நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
போர் நடந்தபோது உலகத்தில் இடம்பெர் தமிழர்கள் எல்லாம் கூக்குரலிட்டபோது வேடிக்கை பார்த்த ஜனநாயகம் பேசும் அரசுக்கள் எல்லாம் இன்று புலிகளின் கதை முடிந்துவிட்டது. இனி ஸ்ரீலங்கா அரசுமீது குற்றப்பத்திரிகை தயாரித்து எப்படி இவர்களைத்தங்கள் வழிக்குக் கொண்டு வரலாம். என்ற ரீதியில் தான் இக்குற்றப்பத்திரிகைகள் அமைகின்றன என்பதைத் தமிழர்கள் மறந்துவிடக்கூடாது. ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் சீனாவைவிட்டுவிட்டு இவர்கள் பக்கம் சாய்ந்தால் குற்றப்பத்திரிகை கிடப்பில் இருக்கும். சீனாவுடன் கைகோர்த்து அந்தரங்கமாக இருந்தால் குற்றப்பத்திரிகை மூலம் ஸ்ரீலங்காவுக்கு; (ஈராக்குக்கு பிரவேசித்ததுபோல் ) செல்வார்கள். மொத்தத்தில் மேற்குலகமும், இந்தியாவும் சிங்களரிலோ, தமிழரிலோ ஏது அக்கறை. தமிழரின் போரிடும் சக்தியை, சி…
-
- 0 replies
- 594 views
-
-
புதன், ஜனவரி 6, 2010 09:00 | நிருபர் கயல்விழி முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஓர் சோகக்கதையா அல்லது சோகத்தின் நடுவில் தலைநிமிர்வா? பேராசிரியர் தீரன் (இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டுள்ளார்) கடந்த வருடம் தமிழினத்திற்கெதிராக இலங்கை, இந்தியா மற்றும் பல உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தொடுத்த முள்ளிவாய்க்கால் போரில் எற்பட்ட மனித அவலங்களாலும் அதன் …
-
- 1 reply
- 649 views
-
-
ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலைகளில் சர்வதேச நியதிகள் யாவும் மீறப்பட்டன என்பது உலகுக்கே தெரியும். போரின் கடைசி நாட்களில் இலங்கை அரசோடு புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், ஆயுதங்களைக் கைவிட முன்வந்ததையும் நாம் அறிவோம். அவர்களை வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சொன்னதின் பேரில், அதை ஏற்று முன்னே சென்றவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டதையும் உலக நாடுகள் அறிந்ததுதான். பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்த அப்பாவி மக்கள் அப்படியே புல்டோசர்களால் புதைத்து சமாதியாக்கப்பட்டது உலகில் எங்குமே நடந்திராத பச்சைப் படுகொலை. அப்படிக் கொல்லப் பட்டவர்கள் ஒருவர், இருவர் அல்ல. நூறு பேர் இருநூறு பேர்கூட அல்ல; ஆயிரக்கணக்கான மக்கள்! போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மே 17-ம் தே…
-
- 1 reply
- 586 views
-
-
திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி. “ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு…
-
- 5 replies
- 1.3k views
-
-
வெள்ளி, ஜனவரி 8, 2010 00:56 | நிருபர் கயல்விழி வட்டுக்கோட்டைத் தீர்மான மீள் வாக்கெடுப்பு ஏன்? எதற்காக? யாருக்காக? பேராசிரியர் தீரன் (இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டள்ளார்) “காலம் கருதி இடத்தாற் செயின் ஞாலம் கருதினும் கைகூடும்” என்கிறது நம் வள்ளுவம். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இக்குறட் கருத்தினைப் பொருத்திப் பார்க்க வேண்டிய தருணம்தான் வட்டுக்…
