அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஈழத்தில் தமிழ் தேசியம் வீழ்ச்சியடைந்து விட்டது என்று பேரினவாதிகளும் தமிழ் தேசிய விரோதிகளும் அகமகிழ்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதைக் கண்டோம். இந்த ஐயங்களுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் நாட்களே பதில் அளிக்கப்படும் என்பதையும் தமிழ்தேசியப் பற்றுக்கொண்ட நாம் கூறியிருந்தோம். இதனை உறுதி செய்யும் விதமாக வடக்கு நவம்பர் 27ஆம் நாளன்று கிழக்கு தேசம் ஒளியால் நிறைந்திருந்தது. ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி என்பது மண்ணில் விதைக்கப்பட்ட எங்கள் வீர்ர்கள் கனவு குறித்தும் இலட்சியத் தாகம் குறித்தும் உலகிற்கு வெளிப்படுத்திய குரல் என்பதுடன் ஈழத் தமிழர் தேசத்தில் தமிழ்தேசியம் என்றும் வீழ்ச்சியுறாது என்பதும் அழுத்தமாக வ…
-
-
- 4 replies
- 422 views
-
-
தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக் கொள்வதும் கற்றுக் கொள்ளாததும் – நிலாந்தன்! நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பு, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வழங்கிய ஒரு தண்டனைதான். அதே சமயம் அர்ஜுனாவைத் தெரிவு செய்தமை என்பது தமிழ் மக்கள் தங்களுக்கு தாங்களே வழங்கிய ஒரு தண்டனைதான்.அதன் விளைவுகளை அவர்கள் பின்னாளில் அனுபவிக்க வேண்டியிருக்கும் . தேர்தலுக்கு முன்பாக கட்சிகள் தங்களுக்கு இடையே அடிபட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் ஒரு மூத்த அரசு அதிகாரி என்னிடம் சொன்னார்,” போகிற போக்கைப் பார்த்தால் தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் என்று தமிழ்ச் சனம் முடிவெடுக்கும் ஒரு நிலைமை வரலாம்” என்று. ஆம் அதுதான் நாடாளுமன்ற தேர்தலில் நடந்தது. அதுபோல கொழும்பில் வசிக்கும் ஓய்வு…
-
- 0 replies
- 206 views
-
-
பத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன் அங்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று குண்டுவீச்சு விமானங்களுக்கு மட்டும் அவ்வப்போது தெரிந்திருக்கும். புன்னனாலைக் கட்டுவன் கடந்து பலாலி இராணுவமுகாமின் வேலியை எட்ட நின்று பார்த்துத் திரும்பியர்களிலிருந்து துப்பாக்கியால் சுட்டு சில இராணுவச் சிப்பாய்களைக் கொன்றவர்களுக்கும் கூட மத்தாளோடையைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முன்னொரு காலத்தில் மரணம் தெருக்களில் துப்பாக்கியோடு அலைந்த போது அதனை வழி நடத்தியவர்கள், இன்று எல்லாம் முடிந்து போனது என ‘இந்திய இறக்குமதிச் சரக்கான தலித்தியம் என்ற’ சாதி வாதத்தை வழி நடத்துவதை இன்னும் எந்த மத்தாளொடை வாசியும் கேள்விப்பட்டிருக்க மாட்டான். புலிகளின் அழிவிற்குப் பின்னர் இ…
-
- 30 replies
- 4.6k views
-
-
இந்தியப் பிரதமரின் வருகை : அனுர யாரோடு ? - நிலாந்தன் நான்கு தடவைகள் இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்து விட்டார். இந்த நான்கு தடவைகளிலும் அவர் நான்கு இலங்கை ஜனாதிபதிகளை சந்தித்திருக்கிறார். பத்தாண்டு காலத்துக்குள் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பு நான்கு பேர்களிடம் கைமாறும் அளவுக்கு இச்சிறிய தீவின் அரசியல் ஸ்திரமற்றதாக இருந்து வருகிறது.ஆனாலும் பிரதமர் மோடியின் வருகையின்போது மாறாத இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று இனப்பிரச்சினை தொடர்பான இந்திய நிலைப்பாடு. இரண்டாவது,மீனவர்களின் விவகாரம்.அதுவும் தமிழ் மக்களோடு தொடர்புடையதுதான். இந்தியப் பிரதமரின் வருகையை மூன்று தளங்களில் வைத்துப் பார்க்க வேண்டும்.முதலாவது பிராந்தியத் தளம். இரண்டாவது கொழும்பு. மூன்றாவது தமிழ் நோக்கு நிலை. பிராந்தியத்தில் …
