அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9210 topics in this forum
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் [ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010, 18:45 GMT ] [ புதினப்பார்வை ] ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய பின்னடைவுக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் எதிர் காலத்தினை நெறிப்படுத்தும் பாரிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வந்துள்ளது. பல பத்தாண்டுகளாக சனநாயக அரசியல் பாரம்பரியத்தினூடாக நாடாளுமன்ற அரசியலினைக் கையாண்டு வந்த தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரசு கட்சி உட்பட பிற்காலத்தில் ஆயுதப் போராட்ட வழிமுறையிலிருந்து சனநாயக வழிக்கு மாறிய தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி [சுரேஸ் அணி] ஆகியன இணைந்ததாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் பெற்றது. இந…
-
- 0 replies
- 867 views
-
-
தமிழகத்தின் ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் ? – தவறும் திசை : சபா நாவலன் “இலங்கை என்பது பௌத்தர்களின் புனித பூமி, பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் சிங்கள் மக்கள் வாழ்கின்ற ஒரே நாடு இலங்கை. இந்த நாடு பௌத்தத்தின் பாதுகாவலர்களான சிங்கள மக்களுக்கு உரித்தானது. இங்கு வாழ்கின்ற சிங்கள மக்களுக்கு அவர்களது புனிதக் கடமையை நிறைவேற்றும் உன்னத நோக்கத்திற்குப் பாதகமின்றியும் உதவி புரியும் வகையிலும், தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் வாழ்ந்து மடியலாம்”. பெரும்பாலான சிங்கள மக்களின் பொதுப்புத்தி அல்லது சிந்தனை முறை இவ்வாறுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. உலகமயம் உருவாக்கிய நுகர்வுக் கலாச்சாரம் குக்கிராமங்கள் வரை பரவியிருக்கின்ற இரண்டாயிரத்தின் இரண்டாவது பத்தாண்டும் கூட இந்தச் சிந்தனை முறையில் எந…
-
- 6 replies
- 962 views
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பற்றிய எனது கணிப்பீடு : பி.ஏ.காதர் பி.ஏ.காதர் - 1994 ஜனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா குமாரதுங்கவின் தேர்தல் அமைப்புக்குழுவில் முழு மலையகத்திற்குமான ஒரே ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டவர். இலங்கை அரசியல் யாப்பு பற்றியும் தேர்தல் சீர்திருத்தம் பற்றியும் தனது பல்வேறு ஆய்வுகட்டுரைகளை பல்வேறு கருத்தரங்குகளில் சமர்ப்பித்தவர். இத்துறையில் சிறப்பு தகைமை கொண்ட இலங்கையின் அனைத்து புத்திஜீவிகளோடும் தொடர்பு வைத்திருந்தவர். சந்திரிகாவினால் அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழுவின் முன்னிலையில் மலையக மக்கள் முன்னணியின் சார்பில் பிரேரணைகளை முன்வைத்து வாதாடிய அனுபவமும் இவருக்குண்டு. ஒருதடவை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானால் ஹோட்டல் கலதாரியில் ஏற்பாட…
-
- 1 reply
- 763 views
-
-
அரசியல் என்பது கடவுள் வாதமல்ல யதீந்திரா அரசியல் என்பது அடிப்படையில் ஓர் அறிவியல் என்பதையே நம்மில் பலர் அடிக்கடி மறந்துவிடுவதுண்டு இத்தனைக்கும் அவர்கள் நமது சூழலின் முன்னேறிய பிரிவினரும் கூட. கருத்தியல் அர்த்தத்தில் அரசியல் ஒரு விஞ்ஞான வாதமாகும். அதனால்தான் அரசியல் விஞ்ஞானம் (Political Science) என்று அழைக்கிறோம். ஆனாலும் என்னதான் இதுபற்றி அறிவில் நாம் முதிர்ந்தவர்கள் என்று பேசிக் கொண்டாலும் உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டு, அவ்வப்போது அரசியலை ஒரு மதவாதப் பண்புடனேயே அணுக முற்படுகிறோம், அணுகியும் வருகிறோம். அரசியல் எப்போதெல்லாம் கடவுள்வாதப் பண்பைப் பெறுகிறது? அரசியலில் பல்வேறு புரிதல்களுக்கு இடமுண்டு என்பதை மறுக்கும்போது, ஒரு அரசியல் நிலைப்பாடு முற்றிலும் எதிர்பா ரா…
