அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படுவாரா? என்.கே அஷோக்பரன் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இல்லாவிட்டாலும், அவர் தொடக்கி வைத்த வௌ்ளிக்கிழமை விவகாரப் பயம், இலங்கையர்களிடம் தொடர்வதாகவே தெரிகிறது! கடந்த வௌ்ளிக்கிழமை (12) சமூக ஊடகங்களில் தீயாகப் பரவிய வதந்தி, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படப் போகிறார் என்பதுதான்! அரசியலமைப்பின் படி, தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன பதவி விலகினாலோ, ஜனாதிபதியால் அவர் பதவி விலக்கப்பட்டாலோ, அல்லது அவர் எம்.பி பதவியை இழந்தாலோ, பாராளுமன்றத்தின் நம்பிக்கையைத் தக்கவைக்கக் கூடியவர் என்று ஜனாதிபதி நினைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, பிரதமராக நியமிக்க முடியும். ஆகவே, இதன் நடைமுறை ரீதியிலான இரத்தினச் சுருக்கம், ஜனாதிப…
-
- 0 replies
- 288 views
-
-
நெருப்பு சமரில் நான்சி வெற்றி! யூசுப் என் யூனுஸ் அமெரிக்காவின் அதிகாரமிக்க மூன்றாம் நிலை பதவியில் இருக்கின்றவர்தான் நான்சி பெலோசி.இவர் தைவானுக்கு சுற்றுப் பிரயாணம் வருகின்றார் என்று சொன்னால் அதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்? அமெரிக்காவின் சபாநாயகர் பதவியில் இருக்கின்ற நான்சி பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வமான விஜயம்.அவை எல்லாம் ஓகே. அது பற்றி எந்தக் கேள்விகளை யாரும் எழுப்பவில்லை.அவர் அந்தப் பயணத்தில் தைவானுக்கும் போய் கால்பதிக்க இருக்கின்றார் என்ற தகவல் கசிந்த போது கொதித்துப் போனது சீனா. இந்த விடயத்தில் ஏன் சீனா கொதித்தப் போனது.அவர் அப்படி அங்கு போய் இறங்கினால் பெரும் அழிவுதான்…
-
- 0 replies
- 288 views
-
-
மாயாஜாலம் ஒரு மாயாஜாலம் போலவே, உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் புதிய முறைமை, இன்னும் பலருக்குத் தெரிந்து கொண்டிருக்கிறது. ஒரு சபையில், அதிக வட்டாரங்களை வென்ற கட்சிக்கும் அதே சபையில் ஒரு வட்டாரத்தை மட்டும் வெற்றிகொண்ட கட்சிக்கும், இறுதியில் ஒரே தொகை உறுப்பினர்கள் கிடைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட முக்கால்வாசி வட்டாரங்களில் வெற்றிபெற்ற கட்சிக்கு, அந்த சபையில் ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ளது. அதிக வட்டாரங்களை வெற்றிகொண்ட கட்சிக்காரர்கள், அந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். நடைபெற்று முடிந்த தேர்தலானது, தேசிய ரீதியாக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அரசாங்…
-
- 0 replies
- 288 views
-
-
Published By: VISHNU 07 NOV, 2023 | 11:26 AM ஆர்.ராம் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளின்போது ஏற்பட்ட முரண்பாடுகள் பொதுவெளிக்கு வந்துள்ள நிலையில், நிர்வாகப் பதவிகளில் இருந்தவர்கள் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்கள் தமக்கு கீழ்படியாது முரண்டுபிடித்தவர்களை களையெடுக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன என்பதை கடந்தவாரம் பார்த்திருந்தோம். களையெடுக்கும் முதலாவது அத்தியாயம் வவுனியாவில் அரங்கேற்றப்பட்டதோடு அதற்கு அடுத்தபடியாக முல்லைத்தீவு, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மா…
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
1833 – 1921 வரையான காலகட்டம்: தமிழ்த் தலைவர்களும் இலங்கை தேசிய காங்கிரசும் April 18, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இ…
-
- 5 replies
- 287 views
-
-
யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது? - நிலாந்தன் அண்மையில் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஓர் உயர்தர உணவகம் திறக்கப்பட்டது. அதன் பெயர் “டெலிஸ்” . அதற்குச் சில கிழமைகளுக்கு முன்பு அதே பலாலி வீதியில் மற்றொரு உயர்தர உணவகம்-காலித் பிரியாணி-திறக்கப்பட்டது. முன்சொன்ன உணவகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் இந்த உணவகம் உண்டு. இந்த இரண்டு உணவகங்களும் திறக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நகரத்தின் மையத்தில் முன்பு வெலிங்டன் தியேட்டர் அமைந்திருந்த வளவிற்குள் ‘கீல்ஸ்’ பேரங்காடி திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாளிலிருந்து இரவும்பகலும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு குவிகிறார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் இருந்து நடந…
-
- 0 replies
- 287 views
-
-
சர்வகட்சி அரசாங்கம் எனும் ரணிலின் தந்திர வலை - புருஜோத்தமன் தங்கமயில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் அற்ற ஆட்சியை, நிலைநிறுத்திவிட முடியும் என்று நம்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கனவு, எதிர்க்கட்சிகளால் கலைக்கப்பட்டு இருக்கின்றது. நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்துச் செயற்பட வேண்டிய அவசியம் இருப்பதாக, ரணில் தொடர்ந்தும் கூறிவருகிறார். பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ஷ இருந்து விலகியதும், பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட ரணில், பொதுஜன பெரமுன ஆளுமை செலுத்தாத, ஐக்கிய தேசிய கட்சியின் கொள்ளை, கோட்பாடுகள் கொண்ட …
-
- 0 replies
- 287 views
-
-
மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையான தமிழரசுக் கட்சி புருஜோத்தமன் தங்கமயில் இலங்கை தமிழரசுக் கட்சி, மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையாக அலைக்கழிந்து கொண்டிருக்கின்றது. கட்சியின் தலைவராக ‘மேய்ப்பனாக’ இருக்க வேண்டிய மாவை சேனாதிராஜாவோ, அலைக்கழியும் மந்தைக் கூட்டத்தில் வலுவிழந்த ஆடாக அல்லாடுகிறார். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், தமிழரசுக் கட்சி, தன்னைத் தானே அசிங்கப்படுத்தி, மக்களிடம் வெளிப்படுத்திக் கொண்ட அளவுக்கு, தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கும் எந்தவொரு கட்சியும் நடந்து கொண்டதில்லை. கட்சியின் தலைவரான மாவை தொடங்கி, கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், வேட்பாளர்களாக போட்டியிட்டவர்கள், போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் என்று தமிழரசுக் கட்சிக்குள் இருக்கின்ற பல்வே…
-
- 0 replies
- 287 views
-
-
21 MAY, 2025 | 03:30 PM ரொபட் அன்டனி தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு பொருளாதார வழித்தடம் உருவாக வேண்டியது அவசியமாகும். இலங்கை இந்தியாவுக்கு இடையிலான பாலம் அமைக்கப்படுவதை தற்போதைய அரசாங்கம் அதனை விரும்பவில்லை. ஆனால் பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்தாமல் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2050ஆம் ஆண்டாகும்போது இந்தியா 30 ட்ரில்லியன் பொருளாதாரத்துடன் உலகில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். அப்போது அந்த வளர்ச்சியில் பல்வேறு நாடுகள் நன்மை பெறும். இதற்காக நாம் என்ன செய்யப்போகின்றோம்? எமது தொடர்புகள் என்ன ? எவ்வாறான தொடர்புகளை மேற்கொ…
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
இரண்டரை வருடங்களில் எதனையும் தீர்க்கவில்லையே http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-17#page-3
-
- 0 replies
- 287 views
-
-
-ஐ.வி.மகாசேனன்- “நாம் வரலாற்றை மாற்ற முடியும். ஆனால் புவியியலை மாற்ற முடியாது. நம் நண்பர்களை மாற்ற முடியும். ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது” -அடல் பிஹாரி வாஜ்பாய்- இலங்கை அரசியலிலும், ஈழத்தமிழரசியலிலும் இந்தியா தவிர்க்க முடியாததொரு காரணியாகும். தனிப்பட்ட விருப்பு – வெறுப்புக்கள் ஒவ்வொருவரிடமும் காணப்படினும், பிராந்திய அரசாக இந்தியாவின் தாக்கம் இலங்கை அரசியலிலும் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்திலும் ஆழமான கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் பின்னணியிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலங்கைக்கான விஜயம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. எனினும் இந்தியப் பிரதமரின் விஜயம் வரலாற்றை திசைதிருப்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக இலங்கை -இந்திய பண்பாட்டு உறவ…
