இனியொருவில் ஐயர் எழுத ஆரம்பித்த பிறகு, பலருக்கு தமது நிலைபற்றிய விமர்சனத்தையும் அதிருப்தியையும் எழுதமுடியும் எனறு முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. அன்று இருந்த இயக்கங்களில் இருந்த பலர் தமது இயங்கங்களின் உள்முரண்பாடுகளின் காரணமாகவும், புலிகளின் சகோதரப் படுகொலைகள் காரணமாகவும் ஒதுங்கியவர்கள்,…

    • 6 replies
    • 1.8k views
  12. கடந்த பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றம் கடந்த வாரம் நடந்தேறியுள்ளது. அமைச்சர்கள் மட்டத்தில் இடம்பெறத்தக்க இலாகா மாற்றங்கள் தொடர்பாக பலவித எதிர்வு கூறல்களும் முன்னர் வெளியிடப்பட்டு வந்துள்ளன. ஆனால் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் பதவிப் பொறுப்புக்களில் குறிப்பிடத்தக்க மாற்றமெதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. உலகிலேயே பெரிய அமைச்சரவை என்ற சாதனை புதிதாக உருவாக்கப்பட்ட ஏழு அமைச்சுக்களுடன், தற்போது அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பதால் அந்த தொகை 67 ஆக அதிகரிக்கிறது. பிரதி அமைச்சர்கள் 28 பேர் மற்றும் திட்ட அமைச்சர்கள் இருவர் என அமைச்சர்களது முழு …

    • 0 replies
    • 630 views
  13. ஜெனிவாத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. திருவிழாவின் பிரதான உபயகாரர் தன்னுடைய திக்குப் பாலகர்களை இலங்கைக்கு அனுப்பத் தொடங்கிவிட்டார். ஏற்கனவே சொன்னபடி திருவிழாவுக்கு ஏற்ற ஆயத்தங்களை இலங்கை செய்து முடித்திருக்கிறதா அல்லது முருங்கை மரத்திலிருந்து இன்னமும் இறங்காமல் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்பதை அறியவேண்டியது உபயகாரரின் கடமை. இல்லாவிட்டால் திருவிழா நடத்தியும் பயனில்லை. ஒருவேளை இன்னமும் முருங்கை மரமே தஞ்சமென்று இலங்கை வேதாளக் குணங்களோடு இருந்தால், திருவிழா மங்கலகரமாக இருக்காது. மாறாக பேயோட்டும் சடங்காக மாறிவிடும். திக்குப் பாலகர்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி, தாம் குடிகொண்டிருக்கும் முருங்கை மரம் பற்றிய கணிப்புகளைக் கலைக்க இலங்கையில் மணிமுட…

  14. ராகுல் காந்தியால் காங்கிரசைக் காப்பாற்ற முடியுமா? மக்களவை தேர்தலுக்கு இன்னும் சுமார் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தியால் இப்போது பெரும் நெருக்கடியில் இருக்கும் காங்கிரசை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் வலிமைப்படுத்திக் காப்பாற்றமுடியுமா?காங்கிரஸ் கட்சியே காப்பாற்றப் படவேண்டுமா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். இந்தியாவில் தேர்தல் பாராளுமன்ற ஜனநாயக முறையில் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும் அதை விட சிறந்த மாற்றாக எதையும் பார்க்க இயலாத நிலையில் இன்னமும் அதன் மீதே நம்பிக்கை வைத்திருப்பவன் என்ற முறையிலேயே இந்த விஷயத்தை நான் அணுக விரும்புகிறேன். இதில் இயங்கும் கட்சிகளில் இடதுசாரி கட்சிகள் பரவலாக பலம் பெறாத சூழலி…

    • 0 replies
    • 595 views
  15. சர்வதேசத்தின் அழுங்குப் பிடிக்குள் இஸ்ரேல் விரைவில் சிறீலங்கா.. சிறீலங்கா 1948 ற்கு பின் நடாத்திய அத்தனை ஆக்கிரமிப்பில் இருந்தும் வெளியேற வேண்டிய நிலை.. இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கைத் தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தூரத்து விளக்கு போல வெளிச்சம் காட்டியுள்ளது. நேற்று முன்தினம் ஐ.நா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை பாலஸ்தீன பகுதியில் நடாத்தியுள்ள அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் கைவிடும் முடிவுக்கு, இஸ்ரேல் உடனடியாக வந்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீன வட்டகையில் இஸ்ரேல் புரியும் நில ஆக்கிரமிப்பு சர்வதேசத்தின் கடும் கோபத்திற்குள்ளாகியிருப்பது சாதாரண விடயமல்ல, சிறீலங்காவிற்கும் பலத்த எச்சரிக்கையாக இறங்கியுள்ளது. மேற்குக் …