-
- 0 replies
- 758 views
-
-
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமான கியூபா? மார்க்சிய அறிஞர் ரான்ரெட்னூர் ஈழத்தமிழர் இனப்படுகொலையை வரலாற்று வழியில் விளக்கி தொடராக ஐந்து கட்டுரைகளை எழுதி, 2009 நவம்பரில் வெளியிட்டார். இதன்வழி இலத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசுகளின் கடமைகளைச் சுட்டிக்காட்டினார். இவற்றில் முதல் கட்டுரையின் சுருக்கம் இங்கு தமிழில் தரப்படுகிறது. முழுக்கட்டுரைகளுக்கும் காண்க http://www.ronridenour.com/. “உலகெங்கிலுமுள்ள சுரண்டப்படும் மக்கள் எங்கள் தோழர்கள்; உலகெங்கிலுமுள்ள சுரண்டுபவர்கள் எங்கள் எதிரிகள்… எங்கள் நாடு இப்பரந்த உலகை உள்ளடக்கியது; உலகெங்கிலுமுள்ள புரட்சியாளர்கள் எங்கள் சகோதரர்கள்” என்றார் பிடல் காஸ்த்ரோ. ‘புரட்சிக்கான கருத்தியல் உந்து சக்தி…
-
- 4 replies
- 1.3k views
-
-
செவ்வாய், ஜனவரி 5, 2010 11:16 | கால ஓட்டத்தின் போக்கில் நேரும் தலைகீழ் மாற்றங்கள்! கால ஓட்டம் என்பது பல அதிசயங்களை நிகழ்த்தக் கூடியது; எண்ணிப் பார்க்க முடியாத பல ஆச்சரியங் களை ஏற்படுத்த வல்லது; விடயங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு வியக்க வைக்கச் செய்வது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணு வத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத் தில் நின்றுகொண்டு தெரிவித்த கருத்துகள் கால ஓட்டத் தின் இந்த அதிசய மாற்றத்தைத்தான் எமக்கு நினைவு படுத்தி நிற்கின்றன. யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை இன்று எமது பிர தேச மக்களைப் பாதித்து நிற்கும் பெரும் பிரச்சினை களில் ஒன்று உயர்பாதுகாப்பு வலயச் சிக்கலாகும். இலங்கையில் தம…
-
- 0 replies
- 553 views
-
-
பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பின் 7 வது ஆண்டு நிறைவு விழாவும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடும் இரண்டு நாள் நிகழ்ச்சியாக டிசம்பர் 26, 27 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்றது. நடராசன் (சசிகலா), வைகோ, ம.தி.மு.க, ராமதாசு, பா.ம.க, மகேந்திரன், வ.கம்யூ, திண்டிவனம் இராமமூர்த்தி, தேசியவாத காங்கிரசு கட்சி, அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி, பெ.மணியரசன், த.தே.பொ.க, வைத்திலிங்கம், இந்து தமிழர் இயக்கம், நகைமுகன் தனித்தமிழர் சேனை, இராசேந்திர சோழன், சூரியதீபன், பசுபதிபாண்டியன், வீர.சந்தானம், மறவன்புலவு சச்சிதானந்தன், காசி.ஆனந்தன், முதலானோர் முக்கியப் பங்கேற்பாளர்கள். இவர்களன்றி டத்தோ சாமிவேல் உள்ளிட்ட வெளிநாட்டுத் தமிழறிஞர்களும் உள்நாட்டுத் …
-
- 2 replies
- 644 views
-
-
'அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு அத்தனை சீக்கிரம் தண்டனை வாங்கிக் கொடுத்து விட முடியாது...' என்பது நம் தேசத்தில் இன்னொரு முறை நிரூபணமாகி உள்ளது! ஹரியானா மாநில முன்னாள் டி.ஜி.பி-யான ராத்தோர் மீது பாய்ந்த பலாத்கார வழக்குக்கு, ஆணித்தரமான சாட்சிகள் இருந்தும், 19 வருடங்களுக்குப் பிறகே அவருக்கு தண்டனை கிடைத்துள்ளது. இதில், பாதிக்கப்பட்ட அப்பாவி டீன் ஏஜ் பெண்ணான ருச்சிகா அவமானத்தால் தற்கொலை செய்து கொள்ள... அவரது தோழியின் குடும்பத்தினர் தொடர்ந்து போராடி... நீண்ட காலத்துக்குப் பிறகு ஜெயித் துள்ளனர்! ஹரியானாவின் சண்டிகர் நகரில் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர் 14 வயதான ருச்சிகா கிரோத்ரா. டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் அங்கிருந்த சங்கத்தில் உறுப்பி…
-
- 0 replies
- 895 views
-
-
மாறாத மக்கள் தீர்ப்பும், மாற்றுக்கருத்திற்கு விழுந்த 43 வாக்குகளும் இம் மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில், பிரான்சில் நடைபெற்ற சுதந்திர இறைமையுள்ள தமிழீழத்திற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில், மாற்றுக்கருத்திற்கு 43 வாக்குகள் விழுந்துள்ளன. 99 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள், பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக, ‘ஆம்' என்கிற ஒற்றைச் சொல்லால் நிரம்பி வழிந்தது. ஏறத்தாழ 32,000 மக்கள் இவ்வாக்களிப்பில் கலந்துகொண்டாலும், அஞ்சல் மூலம் பெறப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி, முடிவடையவில்லையென்று ஊடகச் சந்திப்பில் கூறப்பட்டது. 32 வருடங்கள் கடந்து சென்றாலும் தாயகக் கனவினை, மக்கள் கைவிடவில்லையென்று, மறுபடியும் உரத்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்த உலகிற்கு, மக்கள் சொன்ன…
-
- 2 replies
- 798 views
-
-
"வட்டுக்கோட்டை வாக்குபதிவால் எமது போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிப்பது, ஜ.நா தமிழீழத்தை அங்கீகரிப்பது, இந்தியா, ஜநா போன்றவை அமைதிப் படையை அனுப்புவது போன்ற இன்ன பிற விடயங்கள் இப்போது தமிழக அரசியலிலும், உலக அரங்கிலும், எமது புலம்பெயர் தலைவர்களாலும் தமிழக வீரப் பேச்சுத் தலைவர்களாலும் பேசப்படும் விடயங்களாக இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் மீறி இந்திய அரசும் அதன் ஆளும் வர்க்கமும் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில், அதன் சட்டபூர்வமான உரிமையைக் கொண்டுள்ள அவர்களின் சம்மதமும் ஆலோசனையுமின்றி வளங்களை கொள்ளையிடுவதில் இறங்கியுள்ளது. இவற்றை தடுப்பதற்க்கு துணிவில்லாத தமிழனால் தமிழர்களுக்கு எப்படி மீட்சியைப் பெற்றுக்கொடுக்க முடியும்? தமிழ் ஊடகங்களூடக வெற்றறிக்கைகளும் வெறுவாய்ப்பேச்சுக்களும்…
-
- 49 replies
- 4.6k views
-
-
முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டதாகச் சிங்கள தேசம் எதிர்பார்த்த தமிழீழ விடுதலைப் போர் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களால் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவது சிங்கள தேசத்திற்குத் தொடர் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றது. இன அழிப்பு யுத்தத்தின் மூலம் விடுதலைப் புலிகளை களத்தில் வெற்றி கொண்ட சிங்கள அரசு, கே.பி. அவர்களது கைதின் மூலம் விடுதலைப் புலிகளின் பொருளாதார வளத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கே.பி. அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் விடுதலைப் புலிகளின் அசையும், அசையாச் சொத்துக்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டு, அவற்றைக் கைப்பற்றும் திட்டத்தை சிறிலங்கா அரசு செயற்படுத்தி வருகின்றது. கே.பி. அவர்களிடம் பெற…
-
- 1 reply
- 907 views
-
-
முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எல்லோரையும் கேட்டுக்கொண்டுமிருப்பது ஒன்றே ஒன்றை தான். இனியாவது ஒரே அணியில் எல்லாரும் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையின் இணைந்து கொண்டு அடுத்த கட்டம் பற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்பதே! இன்றைய இறுக்கமான கால கட்டத்தில் குறிப்பிட்ட சிலரின் அதிகாரப்போட்டி, அதை வெளிப்படுத்தும் விதம், என்பன எம் தமிழ் ஊடகங்கள் ஊடகாவே திரிக்கப்பட்டு வியாபார ரீதியில் அவை விற்பனைத்திரியாக்கப்பட்டுள்ளது என்பதை சகல தமிழ் மக்களுக்கு தெரிவிக்கும் கடமையும் பொறுப்பும் பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பணியாகும். சின்ன குடில் எனினும் நெறி தவறாது வாழ வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பு. அது புலம்பெயர…
-
- 0 replies
- 782 views
-
-
ரஜீவ விஜயசிங்கவிற்கு ஒரு திறந்த மடல்! (செய்தி நோக்கு) பேராதனையில் பேராசிரியர் என்ற உயர் கல்விப் பட்டத்தைப் பெற்றவர் நீங்கள்! சமாதான காலத்தில் சமாதானம் தொடர்பாக பிரித்தானியாவின் பிறாட்போர்ட் பல்கலைக் கழகம் நடத்திய பட்டறையில் முதன்மைப் பாத்திரம் வகித்தவர் நீங்கள்! சனநாயகம் - நல்லாட்சி என்றெல்லாம் மேற்குலகம் பீற்றிக்கொள்ளும் நற்பதங்களுக்கு அப்பொழுது வரைவிலக்கணம் கொடுக்க முற்பட்டவர் நீங்கள்! ஆனால்... திடீரென்று மகிந்த ராஜபக்சவின் கூடாரத்திற்குள் நீங்கள் நுழைந்த பொழுது அதனை புத்திஜீவிகள் எதிர்பார்க்கவில்லைதான்! சமாதான செயலகத்தின் பணிப்பாளராக பதவியேற்ற நீங்கள் அதனை போர்ச் செயலகமாக மாற்றிய பெருமைக்குரியவர். "நான் சமாதான செயலகப் பணிப்பாளர் மட…
-
- 2 replies
- 2.6k views
-
-
வீழ்ந்து போனதொரு தேசம் ‐ யாழினி வரலாறு எம்மைச் சுற்றி தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. அலையலையாய்ப் படிவுண்ட அதன் பக்கங்களுக்குள் ஒரு மீள முடியாத் துயரத்தின் சாட்சியாய் நாம் விசனித்திருக்கிறோம். ஒரு தேசம் தூர்ந்துகொண்டிருக்கிறது, எமதனைவரின் கனவுகளினூடு. தொடர்ந்தும் வரலாறு இந்தத் தருணத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. நாமனைவரும் எழுதிக்கொண்டிருக்கிறோம். இணையத்தின் மின்னதிர்வுகளின் வழி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானலைகள், தொலைக்காட்சிகளினூடு: சரி, பிழைகள் அலசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏமாற்றம், தோல்வி, கோபம், சந்தோஷம், கெக்கலிப்பு எல்லாவிதமான உணர்வுகளும் அரசியல் ஆய்வுகளினூடு வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்வதற்கு ஏதேனும் மீதமிருக்கிறதா என்ன? அரசியற் …
