அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
ஹீரோவாகிய இராணுவ அதிகாரியும் சிதையும் தமிழ் தேசியமும் நரேன்- வன்னியில் இருந்து மாற்றலாகி சென்று மீண்டும் வன்னிக்கு வந்திருக்கும் கேணல் ரத்னபிரிய என்ற இராணுவ அதிகாரியின் பிரியாவிடை நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முகப்புத்தகங்கள், ஊடகங்கள் என்பவற்றில் அந்த விடயம் பேசுபொருளாக மாறியிருப்பதுடன் அடுத்து வரும் ஜெனீவா அமர்விலும் அது தாக்கம் செலுத்தும் அளவுக்கு சென்றிருக்கின்றது. இந்த நிலைக்கு என்ன காரணம்….?, யார் பொறுப்பு …? என்பது குறித்து ஆராயப்பட வேண்டியது அவசியமானதே. யாழ் மாவட்டத்தை சூரியகதிர் இராணுவ நடவடிக்கை மூலம் இராணுவம் 1995 ஆம் ஆண்டு கைப்பற்றிய பின்னர் விடுதலைப் புலிகளின் கட்மைப்பு வன்னியை மையமாக கொண்டு இ…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஹுசைனின் உறுதியும் தமிழரசு கட்சியின் தளம்பல் போக்கும் - யதீந்திரா இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போது இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில், மேற்படி பிரேரணையின் திருத்தப்பட்ட நகலை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. எனவே அதற்கான வாக்கெடுப்பும் அவசியமில்லாமல் போனது. 30ம் திகதி குறித்த பிரேரணை தொடர்பான விவாதங்கள் ஆரம்பித்த வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஹூசைன் தனதுரையில் தெரிவித்திருந்த விடயங்களையே இப்பத்தி பிரதானமாக எடுத்துக் கொள்கிறது. 2014ம் ஆண்டு அமெரிக்காவினால் கொண…
-
- 0 replies
- 225 views
-
-
ஹுயூமன் றைற்ஸ் வோச் என்று ஒரு அமைப்பு இருக்கின்றது. சில நாட்களின் முன்பு விடுதலைப் புலிகளைப் பற்றி சில பல புரளிகளைக் கிளப்பியிருந்தது. யார் இதன் மூல கர்த்தாக்கள் என்பது மூடு மந்திரமாக இருந்தது. அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவில் சோவியத் யூனியனுக்கெதிரான பனிப்போரில் அவதூறுகளைக் கிளப்புவதற்காக முதன்முதலில் ஆரம்பித்து பின்னர் முந்நாள் கம்யூனிசநாடுகளின் அரசுகளை ஆட்டங்காண வைத்து ஸ்வாகா செய்வதற்கு பேருதவி செய்த ஒரு தனியார் அமைப்பு இன்று பரிமாண மாற்றங்களைக் கண்டு ஹியூமன் றைற்ஸ் வோச் என்ற அமைப்பாக புரளிகளைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றது. ஐ.நா போன்ற பொது ஸ்தாபனங்களின் எந்த தொட்ர்பும் இல்லாது தனியார் ஸ்தாபனமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. இது கிளப்பும் புரளிக்கெல்லாம் ஆதாரம் இருக்க…
-
- 10 replies
- 2.6k views
-
-
ஹூத்திகள்மீது அமெரிக்காவின் பயங்கரவாத முத்திரை – தமிழில் ஜெயந்திரன் 2 Views கடந்த ஜனவரி 10ம் திகதி, அமெரிக்காவின் அன்றைய இராசாங்க அமைச்சரான மைக் பொம்பெயோ (Mike Pompeo) வடயேமனை (North Yemen) தமது கட்டுப்பாட்டில் வைத்து, நடைமுறை அரசை (de facto state) நடத்தி வருகின்ற ஹ_த்தி (houthi) இனத்தைச் சார்ந்த இயக்கமாகிய அன்சார் அல்லா (Ansar Allah) தன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்னும் நோக்கத்தோடு அதனை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டியது போன்று, யேமனில் ஏற்கனவே நிலவுகின்ற மிக மோசமான மனிதாய நிலைமைகளை இந்த அறிவிப்பு மேலும் சிக்கலுக்குள்ளாக்கி, தற்போது அந்த நாட்டுக்கு …
-
- 0 replies
- 416 views
-
-
ஹெரி - கூட்டமைப்பு சந்திப்பில் அமெரிக்கா இராஜதந்திர நடைமுறைகைளை உதாசீனம் செய்ததா? யதீந்திரா ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் முக்கிய நபர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆவார். அதனைத் தொடர்ந்து அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் ஹெரி, இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்காவை பொறுத்தவரையில் அதன் மிக உயர் பொறுப்புக்களில் ஒன்றை பிரதிநிதித்துவம் செய்பவரின் இலங்கை விஜயமானது ஒரு குறியீட்டு அரசியல் பெறுமதியை கொண்டதாகும். தன்னுடைய தோல்விக்குப் பின்னால் இந்திய, அமெரிக்க உளவுத் துறைகளின் திரைமறைவு சதியிருப்பதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறிவரும் நிலையில்தான், ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்திய பிரதமரின் விஜயமும், தற்போது அமெர…
-
- 1 reply
- 491 views
-
-
ஹெல்சிங்கியில் ட்ரம்ப் புட்டின் உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பூகோளத்தில் முதன்மையான தலைவர் மட்டுமல்ல அண்மைக் காலங்களில் உலகின் கவனத்தை பல வழிகளிலும் ஈர்த்த தலைவர் என்று துணிந்து கூறலாம். கொரிய தீபகற்பத்தில் யுத்தம் ஒன்று வருகுது பார் என்ற நிலையிலிருந்து வடகொரிய அதிபருடன் சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி, கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை நீக்கி, பேச்சுவார்த்தை நகர்வுகள் மூலம் கொரிய பிணக்குக்கும் வடகொரியாவின் அணுஆயுத அபிலாஷைகளுக்கும் முடிவுகட்டும் இராஜதந்திரத்தை சாமர்த்தியமாக கையாள்கின்றார்.வடகொரிய தலைவருடன் உச்சிமாநாடு நடத்திய சூடு தணிய முன்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் உ…
-
- 0 replies
- 377 views
-
-
ஶ்ரீலங்கா பாராளுமன்றத் தேர்தல் - தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது? 👆🏿 ஶ்ரீலங்கா தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி என நண்பர் அனுப்பியிருந்தார். பார்த்து கருத்துக்களை வையுங்கள். தேர்தலில் வாக்களிக்கும் தாயகத் தமிழ் உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் எனவும் கேட்டிருந்தார். ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர திசநாயக்க வெற்றி பெற்று, உடனடியாகவே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலும் நடக்கவுள்ள சூழலில் பல தமிழ் யூடியுப்பர்கள் அநுர அலைக்குப் பின்னால் போயுள்ளது தாயகத்தையும், தேசியத்தையும் நேசிப்பவர்களை பதட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க ஓ…
-
-
- 3 replies
- 486 views
-