Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உருவாகும் தமிழீழத் தேசமும் அதன் உட்கட்டுமானமும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உருவாகும் தமிழீழத் தேசமும் அதன் உட்கட்டுமானமும்

தகவல் மூலம் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்

உருவாகும் தமிழீழத் தேசத்தின் உட்கட்டுமானப் பணிகளைப் பற்றிய ஒரு பார்வையே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். மலரும் தமழீழத்தின் முதற்கட்டமாக அதன் கட்டுமான பணிகள் எப்படி அமையப்பெறும் என தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினரால் அந்த திட்டத்திற்காக ஒரு ஆரம்ப வரைபு இவை. அந்த ஆரம்ப வரைபின் தமிழீழ கட்டுமானம் எப்படி அமையும் எனப் பார்த்தால் அந்த கட்டுமானத்தை எட்டுப் பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவை முறையே

1) நகரங்கள்

2) தெருக்கள்இ இரும்பு பாதைகள்இ விமான நிலையங்கள்.

3) கடற் போக்குவரத்தும் துறை முகங்களும்.

4) மின்சாரம்.

5) தொலை தொடர்பு.

6) நீர்ப்பாசனம். நீர் முகாமைத்துவம்.

7) கைத்தொழில்

8) நீர்வழங்கலும் வடிகால் அமைப்பும்.

எனப் பிரிக்கப்பட்டு தமிழீழத் தேசத்தின் எல்லைகள் தெளிவாக தெரிந்து இருப்பதனால் மாவட்ட எல்லைகளையும் நிர்ணயித்து மாநிலங்களின் வளர்ச்சிகள் அனைத்தும் சமமானதாகவும் சீரானதாகவும் எல்லா பிரதேசங்களிடையேயும் சீரானதாகவும் எவ்வித வேறுபாடுகளும் இல்லாதவாறு எல்லா வளங்களும் கடல்இ விவசாயம். கைத்தொழில் என்பன எல்லாப் பிரதேசங்களிற்கும் அமையப்பெறக் கூடியதாக இருக்கும்.

மாநிலங்களை வகுக்கும் போதும் அவற்றின் எல்லைகளை நிர்ணயம் செய்யும் போதும் கூடியளவு புவியியல் சார் பொளதீக அம்சங்களிற்கு அமைய அதாவது ஆறுகள்இ ஏரிகள்இ கடனீரேரிகள் என்பனவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். புதிய மாநிலங்கள் உருவாகும் போது தமிழீழத்தின் எதிர்கால தேசியத் தேவைகளிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழீழத்தில் மொத்தமாக இருபது மாநிலங்களாக பிரிக்கப்பட்டு அவை ஒவ்வொன்றின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன. தமிழீழ மாநிலங்களின் (மாவட்டங்கள் ) ஆட்சிப் பிரதேங்கள் தற்போதைய மாவட்ட ஆட்சிப் பிரதேசங்களை விட சிறியதாயினும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் பாரக்க பெரியனவாகும்.

தமிழீழத் தேவைகள் மற்றும் இலக்குகள் என்பனவற்றின் அடிப்படையைப் பொறுத்து யாழ் மாவட்டம் இரண்டாகவும்இ கிளிநொச்சி மாவட்டம் மூன்றாகவும்இ மன்னார் மாவட்டம் இரண்டாகவும்இ புத்தளம் மாவட்டம் மூன்றாகவும்இ திருகோணமலை மாவட்டம் மூன்றாகவும்இ மட்டகளப்பு மாவட்டம் மூன்றாகவும்இ அம்பாறை மாவட்டம் இரண்டாகவும் பிரிக்கப்பட்டு வவுனியா மற்றும் முல்லைதீவு மாவட்டங்களிலிருந்து மாங்குளம் பிரிக்கப்பட்டு தனிமாநிலமாக உருவாகும்.

யாழ்ப்பாணக் குடாநாடு இயற்கையாகவே தொண்டமனாறு மற்றும் நாவற்குழி நீரேரிகளால் வலிகாமம் பிரதேசத்திலிருந்து தென்மராட்சி மற்றும் வடமராட்சி பிரதேசங்கள் பிரிக்கபடுகின்றன. இதனடிப்படையில் யாழ்குடாநாடு இரண்ட மாநிலங்களாகப் பிரிக்கபடும். அவை முறையே

1) நல்லூர் மாநிலம்:- இப்பகுதியில் தற்போதைய வலிகாமும் தீவகமும் அடங்கும் இங்கு சனத்தொகை அதிகமாக இருப்பதோடு வளமான செம்மண்ணும் உண்டு.

