நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
பிரபாகரனும் // ரோகணவும்..! ஒரு புள்ளியில் சந்திக்காத இரு நேர்கோடுகள். (மௌன உடைவுகள் 08) November 12, 2022 — அழகு குணசீலன் — இலங்கையின் ஆயுதப்போராட்ட வரலாறு இருதுருவங்களைக் கொண்டது. ஒன்று வடதுருவம், மற்றையது தென்துருவம். எப்படி ஒன்றுக்கு ஒன்று எதிர்த்திசையில் உள்ள இத்திசைகள் இணைய முடியாதோ, அப்படியே விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனதும், ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண விஜயவீரவினதும் அரசியலும் அமைந்து இருந்தன. தமிழ்த்தேசிய விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் 2009 மே.18 /19 இல் முடிந்தது போன்று ஜே.வி.பி.யின் சிங்கள தேசியத்தை மையப்படுத்திய ஆயுதம் தாங்கிய வர்க்கப்போராட்டம் (?) ரோகணவின் மரணத்துடன் 1989 நவம்பர் 13 இல் முடிவுக்கு (?) வந்…
-
- 0 replies
- 279 views
-
-
பலஸ்தீனத்தின் கமாஸ்-இஸ்ரேல் மோதலில் உட்கிடக்கையாக மறைந்திருக்கும், உலக ஒழுங்கின் புவிசார் நகர்வுகள் Posted on October 14, 2023 by சமர்வீரன் 23 0 ஒக்ரோபர் 7 இல், கமாஸின் அதிரடித் தாக்குதலோடு இந்த மோதல் தொடங்கியது. இந்த தாக்குதலிற்கு பின்னே இருக்கும் புவிசார் நகர்வுகள் என ‘மேற்குலக ராஜதந்திர வட்டாரம்’ முன்வைப்பவை எவை?சவூதி அரேபியாவிற்கும்- இஸ்ரேலிற்கும் இடையே நடக்கவிருந்த ஒப்பந்தம்தான் இதற்கான விதை. இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் தூண்டுதலோடு நடந்து கொண்டிருந்தது.இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட 3 தரப்புகளும் தங்களது நலனை அடிப்படையாக வைத்து நகர்வுகளை செய்து கொண்டிருந்தன. ஒவ்வொரு தரப்பையும் வரிசையாக பார்ப்ப…
-
- 0 replies
- 358 views
-
-
““தேவாலயங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று வாய்மூலக்கதைகள் சென்று கொண்டிருக்கின்றன” என்ற தந்தையின் கருத்தை வைத்து குழப்ப விரும்பவில்லை ” “தேவாலயங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று வாய்மூலக்கதைகள் சென்று கொண்டிருக்கின்றன” என்ற தந்தையின் கருத்தினை வைத்து முழு நாட்டையும் குழப்புவதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்த தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, எனது மனச்சாட்சிக்கும் ஆண்டவருக்கும் உண்மை தெரியும் என்று கருதுகின்றேன். யாருக்கும் பதில் கூறாது விட்டாலும் ஆண்டவருக்கு பதில் கூறியே ஆகவேண்டும் என வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம…
-
- 0 replies
- 247 views
-
-
கண்ணுக்கு தெரியாத மகுட நுண்ணியும், கலங்கி நிற்கும் மனித மனங்களும் -விக்கிரமன் 20 Views இருபதாம் நூற்றாண்டின் பெரும் சவாலாக இன்றுவரை மனித குலத்தை கலங்க வைத்துக் கொண்டிருக்கும் மகுட நுண்ணி தொற்று நோய்-19 (கோவிட் -19), மனித ஆற்றல் மீது மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கையை ஆட்டம் காண வைத்துள்ளது என்றால் மிகையாகாது. மனித குல வரலாற்றில் பல்வேறு தொற்று நோய்கள் பல கோடி உயிரிழப்புகளை ஏற்படுத்தியமைக்கான தடயங்கள் இருந்த போதும் தற்போதைய உலகளாவிய தொற்று பற்றிய தகவல்கள் ஒப்பீட்டளவில் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு வருவதும், பகிரப்பட்டு வருவதும் நவீன தொடர்பாடல் உலகில் நோய் தொற்றை தவிர்ப்பதற்கு பதிலாக பீதியை ஏற்படுத்துவதாகவும், எதிர்மறை விளைவுகளை…
-
- 0 replies
- 299 views
-
-
இலங்கைக்கு சீனா கொடுத்த பல்லாயிரம் கோடி கடன்: ஆதிக்கம் செலுத்தவா? உதவி செய்யவா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ISHARA S.KODIKARA / GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச (வலது) உடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கையொன்றின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவொன்றின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இலங்கையின் …