-
- 0 replies
- 899 views
-
-
ஜனநாயகமும் ஜனநாயக துஷ்பிரயோகமும் கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் வன்னியில் போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நாட்கள் அவை. தினமும் சாவு. நூற்றுக்கணக்கானவர்கள் காயம். இரத்தம் பெருக்கெடுத்தோடிய நாட்கள். அவலம் பெரும் நாடகமாடியது. மனிதர்கள் செயற்றுப் போனார்கள். செயலற்றுப் போகும்போது எதுவும் வெறும் சடம் என்ற நிலை உருவாகிறது. அப்படித்தான் மனிதர்கள் அப்போது அங்கே இருந்தார்கள். காற்றில் எற்றுண்டு போகும் சருகுகளாக, ஆற்றில் அள்ளுண்டு போகும் துரும்பாக. அங்கே எவரிடமும் கனவுகளில்லை. எதிர்காலம் பற்றிய எந்த எண்ணங்களுமில்லை. நினைவுகள் மங்கிக் கொண்டிருந்தன. கண்ணீர் நிரம்பி, அந்தப் பாரம் தாங்க முடியாமல்; கால்கள் புதைய மணலில் தள்ளாடி நடக்கும் மனிதர்களே அந்தச் சிறிய, ஒடுங்கிய கடற்கரைய…
-
- 1 reply
- 615 views
-
-
(வேறொரு தலைப்பிற்கு பதிலாக எழுதப்பட்ட கருத்தாயினும் தாயகத்தின் இன்றைய தேவை கருதி இங்கு தனித்தலைப்பில் இணைத்திருக்கிறோம். இது தொடர்பில் உங்கள் கருத்துக்கள் நிலைப்பாடுகள்.. இந்த முன்மொழிவுகளில் இருக்கக் கூடிய குறைகள் நிறைகள்.. அவற்றை எவ்வாறு சீர்செய்வது.. எப்படி அந்நிய ஆதிக்கத்தில் இருந்து எமது பொருண்மியத்தை மீட்டு எமதாக்குவது என்பவற்றை இட்டு உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.) தமிழர் தாயகத்தில் சிங்கள ஆதிக்கமும் இந்திய வல்லாதிக்கமும் வலுப்படுவதை அனுமதிக்கக் கூடாது. புலம்பெயர்ந்த மக்கள் அங்கு முதலீடுகளைச் செய்வதோடு மேலதிக வருவாயை புலம்பெயர் நாடுகளுக்கு எடுத்து வர வேண்டும் அல்லது தாயகத்தில் கட்டுமானத்தில் முதலீடாக்க வேண்டும். சிறீலங்காவில் சேமிப்புக்களை வைப்பதை விட்டு ச…
-
- 7 replies
- 2.2k views
-
-
செம்மணி. ஈழக்களத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு கட்டங்கள் முக்கியமான கட்டங்கள். அவை இரண்டும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டவை. ஒன்று சந்திரிக்கா அம்மையார் ஆட்சிக்காலத்திலும் (95-2005) மற்றையது தற்போதைய மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. சந்திரிக்காவின் வெளித்தோற்றம் சமாதான தேவதை. உள்நோக்கம் போர், தமிழ் இன அழிப்பு. மகிந்தவின் வெளித்தோற்றம் உள்நோக்கம் எல்லாமே போர் மற்றும் இன அழிப்பு. இவர்களின் நோக்கங்களை நிறைவு செய்ய எப்போதும் தயார் நின்றவர்களில் ஒருவர் தான் சரத் பொன்சேகா. சந்திரிக்கா அம்மையார் காலத்தில் தான் யாழ்ப்பாண இடம்பெயர்வு என்ற பெரிய இடம்பெயர்வை தமிழ் மக்கள் அனுபவித்தனர். அது சந்திரிக்கா ஏவிவி…
-
- 12 replies
- 1.5k views
-
-
நான்கு நிகழ்வுகளும் அவை சொல்லும் செய்திகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு முக்கியமான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தி. மகேஸ்வரன் நினைவான மணிமண்டபம் திறப்பு விழா, தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு, மகிந்தவின் யாழ்ப்பாண வருகை என்பனவே அந்த நிகழ்வுகள் ஆகும். அந்நிகழ்வுகள் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. இந்த நிகழ்வுகள் சொல்லும் செய்தி என்ன? தமிழர்களது போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான நகர்வில் இவற்றின் பங்கு என்ன? என்பன தொடர்பில் ஆராய்கிறது இப்பத்தி. தமிழீழ தேசிய தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை பாரிசவாத நோயினால் படுக்கையில…