2) வறணி மாநிலம்:- இப்பகுதியில் வடமராட்சி தென்மராட்சி பச்சிலைப்பள்ளி பிரதேசங்கள் அடங்கும். இங்கு சனத்தொகை குறைவாகவே காணப்படுகிறது.

தென்மராட்சியில் நெற்பயிர்ச்செய்கை வளமாக உள்ளதோடு பளைப்பிரதேசத்தில் தென்னைப்பெருத்தோட்டப் பயிர் வளம் அதிமாக உற்பத்தி செய்யலாம். வடமராட்சி பகுதிகளில் கடல் வளமும் மற்றும் வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் கடல் வளத்தை மேலும் திட்டமிட்டு அபிவிருத்தி செய்யலாம். வறணி நிர்வாக பிரதேசத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களும் புதிய அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த போதிய நில வளமும் வசதிகளும் உள்ளன.

3) கரைச்சி மாநிலம் :- இது கிளிநொச்சி பரந்தன் வட்டக்கச்சி பகுதிகளை உள்ளடக்கியது. இதன் வடக்கு எல்லையாக யாழ்குடா நீரேரியுள்ளது. விவசாயம் இப்பிரதேசத்தின் பிரதான வளமாகும்.

4) பூநகரி மாநிலம்:- இதன் மேற்கு எல்லை மன்னார் வளைகுடாவாகும். பூநகரிப் பெருநிலப் பரப்பு எங்கள் ஆதிக் குடியிருப்புக்கள் காணப்பட்ட பிரதேசமாகும். இங்கு நெற்செய்கை பிரதானமாகும் அத்துடன் தமிழர் பாரம்பரியம் பற்றிய அகழ்வாராச்சிகள் மேற்கொள்ள வேண்டிய பிரதேசமுமாகும்.

5) முல்லைதீவு மாநிலம்:- இது முன்னைய முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் பகுதியை கொண்டதாகும் இதில் மணலாறுப் பிரதேசமும் அடங்கும். இதன் கிழக்கு கரையோரம் வங்காள விரிகுடாவாகும். கடல்வளம் விவசாய வளம் என்பன இப்பகுதியின் பிரதான வளங்களாகும்.

6) மாங்குள மாநிலம்:- இது தற்போதைய முல்லைத்தீவுஇ மன்னார்இ கிளிநொச்சிஇ மற்றும் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். வடமாகாணத்தின் பிரதான நிர்வாக மையம்(மாநகரம்) மாங்குளத்தில் அமையும். எனவே இதனைக் கருத்திற் கொண்டு இப்பிரதேசம் பரப்பளவில் பெரிதாக அமையுமாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு ஒரு குறிப்பு மாங்குளத்தை மாநகரமாக அமைப்பதற்கான தொடர்ச்சியான ஆராச்சிகள் இடம்பெற்று சில முரணான தரவுகளும் கிடைக்கபெற்றள்ளது அவை போதியளவு நீர்வளமின்மை மற்றும் வளமான காடுகள் அழிக்கபடவேண்டிய அபாயமும் ஏற்படலாம் என்று அத்தரவுகளால் தெரிய வருவதனால் அவை உறுதிப்படுத்துமிடத்து வடமாநிலத்தின் தலைநகர் முறிகண்டியில் அல்லது கொக்காவிலிற்கு மாற்றப்படலாம்.

7) மன்னார் மாநிலம்:- மன்னார் மாவட்டம் மாந்தை மற்றும் மடு என்று இரண்டு நிருவாக பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது .

8) மாந்தை மாநிலம்:- இது மன்னார். தலை மன்னார். திருக்கேதீஸ்வரம் .கட்டுக்கரை குளம் .என்பனவற்றை உள்ளடக்கும்.இங்கு நெற்செய்கை மற்றும் கடல் வளம் தரமான களிமண் வளமும் உண்டு.