-
- 1 reply
- 287 views
- 1 follower
-
-
நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’ முருகானந்தன் தவம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் முழு ஆட்சி அதிகாரத்தை தாங்களே கைப்பற்றுவோம், ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்த இலங்கை தமிழரசுக் கட்சி யாழ். மாவட்டத்தில் உள்ள முக்கிய சில சபைகளைப் பறிகொடுத்துள்ள நிலையில், தமிழினத் துரோகி என தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட ஈ.பி.டி.பி. (வீணை) டக்ளஸ் தேவானந்தாவின் காலடி சென்று மண்டியிட்டதன் மூலம் அவரின் கட்சி ஆதரவுடனேயே சில யாழ். மாநகரசபை உள்ளிட்ட சில சபைகளைக் கைப்பற்றியுள்ளது. ‘நாடு அனுரவோடு ஊர் எங்களோடு’ என்றார் தமிழரசின் தலைவர் ஒருவர். ஆனால், இன்று ‘நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’ என்றவாறாக வடக்கின் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் பல உள்ளூராட்சி ச…
-
-
- 2 replies
- 287 views
-
-
மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா, அரசியல் பொறியில் அகப்படுவாரா? :வியாசன் 07/13/2015 இனியொரு இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மைத்திரிபால சிரிசேனவின் நல்லாட்சி தலைகீழாக மாறிப் போனது. யாருக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியைக் கையகப்படுத்தினாரோ அவரையே பிரதம மந்திரியாக்க மைத்திரி முன் நிற்கிறார். மகிந்த ராஜபக்ச அரசில் அமைச்சராகப் பதவிவகித்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக இறுதி நேரத்தில் புற்றுக்குள்ளிருந்து கிளம்பிய மைத்திரிபால சிரிசேன இப்போது 180 பாகையில் திரும்பி மகிந்த ராஜபக்சவையும் அவரது சகாக்களையு ம் பாதுகாத்து ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதற்கு பச்சைகொடி காட்டியுள்ளார். இலங்கையை ஒட்டச் சுரண்டிய மகிந்த ராஜபக்சவுக்கும் அ…
-
- 0 replies
- 287 views
-
-
கிளீன் சிறீலங்கா:பொதுக் கழிப்பறைகள் - நிலாந்தன் கிளீன் சிறீலங்கா தொடர்பாக கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையை வரவேற்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்திருந்தார். ஸ்ரீலங்காவை ஓரளவுக்காவது கிளீன் பண்ணக்கூடிய இடம் சுற்றுச்சூழல் விவகாரங்கள்தான் என்பதை ஏற்றுக் கொண்ட அவர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். நீண்ட தூரப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை சிரம பரிகாரத்துக்காக நிறுத்தும் இடங்களில் உள்ள சுகாதாரக் கேடுகளை அவர் சுட்டிக் காட்டினார். குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்து வழியில் பேருந்துகள் இடைநிறுத்தப்படுகின்ற உணவகங்களில் உள்ள கழிப்பறை வசதிகளைக் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை அவர் சுட்டிக் காட்டினார். நண்பர…
-
- 0 replies
- 286 views
-
-
12 AUG, 2024 | 11:09 AM டி.பி.எஸ். ஜெயராஜ் ரணில் விக்கிரமசிங்க முதலில் பிரதமராகவும் பிறகு ஜனாதிபதியாகவும் அதிகாரத்துக்கு வந்த நேரம் தொடக்கம் எதிரிகளும் விமர்சகர்களும் அவரைப்பற்றி பல தவறான கதைகளை கட்டிவிடுவதில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு அஞ்சுகிறார் என்பதும் அவர் வழமைக்கு மாறான நடவடிக்கைகள் மூலமாக தேர்தலைப் ஒத்திவைப்பார் என்பதும் அந்த்கதைகளில் ஒன்று. இந்த போலிக்கதை தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் திகதியை வர்த்தமானியில் வெளியிட்டபோது அம்பலமானது. விக்கிரமசிங்கவே ஒரு சுயேச்சை வேட்பாளராக முதலில் தனது கட்டுப்பணத்தையும் செலுத்தினார். இந்த உண்மை முகங்கொடுக்க இயலாத அவரது எதிரிகள் தற்போ…
-
-
- 1 reply
- 286 views
- 1 follower
-
-
