Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ் மக்களின் தெரிவுகளில் ஆயுதப் போராட்டமும் ஒன்றா? பலருக்கு இதுகுறித்த பேச்சுக்களோ அல்லது கருத்துக்கள் முன்வைக்கப்படுவதோ அபத்தமாக நிச்சயம் தோன்றலாம். இத்தனை அழிவுகளுக்குப்பின்னரும் ஆயுதப் போராட்டம் குறித்து உன்னால் எப்படிச் சிந்திக்க முடிகிறது என்று கேட்கலாம். அப்படிக் கேட்பதிலும் அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால், பலரைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டம் முற்றான தோல்வியைத் தழுவிக்கொண்டிருப்பதுடன் பேரழிவையும் எமக்கு விட்டுச் சென்றிருக்கிறது. தமிழ் மக்களின் மனங்கள் இனிமேல் ஆயுதப் போராட்டம் ஒன்றுகுறித்துச் சிந்திப்பதையே உளவியல் ரீதியாக முறியடித்து, அதனை அவர்களின் மூலமாகவே இயலாத காரியம் என்று நம்பவைப்பதில் சிங்களப் பேரினவாதம் பெருவெற்றி பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. …

  2. 17 JUL, 2023 | 04:55 PM வட இலங்கையில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண அரசு ஏறத்தாள 350 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளது. பாளி, சிங்கள, தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், ஐரோப்பியர் கால ஆவணங்கள் இவ்வரசு பற்றியும், அதன் நான்கு பக்க அரண்கொண்ட அரசமாளிகை, அதிலிருந்த பெரிய ஆலயம், அரச அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் இருப்பிடங்கள், பூங்காவனம், புனித ஜமுனா ஏரி, நீதி மன்றம், நாற்றிசைக் கோவில்கள், காவலரண்கள், கோட்டைகள் முதலியன பற்றியும் கூறுகின்றன. அவ்வரலாற்றை மீள் நினைவுபடுத்துவதாகவே இன்றும் நல்லூரின் சிறிய வட்டாரத்திற்குள் எஞ்சியிருக்கும் ஜமுனா ஏரி, மந்திரிமனை, சங்கிலியன் அரண்மனை, சங்கிலியன் தோரணவாசல் முதலான மரபுரிமைக் கட்டிடங்களும், நினைவுச…

  3. குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் சொல்வது என்ன? தமிழர்களுக்குச் சிங்கள அரசியல் தலைவர்கள் நேர்மையாக இல்லை என்பது வேறு. ஆனால் தமிழர் நிலங்களைப் பிரிக்கும் நோக்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் வாழ்வியல் மீது அவர்களுக்கு அக்கறையே இல்லை என்பதுதான் பெரும் வேடிக்கை. 1954 இல் குடியேற்றப்பட்டமைக்கான அரசியல் பின் புலம்கூட தற்போதைய இளம் சிங்களப் பிள்ளைகளுக்குத் தெரியாது- அ.நிக்ஸன்- ஊடக விரிவுரை ஒன்றுக்காக சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்ட , அனுராதபுரம் பதவியா, கிராமத்துக்குக் கடந்த யூன் 28, யூலை 08 ஆகிய திகதிகளில் இரண்டு தடவைகள் சென்று வந்தேன். அருகே பதவிசிறிபுர. வெலிஓயா க…

    • 7 replies
    • 894 views
  4. Published By: VISHNU 16 JUL, 2023 | 01:26 PM லத்தீப் பாரூக் மேற்­கு­லகில் நாடோ­டி­க­ளாகத் திரிந்த யூதர்­களை கொண்டு வந்து குடி­யேற்­று­வ­தற்­காக பலஸ்­தீன பூமியில் கொலைகள், தொடர் படு­கொ­லைகள், இன­ஒ­ழிப்பு ஆகிய நட­வ­டிக்­கைகள் மூலம் உரு­வாக்­கப்­பட்ட செயற்கை நாடான இஸ்ரேல் மீண்டும் ஒரு தடவை ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரைப் பிர­தே­சத்தின் ஜெனின் நகரில் பலஸ்­தீன அகதி முகாம்கள் மீது ஜுலை மாதம் மூன்றாம் திகதி திங்கள் கிழமை மூர்க்­கத்­த­ன­மான யுத்தக் குற்­றங்­களைப் புரிந்­துள்­ளது. இந்த மூர்க்­கத்­த­னத்­துக்கு அமெ­ரிக்கா ஐரோப்பா என்­பன பூரண ஆத­ரவை வழங்கி உள்­ள­தோடு அர­பு­லக சர்­வா­தி­கா­ரிகள் வழ­மைபோல் மௌ…

