Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. காலநிலை நெருக்கடி: சிறுவெள்ளமும் பெருங்கேள்விகளும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இன்னொரு மாரி காலம், இன்னுமொரு வெள்ளம், நிலச்சரிவு, உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள், அனர்த்தம், ஆபத்து என்ற கொடுஞ்சுழல், இன்னொரு முறை இலங்கையை தாக்கியுள்ளது. இது கடைசிமுறையல்ல என்பதை மட்டும், உறுதியாக நம்பவியலும். வருடாந்தம் எம்மை அலைக்கழிக்கும் இப்பெருமழையும் கொடுவெள்ளமும், பல கேள்விகளை எழுப்புகின்றன. ‘மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதை’யாய், நொந்தழிந்து போயுள்ள விவசாயிகளை, உணவின்றித் தவிக்கும் ஏழைகளை, கொரோனாவால் கதியிழந்தவர்களை என, அனைவரையும் பாரபட்சமின்றிச் சோதிக்கிறது இப்பெருமழை. கடந்த பல ஆண்டுகளாக இச்சோதனை, தொடர் நிகழ்வாயுள்ளது. அந்த நேரத்துக்கு அது செய்தி…

  2. இனப்பரம்பலை மாற்றவா சிங்களக் குடியேற்றம்? Posted on November 5, 2021 by தென்னவள் 36 0 ஓன்றில் அதிகாரத்தைக் குறைப்பது; அல்லது, குடியேற்றத்தை நிகழ்த்தி இனப்பரம்பலைக் குறைப்பது. இதுதான், இலங்கை அரசாங்கத்தின் தாரக மந்திரம். இரண்டும் நல்ல திட்டமே! திட்டமிட்ட வகையில் நடைபெறும் குடியேற்றங்களால், தமிழர்களின் வடக்கு – கிழக்கு பூர்வீக தாயகம் என்ற நிலைப்பாட்டில், நிரந்தரமாக மாற்றத்தை ஏற்படுத்திவிடவேண்டும் என்ற விடாப்பிடியே இதிலிருந்து புலப்படும். இந்த வகையில்தான், இலங்கையின் சிங்கள பெரும்பான்மை அரசுகள், தமிழர்களின் மரபுவழித் தாயக நிலப்பரப்புகளில் தமிழர்களின் மரபுவழி உரிமைகளைச் சிதைக்கும் வண்ணம், திட்டமிட்…

    • 0 replies
    • 328 views
  3. திண்ணைப் பேச்சும் தமிழரசுக் கட்சியும்! நிலாந்தன். November 7, 2021 கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாசவிடுதியில் 7 கட்சிகள் கூடின. 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் அழைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை. மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும் சந்திப்புக்காக கொழும்பிலிருந்து வந்திருந்தார்கள். எனினும், எதிர்பார்த்தபடி ஒரு இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு ஒரு தீர்மானத்தை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பில் முடிவெடுப்பதற்கு தமிழரசுக்க…

  4. சுமந்திரன் குழுவின் அமெரிக்கப் பயணம் சொல்லும் செய்தி புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர்கள் குழுவொன்று நேற்று புதன்கிழமை அமெரிக்கா சென்றுள்ளது. அமெரிக்காவின் அழைப்பின் பேரில் சென்றுள்ள இந்தக் குழுவில், ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனும் முன்னாள் சட்ட விரிவுரையாளரான கலாநிதி நிர்மலா சந்திரஹாசனும் உள்ளடங்குகின்றனர். இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை, சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சந்தித்து, பேச்சுகளை நடத்தியிருந்தார். இதன்போது, அரசியலமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, கூட்டமைப்பின் சார்பில் நிபுணர்கள் குழுவொன்…

  5. கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தேசியவாதிகள் – மட்டு.நகரான் November 9, 2021 கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தமிழ்த் தேசியவாதிகள்: தமிழர்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமானதாக மாறிவருகின்றது. தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாடுகள் முற்றுமுழுதாக அழிக்கப்படும் அல்லது அழிந்து செல்லும் நிலைமைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் நாங்கள் கடந்த காலத்தில் எழுதியுள்ளபோதிலும், இன்றைய கிழக்கு மாகாணத்தின் நிலைமையினையும், எதிர்காலத்தில் இதனை எவ்வாறு தடுத்து, தமிழ்த் தேசிய அரசியலை முன்கொண்டு செல்லமுடியும் என்பதையும் எழுதவேண்டிய அவசியம் இன்று எழுந்துள்ளது. அண்மைக் காலமாக தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடுகள் தொ…

