Sign in to follow this  
பிழம்பு

ஐஃபோன் 11: ஆப்பிள் நிறுவனத்தின் திருப்புமுனை திறன்பேசியாக இருக்குமா?

Recommended Posts

 
ஐஃபோன் 11படத்தின் காப்புரிமை Getty Images

அதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் திறன்பேசியை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை கலிஃபோர்னியாவில் நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தும். அதுபோல, இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் தந்திருக்கிறது.

ஐஃபோன் 11படத்தின் காப்புரிமை Justin Sullivan

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வில் ஐஃபோன் 11 மட்டுமின்றி ஆப்பிள் சீரிஸ் 5 என்ற கைகளில் அணியக்கூடிய நவீன கடிகாரமும், 10.2 இன்ச் அளவுகொண்ட ஐபேடும், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஆமேசானுக்கு போட்டியாக வெறும் மாதம் 4.99 டாலருக்கு ஆப்பிள் டிவி பிளஸ் திட்டத்தையும் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் அறிமுகப்படுத்தினார்கள்.

ஐஃபோன் 11 சிறப்பம்சங்கள் என்ன?

முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஐஃபோன் 11 மாடல்களில் அதிக கேமிராக்கள் இருக்கின்றன. மேலும், அதன் செயல்திறன் அதிகரிக்கப்பட்டு குறைவான ஆற்றலை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐஃபோன் 11படத்தின் காப்புரிமை JOSH EDELSON

ஐஃபோன் 11, ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ஐஃபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று ரகங்கள் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சரி, ஐஃபோனின் முந்தைய மாடல் XRவிட, ஐஃபோன் 11 எவ்வளவு சிறப்பு வாய்ந்தது?

  • 6.1இன்ச் லிக்விட் ரெட்டினா திரையை கொண்டுள்ள ஆப்பிளின் புதிய ஐஃபோன் 11ல் ஏ13 பையோனிக் சிப் இடம்பெற்றுள்ளது. தற்போது சந்தையில் விற்கப்படும் ஸ்மார்ட்ஃபோன்களிலே அதிவேக மைய செயலகமும், அதிவேக கிராபிக்ஸ் செயலகமும் கொண்டது ஐஃபோன் 11 என ஆப்பிள் கூறுகிறது.
  • XR மாடல் ஐஃபோனுடன் ஒப்பிடும்போது, ஐஃபோன் 11னின் கேமிராவில் மிகப்பெரிய மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதாவது, ஐஃபோன் 11ல் இரண்டு கேமிராக்களும், ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ஐஃபோன் 11 ப்ரோ மேக்ஸில் மூன்று 12MP கேமிராக்களை கொண்டுள்ளது. ஒன்றில், வைட் ஆங்கிள் லென்ஸும், மற்றொன்றில் 120 டிகிரியை முழுமையாக திரைக்குள் கொண்டுவரும் வகையில் மிக அதிக வைட் ஆங்கிள் லென்ஸையும் கொண்டுள்ளது. மூன்றாவது டெலிபோட்டோ லென்ஸையும் கொண்டுள்ளது.
  • ஐஃபோன் 11ல் இதன் நைட் மோட்தான் சிறப்பம்சமே. இரவு நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை மேலும் துல்லியமாக எடுக்க உதவும் ஸ்மார்ட் எச்டிஆர் தொழில்நுட்பம் ஐஃபோன் 11ல் மேம்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த கேமிராக்கள் 4K தரத்தில் காணொளிகளை பதிவு செய்கின்றன.
  • முக்கியமாக, ஐஃபோன்11ல் இருக்கும் செல்ஃபி கேமிராவும் 12MP திறன் படைத்தது. செல்ஃபி கேமிராவும் 4K தரத்தில் காணொளிகளை பதிவு செய்யும். மேலும், ஸ்லோ மோஷன் காணொளிகளை பதிவு செய்யவும் முடியும்.
  • ஐஃபோன் XR மாடலுடன் ஒப்பிடுகையில், ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் ஐஃபோன் எக்ஸ் ஆரைவிட ஐஃபோன் 11 ஒருமணி நேரம் கூடுதலாக இயங்கும் திறன் படைத்தது என்கிறது ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிள் டிவி பிளஸ் மற்றும் ஆப்பிள் ஆர்கேட்

ஆப்பிள் கைப்பேசி வாடிக்கையாளர்களுக்கென புதிய வீடியோ கேம்களும் , ஆமேசான் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்று ஆப்பிள் டிவி பிளஸ் என்ற பிரத்யேக சேவையையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஒரு குடும்பத்துக்கு மாதம் 4.99 டாலர் என்ற கட்டணத்தில் இந்த சேவை கிடைக்கும்.

