Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பாவனைப் போரும் செயற்பாட்டு அரசியலும் March 18, 2023 — கருணாகரன் — பலரும் கருதியதைப் போலவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து விட்டது. இந்த உடைவினால் தனித்து விடப்பட்டிருப்பது தமிழரசுக் கட்சியே. ஆனாலும் அது தன்னைப் பலமானதாகக் கருதிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், அதனுடைய வீட்டுச் சின்னமாகும். எத்தகைய நிலையிலும் மக்கள் வீட்டுச் சின்னத்துக்கே வாக்களிப்பார்கள் என்ற பலமான எண்ணம் தமிழரசுக் கட்சியினருக்குண்டு. இதுவே அவர்களுடைய தைரியமாகும். இதற்குக் காரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வீட்டுச் சின்னமாகவே மக்களிற் பலரும் அறிந்துள்ளனர். தமிழரசுக்கட்சிக்கு விடுதலைப் புலிகள் உருவாக்கிக் கொடுத்த அருமையான வாய்ப்பிது. இதனால் இளையதலைமுறையினரின் மனதில் கூட்டமைப்ப…

  2. ஆனையிறவில் ஆடும் சிவன் - நிலாந்தன் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே,கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை நிறு வப்பட்டிருக்கிறது. கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி உயரமான அந்தச் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இலங்கைத்தீவில் உள்ள மிக உயரமான நடராஜர் சிலை அதுவென்று கூறலாம். 2009க்கு பின் ஆனையிறவுப் பிரதேசம் யுத்த வெற்றிவாதத்தின் உல்லாசத் தலங்களில் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் பண்பாட்டு தலைநகரமாகிய கவர்ச்சிமிகு யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் எவரும் முதலில் ஆனையிறவில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு யுத்த வெற்றி வளாகங்களைக் கடந்துதான் உள்ளேவர வேண்டும். அதாவது யுத…

    • 1 reply
    • 1.2k views
  3. வசந்த முதலிகேயின் யாழ் விஜயம்! நிலாந்தன். கொழும்பு, புகையிரத நிலைய கழிப்பறையில் விடப்பட்ட குழந்தை, காலிமுகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களுக்குள் நடந்த ஒன்றின் விளைவு என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹதகம கூறியுள்ளார். போராட்டத்தின்போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றும்,போராட்டம் நடந்த பகுதியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார். அவர் அவ்வாறு கூறுவது தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை பரிகசிப்பதற்காகத்தான். ஆனால் அவர் ஒரு பெரிய உண்மையை விழுங்கிவிட்டு கீழ்த்தரமான இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார். அப்பெரிய உண்மை என்னவென்றால், இலங்கைத்தீவின் இப்போத…

  4. இலத்தீன் அமெரிக்காவில் அதிவலதுசாரி அலையின் புதிய கட்டம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 19: இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள், இலத்தீன் அமெரிக்கா பற்றிப் பேசுகின்ற போது முக்கியமானவையாகும். முதலாவது, இப்பிராந்தியத்தில் அதிகூடிய மக்கள் தொகையையும் மிகப்பெரிய நிலப்பரப்பையும் கொண்ட நாடான பிரேஸிலில், ஜனவரி மாதம் எட்டாம் திகதி, தேர்தலில் தோல்வியடைந்த அதிவலதுசாரி முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேஸிலியாவில் அரச கட்டடங்களைச் சூறையாடி, மிகப்பாரிய சேதத்தை விளைவித்தார்கள். இது, சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்ததை எதிர்த்து, அவரது ஆதரவாளர்கள் விளைவித்த சேதத்துக்கு…

    • 5 replies
    • 959 views
  5. தேர்தலை நடத்தாது தொடர் போராட்டங்கள் ஓயாது புருஜோத்தமன் தங்கமயில் தொடர் போராட்டங்களால் கொழும்பு ‘அல்லோல கல்லோலம்’படுகிறது. கொழும்பு நகரத்தின் எந்தப் பிரதான வீதியில், எப்போது போராட்டம் ஆரம்பிக்கும், போக்குவரத்து தடைப்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் பல தொழிற்சங்கங்களும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், கட்சிகளும் போராட்டங்களை நடத்துகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை இராணுவத்தையும் பொலிஸாரையும் கொண்டு ரணில் விக்கிரமசிங்க அரசு ஏவுகின்றது. போராட்டங்களில் காலாவதியான கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தப் போராட்டங்களை, கட்டுக்குள் கொண்டுவருவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இந்…

