அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு தீபச்செல்வன் - 20 AUGUST, 2011 அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள நாக விகாரை பௌத்த சங்கம் அதிர்ச்சிகரமான ஓர் அறிவித்தலை வெளியிட்டிருந்தது. யுத்தம் காரணமாக வீடழிந்த மக்கள் தமது காணிகளில் புத்த விகாரைகளை அமைக்க இடமளித்தால் அவர்களுக்கு மிக வசதியாக ஆறு லட்சம் ரூபா செலவில் வீடு அமைத்துத் தருகிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாண நகரத்தில் உள்ள நாக விகாரையும் ராணுவத்தினரும் இதன் அனுசரணையாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. யுத்தம் காரணமாக நொந்து நலிந்து வீடற்று அழிவின் வெளியில் தவிக்கும் ஈழத்து மக்களை இப்படியும் ஏமாற்றலாம் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. புத்தர் சிலைகளைப் பரவலாக நட்டு பௌத்தத்தைப் பரப்பும் இந்த நடவடிக்கை எத்த…
-
- 0 replies
- 783 views
-
-
சம்பந்தனும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டபோது அந்தப் பதவியினால் தமிழர்கள் தங்கள் இலக்கை அடையக்கூடியதாக இருக்குமா என்பதே தமிழர்கள் மத்தியில் எழுந்த கேள்வி. 38 வருடங்களுக்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற வேளையிலும் தமிழர்கள் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். ஆனால் வேறுபட்ட அரசியல் சூழ்நிலையில். 1977 ஜூலை பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்துபங்க…
-
- 0 replies
- 364 views
-
-
மாறத்தொடங்கியுள்ள காட்சிகள் அரசியலில் எப்போதும் எதிர்பாராத விடயங்கள், எதிர்பார்க்காத சந்தர்ப்பங்களில் இடம்பெறும் என்பதே யதார்த்தம். அப்படித்தான் வரலாறு முழுவதும் நடந்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலிலும் அவ்வாறான எதிர்பார்க்காத விடயங்கள், எதிர்பாராதபோது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் தற்போதைய சூழலில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கின்ற பின்னணியில் அரசியலில் ஆங்காங்கே காட்சிகள் மாற ஆரம்பித்திருப்பதைக் காண முடிகின்றது. ஜனாதிபதி தேர்தலை நோக்கிய ராஜதந்திர நகர்வுகளும் காய்நகர்த்தல்களும் ஆரம்பித்துள்ள நிலையிலேயே இவ்வாறு காட்சிகள் மாற ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முட…
-
- 0 replies
- 630 views
-
-
தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுட்காலம் எவ்வளவு? - கலாநிதி சர்வேந்திரா இவ் வாரக் கட்டுரை டயாஸ்பொறா என்ற எண்ணக்கரு தொடர்பாக சில கோட்பாட்டு நிலைக் கருத்துக்களை முன்வைத்து தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுட்காலம் எவ்வளவு என்ற கேள்வியை எழுப்புகிறது. நாளாந்த பாவனையில் அனைத்துவகையான புலம்பெயர் மக்களையும் டயாஸ்பொறா என அழைத்தாலும் கோட்பாட்டு நிலையில் டயாஸ்பொறா என விழிக்கப்படுவோர் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். டயாஸ்பொறா தொடர்பாக குறிப்பிடப்படும் அம்சங்களில் முழுமையாக எல்லாம் பொருந்தாவிடினும் குறிப்பிட்ட முக்கியமான அம்சங்கள் பொருந்திவரின் அவ் வகையான புலம்பெயர் மக்களை டயாஸ்பொறா என அழைக்கலாம் என வாதிடப்படுகிறது. இதனை எல்லா ஆய்வாளர்களும் …
-
- 0 replies
- 1.5k views
-
-