இதுவே, நீங்கள் புதிய ஆப்பிள் தயாரிப்பு ஒன்றை வாங்கும்போது, ஆப்பிள் டிவி பிளஸ் சேவை ஓராண்டு சேவையை இலவசமாக பெறலாம். நவம்பர் 1ஆம் தேதி முதல் 100 நாடுகளில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.

ஐஃபோன் 11படத்தின் காப்புரிமை JOSH EDELSON

10.2 இன்ச் ஐபேட்

ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்வில் திறன்பேசிகளை தவிர்த்து புதிய ஐபேட் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டது. ஏற்கனவே, கடந்தமுறை 6ஆம் தலைமுறை ஐபேட் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 10.2 இன்ச் திரை கொண்ட 7ஆம் தலைமுறை ஐபேட்டை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய மாடல்களை காட்டிலும், இதில் ஒளிர்வுதன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஐஃபோன் 11படத்தின் காப்புரிமை Justin Sullivan

ஆச்சரியப்படுத்தும் ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் ரசிகர்கள் மேலும் ஒரு ஆச்சரியமாக அமைந்தது நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நவீன கை கடிகாரம் சீரிஸ் 5. இதன் எப்போதும் ஒளிரும் திரை மற்றும் ஆற்றலை சேமிக்கும் திறன் இந்த கடிகாரத்தின் சிறப்பம்சங்கள்.

மேலும், ஆப்பிள் நிறுவனம் தனது கை கடிகாரத்தில் புதிதாக உடல் ஆரோக்கியம் சார்ந்த மூன்று அம்சங்களை சேர்த்துள்ளது. அதாவது, செவிப்புலன் சார்ந்த ஆரோக்கியத்தை கணக்கிடுதல், பெண்களின் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை கண்காணித்தல் ஆகியவை ஆகும்.