  6. உள்ளூராட்சித் தேர்தல்; யாருக்கு வாக்களிப்பது? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இம்மாதம் நடக்கவிருந்த உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், தற்போது 2023 ஏப்ரல் 25 ஆம் திகதியன்று உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல், 2023 மார்ச் 9 அன்று நடைபெறவிருந்தன. ஆனால், இலங்கை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையால் குறித்த தினத்தில் தேர்தல் நடத்தப்பட முடியாது தாமதமானது. உயர்நீதிமன்றின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, பாதீட்டில் தேர்தலுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதைத் தடுக்க, இடைக்கால தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல்கள் நடப்பதற்கான ச…

  7. வடக்கு ‘கடல் அன்னை’ மீதான அச்சுறுத்தலைத் தடுப்பது தலையாய கடமை புருஜோத்தமன் தங்கமயில் வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைகளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டு இருக்கின்றது. இந்திய மீனவர்களின் 50 குதிரை வலுவுக்கும் குறைவான இயந்திரப் படகுகளை வாரத்தில் இரண்டு நாள்களுக்கு, வடக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதைச் செயற்படுத்தும் வேலைகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருகின்றார். இதன் ஒருகட்டமாக கடந்த நாள்களில், பாரதிய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மீன்பிடித்துறை பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வந்து, டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்புகளை நடத்தி இருக்கிறார்க…

  8. மகிந்த கொல்லாத நாய்கள் - நிலாந்தன் கடந்த டிசம்பர் மாதம் யாழ்.பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன். வீதியை திடீரென்று குறுக்கறுத்து ஓடிய ஒரு தொகை நாய்களின் மீது மோதி விழுந்ததில் எனது கைவிரல் ஒன்று அறுந்து தொங்கியது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் எனது விரலைக் காப்பாற்றினார். நாய்களில் மோதிப் படுகாயம் அடைந்தவர்கள் மட்டுமல்ல, கோமாநிலைக்கு சென்றவர்களும் உண்டு என்று போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தின் சிறிய ஒழுங்கைகளில் கட்டாக்காலி நாய்கள் பெருகிவிட்டன. காலை வேளைகளில் எல்லாச் சிறிய தெருக்களிலும் நாயின் கழிவுகளைக் காணலாம். எனக்கு தெரிந்த ஒரு ஆசிரியை திருநெல்வேலி பகுதியி…

  9. பிள்ளையார் கல்யாணமா? பொருளாதாரமா ? தென்னிலங்கையில் தன்னெழுச்சி போராட்டங்களின் பின்னணியிலும், அதற்குப் பின்னரான ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலும் ஜேவிபியின் கை மேலோங்கி வருவது பரவலாகத் தெரிகிறது.அண்மைக் காலங்களில் ஊர்வலங்கள் போராட்டங்களுக்காக அதிகளவுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது ஜேவிபிதான் என்று கொழும்பில் உள்ள தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் கூறுகிறார்.தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்களின் உணர்வுகளை அதிகம் பிரதிபலிக்கும் ஒரு கட்சியாக ஜேவிபி தோற்றம் பெற்றுள்ளது.அதைவைத்து ஜேவிபி வருங்காலங்களில் நடக்கக்கூடிய தேர்தல்களில் ஒரு பிரதான கட்சியாக மேலெழப் போகிறது என்ற எதிர்பார்ப்பு சிங்களம் மற்றும் தமிழ் அவதானிகளில் ஒரு பகுதியினர் மத்தியில் உ…

  10. இன்னும் பத்து வருடங்களின் பின்னர்? - யதீந்திரா அரசியல் பற்றி பேசுவதற்கும், அரசியலை சரியாக பேசுவதற்கும் இடையில் மலையளவு வேறுபாடுண்டு. அரசியலை எவர் வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாம் – ஒரு மரக்கறிக்கடையில் இருப்பர், இறைச்சிக்கடையில் இருப்பவர், ஏன் யாசகம் செய்பவரும் பேசலாம். இவ்வாறு பேசுபவர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பு வெறுப்புக்களின் வழியாகவே அரசியலை புரிந்துகொள்வார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால் ஒரு சமூதாயத்தின் எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பவர்கள் சாமாணியர்கள் போன்று அரசியலை, தங்களின் விருப்பு வெறுப்புக்களிலிருந்து நோக்க முடியாது. அரசியலை சரியாக புரிந்துகொள்ள முற்படுவதென்றால் என்ன? கடந்தகால அனுபவங்களில…

