அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9329 topics in this forum
-
ஜனாதிபதி தெரிவும் தமிழ்க் கட்சிகளும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையினுடைய எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, அரசியலமைப்பின் 40ஆவது சரத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான இரகசிய வாக்கெடுப்பின் மூலம், ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டு, பதவியேற்றிருக்கிறார். பல திருப்புமுனைகளோடு, மிக விறுவிறுப்பாக இந்த ஜனாதிபதி தெரிவு அரங்கேறியிருக்கிறது. இந்த ஜனாதிபதி தெரிவின் போதான தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் என்பவற்றை, மீள்பார்வை செய்வதே இந்தப் பத்தியின் நோக்கமாகும். இன்றுள்ள பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில், கூட்டணிக் கட்சிகள் உள்ளடங்கலாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு, பாராளுமன்றம் …
-
- 0 replies
- 490 views
-
-
ஜனாதிபதி தேர்தலும்... பக்குவமற்ற, தமிழ்க் கட்சிகளும் – நிலாந்தன். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை, என்பதைத்தான் நடந்து முடிந்த ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நிரூபித்திருக்கிறது. ஒரு தேசமாக சிந்தித்திருந்திருந்தால் முதலில் கட்சிகள் தங்களுக்கு இடையே ஓர் ஒருங்கிணைப்புக்கு போயிருந்திருக்க வேண்டும். ஒரு பொது முடிவை எடுத்து வேட்பாளர்களை அணுகி இருந்திருக்க வேண்டும். அரங்கில் காணப்பட்ட மூன்று வேட்பாளர்களுமே தமிழ் மக்களுக்கு அவர்கள் கேட்பதை தரப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தமிழ்த் தரப்பு தனது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களை நோக்கி கூட்டாக முன் வைத்திருந்திருக்க வேண்டும். அதன் மூலம் மூன்று வேட்பாளர்களையும் அம்பலப்படுத்தி இருந்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. த…
-
- 18 replies
- 1.2k views
-
-
ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் தேசிய இன பிரச்சினையை தீர்க்க தமிழ் தலைவர்கள் முயற்சிக்கவேண்டும்- விக்கிரமபாகு கருணாரத்ன ரொஷான் நாகலிங்கம் தேசிய இன பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான நம்பிக்கை, இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரோத செயற்பாடுகள் …
-
- 0 replies
- 290 views
-
-
இலங்கை மக்கள் நிராகரித்த ரணில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற முரண்: அரசியலமைப்பில் தீர்வு உண்டா? யூ.எல்.மப்ரூக் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்க 'போலிப் பெரும்பான்மை' மூலம் ரணில் விக்ரமசிங்க - ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியிருக்கிறார். 'மக்களின் விருப்பத்தினை ரணிலுக்குக் கிடைத்த நாடாளுமன்றப் பெரும்பான்மை பிரதிபதிக்கவில்லை' என்பது சுமந்திரனின் கருத்தாக உள்ளது. அரசியலமைப்பிலுள்ள 'ஒட…
-
- 5 replies
- 486 views
- 1 follower
-
-
ரணில்: கடைசி ஆளா? நாடாளுமன்றத்தில் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே ஒரு உறுப்பினர், அதுவும் தேர்தலில் தோற்றதால்,தேசியப் பட்டியல்மூலம் உள்ளே வந்தவர்,நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இது ஆசியாவின் அதிசயம் மட்டுமல்ல உலகத்தின் அதிசயமும்தான். தாமரை மொட்டுக்குத் தலைமை தாங்கும் யானைக்கும், யானைக்குத் தலைமை தாங்கும் தாமரை மொட்டுக்கும் இடையிலான போட்டியில் யானை ஜெயித்திருக்கிறது. எனவே அது எல்லா விதத்திலும் தாமரை மொட்டுக்குக் கிடைத்த வெற்றிதான். ரகசிய வாக்கெடுப்பு என்பது திருடர்களுக்கு வசதியானது.”அரகலய”போராட்டக்காரர்கள் கூறுவதுபோல, திருடர்களே வெற்றியைத் தீர்மானித்திருக்கிறார்கள். ரணிலை முன்னிறுத்தியதன்மூலம் ராஜபக்சக்…
-
- 0 replies
- 415 views
-
-
மின்சாரக்கட்டமைப்பை இணைப்பது இலங்கைக்கு இலாபகரமான தீர்வு by யே.பெனிற்லஸ் 2022/07/12 in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள் 86 1 A A 0 37 SHARES 1.2k VIEWS Share on FacebookShare on Twitter இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் ஒரு முக்கிய அம்சமாக நாளொன்றுக்கான முழுமையான மின்சாரத்தேவையை வழங்க முடியாத பலவீனமான நிலைமைகள் நீடித்துக்கொ…
-
- 0 replies
- 663 views
- 1 follower
-
-
