நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
தமிழக அரசியல் வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்கள் இளைஞர்கள். இந்திய அரசியலைப் பொறுத்த வரையிலும், எதிர்ப்பு போராட்டங்கள், உரிமைப் போராட்டங்கள் என்று எதை எடுத்தாலும் அது தமிழர்களிடத்தில் இருந்து, தமிழகத்தில் இருந்து தான் மற்றைய மாநிலங்களுக்கும் பரவும். கடந்த 1965ம் ஆண்டு தமிழகத்தில் நிகழ்ந்த மொழிப்போர், இன்றளவும் பேசப்படும் அரசியல் மற்றும் உரிமை மீட்புப் போராக வரலாறாகி நிற்கிறது. அதனைத் தொடர்ந்து ஈழத்தில் நிகழ்ந்த இனவழிப்பை கண்டித்து 1980ம் ஆண்டுகளில் தமிழகத்தில் தன்னெழுச்சியாக அன்றைய மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்திருந்தனர். அதேபோன்று, 2009ம் ஆண்டு ஈழத்தில் நிகழ்ந்த இனவழிப்பிற்கும் மாணவர்கள், இளைஞர்கள், ஈழ உணர்வாளர்கள் …
-
- 4 replies
- 636 views
-
-
களத்தில் திரு.சம்பந்தனா?, திரு.விக்னேஸ்வரனா? அல்லது வேறு யாருமா? புலம்பெயர் மேற்குலகில் திரு.உருத்திரகுமாரனா?, இந்தியாவில் திரு.காசி ஆனந்தனா? அல்லது வேறு யாருமா? இக்கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ நிச்சயமாக தமிழ்த் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஐ.நா. உள்ளக விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி 70,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இத்தொகை மேலும் அதிகமாக இருக்க முடியுமே தவிர குறையாது. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் நிகழ்ந்த மிகப் பெரும் மனிதப் படுகொலை இது என்பதும் அதிகம் ஆதாரங்களைக் கொண்ட ஒ…
-
- 0 replies
- 454 views
-
-
பொருத்து வீடுகள் மலையகத்தில் பொருத்தமாக இல்லையா? மலையக மக்களின் வீட்டுத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன. பெரும்பாலான மக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் மத்தியில் லயன் அறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். லயத்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனிவீட்டு கலாசாரத்தை இம் மக்களின் நலன் கருதி முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. எனினும் இதற்கான முன்னெடுப்புகள் காத்திரமானதாக இல்லை. மந்த கதியிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கிடையில் பொருத்து வீட்டுத் திட்டத்தினை மலையகத்தில் அமுல்படுத்துவது தொடர்பில் தற்போது ஆலோசனைகள் இட…
-
- 0 replies
- 974 views
-
-
முறுகல்களுக்கு முடிவில்லாத முஸ்லிம் காங்கிரஸ்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவான காலத்திலிருந்து அக்கட்சிக்குள் சர்ச்சைகளுக்கும் உட்பிளவுகளுக்கும் பஞ்சமிருக்கவில்லை. ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் உயிரோடிருந்த காலத்திலும் மு.கா. பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. பலர் கட்சியை விட்டும் விலக்கப்பட்டனர். பலர் தாமாகவே வெளியேறினர். பின்னர் அஷ்ரபின் மரணமே பெரும் முரண்பாடுகளுக்கும் பதவிப் போட்டிகளுக்கும் வித்திட்டது. அதனைத் தொடர்ந்து கட்சி இரண்டாக மூன்றாக மேலும் பல புதிய அணிகளாக உடைந்து போனது. பலர் மு.கா. எனும் அரசியல் வாழ்விலிருந்தே முற்றாக ஒதுங்கிப் போயினர். ரவூப் ஹக்கீம், தலைவர் பதவியை ஏற்ற…
-
- 0 replies
- 362 views
-
-