  11. ஜி-20 இல் ஒலிக்கம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் தற்போது G20 தலைவர் பதவியை வகிக்கும் இந்தியா, குறிப்பாக பசுமை மேம்பாடு, காலநிலை நிதி மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) மற்றும் உலக அமைதி ஆகியவற்றில் முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல் ஆகிய துறைகளில் உலக நிலைத்தன்மையை நோக்கி ஈர்க்கக்கூடிய அளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. டிசெம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா G20 ஐ வழிநடத்தும். G20 இல் இதுவரை இல்லாத 43 பிரதிநிதிகள் தலைவர்கள்- இந்த வருடம் செப்டம்பரில் நடைபெறும் இறுதி புதுடெல்லி உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். G20 இலக்குகளை அடைவதற்காக நாடு தொடர்ச்சியான நிகழ்வுகளை…

    • 0 replies
    • 697 views
  12. அவலத்தை அரசியலாக்குதல் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan அரசியல்வாதிகள் தமக்கான ‘பொலிட்டிக்கல் மைலேஜ்’ (அரசில் பிரபல்யம்) பெற, பெரும்பாலும் நெருக்கடியான சூழ்நிலைகள் சாதகமாக அமைந்துவிடுகின்றன. ஒரு நெருக்கடிநிலை ஏற்படும் போது, அந்த அவலத்தில் மக்கள் தத்தளிக்கும் போது, நெருக்கடியைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறி, தம்மை முன்னிலைப்படுத்துவதன் மூலம், இத்தகைய சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த அரசியல்வாதிகள் விளைகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம், தம்மை கடினமான சூழ்நிலைகளை கையாளும் திறன் கொண்ட, திறமையான தலைவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில், அரசியல்வாதிகள் தங்கள் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்கு…

  13. ஜீ 20 மாநாட்டில் விட்டுக்கொடுக்காத வல்லரசுகள் தமிழர்களும் பலஸ்தீனியர்களும் ஒற்றையாட்சியுடன் ஒத்துப்போக வேண்டும் என்று மாத்திரம் போதனை ரசிய - உக்ரெயன் போரை இந்தியா இதுவரை பகிரங்கமாகக் கண்டிக்காத நிலையில், ஜீ இருபதின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இந்த மாதம் இரண்டாம் திகதி வியாழக்கிழமை மாலை வரை புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. தலைமைப் பொறுப்பை நரேந்திரமோடி ஏற்றதால் புதுடில்லியில் இடம்பெற்ற மாநாட்டில், உக்ரெய்ன் மீதான போரை நிறுத்த இந்தியா, ரசியாவுக்குப் புத்தி சொல்ல வேண்டும் என்ற இறுமாப்புடனேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பங்குபற்றியிருந்தன. வெள்ளிக்கிழமை வெளியான இந்த நாடுகளின் நாளிதழ்களி…

    • 0 replies
    • 671 views
  14. ஒரு சிப்பாய் கண்ட கனவு - நிலாந்தன் புத்த பகவான் ராஜபோகங்களையும் குடும்பத்தையும் துறந்து சன்னியாசி ஆகியவர். ஆனால் அவர் இலங்கைத் தீவில் நிலாவரையில் ராணுவ முகாமில் உள்ள ஒரு சிப்பாயின் கனவில் தோன்றி தனது சிலையை நிலாவரையில் வைக்குமாறு கூறியதாக அந்த சிப்பாய் கடந்தகிழமை கூறியுள்ளார். ரவூப் ஹக்கீம் முன்பொருமுறை கூறியது போல நாட்டில் புத்தர் சிலைகள் எல்லைக் கற்களாக மாற்றப்பட்டு விட்டன. அந்தச் சிப்பாய் நிலாவரையில் யாருக்காக நிலத்தை பாதுகாக்கின்றாரோ, அந்த மக்கள் மத்தியில் உள்ள மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அவ்வாறு வெளியேற வேண்டாம் என்று நாட்டின் ஜனாதிபதி மன்றாடிக் கொண்டிருக்கிறார். யாருடைய நிலத்தை யாரிடமிருந்து பாதுகாப்பதற்காக அந்த ச…

