நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4203 topics in this forum
-
ஐ.நா.வின் கள்ள மௌனம்! சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள்' என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. இந்திய ஏகாதிபத்தியம் என்று குற்றஞ்சாட்டினான் தமிழகத்தின் நெருப்புப் பொறி முத்துக்குமார். இந்திய அரசும் காங்கிரஸும் சாதித்தது கள்ள மௌனம் என்றால், தி.மு.க. சாதித்தது என்ன மௌனம்? கலைஞருக்கே வெளிச்சம்.தி.மு.க.காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, கலைஞரின் பேனாவுக்குக் கிடைத்த வெற்றி என்று புளகாங்கிதமடைகிறார், வெற்றி வீரர் (!) ப.சிதம்பரம். ஈழத்தமிழர்களின் துயரத்துக்கு முடிவுகட்டுவதில்மட்டும் கலைஞரின் பேனா தோல்வியடைந்தது எப்படி? மன்மோகனுக்கு மனு எழுதி மனு எழு…
-
- 0 replies
- 495 views
-
-
அது நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம். சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம். வாழும் காலத்திலேயே கடவுளுக்கு நிகராக நாங்கள் அவருக்கு கொடுத்திருந்த புனித நிலை இப்போது இன்னும் உறுதியானது ஆகின்றது. கடவுளைப் போலவே அவரும் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வுகளைச் செய்யாமல் - அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என கருதுகின்றோம். எங்கோ ஓர் இடம் போயுள்ளார் என்றும், என்றோ ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்றும் காத்த…
-
- 35 replies
- 4.1k views
-
-
`புதியன புகுதலும் பழையன கழிதலும்` என்பது முன்னெப்தையையும் விட தமிழ் மக்கள் தற்சமயம் தாரக மந்திரமாக கொள்ளவேண்டி அரசியல் அரிச்சுவடியாக போயுள்ள அவலத்தையும் தண்டனையையும் வரலாறு எமக்கு திணித்துள்ளது. நான்காவது `ஈழப்போர்` முடிவு மூன்று லட்சம் எம் தமிழ் மக்களை முகாம்களுக்குள் முடக்கியுள்ளது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை அரசியல் கைதிகளாக அரச படையினர் இன்னும் உயிருடன் வைத்துள்ளனர். வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அரசியல் சூனியத்துக்குள் தமிழ் மக்கள் மூழ்கியுள்ள இன்றைய சூழலில் நாம் நடந்து வந்த பாதையை மட்டும் அல்ல எமது இலக்கு குறித்தும் மீள்பார்வைகள் செய்ய வேண்டியுள்ளது. மூன்று லட்சம் மக்களினதும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அரசியல் கைதிகளின் எதிர்க…
-
- 7 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்கான பேரம் பேசும் சக்தியாக மற்றும் பாதுகாப்புக் கசவமாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று தோற்றம் காட்டி கூட்டம் கூடி பலவீனப்படுத்திய சிறீலங்காவின் சுற்றயல் அரசுகள் மற்றும் சர்வதேச அரசுகள் இன்று சிறீலங்கா அரசை தமது கட்டுக்குள் எடுக்க முடியாமல் திண்டாடும் நிலை தோன்றி இருக்கிறது. சிறீலங்கா சிங்கள அரசுடன் அதுவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசுடன் சிறீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் இருந்து நெருக்கம் காட்டி வரும் சீனா தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதில் சிறீலங்காவிற்கு உதவுவதன் பெயரால் தனது ஆதிக்கத்தை அங்கு வலுப்படுத்திக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. அதுமட்டுமன்றி இப்போ சீனாவின் நகர்வுகள் இந்தியா குறித்த பிராந்தியத…
-
- 1 reply
- 660 views
-
-
வரலாற்றுத் தவறைப் புரிந்து கொள்ளாமல் பிராயச்சித்தம் செய்வது சாத்தியமாகுமா? "மரபுவழி இராணுவ யுத்தத்திலேயே இலங்கை அரசுக்கு வெற்றி கிட்டியிருக்கின்றது. ஆனால் நிரந் தர சமாதானத்தை எட்டுவதற்கு அது வெகு தொலை வில் உள்ளது" இவ்வாறு நினைவூட்டியிருக்கின்றார் நோர்வே அமைச்சரும், இலங்கை இனப்பிரச்சினைக் கான அமைதி முயற்சிகளின் போது நோர்வே சார்பில் பிரதான அனுசரணைப்பணி வகித்தவருமான எரிக் சொல்ஹெய்ம். "தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கான நீதி யான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை இலங்கை இனி முன்னெடுக்கத் தவறுமானால் தமது அபிலா ஷைகளை எட்டுவதற்கான தமிழர்களின் போராட்டம் புதிய வடிவம் எடுக்கும்." என்றும் அவர் எச்சரித்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலை…
