அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
வடக்கின் களம் யாருக்கு பலம்? July 12, 2020 தாயகன் சற்றுத் தணிந்திருந்த கொரோனா மீண்டும் வெளிக்கிளம்பி நாட்டை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள போதும் இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தீவிர தேர்தல் பிரசார யுத்தத்தில் களமிறங்கியுள்ளன . வழக்கம் போலவே இம்முறையும் சிங்கள இனவாதம், தமிழ் இனவாதம்,முஸ்லிம் இனவாதம் என்ற ஆயுதங்கள் மூலமே தேர்தல் பிரசார யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் தேர்தலில் வெற்றிபெற்றால் மக்களுக்காக என்ன செய்யப் போகின்றோம் என்று கூறுவதை தவிர்த்து தமது எதிரிக்கட்சிகள் மீது வசைபாடும்,சேறுபூசும் குற்றம்சாட்டும் பிரசாரங்களும் அதிகளவில் இடம்பெறுவதன…
-
- 0 replies
- 423 views
-
-
வடக்கின் மீதான சீனாவின் ‘புதிய காதல்’ என்.கே. அஷோக்பரன் இலங்கைக்கான சீன நாட்டு தூதுவர், கடந்த வாரம் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் என இலங்கையின் வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்களின் அடையாள விஜயமாக, நல்லூர்க் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவது அமைந்துவிடுகின்றது. அதேபோல், சீனநாட்டின் தூதுவரும் மேலாடை களைந்து வேட்டி கட்டி, கந்தன் தரிசனம் பெற்று, கோவில் வாசலில் எடுத்த புகைப்படங்கள் வௌியாகியிருந்தன. வௌிநாட்டுத் தூதுவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்வதொன்றும் புதிய விடயமல்ல! ஆகவே, சீன நாட்டின் தூதுவரின் வடக்குக்கான விஜயம் பற்றி, தனித்துக் குறிப்பிட வேண்டியது…
-
- 0 replies
- 351 views
-
-
வடக்கின் மீது கைநீட்டும் முயற்சி வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி, தமக்கான அரசியல் இலாபத்தை அடைவதற்குப் பல்வேறு தரப்பினரும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தை வைத்து, முதலமைச்சர் விக்னேஸ்வரனைக் குற்றவாளியாக்க ஒரு தரப்பு முனைகின்றது. அதேவேளை, இன்னொரு தரப்பு, அவர் நீதியாக, வெளிப்படையாக நடந்து கொண்டுள்ளார் என்று மகுடம் சூட்டுகின்றது. இந்த விவகாரத்தை, அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கூட முனைப்புகள் காட்டப்படுகின்றன. அதேவேளை, மற்றொரு புற…
-
- 0 replies
- 482 views
-
-
வடக்கின் முதலமைச்சர்; முடிவில்லாப் பிரச்சினை வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கின்ற நிலையில், வடக்கின் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. முதலாவது வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையிலும் கூட, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 6 மாகாண சபைகளுக்கும், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது நிச்சயமற்ற நிலையிலேயே இருக்கிறது. தேர்தல் முறை தொடர்பாக கட்சிகளுக்கிடையில் இன்னமும் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில், தேர்தலை எப்படி – எப்போது நடத்துவது என்று இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இதனால் இழுபறி நிலை நீடிக்கும் சூ…
-
- 0 replies
- 500 views
-
-
வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? 2013ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட தற்போதைய வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்களில் முடியவுள்ள நிலையில் அடுத்த மாகாண சபையைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் மீது அனைவரதும் கவனம் திரும்பத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளின் ஆயுட்காலம் முடிந்து விட்ட நிலையிலும், அவற்றுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை திருத்தும் யோசனை பாராளுமன்றத்தில் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் அதனை முன்னெடுப்பதா, இல்லையா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் வரும் ஒக்டோபர் மாதம் வடக்கு மாகாண சபையின் ஆயுள் முடிந்த பின்னர் உடனடியாக அதற்குத் தேர்தல் நடத்துவதற்கான…
-
- 0 replies
- 452 views
-
-