-
- 0 replies
- 511 views
- 1 follower
-
-
கறுப்பாடுகள் எங்காவது தகாத செயல்களில் ஈடுபட்டால் இராணுவத்தினரையும் காவல்துறையினரையும் அழைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், மக்கள் தமது மனோநிலையை வெளிக்காட்டியுள்ளனர். அதற்கு நான் தலைவணங்குகின்றேன். ஆனால், அவர்களாகவோ, அவர்களுக்குள் இருக்கும் சில கறுப்பாடுகளோ எங்காவது தவறாக நடந்துகொள்வார்களானால் காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் அழைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். அதனால், அவர்கள் ஆளுநரிடம் கொடுத்த மனுவை மீளப் பெற்றுக்கொண்டால் மக்களை அமைதிப்படுத்தமுடியும். மக்களும…
-
- 0 replies
- 231 views
-
-
உண்மைகளைக் கண்டறியும் பணி நிமிர்த்தமாக அண்மையில், இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஜோன் லோகி அவர்களின் தலைமையில் ஒன்றுகூடலொன்று இடம்பெற்றுள்ளது. எம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன் கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினராலும் (the National Council of New Zealand Tamils and the Green Party)) இணைந்து நடாத்தப்பட்டது. அத்துடன் அங்கு வருகை தந்திருந்த மக்கள் கூட்டத்தினர் இர…
-
- 0 replies
- 315 views
-
-
மட்டக்களப்பு: அரசியல் இல்லாத…, அரசியல்வாதிகள்…! April 26, 2023 — அழகு குணசீலன் — இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியல் அமைப்பு ஜனநாயக விழுமியங்களைக் கொண்டது. இந்த ஜனநாயக விழுமியங்களை கொழும்பு பெரும்பான்மை சிங்கள அரசு கடைப்பிடிக்கின்றதா? இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால் இந்த ஜனநாயக உரிமையை கோரி நிற்கின்ற சிறுபான்மையினர் அவற்றைக் கைக்கொள்ள வேண்டும். தமிழர் அரசியல் எதைக் கோருகிறதோ அதைக் கடைப்பிடிக்கின்றதா? ஜனநாயகத்திற்கும் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கின்றதா? முன் மாதிரியான அரசியலைச் செய்கின்றதா? என்பதே இங்கு எழுப்பப்படுகின்ற கேள்வி. மட்டக்களப்பு அரசியல் அண்மைக் காலமாக ஒரு வாய்வன் முறை – பேச்சு வன்முறை அரசியலாக மாறி வருகிறது. போகப் போக…
-
- 0 replies
- 474 views
-
-
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான நீதியை சர்வதேச சமூகத்தின் வாயிலாகப் பெற்றுவிட முடியும் - என்று உறுதியாகநம்பியவர்கள் இரண்டுபேர். ஒருவர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளை. இன்னொருவர், கல்லம் மேக்ரே. நடந்த இனப்படுகொலையை 'சேனல் 4' மூலம் அம்பலப்படுத்திய 'நோ ஃபயர் சோன்' ஆவணப்படத்தின் இயக்குநர் மேக்ரே. பிள்ளை மற்றும் மேக்ரேவின் முயற்சிகளைப் பார்த்து வியர்த்துக் கொட்டியது இலங்கைக்கு! தமிழருக்கு எதிராக தமிழரையே பயன்படுத்தும் பௌத்த சிங்களக் கயமைத்தனம் மீண்டும் அரங்கேற்றப்பட்டது. இந்த இனத்தில் பண்டார வன்னியனுக்குத் தான் பஞ்சம். காக்கை வன்னியன்களுக்கு என்ன குறை! காக்கைகள் இப்படித்தான் பேசத்தொடங்கின..... 'இனப்படுகொலை என்று சொன்னால் சர்…
-
- 0 replies
- 619 views
-
-
கோத்தபாய கடவுச்சீட்டைப் பெற்றமை தொடர்பில் கிளம்பும் பல கேள்விகள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ அவரது இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து தவிர்க்கப்பட்ட கடவுச்சீட்டொன்றை கடந்த மே மாதம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து எவ்வாறு பெற்றார் என்பது தொடர்பில் கேள்விகள் கிளப்பப்பட்டிருக்கின்றன. தான் இலங்கைச் சட்டத்தின் கீழ் இப்போது ஒரு இரட்டைப் பிரஜையல்ல என்பதற்கு இந்தக் கடவுச்சீட்டு சான்று என்று கடந்தவாரம் ராஜபக் ஷ செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஆனால் இரட்டைக் குடியுரிமையுள்ள நபர் கள் வழமையாக இலங்கைக் குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கு விரும்பினால் குடியுரிமைச் சட்…
