Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ போராட்டம்: வயிற்றெரிச்சல் கோஷ்டிகள் -புருஜோத்தமன் தங்கமயில் ஜனநாயகப் போராட்டங்களை நோக்கி, மக்கள் திரள்வதை அடக்குமுறையாளர்களும் அவர்களின் இணக்க சக்திகளும் என்றைக்குமே விரும்புவதில்லை. இங்கு ‘அடக்குமுறையாளர்’கள் அடையாளத்துக்குக்குள், அரசுகள், அரசாங்கங்கள், பெரும்பான்மைவாதம், இனவாதம், மதவாதம் உள்ளிட்ட கூறுகள் அடங்குகின்றன. ‘இணக்க சக்திகள்’ என்ற அடையாளத்துக்குள், அடக்குமுறையாளர்களிடம் சலுகை பெறும் தரப்புகளும், குறுகிய அரசியல் மூலம் ஆதாயம் தேடும் தரப்புகளும் உள்ளடங்குகின்றன. இவ்வாறான தரப்புகள்தான், போராட்டங்களை ஊடறுக்கின்றன; காட்டிக் கொடுக்கின்றன. பௌத்த சிங்களப் பேரினவாத அடங்குமுறைகளுக்கு எதிராக, தமிழ் மக்கள் அரசியல் உரி…

  2. ‘போட்டுத் தள்ளும்’ மனநிலையை வளர்ப்பது எது? “...போராட்ட காலத்தில், குறிப்பாக போராட்ட சூழலுக்குள் வாழ்ந்த மக்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைவும் ஒருவர் மீதான மற்றவரின் நம்பிக்கையும் அபரிமிதமானது; மெச்சத்தக்கது. தமிழ்ச் சூழலில், அவ்வாறான நிலை அதற்கு முன்னர் இருந்திருக்கவும் இல்லை. எனினும், இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளில், மக்களிடையே நம்பிக்கையீனமும் முரண்பாடுகளும் எதிர்பார்க்கப்பட்ட அளவையும் தாண்டி அதிகரித்திருக்கின்றது. ஒருவரிடத்திலோ, சமூகத்திடமோ நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், கடந்த காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பின் சிறுபகுதி கூட, தற்போது காட்டப்படுவதில்லை. இது சமூகத்தின் தோல்வி நிலைகளில் முக்கியமானது.…

  3. ‘மக்களுக்காகப் பேசுவதும்மக்களைப் பேச வைப்பதும்’- திரு எஸ். திருச்செல்வம் October 24, 2020 ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என்பன அமைந்துள்ளன. முதல் மூன்றும் அரசாங்க கட்டமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவை. எனவே அவற்றிடமிருந்து நேர்மை, வெளிப்படைத்தன்மை, உண்மை என்பவைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஊடகம் என்பது செய்தி – தகவல் – விமர்சனம் என்பவற்றோடு கருத்துருவாக்கம், கருத்துப் பரிமாற்றம் என்பவற்றை உள்ளடக்கியதால், இதனை ஜனநாயகத்தின் காவல் நாய் (watch dog) என்பர். அதனால், ஊடகம் எப்போதும் காய்தல், உவத்தலின்றி உண்மையை உண்மையாகக் கூறுவதாக (நடுநிலை என ஒன்றில்லை) இருக்க வேண்டும். அதேசமயம், மக்களின் கருத்…

  4. ‘மாநில சுயாட்சி’ கொள்கையை நினைவுபடுத்திய ‘நீட்’ தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டமை, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள ப்ளஸ் டூ பரீட்சையில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்களைப் பெற்ற, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா, மத்திய அரசாங்கம் கொண்டு வந்த ‘நீட் பரீட்சையில்’ சித்தி பெற முடியவில்லை. குக்கிராமத்தில் பிறந்த அந்த மாணவிக்கு, அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் மருத்துவக் கனவு கலைந்த நிலையில், அனிதா தற்கொலை செய்து கொண்டார். அதன் விளைவாக இன்று ‘நீட்’ பரீட்சைக்கு எதிராக, தமிழகத்திலுள்ள மாணவர்கள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