-
- 5 replies
- 1.4k views
-
-
நம்மிடம் நிலைத்த, வலிமையான, சர்வதேச சமூகத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தமிழ் ஈழம் அமைவதற்கான வாய்ப்பு கடந்த பத்தாண்டுகளாக கேட்பாரின்றி கிடந்தது. 'எமது துறைமுகங்களில்/நிலத்தில் உனக்கு எது/எவ்வளவு தேவையோ அதை நீ எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள். என் எதிரியை அழிக்க ஆயுதமும், பணமும் கொடுத்து , மற்ற நாடுகள் மனித உரிமை,ஜனநாயகம் என்று ஏதாவது சொன்னாலும் என்னை ஆதரி' என்பதே அது. நாம் அதை பயன்படுத்த தவறினோம். எதிரி பயன்படுத்திக்கொண்டான். அம்மாந்தோட்டையை சீனாவுக்கு தாரை வார்த்துகொடுத்தான். இந்தியாவுக்கு சுருக்கு கயிறு போடும் தன் திட்டம் நிறைவேறும் மகிழ்ச்சியில் சிங்களனே எதிர்பாராத அளவில் உதவிகளையும் ,ஆதரவையும் அள்ளி அள்ளி வழங்கினா…
-
- 1 reply
- 601 views
-
-
ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியிருக்கிறது. இது, புலிகள் இயக்கத்தின் தோல்வி மட்டுமல்ல; ஈழ விடுதலைப் போராட்டம் சந்தித்திருக்கும் ஒரு பாரிய பின்னடைவு. இத்தகையதொரு நிலைமை நெருங்குகிறது என்பதைக் கடந்த சில மாதங்களில் களநிலைமைகளிலிருந்து அனைவருமே புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும், இம்முடிவு நம்மை மாளாத் துயரத்தில் ஆழ்த்துகின்றது. கொட்டகைகள், கூடாரங்கள், பதுங்குக் குழிகள் என 3 சதுர கி.மீ. பரப்பளவில் சிக்கித் தவித்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு போர்த் தாக்குதலை நடத்தி ஈவிரக்கமின்றி கோரமாகக் கொன்றொழித்திருக்கிறது, இனவெறி பிடித்த சிங்கள பாசிச அரசு. சூடானின் டார்ஃபரில் நடந்த இனப்படுகொ…
-
- 7 replies
- 1.5k views
-
-
எம்மை நாம் உணர்ந்து கொள்வதற்கு இன்னும் எத்தனை மக்கள் கொலை செய்யப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிந்துவிட்டது என்று சில சந்தர்ப்பவாத இணையத்தளங்கள் மக்கள் மத்தியில் பரப்புரை செய்ய முயற்சித்து வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றன. தமிழீழ விடுதலைப் போராட்ட ஆயுதப் போராட்டத்தின் ஒரு பகுதி உச்சகட்ட மனித அவலத்துடன் நிறைவு பெற்றுள்ளது. இனவிடுதலைப் போரின் நியாயத்தை அழித்தொழிப்பதற்கான போரை முன்னெடுத்த இலங்கையரசு ஒரு தெihகையாக இரு நாட்களுக்குள் 20,000 தமிழ்மக்கள் உட்பட கணக்கிலடங்கா மக்கள் கொலை செய்யப்பட்டள்ளனர். பாதுகாப்பு வலயத்திற்குள் பாதுகாப்பிற்காக வந்த தமிழர்களில் 13,000 பேர வரை காணாமல் போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்ன நடந்தி…
-
- 0 replies
- 472 views
-
-
பிரம்மசீடன் எழுதிய '' இனி? '' தமிழீழ விடுதலைப் புலிகளை ஆணிவேருடன் அழித்து, பயங்கரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக சிங்களம் எக்காளமிடும் இவ்வேளையில், தனியரசுக்கான தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்த படிநிலை என்ன? என்ற பெரும் கேள்வி இன்று உலகத் தமிழர்களின் மனங்களின் எழுந்துள்ளது. ஆயுதப் போராட்டம் இனி சாத்தியமில்லை என்று ஒருசாரரும், உலகோடும், சிங்கள தேசத்தோடும் ஒத்துப்போவோம் என்று இன்னொரு சாரரும், ஆயுதப் போராட்டமே ஒரேயொரு வழியென்று உறுதிபட மறுசாரருமாக, இன்று மூன்று துருவங்களாக உலகத் தமிழர்களின் கருத்தியல் உலகம் காட்சிதருகின்றது. இவற்றை அகக்கண் முன்னிறுத்தி, தனியரசுக்கான பாதையில் எம்முன்னே விரிந்து கிடக்கும் கடமைகளை…
-
- 2 replies
- 783 views
-
-
தமிழீழ தேசிய கொடி இங்கிலாந்தில் தடை செய்யப்படவில்லை.