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒடுக்கபட்ட ஈழ தமிழினத்திற்கு ஆரிய ஏகாதிபத்தியம் அளிப்பதுதான் தீர்வா? 13-வது அரசியல் அமைப்பு சட்டம் குறித்து வாய்கிழிய பேசி திரியும் காங்கிரசு களவாணி கும்பல்கள்.அச்சட்டம் ஈழ தமிழர்களால் ஏற்கெனவே நிராகரிக்கபட்டது எனும் உண்மையை ஏனோ செலக்டிவ் அம்னிஷியா போல் மறந்து போகின்றனர்..அல்லது அத்திட்டதினை வலியுறுத்தும் அவர்கள் இந்தியா போன்று மதசார்பற்ற இலங்கை என அவர்களது ஆரிய கூட்டாளியான ராசபக்சேவிடம் வலியுறுத்த தயாரா?சென்னையில் காங்கிரசு பிரச்சார கூட்டதின் போது ராஜீவ்காந்தி’ஜீ ‘ ஏற்படுத்தி கொடுத்த ஒப்பந்தமே தமிழர்களுக்கு தீர்வு என ஊளையிட்ட சோனியா மைனா அந்த ஒப்பந்தித்தின் படி வடக்கு கிழக்கை இணைக்க இலங்கையை மிரட்டுவாரா? இளித்தவாயன்கள் மேல் ஏறி மிதிக்கு இந்தி தேசியம் …
-
- 0 replies
- 775 views
-
-
இந்தியாவின் இராணுவ உதவியும், ஆயுத உதவியும், லட்சக்கணக்கான மக்களை சொந்த மண்ணில் அகதிகளாக்கி யது. வீட்டை இழந்து, வயல்வெளிகளில், வெட்டவெளியில், உணவு இன்றி, உறக்கமின்றி தவித்த ஈழ மக்களின் கண்ணீர் சாபத்திற்கும்... கேட்பதற்கு நாதியில்லாமல் அன்றாடம் கொல்லப்பட்ட பல்லா யிரக்கணக்கான ஈழ மக்களின் கண்ணீர் சாபத்திற்கும்... ஒவ்வொரு நாளும் வீசப்பட்ட அபாயகரமான குண்டு வீச்சில் கால்களை இழந்து, கைகளை இழந்து, உடல் முழுவதும் ரத்த காயங் களால் ஊனமுற்று, மருத்துவ வசதி இல்லாமல் துடிதுடித்த பல்லா யிரக்கணக்கான ஈழத் தமிழ் உறவுகளின் கண்ணீர் சாபத்திற்கும்... எப்படியாவது ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று பல ஆண்டு காலமாக அறவழியில் போராடி அவமதிக்கப்பட்ட பத்து கோடி தமிழர்களின் கண்ணீர் ச…
-
- 0 replies
- 1k views
-
-
தொடரும் தெற்காசிய பேட்டை ரௌடியின் அட்டகாசம்! "எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு என சோனியா காந்தித் தரப்பினரினால் பிரசாரத்துறை சார்ந்த நிபுணர்கள் 50 பேர் வியுகம் வகுக்க இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் பிரபல தேர்தல் பிரசார நிறுவனங்களில் ஒன்றான விப்லவ் கம்னிகேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். -குமுதம்" இவனுங்களுக்கு தனக்கு கீழே வலிமைகுறைந்த யாராவது நன்றாக இருந்தால் பிடிக்காது..நன்றாக அல்ல மூன்று வேளை நன்றாக உண்டாலே இந்தி அடிப்பொடிகளுக்கு வயிறுவாயெல்லாம் எரிய …
-
- 0 replies
- 550 views
-
-
