நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
ஓய்ந்தது அரசமைப்பு நெருக்கடி; ஓயாத அரசியல் நெருக்கடி எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 டிசெம்பர் 19 புதன்கிழமை, மு.ப. 01:30 Comments - 0 ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “ரணில் மீண்டும் பிரதமரானால் நான் ஒரு மணித்தியாலமேனும் பதவியில் இருக்க மாட்டேன்” என்று கூறினார். மற்றுமொரு முறை அவர், “நாடாளுமன்றத்தில் 225 பேரும் விரும்பினாலும் நான், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கப்போவதில்லை” எனக் கூறினார். ஆனால், இப்போது அவரே, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்து, அவரோடு அரசாங்கத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒக்டோபர் 26ஆம் திகதி, பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள…
-
- 0 replies
- 840 views
-
-
ஒரேயொரு வைத்தியரும் பல்லாயிரம் கர்ப்பிணிகளும் மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 12:29 Comments - 0 குருணாகலைச் சேர்ந்த வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, அவர் தனிப்பட்ட ரீதியில் விமர்சனங்களுக்கும் விசாரணைகளுக்கும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளமை ஒருபுறமிருக்க, மறுபுறுத்தில், மருத்துவத் தொழில் மீதான வேறுபல விமர்சனங்களும் புதுவகையான நம்பிக்கையீனங்களும் தோன்றியுள்ளதைக் கூர்ந்து கவனிப்போரால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. உலகெங்கும் வாழும் மனிதர்கள், கண்கண்ட தெய்வங்களாக மருத்துவர்களைப் பார்க்கின்றனர். தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக, ஆன்மீகத்துக்கு அப்பாற்பட்டதாக மேற்கொள்ளப்படும் சேவையாக, மருத்துவத…
-
- 0 replies
- 723 views
-
-
தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை வரை ‘சமஷ்டி’ கோரிக்கை தொடரும்; சித்தார்த்தன் நேர்காணல் July 28, 2020 ரொஷான் நாகலிங்கம் வடக்கு, கிழக்கில் செயற்படும் அனைத்து கட்சிகளும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கோரி நிற்கின்றன. தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வு எட்டும்வரை இக்கோரிக்கை தொடர்ந்து கொண்டிருக்கும். தென்னிலங்கை கட்சிகள் இந்த நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை மனதில் கொள்வார்களானால் தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு ஓர் நியாயமான தீர்வை காண முன்வருவர் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கேள்வி – சமஷ்ட…
-
- 0 replies
- 497 views
-
-
இரகசியங்களை ஜனாதிபதி வெளியிடாமல் இருக்கலாமா? எப்போதும் தமது எதிரிகளுக்கு ஆயுதம் வழங்காது பேசுவதில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 19ஆம் திகதி மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் கூட்டரசாங்கத்துக்கு ஒரு வருடம் பூர்த்தியாவதையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது வசமாக மாட்டிக் கொண்டார். கூட்டு எதிர்க்கட்சி எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களை நேரடியாகக் குறிப்பிடாமல் அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, சிலர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாகக் கூறியிருப்பதாகவும் அவ்வாறு அவர்கள் புதிய கட்சியொன்றை ஆரம்ப…
-
- 0 replies
- 327 views
-
-
