Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலந்தியின் கேள்வி பதில் நேரம்!!

Featured Replies

கடந்த கிழமை யாழ்கள உறவுகளாள் கேட்கபட்ட கேள்விகளிற்கு..............சிலந்தி அவர்களாள் அளிக்கபட்ட பதில்கள்!!

சிலந்தியின் கேள்வி பதில் நேரம்!!

1)சுண்டல் எத்தனை பேருக்கு கடலை போட்டார்?அவர்களிள் முக்கியமானவர் யார்?

தயா

இங்கிலாந்து

பதில் -என்ன கதை இது?சுண்டல் மட்டுமா கடலை போடுகிறார்? :lol:

2)சிலந்தி நீங்கள் நல்லவரா?கெட்டவரா?

ஈழவன் 85

அவுஸ்ரெலியா

பதில்- சிலந்தி எப்போதும் மனிதனாக இருப்பவன் அதுவும் மனசாட்சியுள்ள மனிதனாக இருப்பவன் ஈழவன் :D .

3)சிலந்தி அண்ணே,சைவசமயத்தின் சிறப்பை எடுத்துச் சொல்வீர்களா?இந்த கேள்வி பிடிகலை என்றால் கனடா நாட்டில் பெரியார் மன்றம் அமைக்க என்ன செய்ய வேண்டும்?

சபேஷ்

கனடா

பதில்-பெரியார் மன்றமெல்லாம் வேண்டாம்.பக்கங்கள் நிறைய பதில் எழுதகூடிய கேள்வி இது.ஆனாலும் இந்தச் சிலந்தியின் சிற்றறிவுக்கு எட்டியவரை அன்புள்ளவன் தெய்வம்,கருணையுள்ளவன் தெய்வம்,கற்புள்ளவன் தெய்வம்,பண்புள்ளவன் தெய்வம்.என்று மனித நிலையின் மேம்பாடுகளை தெய்வநிலைகளாகத் குறித்தார்கள்.அதனால் தான் கீழ்தர உணர்வுகளிருந்து மனிதனை மேல் நோக்கி கொண்டு வருவதிற்கு சமயம் என்றொரு அமைபுத் தேவைபட்டது.அந்த வகையில் முதலில் தோன்றிய சமயமே சைவை சமயம். :lol:

4)காதலிக்கும் பெண்ணிடம் காதலை எவ்வாறு சொல்வது?

ஜம்மு பேபி

சிட்னி

பதில்-ஜம்மு பேபி உங்களுக்கு இன்னும் வயசு வரவில்லை காத்திருங்கள்!! :lol:

5)குரு!சிலந்தி அவர்கள் இந்துசமயத்தவரா?அப்படி ஆயின் என்னுடைய முதல் கேள்வி,இந்து சமயத்தில் மது குடிக்க கூடாது என்றும் புகைக்ககூடாது என்றும் எங்காவது கூறபட்டிருக்கிறதா?இது செய்தால் அவர்கள் இந்துகள் இல்லையா?

*இன்னும் ஒர் கேள்வி,ஏன் எல்லோரும் உங்களை சிலந்தி என்று அழைக்கிறார்கள்?இது உங்கள் பெற்றோர் வைத்த பெயரா?இல்லை பட்டமா?

கவரிமான்

பதில்- சிஷ்யை!எந்த மதம் என்பது முக்கியமில்லை எப்படி வாழ்கிறார் என்பது தான் முக்கியம்,யார் சொன்னது மதுகுடிப்பவர்கள் புகைப்பவர்கள் எல்லாம் இந்து சமயமில்லையென்று.நீங்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும் இல்லையா?அதனால் தான் அப்படி பயமுறுத்துகிறார்கள். :lol:

பதில் 2-கவரிமான உங்களுக்கு எப்படி?உங்கள் பெற்றோர் வைத்த பெயரா?இல்லை பட்டமா? :lol:

6)வணக்கம் சிலந்தி அவர்களே,என்னுடைய கேள்வி ஆண்,பெண் நட்பு தவறானதா?இல்லையா?விளக்குக?

வெண்ணிலா

ஆகாயம்

பதில்-வணக்கம் வெண்ணிலா எந்த நட்பும் தவறு இல்லை,அதை தவறாக நோக்காத போது. :lol:

சிலந்தி இன்று போய் அடுத்த ஞாயிறு உங்களை சந்திக்க சிலந்தியா மாறி வருகிறேன்,உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை இந்த பக்கத்தில் கேளுங்கோ!!

