Jump to content

சுயமரியாதையியக்க சூறாவளி


Recommended Posts

பதியப்பட்டது

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

சுயமரியாதையியக்கச் சூறாவளி

eswablueback.jpg

ஒரு சிவசேவகன்

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை

திருநெல்வேலி பேட்டை

சுயமரியாதையியக்க குழாத்தினர்காள்!

'சுயமரியதை யியக்கச் சூறாவளி' யென்னும் இந்நூலில் உம் இயக்கக் கொள்கைகள் சிலவற்றை யாம் வரிசையாக அநுவதித்துக் கொண்டு அவற்றுள் ஒவ்வொன்றையும் பலவாறு ஆசங்கித்துள்ளேம். நீவிர் அவ்வாசங்கைகளை முறையே அநுவதித்துக் கொண்டு ஒவ்வொன்றற்குஞ் சமாதானங் கூறுவீராக. அறிவுடை யுலகிற்கு அவ்வியக்கம் இயையுமாறு அச்சமாதானங்கள் அறிவும் முரணாமையும் அளவி வெளிப்படுக. சமாதானங்கள் தோன்றாதொழியினும், அறியாமை, அழுக்காறு, வெகுளி, நிந்தை, பராமுகம் முதலியனவே செறிந்த சமாதானப் போலிகள் தோன்றினும் உம் சுயமரியாதை யியக்கம் எம் சூறாவளியின் முன் சிறுபுன் துரும்பாயிடுதல் சத்தியம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1. நாத்திகம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அநுவாதம்.

பதி, பசு, பாசம், சுவர்க்கம், நரகம், மறுபிறப்பு, பந்தம், முத்தி முதலியன உளவென்பது ஆத்திகம். அவற்றை யில்லை யென்பது நாத்திகம். அறிவாராய்ச்சியால் தகர்த்தெறியப்படும் எளிமையிலுள்ளது முன்னையது. மக்கள் உலகவின்பத்தை நுகர்வதற்கு அது முற்றிலும் இடையூறாயு மிருந்துவருகிறது. பின்னையதே அறிவாராய்ச்சியிற் சரியெனப்படுவதும் உலக வாழ்க்கைக்குத் துணைபுரிவது மாகும்.

ஆசங்கை.

I.

1. உம் குழுவினரனைவருமே நாத்திகர் தானா?

2. அவருட் சம்சய வாதிகளென்போரு மிலரா?

3. நாத்திகச் சார்பில் நிச்சயவாதிகளாகிய அவர் ஆத்திகச் சார்பு மட்டில் தம்மைச் சம்சயவாதிகளெனச் சொல்லித் திரிவது வஞ்சகமாகாதா?

4. 'நல்ல தீர்ப்பு' என்னுஞ் சுவடியில் "தமக்குக் கடவுளுணர்ச்சி வேண்டும்", "ஒருவனை தேவனும்" என்ற மனப்பான்மை தேவை. அருளைமட்டும் கேட்கும் ஆண்டவன் தேவை" என்று உம்.ஸி.என்.ஏ. வேண்டியுள்ளது ஆத்திகமன்றா?

5. அதனை அவர் உண்மையாகவே உடன்படின் அநீசுரவாதத்தை மறுத்தற்கு அசையாத காரணமொன்றைக் காட்ட மாட்டுவாரா?

6. பொறிகளோ கரணங்களோ பதி பசு பாசாதிகளை உணரக்கூடியனவா?

7. அவ்வாத்திகப் பொருள்கள் தம்முள் தொடர்புடையனவென்பது தெரியுமா?

8. கடவுளுணர்ச்சி வேண்டுமென்ற அவர் பசு பாச முதலிய பிறவற்றை எங்ஙனம் உணர்ந்தார்?

9. ஈசுரன் உலகை எந்த வுபாதானத்திலிருந்து, எப்படி, யார் பொருட்டு, எவ்வித நன்மையை வழங்கச் சிருஷ்டித்தானென்பது போன்ற விசாரங்களும் அடுக்கடுக்காக நிகழமாட்டாவா?

II.

10. உலகம் யாராலும் உண்டாக்கப்பட்ட தன்றென்று நீர் கொள்வதில்லையா?

11. ஆயின் நீர் குடியிருக்கும் வீடு ஒருவனாற் கட்டப்பட்ட தன்றா?

12. அது நீள, அகல, உயரங்களையுடையதாய் வரம்புட்பட்ட இடத்தில் அகப்பட்டுக் கிடப்பதில்லையா?

13. தூண், கல், மண் முதலியவாகத் தனித்தனி பிரிக்க படுவதில்லையா?

14. அ·தப்படியே யிருந்த போதும், உறுப்புறுப்புக்களாகப் பிரிக்கப்பட்ட போதும் சடவியல்பே யுடையதா யிருப்பதில்லையா?

15. அங்ஙனம் வரம்புக்குள் அகப்பட்டுக் கிடத்தல், உறுப்புறுப்புக்களாகப் பிரித்து வேறு வேறாக்கப்படுதல், சடமாய்க்கிடத்தல் என்பன அவ்வீடாகிய பொருளிலேயே காணப்படுவன அல்லவா?

16. குடம், துணி, கட்டில் முதலியவற்றிலும் அவையிலவா?

17. மக்கள் செய்த எந்தப் பொருளிலும் அம் மூன்றிற் குறைந்த அல்லது முரணிய வேறொன்று காணப்படுமா?

18. அந்த பொருளைக் கண்டு அவற்றை அதில் ஆராய்ந்து அது மக்களாற் செய்யப்பட்டதென்று சொல்லிவிட முடியாதா?

19. ஆகவே செய்யப்பட்டதொரு பொருள் செய்யப்பட்டதேயெனக் காண்பதற்கு அம்மூன்றும் அதன்பாலுள்ள அடையாளங்களென்பதை யறிகிறீரா?

20. இனி உலகமெனும் பொருள் முதன்முதல் உளதான போது அவ்வுளதாதலை நேரிற் பார்த்தீரா?

21. அ·தநாதி யென்பதையும் அங்ஙனமே பார்த்தீரா?

22. மக்களாற் செய்யப்பட்ட பொருள்களுட் பல நீர் இவ்வுலகில் தோன்றுமுன்னேயே செய்யப்பட்டு உம் காலத்திற் கிடப்பதில்லையா?

23. அவை செய்யப்பட்டதையாவது நேரிற் பார்த்தீரா?

24. ஆயினும் அவை மக்களாற் செய்யப்பட்டன்வென்று அம்மூன்றடையாளங்களும் அவற்றிற் கிடப்பன கொண்டு ஊகித்துக் கொள்ள முடியாதா?

25. உலகத்தின் உற்பத்தியோ அநாதித்தன்மையோ நேரிற் காணப்படாததாயுள்ள உலகமென்னும் பொருளிலும் அம்மூன்றடையாளங்களும் இருப்பதை யறிவீரா?

26. அதுகொண்டு உலகமும் ஒருவனாற் செய்யப்பட்ட பொருள்தானென்று ஏன் ஊகித்தல்கூடாது?

27. உலகம் தானே உளதாயிற்றென்பதற்கும், அநாதியென்பதற்கும் வேண்டப்படும் பிரத்தியேக அடையாளங்கள் அதில் உளவாயின் அவை இவையென விளங்கக் கூறுவீரா?

III.

28. 'நான் தமிழன், நான் திராவிடன்' என்று நீர் அடிக்கடி மார்தட்டுகிலிரா?

29. அந்த 'நான்' என்னுஞ் சொல்லுக்குப்பொருள் எது?

30. உம் தோல், எலும்பு, மயிர், குருதி, நரம்பு, பவ்வீ, சிறு நீர் முதலியவற்றுள் ஒவ்வொன்றும் அதுவா?

31. அவற்றின் கூட்டமே அதுவா?

32. உம் 'நான்' ஐ நேரிற் கண்டீரா?

33. பிறர்க்குக் காட்டுவீரா

34. காட்டுவேமென்பீராயின் நீர் சாவீரல்லீரா?

35. அப்பால் நீர் காட்டுவதெப்படி?

36. 'எனக்குக் காட்டுவீரா?' என்று வினவுகிறவனுடைய 'நான்' ஐயே அவனுக்குக் காட்டுவேமென்பீராயின் அவனை நீர் கொல்வீரல்லீரா?