சோமாலியா குழந்தைகளுக்கு சொத்தில் பாதி: ஏ.ஆர்.ரஹ்மான்! மாஷா அல்லாஹ்! ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் அவார்டு வாங்கிய தமிழன். இதோ மீண்டும் 2016&க்கான ஆஸ்கர் விருதும் ஓ.கே. ஆகிவிட்டது. தமிழ் படங்களுக்கு இசை அமைப்பதை குறைத்துக் கொண்ட ரஹ்மான் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு அவரது சம்பளம் பல மில்லியன் கோடிகள். எங்கு எந்த நாட்டில் இருந்தாலும், ஐந்து வேளை தொழுகையை கட்டாயமாக நிறைவேற்றுவார். அதே போல எந்த நாட்டில் இருந்தாலும் ரம்ஜான் நோன்பு கட்டாயமாக இருந்து விடுவார். தான தர்மம் செய்வதிலும் தயாள குணம் கொண்டவர் ரஹ்மான். ஒரு இசை முயற்சிக்காக சோமாலியா …
-
- 9 replies
- 1.1k views
-
-
இன்று காஷ்மீர் தீவிரவாதம் பற்றி நாளேடுகளில் படிக்கின்ற வாசகர்கள் பலர் காஷ்மீர் என்றென்றைக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்து வருகிறது என்று கருதக்கூடும். அது உண்மையல்ல. காஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாக படங்கள் ஆதாரங்களுடன் உணர்த்துகிறது இந்த வீடியோ. செப்டம்பர், 1999-ல் புதிய ஜனநாயகம் வெளியிட்ட”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?” என்ற சிறு வெளியீட்டை அடிப்படையாக வைத்து இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாருங்கள், பகிருங்கள்! vinavu.com
-
- 1 reply
- 1.5k views
-
-
தமன்னாவும் நாடாளுமன்றமும் ஆடைகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்த ஆண்டு, பல்வேறு வழிகளில் மோசமானதாக அமைந்தது. உலகமெங்கிலும் அதிகரித்திருக்கும் வன்முறைகளும் பிரிவினைகளும், இந்த ஆண்டு எப்போது முடியுமென்ற எதிர்பார்ப்பையே, பல்வேறு தரப்பினருக்கும் ஏற்படுத்தியிருக்கும். ஆனால், விடைபெறும் நேரத்திலும், சர்ச்சைகளும் இரத்தங்களுமின்றி விடைபெறப் போவதில்லை என்ற திடசங்கற்பத்துடன், இவ்வாண்டு, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கிறது. பிரதானமாக இரண்டு விடயங்கள், அண்மைய சில நாட்களில் பேசுபொருட்களாகியிருக்கின்றன. ஒன்று, இலங்கையின் நாடாளுமன்றம் சம்பந்தமானது. அடுத்தது, தமிழக நடிகை தமன்னா பற்றியது. இந்த இரண்டு விடயங்களுமே எவ்வாறு ஒன்றுக்…
-
- 0 replies
- 364 views
-
-
-
- 1 reply
- 462 views
-
-
மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பெரும்பான்மையினரிடையே ஏற்பு நிலை அவசியம் மலையக மக்கள் இந்நாட்டில் தனித்துவம் மிக்கவர்களாக விளங்குகின்றனர். இம்மக்களின் பிரச்சினைகள் அநேகமுள்ளன. இந்நிலையில் இப்பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்படவில்லை என்றும் தேசியப் பிரச்சினைகளுக்குள் உள்வாங்கப்படவில்லை என்றும் கருத்துக்கள் பலவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மலையக மக்களின் பிரச்சினைகள் பலவும் தொடர்ந்தும் தீர்க்கப்படாத நிலையிலேயே காணப்படுவதாகவும் தீர்வினை பெற்றுக் கொடுக்கக் கூடியவர்கள் அசமந்தப் போக்கில் செயற்படுவதாகவும் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. …
-
- 0 replies
- 2.3k views
-
-
வெளிநாட்டு ஆதிக்கத்தையும் பொருளாதார அநீதியையும் இல்லாமற் செய்வதற்காக 1950களில் கியூபா புரட்சிவாதிகள் தங்களது ‘ஜூலை 26 இயக்கத்தை’ ஆரம்பித்தார்கள். 1952ஆம் ஆண்டு பல்ஜென்சியோ பாடிஸ்டா சதிப்புரட்சியொன்றைச் செய்து ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து கியூபா மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளையெல்லாம் இழந்தார்கள். சர்வாதிகார ஆட்சி மீது இவர்கள் வெறுப்புக் கொண்டார்கள், எதிர்க்கத் தொடங்கினார்கள். அமெரிக்கர்களைப் பொறுத்த வரை, பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சி கியூபாவில் இருந்த அவர்களின் வர்த்தக நலன்களுக்கு முழுமையான பாதுகாப்பளித்தது. அதனால், அமெரிக்க அரசாங்கம் பாடிஸ்டா ஆட்சிக்கு உறுதியான அரசியல் மற்றும் இராணுவ ஆதரவை வழங்கியது. ஊழல்தனமான கால்நூற்றாண்டுகால பாடிஸ்டா சர்வாதிகாரத்தின் கீழ் சொல்லொணா கஷ…
