Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. “நான் கற்றுக் கொண்டதும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்” April 26, 2024 — குசல் பெரேரா — வடக்கில் தமிழர்கள் மத்தியில் மதத்தீவிரவாதம் வெளிக்கிளம்புவதற்கு யார் பொறுப்பு? மக்களின் உணர்வுகளை மதிக்காத — கொழும்பில் வாழ்க்கையைக் கொண்ட பொறுப்பற்ற தமிழ் தலைமைத்துவமே அதற்கு பொறுப்பு என்று நான் சொல்வேன். அநீதிக்கு எதிராகவும் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் எந்தளவுக்கு வெளிப்படையாகவும் பற்றுறுதியுடனும் நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதிலேயே அவர்களின் பலம் தங்கியிருக்கிறது. சிங்கள தெற்கில் பிரதான அரசியல் நீரோட்ட தலைவர்கள் பெரும்பான்மை இனத்துவ தீவிரவாதத்தை முன்னெடுக்கிறார்கள். போரின் முடிவுக்கு பின்னரான தமி…

  2. "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை] துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான…

  3. இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மொட்டு கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்த பல முயற்சிகள் எடுத்து வருகின்றார். முதலாவதாக பாராளுமன்றத் தேர்தலையே நடத்த வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் சகல முயற்சிகளையும் தவிடு பொடியாக்கி விட்டார் ஜனாதிபதி ரணில். கட்சியை ஆரம்பித்ததிலிருந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பல மறைமுக பணிகளை ஆற்றிய பஸில் ராஜபக்ச தனது தவறான கொள்கைகளால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றார். கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக்கியதே மகிந்தவும் பஸிலும் செய்த தவறுகள். அதை நியாயப்…

  4. தமிழ் - சிங்கள புத்தாண்டு முடிவடைந்த உடனேயே அனைத்து அரசியல் கட்சிகளும் மே தினத்தில் தத்தமது மக்கள் செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக செயற்படத் தொடங்கியுள்ளன. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கொண்டாடப்படுகின்ற மே தினம் இலங்கையில் மாத்திரமன்றி பல நாடுகளிலும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். உலகில் நாடுகளுக்கு இடையிலான மேலாதிக்க மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பெரும்பாலும் வல்லரசு நாடுகள், தனக்கு எதிரான நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகார மேலாதிக்க போக்குடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தடை விதிப்பது மாத்திரமன்றி உலக பொருளாதார ஒழுங்கிலிருந்தும் எதிரி நாடுகளை தனிமையப்படுத்துவதன் ஊடாக வல்லரசு நாடுகள் தமது மேலாதி…

  5. ஆர்.பி.என். இலங்கை மக்கள் மாத்திரமன்றி சர்வதேசம் எங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களும் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அன்று தான் ஈவிரக்கமற்ற குண்டுத்தாரிகளால் அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. கிறிஸ்தவ மக்கள் அன்று ஈஸ்டர் ஞாயிறை நினைவுகூரும் வகையில் காலை வேளை தங்கள் பங்கு தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில், குண்டுகள் வெடித்துச் சிதறின. வழிபாட்டிலிருந்த பலரும் அடுத்த கணம் கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் பரிதாபகரமாக மரணித்தனர். முதலில் இந்த சம்பவத்தை நம்பவோ, ஜீரணிக்கவோ முடியவில்லை. தேவாலயத்துக்குள் குண்டு வெடிக்குமா? என்று எண்ணிப்பார்க்க ஒரு கணம் மனம் தயங…

  6. நாட்டில் காணப்படும் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் 25 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் 24 வீதமானோர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குப் பயணமாகியுள்ள நிலையில், ஏனையோர் வேறு நோக்கங்களுடன் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர் என்று இலங்கை மத்திய வங்கி கூறியிருக்கின்றது. இவற்றுக்கு மேலதிகமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு இலங்கையை பல்வேறு நெருக்கடிகளுக்குள் தள்ளியிருக்கின்றது. அந்த நெருக்கடிகளின் தாக்கங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நாட்டு மக்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதா…

