கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
இணைய பயன்பாடு ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டு இருக்க, மறு பக்கம் இணைய திருட்டுகள், பிரைவசி சிக்கல்கள், தரவுகளுக்கான பாதுகாப்பின்மையும் மறு பக்கம அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த சிக்கல்களை எதிர் கொள்ள பல முன்னணி நிறுவனங்களும் தங்கள் மின் சாதன பொருட்கள் மற்றும் சேவைகளை பாதுகாப்பான தாக வடிவமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் இணைய சிக்கல்கள் தீர்ந்த பாடில்லை. ஆக, தங்கள் மின்சாதன பொருட்களில் இருக்கும் சிக்கல்களை கண்டு பிடித்து சரி செய்ய கடந்த பல காலங்களாக ஒரு போட்டியை நடத்தி வருகிறார்கள். அது தான் குறை கண்டு பிடிக்கும் போட்டி. இதை ஆங்கிலத்தில் Bug Bounty Program என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட போட்டிகளை ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் என பல முன்னணி டெக் நிறுவன…
-
- 0 replies
- 829 views
-
-
ஒரே நேரத்தில் பல அம்சங்களை தீவிரமாக உருவாக்குவதற்கும், பொது மக்களுக்காக அவற்றை வெளியிடுவதற்கு முன்பு அவற்றை மாதக்கணக்கில் சோதிப்பதற்கும் வாட்ஸ்அப் (WhatsApp) அறியப்படுகிறது. பிரபலமான உடனடி செய்தியிடல் தளம் இந்த ஆண்டு இருண்ட பயன்முறை, புதிய மல்டி-பிளாட்பார்ம் அமைப்பு மற்றும் புதிய யுஐ கூறுகள் போன்ற பெரிய அம்சங்களில் செயல்பட்டு வருகிறது. இது மேம்பட்ட குழு தனியுரிமை அமைப்புகள், கைரேகை திறத்தல் அம்சம் மற்றும் இந்த ஆண்டு நெட்ஃபிக்ஸ் டிரெய்லர் பயன்பாட்டு ஸ்ட்ரீமிங் ஆதரவு போன்ற அம்சங்களைக் கொண்டு வந்தது. ஷேர் டு பேஸ்புக் ஸ்டோரி என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஒருங்கிணைப்பு தொடங்கப்பட்டது. பேஸ்புக்கில் உங்கள் ஸ்டேட்டஸை பகிர்ந்து கொள்ள அனும…
-
- 0 replies
- 689 views
-
-
-
- 0 replies
- 472 views
-
-
கடந்த சில நாள்களாகவே இந்தியர்கள் பலரும் `இனி ட்விட்டரே வேண்டாம்' எனச் சொல்லி பெரிய பரிச்சயம் இல்லாத மற்றொரு சமூக வலைதளத்துக்கு மாறிவருகின்றனர். அதென்ன சமூக வலைதளம் என்று கேட்கிறீர்களா? அதன் பெயர் மஸ்டொடோன், ஜெர்மனியைச் சேர்ந்த யூகன் ரோஹ்கோ என்ற 26 வயது இளைஞரால் உருவாக்கப்பட்ட சமூகவலைதளம் இது. தொடங்கப்பட்டு இரண்டு வருடங்கள்தான் ஆகிறது என்பதால் இன்னும் பெருமளவில் பயன்பாட்டாளர்களைப் பெறவில்லை இந்த சமூகவலைதளம். ஆனால், திடீரென அதிர்ஷ்டம் கதவைத் தட்டியதுபோல கடந்த சில நாள்களில் பல இந்திய வாடிக்கையாளர்களைப் பெறத்தொடங்கியிருக்கிறது இந்த `மஸ்டொடோன்'. இதற்கு என்ன காரணம்? இதற்கு முக்கிய காரணம் கடந்த சில நாள்களாக ட்விட்டரை சுற்றும் சர்ச்சைகள்த…
-
- 0 replies
- 565 views
-
-
ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவிற்கு முன்னரான சாதாரண கையடக்கத் தொலைபேசிகள் ஒரு முறை சார்ஜ் செய்தில் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடியதாக காணப்பட்டது. ஆனால் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் அவை குறைந்தளவு நேரத்திற்கே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய Galaxy S10 Lite எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. இக்கைப்பேசியில் வழமைக்கு மாறாக 4500mAh கொண்ட மின்கலம் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நீண்ட நேரம் கைப்பேசிக்கு சார்ஜினை வழங்கக்கூடியதாக இருக்கும். தவிர பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் Qualcomm Snapdragon 855 mobile processor என்பனவும் …
-
- 0 replies
- 544 views
-
-
`SMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..!' - இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை ஆப்பிளின் iMessage சேவைக்குப் போட்டியாக ஆண்ட்ராய்டு தரப்பில் பல வருடங்களாகத் தயாராகி வந்த மெசேஜிங் முறை RCS. டெலிகாம் நிறுவனங்கள் ஒத்துழைப்புக்காகக் காத்திருந்து காத்திருந்து ஒருவழியாக இந்தச் சேவையை மக்கள் உபயோகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் நிறுவனம். தற்போதைக்கு டெலிகாம் நிறுவனங்கள் உதவியில்லாமல் மாற்றுவழியில் இந்தச் சேவையை இந்தியாவில் செயல்படுத்தியிருக்கிறது கூகுள். இப்போதைய SMS சேவைகள் பல வருடங்களுக்கு (1992) முன்பு அறிமுகப்படுத்தப்பட்டவை. தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துவிட்டாலும் இது மட்டும் பெரிய அளவில் மாறவே இல்லை. அப்போது இருந்த அதே 160 கேரக்டர்கள்தான். அதே எழுத்து வடிவ…
-
- 0 replies
- 613 views
-
-
பிரபல பாடகியான செலினா கோமேஸ், சில மணி நேரங்களுக்கு முன்பு 'Lose You To Love Me' என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார். இன்று, மொபைல் சந்தையில் பட்ஜெட் செக்மென்ட் தொடங்கி பிரீமியம் செக்மென்ட் வரை அனைத்து செக்மென்ட்டிலும் கடுமையான போட்டி நிலவிவருகிறது. பட்ஜெட் செக்மென்ட்டிலேயே நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன்தான் பெஸ்ட் என்பதைக் காட்டிக்கொள்ள கடுமையாகப் போராட வேண்டியதாக இருக்கிறது. அப்படியிருக்க, லட்சம் ரூபாயில் ஐபோன்கள் விற்கும் ஆப்பிள் நிறுவனம் எந்த அளவில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்?! பிரபல பாடகியான செலினா கோமேஸ், சில மணி நேரங்களுக்கு முன்பு 'Lose You To Love Me' என்ற பாடலை வெளியிட்டார். இதற்கும் ஆப்பிள் மார்க்கெட்டிங்கிற்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பாடல் முழுவதுமாக…
-
- 0 replies
- 564 views
-
-