  6. பருவநிலை மாற்றத்தால் மாற்றுத் திறனாளிகள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கரீன் எல்ஹாரர், இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சர் கடந்த வாரம் கிளாஸ்கோவில் தொடங்கிய பருவநிலை மாற்ற மாநாட்டில் இஸ்ரேலிய அமைச்சர் ஒருவரால் பங்கேற்க முடியவில்லை. ஏனெனில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் வகையில் மாநாடு நடைபெறும் அரங்கங்கள் அமைக்கப்படவில்லை. இது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியானது. மாற்றுத் திறனாளிகள் பலரும் பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கான ஒரு உதாரணமாக இதை எடுத்துக் கொள்ளலாம…

  7. இன-மத தேசியவாதத்திடம் சரண் புகுதல் என்.கே. அஷோக்பரன் http://www.twitter.com/nkashokbharan அயோக்கியனின் கடைசி சரணாலயம் ‘தேசப்பற்று’ என்று சாமுவேல் ஜோன்சன் குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், ‘தேசப்பற்று’ என்பது, இன-மத தேசியவாதத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டு உள்ளமையால், ‘இன-மத தேசியவாதமே’ அயோக்கியர்களின் கடைசி சரணாலயமாக இருப்பதை அவதானிக்கலாம். அரசியலில் மற்ற எல்லா அஸ்திரங்களும் பயன்தராத போது, இலங்கை அரசியல்வாதிகள் கையில் எடுக்கிற அஸ்திரம், ‘இன-மத தேசியவாதம்’ ஆகும். ‘குழு’ அல்லது ‘குழு இணைப்பு’ என்று புரிந்து கொள்ளப்படும் குழுநிலைவாதம் (tribalism), மனித உளவியலில் ஆழ…

    • 0 replies
    • 347 views
  8. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சிங்களக் குடியேற்றம் — 13 ஐ ஆரம்பப் புள்ளியாகக்கூட ஏற்க முடியாதென்பதற்கு 2009 இன் பின்னர் அவசர அவசரமாகவும் நன்கு திட்டமிடப்பட்டும் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் சிறந்த உதாரணம். இதனை அமெரிக்க இந்திய அரசுகளுக்குத் தமிழ் சட்டமேதைகளினால் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்லியிருந்தாலும் கிடைத்த பதில்தான் என்ன? சிங்களக் குடியேற்றங்கள், நில அபகரிப்புகள் பற்றி ஜெனீவா அறிக்கையில் ஒரு வரர்த்தையேனும் வெளிவரவில்யே– -அ.நிக்ஸன்- வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சி அரசினால் அபகரிக்கப்பட்ட காணிகள் பற்றிய விபரங்கள் உங்களிடம் இருக்…

  9. இனப்படுகொலை புரிய வாளேந்துவோரும் பாடுவோரும் தாளம் போடுவோரும் ஒரே வகையான குற்றவாளிகளே சிங்கள அரசினால் தமிழினத்தின் மீது புரியப்பட்ட அனைத்துவகையான படுகொலைகளையும் மறைக்கச் சிங்கள கலைஞர்கள் முற்படுகின்றனர். கலை, இலக்கியங்களைப் பயன்படுத்தி தமிழினத்தைச் சிதைக்க அனைத்து வகையான முயற்சிகளையும் சிங்கள தேசம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்திய-இலங்கை உறவில் இருக்கின்ற கரடுமுரடான கொதிநிலையைச் சமன்செய்யவும், தமிழர்களின் சர்வதேசம் நோக்கிய போராட்டங்களைத் திசை திருப்பவும், மடைமாற்றுவதற்கும் யோகானி என்கின்ற புதிய இளம் பைலா (குத்தாட்ட) பாடகி ஒருவரைச் சிங்கள பௌத்த பேரினவாதம் களத்தில் இறக்கிவிட்டு இருக்கிறது என கட்டுரையாளர் திபாகரன் தெரிவித்துள்ளார். அவர் தனது கட்டுரையில் மேலும…