தோழர்களே சிறிது சிந்தித்து பாருங்கள்! நமக்கான தேசம் எது? தமிழ் நாட்டிற்கு சொந்தமான கச்சதீவை சிங்களவனுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டு ஒப்பந்தத்தின் பெயரால் அடிமை சாசனத்தை எழுதிவிட்டு, தமிழர் நாட்டின் மீனவர்கள் அன்றாடம் அல்லல் படுவதை கண்டு கனிவோடு கன்னடத்தான் தயாரிக்கும் இந்த புதிய அடிமை ஒப்பந்ததை இந்த அரசும் டெல்லி ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளும் இணைந்து தயாரித்துவிட்டு தற்பொழுது அதனை கையெழுத்திட பேனாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அச்சிடப்பட்ட காகிதத்தில் கையெழுத்திட தான் பேனாவை எடுத்துள்ளனரே தவிர அதில் புதிதாக எதனையும் எழுதுவதற்ககோ திருத்துவதற்கோ அல்ல. இது தெரிந்தும் எதிர்க்கிறோம் என சவடால் விட்டுக் கொண்டு நமது அரசியல் " மாவீரர்கள்" தெரு முக்கில் மல்லுக்…
-
- 0 replies
- 2.3k views
-
-
தமிழ் ‘நாட்டு’ மீனவர்களை சுட ஆரிய ‘இந்தி’ யா இலங்கை கடற்படைக்கு பயிற்சி! தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் எப்போதும் தமிழினத்தை குறிவைத்து தாக்கும் இந்தியா தற்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டு விளையாட பயிற்சி வழங்கியுள்ளது.. ஏற்கனவே ஈழ தமிழர்களின் கதையை முடித்தாகிவிட்டது.. இனி அடுத்து தமிழக தமிழர் தானே! அதுதானெ முறை? இதை எடுத்து சொன்னால் இந்தி தேசிய அடிப்பொடிகள் சீனா பாகிஸ்தான் என்று.. பசப்புவார்கள் அவர்களிடத்தில் ஒன்றைதான் நாம் கேட்க முடியும்..ஏன் சிங்களன் உங்கள் அக்கா தங்கையின் மீதி மையல் கொண்டுவிட்டால் .இதைதான் சொல்வீர்களா? நாம் பெண்ணை சப்ளை செய்யவில்லை என்றால் சீனாக்காரனும் பாகிஸ்தான்காரனும் சப்ளை செய்து விடுவார்கள் என்று?..இவர்கள் …
-
- 1 reply
- 2.2k views
-
-
ஈழத்தமிழர் இன்று எதிர் கொள்ளும் பேராபத்து, பொய்மைகள். எது உண்மை, எது பொய்... யார் சரியானவர்கள், யார் வேஷக்காரர்கள் என்பதைப் பிரித்தறிவது இன்று பெரும் பாடாயுள்ளது. விடுதலைப் புலிகள் விட்ட இடத்தி லிருந்து ஆயுதப் போராட்டத்தை, முன்நடத்த "மக்கள் விடுதலை ராணுவம்' என்ற அமைப்பு சமீபத்தில் தன்னை பிரகடனம் செய்தது. தமிழ் இணைய தளங்களெல்லாம் இச்செய்தியை தமிழர்கள் ஏதோ முல்லைத்தீவை மீளக் கைப்பற்றி விட்டதுபோல் கொட்டு முரசே கூறிக் கொண்டாடின. "மக்கள் விடுதலை ராணுவத்தின்' பிறப்பினால் ராஜபக்சே சகோதரர்கள் உதறல் பிடித்து உறக்கமின்றி தவிப்பதுபோலும் சில இணையக் கட்டுரைகள் எழுதப்பட்டன. ஆனால் உண்மை என்ன? மக்கள் விடுதலை ராணுவத்தை உருவாக்கியிருப்பதே ராஜபக்சே சகோ தரர்கள்தான். கருக்கொடுத்து, உர…
-
- 3 replies
- 2k views
-
-
நேற்றைய தினம் ஒரு தமிழ் இணையத் தளத்தில் 'நெருடலான' செய்தி காணப்பட்டது. எமது போராட்டத்தின் இறுதி நாட்களில் நடந்த துரோகங்களை இன்னும் 24 மணி நேரத்தில் வெளியிட இருப்பதாக செய்தி போட்டிருந்தார்கள். ஆளாளுக்கு ஒவ்வொரு கதையுடன் புறப்பட்டு விட்டார்கள். இவர்கள் என்ன புதிதாக சொல்ல இருக்கிறார்கள் என்று பார்த்தல், சில 'வேண்டுகோளுக்கு' இணங்க துரோக பட்டியல் வெளியிடுவதை தவிர்த்து விட்டார்களாம். அது தான் பரவாயில்லை. இத்தனை ஆயிரம் போராளிகள், மக்களின் இழப்புக்கு காரணமான இவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குமுகமாக இப்போது வெளியிடாமல் இவர்கள் தொடர்ந்து துரோக வேலைகளை தொடர்ந்தால் வெளியிடப் போவதாகவும் செய்தி போட்டிருக்கிறார்கள். இவர்கள் தாம் 'தேசியத்தின் காவலர்களாக' தம்மை முதலில் வெளி…
