Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கையின் வதைமுகாம்கள் April 30, 2020 நர்மி * நாசிகளின் வதைமுகாமில் இருந்து மீண்டு வந்த ரெபெக்கா சி இரண்டாயிரமாவது ஆண்டில் இப்படி சொல்லியிருந்தார். “நான் விடுவிக்கப்பட்டவன், என்னால் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாது. ஆனால் உயிர்பிழைத்ததற்காக முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகின்றேன். ஆனால்இன்னொரு பக்கத்தில் இருந்து யோசிக்கும்போது எல்லோரையும் இழந்து நிற்கும் நான் எப்படிகடவுளுக்கு நன்றி செலுத்த முடியும். இந்நிலையில் நான் எவ்வளவு தூரம் மகிழ்ச்சியாகஇப்போது இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?” எப்படிப்பட்ட கொடுமையான மனநிலையிது? இதை அம்மனிதனுக்கு எவ்வகையிலான விடுதலை என்று சொல்ல முடியும்? இது ஒரு வகையில் அம்மனிதன் உயிர் வாழும் கா…

  2. கூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 மே 27 தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கட்சிகளாக ஏன் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்கிற கேள்வி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த பத்து ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. குறிப்பாக, கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகள் ஒன்றோடும் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாதோரிடமும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் அடையாளம், தங்களின் மீது என்றைக்கும் விழுந்துவிடக் கூடாது என்று நினைக்கும் முன்னணியின் தொண்டர்களிடம், இந்தக் கேள்வி தொடர்ந்தும் இருக்கின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், அது முள்ளிவாய்க்கால் முடிவுகள் வரையில்…

  3. விக்னேஸ்வரன் அணி சாதிக்குமா ? | C. V. விக்னேஸ்வரன் ( தலைவர் - தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி )

    • 0 replies
    • 569 views
  4. கொரோனாவின் பின்னான புதிய சர்வதேச உறவுகள் ? அதில் ஈழத் தமிழரின் எதிர்காலம் ? July 23, 2020 – மு . திருநாவுக்கரசு உலகளாவிய அரசியல் போக்கிலும் ( process) , சர்வதேச உறவுகளிலும் காலத்திற்குக் காலம் மாற்றங்கள் ஏற்பட்டுசெல்வது இயல்பு. உலக அரசியல் போக்கு என்பது பெருவெட்டானது. அது நீண்ட காலத்துக்குரியது. சர்வதேச உறவுகள் என்பது குறுங்காலத்துக்கு உரியது. அது அவ்வப்போது மாறவல்லது. உலகளாவிய நீண்ட நெடிய மனிதகுல வரலாற்றுப் பெரும் போக்கின் ஒரு முக்கிய போக்காய் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னான உலகளாவிய அரசியல் போக்கு உதயமானது. இந்த முக்கிய அரசியல் போக்கானது காலத்திற்குக் காலம் பெரும் திருப்பங்களை பெற்றுச் செல்கின்றது. இத்தகைய அரசியல் பெரும் போ…

  5. Started by nunavilan,

    எரித்திரியா கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. எரித்திரியா அல்லது எரித்திரிய அரசு ஒரு கிழக்காபிரிக்க நாடாகும். இதன் தெற்கே எதியோப்பியாவும், மேற்கே சூடானும் தென் மேற்கில் சிபூட்டியும் எல்லைகளாக அமைந்துள்ளன. மீதமுள்ள கிழக்கு, வடகிழக்கு எல்லை செங்கடலால் அமைக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் சவுதி அரேபியாவும் யேமனும் அமைந்துள்ளன. டலாக் தீவுக்குழுமமும் அனீசுத் தீவுகளின் சிலத் தீவுகளும் எரித்திரியாவுக்கு சொந்தமானவையாகும். எரித்திரியா 1993 மே 23 இல் ஐநாவில் உறுப்பினராக சேர்ந்து கொண்டது. வரலாறு எதியோப்பியாவின் பிடியில் இருந்து எரித்திரியா விடுதலை பெற 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதம் தாங்கி போராடியது. விடுதலைக்காக இந்த நாடு உச்ச விலை கொடுத்துள்ளது. …