  5. Published By: VISHNU 16 JUL, 2023 | 02:00 PM கபில் பொது­ஜன பெர­மு­னவின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் வீர­சே­கர, அண்­மையில் நாடா­ளு­மன்­றத்தில் நிகழ்த்­திய உரைக்கு, எதிர்­வி­னை­யாற்றும் வகையில் வடக்கு, கிழக்கில் நீதி­மன்­றங்­களைப் புறக்­க­ணித்து போராட்­டங்­களை நடத்­தி­யி­ருக்­கின்­றனர் சட்­டத்­த­ர­ணிகள். குருந்­தூர்­ம­லையில் கட்­டு­மா­னங்­களை முன்­னெ­டுக்க விதிக்­கப்­பட்ட நீதி­மன்ற தடை உத்­த­ரவை மீறி, இரா­ணு­வத்­தி­னரும், பௌத்த பிக்­கு­களும் விகாரை கட்­டு­மா­னத்தை பெரும்­பாலும் முடித்­தி­ருக்­கின்­றனர். இது­ கு­றித்து நீதி­மன்­றத்­துக்குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில், குருந்தூர் மலையி…

  6. கைபேசியால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு நாட்டில் சில பிக்குகள் ? நிலாந்தன்! ” இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக சில நீதிபதிகளும் செயல்படுகிறார்கள். குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத் தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை.” இது கடந்த ஜூலை 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர ஆற்றிய உரையின் ஒரு பகுதி. ஆனால் அவர் அவ்வாறு உரையாற்றிய அதே காலப்பகுதியில்தான் பௌத்தப்பிக்குகள் பெண்களோடு காணப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன.…

  7. உன்னை நீ அறிவாய் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் பொதுவாகவே நீங்கள் கலைப்பிரிவிலோ அல்லது விஞ்ஞானப் பிரிவிலோகல்வியை தொடர்ந்தாலும் முதலில் நீங்கள் இந்த கிரேக்க தத்துவவியளாளர்களின் தத்துவ சிந்தனைகளைகட்டாய பாடமாக படிக்க வேண்டும். இந்த பாடத்தில் சித்தி அடைந்தால் மாத்திரமே நீங்கள் தொடர்ந்துஏனைய பாடங்களை படிக்க முடியும். இவை எமக்கு ஒன்றை தெளிவாக சொல்லி இருக்கிறது நீ எதை கற்றாலும் ஆழ்ந்த அறிவோடும் தேடலோடும்அதை கற்று க்கொள்ளுவது மட்டும் இன்றி உன்னை நீ அறிய வேண்டும். இந்த வகையில் சோக்கிரட்டீஸ், பிளாட்டோ, அடிஸ்டோட்டில் என்னும் தத்துவவியளாளர்கள் முக்கியமானவர்கள். எனக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாதது மட்டும் தான் என்று சொன்ன யார் இந்தக் கிழவன் சோக்கிரட…