    • 4 replies
    • 3.5k views
  16. அரசியற் கட்சிகளிடையே பொது உடன்பாடு: சிவில் சமூகத்தின் முயற்சிகளும் தமிழரசுக் கட்சியின் நேரமின்மையும் முத்துக்குமார் அண்மைக்காலமாக தமிழ் அரசியலில் மூன்று முக்கிய விடயங்கள் பேசுபொருளாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம், தமிழ் சிவில் சமூகத்தின் தமிழ் அரசியற் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முயற்சிகள். பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அலுவலகத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டமை என்பனவே அம் மூன்றுமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் தற்போது உறுதியாகிவிட்டது. ஜனவரி 29ம் திகதி அவர்கள் செல்லவிருப்பதாக செய்திகள் வருகின்றன. அரசாங்கத்திற்கு ஜெனிவா நெருக்கடிகள் வருகின்ற போதெல்லாம் சம்பந்தன் ஓடிச்சென்று அரசாங்கத்தைப…

  17. இலங்கை இனப்படுகொலை தொடர்பில் ஐ.நா.வின் நடவடிக்கைகள் குறித்து ஒரு உள்ளக ஆய்வறிக்கையை சார்லஸ் பெட்ரி என்கிற ஐ.நா. அதிகாரி தலைமையிலான குழு நவம்பர் மாதம் வெளியிட்டது. இது ஐ.நா. உயர் அதிகாரிகளின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டினையும், செயல்பாட்டினையும் வெளிப்படுத்துகிறது. இதில் ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் இலங்கை அரசிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி இருப்பது பதியப்பட்டுள்ளது. 120 பக்கங்களுக்கு மேலான தகவல்களைக் கொண்ட இந்த அறிக்கை பல உள்தகவல்களை நமக்கு வழங்குகிறது. ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை, போர்குற்றம் என்பதாக மட்டுமே நின்றுவிட்டதையும், அரசியல் தீர்வினை நோக்கி தீர்மானகரமாக நகர இயலாதவாறு, முட்டுச்சந்தினை நோக்கிய நகர்வினை செய்ததற்கு பின்புல காரணங்களை இந்த அறிக்கை வெளிச்சத…

    • 0 replies
    • 591 views
  18. எமது உறவிலும் ஒரு புதிய பாதை உலக உறவிலும் ஒரு புதிய பாதை தத்தர் வீழ்ந்தோம் ஆயினும் வெல்வோம் வீழ்ச்சியின் அளவையும் தன்மையையும் விளங்கிக் கொண்டால். நாம்பட்ட இன்னலாலும் எமக்கு ஏற்பட்ட அளப்பெரும் தோல்வியாலும், துயரத்தாலும் எம்மை ஒட்டி இணைக்க முடியவில்லை என்றால் வளம் பொருந்திய எமது பண்பாட்டின் அர்த்தந்தான் என்ன? இந்து மாகடலை செந்நீராக்கிய இரத்தத்தாலும் எம் இதயத்தை கழுவமுடியாது போனதா? ஆறாய்ப் பெருகிய கண்ணீராலும் எம் வேறுபாடுகளைக் கழுவிச் சுத்தம் செய்ய முடியாது போனதா? வரலாறு எழுப்பும் இக் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். வீழ்ச்சியிலிருந்து நாம் மீழ்ச்சி பெறப் போவது எப்போ என்ற கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது. எப்போது நாம் எம் வேறுபாடுகளைக் கடந்து துயரப்…

  19. மீண்டும் ஒருமுறை ஜெனிவாவை நோக்கி, பலரது கவனமும் திரும்பத் தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர், இலங்கைக்கு சவால்மிக்கதாகவே இருக்கும் என்ற கருத்து, பல மாதங்களாகவே அடிபட்டு வந்தது தான். இப்போது, எதிர்பார்க்கப்பட்டதை விட இன்னமும் கடினமான – இறுக்கமான சூழல் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 19ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இலங்கை மதித்து நடந்து கொண்டதா, அதை நிறைவேற்றியதா என்பதை விளக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை தான், இறுக்கம் நிறைந்ததாக இருக்கும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கும் மேலாக, இன்னொரு புதிய தீர்மானத்தை எ…