37. அப்பால் அவன் காண்பதெப்படி?

38. நீரும் அவனும் அல்லாத பிறனுடைய 'நான்' ஐ அவனுக்குக் காட்டுவேமென்பீராயின் உம்மிருவரின் பொருட்டும் அப்பிறன் சாக வேண்டுமா?

39. உம் 'நான்' எந்தப் பொறிக்குப் புலனாகக் கூடியது?

40. அ·தெப்பொறிக்கும் புலப்படாதென்பீராயின் வேறெம்முகத்தாலாயினும் ஊகித்து அச்சொற்பொரு ளிதுதானென்று அறுதியிட்டு உம்மவர் யாரேனும் விளக்கியிருக்கின்றனரா?

41. பலர் பல விளக்கங்கள் தந்திருக்கின்றனரென்பீராயின

Posted

2. பகுத்தறிவு

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அநுவாதம்.

விலங்கு பறவை முதலியவற்றுக்கு அறிவு வளர்வதில்லை. அவ்வறிவு வெறும் பொறியுணர்ச்சியே. மக்களுக்கு அவ்வுணர்ச்சியோடு இன்னோ ருணர்ச்சியும் உடனிருந்து வருகிறது. அதுவே பகுத்தறி வெனப்பட்டு வளர்வதூஉம், எல்லாஞ் செய்யவல்லதூஉமாம். அதனைக் கைவிட்டவர் அவ்விலங்கு பறவைகளினுங் கடையரே யாவர்.

ஆசங்கை.

I.

1. மக்கட் சிறப்பாவது பகுத்தறிவே யன்றா?

2. மக்களுக்கு இயல்பாயுள்ளது அறிவா? அறியாமையா? இரண்டுமேயா?

A..

3. அறிவெனின் அறியாமை அவரைப் பற்றிய தெப்படி?

B.

4. அறியாமையெனின் இல்லது தோன்றுமா?

5. அவர் மாட்டறிவு வெளிப்பட்டதெப்படி?

C.

6. இரண்டுமேயெனின் தம்முள் முரணிய அறிவு அறியாமை யென்னும் இரண்டு குணங்களும் அவர்க்கு இயல்பாதல் கூடுமா?

II.

7. முற்றறிஞ ரிவர், பேரறிஞ ரிவர், சிற்றறிஞ ரிவர் என்று அவரவர் அறிந்துள்ள பொருள்களின் அளவை வைத்தன்றி மக்களை மதிப்பிடுவ தெங்ஙனம்?

8. பொருள்க ளென்றுள்ளவை யனைத்தையும் அறிந்தவரே முற்றறிஞரென்பது மெய்தானா?

9. ஆனால் உலகில் நாளிதுவரை அம்முற்றறிஞர் ஒருவரேனுந் தோன்றியுளரா?

10. உமது ஈ.வே.ரா.த் தானும் முற்றறிஞ ரவரா?

11. இனியேனும் முற்றறிஞர் தோன்றலாமென நம்புகிறீரா?

12. அதிகப் பொருள்களை யறிந்தவர்தான் பேரறிஞ ரென்பது மெய்தானா?

13. ஆனால் அவர் அறியாத பொருள்களின் அளவைத் தெரியாமல் அறிந்த பொருள்களின் அளவை அதிகமெனல் யாங்ஙனம்?

14. அறியாத பொருள்கள் அறியாத பொருள்களாகவே யிருக்கும் போது அவற்றின் அளவைத் தெரிய முடியுமா?

15. அறிவு வளர்ந்து கொண்டே போகிறதென்பது அறியாத பொருள்களே அதிகமிருத்தல் வேண்டுமென்பதைக் காட்டாதா?

16. ஆகவே எத்தகைய பேரறிஞரும் அவர் அறியாத பொருள்களின் அதிகத்தைக் கொண்டு சிற்றறிஞரே யாவரென்று ஒதுக்கப்படாரா?

III.

17. அறிந்த பொருள்களுக் குள்ளேயே அவற்றின் அளவிற்கோ தரத்திற்கோ ஏற்பச் சிற்றறிஞரிவர் பேரறிஞரிவர் எனக் கணிக்கப்படுவா ரென்பீராயின் பேரறிஞரெனப்படுவோராலேயே மக்களுட் கட்சி வேறுபாடுகளும் பிறவேறுபாடுகளும் உளவாதல் ஏன்?

18. அப்பேரறிஞரேனுந் தம்முள் ஏன் ஒத்துப்போதல் கூடாது?

19. உம் ஈ.வே.ராவும் காந்தியும், காந்தியும் ஜின்னாவும், ஜின்னாவும் சவர்க்காரும் தம்முள் மாறுபட்டுத் தத்தமக்கெனப் படைதிரட்ட வில்லையா?

20. தமிழ்நாட்டில் நடந்த ஹிந்திச் சண்டை பேரறிவின் விளைவா? சிற்றறிவின் விளைவா?

IV.

21. ஒருவர் அறிந்ததனை இன்னொருவர் அறியாதிருக்கலா மன்றா?

22. ஒருவருக்கே நேற்றுச் சரியெனத் தோன்றிய வொன்று இன்றுத் தவறெனவும், இன்றுச் சரியெனத் தோன்றுகிறவொன்று நாளைத் தவறெனவுந் தோன்றி அவரால் ஒதுக்கப்படுவதில்லையா?

23. ஒன்றையே நேற்றுச் சரியெனவும் இன்றுத் தவறெனவும் நாளைச் சரியெனவும் கொள்வா ரிலரா?

24. பேரறிஞ ரெனப்படுவோ ருள்ளும் அக்குறைகள் காணப்படாவா?

V.

25. பகுத்தறிவு வளர்ந்துகொண்டே போவதெனில் அப்போக்குக்கு எல்லை உண்டா? இல்லையா?

A..

26. உண்டெனின் அ·து எது?

B.

27. இல்லையெனின் அப்போக்கு வரம்பின்றை யோடுவதென்னுங் குற்றத்தினை யெய்தாதா?

28. அறிவு வளர்ந்துகொண்டே போகுமெனின் அறியாமையும் இருந்துகொண்டேயிருக்கு மென்பது சித்தியாதா?

VI.

29. பலவேளைகளில் அறியாமையும் அறிவேபோல் அடர்ந்தெழுவதை யறிவீரா?

VII.

30. மக்களுக்கு வேண்டுவது உலகவின்பமா? வீட்டின்பமா? இரண்டுமேயா?

A..

31. உலகவின்ப மெனின் அ·து ஐம்பொறிகளின் வழித்தேயான தன்றா?

32. அது விலங்கு முதலியவற்றுக்குக் காட்டிலும் மக்களுக்கு எம்மு¨றைற் சிறக்கின்றது?

33. மலந் தின்னும் போது பன்றிகளும் பாயசான்னம் உண்ணும்போது மக்களும் நுகருஞ் சுவையின்பத்தில் வேற்றுமை யென்னை?

34. நுகர் பொருளின் சிறப்புக்கேற்ப இன்பமுஞ் சிறக்குமெனின் இன்பமானது நுகர்பொருளி லில்லை, நுகர்கின்றவருடைய உள்ளத் துணர்ச்சியிலேயே யிருக்கிற தென்கிற உமக்குச் சிறப்புப் பொருளிது சிறப்பில் பொருளிது வென்கிற வித்தியாசம் எது?

35. நுகர்பொருளின் சிறப்பும் இன்பத்துக்கு ஏதுவென வைத்துக்கொண்டாலும் சிறப்புப் பொருள்களை நுகரும் வளம் பெற்ற தெள்ளறிஞர்பலர் அவ்வின்பத்தை வெறுப்பானேன்?

36. அப்பொருள்களை மதித்து நுகர்தற்குரிய பகுத்தறிவு அவருக்கில்லை யென்பிராயின் உம் ஈ.வே.ரா உலக போகத்தை நலக்க நுகர்ந்து வருகிறாரா?

37. பொறியின்பத்துக்கு வேறாய்ப் பகுத்தறிவின்பமென வொன்று உளதென்பிராயின் அவ்வின்பத்தை எந்தப் பொறியின் வாயிலாய் நுகர்கிறீர்?