  8. தமிழ்க்கட்சிகள் எழுதும் கடிதங்கள்? நிலாந்தன். July 16, 2023 அண்மையில் தனது 90 ஆவது வயதை நிறைவு செய்த ஆனந்தசங்கரி, அரசியலில் அதிகம் கடிதம் எழுதிய ஒரு தமிழ் அரசியல்வாதி ஆவார். கடவுளைத்தவிர அவர் ஏனைய எல்லாருக்குமே கடிதம் எழுதியிருக்கிறார். அவருடைய கடிதங்களுக்கு பதில் கிடைத்ததோ இல்லையோ, அக்கடிதங்கள் அக்காலகட்ட அரசியலில் ஏதும் விளைவுகளை ஏற்படுத்தினவோ இல்லையோ, அவர் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார். அவை சிலசமயங்களில் துணிச்சலான, பல சமயங்களில் சுவாரசியமான அல்லது பம்பலான அரசியல் ஆவணங்களாகப் பார்க்கப்பட்டன. இப்பொழுது ஆனந்தசங்கரியிடம் இருந்து ஏனைய தமிழ் அரசியல்வாதிகளும் அதைக் கற்றுக்கொண்டு விட்டார்கள் போலத்தெரிகிறது. அண்மை நாட்களாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண…

  9. ஏன் இந்தியா? யதீந்திரா தமிழ் கட்சிகள் ஏட்டிக்கு போட்டியாக இந்திய பிரதமருக்கு கடிதங்களை அனுப்பியிருக்கின்றன. இந்த அணுகுமுறையில் நிதானமான போக்கும் காணப்படுகின்றது. அதே போன்று, தெளிவற்ற அணுகுமுறையும் காணப்படுகின்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெளிவான பார்வை காணப்படுகின்றது. இந்தக் கூட்டில் இருப்பர்கள் அனைவருமே முன்னாள் ஆயுத இயக்கப் பின்புலம் கொண்டவர்கள். ஒப்பீட்டடிப்படையில் மேற்குலகுடன் தொடர்பற்றவர்கள். அவர்கள் இந்தியாவிடம் எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கோரியிருக்கின்றனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான இந்திய தல…

  10. வடக்கில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள் பின்னணி என்ன? July 9, 2023 — கருணாகரன் — வடமாகாணத்தில் மாணவர் வரவின்மையினால் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்று கடந்த வாரம் (24.06.2023) தெரிவித்திருக்கிறார் வடமாகாண ஆளுநர் பீ.எஸ். எம். சார்ள்ஸ். இதைப் போல கிழக்கு மாகாணத்திலும் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், பிறப்பு வீதம் குறைவாக இருப்பது ஒன்று. இன்னொரு காரணம், கிராமங்களை விட்டு மக்கள் நகரங்களை நோக்கிச் செல்வதாகும். இப்படி ஆட்கள் குறைந்த பிரதேசங்களாக யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதி, வடமராட்சி கிழக்கு முதல், கிளிநொச்சியில் பூநகரி, அக்கராயன், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருக்கும் தொலைதூரக் கிராமப்புறங்களைக் குறிப்பிடலாம்.…

  11. லண்டனில் அண்ணாமலை – நிலாந்தன் பிரித்தானியத் தமிழர் பேரவை, பாரதிய ஜனதாவின் தமிழக அமைப்பாளர் அண்ணாமலையை பிரித்தானியாவுக்கு அழைத்திருக்கிறது “உறவுப் பாலம்” என்று அழைக்கப்படும் அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்குச் சென்ற அண்ணாமலை அங்கு முக்கிய சந்திப்புகளில் கலந்து கொண்டார். ஈழத் தமிழர்களை குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை கவரும் விதத்தில் உரை நிகழ்த்தியுமிருக்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு அவர் தரக்கூடிய தீர்வு 13ஆவது திருத்தத்தைக் கடக்கவில்லை. அண்ணாமலையை பிரித்தானியாவுக்கு அழைத்தமையை ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு காரணங்களை அவர்கள் முன்வைக்கின்றார்கள். ஒன்று, பாரதிய ஜனதாவின் இந்துத்துவ…

  12. தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை! Posted on July 11, 2023 by தென்னவள் 13 0 இன்று ஒன்பதாம் திகதி. கடந்த ஆண்டு இதே நாளில் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து துரத்துவதற்காக தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் அவருடைய மாளிகையை சுற்றி வளைத்தார்கள்.முடிவில் அவர் 13 ஆம் தேதி பதவியைத் துறந்தார்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரையிலும் இதுபோன்ற ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் ராஜபக்ச குடும்பத்துக்கு கெட்ட நாட்களாக,ஆபத்தான நாட்களாகக் காணப்பட்டன. எந்தக் குடும்பத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சிங்கள மக்கள் வழங்கினார்களோ, அதே குடும்பத்தை அதே சிங்கள மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களில் இருந்து துரத்தியடித்தார்கள். இலங்கைத்தீவின் நவீன வரலாற்ற…