-
- 6 replies
- 3.2k views
-
-
-
தமிழர்களின் நாட்டைக் காக்கும் போரில் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவரான மேதகு பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்பது செய்தியாக இருக்கின்றது. இலங்கைத் தீவினிலே தமிழர்கள் தமது நாட்டை ஆக்கிரமிப்பாளர்களிடம் பறி கொடுப்பதும் பின்பு மீளக் கைப்பற்றுவதுமே வரலாறாக இருந்திருக்கின்றது. சேனன், குத்திகன், எல்லாளன் போன்ற பல மன்னர்கள் தமிழர்கள் இழந்த நாட்டை மீண்டும் கைப்பற்றி ஆண்டிருக்கின்றார்கள். எல்லாளன் தமிழ் மண்ணை 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பண்டார வன்னியன், சங்கிலியன் போன்றவர்கள் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போர் புரிந்து வீரச் சாவை தழுவி உள்ளார்கள். இந்த மன்னர்களுக்கு பின்பு ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் கழிந்து, எமது தலைவர் பிரபாகரன் தமிழ் மண்ணை மீட்டு …
-
- 3 replies
- 2.1k views
-
-
-
வரும் காலங்களில் இந்தியாவின் வளர்ச்சியினால் இலங்கை மண்ணைகவ்வும்!!! புரிகிறது உங்கள் கேள்வி, எப்படி என்று தானே? யோசித்து சொல்லுங்கள் பார்போம்!!!
-
- 0 replies
- 667 views
-
-
http://www.4th-tamil.com/blog/wp-content/u.../05/india02.jpg படத்தைப் பெரிதாகப் பார்க்க... இந்தப் பாழாய்ப் போன இலங்கையை ஆசியாக் கண்டத்தின் ஆண்குறி மாதிரித் துருத்திக் கொண்டிருக்கும் புண்ணிய பாரதத்தின் தலைப்பில் வைத்தது யார்? யார்? யார்? கவிதை வரிகள்: கவிஞர் சேரன் குறிப்பு1: படத்தின் மேல் அழுத்தினால் படம் பெரிதாகத் திறக்கும். குறிப்பு2: கருத்துக்கள நிர்வாகம் இது விதிமுறைகளை மீறவதாகக் கருதினால் நீக்கவும்.
-
- 4 replies
- 7k views
-
-
அன்பார்ந்த தமிழீழ மற்றும் தமிழக மக்களே! நம் தர்க்கங்களும் விவாதங்களும் உண்மையில் தேவையா? தேவை எனில் நீங்கள் குழப்பத்தில் உள்ளீர்கள்...எதிரிகள் யார்? நாமே நமக்கு எதிரிகள்...ஏனென்றால் ஒருவர் கூறுவதை ஆராய்வதில்லை. மாவீரர் உரைக்கு விளக்க உரைகள் தேவைப்படுவது போல். நாம் கலக்கம் அடையவேண்டும், நம் போராட்டம் உருகுலைய வேண்டும் என்பதே எதிரிகளின் இலட்சியம் இந்த வாதங்களும் பிரதி வாதங்களும் அந்த பாதையில் தான் நம்மை இட்டுச்செல்கின்றன, இதில் குளிர் காய்பவன் எதிரியே! இந்த தருணத்தில் அவன் தடயங்களை எல்லாம் அழித்தும், சாட்சிகளை கைது செய்தும், சித்ரவதை செய்தும், விடுதலைக்கு ஆதரவானவர்களை தனிமுகாம்களில் சிறைவைத்துக் கொண்டும் இருக்கின்றான். வெளியுலக தொடர்பு இல்லாத சூழலில் தான் வன்னி உ…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஊடகங்களின் உளறல்களும், பக்கசார்பான பதற்றங்களும் - இராஜவர்மன். தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறார். இருக்க வேண்டும். போராட்டத்தைக் கொண்டு நடத்த வேண்டும் என்ற அவா ஒவ்வொரு தமிழனின் மனதிலும் நிரந்தரமானதாகப் பதிந்ததோடு, பிரார்த்தனையாகவும் அமைந்துவிட்டது. அதுவே எனது பிரார்த்தனையும் கூட. ஆனால் உண்மை அதற்கு மாறுபட்டதாக துரதிஸ்டவசமாக அமைந்துவிட்டால் அதனை அவர் நியமித்த பிரதிநிதியே அறிவிக்கும் போது அதனை நேர்மையாக மக்களிடம் எடுத்துச் செல்வதில் என்ன தயக்கமிருக்கிறது என்பதே எங்களது தற்போதைய கேள்விக்குறி. தமிழீழத் தேசியத் தலைவரால், தமிழர்களின் தலைமையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட, அதிகாரபூர்வமுள்ள ஒரு தொடர்பாக தற்போது புலம்பெயர் தமிழர்களிற்கு உள்ளவர் திரு. கே.பி. பத்மாநதன…