38. மக்களுக்குப் பகுத்தறிவு எவ்வளவிலாவது துன்பத்தை நீக்கி யுள்ளதா? நீக்கத்தான் வல்லதா?

B.

39. வீட்டின்ப மெனின் உலகவின்ப நுகர்ச்சிக்கண் விலங்குகளுக்குப் போல் மக்களுக்கும் வேண்டாவெனப்படும் பகுத்தறிவு அவர்க்கு வீட்டின்ப நுகர்ச்சிக் கண்ணும் வேண்டாவென்பது வீட்டு நூற் றுணுபாவதை யறிவீரா?

40. அக்காலை அப்பகுத்தறிவு வேறொரு வியாபக அறிவில் விழுங்கப்பட்டுவிடுமென்று அந்நூல் கூறுவதுந் தெரியுமா?

C.

41. இரண்டுமேயெனின் முதலதிற் பொறியுணர்விலும், அடுத்ததில் வியாபகவுணர்விலும் அகப்பட்டு வசமழியத்தக்க பகுத்தறிவு. இரண்டற்குஞ் சேரத்துணைபோதல் யாங்ஙனம்?

VIII.

42. நீர் சிறப்பிப்பது அங்ஙனம் வசமழியாத பகுத்தறிவா?

43. அப்பகுத்தறிவு இ·துயர்வுடையது, இது தாழ்வுடையது எனப்பொருள்களைப் பகுத்துவைப்பதைத் தவிர்த்து வேறென் செய வல்லது?

44. எல்லாவித வேறுபாடுகளுந் தோன்றுவதற்கு மூலம் அ·தன்றா?

45. விலங்கு முதலியனவும் வீடெய்திய வுயிர்களும் பொருள்களில் உயர்வு தாழ்வு காணாமைக்கு அவற்றின் மாட்டுப் பகுத்தறி வில்லாமை தான் காரணமென்பது தெரியுமா?

46. அப்படியே அவ்விரண்ட விடைப்பட்ட மக்களிடமும் எவ்வித வுயர்வு தாழ்வும் ஒழியவேண்டுமாயின் அதற்கு மூலமான பகுத்தறிவும் ஒழியவேண்டாமா?

47. ஆயின் அவ்வறிவுக்கு நீர் ஏன் அவாவுகிறீர்?

IX.

48. மருந்தை இன்னின்ன சரக்குகள் சேர்த்து இன்னின்ன முறையிற் செய்து இன்னின்ன நோய்க்கு இன்னின்ன அளவில் இன்னின்ன அநுபானத்தோடு கொடுக்க வேண்டுமென்பது மருத்துவனுடைய பகுத்தறிவிற் கொள்ளப்பட்டிருப்பது போல் நோயாளியின் பகுத்தறிவிலுங் கொள்ளப்பட்டிருக்குமா?

49. இராதாக அதனை அந்நோயாளி வாங்கி யுண்பது தன் பகுத்தறிவாலா? அம்மருந்துவன்பாற் கொண்ட நம்பிக்கையாலா?

50. பகுத்தறிவு துணைபுரியாத சமயங்கள் அநேகம் உள, அச்சமயங்களின் நம்பிக்கையே பெரிதும் உதவக்கூடியதென்பது அதனால் விளங்கவில்லையா?

51. சில பல சமயங்களில் நம்பிக்கை மக்களைக் குருடராக்கி விடுகிறதே யென்பிராயின் உம் பகுத்தறிவும் அவ்வாறாக்கு மென்பதை யறிகிலீரா?

52. சிதம்பரனா ரென்பவரால் எழுதி உம் ஈ.வே.ராவால் அங்கீகரிக்கப்பட்டு 1941-இல் 2-ஆம் பதிப்பாக ஈரோடு குடியரசுப் பதிப்பகத்திலிருந்து வெளியான 'தமிழர் தலைவர் பெரியார் ஈ.வே.ரா வரலாறு' என்ற சுவடியில் உம் ஈ.வே.ரா கோயிலுக்குச் சென்றிருந்த தம் மனைவியைத் தாசியென்று தம் நட்பினராகிய சில தூர்த்தர்களுக்கு வேண்டுமென்றே காட்டி அவர்களைக் கொண்டு ஏளனஞ் செய்வித்த செய்தியைப் படித்திருக்கிறீரா?

53. அவர் கலியாணமாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகு காசியை அடைந்த போது - ஒரு சத்திரத்தின் வாயிலில் நுழைந்தார். இவர் பார்ப்பனர் அல்ல என்று கண்டு வாயில் காப்போன் வெளியே தள்ளினான் - அப்பொழுது உள்ளேயிருந்து எச்சில் இலைகளை வெளியே கொண்டு வந்து எறிந்தனர். பார்த்தார் இராமசாமி. கோபம் ஒரு புறம். பசிக்கொடுமை ஒரு புறம்-ஓடினார் கோபத்தோடு இலைகளிடம் உட்கார்ந்தார் சட்டமாக. கையைப் போட்டுச் சோற்றை வழித்தார். வாயில் வைத்து வயிற்றுக்குள் தள்ளினார். இலையில் இருந்த பண்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. அவர் பசிப்பிணியும் தணிந்தது.-----கையில் ஒற்றைபவுண் மோதிரம் இருக்க இச்செயலில் புகுந்(தார்) என்ற விருத்தாந்தமும் அதில் உள்ள தன்றா?

54. தூர்த்தரைக் கொண்டு மனைவியைப் பரிகாசஞ் செய்வித்தல், மோதிரத்தை விற்றுப் பசியைப் போக்கிக்கொள்ள மனமில்லாத கிருபணத்துவம், தமிழரெனச்சொல்லிக் கொண்டு எச்சிற் சோற்றையுண்டு மானத்தைப் பறிகொடுத்தல், கோபத்தாற் பகைவராகிய பார்பனரின் எச்சிலென்பதைக் கருதாமை, பிறரெச்சிலையுண்ண அருவருப்புக் கொள்ளாமை முதலிய வெல்லாம் பகுத்தறிவின் விளைவா? அதற்கு மாறானதொன்றன் விளைவா?

X.

55. விஞ்ஞானியர் அவ்வப்போது கண்டுவரும் புதுமைகளுக்கு அவர் பகுத்தறிவே மூலமென்பீராயின் அதனை 'Necessity is the mother of invention' என்ற ஆங்கிலப் பழமொழி மறுக்கவில்லையா?

56. அவர் உலகப் புதுமைகளைக் காணக் காணத் தம்மை வியந்து தருக்கிச் சாமானியரை அப்புதுமைகளில் தோய்ந்து உலகவளத்திற் பேராசை கொள்ளுமாறு செய்யவில்லையா?

57. இதற்குமுன் நடந்த போர்களிற் காட்டிலும் இப்போரில் உலகமடைந்தது பெருநாசமன்றா?

58. அப்பயங்கர நாசத்துக்கு விஞ்ஞானமே காரணமென்பதை எவரே மறுக்கவல்லார்?

59. எத்துனை உலகப்புதுமைகளைக் கண்டாலும் துய்த்தாலும் மக்கள் துயரம் போமா?

60. அதனைக்கண்ட புத்திமான்கள் அப்புதுமைகளில் வியப்படைவாரா?

61. எத்துனைப் புதுமைகளைக் கொண்டதாயினும் உலகம் அருவருக்கப்படவே வேண்டுமென்னும் உண்மையை உலகிற் கறிவுறுத்தும் அத்தெள்ளறிஞரின் முன் அவ் விஞ்ஞானியர் எவ்வளவினர்?

62. மக்களுக்குத் துன்பத்தியே தராததும் இன்பத்தையே தருவதுமாகிய எப்புதுமையை எவ்விஞ்ஞானி கண்டுபிடித்தான்?

63. விஞ்ஞானம் மக்களுக்கு வேண்டுவன அனைத்தையும் நல்கி உள்ள குறைகள் அனைத்தையும் நீக்கி விடுமா?

64. துயரங்களுக்கெல்லாம் மூலம் அறியாமை தவிர வேறென்ன?

65. அ·து அறவே நீங்கும்வரை சுகமேது?

66. எத்துனைச் சிறந்த விஞ்ஞானமும் தன்னையுடைய விஞ்ஞானியின் அறியாமையை அறவே நீக்கிய துண்டா?