புலியை பிடறியைப் பிடித்து பொடாவில் போட்டதும், அடிபட்ட புலின்னு நெனச்சா... பூனையாக்கி போயாஸ் தோட்டத்தில் கட்டியதால் என்னவோ சூடுபட்ட பூனையாக கூட இல்லாமல்... தொகுதி உடன்பாட்டு சந்திப்பு (கற்பனைதான்) ஜெ : மிஸ்டர் வைகோ, உங்கக் கட்சியில் தான் இப்ப யாருமே இல்லையே, எப்படி 6 சீட் கேக்குறிங்க ? வைகோ : கருங்காலிகள் ஓடிவிட்டார்கள், கோடிக்கணக்கான கட்சித்தொண்டர்கள் என்னோடுதான் இருக்கிறார்கள் ஜெ : மிஸ்டர் வைகோ...நாம பொதுக்கூட்டம் போடப் போறதுல்ல...பஸ்ஸில லாரியில் ஆள் அழைச்சிட்டு வர...பொதுத் தேர்தல்.... உங்க கட்சியில் இருப்பவர்களெல்லாம் வெறும் தொண்டர்கள்...அதுல யாரை நிறுத்துவிங்க வைகோ : அது வந்து.... ஜெ : மூணு சீட் தருகிறேன்......அத வச்சு வைகோ : (இந்த அம்மா ம…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை "தீவிரவாதம்" "தீவிரவாதம்" என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே...! * கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா? * ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்…. உங்கள் ஜனநாயகமா?. * பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்…. உங்கள் ஜனநாயகமா? * மட்டக்களப்பில் வயத…
-
- 0 replies
- 585 views
-
-
விக்னேஸ்வரனின் அறிக்கையும்... தமிழ்க் கட்சிகளின் ஐக்கியமும். நிலாந்தன். தமிழ்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரான விக்னேஸ்வரன் கடந்தகிழமை ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதிலவர் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டிருந்தார். எல்லாக் கட்சிகளும் ஏறக்குறைய சமஸ்டியைத்தான் கேட்கின்றன. எனவே கட்சிகளின் இறுதி இலக்கை பொறுத்தவரை வேறுபாடு இல்லை. ஆனால் கட்சிகளை ஐக்கியப் படுத்த முடியவில்லை என்ற தொனிப்பட அவருடைய அறிக்கை அமைந்திருக்கிறது. கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் பொதுவாக தயக்கமின்றி முன்வரும் ஒருவர் அவர்.எனவே கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்பதற்காக அவருக்கு தகமை உண்டு. ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் அரசியலை தொகுத்துப் ப…
-
- 0 replies
- 194 views
-
-
கடனும், கப்பலும். – நிலாந்தன். யுவான் வாங் – 5 என்ற பெயருடைய சீனக் கப்பல் வரும் 11ம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. கப்பல் கிட்டதட்ட ஒரு வார காலம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கும். இது ஏற்கனவே கோட்டாவின் காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நிகழும் விஜயம். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுக்கூடாகப் பார்த்தால் அது இயல்பான ஒன்று. முன்னைய அரசாங்கம் ஏற்றுக்கொண்ட ஒரு விடயத்தில் இருந்து இப்போது இருக்கும் அரசாங்கம் பின்வாங்குவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. இப்படி ஒரு கப்பல் வரப்போகிறது என்பது இந்தியாவுக்கும் ஏற்கனவே தெரியும். ஆனால் இந்தியா அந்த கப்பலின் வருகை தொடர்பாக அ…
-
- 0 replies
- 304 views
-
-
ஜெனீவா-கட்டுநாயக்க-முள்ளிவாய்க்கால் கடந்த மே 30 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமான மனித உரிமைகள் பேரவைத் தொடர்பற்றிய கண்ணோட்டமே இது. மேற்படி பேரவையின் கூட்டத் தொடர், இலங்கையின் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அண்மையில் நிகழ்ந்த அடக்குமுறை, அராஜகம் மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட் டத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடூரங்கள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய ராவய பத்திரிகைக்கு எழுதிய கண்ணோட்டத்தின் தமிழாக்கம். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமானது. அன்றைய கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் சட்டத்துக்கு முரணான படுகொலைகள் தொடர்பாக ஐ.நாவின் விசேட பிரதிநிதி கிறிஸ்தோ கயின்ஸ் உரை…
-
- 0 replies
- 700 views
-
-
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எழுவரின் நிலை என்ன அவர்கள் மன நிலை எப்படி இருக்கிறது எனும் மனதை நெகிழ வைக்கும் *நேரடி ரிப்போட் நீண்ட நாட்களாக கைதான இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது திருமணமான முருகன், சாந்தன், ராபட், பயஸ் எப்படி இருக்கிறார்கள் அவர்களை சென்று நேரடியாக பார்த்து வந்து கலக்கத்துடன் விளக்கம் அளிக்கும் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான வ.கௌதமன். இவற்றுடன் 25 ஆண்டுகளாக இவர்கள் 7 பேரின் விடுதலை குறித்து தொடர்ந்து கொண்டு இருக்கும் சர்ச்சைகளுக்கு இன்னும் சில தினங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனக் கூறப்பட்ட சூழ் நிலையில், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் இன்றைய தினம் விடுதலையாகக் கூடும…