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=350638

Edited by Jamuna

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வணக்கம் சிலந்தி வந்திருகிறேன் :) மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில மிக்க மகிழ்ச்சி எனக்கு வலை பின்னும் வேலை இருந்தலால் போனகிழமை என்னால் பதில் அனுப்பமுடியவில்லை!! :) அத்துடன் இந்த கிழமையும் முதல் 5 கேள்விகளிற்கு மட்டும் விடை அளிக்கிறேன் மிகுதியை அடுத்த கிழமை அளிகிறேன் எல்லாம் வலைபின்னுவதால் தான் ஏனைய உறவுகள் மன்னிகவும்!! :)

சிலந்தியின் கேள்வி பதில் நேரம்!!

1)பொருளாதரத்தில் வளரும் டன்கிளாஸ் பிறந்த நாடு இலங்கையா?இல்லை டன்கிளாஸ் இருக்கும் சோமாலியாவா?

தயா

இங்கிலாந்து

பதில் -பொது வாழ்க்கைக்கு வராத டன்கிளாஸ் பற்றி யாரறிவார் தயா :D ,இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு அதிகம்,இல்லாவிட்டால் சுண்டல் எத்தனை பேருக்கு கடலை போட்டான்,டன்கிளாஸ் பொருளாதாரத்தில் வளர்கிறான் என்று எல்லாம் சிலந்தியிடம் கேட்பீர்களா!பாவம் சிலந்து,விட்டு விடுங்கள். :(

2)திருமணமான கணவர்கள் மனைவியிடம் அடி வாங்காமல் தப்புவதற்கு சில வழிகள் சொல்லுங்கள்?

கந்தப்பு

சிட்னி

பதில் - கந்தப்புவை நினைக்க பாவந்தான்.என்ன செய்வது?சரி,அடிவாங்காமல் தப்புவதற்கான வழிகளின் மூலத்தை பார்க்கப் போனால்,நம்மை ஆளும் பரந்தாமனே தனது உடலின் பாதியை துணைவியாருக்கு கொடுத்து தன்னை முழுமையடையச் செய்தார் என்று புராணம் சொல்கிறது.இது கந்தப்பு அறியாதது இல்லை.கணவன் மனைவி,நண்பர்கள்,நம்மை நேசிப்பவர்கள் நம்மால் நேசிக்கபடுபவர்கள் இவர்களுகிடையில் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று புரிந்துணர்வு :) .

நன்மை தீமை,மகிழ்வு சோகம் என்று வரும் போது நான் என்று பாராமல் நாம் என்று பார்க்கலாமல்லவா?இப்படி நாம் என்ற தன்மை வந்துவிட்டால் அடிவாங்கவும் தேவையில்லை கொடுக்கவும் தேவையில்லை.சரியா.?

3)திருமணம் என்பது முக்கியமா? அதிலும் காதல் திருமணாமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா சிறந்தது?

வெண்ணிலா

இலங்கை

பதில் - "மனிதனை மனிதனாக வாழவைப்பது மதம்"

"மனிதனை மரபோடு வாழவைப்பது உறவு,"

இந்த உறவு என்று வரும் போது உலகிலே முதல் சோடி ஆதாம் ஏவாள் என்பது உங்களுக்கு தெரியும்.இதிலிருந்து எதை அறிகிறோம்?உலகில் முதல் சோடியே ஆண்,பெண் உறவால் பின்னபட்டுவிட்டது.இந்த உறவின் புனிதம் கெடாமல் ஒரு கட்டுபாடுகுள்,ஒழுக்கம் சார்ந்த வரையறைகுள் மனிதம் இருப்பதற்காகத்தான் திருமணம் என்ற சடங்கு சமூகங்களாள் உருவாக்கபட்டது.

ஆகவே வெண்ணிலா திருமணம் முக்கியம் என்று வாதிடுவதை விட அது முக்கியமில்லை என்று வாதிடுவது சிரமம். :)

*காதல் திருமணத்தால் புரிந்துணர்வை அதிகரிக்கச் செய்யும் காலம் சுருங்கும் என்பது உண்மை.

4)முத்தங்களின் சிறப்புக்கள் பற்றி?