67. விளக்கு எத்துனைப் பிரகாசமுடையதாயினும் இருளை அறவே போக்காததுபோல் பகுத்தறிவு எத்துணை வளர்ச்சியுற்ற தாயினும் அறியாமையை அறவே போக்காதென்பதையும், ஞாயிற்றினொளி யொன்றே இருளை முற்றிலும் போக்கவல்லது போலப் பகுத்தறிவுக்கு வேறானதொரு முற்றறிவே அறியாமையை முற்றிலும் போக்கவல்ல தென்பதையும் அறிவீரா?

XI.

68. விஞ்ஞானத்துக்குக் குறிக்கோள் எது?

69. அதனை யெய்திச் சாந்தி பெற்ற விஞ்ஞானி எவன்?

ஆக அநுவாதம் 2 க்கு ஆசங்கை 172

Posted

3. பொது வுடைமை

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

அநுவாதம்.

உலகிலுள்ள எல்லா மக்களும் உழைக்க வேண்டுவது அவசியம் ஒரு சாரா ருழைப்பில் இன்னொரு சாரார் வாழ்வதென்பது எப்போதும் ஆகாது. முதலாளி உழைப்பாளி யென்கிற வேறுபாடு அறக்கொடிது. மக்களெல்லருஞ் சமமாக வுழைத்து உலகவள மனைத்தியுஞ் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதே நெறி. அதற்குத் துணைபுரியும் பொதுவுடைமை யரசுதான் நல்லரசு.

ஆசங்கை.

I.

1. செல்வம் மக்களை நல்லவ ராக்குமா? ஆக்காதா?

A..

2. ஆக்குமெனின் செல்வரைப் பழிப்பானேன்?

B.

3. ஆக்காதெனின் பொதுவுடைமை யரசால் எல்லாமக்களுஞ் செல்வராவதிற் பயனென்?

II.

4. உலகம் மக்களுக்கு உரியதாதல் பிறப்புப் பற்றியதா? தகுதி பற்றியதா?

A..

5. பிறப்புப் பற்றியதெனின் எல்லார்க்கு மென்பதில் விலங்கு முதலியனவும் அடங்குமா?அடங்காவா?

a..

6. அடங்குமெனின் அவற்றின் நலத்துக்கென அவ்வரசில் வகுக்கப்பட்டுள்ள திட்டங்களெவை?

b.

7. அடங்காவெனின் அவையும் உலகிற் பிறக்கவில்லையா?

8. மக்களுள் விலங்கினுங் க்டையர் மலிந்து கிடப்பதை யறிவீரா?

9. அவர் என்றாயினும் இலராகவாவது சிறு பாலராகவாவது ஆவரா?

10. அவருக்கிருக்கும் உரிமை அவற்றிற்கு ஏனில்லை?

B..

11. தகுதி பற்றியதெனின் அதில் ஏற்றத் தாழ்வுகள் இலவா?

12. அவை மக்களின் சமத்துவத்தைக் கெடாவா?

13. அத்தகுதியையும் நீர் ஒழிக்க முற்படாத தென்னை?

14. தகுதியில்லாதாரும் உலகிற் பிறந்தவரலரா?

III.

15. உழைப்பவருக்கே உலகவளம் உரிந்தெனின் அவருக்கு அது கூலியாகாதா?

16. அவ்வரசில் ஒருவன் தான் பெறுங் கூவியளவுக் கன்றி அதிகம் உழைக்கிறாவென்பது உண்மையா?

17. அவ்வதிக வுழைப்பின் கூலி அவ்வரசையே யடைவதில்லையா?

18. அங்ஙனஞ் சேர்ந்த பொருளை நாட்டின் நன்மைப் பொருட்டேயாயினும் அவ்வரசே செலவு செய்யும் அதிகாரமுடைய தன்றா?

19. அந்நலமாவது உழைப்பவன் மேலு மேலும் உழைத்தற்கென அவனுக்கு அளிக்கப்படும் வசதியா? அதனின் வேறாயதோர் இன்பமா?

A..

20. வசதியெனின் உழைப்பவன் உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்பது தவிர அவனுக்குச் சுகமென வொன்றில்லை யென்பது சித்தியாதா?

21. உழைப்பே சுகமாகுமா?

B..

22. இன்பமெனின் அ·து யாது?

23. உண்ணல் உடுத்தல் உறங்கல் ஊர்தல் ஏவல் களித்தல் முதலியனவா? வேறா?

a..

24. உண்ணல் முதலியனதானெனின் அவற்றை அறவே வெறுக்கும் அறிஞரை அவற்றின் பொருட்டு உழைக்குமாறும் அவ்வின்பத்தில் தோயுமாறும் வற்புறுத்தல் நீதியா?

b.

25. வேறெனின் அ·து யாது?

IV.

26. மனிதன் தனியே பிறந்து தனியே சாகிறானென்பது உண்மையன்றா?

27. அப்பிறப் பிறப்புக் கிடைப்பட்ட அவன் வாழ்க்கையை அவ்வப்போதுள்ள சமூகமோ அரசோ எப்படி முழுவதுங் கட்டுப்படுத்தலாம்?

28. ஒரு நாட்டு மக்களை முழுமையாகவும், ஒவ்வொருவனையும் அதன் உறுப்பாகவும் அந்நாட்டுப் பொதுவுடைமை யரசு வைத்து நடத்துமாயின் அங்குத் தனி மகனுக்குச் சுதந்திரம் இருக்க முடியுமா?

29. உம் ஈ.வே.ரா. சமூகத்துக்கோ அரசுக்கோ கட்டுப்படுகிறாரா? அல்லது அவற்றைத் தமக்குக் கட்டுப்படுத்த முயல்கிறாரா?

30. சமூகத்துக்கோ அரசுக்கோ கட்டுப்படுபவன் அதனை எப்படித் திருத்தமுடியும்?

31. அதனைத் திருத்தத் துணிப்வன் அதற்கெப்படிக் கட்டுப்பட முடியும்?

32. சமூகமோ அரசோ செய்யுஞ் சகாயத்தாலுந் தீராத துன்பங்கள் தனி மனிதனுக்கிலவா?

33. அவ்விரண்டாலன்றி வேறு வழிகளால் வரக்கூடிய இன்பங்களும் அவனுக்கிலவா?

34. அத்துன்பங்களிலிருந்து விடுபடவும், அவ்வின்பங்களை யெய்தவும் அவன் முயன்றால் அவனைத் தடுக்க எந்த அரசுக்கேனும் அதிகார மிருக்கலாமா?

V.

35. பொதுவுடைமை யரசில் சிறை வைத்தல் தூக்கிலிடல் முதலிய தண்டனைகளுக் கிடமுண்டாகுமா?

VI.

36. நாடுதோறும் பொதுவுடைமை யரசு தனித்தனி வேண்டுமா? உலக முழுவதற்கும் ஒரே பொதுவுடைமை யரசு தான் வேண்டுமா?

A..

37. முன்னையதே வேண்டுமெனின் மக்கள் நாடுபற்றிப் பிரிந்தவ ராவா ரல்லரா?

38. இயற்கை வளம் சிறிது மில்லாத நாட்டிற் பிறந்த மக்கள் அது நிறைந்துள்ள நாட்டின் நலத்தைத் துய்ப்ப தெப்படி?

B..

39. பின்னையதுதான் வேண்டுமெனின் அவ்வளமுள்ள நாட்டிற் பிறந்த மக்களை அ·தில்லாத நாட்டிலும், அ·தில்லாத நாட்டிற் பிறந்த மக்களை அ·துள்ள நாட்டிலும் நூறாண்டுகளுக்கொரு முறையாவது மாறிச்சென்று குடியேறி வாழ அவ்வரசு வசதிசெய்து கொடுக்குமா?

40. தனியுடைமை சிறிதுமில்லாமை, பிரயாண வசதி அதிக முண்மையாதியன அக்குடியேற்றங்களைச் சுலபமாக்காவா?

41. அக்குடியேற்றங் கூடாதெனின் மக்களுக்குட் பொறாமையும் பகைமையுங் வளராவா?