  6. இன ரீதியான அரசியலைக் கைவிட்டு, தேசிய அரசியலின் பக்கம் தமிழ் மக்கள் திரும்புகிறார்களா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஓகஸ்ட் 23 கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் பெற்ற ஆசன எண்ணிக்கையைப் பற்றியும் அது எதைக் காட்டுகிறது, அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பவற்றைப் பற்றி, ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் பிரதானமாக, தமிழ்க் கட்சிகளின் பிரதான கூட்டணியாகக் கருதப்பட்டு வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைமையைப் பற்றியே, பிரதானமாக ஆராயப்பட்டு இருந்தன. 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 16 ஆசனங்களைக் கூட்டமைப்பு பெற்றிருந்தது. இம்முறை அந்த எண்ணிக்கை, 10 ஆகக் குறைந்துள்…

  7. இலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா? -கவிதா சுப்ரமணியம் இராணுவத்துக்கு கட்டாயமாக ஆட்களைச் சேர்க்கும் நடைமுறை, பண்டைய மெசொப்பெத்தேமியா காலத்துக்கு, அதாவது ஆயிரக்காணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். ஆனால், அண்மைய நவீன வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, பிரெஞ்சுப் புரட்சியில் இருந்தே ஆரம்பமாகின்றது. 17, 18ஆம் நூற்றாண்டுகளில், பிரஸ்ஸியா, சுவிட்ஸர்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளாலும் கட்டாய இராணுவ சேவை வலியுறுத்தப்பட்டதாக அறியமுடிகிறது. இலங்கையில், 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு, கட்டாய இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கான முன்மொழிவொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக, மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்ததை அடுத்து, சமூக…

  8. போரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது ? : சபா நாவலன் 02/06/2017 இனியொரு... வடக்கும் கிழக்கும் இணைந்த பூர்வீகத் தமிழர்களின் தேசிய நிலம் வடக்கு என்ற எல்லைக்குள் மட்டும் குறுக்கப்பட்டு அதற்கு விக்னேஸ்வரன் என்பவரை நிர்வாகியாக நியமித்து வருடங்கள் கடந்துவிட்டன. வடக்கிலும் கிழக்கிலும் உள்ளூர் உற்பத்திகள் அழிக்கப்பட்டு பல் தேசிய வியாபார நிறுவனங்கள் எந்தத் தடங்கலுமின்றி மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பல் தேசிய நிறுவனங்களில் தங்கியிருக்கும் பல் பொருள் அங்காடிகள் ‘மூலைக் கடைகளை’ப் பிரதியீடு செய்ய ஆரம்பித்துவிட்டன. விவசாயம், மீன்பிடி, தொழிற் துறை என்ற அனைத்தும் மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன. பெரு நிறுவனங்களுக்குச் சேவையாற்றக்கூடிய சிற…

  9. அரசின் மீதான அழுத்தத்தை பயன்படுத்த தவறும் கூட்டமைப்பு நிலை­மாறு கால நீதியை நிலை­நாட்டி, நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பல நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் உளப்­பூர்­வ­மாக முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். ஆனால் அந்த வகையில் அர­சாங்கம் செயற்­படத் தவ­றி­யி­ருக்­கின்­றது. அதன் கார­ண­மாக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அரசு சிக்­கல்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தா­கவும், அங்கு எழுப்­பப்­ப­டு­கின்ற பல்­வேறு வினாக்­க­ளுக்கு ஆக்­க­பூர்­வ­மாகப் பதி­ல­ளிக்க முடி­யாமல் தடு­மாற நேர்ந்­தி­ருப்­ப­தா­கவும் தக­வல்கள் வந்து கொண்­டி­ருக்­கின்­றன. மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்றச் செயற்­பா­டுகள் என்­ப­வற்­றிற்குப் பொறுப்பு கூறு­வதில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் ப…

  10.  ட்ரம்ப்பின் கீழ் வெளிநாட்டுக் கொள்கைகள் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக, இராஜதந்திர அனுபவங்கள் எவையுமற்ற டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்ட போது, ஐ.அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில், பாரியளவு மாற்றங்கள் ஏற்படுமென்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. முன்னைய ஜனாதிபதிகளைப் போல், இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடவோ அல்லது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவோ அவர் முயல மாட்டார் என்பது, பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. இலங்கையிலும் கூட, அந்த எண்ணம் காணப்பட்டது. ட்ரம்ப்பின் வெற்றியை வாழ்த்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, “ஏனைய நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடாத போ…

  11. மாவீரர்களின் சரித்திரச் சாவினை ஒன்றாக நினைவு கூறுங்கள் . “ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒர் உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஓர் இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” – என தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் தொடர்பாக கூறிய இரத்தின சுருக்கமான பதிவு இது. மாவீரர்களினது வீரச்சாவு நிகழ்ந்த இடங்களும் நாட்களும் வேறுபாட்டவை. எனினும் ஒரே இலட்சியத்திற்காய் விதையாகிப்போன மாவீர…