-
- 0 replies
- 314 views
-
-
சங்கரி கூட்டிய புதிய கூட்டணி ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்கிற புதிய அரசியல் கூட்டணியொன்று, கடந்த வாரம் புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. உதிரிகளின் கூட்டணி என்கிற எதிர்வினையை ஆரம்பத்திலேயே எதிர்கொண்டுள்ள இந்தப் புதிய கூட்டணி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தாக்கங்களை ஏற்படுத்தும் வல்லமை பெற்றதா அல்லது மற்றொரு தேர்தல் கூட்டணியா, என்கிற விடயங்கள் பற்றியே இந்தப் பத்தி கவனம் செலுத்த விளைகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் நீண்டநாள் காத்திருப்பின் பின்னர், ஒருவாறு புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த காலங்களைத் தவிர, மற்றை…
-
- 0 replies
- 306 views
-
-
-
மக்கள் நோயாளிகளா? July 28, 2020 கடந்த 2019 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் “கோட்டா” வந்துவிட்டால் … எனும் எதிர்பார்ப்பு மக்களிடத்தில் பெருமளவில் இருந்தது. குறிப்பாக பெரும்பான்மை ஆதிக்க சக்திகளிடத்தில் அந்த எதிர்பார்ப்பின் அளவு உச்சத்தில் இருந்தது. அந்த உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளில் ஒன்று முஸ்லிம்களை அதிகம் வாலாட்ட விடமாட்டார். நாட்டில் எல்லாமே சொன்னது சொன்னபடி நடக்கும். வீதி ஓர குப்பைகள் எல்லாம் இருந்த இடம் காணாமல் போகும். அரச அதிகாரிகள் வினைத்திறனாக வேலை செய்வார்கள் எந்தவகையான பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வு உண்டு … இப்படி பற்பல காரணங்கள். எதிர்பார்த்தது போலவே கோட்டா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுவிட்டார். அவரது ஐந்தாண்டு பதவி கா…
-
- 0 replies
- 424 views
-
-
நிகழ்வுகள் 2020: கொரோனா முதல் அரசியல் மோதல் வரை... உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மக்கள் பட்ட அவஸ்தைகள், பொருளாதார மந்தநிலை, இயற்கை சீற்றங்கள் என கடுமையான சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2020ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறுகிறது. இந்த ஆண்டு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம். ஜனவரி ஜன. 2 * ஆஸ்திரேலியாவில் 2019 ஆம் ஆண்டு தொடங்கிய காட்டுத்தீயால் லட்சக்கணக்கான வன உயிரினங்கள் உயிரிழந்தன. இந்த காட்டுத்தீயால் ஆஸ்திரேலியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஜன. 3 * அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலின் உச்சபட்சமாக ஈரானின் புரட்சிப்படை தளபதி…
-
- 0 replies
- 568 views
-
-
பாக். பிரதமரின் விஜயம்; இந்தியாவின் அணுகுமுறைக்கு இராஜதந்திர ரீதியில் பதிலளிக்கிறதா இலங்கை ? இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு இராஜதந்திர நகர்வுக்கான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. அதன் பிரதிமைகள் இலங்கைக்கு இலாபகரமானதாக அமையுமா அல்லது நெருக்கடியை ஏற்படுத்துமா என்ற கேள்வியுடன் அது தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை வருகைக்குப் பின்னர் அதீதமான மாற்றங்கள் இலங்கைப் பரப்பில் ஏற்படத் தொடங்கியுள்ளதாக கடந்த பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு பதிலளிக்கும் விதத்தில் உள்நாட்டிலும் பிராந்திய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் இலங்கை ஆட்சியாளர்கள் இயங்க ஆரம்பித்துள்ளனர். அதன் ஒரு நகர்வாகவே பாகிஸ்தானின் பிரதமர் இலங்கை விஜயம் அமையவுள்ளதா…
-
- 0 replies
- 330 views
-
-