யாழ்வாசகர்

சிட்னி

பதில்-யாழ் வாசகரே!இரண்டு வருடங்களிற்கு முன் ஊருக்கும் போயிருந்தேன்.அது ஒரு கத கதப்பான மாலை நேரம்.போய் இறங்கியவுடன் என்னைக் கண்டு அட்சயா ஒடிவந்தாள்,வந்தவுடன் கட்டி கொண்டாள்.அவளை அணைத்தெடுத்து அன்பாக முத்தம் கொடுத்தேன் முத்தத்தின் முக்கிய சிறப்பு,அன்பை வெளிபடுத்துவது :) .இங்கே அட்சயா எனது சகோதரியின் மூன்று வயது குழந்தை! :)

5)அவுஸ்ரெலியாவில் பொறுத்தவரை தமிழின் வளர்ச்சி என்றால் என்ன?

சுண்டல்

சிட்னி

பதில் - சுண்டலின் கேள்வி அபத்தமென்று சிலந்தியின் நினைப்பு,தமிழின் வளர்ச்சி என்றால் என்ன? என்பதை விடுத்து அவுஸ்ரெலியாவில் தமிழின் வளர்ச்சி எப்படியிருகிறது என்று கேட்டிருக்கலாம்!! :(

சிலந்தி இன்று போய் அடுத்த ஞாயிறு உங்களை சந்திக்க சிலந்தியா மாறி வருகிறேன்,உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை இந்த பக்கத்தில் கேளுங்கோ!!

http://www.yarl.com/forum3/index.php?showt...29300&st=20

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வணக்கம் சிலந்தி வந்திருகிறேன் :lol: !!மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி என்னுடைய வலை பின்னும் வேலைகள் எல்லாம் முடிவடைந்ததால் மீண்டும் உங்களிடம் வந்துள்ளேன்!!தாமதிற்கு மன்னிகவும் உறவுகளே!! :lol:

சிலந்தியின் கேள்வி பதில் நேரம்!!

1)இன்னும் ஒரு கேள்வி அல்லது சந்தேகம் என்றே வைத்து கொள்ளளாம் கனக்கப் பதில் எழுதி கஷ்டம் எடுக்க வேண்டாம்.பதிலை சுருக்கமக் ஆம் அல்லது இல்லை என்று சொன்னா போதும்,போன தடவை தாயகம் போனபோது கருவாடு விற்ற மூதாட்டியிடம் 50 ருபாய்க்கு கருவாடு வாங்கினீங்களே அந்தக் காசை திருப்பி கொடுத்துவிட்டீர்களா?

தயா

இங்கிலாந்து

பதில்- ஆம்,

நான் காசு கொடுக்கும் போது அந்த மூதாட்டி கேட்டாள்,இலண்டன் தயாவை தெரியுமா?"அந்தப் பாழாய் போன தயாவுக்கு 100 ரூபாய் கருவாட்டு பாக்கி இருக்குதே என்று."!! :D

2)அனைத்துத் தமிழ் மக்களையும் ஒரு கொடியின் கீழ் இணைக்க தங்களிடம் உள்ள வழிமுறை அல்லது எண்ணம் என்ன?

வி.வி. சிவா

யாழ்களம்

பதில்-தமிழ் மக்களை ஒரு கொடியின் கீழ் இணைக்க முடியுமோ இல்லையா மணலைக் கயிறாக திரித்க்டுவிட முடியும்.சிலந்தியார் சில நேரங்களிள் நினைப்பதுண்டு "அடி உதவுவது போல் அண்ணண் தம்பி உதவுவதில்லை என்று" :(

3)அன்புள்ள சிலந்தியாரே!வெகுநாளாக ஒரு சந்தேகம்

"கொடி அசைந்ததும் காற்று வந்ததா?

காற்று அசைந்து கொடி அசைந்ததா?

சுவி

பிரான்ஸ்

பதில்- கண்ணதாசனின் புகழ் பெற்ற பாடலோன்றின் முதல் இருவரிகள்.அடுத்த வரியை பாருங்கள் சுவி!!

"நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?

"மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?"

ஊரில் உங்கள் வீட்டு வாசலில் இருந்த செவ்வரத்தை அது பூத்த பின்னர் தான் வானத்திலிருந்து நிலவு வெளிவந்ததா?அவ்வளவு ஏன்?