-
- 0 replies
- 900 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சிரியா குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகள், தனக்கு தானே அவர் உருவாக்கிக் கொண்ட பேரழிவாக ஆகலாம் - 2020 தேர்தலில் அவருக்கு தோல்வியை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் உதவிச் செயலர் பி.ஜே. கிரவ்லே. சிரியா தொடர்பான டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய முடிவுகளை உள்ளடக்கிய ஷரத்து எதுவும், அவருடைய குற்றச் செயல்கள் மற்றும் தவறான செயல்பாடுகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள பதவி நீக்கத் தீர்மானத்தில் இருக்காது. ஆனால் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானிடம் சரணாகதி அடைவதைப் போன்ற அவருடைய நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள், டிரம்பின் அதிபர் பதவியின் முடிவுக்கான தொடக்கமாக இரு…
-
- 0 replies
- 396 views
-
-
20 பொதுமக்களைப் பலி கொண்டு தொடங்கிய சம்பூர் சமர்! கிழக்கில் யுத்தம் வெடித்த நாட்கள்!! ஓகஸ்ட் 28. 2016, கிழக்கில் யுத்தம் மூண்ட நாட்கள். 20 பொதுமக்களை பலிகொண்டபடி சம்பூர் மீது இலங்கை அரச படைகள் தாக்குதல்களை தொடங்கின. விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் உள்ள சம்பூரைக் கைப்பற்றும் நோக்கில் முப்படைகளுடன் மும்முனையில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை இலங்கை இராணுவத்தினர் தொடங்கினர். ஆட்டிலெறி, பீரங்கிக்குண்டுகள், பல்குழல் ரொக்கட் குண்டுகள், மோட்டர் எறிகணைகளை செறிவாக வீசிக்கொண்டு கிபீர்-மிக் விமானங்கள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவாறு ஓகஸ்ட் 28 அன்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நகர்வு முயற்சியினை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டனர். டாங்கி…
-
- 0 replies
- 239 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
http://tamilworldtoday.com/archives/5559
-
- 0 replies
- 525 views
-
-
சரோஜ் பத்திரன பிபிசி சிங்கள மொழி சேவை தான் அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதான உறுதி மொழியை வழங்கியிருந்தார். அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடமும் 2 மாதங்களும் கடந்த நிலையில், கடந்த 4ம் தேதி இலங்கை சுதந்திர தின நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் அதன் ஒத்துழைப்பு வழங்கியவர்களை சட்டத்திலிருந்து தப்பிச் செல்ல இடமளிக்கப் போவதில்லை என கூறியிருந்தார். அத்துடன், மத்திய வங்கி முறிகள் மோசடி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதா…
-
- 0 replies
- 703 views
-
-
எழுவர் விடுதலை : தேசிய கட்சிகளின் இருப்பு ஏன் மக்களாட்சியை சிக்கலாக்குகிறது? – ஆர். அபிலாஷ் May 25, 2021 - ஆர்.அபிலாஷ் என்னுடைய “மோடியின் எதிர்காலம்” கட்டுரையை பேஸ்புக்கில் பகிர்ந்த போது அதன் கீழ் பின்னூட்டத்தில் கோதை செங்குட்டுவேல் (Kothai Sengottuvel) ‘தேசிய கட்சிகளின் அவசியம்தான் என்ன, மாநில கட்சிகளின் கூட்டாட்சி மத்தியில் தோன்றும் நிலை ஏற்பட வேண்டும்’ என சொல்லி இருந்தார். இது என் மனத்திலும், மாநில தன்னாட்சி உரிமைகள் பற்றி சிந்திப்பவர்கள் மனத்திலும் உள்ள விருப்பமே. இன்னும் சொல்லப் போனால், இது தமிழ் தேசிய அரசியலின் கோரிக்கையே அல்ல. இதுவே உண்மையான மக்களாட்சி அமைய வேண்டும் என கனவு காண்பவர்களின் கோரிக்கை. ஏனென்றால், இப்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறையும…
-
- 0 replies
- 452 views
-
-