வடக்கிற்கு ஹீரோவான அநுர Sivarasa Karunakaran on February 21, 2025 Photo, @anuradisanayake உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி. குறிப்பாக வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களிலும் தன்னுடைய கொடியை ஏற்ற விரும்புகிறது. இந்த நோக்கத்தையும் சேர்த்தே கடந்த சில நாட்களுக்கு முன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கான தன்னுடைய பயணத்தைத் திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வந்த அநுர, மிருசுவில், நெல்லியடி, வல்வெட்டித்துறை என்று பல இடங்களுக்கும் சென்றார். இதன்போது ஜனாதிபதி என்ற பெரிய பந்தா ஒன்றும் இல்லாமல் எளிமையாக (Simply யாக) பழகுவதைப்போலொரு தோற்றத்தைக் காட்டினார் அநுர. இதனால் அநுர செல்லுமிடமெங்கும் சனங்களும் திரண்ட…
-
- 0 replies
- 398 views
-
-
வடக்கிலும் கிழக்கிலும் தீவிரவாதப் போக்கின் செல்வாக்கு எம்.எஸ்.எம். ஐயூப் / “தற்போதைய தலைமை போய், மாற்றுத் தலைமை உதித்தால், மீண்டும் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குச் சாத்தியம் உள்ளது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியதாக, ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது, “விக்னேஸ்வரனை இனி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவதில்லை” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் கூறி வருவதைப் போலவே, “இனி, கூட்டமைப்பின் கீழ், தேர்தலில் நிற்கப் போவதில்லை” என விக்னேஸ்வரனும் கூறுகிறார். …
-
- 0 replies
- 678 views
-
-
வடக்கிலும் தெற்கிலும் அதிகாரப் போட்டிகளே தீர்வுக்கு முட்டுக்கட்டை அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பனிப்போர், வெளியில் தெரியும் அளவுக்கு உக்கிரமடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. அது, எந்த அளவுக்கு என்றால் கட்சித் தலைவர்களிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெறும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன. இரு கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிற…
-
- 0 replies
- 391 views
-
-
தேனும், பாலும் தடவி, நாட்டின் சகலதுறை மக்களுக்கும் மீட்சியை கொடுக்கும் ஒரு வரவு செலவுத் திட்டமாக காட்ட முனையும் ஜனாதிபதி, முன்மொழிவுகளுக்கான பணத்தை எங்கிருந்து எடுக்கப் போகிறார் என்பதை கூறவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது உரையின் முழு விவரம் வருமாறு: நாட்டினுடைய ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ 2015 இல் வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தனது 10வது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். தேனும், பாலும் தடவி, நாட்டின் சகலதுறை மக்களுக்கும் மீட்சியை கொடுக்கும் ஒருவரவு செலவுத் திட்டமா…
-
- 0 replies
- 564 views
-
-
ஜனநாயகத்திற்குத் திரும்பிவிட்டதாகக் கூறிக்கொண்டு வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் அரச துணைராணுவக்குழு தாம் ஜனநாயக வழிக்குத் திரும்பிவிட்டோம் என்று கூறிக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுவரும் ஈ பி டி பி துணைராணுவக் குழுவினரின் இன்னொரு அட்டூழியம் யாழ்ப்பாணத்தில் அண்மையில் அரங்கேறியிருக்கிறது. நடந்த அக்கிரமத்தினைத் தடுக்க துணைராணுவக் குழுவின் தலைமையும் பொலீஸாரும் முயல்வது அப்பட்டமாகத் தெரியும் இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. இருவாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் கண்ணபுரம் பகுதியில் புறாக்களை வளர்க்கும் இரு வீடுகளுக்கிடையே நடந்த சம்பவம் ஒன்றில், ஒரு வீட்டினரால் வளர்க்கப்பட்ட சில புறாக்கள் இரண்டாவது வீட்டில்ப் போய் தங்க ஆரம்பித்திருக்கின்றன. இதனையடுத்து இ…
-
- 9 replies
- 1k views
-
-