-
- 0 replies
- 652 views
-
-
தமிழின எதிரிகள் எந்த வகைபட்டவர்கள்? அறிஞர் கொர்ப் கோகனின் உங்களால் முடியும் என்ற நூலின் சில பகுதிகள்.. எதிராளிகளை இரண்டு வகைகளாக பிரிக்கிறார் கோகன் அதில் 1.கருத்து எதிராளிகள் 2.அடிக்குடல் எதிராளிகள் அதை சற்று விரிவாக பார்ப்போம்.. கருத்து எதிராளிகள் ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றி உங்கள் கருத்திற்கு மாற்று கருத்து வைப்பவர் கருத்து எதிராளி.. நீங்கள் நான் இப்படி செய்ய நினைக்கிறேன் என்கிறீர்கள் ..அவரோ ஏன் இதை இப்படி செய்யகூடாது என்கிறார். கருத்து எதிராளிகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்..முதலில் கருத்துகள்.. தகவல்கள்..அனுபவம் ..விட்டு கொடுத்தல் தீர்வு காண பட வேண்டும் என்பதில் ஒற்றுமை ஆகிய காரணிகள் சரியான இறுதி தீர்வை நோக்கி நகர்த்தும்.. இறுதி தீர்வு சர…
-
- 1 reply
- 691 views
-
-
பிரபாகரன் மரண சான்றிதழ் மர்மங்கள்! ''விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனும், உளவுத் துறை தலைவரான பொட்டு அம்மானும் கொல்லப்பட்டது உறுதியாகிவிட்டது. அவர்களின் மரணம் குறித்த ஆவணங்களை சிங்கள அரசு, இந்திய அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. அதனால் விரைவிலேயே ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வரும்!'' - கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சிங்கள மீடியாக்கள் இப்படியரு செய்தியை முக்கியத்துவத்தோடு வெளி யிட்டு வருகின்றன. இத்தனைக்கும் சிங்கள அரசின் அறிக்கையாகவோ, அதிபர் மாளிகையின் செய்தியாகவோ இந்தத் தகவல் வெளியிடப்படவில்லை. 'இலங் கையின் அட்டார்னி ஜெனரல் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் மேற்கண்ட தகவலைச் சொன்னதாக'வே சிங்கள மீடியாக்கள் எழுதி வருகின்றன. அந்த அதிகாரி யார் என்று இலைமறை காயாகக் கூட சிங்…
-
- 0 replies
- 651 views
-
-
வேலுப்பிள்ளைபிரபாகரன் கருத்து வேறுபாடு களை விரும்பாதவர், விமர்சனங் களை வெறுத்தவர் என்றொரு பொய் தோற்றம் வலுவாக வனையப்பட்டிருக்கிறது. தன் இனத்தின் எதிரிகளாகவும் துரோகிகளாகவும் அவர் கருதி யவர்களை அவர் வெறுத்தார் என்பது உண்மைதான். அது தான் பிறந்த தமிழ் இனத்தின் மீது கொண்ட தீராக் காதலாலும், பெருமிதத்தாலும். ஆனால் அவர் விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாதவர் என்று பலர் ஏற்படுத்தியுள்ள பிம்பம் உண்மை யல்ல. 1998-ம் ஆண்டு வாக்கில் என்று எண்ணுகிறேன். நான் மணிலா வேரித்தாசு வானொலியில் கடமையாற்றியிருந்த காலத்தில் நடந்த மறக்க முடியா நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது. வானொலி நேயர் ஒருவர், "தங்கள் ஆளுகைப் பரப்புக்குள் குற்றம் சாட்டப்பட்ட பொதுமகன் ஒருவருக்கு விடுதலைப்புலிகள் உரிய நீதி வ…
-
- 10 replies
- 1.1k views
-