  5. ‘மாற்றம்’ என்ற மாயவலைக்குள் சிக்கியுள்ளனர் இலங்கை சில மாத இடைவெளிக்குள் ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல் என்ற இரு பெரும் தேர்தல் களங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது மூன்றாவது தேர்தலாக எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இந்தத் தேர்தலில் இம்முறை தென்பகுதியை விடவும் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிலும் வழக்கத்திற்கு மாறாக ஆட்சியிலுள்ள அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களை முற்றாகவே கைப்பற்றிவிடும் நோக்கில் அடித்தாடத் தொடங்கியுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கட்சிகள் அதனைத…

  6. ‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் நாட்டைப் பொறுப்பேற்றது முதல், தற்போது வரை முன்னெடுத்து வரும் அரசியல், வெளிவிடும் கருத்துக்கள், நடந்து கொள்ளும் முறைகள் எல்லாம் வேடிக்கையானதாகவும் விநோதமானதாகவும் வில்லங்கமானதாகவுமே காணப்படுவதனால் மக்கள் மத்தியில் அவர்களின் ‘திசைக்காட்டி’ வலுவிழக்கத் தொடங்கியுள்ளதுடன், மக்களின் விசனத்திற்கும் கிண்டலுக்கும் ‘அனுரகுமார சகோதரர்கள்’ ஆளாகி வருகின்றார்கள். ‘மாற்றம்’ என்ற கோஷத்தினால் மக்களைச் சூடாக்கி, மூளைச்சலவை செய்து, நாட்டையும் ஆட்சியையும் கைப்பற்றிய திசைக்காட்டியினர், இன்று செய்து வரும் அரசியல் உண்மையில் ‘மாற்றம்’ நிறைந்ததுதான். ஆனால், அது என்ன மாற்றம்?,எதில் மாற்றம்? எப்படிப்பட்ட …

  7. ‘மாவோவாத இயக்கத்துக்கு சர்வதேச ரீதியில் பெரும் கோட்பாட்டு பங்களிப்புச் செய்த தலைவர்’- பிறந்ததின நூற்றாண்டில் சண்முகதாசனை நினைவுகூருதல் – கலாநிதி ஜெகான் பெரேரா அரசியல் ஆளுமை ஒருவரை அவர் வாழ்ந்த காலகட்டத்தின் பின்புலத்தில் வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும்.ஆனால், அவரது செயற்பாடுகளின் நீடித்த பொருத்தப்பாட்டை உறுதிசெய்து பின்னறிவைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் மதிப்பிடலாம். ‘ தோழர் சண் ‘ என்று பிரபலமாக அறியப்பட்டிருந்த நாகலிங்கம் சண்முகதாசனின் பிறந்ததின நூற்றாண்டை (2020 ஜூலை 3) முன்னிட்டு அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை செய்வது பொருத்தமானதாகும் என்று நம்புகிறேன். கடந்தகால நிகழ்வுகளின் தொடரை திரும்பிப்பார்ப்பதை நாம் வாழும் இன்றைய தருணத்தில் இருந்து தொடங்குவோம். ‘ மன…

  8. ‘மிக்காரும் இல்லை; தக்காரும் இல்லை’: பிரதமர் மோடியின் காய்நகர்த்தல்கள் இந்திய பிரதமரின் 2019 நிகழ்ச்சித்திட்டம், ஏறக்குறைய இலக்கை எட்டி விட்டது. காங்கிரஸ் முன்னின்று உருவாக்கிய, கூட்டணியை பீஹாரில் உடைத்துச் சிதறடித்த நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கும் வலுவான எதிர்க்கட்சியோ, எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த வேட்பாளரோ இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கூட்டணியில் இருந்து விலகி, பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஓரிரவுக்குள், மீண்டும் முதலமைச்சர் ஆகியிருப்பது பீஹாரில் நடக்கும் புதிய ‘மாஜாஜாலம்’ அல்ல! என்றால…