-
- 0 replies
- 438 views
-
-
இந்த நாட்டில் மீண்டும் பௌத்த இனவாதத்திற்கு நீதித்துறையை பலி கொடுக்கின்ற செயற்பாடுகள் நடைபெற தொடங்கியுள்ளது. நாட்டின் வடகிழக்கு உட்பட தென்னிலங்கையில் நடைபெற்ற அனைத்து இனவாத நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக நின்று செயற்பட்ட எந்த பௌத்த இனவாத பிக்குகளையும் இன்று வரை சட்டம் கைது செய்யவில்லை மாறாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையே செய்து வருகின்றது. இலங்கையின் அரசியல் யாப்பை காரணமாக வைத்து பௌத்த மதத்திற்கான பாதுகாப்பை வழங்கி வரும் அரசாங்கம் இன்று பௌத்த இனவாதத்திற்கும் பாதுகாப்பு வழங்க முயற்சிக்கின்றது. இந்த நாட்டில் பௌத்தத்திற்கு எதிராக எந்த சம்பவங்களும் இடம்பெறாத போதும் பௌத்த இனவாதம் முழுநாட்டையும் பௌத்த நாடாக மாற்றுவதற்கான திணிப்பை மேற்கொண்டு …
-
- 0 replies
- 298 views
-
-
இனவாதம் கக்கும்.... பிக்குகள். (காணொளி.) பிக்குகள் எல்லோரும் இப்ப இனவாதம் கக்கி... தமது இருப்பை காட்டிக் கொள்கிறார்கள். அவற்றின் காணொளிகளை... இந்த பதிவில் இணைக்க உள்ளேன்.
-
- 8 replies
- 545 views
-
-
சமூக, சமய உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதியன்று மனித உரிமைகள் சாசனத்தைப் பிரகடனம் செய்தது. ஐ.நா சபையின் பிரகடனத்திற்கு அங்கீகாரம் அளித்த அங்கத்துவ நாடுகள் பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றுக்கொண்டன. பிரகடனத்தைத் தொடர்ந்து ஐ.நா சபையினால் பல தீர்மானங்கள், உடன்பாடுகள், படிப்படியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும்போது அரசியல் யாப்பு சீர்திருத்த ஆலோசனைகளும் பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப…
-
- 0 replies
- 256 views
-
-
முறையாக செயற்படாத முஸ்லிம் அரசியல் கட்சிகள் எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு அதற்குரிய கருவி முறையாக இருக்க வேண்டும். கருவி பழுதடைந்து இருந்தாலோ, முறையான கருவி இல்லாதிருந்தாலோ அந்த வேலையை சரியாக செய்ய முடியாது. சில வேளைகளில் முறையாக கருவி இருந்தாலும் அக்கருவியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினாலும் உரிய பயனை அடைந்துகொள்ள முடியாது. இதுதான் நியதியாகும். இது போலவே இலங்கை முஸ்லிம்களின் அரசியலை முன்னெடுத்துச் செல்லும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளும் உள்ளன. முஸ்லிம்களின் அரசியலைப் பொறுத்தவரை அதனை செயற்படுத்தும் கருவியாக முஸ்லிம் கட்சிகள் உள்ளன. இக்கட்சிகள் எதுவும் முறையாக இ…
-
- 0 replies
- 537 views
-
-
பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வலிமையான ஆயுதம் கண்ணீர்தான். சிங்களப் பேரினவாதத்துக்கு இது புரிகிறது. அதனால்தான் நவம்பர் 27 ஆம் தேதி தமிழர் தாயகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கடல் அலையெனத் திரண்ட மக்களின் கண்ணீரைக் கண்டு உலகம் மிரள்கிறது. சென்ற வாரம் வரை 'மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு எத்தனைப் பேர் வருகிறார்கள் என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்' என்று நக்கலடித்துக் கொண்டிருந்தது இலங்கை அதன் முகத்திலடிப்பதைப் போல் நவம்பர் 27 ஆம் திகதி ஈழத் தாயகத்தின் மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்திலும் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் திரண்டனர். கண்ணீர் மல்க மாவீரர்களுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைப் பார்த்துத்தான் அதிர்ந்து போயிருக்கிறது இலங்கை. 'விடுதல…