சுவி பிறந்த பின்னர் தான் உங்கள் அன்னை வந்தரா?

அல்லது உங்கள் அன்னை வந்ததால் தான் சுவி பிறந்தாரா?

சந்தேகமின்றி காற்று வந்தால் தான் அசையும் கொடி. :(

4)சிலந்தியாரே,பைத்தியதிற்கு வைத்தியம் பார்க்கும் டாக்டரை ஏன் பைத்தியக்கார டாக்டர் என்கிறார்கள்?ஒரு பைத்தியகார டாக்டரால் எப்படி பைத்தியதிற்கு வைத்தியம் பார்க்க முடியும்?

சுவி

பிரான்ஸ்

பதில்- கண்ணுக்கு வைத்தியம் பார்பவரை கண்டாக்டர் என்கிறோம்,பல்லு வைத்தியம் பார்பவரை பல் டாக்டர் என்கிறோம்,அது போல பைத்தியதிற்கு வைத்தியம் பார்போரை பைத்தியகார டாக்டர் என்று அழைத்திருக்கலாம். :unsure:

அதற்காக அவருக்கு பைத்தியம் என்று யார் சொன்னது? :D

5)கூடிய விரைவில் தமீழிழம் பிரகடனப்படுத்தப் படுமா?இல்லை ஒரு பெரும் போரின் பின்னர் தான் பிரகடனப்படுத்தபடுமா?

நுணாவிலன்

அமெரிக்கா

பதில்- பெரிய அழிவொன்றின் பின்னர் தீர்வொன்று பிறக்கும் :( .

6)கேள்வி -"பூச்சியத்திற்குள்ளே ஒரு இராச்சியத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருந்தான் ஒருவன்,அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்".இப்படி ஒரு கவிஞர் கூறுகிறார்.ஏன் கவிஞர் கடவுளை நம்பாமல் இருந்தும் கூட கடவுளை பற்றிய கருத்தை மக்களுக்குத் திணிக்க முயல்கிறார்"?

நுணாவிலன்

அமேரிக்கா

பதில்-கவிஞர் கண்ணதாசன் ஆஸ்திகனாக இருந்த போது எழுதிய பாடல் இது.பின்னர் அவர் நாஸ்திகனாக அதன் பின்னர் ஆஸ்திகனாக தொடர்ந்தார் என்பது வேறு விடயம்!! :D

7)எதுவும் நடக்காமலே எல்லாம் நடந்து கொண்டிப்பதென்ன?எல்லாம் நடந்து கொண்டே எதுவும் நடக்காமலிருப்பதென்ன?

இறைவன்

யாழ்களம்

பதில்-போரும் பேச்சு வார்த்தையும் (புரியவில்லையா?)

*பேச்சுவார்த்தை நடக்காமலே போர் எல்லாம் நடந்து கொண்டிருகிறது.

*போர் எல்லாம் நடந்து கொண்டே பேச்சு வார்த்தை நடக்காமலிருகிறது!! :(

சிலந்தி இன்று போய் அடுத்த ஞாயிறு உங்களை சந்திக்க சிலந்தியா மாறி வருகிறேன்,உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை இந்த பக்கத்தில் கேளுங்கோ!!

http://www.yarl.com/forum3/index.php?s=&showtopic=29300&view=findpost&p=355720

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வணக்கம் நான் சிலந்தி வந்திருகிறேன் !!மீண்டும் அனைவரையும் சந்திபதில் மிக்க மகிழ்ச்சி என்னுடைய வலை பின்னும் வேலைகள் எல்லாம் குறைந்தபடியால் வர நேரம் கிடைத்திருக்கு!! :D

சிலந்தியின் கேள்வி பதில் நேரம்!!

1)சிலந்தியாரே!புலத்தில் வாழும் பெற்றோர் தமது பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதையே பெருமையாக நினைகிறார்கள் அது ஏன்?

செவ்வந்தி

மலர்வனம்

பதில்- செவ்வந்தி இதிலென்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது.அற்ப விஷயங்களுக்காகப் பெருமை கொள்வதும்,பெருமைப்படுத்தும் விசயங்களில் பாராமுகமாயிருப்பதும் தானே நாம்.தமிழர்!! :)

2)சின்னதா சிலந்தி பற்றிய மூன்று கேள்வி கேட்கிறேன் மூன்றுக்கும் ஒரேடியா பதில் கொடுக்கணும் இல்லை கெட்ட கோபம் வரும்.