கிழக்கின் அரசியலைப் புரிந்து கொள்ளல் Editorial / 2019 ஜூலை 25 வியாழக்கிழமை, பி.ப. 05:41 -இலட்சுமணன் தமிழர் பிரச்சினையை, சிங்கள தேசத்துக்கு விளக்க முனைவது, பயனற்ற செயலென்று, அமரர் டி. சிவராம், 2004ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஒரு கட்டுரையை வரைந்திருந்தார். இப்போதைய வடக்கு, கிழக்குத் தமிழர்களின் அரசியல் நிலைமையைப் பார்த்தால், தமிழ் அரசியல்வாதிகளுக்குக்கூட தமிழர்களுடைய நிலைமையைப் புரிய வைக்க முயல்வது, பயனற்ற செயல் என்று தான் எண்ணத் தேன்றுகிறது. ‘தேர்தல் திருவிழா’ என்பது எம்மிடையே உள்ள அனைத்துக் கீழ்த்தரமான குணங்களையும் பிரிவினைகளையும் வெளிக்கொணர்வதற்கான களமாக அமைந்துவிடுகிறது. இந்த நச்சுச் சூழலிலிருந்து நாம் விடுபட வேண்டும். தனி நபர்களை மற…
-
- 0 replies
- 755 views
-
-
தேசிய மக்கள் சக்தி போன்ற சக்திகளை தமிழ் இளைஞர்கள் நாடிச்செல்லும் காரணம் என்ன? – மட்டு.நகரான் November 12, 2024 இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் திருவிழா வடக்கு கிழக்கிலும் இடம்பெற்றுவருகின்றது. தமிழர்களின் உரிமைப்போராட்டம் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் பாராளுமன்ற தேர்தலின் மூலம் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என்ற வகையில் தொடர்ச்சியான பிரசாரங்கள் வடகிழக்கில் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் தமிழர்கள் பௌத்த பேரின வாதத்தினால் நசுக்கப்பட்டபோது அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்த நிலையில் தொடர்ச்சியாக தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பும் நிலைமைகள் காரணமாக இந்த நாட்டில் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்…
-
- 0 replies
- 294 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரின் மரணம்: பெயர்கள் வேறு கதை ஒன்று தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஒக்டோபர் 31 , சில மரணங்கள் கொண்டாடப்படும்; சில மரணங்கள் உலகையே உலுக்கும்; இன்னும் சில அதிர்ச்சிக்குள்ளாக்கும்; சில நிம்மதியைத் தரும்; சில கேள்விகளால் தொக்கி நிற்கும். எது, எப்படி இருப்பினும், மரணங்கள் கொண்டாட்டத்துக்கு உரியனவல்ல. வாழ்க்கையைக் கொண்டாட முடியாதவர்களே மரணங்களைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், மரணத்துக்கு அரசியல் பெறுமதி உண்டு. அது கொலையாயினும், இயற்கை மரணமாயினும், அகால மரணமாயினும் அரசியலாக்கம் பெற்றுவிடும். ஞாயிற்றுக்கிழமை (27) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கச் சிறப்புப் படைகளின் தாக்குதலில், ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி கொல்லப…
-
- 0 replies
- 769 views
-
-
நடந்து முடிந்த நாட்டின் 8ஆவது ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் பல செய்திகளை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளது. 16.11.2019இல்இடம்பெற்ற 8ஆவது ஜனாதிபதித்தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ 52.25வீத வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 41.99வீத வாக்குகளைப்பெற்ற புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியைத்தழுவியுள்ளார். இம்முறை 50வீத வாக்குகளை யாரும் பெறமாட்டார்கள். எனவே 2ஆம், 3ஆம் விருப்பு வாக்குகள் எண்ணவேண்டிவரும் என்றெல்லாம் கூறப்பட்டன. அதனைப்பொய்யாக்கி 52.25வீத வாக்குகளைப்பெற முடிந்ததற்கு பல்வேறு வகையான யுக்திகள் பயன்பட்டன எனலாம். …