  9. ‘மிஸ்டர் கிளீன்’ இமேஜை சிதைக்கும் சதி முருகானந்தன் தவம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது இலங்கை அரசியலில் கொதி நிலையை உருவாக்கியுள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தி விட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்தின் ஆளுமைத்திறனையும் அரசியல் அனுபவத்தையும் மக்கள் நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்தி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் ஒரு சாதாரண அரசாங்கமாகவே அருவருப்புடன் பார்க்க வைத்துள்ளது. “சட்டம் அனைவருக்கும் சமம்.முன்னாள் ஜனாதிபதியாகவிருந்தாலும் தவறு செய்திருந்தால் சட்டம் பாயும்’’என ஜே .வி.பி.-என்.பி.பி.அரசாங்கம் பீற்றிக்கொண்டாலும் அவ்வாறு பீற…

  10. முள்ளிவாய்க்கால் என்னும் ஊர்ப்பெயர் தமிழர் அரசியலில் ஒரு குறியீடாகிவிட்டது. அதேவேளை, தமிழர் அரசியலும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான அரசியல், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்றவாறான அவதானத்தைப் பெறுகிறது. ஆனால், இது தொடர்பில் ஆக்கபூர்வமான விவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றனவா என்றால் வழமைபோல சோர்வு ஒன்றே எஞ்சிக்கிடக்கிறது. முள்ளிவாய்க்காலை முன்னிறுத்தி ஒவ்வொரு வருடமும் பலவாறான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றும் ஒரு நினைவுச் சின்னம் கட்டப்பட வேண்டுமென்று வாதிடுவோர் இருக்கின்றனர். அவ்வாறானதொரு நினைவுச் சின்னத்தை கட்டினால், அது தமிழ் மக்களின் கூட்டுணர்வை வெளிப்படுத்துவதற்கான தளமாக அமையும் என்றும் அவ்வாறானவர்கள் கூறுகி…

    • 0 replies
    • 521 views
  11. ‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ -இலட்சுமணன் ஸ்ரீ லங்காவின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலில், தத்தமது தரப்புகளின் தேர்தல் வெற்றியை ஈட்டிக் கொள்வதற்கான கொள்கைப் பிரகடனங்களைத் தேர்தல் விஞ்ஞாபனங்களாக, ஏட்டிக்குப் போட்டியாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீ இத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய அரசியலில் 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பான மாற்றுத் தீர்வு முன்மொழிவொன்றை, புதிய ஜனநாயக முன்னணி, கடந்த வார இறுதியில் வெளியிட்டிருந்தது. இதில், ‘பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள், ஒற்றையாட்சி முறையில் மாகாணங்களுக்கான உச்ச வரம்பிலான அதிகாரப்பகிர்வு, காணி, அபிவிருத்தி, நிதி, தொழில்வாய்ப்பு’ போன்ற பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இத்த…

  12. ‘மூலதனம்’ - 150 ஆண்டுகள்: உலகை புரட்டிய புத்தகம் உலகத்தில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சிலவே காலம் கடந்தும் நிலைக்கின்றன. அதிலும் வெகுசிலவே பலரால் அறியப்படுகின்றன. வரலாறு தன் கொடுங்கரங்களால், எத்தனையோ நூல்களை அறியப்படாமல் ஆக்கியிருக்கிறது. திட்டமிட்ட பரப்புரைகளும் விஷமத்தனங்களும் பல நூல்களை, மக்களின் வாசிப்புக்கே எட்டாமல் செய்திருக்கின்றன. உலகில் அதிகளவான விமர்சனத்துக்கும் அவதூறுகளுக்கும் திரிப்புக்கும் ஆளாகியும் இன்றும் புதுப்பொலிவுடன் ஒரு நூல் திகழ்கின்றது என்றால், அந்நூலின் சிறப்பை விவரிக்க வேண்டியதில்லை. காலங்கள் பல கடந்து, மாற்றங்கள் பல கண்டு, ஒன்றரை நூற்றாண்டுகளாக ஒரு புத்தகத்த…