நான் இசைப்பிரியா ஓயாத கடலின் அலைகள் இடைவிடாது என்னுடலில் மோதியபடி மடிந்து சரிகின்ற வேளையில் ஆழமாய் வேர்ப் பரப்பி விரிந்திருக்கும் நீர்த்தாவரத்தைப் போல என்னை இழுத்துச் செல்கிறாய் என் காலடியிலிருந்து ஒழுகி வழியும் நீர்த்துளிகள் உன் அழித்தொழிப்புக்குச் சாட்சியாய் வெளியெங்கும் உருண்டு கொண்டிருக்கும். அடர்ந்த வனத்தில் தனித்துத் திரியும் மிருகத்தின் வெறிகொண்டு என்னை வல்லுறவு செய்கின்றாய் சதையை ஊடுருவிய உன்னால் என் நிலத்தின் நிணநீர் ஓடும் எலும்புகளை என்ன செய்ய இயலும்? என் மார்பகங்களை அரிந்து வீசிய உனக்கு அதன் அடியிலிருக்கும் நெருப்பின் சூடு தகிக்கவில்லையா? நீ ஏந்திய இரும்புக் கருவியும் பாய்ச்சிய உடற்குறியும் இனி எழுச்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
புதிய மீட்பர்? May 15, 2022 — கருணாகரன் — நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்களுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். ரணிலின் பதவியேற்பு அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதனை இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரும் இந்தியத் தூதரும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியத் தூதர் கோபால் பாக்லே ரணிலை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் ட்விற்றரில் உற்சாகமான முறையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கூடவே IMF வின் உதவியோடு நீண்டகால அடிப்படையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணமுடியும் என்றும் சொல்லியிருக்கிறார். ஆகவே இந்திய, அமெர…
-
- 0 replies
- 225 views
-
-
WELL DONE SUMANTHIRAN பாராட்டுகள் சுமந்திரன். - வ.ஐ.ச.ஜெயபாலன்.குற்றம் செய்த தரப்பு விசாரிக்கமுடியாது சர்வதேச விசாரணை அவசியமென சுமந்திரன் 10.1.2019 அன்று நாடாளுமன்ற உரையை ராஜதந்திர அவசியங்களை உணந்து வரவேற்கிறேன். . இன்று இலங்கை அரசின்மீது அழுத்தங்களை உருவாக்கி தாயக தமிழ்பேசும் மக்களைக் பாதுகாக்க மேற்குலகையும் இந்தியாவையும் அனுசரித்து கருமமாற்றுவதைத்தவிர வேறு மார்கங்கள் இல்லாத நிலைமை உள்ளது. இந்தவகையில் சுமந்திரனின் 10.1.2019 நாடாளுமன்றப் பேச்சு விமர்சனங்களுடன் இராஜதந்திர அடிப்படையில் வரவேற்கப்பட வேண்டியதாகும். . இலங்கையில் நிகழ்ந்த மனுக்குலத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணையும், போர்குற்றங்கள் தொடர்பான விசாரணையும் செர்பிய போர்குற்ற விசாரணை மற்று…
-
- 0 replies
- 506 views
-
-
சிங்கள பௌத்தமயமாக்கலும் யாழ் மாநகரசபையும்… December 28, 2019 யாழ்ப்பாணத்தின் மத்தியில் அனுமதி இன்றி நடைபெறுகின்ற சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்பாக ஆராய்வதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் தொடராமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்குமென மாநகர கட்டளைச் சட்டத்தின் பிரகோரகாம் விசேட பொதுக்கூட்டத்தை கூட்டுமாறு கேட்டுக் கொண்டிருந்தோம். அந்தவகையில் யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக சிறைச்சாலைகள் நிர்வாகம் பௌத்த சிங்கள மயமாக்கலைப் பிரதிபலிக்கின்ற சின்னங்கள் மற்றும் கட்டுமானங்களை சட்ட விதிமுறைகளுக்கு முரணான விதத்தில் தன்னிச்சையாக அமைத்து வருகின்றது. …
-
- 0 replies
- 682 views
-
-
ஈ பீ டி பீ எம் பி அற்புதனின் நந்திக் கதையும் “பண்டாரநாயக்க” தமிழ்ப் பலகையும்:- நியூசிலாந்தில் இருந்து வரதராஜன்… 1998 ஆம் ஆண்டு . பாராளுமனறத்தில் ஒருநாள். ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் தமிழ் நிகழ்ச்சி அதிகாரிகள் -உடனான தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒன்று ஊடக அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது. இது தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. நான் ஐ ரி என் சார்பில் அதன் தமிழ் நிகழ்ச்சி அதிகாரி என்ற வகையில் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திற்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தா , ரமேஷ் அற்புதராஜா , ரமேஷின் க…