-
- 0 replies
- 312 views
-
-
தொடங்கும் தேர்தல் நாடகங்கள் புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள் என்று நாம் பேசத் தொடங்கினாலும், யதார்த்தம் நம் முகங்களில் ஆழ அறையும் போது, அச்சமும் கோபமுமே மிஞ்சுகின்றன. இப்போது, எம் சமூகத்தின் பிரதான பேசுபொருள்களாக இருப்பவை, எவை என்பதை நோக்கின், மூன்று விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவியலும். முதலாவது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள்; இரண்டாவது ஜெனீவாவின் பேராலும் அமெரிக்காவின் பேராலும் கட்டமைக்கப்படுகின்ற நம்பிக்கைகள்; மூன்றாவது, தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாடுவது தொடர்பானது. இவை மூன்றும், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. இன்று இலங்கையில், சிங்கள பௌத்த தேசியவாதம் மேலோங்கியுள்ளது. ஆட்சி அதிகாரத்தின் அனைத்துத…
-
- 0 replies
- 689 views
-
-
கிழக்கைக் கையாள்வதில் தமிழ் அரசியல் தலைமை தோல்வியடைந்துள்ளதா? - முத்துக்குமார் அரசியல் தீர்வு தொடர்பான கருத்தறியும் குழுவின் சந்திப்புக்களைத் தொடர்ந்து, தமிழ்-முஸ்லிம் உறவு நிலையும், அரசியல் செயற்பாடுகளும் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற வாதங்கள் மீண்டும் களத்திற்கு வந்துள்ளன. 'தமிழ் பேசும் மக்கள்' என்ற தமிழ் அரசியலின் மரபு ரீதியிலான எண்ணக்கருவை வளர்க்க வேண்டுமா? அல்லது முஸ்லிம் மக்கள் அரசியல் ரீதியாக கையாள்கின்ற 'தமிழர்களும், முஸ்லிம்களும்' என்ற எண்ணக்கருவை வளர்க்க வேண்டுமா? என்பதே அந்த விவாதத்தின் கருப்பொருள். இப்பத்தியாளர் கடந்தமாதம் அனுபவ ரீதியாக கண்டு கொண்ட விடயங்களை முன்வைத்து தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கிறார். இக்கருத்துக்கள் முடிந்த முடிவு…
-
- 0 replies
- 546 views
-
-
-
- 0 replies
- 700 views
-
-
மலேசியத் தமிழரும் இனத்துவ முரண்பாடுகளும் - சமகாலச் சமூகப் பார்வைகள் லெனின் மதிவானம் மலேசியாவில் இன்று தமிழர்கள் பல்வேறு விதமான சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்பட்டுவருவதனை ஆட்சீபித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதை அண்மைக்கால செய்திகள் மூலமாக அறிய கூடியதாக உள்ளது. இந்து உரிமைகள் செயற்பாட்டுக் குழு தலைமையின் கீழ் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பொது மக்கள் மீது பொலிஸார் தடியடிகளை நடாத்தியதுடன் கண்ணீர்ப் புகையையும் பிரயோகித்துள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டங்கள் அதனையொட்டி எழுந்த தாக்குதல்கள் குறித்து மலேசிய தமிழர்களை பிரதிநிதித்து…
-
- 0 replies
- 559 views
-
-
கண்டிய நடனம்தான் பிரச்சினையா? ப. தெய்வீகன் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் இரண்டு பெரிய முகாம்கள் உள்ளன. அங்குள்ள பத்திரிகை நிறுவனமொன்றுƒ மற்றையது, யாழ். பல்கலைக்கழகம் என, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, முன்னர் ஒரு தடவை சொல்லியிருந்தார். அமைச்சராக அவர் இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் சலுகைகளுக்கு விலைபோகாத யாழ். மக்கள், விடுதலைப்புலிகளின் பக்கமே தமது ஆதரவைத் தொடர்ந்தும் அள்ளி வழங்கிக் கொண்டிருந்தபோது, அது பற்றிக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். டக்ளஸ் கூறினார் என்பதற்காக, அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றில்லை. ஏனெனில், ஒரு காலத்தில் யாழ்ப்பா…