42. வளமில்லா நாட்டிற் பிறந்த மக்களை அப்பிறப்புப்பற்றி அங்கேயே வாழவைப்பது அவர்களைக் கொடுமைப் படுத்திய தாகாதா?

VII.

43. அவ்வரசிற் பிரதிநிதிகளாய் வருவார் நாடுபற்றியா? இனம் பற்றியா? கட்சி பற்றியா? மொழி பற்றியா? பிற பற்றியா?

A..

44. இந்தியா சீனா முதலிய நாடுகளோ, திராவிடர் ஆரியர் நிகிரோவர் யூதர் முதலிய இனங்களோ, காங்கிரஸ் ஹிந்து மகாசபை முசிலீம் லீக் முதலிய கட்சிகளோ, பிறவோ பற்றியெனின் அவையெல்லாம் நாடு இனம் கட்சி பிற ஆகியவற்றின் பற்றை நிலைக்கச்செய்து மக்களுக்குள் வேற்றுமையையும் பகைமையையும் விளைவிப்பனவாகலின் ஒழிய வேண்டாமா?

B..

45. மொழிபற்றியெனின் அதனாலுண்டாகிய வேறுபாடு தொலைக்க முடியாததொன்றென்பது தெரிகிறதா?

46. மொழிபற்றிப் பிரிந்துள்ள மக்கட் கூட்டத்தினர் தம்முன் தொகையில் ஏறியுங் குறைத்தும் இருப்பாரல்லரா?

47. அந்த அளவிற்றானே பிரதிநிதிகளும் அமைவர்?

48. அப்போது அவர்க்குட் பெரும்பான்மைச் சிறுபான்மைச் சண்டை நேராதா?

49. உலகப் பொதுவுடைமை யரசுக்கு உலகப் பொதுமொழி அல்லது அரசமொழியென வொன்று வேண்டாமா?

50. அவ்வகையிலும் மொழிப்போர் நிகழாதா?

51. உம் ஈ.வே.ரா உலகப்பொதுவுடைமை யரசு விருப்பரல்லவரா?

52. அவர் தமிழரா? வேற்று மொழியினரா?

53. இன்று உலகப் பொதுவுடைமையரசு தொடங்கி விட்டால் தமிழரின் பிரதிநிதியாக அவரையே அனுப்ப முனையீரா?

54. 'இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டாலும் உலக சம்பந்தம் இல்லாமல் இந்தியா வாழ்ந்துவிட முடியாது. வருங்காலவுலகம் தேசத்துக்கு தேசம் நாட்டுக்கு நாடு இப்போது உள்ள தூரத்தில் இருக்காது, கூப்பிடு தூரத்தில் இருக்கப்போகிறது. ஹிந்திக்கு ஆகட்டும், வேறு இந்திய பாஷைக்கு ஆகட்டும் இனி அடுப்பங்கரையிலும் தொழில் கருவியும் யந்திரமும் இங்கிலீஷ் பாஷையில் தான் இருக்கப்போகிறது. விவசாயிக்கும் --- வியாபாரிகளுக்கும் ---- அரசியல்காரனுக்கும் அதுபோலவே தான் என்று 'பகுகுத்தறிவு' III, 6 இல் அவர் கூறியிருப்பதை யறிவீரா?

55. எதிர் காலத்தில் தமிழ் சாவது திண்ணம் என்று அவர் இப்போதே குறிகண்டு உமக்குஞ் சொல்லி மகிழ்வது அவ்வரிகளால் விளங்க வில்லையா?

56. அவர் விரும்பும் அத்தமிழ்க்கொலையரசு தமிழருக்கு வேண்டுமா?

VIII.

57. 'Danger of Communism to Islam' என்ற தலைப்பின் கீழ் 'Nawabzada Liaqat Ali Khan sounded a note of warning against the great danger of Communism to Islam. He said that those who believed that through Communism they could secure Pakistan, were greatly mistaken. They might secure Pakistan of the conception of Communism, but they would not secure Pakistan of Islamic Conception' என்றுள்ள வரிகளை 13-5-1945 'இந்தியன் எக்ஸ்பிர' ஸில் படித்தீரா?

58. நீர் விரும்புவது கம்யூனிஸ (பொதுவுடைமை)த் திராவிட ஸ்தானா? இசுலாமியத் திராவிட ஸ்தானா?

A..

59. முதலதெனின் இங்குள்ள இசுலாமியத் திராவிட ரனைவரும் உமக்குப் பரம சத்துருக்களாவா ரென்பதை யறிகிறீரா?

B..

60. அடுத்ததெனின் நீர் இசுலாமியராவதோடு எல்லாத் திராவிடரையுமே இசுலாமியராக்க வேண்டாமா?

IX.

61. உலகமுழுவதும் எனக்கே யிருக்கட்டுமென்றல், உலகத்தை எல்லார்க்குஞ் சமமாகப் பண்ட்கிட்டு எனக்குக் கிடைக்கும் பாகம் போதுமென்றல், உலகம் எனக்குவேண்டவே வேண்டாமென்று அறத்துறத்தல் என்னும் இம்மூன்றில் எதைக் கொண்டால் மனிதன் உயர்ந்தவ னாவான்?

X.

62. பொதுவுடைமையரசில் மக்கள் ஈசுர விசுவாசத்தைக் கொள்ளலாமா? ஆகாதா?

A..

63. ஆமெனின் அந்த விசுவாசத்தை இன்ன அளவிற்றான் கொள்ள வேண்டும், அவ்வுபாசனையை இன்னமுறையியற்றான் நிகழ்த்த வேண்டும் என்பனவாதிய கட்டுத் திட்டங்களை அவ்வரசு வகுக்குமா?

64. அவை அவ்வச்சமய வணக்க முறைகளுக்கு மாறாய் அமையின் நியாயமா?

B..

65. ஆகாதெனின் மக்களின் அறிவுலக வாழ்வில் அவ்வரசு மண்போடுவதாய் முடியாதா?

XI.

66. பொதுவுடைமை நாட்டில் ஆடம்பரங்கள் இருக்குமா? இராவா?

A..

67. இருக்குமெனின் தனிப்பட்ட மனிதருக்கோ, ஏதேனுமொரு கொள்கையைத் தமக்கெனவுடைய ஒரு கூட்டத்து மக்களுக்கோ உவப்புத் தருவதென அவர் விரும்புங் காரியமே ஆடம்பரமெனப்படுவதன்றா?

68. அவ்வரசு தான் விரும்புவதொன்றைத்தான் அவர் ஆடம்பரமெனக் கொள்ளவேண்டுமென நிர்ப்பந்திக்கலாமா?

69. அந்நிர்ப்பந்தத்தாற் கிடைப்பது ஆடம்பரமாகுமா?

70. ஆடம்பரத்துக்கான செலவை அவ்வரசே உதவவேண்டுமன்றா?

71. அப்போது ஆடம்பரத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள பொருளை அவரவர்க்குப் பங்கிட்டுக் கொடுக்குங் கடன் அவ்வரசுக்கில்லையா?

72. தமக்கென ஒரு கொள்கையையுடைய ஒரு சமூகத்தார் அக்கொள்கைக்கேற்ற முறையில் தம் பகுதிப்பணத்தைக் கொண்டு தமக்கு விருப்பமான ஆடம்பரங்களைச் செய்து மகிழ அவ்வரசில் அநுமதிக்கப்படுவாரா?

B..

73. இராவெனின் இன்பத்தில் ஒரு பெரும்பகுதி அந்நாட்டு மக்களுக்கு இல்லாதவாறு அவ்வரசு தடுப்பதாய் முடியாதா?

74. இன்றியமையாக வகையிற் பயன்படுத்தப் பட்டன போக எஞ்சியுள்ள பொன்னும் அபரிகிதமான நவமணிகளும் அவ்வரசில் எப்படிப் பயன்படுத்தப்படும்?

75. அங்கு நவமணிகள் மதிப்பிடப்படுவ தெப்படி?

76. பொதுவுடைமை யரசில் மக்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்னை?

XII.

77. சர்வாதிகாரம், ஜனநாயகம் (குடியரசு) என்னும் இரண்டுவகை யாட்சிகளுள் நீவிர் விரும்புவது எது?

A..

78. சர்வாதிகாரமெனின் அதில் மக்களுக்குப் பேச்சு எழுத்து முதலியவற்றிற் சுதந்திரம் இருக்க முடியுமா?