தொற்றுநோய்க்கால விலை உயர்வும் மக்கள் துயரும் September 11, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட்— கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தை ஒரு போர்க்கால நெருக்கடியாக மாற்றியுள்ளது வணிகச் சூழல். குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் வர்த்தகச்சூழல். நெருக்கடி உணர்வைச் சமூக மட்டத்தில் உண்டாக்கினால் பொருட்தட்டுப்பாட்டுப் பதற்றம் மக்களிடத்திலே தானாகவே உருவாகும். அப்பொழுது பொருட்தட்டுப்பாட்டைப் பற்றியும் அவற்றின் விலையேற்றத்தைப் பற்றியும் கேள்விகளை எழுப்பவோ விசாரணையைச் செய்யவோ முடியாது. அதற்குரிய நிர்வாக நடவடிக்கைகள் இல்லாத நிலை இதற்கு வாய்ப்பளிக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பிழைத்துக் கொ…
-
- 0 replies
- 594 views
-
-
இலங்கையின் யதார்த்த நிலைமையை மக்களுக்கு புரிய வைக்க அரசியல் தலைமைகள் இன்னமும் தயாரில்லை June 9, 2022 — கருணாகரன் — நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குத் தீர்வு எப்போது கிடைக்கும்? எப்படிக் கிடைக்கும் என்பதே இன்று மக்களின் மனதில் உள்ள ஆயிரம் டன் கேள்வியாகும். புதிய பிரதமர், (பழைய ஆட்களுடன்) புதிய அமைச்சரவை என்ற பிறகும் நெருக்கடி தீருவதாக இல்லை. பதிலாக மேலும் பொருட்களின் விலை கூடியிருக்கிறது. பஸ் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருட் தட்டுப்பாடு நீங்கவில்லை. அப்படியென்றால் அடுத்து என்ன நடக்கும்? எப்படி இனி வரும் நாட்களைச் சமாளிப்பது? இதன் முடிவென்ன? இந்த மாதிரிக் கேள்விகள் மக்களிடம் விட…
-
- 0 replies
- 395 views
-
-
இலங்கை இந்தியத் தரப்புக்கள் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஆளாளுக்குக் கறுவிக் கொண்டு நிழல் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கையில் மறு புறத்தில் சிப்பாய்கள் காணாமற்போன விடயத்தில் மர்ம முடிச்சு அவிழும் சூழல் ஏற்பட்டிருப்பதாக இப்போது தெரியவருகின்றது. இலங்கைக் கடற்படையின் நான்கு சிப்பாய்கள் முல்லைத்தீவுக் கடலில் திடீரென மாயமாக மறைந்தமை, அதன் பின்னர் சில தினங்கள் கழித்து இராமேஸ்வரம் மீனவர்கள் நால்வர் இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகே காணாமற்போனமை போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் மிகுந்த பரபரப்பான செய்திகளாக அடிபட்ட போதிலும், தமிழகத் தேர்தல் சுட்டுக்கு மத்தியில் அந்த விவகாரங்கள் அப்படியே அமுங்கித்தான் போயின. ஆனாலும், இந்த மர்ம மறைவுக்குப் பின்னால் கட்டவிழும…
-
- 0 replies
- 1.3k views
-
-
" ஐக்கியத்திற்கு தடையாகும் அரைவேக்காட்டு அரசியல் " - சிவசக்தி ஆனந்தன் நேர்காணல்:- ஓமந்தை நிருபர் தற்போதைய சூழலில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. அனைவரும் இணைந்த வடக்கு–-கிழக்கில் ஒரு சமஷ்டி ஆட்சிமுறையை ஏற்படுத்துவதையே உடனடி இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். அப்படியிருக்க ஈ.பி.ஆர்.எல்.எப்.கொள்கையிலிருந்து விலகிவிட்டதாக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது, அரைவேக்காட்டு அரசியலையே வெளிப்படுத்துகின்றது. இதுவே கொள்கையிலிருந்து விலகிச் செல்லும் கூட்டமைப்புக்கு மாற்றான வலுவான அணி ஐக்கியமாக உருவாகுவதற்கும் தடையாக இருக்கின்றது என்று ஈ.பி.ஆர்.எல்.…
-
- 0 replies
- 776 views
-
-
பௌத்த தேசிய சிங்களவாதத்தை மிக அதிகளவிற்கு பயன்படுத்துவதன் மூலம் தேர்தலில் வெற்றிபெற முயலும் கோத்தாபய ராஜபக்ச- இந்திய ஊடகம் இலங்கையின் சனத்தொகையில் 70 சதவீதமாக உள்ள பெரும்பான்மை சிங்களவர்களின் வாக்குகளை பெறுவதற்காக கோத்தாபய ராஜபக்ச மிக அதிகளவிற்கு பௌத்த சிங்கள தேசியவாதத்தை பயன்படுத்துகின்றார் என இந்தியாவின் நியுஸ் 18 தெரிவித்துள்ளது. ஜிஆர் என அழைக்கப்படும் கோத்தாபாய உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க ஐக்கியதேசிய கட்சி அரசாங்கம் தவறியது ,படையினரை துன்புறுத்தியது என இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்கின்றார் எனநியுஸ் 18 தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என வாக்குறுதி அளிக்கும் அவர் பொருளாதார மந்த நிலைக்காக ஐக்கியதேசிய கட்சியை ச…
-
- 0 replies