-
- 0 replies
- 471 views
-
-
யாழ்க் கள உறவுகளிடம் ஒரு பணிவான வேண்டுகோள். யாழ்க் கள உறவுகளிடம் ஒரு பணிவான வேண்டுகோள். பரபரப்பான செய்திகளுக்கப்பால் ஒரு பக்குவம் தேவைப்படுகிறது.பரபரப்பான விடயமுமல்ல.பாரதூரமான விடயமாகும்.எனவே சற்று நிதானியுங்கள் உறவுகளே. தற்போது வந்த செய்தியைப் பார்த்த சிலருக்கு மாரடைப்புக் கூட ஏற்பட்டுள்ளது. உளவியல் ரீதியிலான அதிர்வுகள் ஏற்பட்டு நகரமுடியாமல் இருக்கிறது. எம்வாழ்வோடு கலந்த எம்தேசிய ஒளி என்றுமே மறையாதது. ஆனால் தயவுசெய்து இத்தோடு விட்டுவிடுங்கள். தமிழினம் ஒரு நம்பிக்கையோடு நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் நிதானமான செயற்பாடுகள் தேவை.
-
- 52 replies
- 13.1k views
-
-
சிங்களம் நல்ல தெரிஞ்ச யாரவது இந்த மொழிபெயர்ப்பு உண்மையானதா எண்டு சொளுங்கூ http://www.youtube.com/watch?v=b1TavoV4eFI "ஐடென்டிடி காட் ஐடென்டிடி காட்.. ஐடென்டிடி காட் இங்க வை இங்க காட்டு தம்பி இந்தபக்கம் கொஞ்சம் திருப்பு , இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் (பலரது பேச்சுகள் கேட்கின்றன ) யாரோடதோ தெரியல்ல கிடைச்சது அடிச்சதுதான் ( இது அடிச்ச ஆயுதத்தை குறிக்கிறதோ அடிபட்ட நபரை குறிக்கிறதோ தெரிய வில்லை ) இவன் பேசினான் (ஏசினான் ) பாதையால் போறவங்களுக்கு (அதாவது ஆமிக்காரனுகளுக்கு ) யாரு பேசினான் ? இவன்தான். தலைக்கு அடிச்சது யாரு ? ஆ ...? தலைக்கு யாரு அடிச்சது ? நாங்கதான் அடிச்சது ...........(மற்றைய சொல் விளங்கவில்லை ) …
-
- 1 reply
- 2.3k views
-
-
கனடா கதறுகிறது கனடா சி ரி ஆர் சீ எம் ஆர் ஆகியன தலைவர் இறந்துவிட்டதாக பத்மநாதன் சொன்ன அறிக்கையை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்
-
- 45 replies
- 9.4k views
-
-
ஒவொரு தமிழனும் இன்று இன விடுதலையை எமது நெஞ்சில் தாங்கி நிற்கின்றோம். கடந்த 30 வருட போராட்டத்தையும், எமது இழப்புகளையும், எமது அவலத்தையும் எமது விடுதலையாக மாற்றுவோம். எமது 30 வருடகால போராட்டம் எதற்காக? இத்தனை உயிர்களை பலி கொடுத்தது எதற்காக? இந்த அவலங்களை தாங்கியது எதற்காக? அடிப்படை மூலகாரணம் என்ன? இது தான் எம்முன் இன்று நிற்கவேண்டும். எமது ஒற்றுமை தான் இன்று முக்கியமானது. பதவி போட்டி, எமக்குள்ளே தேவையற்ற விவாதம் இந்த நேரத்திற்கு உகந்தது இல்லை. நான் என்பதை தவிர்த்து நாம் என்று எமது குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும்.. சர்வதேசம் இன்று எமது இனத்தின் அவலத்தை உணர்ந்து கொள்ள தலைபட்டிருக்கின்றது. இது எமது விடுதலையை வென்றெடுக்க ஒரு சந்தர்பமகலாம். இன்று இதை தவற வ…
-
- 0 replies
- 996 views
-
-