  13. கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம் கடந்த நிலையில்……! Veeragathy Thanabalasingham on July 10, 2023 Photo, SELVARAJA RAJASEGAR ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து ஒரு மீள்பார்வை இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை அதிகாரத்தில் இருந்து விரட்டி நாட்டை விட்டு வெளியேற வைத்து சரியாக ஒரு வருடம் கடந்தோடிவிட்டது. ஜூலை 9 இலங்கை அரசியலில் மாத்திரமல்ல, தெற்காசிய பிராந்திய அரசியலிலும் கூட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாக பதிவாகிவிட்டது எனலாம். எமது பிராந்தியத்தின் வேறு எந்தவொரு நாட்டிலும் ஜனநாயகத் தேர்தல் ஒன்றில் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட…

  14. Published By: VISHNU 09 JUL, 2023 | 06:02 PM சுபத்ரா மாலியில் ஐ.நா அமை­திப்­ப­டையின் 10 ஆண்­டு­கால நட­வ­டிக்­கைகள் முடி­வுக்குக் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன. கடந்த முதலாம் திகதி முன்­னி­ரவில் மாலி நோக்கிப் புறப்­ப­டு­வ­தற்கு 20 அதி­கா­ரி­களும், 150 இலங்கை இரா­ணு­வத்­தி­னரும் தயா­ராகிக் கொண்­டி­ருந்த நிலையில் தான், நியூ­யோர்க்கில் இருந்து அந்த தகவல் கொழும்­புக்குக் கிடைத்­தது. 2023 ஜூன் 30ஆம் திகதி வரை மாலியில் ஐ.நா அமை­திப்­ப­டையை நிறுத்தி வைப்­ப­தற்கே, 2013இல் ஐ.நா பாது­காப்புச் சபையின் ஆணை பெறப்­பட்­டது. அந்த ஆணை முடி­வுக்கு வரு­வ­தற்கு இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­ன­தா­கவே, மாலியில்…

  15. சிதறிப்போன ஒரு மக்கள் கூட்டம் ? – நிலாந்தன். adminJuly 9, 2023 காற்றுவழிக் கிராமங்களைப் பற்றிய எனது கடந்தவாரக் கட்டுரையானது பெருமளவுக்கு தீவக மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு பகுதியினர் அதற்கு வேறுவிதமாக வியாக்கியானம் தருகிறார்கள். கோவில்களில் காசைக் கொட்டுவது என்பது ஒரு விதத்தில் ஊரில் தனது முதன்மையை நிலைநாட்டும் நோக்கத்தையும் கொண்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு காலம் நீருக்கு கஷ்டப்பட்ட கிராமத்தில் இருந்து பொருளாதார மற்றும் போர்க் காரணங்களுக்காக ஊரை விட்டுப்போன மக்கள் இப்பொழுது அதே ஊரில் கற்பனை செய்ய முடியாத ஒரு தொகையைச் செலவழித்து ஒரு கோவிலைப் புனரமைப்பது என்பது, தங்களால் முடியும் என்பதனைச் சாதித்துக்காட்டும் ஒரு நிகழ்வாக ஏன் எடுக்கக் க…

  16. ஓராண்டுக்கு முன் நடந்தவை – தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை! நிலாந்தன். இன்று ஒன்பதாம் திகதி. கடந்த ஆண்டு இதே நாளில் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து துரத்துவதற்காக தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் அவருடைய மாளிகையை சுற்றி வளைத்தார்கள்.முடிவில் அவர் 13 ஆம் தேதி பதவியைத் துறந்தார்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரையிலும் இதுபோன்ற ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் ராஜபக்ச குடும்பத்துக்கு கெட்ட நாட்களாக,ஆபத்தான நாட்களாகக் காணப்பட்டன. எந்தக் குடும்பத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சிங்கள மக்கள் வழங்கினார்களோ, அதே குடும்பத்தை அதே சிங்கள மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களில் இருந்து துரத்தியடித்தார்கள். இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முன்னப்பொழுதும் அப்படிப்பட்ட …