புதிய ஜனாதிபதியால் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியுமா? கடந்த சில மாதங்களில் இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவை மையப்படுத்தி உச்சத்தை அடைந்தது, அவரது இராஜினாமாவின் பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்றார். எனினும் பாராளுமன்றத்தை கூட்டி புதிய ஜனாதிபதியை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி சார்பில் டலஸ் அழகப்பெரும மற்றும் இடதுசாரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக…
-
- 0 replies
- 931 views
-
-
"தமிழர்கள் மீது நடந்த 1983 கருப்பு ஜூலை வன்முறை இந்த ஜூலையில் சிங்களர்கள் மீதும் நடக்கிறதா?" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சிங்கள இனவாதக் குழுவினர், மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி 39 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. கறுப்பு ஜுலையில் முதலாவது கலவரம் ஆரம்பமானது, ஜுலை மாதம் 23ம் தேதி என்பதுடன், அதே தேதியை அண்மித்து மக்கள் மீது இலங்கை ராணுவம் நேற்று (22) தாக்குதல் நடத்தியதாக காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்…
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
அரசியல் தந்திரசாலி ரணிலின் வெற்றி! புருஜோத்தமன் தங்கமயில் நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில், ஜனாதிபதிக் கனவை ஒவ்வொரு நாளும் கொண்டு சுமந்தார். இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அவர் தனது கனவை அடைவதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற்கு தயாராக இருந்தார். அதுதான், அவரை காலம் இன்று ஜனாதிபதியாக்கியிருக்கிறது. நம்பிக்கைக் கதைகளில் புதிய நாயகனாகவும் மாற்றியிருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு கட்சித் தலைவராக ரணில் மிக மோசமான தோல்விகளைச் ச…
-
- 0 replies
- 438 views
-
-
இலங்கை நெருக்கடி: ரணிலை விழிபிதுங்க வைக்கும் 6 தலை வலிகள் தாக்குப்பிடிப்பாரா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ், இலங்கையில் இருந்து... 58 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை ஜனாதிபதியாகி இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவரது அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறார். நாட்டில் இருக்கும் சூழலைப் பார்க்கும்போது அவரது பதவிக்காலம் நெருக்கடிகள் மிகுந்ததாகவே இருக்கப் போகிறது. அவருக்கு என்னென்ன நெருக்கடிகள் இருக்கப் போகின்றன? அரசியல் நிபுணர் நிக்சனுடன் பேசியவற்றில் இருந்து தொகுக்கப்பட்ட தகவல்களைப் பார்க்கலாம். ரணிலுக்கு அரசியல் ரீ…
-
- 0 replies
- 468 views
- 1 follower
-
-
இதுகாலவரை தன்னிடமிருந்து நழுவிய பதவியை இறுதியில் அடைந்துவிட்ட ரணில் சுமார் மூன்று தசாப்தங்களாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வசப்படாமல் இருந்துவந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி இன்றைய தினம் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கைகளுக்கு வந்துசேர்ந்திருக்கிறது. மக்கள் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் நாட்டைவிட்டு தப்பியோடிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்துகொண்டு கடந்தவாரம் பதவியைத் துறந்ததையடுத்து காலியான ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு இன்று சபையில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் விக்கிரமசிங்கவுக்கு 134 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான முன்ன…
-
- 0 replies
- 280 views
-
-
இலங்கை பதில் ஜனாதிபதி முழு நேர ஜனாதிபதி ஆன முந்தைய வரலாறு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க, இலங்கை புதிய ஜனாதிபதி இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரின் பதவி, இடைநடுவில் வெற்றிடமாகும் பட்சத்தில், அதற்கு மற்றுமொரு ஜனாதிபதியை தேர்வு செய்யும் இரண்டாவது சந்தர்ப்பம் இன்று இடம்பெற்றது. இலங்கையில் இதற்கு முன்பு முதல் முறையாக நாடாளுமன்றத்தால் 'நிறைவேற்று அதிகார ஜனாதிபதி' தெரிவு 1993ஆம் ஆண்டு இடம்பெற்றது. அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாஸ, 1993ம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி, கொழும்பில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தருணத்…
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