9) மடு மாநிலம்:- இப்பகுதி பிரதானமாக காடுகளை பேணும் இடமாகவும் மிருகங்கள் மற்றும் பறைவைகள் சரணாலயமாக பேண படும் அதைவிட புகழ்பெற்ற மடுமாதா ஆலயமும் இங்கு அமைந்திருப்பது இந்த பகுதிக்கு முக்கியத்துவத்தை கொடுப்பதாகும்.

10) வவுனியா மாநிலம்:- இப்புதிய மானிலம் கால்நடை அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிக்கபடும் அத்துடன் விவசாயம்

11) திருகோணமலை மாநிலம்:- தமிழீழத்தின் தலைநகராக் இப்பிரதேசம் அமையும் எனவே தமிழீழத்தின் நிர்வாக பிரதேசமாக இப்பகுதி அமைவதுடன் அயற்பகுதிகளான சீனன் குடா மற்றும் தம்பலகாமம் பகுதிகளிற்கும் தலைநகர் அபிவிருத்தி விரிவடையும்.

12) குச்சவெளி மாநிலம்:- இது தற்போதைய வட திருகொணமலை மாவட்டத்தில் இது அடங்கும் இதன் வட எல்லை முல்லை _திருகோணமலை எல்லைகளாகும். தெற்கு எல்லை கொறவப்பொத்தானை நெடுஞ்சாலையும் நிலாவெளியும் ஆகும்.

13) மூதூர் மாநிலம்:- இதன் எல்லைகளாக மகாவலிகங்கையாகவும் மற்ற எல்லைகள் தற்போதைய திருகோணமலை மற்றும் மட்டு எல்லைகளாகும். இப்பிரதேசம் விவசாயம் மற்றும் கடல் என்பன இதன் பிரதான வளங்களாகும்.

14) மட்டகளப்பு மாநிலம்:- இதன்கீழ் முதலாவதாக வாகரை மானிலம். இது புதிய நிருவாக பிரதேசம் ஆகும் இது பெரிய நீர் பரப்புடையதாகவும் தற்போதைய தற்போதைய மட்டகளப்பு மாவட்டத்தின் வடபகுதியாக இது அமைவதுடன். இதன் தெற்கு எல்லை முகுந்தன் ஆறு ஆகும்.

15) அம்பாறை மாவட்டம்:- இது சமநிலபரப்புடையதாக இரண்டாக பிரிக்கபடும்

(1) அக்கரைப்பற்று மாநிலம்

(2) பொத்துவில் மாநிலம்

இங்கு நெற்செய்கையும் விலங்கு வேளாண்மையும் பிரதானமாகும். வல்லவெளி பிரதேசம் தற்போதைய அம்பாறை மற்றும் மட்டகளப்பு மாநிலங்களின் பகுதிகளில் அடங்கும் . மட்டகளப்பின் தெற்கு எல்லை பிரதேசமாக செனத்தொகை அதிகம் கொண்ட பட்டிருப்பு பிரதேசம் அமையும்.

16) புத்தளம் மாவட்டம்:- புத்தளம் மாவட்டம் மூன்றாக பிரிக்கபடும் அவை

(1) அறுவாக்காடு மாநிலம்

(2) புத்தளம் மாநிலம்

(3) சிலாபம் மாநிலம்

எனப் பிரிக்கபட்டு இங்கு நெற்செய்கை மற்றும் கடல் வளங்கள் அபிவிருத்தி செய்யப்படும்

தொடரும் ஆக்கம் சாலினி சாத்திரி

http://www.thayakaparavaikal.com/August-th...ilavaram-1.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகப்பறவைகளை யாழ் இணையத்தில் இணைத்த முனியம்மாவுக்கு நன்றி.

சாலினி சாத்திரியின் பயனுள்ள கட்டுரைக்கம் நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thayakanilavaram21uo4.jpgதமிழீழ நிர்வாக வலயமாக தெரிவு செய்யப்பட்டுள்ள 20 மாநிலங்களும் அவற்றின் பிரதான நகரமாக குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, பொத்துவில் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் பிரதான நகரமாக தெரிவு செய்யப்பட்டுள்ள இடங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்த இடமாகவோ அல்லது ஒத்துழைப்பு கொடுக்கும் இடமாகவோ இருந்ததாகவோ தெரியவில்லை.