  12. கட்சியரசியலுக்குள் சிக்குண்டிருக்கும் தமிழ்த் தேசியம் By DIGITAL DESK 5 27 AUG, 2022 | 03:34 PM சி.அ.யோதிலிங்கம் தற்போதைய நெருக்கடிக்கான தீர்வைத்தேடும் அரசியலில் தமிழ்த்தரப்பு பங்காளிகளாக இல்லாத நிலையில், இந்த வாரம் தேர்தல் மையகட்சி அரசியலுக்குள் தமிழ்த்தேசிய அரசியல் சிக்குண்டிருக்கும் காரணியைப் பார்க்கலாம். தேச விடுதலை அரசியலும், தேர்தலை மையமாகக் கொண்ட கட்சி அரசியலும் ஒரேநேர்கோட்டில் செல்வது எப்போதும் கடினமானதாகவே இருக்கும். உலகின் பல விடுதலைப் போராட்டங்கள், ஒடுக்கு முறைக்கான போராட்டங்கள் இந்த அனுபவங்களைக் கொண்டுள்ளன. தேச விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் சமூகம் தேர்தல் மையக்கட்சி அரசியலுக்குள் புகுந்ததும் தே…

    • 0 replies
    • 250 views
  13. சூத்­தி­ர­தா­ரி­களை சட்­டத்தின் முன் கொண்­டு­ வ­ரு­வதில் தாமதம் வேண்டாம் நாட்டில் ஏற்­பட்­டுள்ள மோச­மான நிலை­மையை கட்­டுப்­படுத்த அர­சாங்கம் கடும் பிர­யத்­த­னங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில் நெருக்­கடி நிலை தொடர்ந்து கொண்­டி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­யது. அவ­ச­ர­கால நிலை அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யிலும் ஊர­டங்கு சட்டம் நடை­மு­றையில் இருக்­கின்ற சூழ­லிலும் இன்னும் மக்கள் அச்­சத்­து­ட­னேயே இருந்­து­கொண்டு இருக்­கின்­றனர். குறிப்­பாக திக­னையில் ஆரம்­ப­மான இந்த வன்­முறை சம்­ப­வங்கள் தெல்­தெ­னிய, பூகொடை, மாத்­தளை, கண்டி உள்­ளிட்ட பிர­தே­சங்­க­ளுக்கு பர­வி­யி­ருந்­தது. இந்­நி­லையில் அர­சாங்கம் இந்த நிலை­மையை கட்­டுப்­ப­டுத்த கடும் நட­வ­டிக்…

  14. முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வி! இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் இலட்­சி­யங்கள் இல்­லாத திசையில் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் என்­னதான் தங்கள் சாத­னைகள் பற்றி பெருமை பேசிக்­கொண்­டி­ருந்­தாலும் கிடைத்­துள்ள பெறு­மானம் சிறந்­தாக அமை­ய­வில்லை. முஸ்­லிம்­களும், முஸ்லிம் அர­சி­யல்­வாதி­களும் இணக்க அர­சி­ய­லுக்கே பழக்­கப்­பட்­டுள்­ளார்கள். காலத்­திற்கு காலம் ஆட்சி அமைத்த பேரி­ன­வா­தி­க­ளுடன் இணக்க அர­சியல் என்ற போர்­வையில் அமைச்சர் பத­வி­களைப் பெற்று வரு­வதே முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளி­னதும், அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் நிலைத்த முடி­வாக இருந்து வந்­துள்­ளது. ஆ…

  15. ஸ்கொட்லாந்து பிரிவினையின் பின்புலம் – சில குறிப்புக்கள் : சபா நாவலன் அத்லாந்திக் சமுத்திரத்தின் உள்ளே தலையை நுளைத்து பிரித்தானியாவை உதைத்துக்கொண்டிருக்கும் அழகிய குடாநாடு தான் ஸ்கொட்லாந்து. ஏறக்குறைய 790 தீவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அழகான தேசம். பிரித்தானியாவின் இன்னொரு அங்கமான இங்கிலாந்திலிருந்து பயணித்தால் அழகிய நீண்ட மலைகளும் அருவிகளையும் அண்மித்த லேக் டிஸ்ரிக்கைத் தாண்டும் போதே ஸ்கொட்லாந்து எல்லைய அடைந்துவிட்டதாக உணரலாம். எடின்பரோ ஸ்கொட்லாந்தின் தலை நகரம். விசாலமான வீதிகளும், விண்ணைத் தொடத கட்டடங்களும் ஆர்ப்பாட்டமில்லாத தலை நகரம் ஒன்றை அறிமுகப்படுத்தும். கிளாஸ்கோ ஸ்கொட்லாந்தின் தொழில் நகரம். உலகில் அதிகம் பணப்பரிவர்த்தனை நடைபெறும் நகரங்களில் கிளாஸ்கோவைய…