    • 0 replies
    • 266 views
  10. தமிழ்க் கட்சிகளின் யாழ். சந்திப்பு: தமிழர்களை 13க்குள் சுருக்கும் முயற்சியா? புருஜோத்தமன் தங்கமயில் அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் சந்திப்பொன்று, தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (02), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் பங்குபற்றின. அத்தோடு, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸும் பங்கெடுத்தன. நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபைத் தேர்தல் அடுத்த …

  11. தேசத்தின் இரு கண்களாக ஊழலும் இனவாதமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையர்களுக்கு ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற சொற்றொடர் புதிதல்ல. குறிப்பாகத் தேர்தல் காலங்களில் -உச்சரிக்கப்படும் சொற்றொடர் இது. ஆனால், ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற அந்த எதிர்காலத்தின் சாயலைக்கூட, சமானிய இலங்கையர் அனுபவிக்கவில்லை என்பது வருத்தம் தோய்ந்த உண்மை. கொவிட்19 பெருந்தொற்று தொடக்கிவைத்த நெருக்கடியை, அளவில்லாத ஊழலும் வளக் கொள்ளையும் அதிகாரத் துஷ்பிரயோகமும், இன்னொரு கட்டத்துக்கு நகர்த்தியுள்ளன. ஊழலும் இனவாதமும் வெளிப்படையாகவே செயற்படுகின்ற ஒரு சூழலை, அன்றாட இலங்கையர்களால் காண முடிகிறது. ஜனாதிபதி விதந்துரைத்த ‘ஒழுக்கமான சமூகத்தின்’ இலட்சணத்தை, அன்றாடம் காணக் கிடைக்கிறது. பொதுமக்க…

  12. இன்றைய நெருக்கடிகளுக்கு அரசாங்கம்தான் காரணமா? -லக்ஸ்மன் நாட்டில், ‘இன்று போல் நாளையில்லை’ என்பதால், நள்ளிரவில் எந்தப்பொருளுக்கு விலையேறும் என்று தெரிந்து கொள்வதிலேலேயே மக்கள் அக்கறை கொள்ளவேண்டிய நிலைமை உருவாகிவிட்டது. தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டால் எதற்கும் விலையை ஏற்றிவிடலாம் என்ற நிலை, கடந்த சில மாதங்கள் நிலவிய பால்மா தட்டுப்பாட்டினால் உருவானது. இது ஏனைய பொருள்களுக்கும் தொடர்கிறது. கறுப்புச் சந்தை நிலைமையிலேயே பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கேட்கின்ற பொருளுக்கு வியாபாரி தீர்மானிப்பதே விலையாக இருக்கிறது. அந்தவிலைக்குப் பொருளைப் பெற நாம் தயாரில்லையென்றால், பொருளில்லை. தட்டுப்பாடும் விலை அதிகரிப்புமே வாழ்வாதாரத்தின் நிரந்தரமாகிவிட்டன. அரசாங்கம்,…

  13. மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிடும் ஒரு காலம் வருமா? - நிலாந்தன். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்னிலங்கை மைய ஊடகங்கள் ஒளிபரப்பிய காணொளிகளில் ஒன்றில் ஒரு பண்டிகை நாளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வரிசையாக நிற்கும் மக்களை காட்டின. வேறொரு காணொளியில் மண்ணெண்ணைக்காக காத்து நிற்கும் நீண்ட வரிசை காட்டப்படுகிறது. மூன்றாவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன் கடவுச்சீட்டை பெறுவதற்காக காத்திருக்கும் நீண்ட வரிசை. இவ்வாறு வரிசையில் நிற்கும் மக்களை ஊடகங்கள் பேட்டி காண்கின்றன. அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தொகுத்துப் பார்த்தால் சுமார் இருபது மாதங்களுக்கு முன்பு ஒரு இரும்பு மனிதன் வேண்டுமென்று கூறி அவர்கள் வழங்கிய மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதன் மகிமையை இழந்து விட்ட…