-
- 0 replies
- 345 views
-
-
மலையக பல்கலைக்கழக கனவு நனவாகுமா? ஒரு நாட்டில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பல்வேறு துறைகளுள் கல்வித்துறை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. கல்வித்துறையின் அபிவிருத்தியினால் பல்வேறு சாதக விளைவுகள் ஏற்படும். எனவே தான் உலக கல்வித் துறையின் அபிவிருத்தி கருதி முக்கிய கவனம் செலுத்தி வருகின்றன. இந்த வகையில் உயர்கல்வி குறித்து நாம் பேசுகின்றபோது பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக்கு உந்து சக்தியாக அமைகின்றன. எமது நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. எனினும் மலையக அடையாளத்துடன் கூடிய பல்கலைக்கழகம் ஒன்று இல்லாத நிலையில், மலையக பல்கலைக்கழகம் என்ற ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்ற…
-
- 0 replies
- 466 views
-
-
இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் அனைவரும் எதிர்பார்த்தபடியேதான் மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளுக்காக இடம் பெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் அமைந்திருந்தன. ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. மூன்று தொகுதிகளில் ஒன்றிலாவது தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க. அல்லது விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளில் ஒன்று வெற்றிபெற்றிருந்தால் அதுதான் ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதேவேளை அந்தக் கட்சிக்கு அடுத்தபடியாக பிரதான எதிர்க்கட்…
-
- 0 replies
- 373 views
-
-
மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான காலத்தில் அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சி என்பது உச்ச கட்டத்தினை அடைந்திருக்கிறது. இந்த வளர்ச்சிப் பாதைக்கு வழி அமைத்தவர்கள் போர் வீரர்களே. பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்த நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்று வரை மனித குலம் போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை அமைத்து எமக்குத் தந்து விட்டு மடிந்து போன மானமுள்ள வீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கி அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். அந…
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் அல்லாதோர் நான்கு முக்கிய முக்கிய விடயங்களுக்குப் பயப்படுவார்கள். புத்தர் சிலை, அரச மரம், புத்த விகாரை, காவிச் சீருடை. இந்த நான்கும் அடிப்படையில் ஆக்கிரமிப்புச சின்னங்களாக ஆகியிருப்பது தான் அதன் காரணம். இவை அரச இயந்திரத்தின் ஆசியுடனும், அரசியலமைப்பின் பாதுகாப்புடனும் ஏனைய இன மதத்தவர் மீது செலுத்திவரும் பண்பாட்டு ஆதிக்கம் தான். ஏனைய பண்பாடுகளை நசுக்குவதற்கு மதத்தைப் பயன்படுத்தும் போக்கு உலகளவில் வளர்ந்துவிட்டிருக்கிறது. தான் தோன்றித்தனமாக வகுப்புவாதம் வளர்ந்த நம் நாடுமட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன. நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதத்தை பலப்படுத்துவதில் சகல தரப்பும், சகல முனைகளிலும் த…