இலங்கைக்கு ஆச்சரியம் தேடித்தரும் விடயங்களில் "ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு”. இலங்கையின் நீதித்துறையும், சட்டத்தரணிகளும் புரியப்பட்ட குற்றத்தை நிரூபிக்க வருடக்கணக்கில் உழைத்திருப்பர். தமது சட்ட அறிவைக் கொட்டித்தீர்த்திருப்பர். குறித்த குற்றத்தை நிரூபிப்பதற்காக பெரியதொரு அரச நிதி செலவழிக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக குற்றவாளியினால் பாதிக்கப்பட்ட – உறவுகளை இழந்த குடும்பத்தவர் கண்ணீரோடு நீதியை எதிர்பார்த்து நீதிமன்றத்திற்கு அலைந்திருப்பர். தம் உழைப்பை, பணத்தை செலவழித்திருப்பர். இவ்வாறானதொரு கூட்டுழைப்பின் பின்னர் குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படும். ஆனால் அவர் சிறைக்கு சென்று ஒரு வருடத்திலோ, அல்லது சில மாதங்களிலோ எல்லாவிதக் குற்றங்களிலிருந்தும் நீக்கம் செய…
-
- 0 replies
- 342 views
-
-
வடக்கில் இராணுவத்தின் operation Psychologyயும் வெற்றிகர தாக்குதல்களும்… June 17, 2018 யார் இந்த கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு? அப்படி என்னதான் செய்தார்? மு.தமிழ்ச்செல்வன்… எந்த இராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டதோஇ எந்த இராணுவம் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என குற்றச்சாட்டப்படுகின்றதோஇ எந்த இராணுவத்தினரால் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என விரல் நீட்டப்படுகிறதோ அதே இராணுவத்தின் கேர்ணல் அதிகாரியபன கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது ஏன் இவ்வாறு ஒரு பிரியர்விடை?! அப்படி அவர் என்ன செய்தார்? ஏன் முன்னாள் போராளிகள் அவரை தூக்கிச் சென்றனர்? பெண்கள் ஏன் கதறி அழுது விடைகொடுத்தார்கள்? போன்ற பல கேள்விக…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கையின் வடக்கில் இராணுவ மயமாக்கல் தொடர்பில் வடக்கு மாகாண சபை முதல் சர்வதேச நாடுகள் வரை குற்றம் சுமத்தி வருகின்றன. குறிப்பாக இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை மிகவும் சாதாரணமானதல்ல என்றும் பல்வேறு திட்டங்களை பின்புலமாக கொண்டது என்றும் பல்வேறுபட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வடக்கில் உள்ள குளோபல் செய்தியாளர் ஒருவர். குறிப்பிடுகிறார் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகரம் என வருணிக்கப்பட்ட கிளிநொச்சியில் புதுவருட தினத்தை முன்னிட்டு இராணுவத்தினர் சில நிகழ்வுகளை நடத்தியுள்ளனர். வடக்கில் இராணுவத்திற்கும் மக்களுக்கும் நல்ல உறவு காணப்படுகிறது என்பதை காட்டுவதற்கே இந்த நிகழ்வு என்கிறார் வடக்கில் உள்ள அரசியல் அவதானி ஒருவர். இதை இராணுவத்தின் அரசியல் நிகழ்வு என்றும் அவர் அட…
-
- 0 replies
- 578 views
-
-
வடக்கில் கணவனை இழந்த பெண்களின் துயரக் கதைகள் கோப்புப் படம் முல்லைத்தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நந்திக்கடல் சூரியக் கதிரின் வெப்பத்தால் சூடாகி இருந்த வேளையில் நாங்கள் செல்வராஜியின் வீட்டிற்குச் சென்றோம். அவரது சிறிய வீட்டின் சுவர்களின் ஊடாக, அவரது கடந்த காலத் துன்பகரமான வாழ்வின் கரிய நிழல்களைக் காண முடிந்தது. ‘போர் உச்சக்கட்டத்தை அடைந்த தருணத்தில், எனது கணவரும் எனது மூன்று பிள்ளைகளும் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர். நான் தற்போது எஞ்சிய எனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்கின்றேன். ஆனால் நாம் எமது அன்றாட வாழ்வைக் கழிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறோம்’ என செல்வராஜி தெரிவித்தார். முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் வாழ்ந்து வரும் 47 வயதான செ…
-
- 1 reply
- 1k views
-
-
வடக்கில் காலூன்றும் கனவு மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சியை இழந்து கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்குப் பின்னர், சில நாட்களுக்கு முன்னதாக, வடக்குக்கான பயணத்தை, அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரைத் தவறாக வழிநடத்தி தோல்விக்கு இட்டுச் சென்றவர்கள் என்று, பசில் ராஜபக்ஷ மீதும், கோட்டாபய ராஜபக்ஷ மீதும், பரவலான விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அதிலும் பசில் ராஜபக்ஷவே, அதிகாரத்தைத் தனது கையில் எடுத்துக் கொண்டு, மோசமாகச் செயற்பட்டாரென, தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தபோத…
-
- 0 replies
