நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் பாதுகாப்பு மா நாட்டில் அனைத்துலக தமிழீழ மக்களவை சார்பில் திருசோதி அவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார் அனைத்துலக மக்கள் பேரவை கனடாதொடக்கம் நியூசிலாந்து வரை இருக்கும் அத்தனை நாடுகளிலும் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்டதுதான் அனைத்துலக தமிழ் மக்கள் பேரவை. முள்ளிவாய்க்கால் போரிற்கு பின்னர் தமிழ்மக்களின் அரசியல் தேவை கருதி புலம் பெயர்நாடுகளில் புலம்பெயர் அரசியல் மன்றங்களில் தமிழர் பிரச்சனையினை தமிழர்களின் தீர்வினை எடுத்து செல்வதற்காக உருவாக்கப்பட்ட அனைதுலக அமைப்புத்தான் அனைத்துலக தமிழீழ மக்கள் பேரவை. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை இட்டு பெருமைப்படுகின்றோம் தமிழர்கள் ஆகிய நாம் இன்றுவரை விடுதலை அடையாத இனமாக இருக்கின்றோம் இதனை புரிந்து…
-
- 0 replies
- 350 views
-
-
காணாமலாக்கப்பட்டோரைத் தேடுதல்: தொடரும் துயரின் ஒரு சாட்சி பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கு உபயோகிக்கப்பட்டு வந்ததும், அண்மைக் காலம் வரை கொழும்புப் பகுதியில் ஒரு பெரும் அழகான காலனித்துவக் காலத்துக் கட்டடத்தில் இயங்கி வந்த காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் (Office Of Missing Persons) அதன் முக்கியத்துவத்தை இழந்து, தற்போது கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் ஒரு சிறிய அலுவலகத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. முன்னர் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஒரு பகுதியாக இந்த அலுவலகம் இருந்தது. அந்த அமைச்சு இப்போது இல்லை. இந்த மாதத்தின் பொதுத் தேர்தலின் பின்னர், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் அமைசர் அலி சப்ரியின் கீழான ந…
-
- 0 replies
- 290 views
-
-
தமிழனாய் இருப்பதா அல்லது மனிதனாய் இருப்பதா ? "இந்தியனாய்" என்கிற கேள்வி இங்கு தேவையற்றது. "நான் எந்தளவுக்கு உலகனோ, எந்தளவுக்கு ஆசியனோ, எந்தளவுக்கு இந்தியனோ அதைவிடக் கூடுதலாய் தமிழன்" என்று பாவேந்தரின் மாணாக்கர் ஈரோடு தமிழன்பன் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த கூடுதலான தமிழர்களில் ஒருவனாய் என்னை இணைத்துக்கொள்ளும் வேளையில் சிலவற்றை முன்வைக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. தமிழக அரசியலில் இதுவரையில் கலைஞரின் நிலைப்பாட்டினையும் அவரது பல்வேறு செயல்களுக்கும் ஆதரவாய் எழுதியும் பேசியும் வந்த ( சமயங்களில் "கொட்டை தாங்கியும்" ) என் போன்ற கூடுதல் தமிழர்கள் இன்று கருணாநிதியின் அரசியலுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய காலமிது. "நான் நினைத்தால் என்றோ பிரதமராயிருக்…
-
- 0 replies
- 614 views
-
-
மாநரகரசபையும் பரிஸ் 10 பகுதியின் வர்த்தகர்களும் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் பரிஸ் 10 மாநகரசபையிடம் வர்த்தகர்கள் தமது வர்த்க நிலையங்களின் பாதுகாப்புப் பற்றிய அச்சத்தினை வெளிப்படுத்தி அதற்கான பொறுப்பை மாநகரசபையும் காவற்துறையினரும் ஏற்றுக்கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார்கள். அதற்குரிய நடவடிக்கைகளைத் தாம் எடுப்பதாக உறுதி கூறிய மாநகரசபை முதல்வர் வர்த்கர்கள் சட்ட ஓழுங்குகளிற்கு அமைய தமது நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பாரிய சட்ட விதி மீறல்களைப் பலர் செய்வதாகவும் அவை உடனடியாக ஒழுங்கிற்குள் கொண்டு வரப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்தச் சட்டபூர்வமான நடவடிக்கைகளைப் பரிஸ் 10 இன் வர்த்கர்களிடம் கேட்டுக் கொண்டாலும் அது அனைத்துப் பகுதி வர்த்கர்…
-
- 0 replies
- 629 views
-
-