ஆப்பிள் நிறுவன ஐ போன்களில், தற்போதுள்ள ஸ்வைப் வசதியைவிட, முன்பிருந்த ஹோம் பட்டன் வசதி சிறப்பாக இருந்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவன ஐபோன்களில் 2007ஆம் ஆண்டு முதல் வட்ட வடிவிலான ஹோம் பட்டன் வசதி இருந்துவந்தது. இதனிடையே, 2017ஆம் ஆண்டு வெளியான சில மாடல்களில் அந்த வசதி நீக்கப்பட்டு, ஸ்வைப் வசதியாக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஐபோன்களின் வடிவமைப்பு குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போதைய ஸ்வைப் வசதியைவிட முன்பு பயன்பாட்டில் இருந்த ஹோம் பட்டன் வசதி சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார். ஐபோனை ட்ரம்ப் விமர்சனம் செய்வது இது முதல்முறை அல்ல. ஐபோன்களில் பெரிய திரை வசதி இல்லை எனக் கூற…
-
- 0 replies
- 408 views
-
-
ஆன்ட்ராய்டு செல்போன்களில் உள்ள கூகுள் அசிஸ்டென்ட் எனும் செயலியால் செல்போன் சார்ஜ் விரைவில் குறைந்து விடுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கூகுள் பிக்சல் செல்போன்கள் மற்றும் கூகுள் ஹோம் கருவிகளில், பயனாளிகளுக்கு உதவியாக கூகுள் அசிஸ்டென்ட் என்ற செயலி இடம்பெற்றுள்ளன. "Ok, Google" அல்லது "Hey, Google"’ உள்ளிட்ட சொற்றொடர்களை கூறி கூகுள் அசிஸ்டென்ட் செயலியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது, அது, தானாக அருகிலுள்ள செல்போனின் கூகுள் அசிஸ்டென்ட் செயலியை ஆக்டிவேட் செய்கின்றன. இதனால் அருகில் இருக்கும் வாடிக்கையாளரின் செல்போன் திரை விழித்தபடி இருந்து, பேட்டரி சார்ஜை குறைய செய்கிறது. கூகுள் அசிஸ்டென்ட் செயலியால் அருகிலுள்ள செல்போனும் அன்லாக் செய்வதோடு, அந்…
-
- 0 replies
- 478 views
-
-
ஐபோனின் iOS 13.1.2 இல் உள்ள சிக்கல்கள் குறித்து பயனாளர்கள் முறைப்பாடு ஐபோனின் iOS 13.1.2 இயக்க முறைமையின் புதிய பதிப்பில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உள்ளதாக பயனாளர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். மேலும் புதிய iOS 13.1.2 இயக்க முறைமையைப் புதுப்பித்ததிலிருந்து உள்வரும் அழைப்புக்களில் சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அழைப்புகளைச் செய்ய இயலாமை, அதே நேரத்தில் பற்றரி வலு குறைதல் மற்றும் வெப்பமாகுதல் ஆகியவற்றால் தாம் ஏமாற்றமடைவதாக பயனாளர்கள் கூறுகின்றனர். இந்த விடயம் குறித்து அப்பிள் நிறுவனம் தெரிவிக்கையில்; எங்கள் பயனாளர்களின் பாதுகாப்பிற்காக இயக்க முறைமையைப் (iOS) புதுப்பிப்பது வழக்கமாகும். பயனாளர்களின் முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடைபெறும் வரை iOS…
-
- 0 replies
- 304 views
-
-
அண்மையில் இந்த உலாவி பற்றி அறிந்தேன், https://vivaldi.com/ குறிப்பு : இதை நான் தரவிறக்கம் செய்து பாவிக்கவில்லை. ஆனால், இதை வடிவமைத்த நிறுவனத்தார் முன்னர் ஓப்ரா உலாவியில் இருந்தவர். முதன் முதன்மை சிறப்பம்சமாக இருப்பது கூகிளின் குரோம் போன்று பாவனையாளரின் தெரிவுகளை சேகரிப்பதும் இல்லை அதை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதும் இல்லை.