1)சிலந்திக்கு எட்டு கால் உங்களுக்கு?

2)நீங்க சும்மா சிலந்தியா இல்லை மனுஷ சிலந்தியா?

3)நீங்க ஸ்பைடர் மேனில நடிச்சீங்க?

வானவில்

யாழ்களம்

பதில் -அதென்ன கோபத்தில் கெட்ட கோபம் நல்ல கோபம்?சரி,உங்க பாஷையில் ஒரேடியா அதாவது ஒரே வார்த்தையில் பதில்!

சும்மாயில்லை. :wub:

3)வணக்கம் சிலந்தியாரே!

நானும் கொஞ்சக் கேள்வி கேட்கலாமென்று நினைக்கிறேன்,வாத்திட்ட கேள்வி கேட்டு திட்டு வாங்கிய அநுபவம் நிறையவே இருக்கு.

புத்தன்

சிட்னி

1)எப்படிபட்ட கேள்விகள் கேட்க வேண்டும்,அதாவது பதில் அளிப்பவரின் தனிபட்ட விடயங்களை கேட்பதா?உதாரணதிற்கு உங்களுக்குத் தாடி இருகிறதா?நீங்க தாடி வைத்திருப்பதன் இரகசியம் என்ன?

பதில் - புத்தனே வணக்கம்!

உதாரணதிற்கு என்று உண்மையிலே கேட்பது போல் தோன்றுகிறது.இருந்தும் வரையறைகுள் தான் கேட்க வேண்டுமென்று சிலந்தியார் நிபந்தனை போடவில்லை தானே!! :unsure:

*அல்லது சினிமா நட்சத்திரங்களின் கண் அழகா?காதழகா?மூக்கழகா? என்று கேட்பவர்களை பற்றிய உங்கள் அபிபிராயம்? என்ன?

பதில் -ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட ரசனை இருகிறது அதிலும் அழகை ரசிப்பதென்றால் எவ்வளவு ஆர்வம் :) .

*ஒரு படைப்பைப் படைக்க எத்தணிக்கும் படைப்பாளி தனது இமேஜ் பாதிக்கபடகூடும் என்று நினைத்து கொண்டு படைக்கலாமா?

பதில் - இல்லை,ஆனாலும் இமேஜ் பாதிக்கபடகூடுமென்று தெரிந்து எந்தப் படைப்பையும் படைக்க படைப்பாளி ஒருவன் எத்தணிக்கமாட்டான்!! :)

*ஒரு கருத்தை கூறுபவன் மாற்றுக் கருத்தை ஏற்று கொள்ளக் கூடியவனாக இருக்க வேண்டுமா?இல்லையா?

சிலந்தி வலை மாதிரி சிக்கலாக இருக்கோ?

புத்தன்

சிட்னி

பதில் -வேண்டும்,ஆரோக்கியமான மாற்றுக் கருத்தாக இருக்க வேண்டும்,நம்மில் பலர் எந்தக் கருத்தையும் கேட்காமல் அடம் பிடிகிறார்கள்.

சிக்கலை அவிழ்க்கும் வல்லமை புத்தனின் போதனைக்கு உண்டு இதை இந்தப் புத்தனும் அறிந்தவன் தானே!! :(

4)தோல்வியும்,வெற்றியும் எங்கு பிறக்கின்றன?

இறைவன்

யாழ்களம்

பதில்- தன்னம்பிக்கையில் :)

5)ஏன் சிலந்தி நேரிடையாக யாழ்களத்தில் கருத்து எழுதவதில்லை?

கந்தப்பு

சிட்னி

பதில்-பயம் கந்தப்பு பயம்.

சிலந்தி நேரடியாக எழுதாவிடில் என்ன கந்தப்பு,கள உறவுகள் பலர் யாழில் எழுதுகிறார்கள் தானே!! :lol:

சிலந்தி இன்று போய் அடுத்த ஞாயிறு உங்களை சந்திக்க சிலந்தியா மாறி வருகிறேன்,உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை இந்த பக்கத்தில் கேளுங்கோ!! :)

http://www.yarl.com/forum3/index.php?showt...29300&st=20

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.