-
- 0 replies
- 360 views
-
-
கொரோனா அச்சுறுத்தலிலும் ஆதாயம் தேடும் ராஜபக்ஷக்கள் புருஜோத்தமன் தங்கமயில் உயிரிழப்பு ஏதுமின்றி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை இலங்கை கடந்துவிடும் என்ற நம்பிக்கை, நாட்டு மக்களிடம் பரவலாகக் காணப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்திருக்கின்றது. இதுவரை இரண்டு பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்திருக்கிறார்கள். அந்த இருவரின் உடல்நிலையில் ஏற்கெனவே காணப்பட்ட சிக்கல்கள் குறித்து வைத்தியத்துறையினர் விளக்கமளித்து, கொரோனா மரணங்கள் தொடர்பிலான மக்களின் பயத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தி இருக…
-
- 1 reply
- 591 views
-
-
அனர்த்த நிவாரண உதவிகளும் புவிசார் அரசியல் நலன்களும் January 8, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — இயற்கை அனர்த்தத்தின் விளைவான அழிபாடுகளில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் இடர்மிகுந்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கை மக்கள் புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கிறார்கள். இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றுமே கண்டிராத படுமோசமான 2022 பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுவந்த ஒப்பீட்டு அளவிலான முன்னேற்றத்தை ‘டித்வா’ சூறாவளி மறுதலையாக்கியிருக்கிறது. மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி அ…
-
- 0 replies
- 139 views
-
-
நெஞ்சில் நெருப்பைத் தமிழினம் ஏந்திய நாள் -இலட்சுமணன் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் அதன் வரலாற்றுப் பின்புலங்களையும் அறியாதவர்கள், அந்த அரசியல் நீரோட்டத்தில் கலக்காத, சுயநல அரசியல் சார்ந்த செயலொழுங்கில் பயணிப்பவர்களாகவே பெரும்பாலும் இருக்க முடியும். இத்தகையோர், சலுகைகளுக்காக உரிமைகளைத் தாரைவார்த்துக் கொடுத்து, சுயத்தை இழந்து நிற்பவர்களாகவே இருக்கமுடியும். இவர்களுக்கு, முள்ளிவாய்க்கால் ஓர் அஸ்தமனமாகத் தெரியலாம்; ஏன், தமிழ்த் தேசிய போராட்டத்தின் முடிவாகக் கூடக் கருதலாம். 1949ஆம் ஆண்டில் இருந்து, 1975வரை இடம்பெற்ற தமிழர்களின் அஹிம்சைப் போராட்டம் சம்பந்தமாக, ஒரு முழு விளக்கம் தர வேண்டும் என்றும், அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடிய ம…
-
- 0 replies
- 456 views
-
-
'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக் கற்றோம்' இவ்வாறு கூறி இருப்பவர் பான்கிமூன். கடந்த வாரம் கொழும்பில்அனைத்துலக உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் அவர் உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அவர் இவ்வாறு கூறுவதற்கும் ஏறக்குறைய ஒரு கிழமைக்கு முன்பு சொல்கெய்மும் இதே தொனிப்பட கருத்துத் தெரிவித்திருந்தார். இலங்கைத் தீவிலிருந்து தான் கடுமையான பாடங்களைக் கற்றிருப்பதாக. குறுகியகால இடைவெளிக்குள் இரு வேறு மேற்கத்தைய பிரதிநிதிகள் இவ்வாறு ஒரே தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இருவரையும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.ஒருவர் இலங்கைத் தீவில் ஒப்பீட்…
-
- 0 replies
- 661 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-01#page-16
-
- 0 replies