-
- 0 replies
- 899 views
-
-
நன்றி குங்குமம் முத்தாரம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சர்வதேச எலெக்ட்ரானிக் ஷோ ஒன்று நடந்தது. அதில் பல்வேறு நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்டு தங்களின் வருங்காலத் திட்டங்களைப் பற்றிச் சொன்னார்கள். அப்போது ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி, ‘‘நாங்கள் மூன்று திரையுடன் கூடிய லேப்டாப்பை வடிவமைக்கப் போகிறோம்...’’ என்றார். இதைக்கேட்ட சிலர் அதிர்ச்சியடைந்து பாராட்டினாலும், பலர் நேரடியாகவே அவரை கேலி செய்தனர். இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்றனர். இந்நிலையில் மூன்று டிஸ்பிளேக்களைக் கொண்ட லேப்டாப் அடுத்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சில வருடங்களாகவே அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் லேப்டாப்புக்கு க…
-
- 0 replies
- 561 views
-
-
பல ஸ்மார்ட்போன்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் 'வெறித்தன' ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன் ரெடி. இம்முறை பெயர் தொடங்கி அனைத்திலும் மாற்றங்கள் பளிச்சிடுகின்றன. மார்ஷ்மெல்லோ, ஐஸ்கிரீம் சாண்ட்விச், பை என உணவு பெயர்கள் ஆண்ட்ராய்டுக்கு வைக்கப்படுவது வழக்கம். அப்படி இம்முறை Q-வில் தொடங்கும் எந்த உணவுப் பொருளின் பெயரை வைக்கப்போகின்றனர் என்ற ஆர்வத்துடன் மக்கள் காத்துக்கொண்டிருக்க, சிம்பிளாக 'ஆண்ட்ராய்டு 10'தான் இந்த வெர்ஷனின் பெயர்அறிவித்தது கூகுள். முதல்கட்டமாக கூகுள் பிக்ஸல் மொபைல்களுக்குஇந்த மாதத் தொடக்கத்திலிருந்து இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கத்தொடங்கியது. அப்படியான ஒரு பிக்ஸல் மொபைலில் ஆண்ட்ராய்டு 10 பயன்படுத்திப் பார்த்ததில், எங்களைக் கவர்ந்த சில வசதிக…
-
- 2 replies
- 781 views
-
-
ஓரே நாளில் 11 பில்லியன் டாலர் சம்பாதித்த ஆப்பிள்..! உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் செப்டம்பர் 10ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 போன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் சந்தை மிகப்பெரிய அளவில் மாறியுள்ள இத்தகைய சூழ்நிலையில் ஆப்பிள் அறிவிப்புகளும், அறிமுகங்களும் மிகவும் முக்கியம். ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபோன் 11 மாடல் போன்கள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆப்பிள் மீண்டும் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். லிபோர்னியாவில் இருக்கும் ஆப்பிள் தலைமை அலுவலகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர் அரங்கத்தில் நடந்த ஆப்பிள் ஈவென்ட் 2019இல் இந்நி…
-
- 0 replies
- 580 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images அதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் திறன்பேசியை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை கலிஃபோர்னியாவில் நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தும். அதுபோல, இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் தந்திருக்கிறது. படத்தின் காப்புரிமை Justin Sullivan கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வில் ஐஃபோன் 11 மட்டுமின்றி ஆப்பிள் சீரி…
-
- 0 replies
- 426 views
-
-