-
- 0 replies
- 814 views
-
-
சிறீலங்காவில் 1983 இல் நிகழ்ந்த இனக்கலவரத்தின் போது தென்னிலங்கை வாழ் சிங்கள விசுவாசத் தமிழர்கள் உட்பட பலரும் ஜே ஆர், காமினி, லலித் அத்துலத்முதலி உட்பட்ட சிங்களத் தலைமைகள் ஏவிவிட்ட காடையர்களின் பிடியில் சிக்கி சித்திரவதைப்பட்டு இறந்ததும்.. துன்பப்பட்டதும் கண்டு அண்டை நாடான இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொஞ்சம் பதறித்தான் போனார். அவரின் பதட்டத்திற்கு காரணமாக இருந்தது தமிழர்கள் சிங்களவர்களால் துன்பப்படுத்தப்பட்டது என்பதிலும்.. அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அமெரிக்க - இஸ்ரேல் - பாகிஸ்தான் நெருக்கமே. அப்போது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது பனிப்போர் காலத்திற்கான ஒன்றாக இருந்ததுடன் அமெரிக்க எதிரியான சோவியத் யூனியனை மையப்ப…
-
- 10 replies
- 1.6k views
-
-
காங்கிரஸைச் சந்தி சிரிக்கவைத்த எஸ்.வி.சேகர் வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அப்படி நம்மைச் சிரிக்கவைப்பவர் எஸ்.வி.சேகர். 2 நாளுக்குமுன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவருடனும் புலவர் புலமைப்பித்தனுடனும் கலந்துகொண்டேன். தமிழக முதல்வர் கருணாநிதி நடத்தப்போகும் செம்மொழி மாநாட்டைப் பற்றிய விவாதம் என்பதால், எடுத்த எடுப்பிலேயே விவாதத்தில் சூடு பறந்தது. ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதைத் தடுக்க அறிவித்ததைப் போலவே தி.மு,க.வினர் பதவி விலகியிருந்தாலும் காங்கிரஸ் விலகியிருக்காது என்று விவாதத்தின்போது சேகர் குறிப்பிட, காங்கிரசார் எந்த அளவுக்கு தமிழின விரோதிகள் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்ததற்காக நான் பாராட்டினேன். அந்த அர்த்தத்தில் சொல்லவில்ல…
-
- 0 replies
- 800 views
-
-
சியோனிஸ்டுகளும், இஸ்ரேலும் - சில குறிப்புகள் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு யூதர்கள், பாலஸ்தீனர்களின் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு. யூதர்கள் இஸ்ரேலை உருவாக்கியது பற்றிய ஒப்பீடு தமிழ் பேசும் மக்களுக்கு அறிமுகமாகியுள்ளது போன்ற ஒப்பீட்டு முயற்சியல்ல இப்பிரதி. வெறுமனே ஒப்பீடுகளில் மிதப்பதால் மனித இனம் விடுதலையை பெறவும் முடியாது. 1948 வரையில் இஸ்ரேல் என்பது கனவாக இருந்தது. அதற்காக யூதர்கள் உலகமெங்குமிருந்து ஒன்றுதிரண்டு உழைத்தார்கள். இன்று அமெரிக்க அரசியலில் கருத்துக்களை உருவாக்கி, கொள்கை முடிவுகளை எடுக்க வைக்கிற பெரும்பலம் கொண்டவர்களாக யூதர்கள் இருக்கிறார்கள். பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய சர்வதேச மனித உரிமை குற்றங்களை ஐ.நா.ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் சாட்சியமற்ற களமாக மாற்றப்பட்டது உலகிற்கு நன்கு தெரிந்தே நடந்தது. விடுதலைப்புலிகள் எதற்காக இராணுவ ரீதியல் பலவீனமான ஒரு கடற்கரைக்குள் மக்களையும் போராளிகளையும் கொண்டு சென்றார்கள் என்பது பற்றி.. யாருக்கும் எதுவும் தெரியாது..! முள்ளிவாய்க்கால்.. புதுக்குடியிருப்பை தக்க வைத்தபடி இருந்த புலிகளுக்கு காடு சார்ந்த பல பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்ள தெரியவில்லையா.. அல்லது அத்துணை முக்கியத்துவம் அறியாதவர்களாக புலிகள் இருந்தார்களா என்பதும் கேள்வி..! வெளி உலகத் தொடர்பிற்காக கடற்கரையை புலிகள் தெரிவு செய்தார்கள் என்பது அத்துணை ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல. ஒரு லட்சம் இந்தியப் படைகள் சூழ்ந்து நிற்க மணலாறை அதனை அண்டிய காடுகளை கடற்கரையை தேர்வு செய்த புலிகளுக்கு 50…