- 559 views
-
-
20ஆவது திருத்தமும் கொள்கையற்ற அரசியலும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 செப்டெம்பர் 10 , மு.ப. 11:51 நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற, எந்தவோர் அரசாங்கமும் முன்வராத நிலையில், ஜனாதிபதியின் அதிகாரங்களை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் நெருக்குவாரத்தின் பேரில், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, 2001ஆம் ஆண்டில் 17ஆவது அரசமைப்புத் திருத்தத்தை முன்வைத்தார். ஜனாதிபதி தமது நிறைவேற்று அதிகாரங்களை எதேச்சாதிகார முறையில் பாவிக்காது தடுப்பதற்காக, அரசமைப்புச்…
-
- 0 replies
- 524 views
-
-
வடக்கை ஆக்கிரமித்துள்ள படையினர் வடக்கில் பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினர், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் நிலைகொண்டிருப்பது மீண்டும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இதனால் வடபகுதி மக்கள் தங்கள் அன்றாட கடமைகளை செவ்வனே மேற்கொள்ள முடியாதவர்களாகவும் சுதந்திரமாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். வடக்கில் நிலை கொண்டுள்ள படையினர் தொடர்ந்தும் தமிழ் மக்களை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதும், அநாவசியமான புலனாய்வு வேலைகளில் ஈடுபட்டு வருவதும் பொதுவிடயங்களில் கூட தங்கள் தலையீடுகளை மேற்கொள்வதும் வழமையான ஒன்றாகவுள்ளது. இவை அனைத்துக்கும்…
-
- 0 replies
- 370 views
-
-
அரசியலாகும் அப்பாவிகளின் இரத்தம் -எம்.எஸ்.எம். ஐயூப் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி (உயிர்த்த ஞாயிறு தினம்) மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத் தாக்குதலை வழிநடத்தியவர்கள் யார் என்பது? அதைப் பற்றி அக்கறை கொண்டுள்ள அனைவரும் தற்போது எழுப்பும் கேள்வியாகும். அத்தாக்குதலைப் பற்றி விசாரணை செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம், அது தெரியவரும் எனப் பலர் எதிர்ப்பார்த்த போதிலும், அவ்வாறான எந்தத் தகவலும் அந்த அறிக்கையில் இருக்கவில்லை. அந்த அறிக்கையில், அவ்வாறான தகவல்கள் இருக்கும் எனக் கத்தோலிக்க திருச்…
-
- 0 replies
- 404 views
-
-
தமிழ் வாக்களிப்புப் பாரம்பரியம் - நிலாந்தன் 04 ஆகஸ்ட் 2013 ஈழப்போருக்கு முற்பட்ட காலத்தில் நடந்த ஒரு சம்பவம் இது. அது ஒரு தேர்தல் காலம். பீற்றர் கெனமன் வடமராட்சியில் ஒரு தேர்தல் பிரசார மேடையில் உரையாற்றினார். மைதானம் முழுவதும் சனங்கள் திரளாகக் கூடியிருந்தார்கள். விசிலடியும், கைதட்டும் பிரமாதமாக இருந்தது. கூட்டம் முடிந்ததும் கெனமன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னார் ''இம்முறை எமக்கு வடமராட்சியில் ஒரு சீற்றாவது கிடைக்கும்' என்று. ஆனால், தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தன. பீற்றர் கெனமனுடைய வேட்பாளர் தோல்வியடைந்துவிட்டார். இச்சம்பவத்தின் பின் கெனமன் பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருந்தார்.... ''தமிழர்கள் எம்மை நன்கு உபசரித்து விருந்தோம்புவர்கள். தேர்தல…
-
- 0 replies
- 720 views
-
-
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா… இல்லை விடுதலைப் போராளிகளா? · விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக அவர்களுக்குத் தெரிந்…
-
- 1 reply
- 437 views
-
-