சர்வதேசங்களின் பிராந்திய ஆதிக்கப்போட்டியை தன்னுடைய நலன்களுக்குச் சார்பாக திசை திருப்பியுள்ள ராஜபக்ஷ. இலங்கையில் சீனாவின் கால்பதிப்பை உலக வல்லரசுகளுடன் இந்தியாவும் விரும்பவில்லை. அனால் புலிகள் ஒரு அங்கீகரிக்கப்படாத அமைப்பு என்பதாலும் அவர்களது போர் தந்திரோபாயச் செயற்பாடுகளும், அத்துடன் யாருடைய உதவியுமின்றித்தனித்து ஒரு சமுதாயத்தால் பலமாகக்கட்டி எழுப்பப்பட்ட ஒரு அமைப்பு என்பதாலும், சர்வதேசம் அவர்களை விரும்பவில்லை. புலிகளின் போர்ச்செயற்பாடுகளுக்கு ஈடுகொடுக்கமுடியாத உலகம் இவர்களை அழிப்பதென ஒருமனதாக முடிவெடுத்துத்தான் நோhர்வேயை மத்தியஸ்தமாக வைத்து அவர்களுக்குள் நுழைந்து வேவுபார்த்து உலகிலேயே தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்கி கொடூரமான முறையில் உலகப்போர் விதிகளையும் மீ…
-
- 0 replies
- 607 views
-
-
இலங்கையில், தொடர்ந்தும் நீடிக்கும் ‘வரிசை யுகம்’ – அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்? -யே.பெனிற்லஸ்- இலங்கைத் தீவின் அத்தியாவசியத் தேவைகளுக்கான நெருக்கடிகள் மேலும் மேலும் தீவிரமடைந்து வருகின்றன. புதிய அரசாங்கம் பதவியேற்றாலும் ‘வரிசை யுகம்’ இன்னமும் நீடிப்பதாகவே உள்ளது. போராட்டங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மக்களின் கோரிக்கைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அதற்கான சக்தியும் இலங்கையிடத்தில் தற்போதைக்கு இல்லை. இலங்கையில் உள்ள அரச ஊழியர்களுக்கு கூட சம்பளம் வழங்குவதற்கு முடியாது தற்போது பணத்தாள்களை அச்சிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த மே மாத இறுதியில் கூட பணம் அச்சிட்டே அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படவுள…
-
- 0 replies
- 168 views
-
-
'யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள (NAZI) நாசிக்களும்!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- இருபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும்படியான கோரச்செயல் ஒன்றை, அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்குச் செய்தது. 1981 ஆம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில், தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. அன்று 97,000-க்கும் மேற்பட்ட நூல்களும், கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக்கு அடிப்படையாக அ…
-
- 0 replies
- 990 views
-
-
பிரித்தானியாவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த நிலையில், பல்லின மக்களும் ஆர்வமாகக் கலந்து கொண்ட நிலையில் சிங்களத்தின் தமிழர்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக பல கோரிக்கைகளை முன்வைத்து மனித நேயன் சிவந்தன் தனது உணவு மறுப்புப் போராட்டத்தை 22 நாட்களாக தொடர்ந்து முடித்துள்ளார். இப்போராட்டம் இன்று சர்வதேச மக்களை ஈர்த்துள்ளது. அவர்கள் இப்போராட்டத்தின் நோக்கம் பற்றியும் சிங்களத்தினால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் சிவந்தனின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் அழித்திருந்தன. இந்தநிலையிலும் சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு ஓய்ந்தபாடில்லை. ஐக்கிய நாடுகள் சபையினால் சிறீலங்க…
-
- 0 replies
- 432 views
-
-
சகலதும் பூரணமாக முடிந்தது என்று போர் வெற்றியக் கொண்டாடியவர்களைத் திண்டாட வைக்கும் சரத் பொன்சோகா நாளுக்கு நாள் புதுப்புதுச் செய்திகள் அவிட்டுவிட்ட சாக்கின் நெல்லிக்காயாக உறுண்டு கொண்டிருக்கிறது. உலகரங்கில் அரங்கேறிய சர்ச்சைகள்தான் அதிகம் அதிசயமில்லை.”யேசுநாதர் இறந்து மூன்றாம்நாள் உயிர்த்தார். வேற்று மதத்தவரிடம் இதுபற்றிய நம்பிக்கை இல்லை. உலகத்தை உலுக்கிய சர்வாதிகாரி கிட்லர் எப்படி மடிந்தார் எங்கு போனார் என்பது விபரமின்றி வியப்பானதாகவே இன்றுவரை கிடந்தடிக்கிறது. ஏன் இந்திய இராணுவத்தின் தளபதி சுபாஷ் சந்திரபோஸ் எப்படி மடிந்தார், எங்கு போனார் இதுபோன்ற சர்ச்சைகள் மத்தியில் புலிகளின் தலைவர் 2009களின் முன்னதாக எத்தனை முறை இறந்தார், உயிர்த்தார் என்பதை எந்த வட…
-
- 0 replies
- 329 views
-
-