  14. தமிழர்கள் ஒரு தேசமா இருக்கின்றார்களா? - யதீந்திரா தமிழ் சூழலில் கருத்துருவாக்கங்களில் ஈடுபடும் சிலர் தேசம் என்னும் சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதுண்டு. தமிழர்கள் ஒரு தேசமாக சிந்திக்க வேண்டும் – அப்படி சிந்தித்தால்தான், இன்றைய சவால்களை வெற்றிகொள்ள முடியுமென்று சொல்வோர் உண்டு. இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகின்றது. அதாவது, தமிழர் தேசம் தொடர்பில் பேசுபவர்கள் – சுயநிர்ணய உரிமையை வெற்றிகொள்வதற்கான ஒரு வழிமுறையாகவே தேசம் என்னும் சொல்லை பயன்படுத்துகின்றனர். தமிழர் தாயகமாக அடையாளப்படுத்தப்படும் வடகிழக்கை தங்களின் வாழ்விடமாக கொண்டிருக்கும், தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்பதுதான் ‘தமிழர் தேசம’ என்பதால் உணர்த்தப்படுகின்றது. இந்த பின்புலத்திலிருந்துதான் ‘…

  15. அமெரிக்க, இந்திய நலன்கள்- 13 ஐ கோரும் தமிழ்க் கட்சிகள் - 13 ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கைக்காகவே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி உருவாக்கப்பட்டதோ என்ற சந்தேகம்கூட எழுகின்றன. அத்துடன் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து இலங்கை விவகாரத்தை முழுமையாக வெளியில் அகற்றும் ஏற்பாடாகவுமே 13 பற்றிய கோரிக்கையும் கட்சிகளின் கலந்துரையாடலும் என்ற கருத்துக்களும் தற்போது வலுவடைந்து வருகின்றன– -அ.நிக்ஸன்- பலருடைய எதிர்ப்புகள், விமர்சனங்களுக்கு மத்தியில், அதுவும் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துமாறு…

  16. ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ : இப்போது ஏன்? November 2, 2021 — வி. சிவலிங்கம் — ராணுவ ஆட்சியை முழுமையாக்கும் சூழ்ச்சியா? சிங்கள பௌத்த தீவிரவாதியின் செயலணி தலைமை உணர்த்துவது என்ன? இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியொன்றினை உருவாக்கும் மறைமுக நோக்கில் தற்போது ‘ஒரு நாடு ஒரு சட்டம்’என்பதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதற்காக ‘பொதுபல சேன’ என்ற இனவாத அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 13 உறுப்பினர்களைக் கொண்ட இக் குழுவில் தமிழர்கள் எவரும் இடம் பெறவில்லை. இனவாதியான தேரர் தலைமையில் இயங்கப் போகும் இக் குழுவில் தமிழர்கள் யாராவது செயற்பட விரும்புவார்களா? என்பது ஆரம்ப நியமனங்களிலேயே புலப்பட்டுள்ளது…

  17. இரு மொழி ஒரு நாடு ஒரு மொழி இரண்டு தேசம் -கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா இலங்கையில் ஏற்பட்டு வரும் பெரும் பொருளாதார சரிவுகளுக்கு பின் ராஜபக்சர்களின் மக்கள் செல்வாக்கு பெரும் சரிவை ஏற்பட்ட பின் மீண்டும் பேரினவாத பெரும் அரசியலை முன் எடுத்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று அரசியல் அமைப்பொன்றை உருவாக்கும் வகையில் ஏனைய இந்த நாட்டில் வாழும் தேசிய இனங்களை இரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்கி மீண்டும் மீண்டும் அமைதியும் ஐக்கியமும் சமாதானமும் இல்லாததோர் தேசமாகவே இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்கவிருக்கிறது. ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லுவதன் மூலம் இந்த நாட்டில் வாழும் ஏனைய இனங்களுக்கு நீங்கள் எல்லாம் மரத்தில் படரும் கொடிகள் மாத்திரமே என்று அந்த மக்களின் கன்னத்தில் அடித்து…