-
- 8 replies
- 1.1k views
-
-
https://www.youtube.com/watch?v=WXNwfL6Az58
-
- 0 replies
- 368 views
-
-
புதிய ரூபாய் நோட்டுக்கள் மூலம், கறுப்பு பணத்தை... ஒழிக்க முடியாதது. -திரு முருகன் காந்தி.-
-
- 0 replies
- 746 views
-
-
இலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் .. புதிய தலைமுறைக்காக.. சாத்திரி. இலங்கை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 22 ந் திகதி இரவு காவல்துறையினர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இறந்து போகிறார்கள். அதற்கு மறுநாள் யாழில் சுன்னாகம் என்கிற இடத்தில் சிவிலுடையில் நின்றிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல மாணவர்கள் படுகொலைக்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை நடாத்தியதாக "ஆவா" என்கிற அமைப்பு உரிமைகோரி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.இந்த இரண்டு செய்திகளாலும் உலகத் தமிழர்கள் அனைவரின் கவனத்தையும் யாழ் மீண்டுமொருமுறை தன்பக்கம் திருப்பியுள்ளது . இந்தக…
-
- 3 replies
- 523 views
-
-
அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இனஅழிப்பு அரசின் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ் வன்முறைக் குழுக்கள் தொடர்பான கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியை பலர் புரிந்திருந்தாலும் அது இன்னும் ஆழமாக சென்று அலசப்பட வேண்டிய விடயமாகும். நேரடியான இனஅழிப்பு நடந்து முடிந்த தேசங்களில் தொடர்ந்து இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ள நேரடி உத்திகளை கையாள முடியாத சூழலில் நுட்பமான உத்திகளை இனஅழிப்பு அரசுகள் கவனமாகக் கையாளும். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பலதரப்பட்டவை. அவை இனஅழிப்பு வடிவங்கள்தான் என்பதே சம்பந்தப்பட்ட இனக்குழுமத்திற்கு புரியாத வகையில் அவை நடைமுறைப்படுத்தப்படும். அதை விட கொடுமையானது, ச…
-
- 0 replies
- 343 views
-
-
http://varunamultimedia.me/videos/btv/vmtube2/youth-got-talent/youth-got-talent_-29-10-16/play.html?1 46 நிமிடத்திலிருந்து பாருங்கள்.... சிங்கள தேசத்தின் தொலைக்காட்சியிலும் இந்த பாட்டை தெரிவு செய்து பாடும் இவனது பற்றுக்கு தலை வணங்குகின்றேன். என் கால் நடமாடுமையாஉன் கட்டளைகள் வெல்லும்வரையும்..நீ உண்டு உண்டு என்ற போதும் இல்லை என்ற போதும் சபை ஆடிய பாதமிது நிற்காது ஒரு போதும்...
-
- 5 replies
- 440 views
-
-
முப்பது வருடங்களாக இந்தியாவின் நயவஞ்சக செயல்களின் பலனை தமிழர் அனுபவித்தும் இன்னமும் பலருக்கு பட்டறிவு வரவில்லை போலும். எமது இன உரிமைக்கான தீப ஒளியை காண வேண்டுமாயின் முதலில் எமது இனத்தின் உண்மையான எதிரி நரகாசுரன் யார் என்பதை அடையாளம் காண வேண்டும். கடந்த காலத்தில் இந்திய நரகாசுரனின் நயவஞ்சகத்தை மறந்தவர்களுக்காக வரலாற்றில் இடம் பெற்ற சில முக்கிய சம்பவங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதன் பின்பு உண்மையான நரகாசுரன் யார் என்பதை நீங்களே அடையாளம் கண்டு கொள்ளுங்கள். 1. 1987ம் ஆண்டு அமைதி படை என்ற பெயரில் இலங்கையினுள் நுழைந்த இந்திய இராணுவம் பிரபாகரனை கொல்வதற்கு அவரது இரகசிய இருப்பிடத்தை இலக்கு வைத்து கொலை ஆயுதங்களுடன் கொமாண்டோ படை அணியினரை யாழ் மருத்துவ பீட…
-
- 0 replies
- 353 views
-