79. இல்லை யென்பதைக் காட்டிச் சர்வாதிகார நாடுகளுக்குள் முதலதும் உம்மால் மதிக்கப்படுவதுமாயுள்ள ரஷியாவைப் பற்றி 'The news-paper (Daily Harold) writes.....'Russia has no parties in the sense in which we the people of Britain and the United States interpret the words parliament and parties. Russia has no free press or free platforms. A man cannot stand up in Moscow, as he can at Marble Arch.... and criticise the government and hope to obtain publication of independent political views in 'Pravda' or 'Izvesta'" என்றொரு செய்தி 15-9-1945 'இந்தியன் எக்ஸ்பிர' ஸில் வந்துள்ளதை யறிவீரா?

B..

80. ஜனநாயகமெனின் 'ஆதலால் சர்வாதிகாரம் என்பதைக் குறை கூறாதீர்கள். ஜனநாயகம் என்பதே பித்தலாட்டமான காரியம். அதிலும் நமக்கு அது பித்தலாட்டமும் முட்டாள்தனமானதுமான காரியம்' என்று 25-8-2945 'குடியர' சில் உம் ஈ.வே.ரா. ஏன் கூறினார்?

ஆக அநுவாதம் 3 க்கு ஆசங்கை 252

eswaramoorthypillaisuyamari.jpg

Posted

இந்நூல் குறித்து அவ்வப்போது கிடைத்த ஆன்றோர்களது அபிப்பிராயஙகள் சில:

திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண பண்டார சந்நிதியவர்கள்

திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்

திருவாவடுதுறை மடம்

Camp-திருவிடைமருதூர்

24-3-1947

"மகாபுருஷச் செல்வச் சிரஞ்சீவி நமது து.இராஜரத்தின முதலியார் அவர்கட்குச் சர்வா பிஷ்டமும் சிந்தித மனோரத சித்தியும் உண்டாவதாக. தாங்கள் அன்புற்று விடுத்த 'சுயமரியாதையிக்கச் சூறாவளி' என்னும் நூலிலுள்ள பகுதிகள் இருபத்து நான்கனையும் நாம் நன்கு பார்வையிட்டோம். வேதத்திற் கூறப்பட்ட பஞ்சாக்கினி வித்தை, மிருதிகளிற் கூறப்பட்ட பீஜ §க்ஷத்திர வியவகாரம் முதலிய சுபக்ஷ விஷயங்களை மனத்திற் கொண்டு பூர்வ பக்ஷ¢களிடம் கேட்கும் ஆசங்கைமுறையும் நமக்கு மிக்க திருப்திகரமா யிருக்கின்றன. தாங்கள் எழுதிய பதிப்புரையில் நமது ஆதீன கவிசார்வபெளமர் கச்சியப்ப முனிவர் திருவாக்கை எடுத்தாண்டு பாரததேச முழுவதும் சைவஸ்தானமென்று குறித்திருப்பது நமக்குந் தனித்த மகிழ்ச்சியைத் தருகின்றது. தங்களை நாம் நேரிற் பார்த்து கலந்துகொள்ள விரும்புகிறபடியால், இவ்விடம் தாங்கள் கூடிய சீக்கிரம் வருகிற விவரத்திற்குத் தெரிவிக்க வேண்டியது"

Posted

சிவஸ்ரீ வி. சிதம்பரராமலிங்க பிள்ளை அவர்கள்

ஆதீன வித்வான்,

துறைசை யாதீனம்,

திருவாவடுதுறை

24-3-1947

"அன்புள்ள ஐயா, உபய§க்ஷமம். தாங்கள் எனக்கு அன்புற்று விடுத்த 'சுயமரியாதையியக்கச் சூறாவளி'ப் புத்தகம் கிடைத்தது, விஷயங்களைப் பார்வையிட்டு மிகுந்த மகிழ்ச்சி யடைகிறேன். நல்லூழ் வந்து தலைக்கூடுவார்க்கு அப்புத்தகம் சிவபெருமானது அருட் பிரசாதமே யென்பது எனது கருத்து. நமது சநாதன தர்ம பிரமாண நூல்களைக் கல்லாத - பொது அறிவு மாத்திரமுள்ள - சாதாரண - மக்கட்கு அந்நூல் நல்லறிவுச் சுடர்க் களஞ்சிய மாகும். அதனை ஆக்கிய 'சிவசேவக'னுக்கு எனது ஆசி."

Posted

ஸ்ரீ திரு நாராயணையங்கா ரவர்கள்

'செந்தமிழ்'

ஆசிரியர்,

மதுரைத் தமிழ்ச் சங்கம்,

மதுரை.

24-3-1947

"சிவநேசச் செல்வர், து.இராஜரத்தின முதலியாரவர்களுக்கு ஐயா, தாங்கள் அனுப்பிய 'சுயமரியாதையியக்கச் சூறாவளி' யை முழுதும் படித்தேன். அதனுள் அவ்வியக்கத்தின் கொள்கைகள் பலவும் அநுவதிக்கப் பட்டுப் பற்பல ஆசங்கைகளால் மறுக்கப்படுகின்றன. அநுவாதக் கொள்கைகள், இந்நாட்டில் தொன்று தொட்டு வழங்கும் சதாசாரங்களை அழித்து, துராசாரங்களை விளைத்துக் குடும்ப வாழ்க்கையைக் குலைத்து உறவு முறைகளை யுலைத்து, அன்பு, ஆர்வம், நண்பு, செல்வம், சால்பு, குடிமை, பெருமை, மேன்மை முதலிய மக்கட் பண்புகளை மாற்றி, வறுமை, தனிமை, மாறா அடிமை, முதலிய இன்னாமைக் கிலக்காக்கி உறுதிப் பொருள்களை யொழித்துப் பலகேடு விளைத்தற் குரியன. அவற்றை மறுக்கும் ஆசங்கை பலவும் நூலொடு பழகிய நுண்ணுணர்வும் ஆன்றோ ரொழுக்கமும் உலக வழக்கமும் கொண்டு எழுதப்பட்டன. அவையெல்லாம் ஆத்துமஞான மில்லாத நாத்திகர் நெஞ்சிற் புகுதல் அரிதே. ஆயினும், பொது நோக்குடைய மேன் மக்கள் நெஞ்சில் அவ்வியக்கத்தின் துராசாரத் துரால் படியாமல் துரக்கு மென்பது ஒருதலை இக்காலத்தில் இத்தகைய புத்தகங்கள் பல வெளிவரல் வேண்டும்.--- அக்கடமையைத் தாங்களும் தங்கள் நண்பர் சிவசேவகரும் செய்திருப்பதற்கு ஆத்திக ரனைவரும் நன்றி பாராட்டும் கடமையுடையராவர்."

Posted

புரியவில்லை.

இது புத்தக விளம்பரமா ?

கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எங்கே பதில் ?

புரியவில்லை.

புரியவில்லை.

புரியவில்லை.

புரியவில்லை.

புரியவில்லை.

புரியவில்லை.

Posted

ஐயா எதுவும் புரியவில்லை, ஒரே நாளில் இவளவு பெரிய பதிவை பதிந்தால் யாரும் பார்க்க மாட்டார்கள் :unsure:

Posted

ஐயா கேள்விகள் தங்களுக்கு கேட்கப் படவில்லை. நாத்திகர்களுக்கு கேட்கப் பட்டது. இந்த கேள்விகளை நன்றாக உற்று நோக்கினால் அதன் மகிமை புரியும். அவர்களால் இதில் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது. இந்த சூறாவளி கேள்விகள் மூலம் நாத்திகர்களின் கேவலமான் கொள்கைகளை உடைத்து அழிக்கும்.

Posted

சிவக்கவிமணி கே.சுப்பிரமணிய முதலியாரவர்கள் B.A.,F.M.U.

பெரிய புராண உரையாசிரியர்,

சேக்கிழார் நிலயம்,

கோயம்புத்தூர்.