புண்ணை பொன்னாடையால் மூடிமறைக்க முற்படக்கூடாது இந்திய பிரதமர் நரேந்திரமோடி அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதர உள்ளார். இலங்கைக்கு வருகை தரும் அவர் சர்வதேச வெசாக் தின விழாவில் கலந்துகொள்ள உள்ளதோடு எதிர்வரும் 12 ஆம் திகதி மலையகத்திற்கும் விஜயம் செய்ய இருக்கின்றார். பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருவதும் தெரிந்த விடயமாகும். இதற்கிடையில் மலையகத்திற்கு விஜயம் செய்யவுள்ள மோடி யிடம் மலையக மக்களின் பிரச்சினைகள் உரியவாறு முன்வைக்கப்பட வேண்டும். நிலை மைகளை திரித்து கூறுவதற்கு முற்படக்கூடாது என்றும் கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன. உலக நாடுகள் வரிசையில் இந்தியா …
-
- 0 replies
- 432 views
-
-
கடலில் இறங்கிப் போராடிய தமிழ் அரசியல்வாதிகள்? நிலாந்தன்! மீனவர்களுக்காக போராடத்தான் வேண்டும். விவசாயிகளுக்காக போராடத்தான் வேண்டும். ஆனால் போராட்டங்கள் திடீர் ரசங்கள் ஆகவோ அல்லது தேர்தல்மைய நோக்கு நிலையில் இருந்து சிந்திக்கப்பட்டவைகளாகவோ இருக்கக்கூடாது. மக்களை ஒரு திரளாக கூட்டிக் கட்டும் நோக்கிலானாவைகளாக இருக்க வேண்டும். 2009க்கு பின்னர் தீர்க்கப்படாத பிரச்சினைகளில் ஒன்று மீனவர் பிரச்சினை அது மீனவர்களின் பிரச்சினை தான் என்றாலும் அதை மீனவர்களால் தீர்த்துக் கொள்ள முடியாது. அதை மீனவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று இதுவரை காலமும் இழுபட விட்டதில் ஒரு தந்திரம் உண்டு. இருதரப்பு மீனவர்களையும் மோத விட விரும்பும் சக்திகள் அதனால் வெற்றி பெறுகின்றன. எனவே அதை மீனவர்களுக்கு இ…
-
- 0 replies
- 322 views
-
-
தமிழ் அரசியலின் அடுத்த கட்ட நகர்வு என்ன? December 4, 2021 —- வி. சிவலிங்கம் — – சுமந்திரன் தலைமையிலான குழுவினரின் அமெரிக்க விஜயம் – டிசெம்பர் மாதம் அமெரிக்கா நடத்தும் ‘மெய்நிகர்‘ வழியிலான கலந்துரையாடல். – சீன – இலங்கை உறவுகளில் ஏற்பட்டு வரும் நெருக்கமும், தாக்கங்களும் – உள்நாட்டு அரசியலில் புதிய கூட்டுகள் இலங்கை அரசியலையும், குறிப்பாக தமிழ் அரசியலையும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பது மிகவும் அவசியமாகி வருகிறது. குறிப்பாக பூகோள அரசியல் நிலமைகள் மாறிவரும் சூழலில் சர்வதேச அரசியல் மிக விரைவாகவே மாறி வருகிறது. இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாத அரசியல் இன்று பலமாக இருப்பினும், அதன் ஆயுள் த…
-
- 0 replies
- 287 views
-
-
கௌரி லங்கேஷ்: இந்துத்துவா காவுகொண்ட இன்னோர் இன்னுயிர் கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ளவியலாத ஆற்றாமை, கருத்துகளை வன்முறையால் எதிர்கொள்கிறது. அது கருத்துரைப்போரைக் கொல்கிறது. கருத்துரைப்போரைக் கொல்வதன் மூலம், கருத்துகளைக் கொல்லலாம் என, அது மடத்தனமாக நம்புகிறது. அந்த மடமை, மக்களை என்றென்றும் முட்டாள்களாக்கலாம் எனவும் நினைக்கிறது. அதன் மடச் செயல்கள் திட்டமின்றி நடப்பனவல்ல. அவை திட்டமிட்டே அரங்கேறுகின்றன; ஆனால், என்றென்றைக்குமல்ல. இந்திய மூத்த ஊடகவியலாளரும் மனித உரிமைப் போராளியும் இந்து அடிப்படைவாதத்தை தயவுதாட்சன்யமின்றி விமர்சித்து வந்தவருமாக கௌரி லங்கேஷ், கர்நாடகத்தில் கடந்தவாரம், அவரது வீட்டு வாசலில் வைத்து, சுட்டுக்க…
-
- 0 replies
- 393 views
-
-
மனித உரிமை மீறல் + போர்க்குற்றம் = இன அழிப்பு மனித உரிமை அமைப்புக்கள் +நாடுகள் +தீர்மானங்கள் +ஐநா +பாதுகாப்புச்சபை -வீட்டோ அதிகாரம்... ....................... .................... = இவை எல்லாம் தாண்டி தமிழர் அழிவிலிருந்து பாதுகாக்கப்படக்கூடிய வழிகள் தெரிகிறதா? கொஞ்சம் பேசலாம் வாங்க..........