வெள்ளத்தில் மூழ்கும் யாழ்ப்பாணமும் அதன் பின்னணிகளும் – ந.லோகதயாளன். December 13, 2020 யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ள வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அல்லது தடைகளின் காரணமாகத்தான் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது என்பதனில் உண்மை நிலமை என்ன என வினாவப்படுகின்றது. யாழ்ப்பாண நகரின் மத்தியிலே கானப்படும் வாய்க்கால்களில் இரு இடங்கள் பிரபல 5 நட்சத்திர விடுதிகளின் நடுவே அகப்பட்டுள்ளன. அவ்வாறு அகப்பட்டிருந்தாலும் அதனூடாக நீர் ஓட்டம் எந்த வகையிலும் தடைப்படவில்லை என்பதனை பெரிய மழையின் பின்பும் மாநகர சபை உறுதிப் படுத்துகின்றது. இதேநேரம் ஓர் நகைக் கடையின் அடுக்கு மாடி, கலியாண மண்டபத்துடன் கூடியதாக காணப்படுகின்றது. அவர்களும் ஓர் ப…
-
- 0 replies
- 361 views
-
-
25 ஆண்டுகளிற்கு முன்னர் மிகவும் கோரமான தொடருந்து விபத்து ஒன்று 1988ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி Gare de Lyon தொடருந்து நிலையத்தில் 56 பேரின் உயிழப்புகளுடன் தன்னைப் பதிவு செய்து கொண்டது. தொடர்ந்து சிறு சிறு காயங்களுடனும் இழப்புக்களுடனும் பிரான்சின் தொடருந்துச் சேவை தன்னைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டே இருந்தது. ஆனால் கடந்த 12ம் திகதி ஒரு விபத்து பிரான்சையே உலுக்கி எடுத்தது. ஆறு உயிர்களைப் பலி கொண்ட இந்த விபத்து பலரைப் படுகாயங்களுக்கு உள்ளாக்கியது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 17மணி 14 நிமிடத்திற்கு Brétigny-sur-Orge (Essonne) தொடருந்து நிலையத்தை நெருங்கிய பரிசிலிருந்து லிமோஜ் நோக்கிச் சென்று கொண்டிருந்த நகரங்களுக்கிடையிலான தொடருந்து இலக்கம் 3657 கொடூரமான விபத்திற்கு உள்ளான…
-
- 0 replies
- 360 views
-
-
சுயாதீனமான நீதித்துறை ; ஜனநாயகத்துக்கான தஞ்சம் அமீர் அலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாலும் அவரது கூட்டத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சதிமுயற்சியினால் அச்சுறுத்தலுக்குள்ளான ஜனநாயகம் அழிவின் விளிம்பில் இருந்து ஒரு சில வாரங்களுக்கு முன்னர்தான் காப்பாற்றப்பட்டது. அமைதியாக ஆனால் தீர்க்கமான முறையில் பொதுமக்களிடமிருந்து வெளிப்பட்ட எதிர்ப்பும் நீதித்துறையின் குறிப்பாக பெருமதிப்புக்குரிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சுயாதீனமான செயற்பாடுகளும் சேர்ந்தே அவ்வாறு ஜனநாயகத்தைப் பாதுகாத்தன. நீதித்துறையின் மீதான ஜனாதிபதியின் வெறுப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தரங்குறைத்து அவர் வெளியிட்ட கருத்தின் மூலமாக வெளிவெளியாகத் தெரிந்தது. அதாவது தனக்கும் உ…
-
- 0 replies
- 419 views
-
-
எதிர்பார்ப்புகளுடன் 2019!! பதிவேற்றிய காலம்: Jan 6, 2019 பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்பாக முன்வைக்்கப்படவுள்ளதாகக் கூறப்படும் அரசமைப்பு வரைவு பற்றிய பரப்புரை கூட மக்களை ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றும் நட வடிக்கையாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின ரும், பொதுசன மக்கள் முன்னணியும் மேற்கொண்ட ஆட்சி மாற்றத்துக்கான முயற்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்கள் விடுதலைக் கட்சியினர் ஆகிய தரப்பினர் எடுத்த எதிர்நடவடிக்கைகள், அவற்றின் காரணமாக ஏற்பட்ட முரண்பாடுகள், மோதல்கள் என அனைத்தும்…
-
- 0 replies
- 722 views
-
-
விடுதலைப்புலிகள் முற்றிலும் அழித் தொழிக்கப்பட்டார்கள்... சுதந்திரத் தமிழீழப் போராட்டம் முடிந்தேபோனது என்று சிங்களவர்கள் கொக்கரித்தாலும்... புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஐ.நா. வில் போர்க்குற்ற முறையீடு, ராஜபக்சவுக்கு கறுப்புக்கொடி என்று அதிரடி கிளப்பியவர்கள், அடுத்து பல்வேறு நாடுகளில் தபால் தலைகளை வெளியிட்டு தங்கள் போர்க் குணத்தைக் காட்டி இருக்கிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ, அங்கெல்லாம் சுதந்திரத் தமிழீழத் தபால் தலைகளை வெளியிடத் தொடங்கி உள்ளார்கள். சுவிட்சர்லாந்தில், “ஐ ஹேவ் ட்ரீம்” என்ற பெயரில் போரில் அடிப்பட்ட ஓர் ஈழச் சிறுவனின் வலியை தபால் தலையாகப் பதிவு செய்தார்கள். …