  17. பட மூலாதாரம்,SLPP படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஸ கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 47 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத குடும்பமாக வரலாற்றில் இடம்பிடித்த ராஜபக்ச குடும்பத்தினர், ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒர் ஆண்டு நிறைவுப்பெற்றுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஆட்சியில் அமர்ந்த கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தது. பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பல நாட்களாக மக்கள் வரிசைகளில் காத்திருந்தனர். நாளொன்றில் சுமார் 15 மணிநேரத்திற்கு அதிக …

  18. Published By: DIGITAL DESK 3 06 JUL, 2023 | 02:53 PM ரொபட் அன்டனி கடன் பெறுவதற்காக ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏற்கனவே வழங்கிய உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகளை மீண்டும் பெறவுள்ள திறைசேரி புதிய பிணைமுறிகளை வழங்கவுள்ளது. அதற்கு 12 வீத மற்றும் 9 வீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே அதிகளவு வட்டிக்கு பெறப்பட்டிருந்த பிணைமுறிகளும் இந்தப் புதிய வட்டி முறைக்கு மாற்றப்படுவதால் அதில் ஒரு வட்டி இழப்பு சேமலாப நிதியத்துக்கு ஏற்படுகிறது. அதேபோன்று இந்தக் கடன்களை மீள் செலுத்தும் காலமும் நீடிக்கப்பட இருக்கின்றது. முதிர்ச்சிக் காலம் நீடிக்கப்படுவதால் சேமலாப நிதியத்துக்கு ஓர் இழப்பு ஏற்படுகின்றது. ஆனால் அந்த இழப்பு நிதியத்த…

  19. தமிழ் கட்சிகளுக்கு அரசியல் நீரிழிவு! வவுனியா கரும்பும் கசக்கிறது! July 5, 2023 – கருணகரன் – “கரும்பு இனிக்குமா? கசக்குமா?” என்ற விவாதம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சூடுபிடித்துள்ளது. அரசியல், ஊடகப் பரப்புடன் தொடர்ச்சியான அவதானிப்புக் குறைந்தவர்கள், “அதென்ன கரும்புக் கதை?” என்று ஆச்சரியமாகக் கேட்கக் கூடும். அந்தக் கதை இதுதான். வடக்கில் – வவுனியா மாவட்டத்தில் – கரும்பு ஆலையை நிறுவுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதியைக் கேட்டிருக்கிறது வெளிநாட்டு நிறுவனமொன்று. இது நடந்தது 2018 இல். அது நல்லாட்சி அரசாங்கக் காலம். 2018 ஜூலையில் தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்ஓசா, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருந்தார…

  20. ஒட்டுசுட்டான் வனப்பகுதியில் தொடரும் சட்ட விரோத கருங்கல் அகழ்வுப் பணிகள் Posted on July 1, 2023 by தென்னவள் 26 0 ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கருங்கல் அகழ்வுப் பணிகள் சட்ட விரோதமாக இடம்பெற்று வருவதால் பாரிய சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் தொடர்ந்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் என்று இயற்கை உரக்கப் போதித்தாலும், நாங்கள் செவிமடுப்பதாக இல்லை. நாங்களே இயற்கையை ஆளப் பிறந்தவர்கள் என்ற மமதையில் இயற்கையை தொடர்ந்தும் அடிமைப்படுத்துகிறோம். நிலத்துக்கு நீரை பருக்கும் வாய்களான குளங்களை இறுக்கி மூடியும், வெள்ள வாய்க்கால்களை கூட வ…