27-12-1947

"சுயமரியாதையிக்கச் சூறாவளி" என்ற நூல் வரப் பெற்றுப் படித்து இன்புற்றேன். சுயமரியாதைப் பெயர் பூண்ட ஒரு கூட்டத்தினர் பயிருக்குக் களை போலத் தோன்றிக் கடவுள் நம்பிக்கை, பெரியோர் முது மொழி பேணுதல், ஆன்ற நல்லொழுக்கம் முதலியவற்றைக் கெடுத்துச் சிறார்களையும் பள்ளிப் பிள்ளைகளையும் கேடுறுத்தி வருகின்றனர். அவர்களது பேச்சுக்களும் எழுத்துக்களும் பாமர ஜனங்களுள் மயக்கத்தை விளைக்கின்றன. இந்த களைப்பூண்டுகளின் தன்மையினை உள்ளவாறு எடுத்துக்காட்டு முகத்தால் மக்கள் கேடுறா வண்ணம் செய்தற்கு எழுந்தது இந்நூல். இது காலத்துக்குக் கேற்ற பெருந் தொண்டாகும். இதனைச் செய்தவர் உத்தரமேரூர் 'சிவசேவகன்' என்பார். இதனூள் அக்கூட்டத்தாரது கொள்கைகளை 24 வகைகளாக வகுத்து ஒவ்வொன்றிலும் அவரது கொள்கைகளை அநுவதித்துத் தலைப்பெய்து பின் அதனை மறுக்கும் வினாக்களை நிகழ்த்தி அவறுக்கு விடை சொல்லாவாகவே அக்கொள்கைகள் மறுக்கப்பட்டமை காட்டியுள்ளார். இக்கேள்விகளின் மூலம் அவர்களது கொள்கைகளின் அசம்பாவிதங்கள் யாவரும் தெரிந்து கொள்ளும்படி இச்சூறாவளி அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் இதனைத் தற்புகழுக்கோ அன்றி வேறு ஊதியமோ கருதியியற்றினா ரல்லர். உலக மக்களின் நலம் கருதியே ஆக்கியுள்ளார். இவர்கள் இது போலவே பல நல்ல நூல்களை இயற்றி உலகுக்கு உதவி நீடு வாழ்வா ராக"

பின் குறிப்பு: இந்த அன்பரைத் தான் சி.கே.எஸ்(C.K.S.) ஐயா என்று அழைப்போம். இவர் தான் பெரிய புராணத்திற்கு அருமையான உரை செய்தவர்.

Posted

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள்

கும்பகோணம் முகாம்

உத்தர மேரூர்

16-4-1947

தமிழ் நாட்டின் இன்றைய நிலைமையில் மக்களுக்கு இன்றியமையாததும் விலை மதிப்புக்கடாங்காததுமான ஒரு நூலுண்டெனில், அது உத்திர மேரூர் சிவசேவகனின் "சூறாவளி" நூலே.

Posted

22.கற்பு

--------------------------------------------------------------------------------

அநுவாதம்.

கற்பொழுக்கம் பெண்டிரை ஆடவர்க் கடிமைப் படுத்துகின்றது. ஆகலின் அதனைப் பெண்டிர் வெறுத்து உதறித் தள்ள வேண்டும் அல்லது ஆடவர்க்கும் அவ்வொழுக்கம் ஏனிருத்தல் கூடாதென வாதிட வேண்டும். ஆடவர் கெடவில்லையாயிற் பெண்டிருங் கெடவே மாட்டார்.

ஆசங்கை.

I.

1. விலங்கு பறவை முதலியவற்றுள்ளுங் குட்டி குஞ்சுகளுக்குத் தந்தை யுண்டன்றா?

2. ஆனாற் குட்டி குஞ்சுகள் இதுதான் தம் தந்தையெனக் கண்டு கொள்ள வல்லவா?

3. அத் தந்தையுந் தன் குட்டி குஞ்சுகள் இவைதா மெனக் கண்டுகொள்ள வல்லதா?

4. தாயேனும் அத் தந்தையை அதன் குட்டி குஞ்சுகளுக்கும், அக்குட்டி குஞ்சுகளை அவற்றின் தந்தைக்குங் காட்டிக் கொடுக்க வல்லதா?

5. இவ் வேலாமைக் கெல்லாங் காரணம் தனக்குக் குட்டி குஞ்சுகள் வேண்டுமென்று அத்தந்தை விரும்பாமையும், அத்தாய் பலவற்றைப் புணர்வது மாகிய இவையன்றி வேறென்?

6. ஆகவே தந்தை தனக்குப் பிறந்த குட்டி குஞ்சுகளையும் குட்டி குஞ்சுகள் தம்மைப் பெற்ற தந்தையையுங் கண்டுகொள்ளவும், தாய் காட்டிக் கொடுக்கவும் மாட்டாத கூட்டமே விலங்கு பறவை முதலியன வென்பதைத் தெரிகிறீரா?

7. மக்களுள் வேசிக்கூட்டமும் அத்தகையதன்றா?

II.

8. ஆனால் தந்தையைப் பிள்ளையும், பிள்ளையைத் தந்தையும் கண்டு கொள்ள ஆசைப்படாத கூட்டமா மக்கட் சமூகம்?

III.

9. பிள்ளையைத் தந்தை பெறுவது தாய் வயிற்றிலும், தாய் பெறுவது உலகிலு மல்லவா?

10. தாய் எத்தனை பேரைப் புணர்ந்தாலும் பெறும் பிள்ளை தன் பிள்ளையே யென்பதிற் சம்சயப்படுவாளா?

11. நேரிற் பார்த்த ஊரார் சான்று பகர்வதால் பிள்ளையுந் தன் தாயைக் கண்டு கொள்ளலாமன்றா?

IV.

12. ஆனால் தந்தை பிள்ளையைப் பெறுவது தந்தைக்குத்தான் தெரியுமா?

13. தாய்க்குத்தான் தெரியுமா?

14. பிள்ளைக்குத்தான் தெரியுமா?

V.

15. ஆனால் தந்தைக்குத் தன் பிள்ளையை நிச்சயித்துக் கண்டு கொள்ளவும், அதனோடு கொஞ்சவும் வேண்டுமென்ற புத்ர வாத்ஸல்யம் இராதா?

16. பிள்ளைக்குத் தன் தந்தையை நிச்சயித்துக் கண்டு கொள்ளவும் அவனுக்குப் பணியாற்றவும் வேண்டுமென்ற பித்ரு பக்தி யிராதா?

17. தாய்க்குத் தன் வயிற்றில் தனக்கும் பிள்ளையாமாறு விதைபோட்ட தன் கணவனின் நன்றியையும் அவனிடமிருந்து தன் வயிற்றில் பிள்ளையை வாங்கிக்கொண்ட கடனையும் மறவாமை வேண்டாமா?

18. அவள் தன் கணவனுக்கு அவன் பெற்ற பிள்ளையையும் பிள்ளைக்கு அவனைப் பெற்ற அப்பனையுங் காட்டுதற்கு வாய்ப்பு வேண்டாமா?

19. அத்தனையுங் கை கூடுதற்கு வாயில் ஒருத்தி தன் வாழ்நாள் முழுவதும் தன் கணவனையே புணர்ந்து வாழ்தல் வேண்டுமென்ற பொருள் பயக்குங் கற்பு என்னுந் திண்ணிய வொழுக்கம்தாயின் மாட் டுளதாத லொன்றே யன்றா?

20. அவள் மட்டில் இருவரைப் புணர்ந்து விடுவாளேயானால் அவள் வயிற்றிற் பிறக்கும் பிள்ளையைத் தந்தையானவன் தன் பிள்ளை தாவென நிச்சயைத்துக் கொள்ள மாட்டுவானா?

21. அவனுக்குப் புத்ர வாத்ஸல்யம் அரும்புமா?

22. பிள்ளைக்குத்தான் தன்னைப்பெற்ற தந்தை யிவன்றானென நிச்சயிக்க முடியுமா?

23. அதற்குப் பித்ரு பக்தி அரும்புமா?

24. தாய்க்காவது தன் கணவன்றான் அப்பிள்ளைப் பேற்றை யுபகரித்தானென நிச்சயிக்க முடியுமா?

25. அப்பிள்ளையைத் தன் வயிற்றில் வாங்கிக்கொண்ட கடனை அவள் அவனுக்குத் தீர்ப்ப தெப்படி?