  7. நடக்கப்போவது என்ன தேர்தல்? எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் முதலில் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலா பொதுத்தேர்தலா என கயிறுழுப்பு ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறத்தால் மீண்டும் நாட்டிலும் ஆட்சியிலும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கான திரை மறைவு வேலைகள் தீவிரம் பெற்று வருகின்றன. மொட்டை மீண்டும் மலர வைத்து ராஜபக்‌ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சி பீடமேற்ற தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ளார் 7 மூளைக்காரரான பசில் ராஜபக்‌ஷ. தேர்தல் மேகங்கள் கருக்கட்டியுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்‌ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளதால், தங்களின் ஆட்சியை மீள உருவாக்க முடியும், அதிகாரங்களை மீளப்பெற முடியும் என்று பொதுஜன பெரமுனவில் …

  8. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். தற்போது வரையில் அவரது பயண ஒழுங்கிலோ, அல்லது நிகழ்ச்சி நிரலிலோ எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோன்று, ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் மட்டக்குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜதந்திரத் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக, பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏற்பாடுகளுக்காக இந்தக் குழுவினர் கொழும்பில் முகாமிட்டிருப்பதாகவும், ஈரான் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் பிரசன்னமாகியிருப்பதாகவும் கூற…

  9. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நினைவேந்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கடைப் பிடிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேறிய அந்தக் குரூரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைந்துருகினர். 'அந்தப் படுகொலைகளுக்கு நீதி நிலைநாட்டப் படவில்லை. நீதிக்கான பயணத்தை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் - இதயசுத்தியுடன் முன்னெடுக்கவில்லை ' என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. கத்தோலிக்க மதத் தலைவரான கர்தினால் மல்கம் ரஞ்சித் பிரதான நினைவேந்தல் நிகழ்வில் ஆற்றிய உரையில் பல விடயங்களைச் சுட்டிக்காட்டினார். கடந்த 5 ஆண்டுகளாக அவரால் தனது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்கமுடியவில்லை என்ற ஆதங்கம் அந்த உரையில் எதிரொலித்தது. இப்போதும் கூட அவர் தனது சமூகத்துக்காக மாத்திரம் குறுகிய வெளிக்…

  10. Published By: DIGITAL DESK 3 23 APR, 2024 | 02:54 PM எம்.நியூட்டன் வடக்கு மாகா­ணத்தில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நான்கு இளை­ஞர்கள் போதைப்­பொருள் பாவனை காரண­மாக மர­ணித்­துள்­ளார்கள். இவர்கள் அனை­வரும் 20 முதல் 30 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள். குறிப்­பாக, மர­ணித்­த­வர்­களில் சாவ­கச்­சே­ரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறை­யி­லி­ருந்து நீதி­மன்­றத்தின் பிணையில் விடு­விக்­கப்­பட்ட நிலையில் தனது விடு­த­லையை கொண்­டாடும் முக­மாக ஏற்­பாடு செய்த போதை விருந்­து­ப­சா­ரத்தின் போது மர­ண­ம­டைந்­துள்ளார். மற்­றை­ய­வர்கள், அதி­க­ள­வான போதைப்­பொ­ருளை பயன்படுத்தியமை உள்ளிட்ட கார­ணங்­களால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளாக உள்­ளனர். இந்த மர­ணங்க…