-
- 0 replies
- 619 views
-
-
எம்பிலிபிட்டிய படுகொலை… தள்ளிவிட வேண்டாம் என்றும் சொல்லும் போது பொலிஸ் அதிகாரி எனது கணவா் பிரசன்னவை கீழே தள்ளினார். பிரவன்னவின் 5 மாத கா்ப்பிணி மனைவி கண்ணீருடன் திவயினவுக்கு சொன்னது…. ” “ஆனாலும் இன்னும் சாதாரண பொது மக்களை சட்டத்தை காக்கும் அதிகாரிகள் தாக்குதல் நடத்தி கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள். அத்துடன் இச்சம்பவத்தை பதிவு செய்யும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் வேறு விடுகின்றார்கள். இவ்வாறு அடக்கு முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் சட்டத்தின் துணையை நாடுவது கேலிக்கூத்தான ஒன்றாகவே காணப்படுகின்றது.” . *மருத்துவமனையில் எனது கணவரை பார்க்க அனுமதிக்கவில்லை. * இரத்தினபுரி டி.எஸ்.பி அலுவலகத்தில் என்னை அச்சுறுத்தினார்கள். * …
-
- 0 replies
- 344 views
-
-
கொரோனா வைரஸ் ஆபத்தானதாக இருந்தாலும் இது குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்ைககள் மூலம் பாதுகாப்புப் பெறலாம் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள் தும்மும் போதும், இருமும் போதும் உடலிலிருந்து ‘கொரோனா’ வைரஸ் வெளியேறுவதால், ஏற்கனவே வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும். அதன் மூலம் ‘கொரோனா’ வைரஸ் உடலிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க முடியும். அதேவேளையில், ஆரோக்கியமாக இருக்கும் நபர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமல்ல என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். ஏற்கனவே ‘கொரோனா’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களைக் கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொள்பவர்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்காக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கண்கள், மூக்கு, வாய் ஆகிய பக…
-
- 0 replies
- 798 views
-
-
தமிழர்களும் கையாள்தல் அரசுறவியலும் கையாள்தல் அரசுறவியல் (Engagement Diplomacy) உலகில் நீண்ட காலமாக இருந்துள்ளது. அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது அது பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு பிரித்தானிய வெளியுறவுத்துறை அதற்கு ஒரு கோட்பாட்டு வடிவம் கொடுத்தது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009இல் அதை தனது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக்கினார். முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டனும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்சியாளர்களுடன் மோதலை தவிர்த்து அவர்களை கையாளுதல் என்பதை தமது வெளியுறவுக் கொள்கையில் பாவித்தனர். அமெரிக்காவிற்கு ஒவ்வாத சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் முரண்படாமல் “கையாள்தல்” செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. …
-
- 0 replies
- 862 views
- 1 follower
-
-
வன்னி களத்தில் இராணுவத்தின் இழப்புக்கள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 2.4k views
-
-
'கிளி'- யை இழந்த புலிகள் : ராணுவத்தின் வெற்றி நிரந்தரமா? on 03-01-2009 10:33 Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை பக்கம் 1 / 3 விடுதலைப்புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் தனது கட்டுப்பாட்டில்கொண்டுவந்து
-
- 0 replies
- 1.8k views
-
-