  16. தொடரும் விரிசல்! ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்த ஆட்சி, எதிர்பார்த்­ததைப் போன்று நாட்டின் முன்­னேற்­றத்­திற்கு வழிகாட்­ட­வில்லை. நாட்டை முன்­னேற்­ற­க­ர­மான வழியில் வழி­ந­டத்திச் செல்­லவும் இல்லை. மாறாக பொரு­ளா­தாரம் நலி­வ­டைந்­தி­ருக்­கின்­றது. முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­ட­வில்லை. ஆட்­சியில் குழப்­பங்­களும், ஆட்­சி­யா­ளர்­க­ளி­டையே அர­சியல் பனிப்போர் பகை­மை­­யுமே ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறையை இல்­லாமல் செய்­வதன் மூலம் தனி­ந­பரின் ஆட்சி அதி­கார ஆதிக்­கத்­திற்கு முடிவு கட்டப் போவ­தாக 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் அர­சியல் கொள்கை …

  17. சுதந்திர வேட்கை என்பதை அடிப்படையாக் கொண்டு ஒவ்வவொரு தேர்தல்களிலும் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் மக்கள் கொள்கை அரசியலை தொடர்ச்சியாக நம்பிச் செயற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செல்கின்றன. -அ.நிக்ஸன்- தமிழ் மக்கள் கட்சிமாறிச் சென்றவர்களுக்கு ஒருபோதும் வாக்களித்தது கிடையாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி அரசாங்கத்தக்கு ஆதரவு வழங்கிய உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை, உள்;ராட்சி சபைத் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். ஆகவே வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பொறுத்தவரை சுதந்திரத்திற்கான போராட்டம் என்ற மன வேட்கையுடன் வாழ்கின்றனர் என்ற முடிவுக்கு வரலாம். கூட்டமைப்பின் பொறுப்பு ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அந்த மாறாத ம…

  18. Published By: VISHNU 07 NOV, 2023 | 11:26 AM ஆர்.ராம் வடக்கு - கிழக்கு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களின் சங்கம் ஆரம்­பிக்­கப்­பட்டு, அதன் தொடர்ச்­சி­யான செயற்­பா­டு­க­ளின்­போது ஏற்­பட்ட முரண்­பா­டுகள் பொது­வெ­ளிக்கு வந்­துள்ள நிலையில், நிர்­வாகப் பத­வி­களில் இருந்­த­வர்கள் முக்­கிய பொறுப்­புக்­களில் இருந்­த­வர்கள் தமக்கு கீழ்­ப­டி­யாது முரண்­டு­பி­டித்­த­வர்­களை களை­யெ­டுக்கும் செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன என்­பதை கடந்­த­வாரம் பார்த்­தி­ருந்தோம். களை­யெ­டுக்கும் முத­லா­வது அத்­தி­யாயம் வவு­னி­யாவில் அரங்­கேற்­றப்­பட்­ட­தோடு அதற்கு அடுத்­த­ப­டி­யாக முல்­லைத்­தீவு, மன்னார் மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய மா…

  19. ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் தற்போது இரு வகையான ஜனநாயகத்தை உணர்கிறார்? ஈழத் தமிழர்களின் தன்னாட்சி அதிகாரத்தை இலங்கைத் தேசியத்துடன் கரைக்கும் முயற்சிக்கு கிடைத்த பயன் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில் இலங்கையில், கடந்த ஐம்பது நாட்களாக நீடித்த அரசியல் நெருக்கடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளததாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அறிக்கை வெளியிட்டு பெருமைப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சி உறுப்பினர் சுமந்திரன். சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோரின் கடும் முயற்சியினால் இலங்கை உயர் நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால …

  20. தமிழரசு கட்சியின் தலைவராக சிறிதரனும் தமிழர் அரசியலும் Veeragathy Thanabalasingham on February 9, 2024 Photo, TAMIL GUARDIAN தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காணும் முயற்சிகளிலும் வடக்கு, கிழக்கில் எதிர்நோக்கப்படும் பல்வேறு மனிதாபிமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் முயற்சிகளிலும் தமிழ் அரசியல் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒருமித்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களினதும் அவர்களின் நலன்களில் அக்கறைகொண்ட சிவில் சமூகம் மற்றும் அவதானிகளினதும் இடையறாத வேண்டுகோளாக இருந்து வருகிறது. ஆனால், தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அது குறித்து அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இல்லை. ஏற்கனவே இருபத…

    • 3 replies
    • 792 views
  21. ஒற்றையாட்சியைத் தாண்டி வருவேன் என தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு சிறிசேன உறுதியளித்தது உண்மையா? - குமாரவடிவேல் குருபரன் 15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம். ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் திரு. சுமந்திரன் அவர்கள் முன்னர் பகிரங்கமாக அறியப்படாத செய்தி ஒன்றை வெளியிட்டார். மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஒற்றையாட்சி அரசை மைத்ரிபால விட்டுக்கொடுக்க மாட்டார் என்ற வாசகம் சேர்க்கப்பட இருந்ததாகவும், தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த வார…

  22. ['சமாதானம்' நிலவ வேண்டும் என்றால் அங்கு 'மன்னிப்பு' முக்கிய பங்கை வகுக்கிறது. 'மன்னிப்பு' என்ற கட்டுரையை, 'மன்னிப்பு' என்ற கவிதையுடன் சமாதான விரும்பிகளின் கருத்துக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றி, உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!] "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இருக்கையை தனதாக்கி பெரும்பான்மை அதிகாரத்தில் இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? " "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! " இரக்கமின்றி சுடும் காட்டுமிராண்டிகள் அவர்களல்ல இந்தநாட்டின் பூர்வீககுடிகளில் அவர்களும் ஒருவர் இணைந்து வாழ்ந்த குடிம…

  23. "அமைதியின் கதவு திறக்கட்டும்!" இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மீனவ கிராமத்தில், வங்காள விரிகுடாவின் அலைமோதும் நீருக்கும் தீவின் பசுமையான காடுகளுக்கும் இடையில், ரவி என்ற இளம் மீனவன் வசித்து வந்தான். ரவி தனது 25 வருட வாழ்க்கையில் மோதல்களையும் கொந்தளிப்பையும் தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை. வடக்கும் கிழக்கும் என்றும் சண்டை, வலி மற்றும் பயம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கும் இந்த மண்ணில் தான் அவன் பிறந்தான். பல தசாப்தங்களாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஒரு மிருகத்தனமான உள்நாட்டுப் போரால் சிதைக்கப்பட்டன. இந்த மோதல் ரவி போன்ற எண்ணற்ற குடும்பங்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும், இழப்பையும், விரக்தியையும் ஏற்படுத…

  24. "சிந்துவெளி ஒரு திராவிட நாகரிகம், கட்டாயம் ஆரிய நாகரிகம் அல்ல" சிந்துவெளி நாகரிகம் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்விற்குரிய கருத்தாக, உதாரணமாக சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு உடந்தையாக இருக்கின்ற போதிலும் இன்னும் பலர் நான்கு [உண்மையில் மூன்று , நாலாவது அதிகமாக தனித்தே இருக்கிறது] வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று தான் சிந்து வெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுகின்றனர். மேலும் வேதங்களுள் காலத்தால் முந்திய ரிக் வேதத்தில், வேதகாலத்தவர் வாழ்க்கையின் பிரதிபலிப்புகளை நாம் காணலாம். அதுமட்டும் அல்ல இந்த ஆரியர்கள் மேய்ச்சல் நி…

  25. பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய விசாரணைகள் தேர்தலுக்காகவா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூன் 19 புதன்கிழமை, மு.ப. 04:21 Comments - 0 உலகில் வேலைநிறுத்தம் செய்த முதலாவது நாட்டுத் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவாகத்தான் இருக்க வேண்டும். ஏனைய வேலைநிறுத்தங்களைப் போலவே, அவரது வேலைநிறுத்தத்தின் மூலமும் பொது மக்களே பாதிக்கப்பட்டனர். ஏனைய வேலை நிறுத்தங்களைப் போலவே, ஜனாதிபதியும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக ஆராய, சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை, இரத்து செய்யவேண்டும்” என்பதே, அவரது கோரிக்கையாகும்.“எனது கோரிக்கையை, சபாநாயகர் நிறைவேற்றாவிட்டால், அமைச்சரவையைக் கூட்டப் போவதில்லை” என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.