Published By: VISHNU 12 JAN, 2024 | 11:32 AM வினோத் மூனசிங்க நவம்பர் 2, 1917 இல், பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலரான ஆர்தர் பால்ஃபோர் ரோத்ஸ்சைல்ட் அரசருக்கு பாலஸ்தீனத்தில் யூத தேசிய இல்லத்தை உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து ஓர் கடிதத்தை எழுதினார். ஒரு வாரம் கழித்து, அரசாங்கம் இந்த பால்ஃபோர் பிரகடனத்தை பகிரங்கப்படுத்தியதுடன், இது சியோனிச நோக்கத்திற்கான ஆதரவின் முதலாவது பொது வெளிப்பாடாக அமைந்தது. இது குறிப்பாக பால்ஃபோர் ஒரு யூத-விரோதியாக அறியப்பட்டதால், பாலஸ்தீனியர்களிடையே மட்டுமல்லாது, பிரிட்டிஷ் யூத சமூகத்தினரிடையேயும் கவலையை ஏற்படுத்தியது. செப்ரெம்பர் 5, 1918 அன்று, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, அமெரிக்க ஜனாதிப…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
நோக்கத்தையும், பொறுப்பையும் நிறைவேற்றுமா ஐ.நா…? நரேன்- இலங்கையைப் பொறுத்தவரையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 37 ஆவது கூட்டத்தொடர் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கையின் மீது பல்வேறு வகைகளில் சர்வதேசத்தின் பார்வை திரும்பியுள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாங்காய் வடிவத் தீவை இலக்கு வைத்து சர்வதேச ஆளும் வர்க்கங்கள் எப்படியாவது தமது கால்களை பதித்து விடவேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு இருந்தன. அதன் ஒரு கட்டமாக இத்தீவில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதலின் போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இ…
-
- 0 replies
- 286 views
-
-
குறிப்பால் உணர்த்தல் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், இம்முறை வசந்த காலத்தில், நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்றோரின் தொகை மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. குறிப்பாக, முஸ்லிம்கள் வழமைபோல, நுவரெலியாவுக்குச் செல்லவில்லை என்பது வெள்ளிடைமலை. நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள், கூட்டிணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கை, வெற்றியளித்துள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகின்ற சமகாலத்தில், “இது ஒரு வேண்டத்தகாத நிலைப்பாடு” என்றும் சிலர், அபிப்பிராயம் வெளியிட்டு வருகின்றனர். அதாவது, நியூட்டனின் இரண்டாம் விதி வேலை செய்யத் தொடங்கி இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்…
-
- 0 replies
- 286 views
-
-
முரண்பாடுகளை அதிகரித்த மோடியின் வருகை தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. அதன் ஆரம்பத்தில் இருந்தே இந்திய எதிர்ப்புணர்வில் உறுதியாகவிருந்ததுடன் சீனாவுக்கு ஆதரவான ஒரு அரசியல் கட்சியாகவே செயற்பட்டது. அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்ததுடன், அதன் அப்போதைய தலைவர் ரோஹன விஜேவீர தலைமையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து தென்னிலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது. அனுரகுமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பியின் இன்றைய முன்னணி தலைவர்களில் பலர் இந்திய எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஜே.வி.பியில் இணைந்தவர்களாகவேயுள்ளனர். இலங்கையின் வடக்குக்கு ‘அமைதி காக்கும் படையை’ அனுப்பி வைக்க கைச்சாத்திடப்பட்ட 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்த…
-
- 0 replies
- 286 views
-
-
தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதா? நிலாந்தன்:- 30 ஆகஸ்ட் 2015 தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்துகொள்ளல் என்ற தலைப்பின் கீழான இப்பயிலரங்கில் மூவினத்தைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றினார்கள். இப்பயிலரங்கில் ஒரு நாள் ஒரு நாடகம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அந்நாடகத்தின் பெயர் ‘ஒரு நாடு இருதேசம்’. அதில் இச்சிறு தீவில் உள்ள எல்லா அரசியல் போக்குளையும் பிரதிபலிக்கும் விதத்தில் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அரசியல் கட்சி பிரமுகர்களை ஒரு நாடு இரு தேசம் என்றகருத்துத் தொடர்பாக பேச வைப்பதாக அந்த நாடகம் உருவாக்கப்பட்டிருந்தது. நாடகம் முடிந்தபின் வளவாளர்கள் …