  15. இன வெறுப்பும், இஸ்ரேலும் – பேசும் வரலாறு -தி. மருதநாயகம் இனங்களுக்கு இடையிலான போரா? மதங்களுக்கு இடையிலான போரா? யூத மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் மூன்றுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பாலஸ்தீனத்தின் ஜேருசலேம் அமைந்ததுள்ளது மட்டுமல்ல, இஸ்ரயேலர், பாலத்தீனியர்களுக்கும் இது தான் புனித தலம்! இங்கு நடந்தது என்ன? இது ஏன் தொடர்ந்து அமைதியை தொலைத்துக் கொண்டிருக்கும் பூமியாக உள்ளது? அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆக்டோபஸ் கரங்களோடு குரூர குணத்துடன் பல அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கும் பல இனங்களை அழித்து, அங்கு தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இன்றளவும் பாலஸ்தீன பிரச்சினையில் இஸ்ரேல் என்ற நாட்டையும் உருவாக்கி, அமெரிக்க ஏகாதிபத்த…

  16. தண்ணீர்ப் போத்தல் கலாசாரம் – நிலாந்தன். வடமாகாணத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதா என உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரு செய்தி வெளியாகியிருந்தது.வட மாகாண நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை வடக்கு மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் பாதுகாப்பானதா என்பது தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிக்கை தர வேண்டும் என்றும்பிரதேச சபைகள் ஊடாக வழங்கப்படும் குடிநீர் தொடர்பிலும் அறிக்கை தருமாறும் ஆளுநர் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது. மேலும்,வடமாகாணத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் பிரதேச சபைகள்,மாகாண மற்றும் மத்திய…

  17. சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான தவாறான புரிதல்கள்? யதீந்திரா தமிழ் மக்களுக்கான அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டுமென்று சிலர் கூறிவருகின்றனர். அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட பேரணியின் இறுதியிலும் இவ்வாறானதொரு கோரிக்கையே முன்வைக்கப்பட்டது. இது அரசியலில் துனிப்புல் மேயும் பிரச்சினை. தமிழ்ச் சூழலில் தங்களை படித்தவர்களென்று கருதிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கே விடயங்கள் சரியாக விளங்காத போது, பல்கலைக்கழக மாணவர்களால் எவ்வாறு இந்த விடயங்களை புரிந்துகொள்ள முடியும்? பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுரை கூறுவோரும் கூட அவர்களை தவறாக வழிநடத்தியிருக்கலா…

  18. ஒருவருட உக்ரைன் போர் சாதித்தது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ் March 3, 2023 உக்ரைன் மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கை ஆரம்பித்து கடந்த வெள்ளிக்கிழமையுடன் (24) ஒரு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. முதலில் உக்ரைனுக்கும் ரஸ்யாவுக்குமான மோதல் என நம்பப்பட்ட போர் நேட்டோவுக்கும் ரஸ்யாவுக்குமான போர் என உலகம் பின்னர் மெல்ல மெல்ல தெரிந்து கொண்டது. உக்ரைனில் தமது ஆயுதங்களை குவித்து ரஸ்யாவின் படை பலத்தை அழித்துவிடுவது ஒருபுறம் இருக்க உலக நாடுகளில் ரஸ்யா மீதான தடைகளை கொண்டுவந்து அதன் பொருளாதாரத்தை முடக்குவதனையும் மேற்குலகம் தீவிரமாக செய்தது. தற்போது இந்த பூமிப்பந்தில் உள்ள நாடுகளில் அதிக பொருளாதார தடைகளை கொண்ட நாடாக ரஸ்யா உள்ளது. முதலில் ச…

  19. தேர்தல்கள் ஒத்திவைப்பு; முறைமை மாற்றத்துக்கான தேவையை தடுத்துவிடாது! Dr. Jehan Perera on March 2, 2023 Photo, THE HINDU உள்ளூராட்சி தேர்தல்கள் மிகவும் சாதுரியமான முறையில் ஒத்திவைக்கப்பட்டுவிட்டதாக அரசாங்க ஆதரவாளர்கள் திருப்திப்படுகிறார்கள் போன்று தெரிகிறது. ஒத்திவைக்கப்படுவதற்கு தேர்தல் ஒன்று இருக்கவேண்டும், அவ்வாறு எதுவும் இல்லை என்று அவர்கள் நிராகரிக்கிறார்கள். உள்ளூராட்சி தேர்தல்கள் தினமாக மார்ச் 9ஆம் திகதியை அறிவித்த கடிதத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களும் கைச்சாத்திட்டிருக்கின்ற போதிலும் கூட அந்தத் திகதி குறித்து தீர்மானிப்பதற்கு கூட்டப்பட்ட கூட்டத்தின் பதிவுகளை வைத்திருக்கவில்லை என்றும் கூட்டத்தில் …