  11. இலங்கை வலியுறுத்திய நிலைப்பாடு ஒன்றுக்காக, ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கின்றது என்றால், அதை நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும். ஜனாதிபதி ரணில், மீண்டும் மீண்டும் வலியுறுத்திய சித்தாந்தங்களும் தீர்வுத் திட்டங்களும்தான் ஐ.நா.வில் இன்றைய அரசியலும், பேசுபொருளும், விவாதப் புள்ளியும், எல்லாமும். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான மோதல்கள் முற்றாகமுடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு நிரந்தர அமைதியும் ஆக்கிரமிப்புகளும் தவிர்க்கப்பட வேண்டுமாயின், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் என்ற இருநாடுகள் மலரவேண்டும் என்று அண்மையில் வலியுறுத்தியிருந்தார் ஜனாதிபதி ரணில். 'சுதந்திர பலஸ்தீனம்' மலர்ந்தால் பலஸ் தீனத்துக்கு என தனி இராணுவம் தோற்றம் பெறும். பலஸ்தீன…

  12. வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்! களுத்துறையில் ஒரு சுற்றுலாப் பயணி - அவர் ஒரு வெள்ளைக்காரர் - ஒரு தேநீர்க் கடையில் வடை சாப்பிடுகிறார். அவரை கடைக்குள் உபசரித்து வடையோடு இரண்டு விதமான சம்பல்களையும் கொடுத்த அந்த கடையைச் சேர்ந்த ஒருவர், அவரிடம் ஒரு வடைக்கும் ஒரு பால் தேனீருக்கும் மொத்தம் ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். சுற்றுலாப் பயணிக்கு அந்தத் தொகை அதிகம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. அவர் அந்த வழியால் வரும் ஆட்களை மறித்து வடையின் விலை என்னவென்று கேட்கிறார். அந்த வழியால் வந்த இரண்டு சிங்களப் பெண்கள் ஓரளவுக்கு ஆங்கிலம் கதைக்கிறார்கள், அவர்களில் ஒருவர் அந்த வடையின் விலை 120 ரூபாய் என்று கூறுகிறார். வெள்ளைக்காரர் உண்மையை கண்டுபிடித்து விட்டார் என…

      • Haha
    • 3 replies
    • 483 views
  13. தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்- நிலாந்தன் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளில், அதிகம் பேசு பொருளாக மாறியிருப்பது இந்தமுறைதான். அது ஒன்றுக்கு மேற்படட தரப்புக்களால் முன்னெடுக்கப்படுவதும் இந்த முறைதான். அதுமட்டுமல்ல,அது அதிகம் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் ஆபத்துக்கள் நிறைந்திருப்பதும் இந்த முறைதான். இந்தக் கோரிக்கையை கோட்பாட்டு ரீதியாக முதலில் முன்வைத்தவர் மு.திருநாவுக்கரசு. இக்கோரிக்கையை அதற்குரிய கோட்பாட்டு அடர்த்தியோடு விளங்கிக் கொள்ளாமல் பிரயோகித்தவர்கள் குமார் பொன்னம்பலமும் சிவாஜிலிங்கமும் ஆவர். மு.திருநாவுக்கரச…

  14. Published By: NANTHINI 19 APR, 2024 | 01:12 PM 1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. …

  15. எல்லா போர்களிலும் வென்ற இஸ்ரேலை முடக்கிய ஈரான் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்

    • 0 replies
    • 625 views
  16. ['சமாதானம்' நிலவ வேண்டும் என்றால் அங்கு 'மன்னிப்பு' முக்கிய பங்கை வகுக்கிறது. 'மன்னிப்பு' என்ற கட்டுரையை, 'மன்னிப்பு' என்ற கவிதையுடன் சமாதான விரும்பிகளின் கருத்துக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றி, உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!] "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இருக்கையை தனதாக்கி பெரும்பான்மை அதிகாரத்தில் இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? " "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! " இரக்கமின்றி சுடும் காட்டுமிராண்டிகள் அவர்களல்ல இந்தநாட்டின் பூர்வீககுடிகளில் அவர்களும் ஒருவர் இணைந்து வாழ்ந்த குடிம…