-
- 10 replies
- 5.5k views
-
-
வியூகம் இதழில் வந்த தேசியவாதம் தொடர்பான நீண்ட கட்டுரையொன்று வாசிக்கக் கிடைத்தது. யாழ் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்கின்றேன். குறிப்பு: கட்டுரை இணையத்தில் காணப்படவில்லை. தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள்.... தேசபக்தன். இந்த குறிப்பானது நாவலன் அவர்கள் ~இனியொரு| என்ற இணையத்தளத்தில் எழுதிய "ஈழத் தமிழ் பேசும் மக்கள் தனித்தேசிய இனம்?" என்ற கட்டுரை குறித்தே எழுதப்படுகிறது. இந்த கட்டுரையானது உலகமயமாதல, தேசங்களின் தோற்றம், தேசங்களை வரையறை செய்வது தொடர்பான பிரச்சனைகள், ஈழத் தமிழர் தொடர்பான சிக்கல்கள் ...... இப்படி பல விடயங்களைப் பேசிச் செல்கிறது. எனது அபிப்பிராயத்தில இந்த கருத்தாக்கங்கள் எல்லாம் முறையாக, கோர்க்கப்பட்டு ஒரு முழுமையான வாதத்தை முன்வைக்கத் தவற…
-
- 22 replies
- 11.1k views
-
-
ஈழத் தமிழ்ப் பேசும் மக்கள் தனித் தேசிய இனம்? சபா நாவலன் தேசம் தேசியம் அவற்றின் உட்கூறுகளெல்லாம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சமூக விஞ்ஞான விவாதக் கருப்பொருளாக அமைந்திருந்தது. 50 ஆயிரம் தமிழ் பேசும் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை, இந்திய அரசுகள் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலைக்குப் பின்னதாக, முகாம்களில் நடத்தப்படுகின்ற இனச்சுத்திகரிபிற்கு எதிராக குறைந்த பட்ச இணைவிற்குக்கூட வரமுடியாத தமிழ் பேசும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து இப்பிரச்சனை குறித்த விவாதம் முன்னெடுக்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதாகினும் சமூக அக்கறை உள்ள சக்திகளின் மத்தியிலேனும் இது தொடர்பான கருத்துக்களை முன்வைக்க வேண்டிய தேவை உணரப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சனை தொடர்பான கருத்தா…
-
- 0 replies
- 843 views
-
-
ஈழப்போரின் பின் அமேரிக்காவின் இலங்கை பற்றிய புதிய நிலை ? உங்கள் ஏல்லோரதும் கவணத்திற்கு ...! நேரடியாக ஊற்றிலிருந்து ...! நேரமிரந்தால் தயவுசெய்து தமிழிலே மொழி பெயர்ததுவிடுங்கோ, நன்றி. LETTER OF TRANSMITTAL UNITED STATES SENATE, COMMITTEE ON FOREIGN RELATIONS, Washington, DC, December 7, 2009. DEAR COLLEAGUES: The administration is currently evaluating U.S. policy toward Sri Lanka in the wake of the military defeat of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), one of the world’s deadliest terrorist groups. It…
-
- 1 reply
- 875 views
-
-
தமிழர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்... - It is a powerful film மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் - ஒரு சுருக்கமான வரைவு (The Battle of Algiers - By Gillo Pontecorvo) உலக வரைப்படத்தில் ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடுதான் அல்ஜீரியா. கொடிய மிருகங்கள் நிறைந்த அந்த காட்டு நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆதி பழங்குடியினர் மட்டுமே தங்களுக்கான வாழ்விடமாக புழங்கி வந்தனர். காலமெனும் மேகங்கள் அந்த காட்டுப்பகுதியின் மேல் மெல்ல கடந்து போக மொராக்கோ துனிஷியா வழியாக வந்த ஆப்பிரிக்கர்களும் ரோமர்களும் காஸ்தானியர்களும் இதர ஐரோப்பியர்களும் இந்த இடத்தைப் பண்படுத்தி நி…