-
- 0 replies
- 388 views
-
-
தமிழ் மக்கள் 30 வருட காலம் அதாவது தோற்றுப்போன திம்புப் பேச்சுவார்த்தைக் காலத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது உரிமை பற்றிக் கதைப்பதற்கு தற்போது எந்தவொரு தமிழ் அரசியல் தலைவர்களும் இல்லையென அரசியல் ஆய்வாளர் குசல் பெரேராதனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, நான் அண்மையில் நன்றாகச் சிங்களம் பேசக்கூடிய முதியவர் ஒருவரைச் சந்தித்திருந்தேன். இதன்போது, அவர் நன்றாகச் சிங்களம் கதைப்பதன் பின்னணி குறித்து விசாரித்தேன். அதற்கு அவர் தான் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பதவி வகித்ததாகவும், தான் குருநாகல், கழுத்துறை தெற்கு, காலி மற்றும் கொழும்பு பிரதேசங்களில் வேலைசெய்ததாகவும், அதனால் 40 வருட அனுபவம் உள்ளதாகவும் தெரிவித்தார். அத்…
-
- 0 replies
- 762 views
-
-
தமிழ் தேசியத்தை கொல்லும் குழு வாதமும் கொள்ளையடி வாதமும் -மு.திருநாவுக்கரசு August 28, 2020 தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசியத்தின் ஒரு நூற்றாண்டுகால தோல்வியின் உச்சத்தை பறைசாற்றி நிற்கின்றது. இதனை “முள்ளிவாய்க்கால் – 2” என அழைக்கலாம். தமிழ் மக்கள் முன் எப்போதும் கண்டிராத பாரிய இராணுவ தோல்வியாக 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அமைந்தது. அது நிகழ்ந்து 11 ஆண்டுகளின் பின்பு , அந்த இராணுவ தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாரிய அரசியல் தோல்வியாக 2020ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் காட்சி அளிக்கிறது. அளவாற் சிறிய தமிழினம் மேலும் மேலும் சிறிதுசிறிதாயாத் துண்டாடப்படுகிறது. ஆனால் அளவாற் பெரிய சி…
-
- 0 replies
- 448 views
-
-
மிகச்சரியான மாற்றம் – விக்டர் ஐவன் தற்போது நாட்டை ஆளும் அரசும், அதன் சமூக அரசியல் முறையும், அதன் பொருளாதாரமும் முழுமையாக முடங்கி விழுந்துள்ளது. அதுவும் வங்குரோத்து நிலை மற்றும் அராஜகத்தின் இருண்ட நிழல்கள் நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. துரதிஷ்டவசமான கொவிட்-19 இன் பாதிப்பும் இந்த சந்தர்ப்பத்தில்தான் நாட்டை காவு கொண்டுள்ளது. இந்த நிலை நாட்டின் பொது மக்களது அன்றாட வாழ்க்கை ஓட்டத்துக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியிருப்பினும் அதை பொருத்துக் கொள்ளும் நிலையில்தான் நாட்டு மக்கள் உள்ளனர். எனினும் அந்த நிலை நாளுக்கு நாள் மிக மோசமான நிலைக்கு மாற்றமடைந்து செல்வதை தவிர்க்க முடியாதுள்ளது. அதன் விகிதாசரத்துக்கேற்ப சமூகம் சிந்தனைத் திறனுடன் செயல்படும் ஆற்றலையும் இழந்துவிடும்…
-
- 0 replies
- 719 views
-
-
தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 750 லட்சம் தமிழர்கள் இருக்கிறோம். இதுமட்டுமின்றி, இலங்கையில் நாம் பூர்வ குடியினர். 35 லட்சத்துக்கு மேல் இருக்கும் அங்குள்ள தமிழரின் எண்ணிக்கை. இதுபோதாதென்று இந்தியாவெங்கும், உலகமெங்கும் சிதறிக் கிடக்கிறோம். ஆகப் பெரிய எண்ணிக்கை இது. அப்படியிருந்தும், ருவாண்டா என்கிற குட்டி நாட்டில் நடந்த இனப்படுகொலைக்குக் கிடைத்த நீதி, ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைக்காக இன்னும் கிடைத்த பாடில்லை. இதற்குக் காரணம் 3 பேர். இந்த மூவரில் முதலிடத்தில் இருப்பது யார் என்பதைப் பிறகு சொல்கிறேன். இரண்டாமிடத்தில் இருப்பது - இந்தியா. மூன்றாமிடத்தில் இருப்பது, சர்வதேசம் மற்றும் சர்வதேச அமைப்புகள். நடப்பது இனப்படுகொலை என்பதைச் சில நாடுகள் காலதாமதமாகத் தான் தெரிந்துகொண்டன…
-
- 0 replies
- 816 views
-
-
இந்திய நலனுக்கு உட்படுத்தப்பட்ட உடன்படிக்கை ஒன்றை, இந்தியா தனது பலவீனமான அணுகுமுறைகளால் இழந்திருக்கின்றது – பேராசிரியர் கணேசலிங்கம் பேராசிரியர் கணேசலிங்கம் கேள்வி? இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 34 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றது. இந்த உடன்படிக்கை இப்போதும் நடைமுறையில் இருக்கின்றதா? அல்லது அது காலாவதியாகி விட்டதா? பதில்! ஏறக்குறைய இலங்கை இந்திய ஒப்பந்தம் இயல்பான போக்குகள் அல்லது அதனுடைய உள்ளடக்கங்கள், அது தொடர்பான இலங்கை இந்திய அரசுகளின் அணுகுமுறைகளை அவதானிக்கின்ற போது, பெருமளவிற்கு அதனுடைய தனித்துவத்தை இழந்து விட்டது. காரணம் புறமயமாகப் பார்த்தால், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் எண்ணப் பாங்குகளை அல்லது இலங்கை இந்திய ஒப்…
-
- 0 replies
- 271 views
-
-
விபரீதமாகும் விவகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலுள்ள அவநம்பிக்கைகள் அபிப்பிராய பேதங்கள் என்ற எதிர் மனப் போக்குகள் ஆயுத பண்பு கொண்ட குழுக்களுக்கு இடையே அடிக்கடி முனைப்பு பெற்றுக் கொண்டாலும் மாற்று தகைமைகளுக்கான சிந்தனைகளையோ எண்ணங்களையோ தோற்றுவிக்காத போக்கே இருந்து வந்துள்ளது. இந்த போக்குக்கு ஒரு மாற்று நிலை உருவாக வேண்டிய தேவை. இரண்டு இடை நிலைப் புள்ளிகளிலிருந்தே ஆரம்பமாகின்றது என்பது ஒரு நிதர்சனமான உண்மை. அந்த புள்ளிகள் பற்றி அதிகம் ஆராய வேண்டிய அவசியமில்லை. ஒன்று வடமாகாண சபைத் தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட ஆளுமை. இன்னொன்று தமிழ் தேசியம் தடுமாறிப் போகிறது என்…
-
- 0 replies
- 818 views
-
-
தேசத்தின் இரு கண்களாக ஊழலும் இனவாதமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையர்களுக்கு ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற சொற்றொடர் புதிதல்ல. குறிப்பாகத் தேர்தல் காலங்களில் -உச்சரிக்கப்படும் சொற்றொடர் இது. ஆனால், ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற அந்த எதிர்காலத்தின் சாயலைக்கூட, சமானிய இலங்கையர் அனுபவிக்கவில்லை என்பது வருத்தம் தோய்ந்த உண்மை. கொவிட்19 பெருந்தொற்று தொடக்கிவைத்த நெருக்கடியை, அளவில்லாத ஊழலும் வளக் கொள்ளையும் அதிகாரத் துஷ்பிரயோகமும், இன்னொரு கட்டத்துக்கு நகர்த்தியுள்ளன. ஊழலும் இனவாதமும் வெளிப்படையாகவே செயற்படுகின்ற ஒரு சூழலை, அன்றாட இலங்கையர்களால் காண முடிகிறது. ஜனாதிபதி விதந்துரைத்த ‘ஒழுக்கமான சமூகத்தின்’ இலட்சணத்தை, அன்றாடம் காணக் கிடைக்கிறது. பொதுமக்க…
-
- 0 replies
- 429 views
-
-