  20. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுத்தால், சீனாவிடம் போய் உதவி கேட்போம் என்று கடந்தவாரம் ஒரு மிரட்டலை விடுத்திருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் போதிய கவனம் எடுத்து, விசாரணைகளை நடத்தாத நிலையில், இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய பின்னணியில், அமெரிக்காவில் மேலதிகப் பயிற்சிக்காக இலங்கை இராணுவத் தலைமையகத்தால், தெரிவு செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு, அமெரிக்கா வீசா வழங்க மறுத்து விட்டது. 53வது டிவிசனின் தளபதியாகப் பணியாற்றினார் என்பதற்காகவே, அவரை பயிற்சித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள அமெரிக்க…

    • 0 replies
    • 585 views
  21. விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு ஏறக்குறைய மூன்றே முக்கால் ஆண்டுகளாகிவிட்டன. எனினும் ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திருப்பகரமான மாற்றங்கள் எதையும் அவதானிக்க முடியவில்லை. அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதைச் சுட்டிக்காட்டியிருந்தார். விடுதலைப்புலிகள் இல்லாத இன்றைய அரசியல் சூழலில் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள்விடுத்திருந்தார். இந்தியாவின் மாறாத இந்நிலைப்பாட்டிற்கு காரணம் என்ன? விடுதலைப்புலிகள் தான் காரணம் என்றால் அவர்கள் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றியிருந்திருக்க வேண்டும். எ…

  22. மீண்டும் வீர வசனங்களை அள்ளி வீச ஆரம்பித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன். அதாவது, தமிழ் தேசிய இனத்தின் இருப்பை இல்லாதொழிக்க சிங்களம் முயற்சிப்பதாகவும், தமிழ் மக்களின் பிறப்புரிமையை பறிக்க எவரையும் அனுமதிக்க முடியாதெனவும் சம்பந்தன் கூறிய வீர வசனங்கள் ஊடகங்களில் பரவலாக இடம் பிடித்திருந்தது. அதுமட்டுமல்லாது, எதிர்வரும் மாதங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாமென்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார். அமெரிக்காவின் வசந்த அழைப்பும், தென்னாபிரிக்கா பயணமும், மார்ச் மனித உரிமைப் பேரவையில் சிங்களத்திற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேறும் என்கிற எதிர்பார்ப்பும் இணைந்து ,சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதுதான் சம்பந்தனின் கணிப்பு. இவ்வகைய…

    • 0 replies
    • 578 views
  23. அண்மையில் முன்னாள் பிரதம நீதியரசர் திருமதி ஷிராணி பண்டாரநாயக்க அவர்களை பதவியிலிருந்து நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தனது வன்மையான அதிருப்தியை வெளியிட்டது. அப்போது ஊடகவியலாளர்களால் இலங்கைக்கு வழங்கப்படும் அமெரிக்க உதவிகள் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போது 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிதியுதவிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டுக்கான நிதியுதவி தொடர்பாக அவ்விடயம் தற்சமயம் பரிசீலனையில் இருப்பதாகவும், அது தொடர்பாக இச்சமயத்தில் பதிலளிக்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது. இச்செய்தி வெளிவந்ததை அடுத்து இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் அமெரிக்கா இலங்கைக்கான உதவிகளை நிறுத்தினால் தங்களுக்கு சீனா உதவ…

  24. Started by akootha,

    றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனைத் தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள். அவளின் முன்பாகவே ரிஸானாவின் உயிர் பிரிந்தது. மூதூர் றிஷானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது. இதுதொடர்பில் சாதக பாதக கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. றிஷானாவை மீட்பதில் இலங்கை அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இறுதிக் கட்டத்தில் காத்திரமான பங்களிப்புக்களை அரசு மேற்கொள்ளவில்லை என்று கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சூழ் நிலையில், இலங்கையின் முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் நடந்து கொண்ட அசிரத்த…

  25. மகிந்த ராசபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த பெரும்பான்மை மக்கள் வழங்கிய வாக்கின் மூலம் கிடைத்ததல்ல, ஏனைய கட்சிகளை உடைத்து பலவீனப்படுத்தி பணம் கொடுத்து வாங்கி பெற்றுக்கொண்ட பெரும்பான்மை தான் என்பது பலருக்கும் தெரிந்த விடயம் தான். மகிந்த ராசபக்ச தலைமையிலான ஆளும் கட்சி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்த பலரை வாங்கிக்கொண்டது மட்டுமன்றி அக்கட்சியை மிக மோசமாக பலவீனப்படுத்தி இருக்கிறது. பலவீனமான எதிர்க்கட்சி தலைவராக இன்று ரணில் விக்கிரமசிங்க உள்ளார். ஜே.வி.பியை ஒன்றல்ல மூன்றாக உடைத்து பலவீனப்படுத்தி சிலரை தன் பக்கம் மகிந்த அரசு இழுத்துக்கொண்டது. அரசாங்கத்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.