இந்தியாவிற்கு அருகில் ஒரு கிளர்ச்சியா? - யதீந்திரா ராஜபக்சக்களை அதிகாரத்திலிருந்து அகற்றுதல் என்னும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட தென்னிலங்கை கிளர்ச்சியானது, சற்றும் எதிர்பாராத வகையில் உத்வேகத்துடன் தொடர்கின்றது. கிளர்சியாளர்களின் முதலாவது இலக்கு நிறைவேறிவிட்டது. ராஜபக்சக்களின் ராம்ராஜ்யத்தை சரித்துவிட்டனர். கோட்டபாயவின் வெளியேற்றத்துடன் ராஜபக்சக்களின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். முதலில் கோட்டபாய ராஜபக்சவை இலக்கு வைத்து கிளர்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் தற்போது, ரணில் விக்கிரமசிங்கவை இலக்கு வைத்து கிளர்ச்சியை தீவிரப்படுத்திவருகின்றனர். இதன் ஆரம்பக்கட்டமாகவே பிரதமர் அலுவ…
-
- 0 replies
- 420 views
-
-
கோட்டாபயவை துரத்துவதில் மூளையாக செயற்பட்ட தமிழர்
-
- 7 replies
- 838 views
-
-
இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா? நிதின் ஸ்ரீவஸ்தவா பிபிசி செய்தியாளர், கொழும்பில் இருந்து 19 ஜூலை 2022, 01:54 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜனாதிபதி மாளிகையை பார்க்க குவிந்த கூட்டம் இப்போது இரண்டு பெரிய ஆடம்பர வாயில்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்த வாயில்களில் 'கோட்டா போனார்' மற்றும் 'ராஜபக்ஷ இல்லாத இலங்கை' என எழுதப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை, இந்த வாயில்களுக்குள் இருக்கும் பிரமாண்டமான அதிபர் …
-
- 0 replies
- 721 views
- 1 follower
-
-
அடுத்த ஜனாதிபதி எப்படி தெரிவு செய்யப்படுவார்? என்.கே. அஷோக்பரன் அரசியலமைப்பின் 38(1)(ஆ) சரத்தின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்ததன்படி, இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமானது. இதனைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 40(1)(இ) சரத்தின் படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பின் படி, கோட்டாபய விட்டுச்சென்றுள்ள மிகுதிப் பதவிக்காலத்திற்காக அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை, பதில் ஜனாதிபதியாகியுள்ளார். ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் பட்சத்தில், எஞ்சியுள்ள பதவிக்காலத்திற்கு ஜனாதிபதியொருவரை தேர்ந்தெடுப்பது தொடர்பில், அரசியலமைப்பின் 40வது சரத்தும், 1980ம் ஆண்டின் 2ம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் (விசேட ஏற்பாடுக…
-
- 0 replies
- 351 views
-
-
தமிழ்க் கட்சிகளின் இயங்காநிலை “கண்ணீர்விட்டா வளர்த்தோம்” சி.அ.யோதிலிங்கம் காலிமுகத்திடல் போராட்டத்தின்; முதலாம் கட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் சென்று தனது பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்திய பின் இராஜினமாக்கடிதத்தை அனுப்பியுள்ளார். போராட்டத்தின் முதலாம் கட்டம் முடிவடைந்துள்ளதால் தந்திரோபாய ரீதியாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், என்பவற்றிலிருந்து வெளியேறியுள்ளனர். இரண்டாவது கட்டப் போராட்டம் ரணிலின் ஆட்சிக்கு எதிரானது. இங்கு ரணில் ஆட்சியை மட்டுமல்ல அவருக்கு பின்னாலுள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துடனும் போராட வேண்டும். இதற்கு வேறுபட்ட மூலோபாயங்களும் தந்திரோபாயங்களு…
-
- 4 replies
- 627 views
-
-
ராஜபக்ஷர்களின் வீழ்ச்சியில் கற்க வேண்டியது புருஜோத்தமன் தங்கமயில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட போது, தென் இலங்கையில் சில இடங்களில் வெடி கொளுத்தி மக்கள் ஆர்ப்பரித்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. சுதந்திர இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சித் தலைவர் ஒருவர் மரணித்த போது, இவ்வாறான சம்பவங்கள் அதற்கு முன்னர் எப்போதும் நிகழ்ந்ததில்லை. அப்படியானதொரு நிலை தனக்கு என்றைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடிக்கடி கூறுவாராம். புலிகளிடம் இருந்து நாட்டை சிங்கள மக்களுக்கு மீட்டுக் கொடுத்த தலைவராக தான் என்றைக்குமே மகா வம்சத்தில் அடையாளம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவ…
-
- 3 replies
- 498 views
-
-
-
- 2 replies
- 834 views
-
-