  17. "என் பார்வையில் ஏன் பொது வேட்பாளர் அவசியம் இன்று" [வெளிப்படையாக செய்த தவறுகளை ஏற்று மன்னிப்பு கேட்க்காத ஜனாதிபதி வேட்ப்பாளர் இருக்கும் பட்சத்தில்] 1915 ஆம் ஆண்டில், டி.பி. ஜயதிலக, டி.எஸ். சேனநாயக்க மற்றும் பல செல்வந்தர்கள் சிங்களவர்கள் தமிழ் பேசும் முஸ்லீமிற்கு எதிராக இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பது இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும். பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோ…

  18. ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் நிலைப்பாடு என்ன? - நிலாந்தன். - நாடு ஒரு தேர்தலை நோக்கி போய்க்கொண்டிருக்கும் பொழுது தமிழரசுக் கட்சியானது தொடர்ந்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அதன் செயற்பாடுகள் காரணமாக அது படிப்படியாக உடைந்து உடைந்து அதன் ஏகபோகத்தை இழந்து விட்டது என்பது உண்மைதான்.என்றாலும் அதுதான் இப்பொழுது உள்ளத்தில் பெரிய கட்சி. அக்கட்சி ஒரு தேர்தல் ஆண்டில் முடிவெடுக்க முடியாதபடி உடைந்து காணப்படுவது,தென் இலங்கைக்குச் சாதகமானது. நீதிமன்றம் கட்சியை முடக்கவில்லை. ஆனால் அண்மையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் செயல்பட முடியாத ஒரு நிலை. அதனால் முன்னைய தலைவராகிய மாவை சேனாதிராஜாவே இப்பொழுத…

  19. அனுர குமாரவிடம் சில கேள்விகள் – நிலாந்தன்! adminApril 14, 2024 ஓரு நண்பர், அவர் ஒரு இலக்கியவாதி, தொலைபேசியில் அழைத்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அவரைப் பதட்டமடையச் செய்திருப்பதாகத் தெரிந்தது. பொது வேட்பாளர் என்ற தெரிவை அவர் கடுமையாக விமர்சித்தார். இனங்களுக்கு இடையே அது முரண்பாட்டைப் பெருப்பிக்கும் என்ற பொருள்படவும் அவர் கதைத்தார். அதாவது சம்பந்தன், சுமந்திரன் மற்றும் சில விமர்சகர்கள் கூறுவதை அவர் பிரதிபலித்தார். அதைவிட முக்கியமாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தான் ஜேவிபிக்கு வாக்களித்ததாகவும் கூறினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜேவிபிக்கு இருந்த கவர்ச்சியை விடவும் இப்பொழுது குறிப்பாக 2021 இல் நிகழ்ந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னர் ஜேவிபிய…

  20. தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை April 12, 2024 — கருணாகரன் — 2024 இல் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமா? பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா? என்று இன்னும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலையே உள்ளது. ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடக்கும் என சில இடங்களில் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பு பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது நல்லது என்று பொதுஜன பெரமுன உள்ளிட்ட சில தரப்புகள் வலியுறுத்துகின்றன. எதையும் தீர்மானிக்கின்ற ஒரே மனிதராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை உச்சமாகப் பயன்படுத்தியவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன. அவரே ஜனாதிபதிக்கான அதிகாரங்களை உருவாக்கியவர். அவருக்கு அடுத்த…

  21. மோடியும் கச்சதீவும் April 9, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியா கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அது தொடர்பாக சர்ச்சை கிளப்பிய முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அதுவும் பத்து வருடங்களாக பதவியில் இருந்துவரும் அவர் இதுகாலவரை எதுவும் பேசாமல் இருந்துவிட்டு தற்போது பிரச்சினையை கிளப்புவது கச்சதீவை மீண்டும் இந்தியா வசமாக்குவதற்காக அல்ல, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தனது பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை பெறுலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே என்பதை புரிந்துகொள்வதற்கு அரசியல் ஞானம் தேவையில்லை. வடஇந்தியாவில் அமோகமான மக்கள் செல்வாக்குடைய தலைவராக இருந்துவரும் மோடி மூன்றாவது தடவையாகவும் பி…