  20. தேர்தலுக்கு பணமா இல்லை; மனமா இல்லை? எம்.எஸ்.எம் ஐயூப் மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், பல மாதங்கள் வரை நடைபெறாது இருக்கவும் கூடும் என்றுதான் இப்போது தெரிகிறது. ஏனெனில், சட்டத்தின்படி தேர்தல் ஆணைக்குழுவே தேர்தல் திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று இருந்தாலும், ஜனாதிபதியின் விருப்பப்படியே எல்லாம் நடைபெறப்போகிறது போலும்! தேர்தலுக்காக செலவழிக்க திறைசேரியில் பணம் இல்லை என்பதே, இப்போது அரசாங்கத்தின் பிரதான வாதமாக இருக்கிறது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி இருப்பதால், அதை எடுத்த எடுப்பில் நிராகரிக்கவும் முடியாது. ஆனால், அரசாங்கம் தேர்தல் விடயத்தில் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால், அது உண்மையாக இருக்கலாமா என்ற பலத்த சந்தேகம் …

  21. இறந்தகால வெற்றிகளையும், தோல்விகளையும், கசப்புக்களையும், அழிவுகளையும், துன்ப துயரங்களையும் பிணங்களாக தோளில் சுமந்தபடி நிகழ்காலத்தினதும் எதிர்காலத்தினதும் வசந்தமான வாழ்வையும் வரலாற்றையும் சேற்றினுள்ளே புதைக்க முடியாது. அரசியல் என்பது தான் சார்ந்த சமூகத்தின் பன்னெடுங்கால வரலாற்றின் தொடர்ச்சியாக எதிர்காலத்திலும் தன்சமூகம் பல்லாயிரம் ஆண்டு காலத்திற்கான தொடர் வாழ்வை நிர்ணயம் செய்வதாக அமைய வேண்டும். ஆனால் தமிழ் தலைவர்களோ கற்பனைகளிலும், தூய இலட்சியவாதங்களிலும் மூழ்கி சாத்தியமற்ற 13ம் திருத்தச் சட்டத்தை பற்றி பேசியே காலத்தை கழித்து தமிழினத்தை தொடர் அழிவுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதேநேரம் சிங்கள மக்களினதும், சிங்கள தலைமைகளினதும், பௌத்த மகாசங்கத்தினதும் மன…

  22. பொருளாதார மீட்சிக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவம் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan சுதந்திர இலங்கை என்பது, இனமுர ண்பாட்டோடுதான் பிறந்தது என்றால் அது பிழையல்ல; சர்வசன வாக்குரிமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வாக்காளரில் பெரும்பான்மையைக் கவர, இனரீதியான அரசியல் வசதியானது என்று கருதிய அரசியல்வாதிகளின் எண்ணத்திலிருந்து, இன மத தேசியவாதம், அரசியல் மையநீரோட்டத்தில் மெல்ல மெல்ல கலக்கத் தொடங்கியது. அதுவரை அரசியல் பரப்பின் எல்லைகளில் நின்ற இனமத தேசியவாதம், அரசியல் மைய நீரோட்டத்தை நோக்கிக் கொண்டு வரும் கைங்கரியத்தை தேர்தல் அரசியலுக்காக, இந்நாட்டின் தலைவர்கள் எனப்படுவோர் செய்யத்துணிந்தனர். இலங்கையின் இனமுரண்பாடானது வரலாறு,…

  23. இலங்கைக்கு நேர்ந்தது பாகிஸ்தானுக்கும் ஏற்படுமா? சீன கடன் குறித்து பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிப்பது ஏன்? பட மூலாதாரம்,AFP 49 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் மத்திய நிதியமைச்சர் இஷாக் டார், சீனாவிடம் இருந்து 700 மில்லியன் டாலர் கடனாக கிடைக்கப்போவதாக அறிவித்தார். பாகிஸ்தானின் குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு சிறிது அதிகரிப்பது அவரது மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் சீனா மற்றும் சீன வங்கிகளில் இருந்து பெற்ற கடன்கள் இப்போது பாகிஸ்தானின் மொத்த கடனில் மூன்றில் ஒரு பங்காக ஆகி விட்டது. பாகிஸ்தானின் மொத்த கடனில், கடந்த எட்டு ஆண்டுகளில் சீனா மற்றும் சீன வணிக வங்கிகளிடம் இருந்து ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.