  18. “ஒரே நாடு ஒரே சட்டம்” என்கிற வேலைத்திட்டம் இப்போது நேரடியாக சட்டமாக்கப்படப்போவதை அரசு அறிவித்திருக்கிறது. அதுவும் வர்த்தமானி அறிவித்தலின் மூலம்; அதுவும் அது ஞானசார தேரர் தலைமையில். இலங்கையில் இந்த வார உச்ச பேசுபொருள் அது தான். அப்படி உச்ச பேசுபொருளாவது தான் அரசின் உடனடி இலக்கும். அந்த இலக்கு வெற்றியளித்திருக்கிறது. சகல ஊடகங்களின் கவனமும் இதை நோக்கி குவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் விவசாயிகளின் பிரச்சினை, விவசாய உர ஊழல், ஆசிரியர்களின் போராட்டம், விலைவாசிக்கு எதிரான போராட்டங்கள், பல அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமை போன்ற பிரதான பேசுபொருள் அத்தனையையும் இந்த “ஒரே நாடு, ஒரே சட்டம்” சர்ச்சையின் மூலம் அடுத்த நிலைக்கு தள்ள முடியும் என்…

  19. 13 பற்றி சிங்களக் கட்சிகளின் மனட்சாட்சி பேசுமா? –இந்திய- இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக அப்போது கொழும்பில் இருந்த முன்னாள் இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிற் 1998 ஆம் ஆண்டு எழுதிய அசெய்மன்ற் கொழும்பு (Assignment Colombo) என்ற நூலில், சிங்கள மக்களைக் கோவப்படுத்தக்கூடாது என்பதற்காகவே வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் எனக் கூறப்படவில்லை என்கிறார்– -அ.நிக்ஸன்- இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் வடக்குக் கிழக்கு தமிழ்பேசும் மக்களின் மரபுவழித் தாயகம் (Traditional homeland) என்று கூறப்படவில்லை. மாறாக வரலாற்று வாழ்விடங்கள் (Historical habitations) என்றே கூறப்பட்டிருக்கிறது. இந்திய இலங்கை ஒப்ப…

  20. ஒரே நாடு ஒரே சட்டம் அதே தேரர் ? நிலாந்தன். “ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்தமை என்பது என்னைப் பொருத்தவரை பொருத்தமானதே. அது அபகீர்த்திக்குரிய ஒரு மாணவனை வகுப்பின் மாணவத் தலைவராக நியமித்தமை போன்றது” இவ்வாறு ருவிற்றரில் பதிவிட்டுள்ளார் நிமால் பெரேரா என்பவர்.ஒரே நாடு ஒரே சட்டம் என்பது ஒரு புதிய கோஷம் அல்ல. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோத்தாபய ராஜபக்ச அதை முன்வைத்தார். ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப்பின் இந்த கோஷத்துக்கு அழுத்தமான காரணங்கள் இருந்தன. இப்பொழுது அதற்கு ஒரு செயலணியை ஜனாதிபதி உருவாக்கி இருக்கிறார். 13 அங்கத்தவர்களை கொண்ட அந்த செயலணிக்கு சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இச்செயலணியில் தமிழ் மக…

    • 1 reply
    • 343 views
  21. தமிழ்க்கட்சிகள் இந்தியாவைநோக்கி முன்வைக்கும் ஒரு கோரிக்கை? நிலாந்தன்! October 31, 2021 வரும் செவ்வாய்க்கிழமை இரண்டாம் திகதி தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்து கட்சிகள் காலத்தில் கூடிக் கதைக்கவிருக்கின்றன. விக்னேஸ்வரனின் தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி; ஈபிஆர்எல்எப்; டெலோ; புளட் இவற்றோடு ஸ்ரீகாந்தா தலைமையிலான கட்சி ஆகிய ஐந்து கட்சிகளுமே அவ்வாறு கூடிக்கதைக்க இருக்கின்றன. இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் தமிழரசுக் கட்சி இச்சந்திப்பில் பங்குபெற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே அறியமுடிகிறது. பெரியதும் மூத்ததுமாகிய தமிழரசுக் கட்சி டெலோ இயக்கத்தின் முன்முயற்சி ஒன்றின் பின் இழுபட்டு செல்ல விரும்பவில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.