-
- 0 replies
- 683 views
-
-
இது தெட்ட தெளிவான யுத்தம். போரின் இரு புறத்திலும் அவரவர் தமக்கே உரிய ஆயுதங்களை தேர்வு செய்து கொள்கின்றனர் ‐ அருந்ததி ராய் டெஹல்காவின் ஷோமா சௌத்ரிக்கு வழங்கிய நேர்காணல் 05 November 09 11:24 am (BST) ஷோமா: நாடு முழுவதும் வன்முறை வளர்ந்த வண்ணம் இருப்பதைக் காணும் இச்சூழலில், அந்த அடையாளங்களிலிருந்து நீங்கள் என்ன உணருகிறீர்கள்? இதன் பின்னணியை எவ்வாறு நாம் இனங்காண வேண்டும்? அருந்ததிராய் : இந்த அடையாளங்களை (வன்முறையின்) காண்பதற்கு நீங்கள் ஒன்றும் தலைசிறந்த அறிவாளியாக இருக்க தேவையில்லை. தீவிர நுகர்வு கலாசாரத்தினாலும், முன்முனைப்புள்ள பேராசை வெறி கொண்டும் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ள மத்திய தர வர்க்கம் நம்மிடையே உள்ளது. மூலாதாரங்களை சுரண்டுவதற்காக அடிமை உழை…
-
- 0 replies
- 665 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக சீமான் அவர்கள் வழங்கிய நேர்காணலை காண்பதற்கு http://www.2tamil.com/?pgid=srilankasn
-
- 0 replies
- 817 views
-
-
ஈழத்தில் நடந்து முடிந்த புலிகளின் அழிப்பின் பின் அந்த அழிவு தொடர்பாக பலவாறான கருத்துக்கள் தமிழர் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றுள் பல புலிகளின் அணுகுமுறையில் தவறுகளை இனம்காண்பவையாக உள்ளன. உதாரணமாக, 1) புலிகள் அரசியல் ராஜதந்திர நகர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்காமை 2) ராணுவ மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை வழங்கியமை 3) கருணாவின் பிளவு 4) தலைவரின் தூரநோக்கற்ற சிந்தனை 5) தக்க தருணத்தில் கெரில்லா போர்முறைக்கு மாறாதமை 6) மரபுப் போர் முறையைக் கைக்கொண்டமை. போன்ற பல கருத்துக்கள் வெளியிடப்பட்டன. வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாறிவரும் உலக ஒழுங்கு சில இடங்களில் பேசப்பட்டு வந்தாலும், அதன் தாக்கம் அதிகளவில் பேசப்படுவதில்லை. சமீபத்தில் பூகோள அரசியலை…
-
- 51 replies
- 9k views
-
-
"என்னைப்பெத்த ராசாவே கொஞ்சம் சேதி கேளு ராசாவே! உண்ணாமல் இருப்பதாக சொன்னாக உருகிப் போனேன் உயிரோடு புதைஞ்ச சனம் யாரை நம்பிப் புதைஞ்சதையா உண்ணாமச் செத்த சனம் உலகநாட்டைப் பார்த்ததையா வெளிநாட்டுத்தமிழரால விடிவெள்ளி பூக்குமெண்டு வழிநெடுகப் பார்த்த சனம் இப்ப வவுனியாவில் கிடக்குதையா கனிமொழியும் வருவாளோ கனிபழமும் தருவாளோ முள்ளுக்கம்பி பின்னால முளிபிதுங்கி நிற்பவரே மகிந்த ராசபக்சா மகிமைதனைப் பாரீரே" http://unarvukall.blogspot.com/
-
- 13 replies
- 2.1k views
-
-
தலையங்கத்தை பார்த்து பதில் மயங்க வேண்டாம். இது நோர்வேயில் எனக்கு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த வேதனைகள். முடிந்தால் இதனை அடிப்படையாக வைத்து எதாவது அலசுங்கள். 1.நோர்வேயின் புலிகளின் குரல் "தமிழ்முரசம்" எதற்காக சிவப்பு கட்சிக்கு வாக்கு போடுவதுதான் தமிழருக்கு நன்மை என்று பட்டும் படாமல் பிரசாரம் செய்ய முயன்றது??? தொழிற்கட்சியில் புலிகளின் இன்னொரு ஆதரவாளர் போட்டியிடும் போது? 2்். சாதி ரீதியில் இங்கு ஆதரவாளர் பிரிந்துள்ளதாக வந்த தகவல் உண்மையா? 3.கேபி நெடியவன் என நாங்கள் இரு குழுக்களாக இருக்கிறோமா? 4். இதில் எது ஒட்டுக்குகுழு? 5்்். நான் மாதாந்தம் அனுப்பும் பணம் எங்கே போகிறது??????? நேர்மை இல்லாமல் எதை செய்தாலும் அது தற்காலிகம்தான்.