உரிமைக்கும் அபிவிருத்திக்கும் சம அந்தஸ்து கொடுத்து தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ள வடக்கு,கிழக்கு மக்கள் August 9, 2020 தாயகன் இலங்கை பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள்,விருப்பு வாக்குகள் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றவர்கள் கொண்டாட்டங்களிலும் தோல்வி கண்டவர்கள் திண்டாட்டங்களிலும் உள்ளனர். இப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத பல சாதனைகள், சோதனைகள், வேதனைகளுடனேயே நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதன் தாக்கங்களிலிருந்து அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் வாக்காளர்களான மக்களும் விடுபடுவதற்கு முன்பாகவே புதிய பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்கப்போகும் அரசின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச இன்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார்.…
-
- 0 replies
- 222 views
-
-
பெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’ கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகின் அனேகமான நாடுகளில், பெண்களுக்கான உரிமைகள், ஓரளவு கிடைத்திருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த நிலைமையோடு ஒப்பிடும் போது, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மிக முக்கியமானது. முன்பை விட அதிகளவிலான பெண்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். முன்பை விட அதிகளவிலான பெண்கள், நாட்டின் தலைமைத்துவத்தில் இருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் தெரேசா மே, ஜேர்மனியின் அங்கெலா மேர்க்கெல், நோர்வேயின் ஏர்னா சோல்பேர்க், மியான்மாரின் ஆங் சாங் சூகி என்று நீளும் இந்தப் பட்டியலில், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டனும் இணைந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. …
-
- 0 replies
- 319 views
-
-
ஈழம் நேற்றும் இன்றும் ஒரு சிறப்புப் பார்வை thodarum
-
- 0 replies
- 718 views
-
-
புரட்சி என்பது பிறப்பில் கருவாவதில்லை. ஒரு மனிதனின் வாழ் காலத்தில் அவனை சுற்றி நிகழும் தான் சார்ந்த சமூகத்தின் மீது கட்டவிழ்க்கப் படும் ஒடுக்குமுறைகள் கண்டு வெகுண்டு எழுந்து வெடிப்பதே புரட்சி. தமிழீழ மண்ணில் தொடர்ந்து வரும் இன அழிப்பு அவலங்களைப் போக்க காலத்துக்குக் காலம் பலர் தமது இன்னுயிர்களை ஈகம் செய்து மாவீரர்களாகவும் நாட்டுப் பற்றாளர்களாகவும் விடுதலை விரும்பிகளாகவும் இன உணர்வாளர்களாகவும் ஈகையாளர்களாகவும் விடுதலை தீ வளர்க்க ஆகுதியாக்கி உள்ளனர். அந்த வரிசையில் செந்தில் குமரன் என்ற ஈகைப்போராளியும் எம் இனத்தின் இருள் களையத் தன்னை எரித்து விடுதலை நெருப்பிற்கு நெய் வார்த்துள்ளார். செப்டம்பர் 5ம் நாள் ஐ.நா முன்றலில் வீரத்தமிழ் மகன் ஈகைப்போராளி செந்தில்குமரன் அவர்கள் தமிழி…
-
- 0 replies
- 446 views
-
-
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க. நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்களில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப் பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள் அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்க…
-
- 0 replies
- 3k views
-
-
பின் நிலைமாறுகால நீதியும் தமிழினப் படுகொலையும் - அருட்தந்தை எழில் றஜன் யே.ச. 31 டிசம்பர் 2013 ஜோசப் பரராஜசிங்கம் நினைவுப் பேருரை:- திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே அவையில் கூடியிருக்கும் பெரியோர்களே, சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் இந்நேர வணக்கங்களை உரித்தாக்குவதில் பேருவகை அடைகின்றேன். மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஞாபகார்த்தக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கம்பன் எவ்வாறு தனது இயலாமையை இராமாயணத்தின் ஆரம்பத்திலேயே எடுத்தியம்புகிறானோ அவ்வாறு நானும் இப்பேருரையை ஆற்ற அரசியலில் பழுத்த பேராசான்கள் முன் நிற்கின்றேன். அரசிய…
-
- 0 replies
- 361 views
-