  13. முதல் முதலாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மென்சக்தி (Soft Power) என்னும் அரசியல் எண்ணக்கருவைப் பயன்படுத்தியிருந்தார். தமிழர்கள் தங்களின் மென்சக்தி ஆற்றலை பிரயோகிப்பதன் மூலமாகத்தான் எதிர்காலத்தை கையாள முடியும் என்பதே சுமந்திரனின் பேச்சின் சாரமாக இருந்தது. இதன் பின்னர் ஒரு சில அரசியல் ஆய்வாளர்களும் இந்த எண்ணக்கருவை தங்களின் புரிதலில் தொட்டுச் சென்றிருந்தனர். ஒரு சில கட்டுரைகளும் இது தொடர்பில் வெளியாகியிருக்கின்றன. இவ்வாறு தொட்டுக்காட்டப்பட்ட, வெளியாகியிருக்கின்ற எழுத்துக்களை உற்றுநோக்கிய போது ஒரு கேள்வி எழுந்தது – சர்வதேச அரசியல் விவாதங்களில் எடுத்தாளப்படும் மென்சக்தி என்னும் சொற்பதம் நமது அரசியல் சூழலுக்கு ஏற்புடைய ஒன்றுதானா? ஏற்…

    • 0 replies
    • 555 views
  14. ‘மெல்ல’ வரும் கபளீகரம் Menaka Mookandi / நிகழ்காலத்தில், நாம் வாழும் இந்த நொடி, பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மாற்றங்களைக் கண்டுவருகிறது. காலமும் இடைவெளியும், நகரம், கிராமம் என்றில்லாமல், மாற்றங்கள் பலவற்றை உருவாக்கி வருகின்றது. இவ்வாறான மாற்றங்களால், எமது நாட்டுக்குள்ளேயே இரண்டு உலகங்களைக் காணும் பாக்கியம் கிட்டியுள்ளது எனலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவ்விரு உலகங்களில் ஒன்றை, மகிழ்வுடன் கண்ணோக்க முடியாது. காரணம், அந்த உலகத்தில், வறுமை, வேதனை, பசி, பட்டினியென, பல்வேறு பிரச்சினைகளுடன் வாழும் மக்களைத் தான் காணக்கிட்டும். மறுபுறம், வானுயர்ந்த கட்டடங்கள், எண்ணிலடங்காத வாகனங்கள், கஷ்டமென்பதே தெரியாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்ட…

  15. ‘யார் கூட்டமைப்பு?’ எனும் சர்ச்சையை புறங்கையால் தள்ளிய தமிழரசு கட்சி புருஜோத்தமன் தங்கமயில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்ததன் மூலம், இரா. சம்பந்தன் இதுவரை காலமும் வகித்து வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவி வறிதாகிவிட்டதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) அறிவித்திருக்கின்றது. புதிதாக கூட்டணி அமைத்துள்ள டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி ஆகியன தங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக முன்னிறுத்தத் தொடங்கி இருக்கின்றன. புதிய கூட்டணிக்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (D.T.N.A) என்கிற பெயரும், ‘குத்துவிளக்கு’ சின்னமும் இருக்கின்ற போதிலும், கூட்டமைப்பு (T.N.A) என்கிற அ…

  16. “ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கேவருவதல்ல” – என்பாராம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தத்துவ ஆசிரியராக இருந்த அன்ரன் பாலசிங்கம். ஒருமுறை அரசியல் தொடர்பில் உரையாடிக் கொண்டிருக்கும் போது, கவிஞர் புதுவை இரத்தினதுரை இதனை என்னிடம் கூறினார். எதிர்வரும் மார்ச் மாதம் மீண்டும் ஜெனிவா அமர்க்களம் ஆரம்பிக்கப் போகின்றது. இனிவரப் போகும் இரண்டு மாதங்களுக்கும் இதுதான் கதையாக இருக்கப் போகின்றது. இலங்கைக்கான இங்கிலாந்து தூதுவர், சம்பந்தன் மற்றும் சுமந்திரனை திடீரென்று சந்தித்திருக்கின்றார். நிச்சயம் அது ஜெனிவா தொடர்பான உரையாடல்தான். அதில் சந்தேகப்பட ஒன்றுமில்லை. ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகிவிட்ட நிலையில், இலங்கை தொடர்பான விடயங்களை இங்கிலாந்தே க…