https://www.bbc.com/tamil/global-49658535

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • நான் இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும்.. நாங்கள் இங்கே எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அந்த பெண் அல்லது அவரைப்போல இன்னும் பலர் எவ்வளவு உடல் உளதாக்கங்களை அனுபவிப்பார்களோ தெரியாது ..  சூழவுள்ளோர் அனுசரணையாக இல்லாவிட்டால் எந்தவித முடிவுகளை எடுப்பார்கள் எனவும் தெரியாது..ஏனெனில் நடந்த சம்பவத்தையே மாற்றி கதைக்கும் பலர் எங்களில் இன்னமும் இருக்கிறார்கள்.. இந்த மாதிரி செயல்களை தடுக்க வழி செய்யாவிடில்  இந்த செய்தியும் பத்தோடு பதினென்றாகவே முடியும் ..      
    • தவறு யாருடையது என்று இறந்தவர் வந்து கூறப்போவதில்லை.. இந்த செய்தியை பார்த்த பின்பு கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், அவர் செய்தது சரிதான் என கூறினாலும் கூறும் சமூகம் இது.. கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராயின் அவரது உறவினர்கள் நண்பர்கள், அவரை திருத்த வழி செய்தார்களா? இப்பொழுது இறந்த பெண்ணை, மரியாதை இல்லாமல் தூற்றி என்ன பிரயோசனம்?
    • கனடாவின் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டு மாணவர்களை அதிகம் விரும்புகின்றன எனவும் அதற்கு கனடிய அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்குகிறது என்றும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். கனடாவிற்குப் படையெடுக்கும் சர்வதேச மாணவர்கள் இதுவரையில் கனடா அனுமதிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும் பங்கானவர்கள் சீனா, இந்தியாவிலிருந்தே வருகின்றார்கள். பண வசதிகளும் ஏற்கெனவே இங்கு வதிகின்ற புலம்பெயர் சமூகங்களும் (Diaspora) இதற்கு ஒரு காரணம். இப்படி வருபவர்கள் சில குறிப்பிட்ட பெரு நகரங்களின் ஸ்தாபனங்களில் கல்வி கற்பதும், அந்நகரங்களில் வாழ்வதும் இதர நகரங்களின் பொருளாதார, அரசியல் சமநிலைகளைப் பாதிக்கின்றனவென்பது கொள்கைவகுப்பாளரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அட்லாண்டிக் மாகாணங்கள் எனப்படும் நோவா ஸ்கோஷியா, நியூ பிறவுண்விக், பிறின்ஸ் எட்வார்ட் ஐலண்ட் என்பவற்றின் குடிசனத் தொகை குறைவாக இருப்பதும் அங்குள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போதாமையும் அவற்றின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடிசனக் குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படும்போது அம்மாகாணங்களுக்கு மத்திய அரசு தன் வருடாந்த கொடுப்பனவை (transfer payments) அதிகரிக்க வேண்டும். (பணக்கார மாகாணங்களிலிருந்து பெறப்படும் வரிப்பணத்தை ஏழை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பது கனடாவின் வழமை) கனடா தற்போது திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் பின்னால் பல நோக்கங்களிருக்கிறது என முற்பகுதியில் பார்த்தோம். அதில் முக்கியமானது எதிர்காலத்தில் அதிகளவு துறை சார் வல்லுனர்களினதும் (professionals), தொழில் வல்லுனர்களினதும் (skilled workers) தேவை இருக்கப்போகிறது. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இவர்களை ‘உற்பத்தியாக்க வேண்டும்’. ஆனால் உள்நாட்டு மாணவர்கள் மேற்படிப்பை முடிப்பது குறைவாகி வருகிறது. எனவே வெளிநாட்டு மாணவர்களை எடுத்து அவர்கள் பட்டம் பெற்றதும் இங்கேயே அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது என்பது முதலாவது திட்டம். இரண்டாவதாக, வறுமைப்பட்ட மாகாணங்களுக்கு புதிய குடிவரவாளர்களோ, வெளிநாட்டு மாணவர்களோ செல்வதில்லை என்றொரு குறைபாடுண்டு. இதை நிவர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களையும், புதிய குடிவரவாளர்களையும் இம் மாகாணங்களுக்கு அனுப்புவது. மத்திய அரசின் மூன்றாவது திட்டம், தனியே இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மட்டும் மாணவர்களை எடுக்காமல் உலகின் இதர நாடுகளிலுமிருந்தும் மாணவர்களை எடுப்பதன் மூலம் நாட்டின் எதிர்காலக் குடிமக்களாக அவர்கள் மாறும்போது உண்மையான பல்கலாச்சார நடாகக் கனடா பரிணமிக்கும் என்பது. மேற்சொன்ன திட்டங்களுக்கமைய, கனடா தனது ஆட் சேர்ப்பு முயற்சிகளை மெக்சிக்கோ, கொலம்பியா, பிறேசில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, மொரோக்கோ, துருக்கி, பிரான்ஸ், யூக்கிறெயின் ஆகிய நாடுகளுக்கு விஸ்தரிக்க ஏற்பாடு செய்து வருகின்றது. இதற்கான செலவீனமாக 2019 இன் வரவு செலவுத் திட்டத்தில் $147.9 மில்லியன் டாலர்களை அடுத்த ஐந்து வருடங்களுக்கும், தொடர்ந்து வருடா வருடம் $8 மில்லியன்களையும் ஒதுக்கியுள்ளது. கனடாவின் மாகாணங்கள், பிரதேசங்கள், அமைப்புகள், கல்வி ஸ்தாபனங்கள் ஆகியன இத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆலோசனைகளை வழங்கும். “எங்கள் சர்வதேச மாணவர்களைப் பயிற்றுவிக்கும் திட்டத்தின் மூலம் அவர்கள் கனடாவில் குடியேறுவதன் மூலம் எமது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவார்கள் அல்லது தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் சென்று எங்கள் தொழில்நுட்பம், கனடிய விழுமியங்கள் போன்றவற்றைப் பரப்புவதற்குத் தூதுவர்களாகச் செயற்படுவார்கள்” எனக் கனடிய சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜிம் கார் தெரிவித்தார். சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் முயற்சிகளுக்குப் பல நாடுகளும் முண்டியடித்துக்கொண்டு போட்டி போடுகின்றன. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, நியூ சீலந்து, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, மலேசியா போன்றவை இவற்றில் சில. சில நாடுகள் வெளிநாட்டு மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களையும், இலவச போதனைகளையும் அளிக்கிறார்கள். சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதன் மூலம் தற்போதுள்ள துறைசார் பணிகளுக்கு இருக்கும் ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம் என்பது கொள்கை வகுப்பாளரின் கருத்து. புதிய பொருளாதாரம் புதிய கல்வியை அடிப்படையாகக் கொண்ட விற்பன்னர்களைத் தேடி நிற்கின்றது. கனடாவின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சி அதன் குடிவரவிலேயே தங்கியுள்ளது எனக் கனடிய குடிவரவு அமைச்சர் கூறினார். இப்பின்னணியில் பார்க்கும்போது, 2018 இல் 53,700 சர்வதேச மானவர்கள் கனடாவின் புதிய குடிமக்களாக வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படும் விடயமல்ல. 2022 இற்கான 475,000 சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் கனடிய திட்டம் 2019 இலேயே 494,000 த்தைத் தாண்டிவிட்டது. இருப்பினும் மேலதிக சர்வதேச மாணவர்களைக் கனடா எதிர்பார்க்கிறது.       http://marumoli.com/கனடாவெளிநாட்டு-மாணவர்க-2/செய்திகள்/news/canada-கனடா/?fbclid=IwAR1KaEFCiKRdfr5Qk8GuN4GWKOQ_Wy2ec5bW8Mqi_yEDxmOAYMBMKxRsVoE