    • 0 replies
    • 376 views
  21. பிரான்சும் வன்முறையும்-பா.உதயன் ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிஸ் அடுத்துள்ள புறநகரான நான்தெரே பகுதியில் கடந்த 27 ம் திகதி போக்குவரத்து விதியை மீறியதாக சில இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பொலிசாரின் கட்டளைக்கு பணியாமல் வண்டியை நிறுத்தாமல் போனதால் இதில் 17 வயதான அல்ஜீரியாவை பூர்வீகமாகக் கொண்ட நாஹெல் என்ற முஸ்லிம் சிறுவன் கொல்லப்பட்டான் இந்தச் சிறுவனை கொல்லப் பட்டது பெரும் துயராக இருந்தாலும் இதை தொடந்து வெடித்த வன்முறையால் பிரான்ஸ் தேசமே பற்றி எரிவது போல் இருந்தது. எவராக இருந்தாலும் வன்முறை மூலம் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. ஜனநாயக வழியில் போராட வேண்டும். பாடுபட்டு வியர்வை சிந்தி எல்லோரும் சேர்ந்து கட்டியதை அவர்களே நாசம் செய்வது நாகரீ…

  22. உக்ரேன் போரின் போக்கை மாற்றுமா வக்னர் சதி? Published By: VISHNU 02 JUL, 2023 | 08:54 PM சுவிசிலிருந்து சண் தவராஜா ரஷ்யாவில் பெரும் பிரளயம் ஒன்று நடைபெற்று முடிந்திருக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்கு எதிராக தனியார் இராணுவக் குழுவான வக்னர் மேற்கொண்ட சதி 24 மணி நேர இடைவெளியில் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும், அயல் நாடொன்றில் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் இவ்வாறான ஒரு விரும்பத்தகாத சூழ்நிலை உருவாகியமை உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் ஒரு பதட்டமான சூழலைத் தேற்றுவித்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. பெரும் மோதல் ஒன்று தவிர்…

    • 0 replies
    • 299 views
  23. ரணிலுக்கு, தமிழ் கட்சிகள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?- யதீந்திரா இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக வரவேண்டுமென்று, ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். அண்மையில் இங்கிலாந்திற்கு சென்றிருந்த, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டு தலைவர், அண்ணாமலையும் இவ்வாறானதொரு கருத்தையே அங்கு வலியுறுத்தியிருக்கின்றார். தமிழ் கட்சிகள் அனைத்தும் இந்தியாவிடம் ஒன்றாகச் செல்ல வேண்டுமென்று அவர் தெரிவித்திருக்கின்றார். ரணில் இந்த வேளையில் இவ்வாறு கூறுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காணப் போவதாக குறிப்பிட்ட, ரணில் விக்கிரமசிங்க, இப்போது, தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக வரவேண்டுமென்…

  24. வடக்கு-கிழக்கில் சைவ- தமிழ் வரலாற்று எச்சங்களை அழித்தலும் பௌத்த எச்சங்களாக திரித்தலும் ! Digital News Team கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ++++++++++++++++++++++++++++++++++++++ “தேர்தலை நடத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகரித்த ஈடுபாட்டின் அவசியத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்”-இது இன்றைய பத்திரிகை செய்தி. இலங்கை மக்களின் (சிங்கள மக்களின்) இறையாண்மையை பாதுகாக்க ஐ.நா.தலையீடு வேண்டுமென சஜித் கேட்கலாம். அதனால், இந்த நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாது.ஜே.வி.பிக்கெதிரான இராணுவ நடவடிக்கையில் சிங்கள மக்கள் கொல்லப்படுவதற்கெதிராக ம…

    • 0 replies
    • 444 views
  25. 75 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்ட பாடம் என்ன ? Digital News Team லூசியன் அருள்பிரகாசம் 0000000000000000000000000000000000000 எங்கள் மரபணுவின் பொதுவான தன்மைகள் பேராசிரியர் காமனி தென்னக்கோன் மற்றும் ஏனையோரால் மேற்கொள்ளப்பட்ட மரபணு [டி .என். ஏ ]ஆய்வுகள் (த ஐலண்ட் இல் பெப்ரவரி 2019 யில் அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) : “சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான டி.என்.ஏ ஆய்வுகள் பாரியளவில் மரபணு ரீதியான வேறுபாட்டைக் காண்பிக்கவில்லை.மக்கள் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், இலங்கையின் சிங்கள…

    • 0 replies
    • 598 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.