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஓகஸ்ட் 29 வியாழக்கிழமை, பி.ப. 12:38 மனிதகுல வரலாற்றின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும், பகுத்தறிவினதும் அறிவியல் வளர்ச்சியினதும் பங்கு பெரிது. இன்று, மனிதகுலம் கண்டிருக்கிற வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சியின் வலிமையால் சாத்தியப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத ஒன்று, இன்று சாத்தியமாகியிருக்கிறது. அறிவியல், மிக வேகமாகக் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் வளர்ந்துள்ளது. இப்போது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு எதிர்ப்புக் கூறக்கூட முடியாத வகையில், அறிவியல் பல திசைகளிலும் பரந்து விரிந்துள்ளது. அறிவியல் வளர்ச்சி, எப்போதும் பயனுள்ள திசையில் மட்டும் பயணித்ததில்லை. இனியும் அவ்வாறு பயணிக்காது என்பதை, நாம் உறுதிபடச் ச…
-
- 2 replies
- 1.3k views
-
-
தொழில்நுட்பம் வளர்ந்து வரும்பொழுது அது பெரும்பாலும் இலாபத்தை குறி வைத்தே எழுதப்படும் / முகாமைப்படுத்தப்படும். எனவே, சமுதாயத்தில் பணம் இல்லாதவர்கள் இல்லை பெரியளவில் பணம் சம்பாதிக்க முடியாத மக்கள் பகுதியில் இவ்வாறான புதிய தொழில்நுட்பங்கள் அதிகளவில் கால் பாதிப்பதில்லை. ஆனால், சில வேளைகளில் சில நல்ல பயனுள்ள செயலிகள் உருவாவதுண்டு. பெயர்: மைக்ரோசோப்ட் சவுண்ட்ஸ்கேப் விலை : இலவசம் தளம் : நிச்சயமாக ஆப்பிள் ஐ ஓஎஸ். ஆன்ட்ராய்ட்டில் இருக்கலாம் இது என்ன செய்யும்: ஜி. பி. எஸ், இனை கொண்டு இயங்கும், 3டி வடிவில் இடங்களை கூறி பாதுகாப்பாக நடக்க, வாக்கம் ஓட்ட உதவும் குறிப்பு : நீங்கள் வாழும் நாட்டில் இன்னும் இருக்காமல் இருக்கலாம். யாரெனுக்கும் உங்களுக்கு…
-
- 0 replies
- 805 views
-
-
அமெரிக்க விமானங்களில் அப்பிள் மடிக்கணினிகளுக்கு தடை விதிப்பு அமெரிக்காவில் இயங்கிவரும் சில விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிகள் அப்பிள் நிறுவனத்தின் சில மடிக்கணினிகள் தெரிவிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்கலத்தில் (batteries) தீ ஆபத்து இருப்பதை அப்பிள் சமீபத்தில் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து இந்த தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப் தெரிவுகளில் திரும்பப் பெறப்பட்ட மின்கலங்கள் பயன்படுத்தப்படுவதை அறிவதாகவும், இதுகுறித்த தகவல்களை அமெரிக்க விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை நான்கு விமான நிறுவனங்கள் அப்பிள் மடிக்கணினிகள் தெரிவவுகளை கொ…
-
- 0 replies
- 405 views
-
-
அப்பிள் தொழில்நுட்ப நிறுவனமானது தனது ஐபோன் கையடக்கத்தொலைபேசி உபகரணத்திலுள்ள பாதுகாப்பு முறைமைகளை முறியடித்து அதனை ஊடுருவி தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்குவதாக சவால் விடுத்துள்ளது. தமது கையடக்கத் தொலைபேசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே அந்த நிறுவனம் இந்த சவால் மிக்க போட்டி தொடர்பில் அறிவிப்புச் செய்துள்ளது. இணையத்தளங்களை ஊடுருவி தாக்குதல் நடத்துபவர்கள் தமது பயன்பாட்டாளர்களை இலக்குவைப்பதை விடுத்து தமது கம்பனியுடன் இணைந்து பணியாற்றுவதை ஊக்குவிப்பதை அப்பிள் நிறுவனம் நோக்காகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாம் பய…
-
- 1 reply
- 623 views
-
-
Home > Tamil News ஆதவன் பக்கம் (50) – Global Sulphur Cap 2020 - ஏற்படுத்தப்போகும் தாக்கம் பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2019 (செவ்வாய்க்கிழமை) ‘கடைசியாக கடத்தப்பட்ட விமான சம்பவம் எது’ என்றால், ‘கந்தகார்’ என்று பல வருடங்கள் முன்பு இடம்பெற்ற சம்பவம் பற்றி உடனடியாக நூறு கோடிப் பேரும் இந்தியாவில் பதில் அளிப்பார்கள். ஆனால் ‘அண்மையில் கடத்தப்பட்ட கப்பல் எது’ என்றால் 'அது பற்றி எவரு…
-
- 0 replies
- 501 views
-
-