அம்பாறை மாவட்டம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகவும் சிங்களவர்கள் இரண்டாமிடத்திலும் தமிழர்கள் சிறுபான்மையாகவும் வாழ்கின்றனர், இதில் தெரிவு செய்யப்பட்டுள்ள அக்கரைப்பற்று(பாலமுனை), பொத்துவில்(பொத்துவில்) என்பன அதிகமான முஸ்லிங்களின் வாழ்விடங்களைக் கொண்டவை ஆகவே இந் நகரங்கள் எவ்வளவு தூரம் தமிழீழத்துக்கு பங்களிக்குமோ தெரியவில்லை,

இவை தவிர 100% தமிழர்கள் வாழும் பகுதிகள் பலவுள்ளன, கடந்த 1990ம் ஆண்டு இலங்கை அரசினால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் துணையுடன் தமிழர்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைக்காக மேற் கூறப்பட்டுள்ள இரு கிராமங்களும் முன்னிலையில் நின்று தமிழர்களை அழித்தன, பாலமுனைக்கு அருகாமையில் உள்ள மாட்டுப்பள்ளை, திராய்க்கேணி எனும் இரு பழந்தமிழ்க் கிராமங்களும் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது என்பது வரலாற்று உண்மை அதே போல் அக்கரைப்பற்றின் அருகேயுள்ள ஆலையடிவேம்பு எனும் தமிழ்க் கிராமம் தொடர்ந்து முஸ்லிம்களினால் பாதிப்புக்குள்ளாவது அறிந்த உண்மை.

இது முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை, ஜதார்த்தத்தை அனைவரும் அறிய வேண்டுமென்பதற்காகவே.

  • கருத்துக்கள உறவுகள்

முனியம்மாவும் தாயகப்பறவையில் இருக்கின்றாவோ! நல்லது.

------------------------------------------

அம்பாறையில் சிங்களவர்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, வேறு சிங்கள பகுதிகளையும் அம்பாறையில் இணைத்து, அதன் தமிழர் விகிதாசாரத்தைக் குறைத்துள்ளனர். இதை விட, அதைத் உத்தியோகபுூர்வப் பெயராக, திகாமடுல்ல என்ற பெயரில் அழைப்பதன் மூலம், சிங்களப் பிரதேசமாக்க முயல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!

சாத்த்ரியார் குடும்ப கோர்த்து தருவதால் மிச்சத்தையும் தருவார்கள் எண்டு நம்பலாம்...! ஆனா அடுத்த மாதம் வரைக்கும் காத்திருக்க வேணுமாம்...!

காத்த்ருக்கலாம்.... தேவையான தகவல்தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

------------------------------------------

அம்பாறையில் சிங்களவர்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, வேறு சிங்கள பகுதிகளையும் அம்பாறையில் இணைத்து, அதன் தமிழர் விகிதாசாரத்தைக் குறைத்துள்ளனர். இதை விட, அதைத் உத்தியோகபூர்வப் பெயராக, திகாமடுல்ல என்ற பெயரில் அழைப்பதன் மூலம், சிங்களப் பிரதேசமாக்க முயல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!

விடயம் தடுமாறிப் போகின்றதோ தெரியவில்லை, இருப்பினும் தூயவனின் கருத்தில் தெளிவின்மையால் எனக்குத் தெரிந்தவற்றைப் பதிவு செய்கின்றேன்.

மத்திய மலை நாட்டில் இருந்து உற்பத்தியாகி வெருகல் பகுதியின் ஊடாக வங்காள விரிகுடா கடலில் சங்கமிக்கும் மகாவலி கங்கையின் 200 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளத்தையும் கிழக்கின் தெற்கே குமுக்கன் ஆறும், கிழக்குத் திசையில் கடலும் மேற்கே அம்பாறையும் மலையடிவாரமும் கொண்டதான இடைப்பட்ட பகுதியே மட்டக்களப்பு மாவட்டம் ஆகும். வெருகலின் வடக்குத் திசை திருகோணமலை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு பெரும்பான்மையாகத் தமிழர்களும் இரண்டாமிடத்தில் முஸ்லிம்களும் சிறுபான்மையினராக சிங்களவர்களும் உள்ளனர் (சிங்களவர்கள் வசிப்பதாக அறியவில்லை) இங்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தமிழர்களே ஆட்கொள்வதால் இதனைச் சகிக்கமாட்டாத இனவாதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தை சிதைக்க முற்பட்டதன் விளைவே அம்பாறை மாவட்டத்தின் உருவாக்கமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் எல்லையில் அமைந்த நீலாவணை, பொத்துவில் ஈறாக அம்பாறை நகரத்தை மையமாகக் கொண்டு மொனராகலை மாவட்டத்தில் ஒரு பகுதியையும் இணைத்து 1960ம் ஆண்டு அம்பாறை நிர்வாக மாவட்டம் (திஹாமடுல்ல தேர்தல் மாவட்டம்) உருவானது.