'என் தேசத்து மண்ணே! உனக்கு என் ரத்தத்தை தருவேன். இந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்...' அலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இறந்தாரா இல்லையானு மர்மம் ஈழத்தமிழர்களைத் தூங்க விடாம பண்ணிட்டிருக்கிற நேரத்தில் பிரபாகரன் எனக்கு எப்படி தொடுவானம் ஆனாருன்னு யோசிச்சேன். நாம தொடணும் நினைக்கிற, ஆனால் தொடமுடியாத வானமா இருக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை. சரி, தவறு முடிவுகளைத் தாண்டி பிரபாரகனின் வாழ்வுக்கும் அர்த்தம் இருக்கு. மரணத்துக்கும் பெருமை இருக்கு. கன்னடாதான் எனக்கு தாய்மொழி. இந்தியாதான் என் தாய்நாடு. இலங்கையில் தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும். அடக்கு முறை உங்களை எந்தத் திசைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் 1974ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது சிறீலங்கா (முன்னாள் இலங்கை) எனும் தீவில் தமிழர்களின் இருப்பைக் கூட இந்த உலகம் சரியாக அறிந்திருக்கவில்லை. ஏன் உலகெங்கும் பரந்து வாழ்ந்த தமிழர்களுக்கே சிறீலங்காவில் அரசியல் உரிமையிழந்து, சொந்த நிலத்தில் அடிமைகளாக வாழ்ந்த தமிழர்கள் பற்றிச் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. அதுமட்டுமன்றி 1974 இற்கு முன்னும் சரி அதன் பின்னரும் சரி ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி பயங்கரவாத அரசுகள் பல தடவைகள் இன வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்தன. உலகுக்குத் தெரியத்தக்கதாக 1983 இல் ஒரு பெரிய இனக்கலவரமே நடந்து முடிந்திருந்தது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வீதியில் டயர் போட்டு எரிக்கப்பட்டனர். ஆனால் அந்த மனித உயிர்…
-
- 4 replies
- 996 views
-
-
அன்பான உறவுகளே எமது மக்களின் உயிரின் மேல் ஆணையாக உங்களை போல தமிழீழ மண்ணின் மேல் ஆசை வைத்தவர்களில் நானும் ஒருவன். என்றாலும் எமது மக்களில் இழப்புகள் ஆதீதமானைவை. யாரும் கண்டு கொள்ளவில்லை. அனாதைகளாக எமது மக்கள் ஆக்கப்பட்டுளோம். வீதி வீதியாக நாடு நாடாக மொழி வாரியாக எமது புலம் பெயர்ந்த மக்களால் எடுக்கப்பட்ட போராட்டங்கள் எதுவும் ஏன் எடுபடவில்லை? மாறாக ஆயிரக்கணக்கான மக்கள் சான்றிலாமல் கொல்லப்பட்டது தான் மிச்சம். மீண்டும் ஏதாவது போராட்டங்கள் உலக அளவில் இனி மேல் எடுபடும் எனில் எங்களை போல் முட்டாள்கள் உலகில் இருக்கவே முடியாது. உதாரணமாக வெள்ளை கொடியோடு சென்ற போராளிகளே உலகுக்கு தெரிந்தே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
-
- 13 replies
- 2.6k views
-
-
உலகத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒரு சிலர் பணத்துக்கு விலைபோய் தவறான பிரச்சாரங்களில் ஈடுபவடுவதாக தெரிகின்றது. புலம் பெயர் தமிழர்களின் இன்றைய பிரச்சாரங்களை முறியடித்து தன்னுடைய எண்ணத்தை ஈடேற்றுவதற்காக ஒரு சிலரை விலைக்கு வாங்கியுள்ளதாக தெரிகின்றது. அவர்களும் கனடா போன்ற நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி போராட்டத்தை மழுங்கடிக்க முயல்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சாரம் தலைவரை சுற்றி பின்னப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். இப்போது அவர்கள் கையிலெடுத்திருப்பது நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்க போகின்றோம் என்று வீடுவீடாக சொல்கின்றார்களாம். தயவு செய்து கனடிய தமிழர்கள் இவர்கள் பற்றி கவனமாக இருங்கள். இவர்கள் உங்கள் வீடுகளுக்கு வந்தால் உங்கள் பகுதி அமைப்ப…
-
- 16 replies
- 3k views
-