-
- 11 replies
- 847 views
-
-
-
மக்கள் ஆணையைக்கொண்ட அரசின் தேவை குறித்து வலியுறுத்தும் நாணய நிதியம் 07 SEP, 2022 | 01:21 PM இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நான்கு வருட காலத்துக்கு 290 கோடி அமெரிக்க டொலர்களை கடனுதவியாக பெறுவதற்கு கடந்தவாரம் கொழும்பில் காணப்பட்ட அலுவலர்கள் மட்ட பூர்வாங்க உடன்பாடு குறித்து அரசாங்கம் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. மக்களுக்கு சிறப்பான வாழ்வைக் கொடுப்பதற்கு அவசியமான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் அரசாங்கத்துக்கு இருக்கும் பற்றுறுதிக்கு இந்த உடன்பாடு ஒரு அத்தாட்சி என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த அதேவேளை படுமோசமான வீழ்ச்சியைக் கண்டிருக்கும் பொருளாதாரத்த…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
குழந்தைகளை வைத்துப் புனைந்த கதைகள் சொல்லப்படுவது உண்மையா, பொய்யா எனப் பிரித்தறிவது எப்படி? உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான பிரிகோடு எது? சில விடயங்கள் கவனம் பெறும் வேளை, ஏன் பிற விடயங்கள் கவனம் பெறுவதில்லை? குறித்தவொரு விடயம் நீண்டகாலமாக இருந்தபோதும் அது திடீரென்று கவனம் பெறுவது ஏன்? இவை இன்றைய சூழலில் பதிலை வேண்டும் கேள்விகள். கடந்த சில வாரங்களாக உலகத்தின் கவனம், சிரியா மீது மீண்டுள்ளது. சிரியாவில், குழந்தைகள் சாகும் படங்கள் வெளியிடப்பட்டு, அங்கு ஒரு மனிதப் பேரவலம் நடந்தேறுவது போல, ஊடகங்களும் சமூக ஊடாட்டத் தளங்களும் சொல்கின்றன. திடீரென்று சிரியா மீது என்றுமில்லாத …
-
- 0 replies
- 421 views
-
-
சமூக ஊடகங்கள் மீதான தடை முஸ்லிம்கள் மீதான தாக்குதலை மூடி மறைக்க உதவியதா? எந்தவிதமான உதவியும் அற்ற நிலையில் இருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது நன்றாக திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இனவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் முஸ்லிம்களது வீடுகளை உடைத்தார்கள். பள்ளிவாசல்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் தீ வைத்தார்கள். முஸ்லிம்களின் சொத்துக்களை எரித்தார்கள். புனித குர்ஆன் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தினார்கள். முடிந்தவரையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை சூறையாடி காலி செய்த பின்பே அவற்றுக்கு தீ வைத்தார்கள். ஜனாதிபதியும், பிரதமரும் இவற்றைத் தடுத்து நிறுத்தி முஸ்லிம்களைக் …
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கையில் தொடரப்போகும் அமெரிக்கா, இந்தியா, சீனா பலப்பரீட்சை ; கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி பகுதி - 1 இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த வர்களுள் ஒருவரும் எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரனை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது, இலங்கை தீவில் காணப்படுகின்ற வல்லாதிக்க நாடுகளுக்கிடையிலான போட்டிகள், பூகோள அரசியல் நிலைமைகள், இந்திய அமைதிப்படையின் செயற்பாடுகள்,இலங்கை தேசிய இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின் முழு…
-
- 2 replies
- 1k views
-
-
அதிகரிக்கும் அமெரிக்க ஈடுபாடு By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 03:48 PM (ஹரிகரன்) “ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவின் வருகையினால் அமெரிக்கா முழுத் திருப்தியடைந்திருக்கிறதா என்ற கேள்வி உள்ளது. எனினும் அவர் போன்ற ஆட்சியாளர் ஒருவர் இருப்பது அமெரிக்காவுக்குப் பாதுகாப்பானது தான்” தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களும், அந்த நாட்டின் இராஜதந்திரிகளும் கொழும்பில் இரவுபகலாக பணியாற்றிக் கொண்டிருந்தது போலவே, பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், பல நாடுகளின் தூதரக மற்றும் இராஜதந்திரச் செயற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. முக்கியமாக அமெர…
-
- 1 reply
- 553 views
- 1 follower
-