புதிய மாவட்டத்தில் தமிழர்களின் விகிதாசாரத்தைக் குறைப்பதற்காகவும் சிங்களவர்களின் பரம்பலை அதிகரிப்பதற்காகவுமென அனுராதபுரம், மொனராகலை போன்ற பகுதிகளில் வாழ்ந்த இடமற்ற மக்களை இப்பகுதியில் குடியேற்றம் செய்து விகிதாசார ரீதியில் முதலாமிடத்தில் முஸ்லிம்களும் இரண்டாமிடத்தில் சிங்களவர்களும் சிறுபான்மையாக தமிழர்களும் உள்ளனர், அவ்வப்போது அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படும் இனச் சுத்திகரிப்பில் தமிழர்களின் விகிதாசாரம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை மற்றும் அம்பாறை தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் அமைந்த தேர்தலில் அதிகப்படியான தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர், இதில் பொத்துவில் தேர்தல் தொகுதியில் இருந்து ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பிருந்தது, தற்போது மாவட்டத் தேர்தல் முறை இருப்பதால் திஹாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைப் பெறுவதே அரிதாகவுள்ளது, இதற்கு தமிழர்களிடையே உள்ள ஒற்றுமையீனமே முக்கிய காரணமாகும்.

மட்டக்களப்பு, திருமலை, வன்னி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இடமற்று வாழும் தமிழர்களை அம்பாறை மாவட்டதின் தரிசு நிலங்களிலும், காடுகளைக் களனிகளாக்கி புனரமைத்து அவ்விடங்களிலும் குடியேற்றுவதன் மூலம் தமிழர்களின் விகிதாசாரத்தை அதிகரிக்கச் செய்யலாம், இதனால் எதிர்வருங்காலத்தில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.

குறிப்பு

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களினால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை நானும் அறிவேன், இருப்பினும் தகவலுக்காகவே இவை.

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த முனியம்மா?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தேவேந்தி!

நான், குழப்பமாகச் செய்தி தந்திருக்கக் கூடாது தான். இருந்தாலும், இப்படி ஒரு திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடப்பதைத் தான் சொன்னேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுகளிற்குநன்றிகள் கறுப்பி புரியலையா நான் சாத்திரியின் மனைவி நானும் யாழ் உறுப்பினர்தான் அனால் கருத்துகள் எழதுவது குறைவு எனக்கு அந்தளவுக்கு வராது.தாயக பறைவைகள் இணைய இதழிற்காக இந்த கட்டுரையை எழுதுவதால் மாதா மாதமே இத்தொடர் வரும் எனவே காத்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம சாத்திரியின் பாரியாரா அப்படியென்றால் கட்டாயம் தொடர் வாசிக்கனும்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ உட்கட்டுமானம் பகுதி 2

தமிழீழ உட்கட்டுமானம் பகுதி 2

தகவல் மூலம் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்

பிரதான நகரங்கள்

மாநிலங்களாக தெரிவுசெய்யபட்ட ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு பிரதான நகரம் ஒன்று தெரிவு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதே நேரம் தமிழ் ஈழத்தின் வளங்களும் ஆய்வு செய்யபட்டு பிரதான நகரங்களும் தெரிவு செய்யபட்டன ஆனால் தமிழீழம் உருவாகிய பின்னர் ஒரு செயற்குழு ஒன்று அமைக்கபட்டு தமிழீழத்தின் அபிவிருத்திக்கேற்ப இந்த பிரதான நகரங்கள் மாற்றமடையும்.