- 208 views
-
-
துருக்கி ஆட்சி கவிழ்ப்பு: சந்தேகத்தின் அடிப்படையில் 181 பேர் கைது! துருக்கியில் ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் மற்றும் நீண்ட ஆய்விற்கு பின்னர், இவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) துருக்கி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். மேலும், 10 மருத்துவர்கள் உட்பட 18 பேரிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்துவதற்காக, அவர்களையும் பொலிஸார், காவலில் அழைத்துச் சென்றனர். இதனை அந்நாட்டு நீதித் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கீழ் இறக்கி, இராணுவ ஆட்சியை கொண்டுவர குர்திஸ்தான் தீவிரவாத அ…
-
- 0 replies
- 276 views
-
-
"எம்.பிக்களின் எண்ணிக்கை அவசியமில்லை": உரிமைகளை கேட்க தைரியமும் அக்கறையுமே தேவை- சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு நேர்காணல் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது * ரணிலை விட சில விடயங்களை ஜனாதிபதி கோத்தாபயவிடம் எதிர்பார்க்கலாம் * எமது பிரசாரங்கள் மூன்று அடிப்படைகளில் அமையும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றால் அது தவறான எண்ணமாகும். சரியான சந்தர்ப்பத்தில் நிபந்தனைகளுடன் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் திடமாகவும் கொள்கை பிடிப்போடும் கேள்வியெழுப்பும் திராணி கொண்ட ஒருவர் அல்லது இருவர் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலே போதுமானது. அவ்வாறானவர்கள…
-
- 0 replies
- 272 views
-
-
சமஷ்டி தீர்வுத் திட்டமும் இனவாதிகளின் கூச்சலும் புதிய அரசியலமைப்பில் சமஷ்டித் தீர்வு உள்ளடக்கப்பட்டுவிட்டது என்ற புதிய கண்டுபிடிப்பை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச எடுத்துக்கூறியிருக்கின்றார். கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர், யுத்தத்தின் மூலம் பெறப்பட முடியாத சமஷ்டியை தற்போது புதிய அரசியலமைப்பினூடாக பெற முயற்சிக்கின்றார்கள். தமிழர்களுக்கான பிராந்திய சமஷ்டி ஆட்சியை விரும்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் இணைந்து புதிய…
-
- 0 replies
- 348 views
-
-
இந்தக் கட்டுரையை எங்கிருந்து, எவ்விதம் ஆரம்பிப்பது எனப் புரியவில்லை. எவ்வாறிருப்பினும், ஹிசாலினி என்ற இளம் மொட்டு தீயில் கருகிய விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுவதை வலியுறுத்துகின்ற அதேநேரத்தில். பொதுவெளியில் பேசப்படாத விடயங்களை இன்னுமொரு கோணத்தில் நோக்க இக்கட்டுரை விளைகின்றது. கடந்த சில வருடங்களாக தனக்கான நீதியைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் றிசாட் பதியுதீன் என்ற முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவரது குடும்பத்துடனும், வாழ்க்கையைத் தேடி கொழும்புக்குப் போன ஒரு ஏழைப் பெண் பிள்ளையின் மரணத்திற்கும் இடையிலான ஒரு விவகாரமாக ஹிசாலினியி;ன் மரணம் மாறியிருக்கின்றது. ஹிசாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும். யார் செய்தாலும் பிழை பிழைதான் என்ற அடிப்படையி…
-
- 0 replies
- 322 views
-
-
அயலுறவுக்கு முதலிடம் இலங்கையில் நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டுச் செல்லும் நெருக்கடி நிலைமையை உலகநாடுகளும் அமைப்புகளும் நிறுவனங்களும் அவதானி கொண்டுதான் இருக்கின்றன. நிலைமை போகும் போக்கை பார்க்குமிடத்து. பசி, பட்டிணி, பஞ்சம், பட்டினிச்சாவு கைக்கு எட்டிய தூரத்திலேயே எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றது. அயல் நாடான இலங்கை இந்தளவுக்கு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பெரியண்ணா (இந்தியா) ஓடோடிவந்து உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கின்றது மத்திய அரசாங்கத்துக்கு அப்பால், தமிழக அரசும் தமிழக மக்களும் உலருணவுப்பொதிகளை அனுப்பிவைத்துக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு இந்தியா பல்வேறு வழிகளிலும்…
-
- 0 replies
- 272 views
-