இடைக்கால, ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பும்... "சிஸ்ரம் சேஞ்சும்" – நிலாந்தன். இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவதற்காக, இருபதாம் தேதி, நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், ஐந்துக்கு மேற்பட்ட முனைப் போட்டிக்கு இடம் உண்டு என்று தெரிகிறது. ரணில் சஜித் இருவரையும் தவிர, டலஸ் அழகப் பெரும,சரத் பொன்சேகா,அனுரகுமர,அனுரா பிரியதர்சன யாப்பா போன்றவர்களும் போட்டியிடுவதில் நாட்டத்தோடு காணப்படுகிறார்கள். சம்பிக்க ரணவக்கவிற்கும் அந்த ஆசை இருப்பதாக கருதப்படுகிறது ரணிலை பொதுஜன பெரமுன ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ராஜபக்சக்களை அவர் பாதுகாக்கிறார்.எனவே ரணிலை ராஜபக்சக்கள் பாதுகாப்பார்கள். அந்த அடிப்படையில் பொதுஜன பெரமுனவின் வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கும். ஆனால் இங்கே உள்ள பிரச்ச…
-
- 0 replies
- 281 views
-
-
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ, தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்துள்ளதை, நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். 69 லட்சம் மக்களின் வாக்குகளினால் அதிகாரத்தை கைப்பற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, அந்த பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு, 2 கோடி மக்களும் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தியிருந்தனர். சிங்கள மக்களின் பெரும்பான்மை வா…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
முட்டுச்சந்தியில் முனகும் தேசம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மக்கள் போராட்டங்களின் வீரியம் என்னவென்பதை இலங்கையர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளும் உணர்ந்த தருணம் மகத்தானது. ஆனால் இலங்கை அரசியலில் பேரிடர்கள் வரிசைகட்டி நிற்கின்றன. எதிர்கட்சித் தலைவர் ஒருபேரிடர் என்றால் சபாநாயகர் இன்னொரு பேரிடர். எதிர்கட்சிகளும் பாராளுமன்றும் இதன் தொடர்ச்சி. இந்தப் பின்னணியிலேயே இந்நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிகளை மக்கள் தேடவேண்டியிருக்கிறது. ஹிட்டலராகத் தன்னை உருவகித்துக் கொண்டவர் இறுதியில் கோமாளியாகி நாட்டை விட்டுத் தப்பியோட நேர்ந்திருப்பது அவல நகைச்சுவை. இதை சாத்தியமாக்கிய பெருமை போராட்டக்காரர்களையே சாரும். கடந்த 9ம் திகதி மக்கள் திரள் உறுதியானதும் இறுதியானதுமான செய்தியை…
-
- 0 replies
- 518 views
-
-
பல பிற்போக்கித்தனங்களின் - அடிப்படைவாதத்தின் சாம்பாறாக இருக்கும் இச்சிந்தனை எப்போதும் தகதகவென்றிருக்கிறது. ராஜபக்ச குடும்பத்தினர் அந்தத் தகவொளியில் பிரகாசித்தனர். எனவேதான் மீளமீள அவர்தம் வருகைக்காக சிங்கள மக்கள் தவமியற்றினர். தூக்கி வைத்து கொண்டாடிய சிங்கள மக்கள் இப்படியொரு தவமியற்றலின் பின்னணியில்தான் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவரான கோட்டபாய ராஜபக்ச 'அமெரிக்கன்' என்கிற அடையாளத்தையே தூக்கியெறிந்து விட்டு இலங்கை வந்தார். தாய் நாட்டுக்காக பெற்ற சுகங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு வந்த கோட்டபாயவை சிங்கள மக்கள் தம் தோள்களில் வைத்துக் கொண்டாடினர். அந்த மகாவீரனின் உருவத்தைக் காகிதத்தில் வரைந்து வைத்தால் அழிந்துவிடும் என்பதற்காகத் தம்…
-
- 0 replies
- 683 views
-
-
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்து என்ன நடக்கும்? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போராட்டக்காரர்கள் பிடியில் ஜனாதிபதி செயலகம். சுதந்திர இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது ராஜினாமா கடிதத்தை நேற்றைய தினம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்திருந்தார். இலங்…
-
- 0 replies
- 381 views
- 1 follower
-
-
இலங்கை நெருக்கடி: கோட்டாபய சிங்கப்பூருக்கு சென்றது ஏன்? அவரை நீக்க சபாநாயகரால் முடியுமா? 14 ஜூலை 2022, 10:06 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ,அவரது மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் மாலே சர்வதேச விமான நிலையத்தில இருந்து சிங்கப்பூர் நோக்கிச் செல்லும் விமானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கும் பிறகு சிங்கப்பூருக்கும் சென்றுள்ள நிலையில், இதுவரை அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பவில்லை. முன்னதாக, இந்த மாதம் 13ஆம் தேதி பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாப…
-
- 1 reply
- 380 views
- 1 follower
-