-
- 2 replies
- 897 views
-
-
ஏதோவொரு பிடிப்பில், நம்பிக்கையில், ஆதார அச்சில், எதிர்பார்ப்பில், காத்திருப்பில், ஒரு புள்ளியை நோக்கிய பயணமாக இருந்த வாழ்க்கை தேங்கிவிட்டது. இரவில் அடர்காட்டில் திசை தொலைத்த திகைப்பினை நினைவுறுத்துகின்றன இந்நாட்கள். முன்னைப்போல நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள முடிவதில்லை. சந்திப்புகளைத் தவிர்த்துவிடுகிறோம். தொலைபேசி எண்களைக் கண்ணெடுக்காமலே நிராகரித்துவிடுகிறோம். எல்லாவற்றிலும் சலிப்பும் மந்தமும் படர்ந்துவிட்டிருக்கிறது. பிடிவாதமான சிறையிருப்புகளை மீறி யாரையாவது பார்த்துவிட நேரும்போது, ‘தயவுசெய்து அரசியல் பேசவேண்டாம்’என்று கேட்டுக்கொள்கிறோம். ஆனால், பேச்சு முட்டி மோதி அங்குதான் வந்து தரைதட்டுகிறது. பழகிய, புளித்த, சலித்த, விரும்பாத வார்த்தைகளை நாம் பேசவும் கேட்கவும் செய்…
-
- 2 replies
- 886 views
-
-
இன்ரபோலால் தேடப்பட்ட கேபி எந்த நாட்டில் கைது செய்யப்பட்டார்? எந்த நாட்டு நீதிமன்றத்தால் நாடு கடத்துப்பட்டார்? அல்லது சட்ட விரோதமாக இலங்கை அரசு அவரை கடத்தியதா? அல்லது அவரை காட்டிக் கொடுத்த நாடு தனது நீதிபதிகளை மதிக்க வில்லையா? அல்லது????? சரி எதுவாக இருந்தாலும் இன்ரபோலின் விசாரணை நடந்த பின்னர்தானே அவர் நாடு கடத்தப்பட்டிருக்க வேணும். உண்மையில் என்ன நடந்தது?
-
- 5 replies
- 1.2k views
-
-
ஆப்கானிஸ்தான் ஒரு பார்வை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 959 views
-
-
//தமிழீழத் தேசியக் கொடி. (image:.eelamweb.com)// சிறீலங்கா என்ற நாமம் 1972ம் ஆண்டு வரை உலக வரைபடத்தில் இருக்கவில்லை. அதுவரை அது சிலோன் அல்லது இலங்கை என்றே இருந்தது. 1948 இல் சிலோன் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற உழைத்தவர்களில் சேர் பொன் இராமநாதன்,பொன்னம்பலம், அருணாச்சலம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். சோல்பரி என்ற ஆங்கிலேயப் பிரபுவின் முன் சிலோனுக்கு சுதந்திரம் அளிக்க முதல் 50:50 என்ற அரசியலமைப்புத் திட்டம் முன் மொழியப்பட்டது. அதில் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தோர் 50% அரசாங்கத்தில் இடம்பெற வாய்ப்பளிப்பதாக இருந்தது. ஆனால் அப்போதைய சில தமிழர்கள் தலைமைகள் அதை ஏற்க மறுத்து சிங்களவர்களும் நாமும் சகோதரர்களாக வாழ்வோம் என்று சொல்லி ஆங்கிலேயர்கள் தர முன்வந்ததைய…
-
- 4 replies
- 1.3k views
-