ஆகஸ்ட் 4ம் தேதி இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் தொடர்புடைய ஜிகாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் இணைய செய்தி சேனல்கள் இது வரை எதையும் பதிவிடவில்லை. இணைய சேவை தடையால் இவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை இது காட்டுகிறது. தொழில்நுட்ப நிறுவனங்களும், அரசுகளும், தங்கள் மீது எடுக்கும் கடும் நடவடிக்கையை தவிர்க்கவும், செய்தி தணிக்கையை தடுக்கவும் ஜிகாதிகளும் அவரது ஆதரவாளர்களும் சென்ட்ரல் சர்வர் இல்லாத செயலிகளைப் பயன்படுத்தியுள்ளனர். பயனர்களால் பரிந்துரை செய்யப்படும் மிகவும் அத்தகைய பிரபலமானதொரு செயலி ஃபயர்சேட். மைய சேவையகம் இல்லாமல் அல்லது இணைய வசதி இல்லாமல் திறந்தவெளி (Mesh) வலையமைப்பு தொழில்நுட்பத்தில் இந்த செயலியை தங்களது செல்பேசியில் வைத்திருப்போரிடம் இது செ…
-
- 0 replies
- 594 views
-
-
கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது இந்திய ராணுவ முகாம்களை படம் பிடித்து பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிக்காமல் இருப்பதற்காக வாட்சப் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. அரியானா மாநிலம் ஹிசாரில் ராணுவ குடியிருப்பு பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றனர். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தொழிலாளிகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொழிலாளிகளில் சிலர் ராணுவ முகாம்களை உளவு பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராணுவத்தினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் சந்தேகப்படும் …
-
- 0 replies
- 368 views
-
-
டெக் உலகின் முன்னணி நிறுவனங்கள் பல, தங்களின் விளம்பரங்களில் மற்ற நிறுவனங்களை கலாய்ப்பது ஒன்றும் புதிதல்ல. அந்தவரிசையில் இணைந்திருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். அந்த நிறுவனத்தின் தயாரிப்பான சர்ஃபேஸ் லேப்டாப்புகளுக்கான விளம்பரம் ஒன்றை அந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில், ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பான மேக் புக் லேப்டாப்புகளைக் கலாய்க்கும் விதமாகக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த விளம்பரத்தில் தொடக்கத்தில் மேக் புக் என்று ஒருவர், தனது பெயரைக் கூறி அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவரது முழுப் பெயர் மெக்கன்சி புக் எனப் பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. ஆப்பிளின் மேக் புக் லேப்டாப்பை விட மைக்ரோசாப்டின் சர்ஃபேஸ் லேப்டாப் பல்வேறு வகைகளில் சிறந…
-
- 0 replies
- 358 views
-
-
ஏ.டி.எம்மில் நூதன கொள்ளை - ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி? #TechBlog சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைVALERY HACHE "எனது வங்கிக்கணக்கிலிருந்து எனக்கே தெரியாமல் யாரோ பணம் எடுத்துவிட்டார்கள்" என்று அதிர்ச…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
ஃபேஸ்அப்’ என்ற செயலியின் மீதான மோகம் இப்போது உலகம் முழுதும் பரவி வருகிறது. இளம் வயதினர் தங்களது படங்களை அந்தச் செயலியில் பதிவேற்றம் செய்யலாம். அந்தப் படங்களில் அவர்கள் வயதானவர்களைப் போல் தோற்றமளிக்கச் செய்கிறது ‘ஃபேஸ்அப்’ . நிழற்படங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் இத்தகைய செயலிகள் புதிதல்ல என்றாலும் ‘ஃபேஸ்அப்’பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால் வயதாவதைக் காட்டும் படங்கள் மிகவும் தத்ரூபமாக உள்ளன. https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20190718-31394.html https://play.google.com/store/apps/details?id=io.faceapp&hl=en_GB&rdid=io.faceapp
-
- 1 reply
- 697 views
-