  17. ‘ராஜபக்ச அச்சத்தில்? – டேவிட் கமரனின் இலங்கைப் பயணம் குறித்த ஆய்வறிக்கை : இனியொரு… நன்றி : அவந்த ஆட்டிகல வன்னிப் படுகொலைகளை நடத்திய வேளையில் அழிக்கும் ஆயுதங்களைச் ’சட்டரீதியான’ மூலங்களூடாகவே மகிந்த பாசிச அரசு பெற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்தானில் பயன்படுத்திய பொஸ்பரஸ் கொத்துக்குண்டுகளிலிருந்து இரசாயன ஆயுதங்கள் வரை இலங்கை அரசு எங்கிருந்து பெற்றுக்கொண்டது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.இது வெறுமனே தமிழின் வாதம் தமிழின உணர்வு என்ற எல்லைகளுக்கு அப்பால் பரந்துபட்ட மக்களை நோக்கிச் செல்லவேண்டும். கொலைகளின் சூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பமும் அதன் ஆதரவாளர்களும் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். அவர்கள் மக்கள் மத்தியில் நடமாடுவதே மனித குலத்திற்கு ஆபத்…

    • 8 replies
    • 1.5k views
  18. ‘ராஜபக்‌ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஆட்சியில் ஜே.வி.பி.யின் ‘மணி’ சத்தம் அதிகமாகி தேசிய மக்கள் சக்தியின் ‘திசைகாட்டி’ தவறாகத் திசை காட்டத் தொடங்கியுள்ளதால் ‘மாற்றம்’ என்ற கோஷம் மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்பு,நம்பிக்கை பொய்த்துப்போகத் தொடங்கியுள்ளது.இதனை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தவே கடந்த வாரப் பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி ஒரு ஆக்ரோஷமான உரையை நிகழ்த்தி எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியிருந்தார். ஜனாதிபதியின் இந்த ஆக்ரோஷமான உரைக்கு எதிர்க்கட்சிகள் தனது ஆட்சிக்குக் கொடுக்கும் குடைச்சல்கள் மட்டும் காரணமின்றி, ராஜபக்‌ஷக்களின் ‘மொட்டு’க்கு நாட்டில் மீண்டும் அதிகரித்துவ…

    • 1 reply
    • 205 views
  19. ‘ரோஹிஞ்சா’ முஸ்லிம்களின் மரண ஓலம் மியன்மாரில் சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநியாயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இனரீதியான ஒடுக்குமுறைகளும் இனச்சுத்திகரிப்பும் ‘ரோஹிஞ்சா’க்களைத் தினமும் பலியெடுத்துக் கொண்டிருக்கின்றன. கட்டமைக்கப்பட்ட இந்த வன்முறைகளால் அவர்கள் படும்பாட்டைக் கண்டு, உலகெங்கிலுமுள்ள மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். அதுபற்றிய புகைப்படங்கள், பத்திரிகைகளில் பிரசுரிக்கக் முடியாத விதத்தில், இதயம் பலவீனமானவர்களை, மோசமாகப் பாதிக்கக் கூடிய அளவுக்கு, மிகவும் கவலை தருவதாக இருக்கின்றன. ஆனால், மியன்மார் அரசாங்கத்தின் மாற்றாந்தாய் மனப்பாங்கும், உலகின் அதிகார மையங்கள் கண்டுகொள்ளாதிருப்பதும், ம…

  20. ‘றோவின் கரங்களும்’ மோடி – மஹிந்த சந்திப்பின் அரசியலும் யதீந்திரா படம் | Reuters, ALJAZEERA அண்மையில் இலங்கைக்கு இரு நாள் விஜயமாக வந்துசென்ற இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு அமைவாக சில நிகழ்வுகளில் பங்குகொண்டிருந்தார். மோடி – மஹிந்த சந்திப்பும் அவ்வாறான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால், மேற்படி மோடி – மஹிந்த சந்திப்பு ஏனைய நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாவே தெரிகிறது. ஏனெனில், மோடி – மஹிந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பதாக மஹிந்த இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், இந்திய வெளியக உளவுத் துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பானது (Research and Analysis Wing) அமெரிக்க வெளியக உளவுத்…