- 472 views
-
-
படம் | Dinuka Liyanawatte Photo, Reuters, Time | சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கப்பட்ட பகுதி. சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி சியான்லியாங் (Yi Xianliang) வடக்கில் துனைத் தூதரகம் ஒன்றை உருவாக்குவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சாதாரண செய்தி. ஆனால். அரசியல் கண்கொண்டு நோக்கினால் இது மிகவும் முக்கியமானதொரு செய்தி. ஏற்கனவே இந்தியா யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் ஒன்றை நிறுவியிருக்கும் நிலையிலேயே சீனாவும் அவ்வாறானதொரு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. சீன முதலீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல் பகுதி 2010இல் திறந்துவைக்கப்பட்டது. இதே ஆண்டுதான் …
-
- 1 reply
- 482 views
-
-
வடக்கில் கைதாவோர் மீது பயங்கரவாத தடைச்சட்டம் ‘பாய்வது’ சரியான நடைமுறையா? நாட்டில் இப்போது பயங்கரவாதம் இல்லை என்று அரசாங்கம் அடித்துக் கூறியிருக்கின்றது. குறிப்பாக யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் எந்தவொரு பயங்கரவாதச் செயற்பாடும் இடம்பெறவில்லை என்று அரசாங்கம் உறுதியாக அறிவித்திருக்கின்றது. இத்தகைய நிலையில்தான் வடமாகாணத்தின் பல இடங்களிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்; கைது செய்யப்பட்டு வருகின்றார்கள். பயங்கரவாதமும், பயங்கரவாதச் செயற்பாடுகளும் இல்லாவிட்டால்…
-
- 1 reply
- 512 views
-
-
வடக்கில் சுற்றுலா விருத்தியில் அரசாங்கம் அக்கறை காட்டுமா? February 26, 2025 — கருணாகரன் — யுத்தத்தினால் அழிந்து சிதிலமடைந்திருக்கின்ற வடக்குப் பிரதேசங்களை அபிவிருத்தியினால் மேம்படுத்துவதும் அங்குள்ள மக்களை உளரீதியில் புதுநிலைப்படுத்துவதும் ஒன்றாக நடக்க வேண்டும். யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த பிறகும் இவை சரியாக நடக்கவேயில்லை. 2013 – 2018 வரை ஐந்து ஆண்டுகள் வடக்கு மாகாணசபை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் இருந்தது. அப்போதும் வடக்கின் அபிவிருத்தியைப் பற்றியும் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் நிலையைப் பற்றியும் பொறுப்பானவர்கள், பொறுப்பாகச் சிந்திக்கவில்லை. இதனால்தான் இன்னும் இங்கே ஏகப்பட்ட பிரச்சினைகள். புதிய (NPP) அரசாங்கம் எல்லாவற்றிலும் மாற்றங்களையும் புதுமைகளையும்…
-
- 0 replies
- 233 views
-
-
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் சிங்களத் தேசியக் கட்சி ஒன்று ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்வதே குதிரைக்கொம்பாக இருந்து வந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி என்று தம்மை உருமாற்றிக் கொண்டுள்ள ஜே.வி.பி சுளையாக ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டமை ஒரு புறநடை என்று கூடச் சொல்லலாம். யாரும் எதிர்பார்க்காத வகையில் – எதிர்வு கூறல்களுக்கு அப்பாற்பட்டு இந்த முடிவு அமைந்திருந்தது. போர் தின்ற மண்ணில், தமிழ்த் தேசியத்தின் தடத்தில் வீறுகொண்டெழுந்த தேசத்தில் திருப்புமுனையாக நடந்தேறிய இந்த வரலாற்று வெற்றியை தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா என்ற சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது. தமிழ்த் தேசியம் பேசியபடி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த…
-
- 0 replies
- 397 views
- 1 follower
-
-
வடக்கில் தலைகாட்டும் மதவாதம் கே. சஞ்சயன் / 2020 மார்ச் 06 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ் அரசியல் பரப்பும் சூடுபிடித்திருக்கிறது. வடக்கில் மாற்று அணி, மாற்றுத் தலைமை என்ற கோசத்தை முன்னிறுத்தியும், கிழக்கில் தமிழர் ஒற்றுமை என்ற கோசத்தைப் பயன்படுத்தியும், புதிய அரசியல் அணிகள் தோற்றம் பெற்று, இம்முறை தேர்தல் களத்தில் தீவிரமான உள்ளகப் போட்டியை உருவாக்கியிருக்கின்றது. வடக்கில், பேரினவாதக் கட்சிகள், அவற்றின் செல்லப்பிள்ளைகளாக இருக்கின்ற தமிழ்க் கட்சிகள், ஆசனங்களைக் குறிவைத்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் முரண்பாடு, அவற்றுக்குச் சாதகமாக மாறும் சூழல் உள்ளது. கிழக்கில் தமிழ்த் தரப்…