சிக்கலுக்குள் மாட்டியுள்ளது கூட்டு எதிரணி என் மீதும், எனது மனச்சாட்சியின் மீதும் நம்பிக்கை வையுங்கள் என வேண்டிக் கொள்கிறேன். நான் பிரபுக்கள், கோடீஸ்வரர்கள் குடும்பத்தவனல்ல, விரிவுரை யாளரோ, பேராசியரோ அல்ல. இந்த நாட்டின் விவசாயி ஒருவரது மகன். நான் நீண்ட காலமாக அரசியலரங்கில் செயற்பட்டு வரும் ஒருவன். நான் எனது குடும்ப உறுப்பினர்கள் ஐந்துபேரினது உயிர்களைப் பணயம் வைத்தே அரசிலிருந்து வெளியேறியுள்ளேன். இந்த அரச தலைவருக்கான தேர்தலில் பல சவால்களை எதிர்நோக்க நேரும் என்பதை நான் நன்கறிவேன். பொது வேட் பாளராகத் தெரிவாகி 12 மணித்தியாலங்கள் கழியுமுன் எனக்கான பாதுகாப்பு நீக்கப்…
-
- 0 replies
- 472 views
-
-
புவிசார் அரசியல் உலக ஒழுங்குகளுக்கு ஏற்ப நாடுகளுக்கு இடையிலான சொந்த நலன் அடிப்படையில் முலோபாய இராயதந்திர நகர்வுகளுக்கு ஏற்ப மாற்றங்களோடு மாறிக்கொண்டே இருகின்றன. ஆதிக்க சக்திகளாக அருகில் இருக்கும் பெரிய அரசுகள் தமது அரசியல் பொருளாதர பாதுகாப்பு நலன் சார்ந்து எப்பொழுதும் அருகில் இருக்கும் சிறிய தேசங்களும் அரசுகளும் தமது கட்டுப்பாட்டில் இருக்கவே செய்கின்றன. கியூபா ஏவுகணை நெருக்கடி பதட்டத்தின் போது ,1962 அக்டோபரில் அமெரிக்கக் கரையிலிருந்து வெறும் 90 மைல் தொலைவில் உள்ள கியூபாவில் அணு ஆயுதம் ஏந்திய சோவியத் ஏவுகணைகளை நிறுவுவது தொடர்பாக பதட்டமான, புவிசார் அரசியல் மூலோபாய மற்றும் இராணுவ மோதலில் ஈடுபட்டனர். அக்டோபர் 22, 1962 அன்று ஒரு தொலைக்காட்சி உரையில், ஜனாதிபதி ஜான் எஃப்.…
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கையில் அதானி மின் திட்டம்: மோதி பற்றிய சர்ச்சையை விளக்க வலுக்கும் கோரிக்கைகள் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் வட மாகாணத்திலுள்ள மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்படவுள்ள நிலையில், அந்த திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க எட்டப்பட்ட தீர்மானம், இன்று இரு நாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழுத்தங்களை கொடுத்ததாக, இலங்கை மின்சார சபையின் தலைவராக…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
ஜெருசலேம்: அமெரிக்க அடாவடி சர்வதேச சமூகத்தின் மீது வைக்கப்படும் நம்பிக்கையின் அபத்தத்தையும் ஆபத்தையும் உலக அரசியல் அரங்கு, எமக்குப் பலமுறை உணர்த்தியிருக்கிறது. இருந்தபோதும், சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைப்பதும் ஏமாற்றப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அடக்குமுறைக்குள்ளாகியுள்ள சமூகங்கள், அடக்குமுறையின் மோசமான விளைவுகளை அனுபவித்து வந்துள்ளன. நியாயத்தின் அடிப்படையில் அயலுறவுக் கொள்கைகள் உருவாக்கப்படுவதில்லை; அவை நலன் சார்ந்தவை. இதைப் பலரும் விளங்கிக் கொள்ளத் தவறுகின்றனர். தீதும் நன்றும் பிறர்தர வாரா. கடந்தவாரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை இஸ்ரேலின்…
-
- 0 replies
- 571 views
-
-
சிரியா விடயம் சின்னதல்ல சிரியா விடயம் சின்னதல்ல சிரியா விடயம் இன்று உலகின் அனைத்து மக்களையும் பாதித்து விட்டது என்பதற்கப்பால், மனிதத்தை நேசிக்கும், சுதந்திரத்தை விசுவாசிப்பவர்களை மட்டும் தான் அது கவலை கொள்ள வைத்துள்ளது, மாறாக இன அழிப்பை மேற்கொள்ளக் காரணகர்த்தாவாக இருப்போருக்கு சிரிய விடயம், சிறிய விடயமாகவும், சிரிப்புக்குரிய விடயமாக வுமே அமையும். உலக வல்லரசுக…
-
- 0 replies
- 403 views
-