-
- 0 replies
- 267 views
-
-
கிழக்கில் TMVP இருக்கும் வரை ஜனநாயகத்தை சல்லடை போட்டாலும் கண்டுபிடிக்க முடியாது. வாழைச்சேனையில் நடந்தது தான் என்ன? December 12, 20203:51 pm வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் யசோதரன், தலைமை தவிசாளரான சோபா ஜெயரஞ்சித்தை கட்டிப் பிடித்ததாக பேசப்பட்ட விடையத்தின் உண்மை என்ன எதற்காக அந்த நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதை பற்றியே இந்த பதிவு விழித்து நிற்க போகிறது. கோறளைப்பற்று பி.சபை 23 உறுப்பினர்களைக் கொண்ட சபை. இந்த சபையை கடந்த உள்ளூராட்சி தேர்தலில் த.தே.கூ.கட்சி-6, த.ம.வி.பு-6, ஸ்ரீமுக-3, ஐ.தே.கட்சி-3, ஸ்ரீலங்கா சு.கட்சி-2, த.ஐ.ம.கட்சி-1, கொடி சின்னம்-1 ஏனைய கட்சி-1 மொத்தமா 23 ஆசனங்கள் பெறப்பட்ட நிலையில், த.ம.வி.பு.கட்சியுடன் கூட்டுச் சே…
-
- 0 replies
- 356 views
-
-
வன்னி: தெருவில் காயும் நெல் February 15, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — பரந்தனிலிருந்து பூநகரிக்குச் செல்லும் வழியில் தினமும் பார்க்கிறேன், வீதி நெடுகவும் ஓரத்தில் நெல்லைக் காயப்போட்டிருக்கிறார்கள் விவசாயிகள். இது இந்த வீதியில் மட்டும்தான் நடக்கிறது என்றில்லை. வன்னியிலுள்ள பெரிய காப்பெற் வீதிகளெங்கும் நடக்கிறது. இந்த ஆண்டுதான் இது ஏதோ புதிதாக நடக்கிறது என்றுமில்லை. ஒவ்வொரு போகத்துக்கும் இதுதான் கதை. காரணம், நெல்லைக் காய வைப்பதற்கான களமேடு இல்லை என்பதே. அங்கொன்று இங்கொன்று எனச் சில களமேடுகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அந்தக் களங்களில் ஒரு நாளைக்கு ஒரு விவசாயியின் நெல்லைப் போட்டு எடுக்கவே போதாது. அதுவும் இவை 2015 க்கு முன்பு நிர்மாணிக்கப்…
-
- 0 replies
- 605 views
-
-
ஆழி செந்தில்நாதன் மொழியுரிமை செயற்பாட்டாளர் ஸ்டாலின்கிராடாக மாறிய சென்னையிலும் வாட்டர்லூவாக மாறிய கொல்கத்தாவிலும் நேற்று விடப்பட்ட பெருமூச்சு, மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் பல எதிர்க்கட்சிகளுக்கு ஆக்சிஜனாக உருமாறியிருக்கிறது. அநேகமாக இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் பிழைத்துக்கொள்ளும்போலிருக்கிறது! 2024 இல் நடைபெறவுள்ள அடுத்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் என்பது ஒரு இறுதிப் போட்டி என்றால், இப்போது நடந்து முடிந்திருப்பது கால் இறுதிப் போட்டி. இடையில் 2022 இலும் 2023லும் வேறுசில போட்டிகளும் பிறகு இந்தி மாநிலங்களில் அரை இறுதிப் போட்டியும் வரவுள்ளன. இந்த கால் இறுதிப் போட்டியில் பா.ஜ.கவின் எதிர்ப்பு அணி தீர்க்கமான முறையில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்…
-
- 0 replies
- 673 views
-
-
ஈழத்து மக்கள் தொடக்கத்திலிருந்தே மீண்டும் தொடங்க வேண்டியிருக்கிறது – தோழர் பாஸ்கர் 18 Views முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தோழர் பாஸ்கர் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் கேள்வி – போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவு கூரப்படும் இனப் படுகொலை நாளில் தமிழ் மக்கள் மற்றும் உலகத்தவர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்? போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தாலும், அதில் உயிர் நீத்தாருக்கு நினைவு கூருவதற்கு உரிமையே இல்லாத ஒரு சூழலே நிலவுகிறது. வடக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் சென்ற புதன் அன்று புதிய நினைவுக் கல் வைக்கப்படும் போதே இராணுவமும் போலீசாரும் எதிர்த்திருக்கிறனர். பின்…
-
- 0 replies
- 378 views
-