-
- 8 replies
- 977 views
-
-
வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு – இதயச்சந்திரன் Posted by sankathinews on May 1st, 2013 மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை , அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது. கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்…
-
- 0 replies
- 591 views
-
-
வடக்கில் தீவிரமடையும் பொலிஸ் கெடுபிடிகள் வடக்கு மாகாணத்தின் அரசி யல் சூழலைப் போலவே, பாதுகாப் புச் சூழலும், பரபரப்புமிக்கதா கவே மாறியிருக்கிறது. துன்னாலை இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கடந்த மாதம் மரணமான பின்னர், நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூடு, கொக்குவில் வாள்வெட்டு மற்றும் சில வாள்வெட்டுச் சம்பவங்கள் என்று அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் குடாநாட்டின் பாதுகாப்புச் சூழலைக் கேள்விக்குறியாக்கியிருந்தன. கொக்குவிலில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டைத் தொடர்ந்து, ஆயிரத்துக்கும் அதிகமான விசேட அதிரடிப்படையினரைக் களமிறக்கிய பொலிஸ் மா அதிபர், தொடர் சுற்றிவளைப்புகள், சோத…
-
- 0 replies
- 493 views
-
-
வடக்கில் தேர்தல்களும் தமிழ் அரசியலும் சிகப்பு குறிப்புகள் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், இலங்கை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தல்கள் காரணமாக, ஆளும் தேசிய அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டு, அரசாங்கம் பிளவடைவது, கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ராஜபக்ஷவின் பரப்பியல்வாதத்துக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய எழுச்சியைத் தொடர்ந்து, தேசியவாத அரசியல், மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஆளும் அரசாங்கத்தின் பொருளாதாரத் தோல்விகள் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்க, அரசமைப்பு ரீதியான அரசியல் தீர்வுக்காக 2015இல் கிடைக்கப்பெற்ற பொன்னான வாய்ப்பு, கிட்டத்தட்ட முழுவதுமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 426 views
-
-
திடீரென ஒரு நல்ல செய்தி. ”கொழும்பு மிரர் வேலைசெய்யத் தொடங்கீற்றுது”. ஓம். சில தினங்களாக கொழும்பு மிரர்இணையத்துக்கு சூனியம் வச்சிட்டாங்கள். வெட்டிக்கொண்டு வர படாதபாடுபடவேண்டியாயிகிட்டுது. அப்படித்தான் ஆசிரியர் சொன்னார், விட்ட இடத்திலிருந்தும் ஆரம்பிக்கவேணும், அதேநேரத்தில் நிகழ்காலத்தையும் பிரதிபலிக்க வேணும் எண்டு. உடனடியாக ஒரு ஸ்டோரி பண்ணோனும். என்ன செய்யலாம், வடக்கிற்கான ரணிலின் பயணத்தில இருந்து ஆரம்பிப்பம். அதுவும் தமிழர்களின் அரசியலை தீர்மானிக்கும் மையமான யாழ்ப்பாணத்தின் இளையவர்கள் ரணிலின் யாழ்ப்பாண வருகை பற்றி என்ன நினைக்கிறார்கள்? சமூகவலைதளங்களில், ஊடகங்களில் தமிழர் அரசியல் பற்றி எழுதிவரும் இந்தத் தலைறையினரின் சிலரை சிக்கெனப் பிடித்தேன். பேஸ்புக்கில். செந்தூரன், இது…
-
- 2 replies
- 1.4k views
-
-
[size=4]"பல்வேறு தரப்பினரும் கோருகின்றனர் ௭ன்பதற்காக, வடக்கு மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்திவிட முடியாது. வடக்கில் முதலில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழல் உருவாக வேண்டியது அவசியம். அதற்கான சூழலை 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்குள் அரசாங்கம் ஏற்படுத்தி விடும். அதன் பின்னர் தேர்தல் ஆணையாளர் வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பார்" என்று கூறியிருந்தார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ. வடக்கின் நிர்வாகம் இவரது கண்காணிப்பில் தான் நடந்து வருகிறது. அவரது இந்தக் கருத்து, வடக்கில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் இன்னமும் உருவாகவில்லை என்ற அரசாங்கத்தின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது. வடக்கில் தேர்தலை நடத்துவதற்காக சூழல் என்பத…
-
- 0 replies
- 766 views
-