-
- 0 replies
- 286 views
-
-
திசை காட்டுமா திசை காட்டி ? நிலாந்தன். அனுரா எளிமையானவர்தான். சாதாரண சனங்கள் தொட்டுக் கதைக்கக்கூடிய ஒரு ஜனாதிபதியும்தான். அவர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த வாரம் பாசையூருக்கு வந்த பொழுது பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கவில்லை. சீருடை அணிந்த படையினரின் பிரசன்னம் மிகக்குறைவாகவே இருந்தது. பதிலாக மாறுவேடத்தில் உலாவும் புலனாய்வுத் துறையினர் அதிகமாகக் காணப்பட்டார்கள். அனுர ஒரு காரில் வந்து இறங்கினார். அவர் அங்கிருந்த பௌத்த பிக்குகளின் காலில் விழுந்தார். ஏனைய மதகுருமார்களின் காலில் விழவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் அவரை வரவேற்ற முதிய அருட் சகோதரி ஒருவர் அவருடைய இரண்டு கன்னங்களையும் தடவி ஆசீர்வதித்தார். அவ்வாறெல்லாம் தொட்டுப் பழகக்கூடிய அளவுக்கு அ…
-
- 0 replies
- 286 views
-
-
சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராகியதன் மூலம் சாதிக்கப் போவது என்ன? இக்கேள்விக்குரிய பதில் மற்றிருகேள்விகளில் இருந்தே தொடங்குகிறது. முதலாவதுகேள்வி, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதற்கான உள்நாட்டுப் பின்னணிஎது? இரண்டாவது கேள்வி அவர் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பிராந்தியமற்றும் அனைத்துலக பின்னணி எது? முதலாவது கேள்வி. அவர் எதிர்க்கட்சித் தலைவராக ஏன் தெரிவுசெய்யப்பட்டார்? ஏனெனில் யார் எதிர்க்கட்சியார் ஆளும் கட்சி என்று துலக்கமாகக் கூற முடியாத ஓர வித கலங்கலான நிலை நாடாளுமன்றத்தில் தோன்றியுள்ளது. சரி. அப்படி ஒரு நிலை தோன்றக் காரணம் என்ன? காரணம் - ஜனவரி 08 ஆம் திகதி நிகழ்ந்த ஆட்சிமாற்றம்தான் அந்த ஆட்சி மாற்றமானது ஆளும் கட்சிக்கு எதிராக …
-
- 1 reply
- 286 views
-
-
ஐ.தே.க மறுசீரமைப்பு தேர்தல் வெற்றிக்கு உதவாது அரசாங்கமும் ஆளும் கட்சியிலுள்ள இரண்டு பங்காளிக் கட்சிகளும், கடந்த சில வாரங்களாகக் குறிப்பாக, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெற்ற பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல், நாட்டு மக்களை முற்றாக மறந்து விட்டன போலும். அவற்றுக்குள்ளே தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவே, அவற்றுக்கு நேரம் போதாது போல்தான் தெரிகிறது. அவ்வாறு இருக்க, அரசாங்கத்தினதும் அவ்விரண்டு கட்சிகளினதும் தலைவர்கள், எவ்வாறு மக்களைப் பற்றிச் சிந்திக்கப் போகிறார்கள்? நீண்ட காலமாக, அரசாங்கத்துக்குள் நிலவி வந்த முரண்பாடுகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து, மோதலாக மாறி, பிளவாகவும் மாறி வருகிறது. அரசாங்கத்திலிருந்த ஜ…
-
- 0 replies
- 286 views
-
-
திருமதி ரூபவதி நடராஜா, எரிக்கும் பொழுது அங்கு கடமையாற்றிய முன்னைய தலைமை நூலகர், யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் சந்தரெசி சுதுதுங்க, இன்றைய சிங்கள இலக்கிய கவிஞர். எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர் - இருவரும் யாழ் நூலக எரிப்பு பற்றி தமிழிலும் [யாழ்ப்பாணம் பொது நூலகம், அன்றும் இன்றும்] சிங்களத்திலும் [“தீப்பற்றிய சிறகுகள்", கவிதை தொகுப்பு - இதன் தமிழாக்கம் விரைவில் வரவுள்ளது] எழுதியுள்ளார்கள். வடக்கினதும் தெற்கினதும் ஆதங்கம் இங்கு தென்படலாம் என்று எண்ணுகிறேன்?, என்றாலும் நான் சிங்களம் தெரியாததால், ரூபவதி நடராஜாவின் புத்தகம் மட்டுமே வாசித்து உள்ளேன், தமிழாக்கம் வந்த பின்பே சந்தரெசி சுதுதுங்கவின் கவிதையையும் வாசிப்பேன். …
-
- 0 replies
- 286 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-01#page-7
-
- 0 replies
- 286 views
-