  22. பிரெஞ்சு வரலாற்றில், 15ஆம் லூயியுடையதும் அவன் மகனான 16ஆம் லூயியுடையதும் ஆட்சியை கறுப்புப்பக்கங்கள் என்றுதான் இன்றளவும் அடையாளப்படுத்துகின்றனர். 15ஆம் லூயியுடைய ஆட்சியில் மக்கள் பசியாற்றுவதற்குப் போதுமான உணவுகள் இருக்கவில்லை. 16ஆம் லூயியோ உணவுகளை மக்களின் கண்ணில் காட்டினாலும் வரிகளால் அவர்களை வதைத்தெடுத்தான். மக்கள் இங்கே புல்லைத் தின்கின்றார்கள். அனுதினம் வறுமையாலும் அவல ஆட்சியாலும் வதைபட்டுச் செத்துக் கொண்டிருக்கும் நோயாளிக்கும் பிச்சைக்காரருக்கும் மன்னராயிருப்பவரை 'மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தி' என எவ்வாறழைப்பது? இது பிரான்ஸின் கொடுங்கோலனான 15ஆம் லூயி தொடர்பில் அக்காலக் கவிஞனொருவன் தெரிவித்த கருத்துகளாக அமைகின்றன. 'இரு கழுதைகளை அவன் ஓட்டிச் சென்றான். ஒரு கழுதை யின் …

  23. ரணில் விக்கிரமசிங்க: One Man Government April 4, 2024 — கருணாகரன் — இலங்கை அரசியலில் One Man Government ஆகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. மட்டுமல்ல, அரசியல், பொருளாதாரம், பண்பாடு என அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரே ஆளாகியுள்ளார். ரணில் என்ன நினைக்கிறாரே அதுவே நடக்கிறது. அதுவே நடக்கக் கூடிய சூழலும் உள்ளது. அவரை மீறி எதுவும் இல்லை என்ற நிலை. இதைக் கட்டுப்படுத்தவோ இடையீடு செய்யவோ முடியாமல் எதிர்க்கட்சிகள் படுத்து விட்டன. எதிர்ப்பு அரசியல் என்பது காணாமலே போய் விட்டது. அங்கங்கே மெல்லிய தொனியில் அனுங்கலாகக் கேட்கும் குரலைத் தவிர, வேறெதுவும் இலங்கையில் இல்லை. நெடுங்காலமாக இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வந்த ஐக்கிய தே…

      • Haha
    • 2 replies
    • 453 views
  24. ஜேவிபி பதில் கூறுமா? நிலாந்தன்! அனுரகுமார கவர்ச்சியாகப் பேசுகிறார். மேடையைத் தனது பேச்சினால் கட்டிப்போடவல்ல ஒரு பேச்சாளராக அவர் தெரிகிறார். இனப்பிரச்சினை தொடர்பாக, இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அவர் கவர்ச்சியாகப் பேசுகின்றார். கனடாவிலும் அவர் அப்படித்தான் பேசினார். யாழ்ப்பாணத்திலும் அவர் அப்படித்தான் பேசினார். ஆனால் அவர் இதுவரை பேசிய அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. என்னவெனில், அவர் இனப்பிரச்சினையை, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை, எல்லாவற்றையும் மனிதாபிமானக் கண் கொண்டுதான் பார்க்கின்றார். மாறாக அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தியோடு, அரசியல் பரிமாணத்தோடு, அவற்றை விளங்கி வைத்திருக்கிறாரா என்று கேட்கத்தக்க விதத்தில்தான் இனப்பிரச்ச…

    • 4 replies
    • 461 views
  25. இஸ்ரேல் கேட்கும் மன்னிப்புக்குள் மறைந்துள்ள திட்டம் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்

    • 0 replies
    • 477 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.