  21. ‘லிபரேஷன் ஒபரேஷன்’ : 36 ஆண்டுகளுக்கு முன் இராணுவம் நடத்திய முதல் போர்! Posted on June 2, 2023 by தென்னவள் 18 0 நாட்டின் இறுதிக்கட்ட போரில் செய்யப்பட்ட இனப் படுகொலைகளையும், போரில் உயிர் நீத்தவர்களையும் நினைவுகூரும் பல நிகழ்வுகளை கடந்த மே மாதம் பல்வேறு இடங்களில், குறிப்பாக, வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் இடம்பெற்றது. யுத்தம் முற்றுப்பெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், போர் முரசு கொட்டப்படுவதற்கு முதற்புள்ளி இடப்பட்டது எப்போது, யாரால் என்பதை அறியாத தரப்பினருக்கே இந்த பதிவு. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவே 1987 மே 26 அன்று முதல் முதலாக யுத்தத்தை ஆரம்பித…

  22. ‘வடக்கு – கிழக்கில் கிளர்ச்சி வெடிக்கும்’: இது தேர்தலுக்கான கோசமா….? நரேன்- இலங்கைத் தீவு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே மிதவாத தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழ் தேசிய அரசியல் பல்வேறு முரண்பாடுகளையும், பிளவுகளையும் சந்தித்து இருந்தது. ஜனநாயக ரீதியாக மிதவாத தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டங்களையும், உரிமைக்கான குரல்களையும் தென்னிலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பிராதான கட்சிகளும் புரிந்து கொள்ளாமையின் விளைவு இளைஞர்கள் ஆயுதமேந்த நிர்பந்திக்கப்பட்டனர். மிதவாத தமிழ் தலைமைகளும் அதற்கு துணை போயின. தனித் தமிழீழ கோரிக்கையை முன்னுறுத்தியும், உரிமையை வலியுறுத்தியும் பல ஆயுதப் போராட்ட அமைப்புக்கள்…

  23. ‘வாங்கோ ராசா வாங்கோ’ காரை துர்க்கா / 2020 ஜனவரி 21 ஒரு நாட்டின் உண்மையான சோதனைக்காலம் என்பது, அந்த நாட்டில் நிகழ்ந்த யுத்த கொடூரங்களையே குறிப்பிடலாம். அந்த யுத்தகாலப் பகுதியே, அந்தத் தேசம் நோய்வாய்ப்பட்ட காலப்பகுதியாகக் கருதப்படுகின்றது. இலங்கை நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டத்தில், அதிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்ற நோக்கிலேயே (பாதுகாப்பு), 1980களின் தொடர்ச்சியான காலகட்டங்களில், தமிழ் இளைஞர்கள் அடைக்கலம் தேடி, தாய் மண்ணைத் துறந்து, அந்நிய தேசங்களுக்குச் சென்றனர். தமிழ், சிங்கள முரண்பாடுகள், ஆயுதப் போராக தோற்றம் பெற்ற அக்காலப்பகுதியில், ‘சுவர் இருந்தால் மட்டுமே, சித்திரம் வரையலாம்’ என்ற அடிப்படையில், அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. மு…

  24. ‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த ஞாயிற்றுக்கிழமை, நிகர்நிலையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், பங்குகொள்ளக் கிடைத்தது. ‘பிளவுற்ற தமிழ்த் தேசத்தில் விடுதலைப் போராட்டம்’ என்ற தலைப்பில், நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மாணவியொருவர் தனது இளமானிப்பட்ட ஆய்வை முன்வைத்துப் பேசியிருந்தார். அந்த மாணவி, நோர்வேயில் பிறந்து, வளர்ந்த இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் இளந்தலைமுறையினர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை, எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கான ஓர் அடிப்படையை, அந்த உரையும் அதைத்தொடர்ந்த கலந்துரையாடலில் அந்த மாணவி முன்வைத்த கருத்துகளும் தந்தன. குறித்த உரையைத் தொடர்…

  25. ‘விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’ முருகானந்தம் தவம் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கட்சிகளில் முதன்மையானதும் தாய் கட்சி என்றும் அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் (ஈ.பி.டி.பி.) ஆதரவு கேட்டு அக்கட்சியின் அலுவலகப் படி ஏறியமை தமிழ்த் தேசிய அரசியலிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (ஈ.பி.டி.பி.) தமிழினத் துரோகிகள், ஓட்டுக்குழு, ஆயுதக்குழு, இராணுவ துணைக்குழு, தமிழ் இள…

    • 4 replies
    • 370 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.