1. நல்லூர் பிரதேசத்தின் பிரதான நகரம் யாழ்ப்பாணம் ஆகும் இங்கு உட்கட்டுமானவசதிகள் அதிகம் உள்ளன

2.வரணிப் பிரதேசத்தின் பிரதான நகரம் கொடிகாமம் ஆகும். இது பருத்தித்துறை சாவகச்சேரி பளை வடமராட்சி கிழக்கு பகுதிகளின் மத்தியில் அமைகிறது. இங்கு அபிவிருத்திக்கு தேவையான அளவு நிலப்பரப்பு காணப்படுகிறது. புவியியற் பேராசிரியர் பொ. பாலசுந்தரம் பிள்ளை அவர்கள் கொடிகாமம் பற்றி ஆய்வு நடத்தி அதன் முக்கியத்தும் பற்றி சில கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

3.கரைச்சி மாநிலத்திற்கு பிரதான நகரம் கிளிநொச்சி நகரம் ஆகும்.

4. பூநகரி மாநிலத்திற்கு பூநகரி நகரமே சிறந்தது. சங்குப்பிட்டி கேதீவுபாலமும்(மகாவோ பாலம்) இதன் போக்குவரத்தும் பூநகரி நகரை முக்கியத்துவப் படுத்துகின்றது.இம்மாநிலத்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ உட்கட்டுமானம் பகுதி 2

தமிழீழ உட்கட்டுமானம் பகுதி 2

தகவல் மூலம் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்

பிரதான நகரங்கள்

மாநிலங்களாக தெரிவுசெய்யபட்ட ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு பிரதான நகரம் ஒன்று தெரிவு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதே நேரம் தமிழ் ஈழத்தின் வளங்களும் ஆய்வு செய்யபட்டு பிரதான நகரங்களும் தெரிவு செய்யபட்டன ஆனால் தமிழீழம் உருவாகிய பின்னர் ஒரு செயற்குழு ஒன்று அமைக்கபட்டு தமிழீழத்தின் அபிவிருத்திக்கேற்ப இந்த பிரதான நகரங்கள் மாற்றமடையும்.

1. நல்லூர் பிரதேசத்தின் பிரதான நகரம் யாழ்ப்பாணம் ஆகும் இங்கு உட்கட்டுமானவசதிகள் அதிகம் உள்ளன

2.வரணிப் பிரதேசத்தின் பிரதான நகரம் கொடிகாமம் ஆகும். இது பருத்தித்துறை சாவகச்சேரி பளை வடமராட்சி கிழக்கு பகுதிகளின் மத்தியில் அமைகிறது. இங்கு அபிவிருத்திக்கு தேவையான அளவு நிலப்பரப்பு காணப்படுகிறது. புவியியற் பேராசிரியர் பொ. பாலசுந்தரம் பிள்ளை அவர்கள் கொடிகாமம் பற்றி ஆய்வு நடத்தி அதன் முக்கியத்தும் பற்றி சில கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

3.கரைச்சி மாநிலத்திற்கு பிரதான நகரம் கிளிநொச்சி நகரம் ஆகும்.

4. பூநகரி மாநிலத்திற்கு பூநகரி நகரமே சிறந்தது. சங்குப்பிட்டி கேதீவுபாலமும்(மகாவோ பாலம்) இதன் போக்குவரத்தும் பூநகரி நகரை முக்கியத்துவப் படுத்துகின்றது.இம்மாநிலத்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தய செய்து மடடுறுத்துர் கவனிக்கவும் இரண்டு தடைவை அனு;பபட்டுள்ளது :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் ஹாய் முனிஸ் ஆவ்ட்டர் லோங் டைம் சாத்ஸ் எங்க?

  • கருத்துக்கள உறவுகள்

முனியம்மா அம்மணி உது என்ன ஆட்டம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனியம்மா அம்மணி உது என்ன ஆட்டம்

முனியாட்டம் :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனியம்மா, இணைப்பிற்கு நன்றி.

அதுசரி மிஸ்டர் சாத்ஸ் எங்க போய்ட்டார்? அவரில்லாததால் எல்லாரும் அவர்ர பிழைப்பில கையை வைக்கினம். மனுசனைக் கொஞ்சம் உசுப்பி விடுங்கோ என்ன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.