26. ஆகவே பிதா புத்ர சம்பந்த வுணர்ச்சி, அதன் வழித்தாகிய அன்பு என்னும் மக்களியல்பு மக்களுலகில் எடுபடாது என்றும் நிலையுதற் பொருட்டு மனுஷனாகிய கணவன் மனுஷியாகிய மனைவியை அக் கற்பொழுக்கத்தில் நிறுத்தி வைத்தலும், அவளும் அங்ஙனமே நீற்றலுந்தான் மானுஷீக மரியாதை யென்பதை யறிகிறீரா?

27. அம்மக்களியலைத் தானுங் கொள்ளாமல் தன் மனைவிக்குங் கொளுத்தாமல் திரியு மொருவன் இருப்பானாயின் அவனே நாய் பன்றி கழுதை யல்லனா?

28. அப்படியே ஈடுசெய்ய முடியாத நன்றியைப் புரிந்த தன் கணவனுக்கு ஆட்படுதல் தன் மரியாதைக் கிழுக்கெனக் கருதியலையு மொருத்தி யிருப்பாளாயின் அவளே பாம்பு புலி பேய் அல்லளா?

29. ஈடுசெய்ய முடியாத நன்றிக்குக் கைம்மாறாகத் தக்கது விரும்பி யாட்படுதலென்னு மொன்று தவிர வேறேன்னையுளது?

30. அதனை மனைவி தன் கணவனிடம் உதாசீனஞ் செய்ய முனைவாளாயின் அவளை வரைநிறுத்தும் பொறுப்பு அந்நன்றியைப் புரிந்த கணவனுக்குத்தானு மில்லையா?

VI.

31. புதல்வியருந் தம் தந்தையை நிச்சயித்துக் கண்டு கொள்ள ஆசைப்படாரா?

32. ஆகலின் பெண்டிர் தம் பொருட்டுந் தம் கற்பொழுக்கத்தைக் காத்துக்கோடல் அவசியமன்றா?

VII.

33. மக்களுக்கும் தந்தையை யறியவேண்டா மென்பீராயின் மகளை அப்பன் மணந்து கொள்ளவும் நேரிடாதா?

34. பாரத தேசம் திராவிட நாடு முதலியவற்றை நீர் அபிமானிப்ப தில்லையா?

35. அவ்வபிமானமே காரணமாகப் பாரதமாதா திராவிடத்தாய் என்று கூறி நீர் அவற்றை மதிப்பதில்லையா?

36. உம்மைப் புத்ரஸ்தானத்திலும் அவற்றை மாத்ருஸ்தானத்திலும் வைப்பதற்கு நீர் அவற்றிற் பிறந்ததொன்றே காரண மன்றா?

37. அம்மாதாக்கள் உம்மிடம் புத்ர வாத்ஸல்யங் காட்டுகின்றனவா?

38. அவை உம்மை விரும்பிப் பெற்றனவா?

39. அவை யெல்லாஞ் சடங்க ளென்பதை யறிவீரா?

40. தேசாபிமானத்துக்குத் தேசத்திற் பிறத்த லொன்றை காரணமல்லாது வேறு காரணங்களில்லை யாகலின் வேறு காரணங்களை யவாவுதல் மடமையன்றா?

41. சடதேசத்திற் பிறப்பதற்கு முன் உம்மைப்பெற்ற அறிவுள்ள தேசங்களில்லையா?

42. உம் தந்தை வயிற்றிலிருந்து உம் தாய் வயிற்றில் நீர் பிறந்திலீரா?

43. இன்னதேசமென்று தெரியாத மூலத்திலிருந்து உம் தந்தை வயிற்றுக்கு நீர் வந்திலீரா?

44. அத் தாய் தந்தையரும் உமக்குச் சென்ம தேசங்களல்லரா?

45. அவர் அறிவுள்ள தேசங்களென்பதையும் அறிவிரா?

46. உமக்கு அறிவிருந்தால் நீர் அச் சடதேசங்களைக் காட்டிலும் உம் மாதாபிதாக்களாகிய அறிவுள்ள தேசங்களையே பெரிதும் அபிமானிக்க வேண்டுமென்பதை யுணர மாட்டீரா?

47. தன் ஜென்ம தேசங்களுட் பிரதம தேசமாகிய தந்தையைக் கண்டு அபிமானித்து வந்திக்க வொருப்படாதவன் தனக்கு அவாந்தரத்தில் வந்தனவும் சடவியல்புடையளவு மாகிய பாரத தேசம் திராவிட நாடு முதலிய ஜென்ம தேசங்களை அபிமானிப்பவனெனத் தன்னைச் சொல்லிக்கொள்வது பொருளுடையதாகுமா?

48. சுதேசாபிமானமே மக்களுக்கு அதிசிரேட்ட கெளரவமாகலின் தந்தை தானே பிள்ளைக்குப் பிரதம சுதேசமென்பதைக் காட்டி அக் கெளரவத்தை ஆக்கிக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கமும் அவன் பிள்ளைப் பேற்றை விரும்பக் காரண மென்றாற் குற்ற மென்னை?

49. கற்பரசிகளின் புதல்வர்க்கே தம் பிரதம ஜன்ம தேசமாகிய தந்தையை யபிமானிக்க முடியுமென்பது தெரிகிறதா?

50. விபசாரிகளின் புதல்வர்க்கு அப்பிரதம தேசந் தெரிய வாராதாகலின் அவர்தந் தாயரே பிரதம தேசமாகி அவரால் அபிமானித்து வரப்படுவரென்பது பொய்யா?

51. வீசி யெறியப்பட்டு அரசாங்கத்தின் ஆதரவில் வளர்ந்த மகனுக்கோ தன் தாயாகிய ஜன்ம தேசமுந் தெரியாதன்றா?

52. அவனுக்கே சடதேசங்கள் பிரதம ஜென்ம நேசமாயிருந்து அபிமானிக்கப்படத் தக்கனவா மென்பதை யறிகிறீரா?

53. ஆகவே மானமுள்ள மகன் தன்னை அரசாங்கமே வளர்க்கவும். சடதேசாபிமான மாத்திரமே யுண்டாமாறு இடமாக்கவும் இசைவானா?

54. வீசியெறியப்பட்ட குழந்தைக்கு அரசாங்கத்தால் ஊட்டப்படுந் தேசாபிமானமே எல்லார்க்குந் தேசாபிமானமா யிருத்தல் வேண்டுமென்பீராயின் திராவிட ஸ்தானத்திலிருந்து வீசியெறியப்பட்ட குழந்தை ஆரிய ஸ்தானத்திற் போய் விழுந்து வளர்ந்தால் அ·தங்கு ஆரிய மயமாகவே வளராதா?

55. வளர்ந்து அறிவு பெற்ற பிறகு அவனுக்கிருப்பது ஆரிய தேசாபிமானமேயன்றா?

56. தேசாபிமானம் பிறப்புப் பற்றியதா? வளர்ப்புப் பற்றியதா?

57. இனிப் பாரதமாதா திராவிடத்தாய் முதலியன போலாது விலங்கு பறவைத் தாய் அறிவுள்ள தாகலின் தன்பாற் குட்டி குஞ்சுகள் பிறந்த பிறகாயினும் அவற்றினிடம் சிலகாலமாயினும் வாத்ஸல்யத்துட னிருக்கவில்லையா?

58. விலங்கு பறவை யாதியவற்றினும் மக்கள் விசேட அறிவுடைய ராகலின் அவருட் குலத் தந்தை தன்னை யநுசரிக்குந் தந்தையுந் துணைக் கொண்டு தன் புதல்வரைத் தன் ஆயுளுள்ளவரை நேசிப்பதைத் தெரிகிலீரா?

59. அத்தந்தைக்குப் புதல்வர் பிறந்த பிறகு உளதாகும் வாத்ஸல்யம் போல் பிறப்பதற்கு முன்னரும் புதல்வர் வேண்டுமென்ற ஆசையுமிருப்பதற்கு அவ் யாத்ஸல்யத்திலுள்ள இன்பத்தை அவ் விசேட அறிவு கொண்டு அவர் முன்னமேயே உணர்வதுதான் காரணமாகுமென்பது விளங்கவில்லையா?

60. ஒருவனுடைய தேசாபிமானத்துக்கு அவன் அத்தேசத்திற் பிறந்ததே காரணமா யிருப்பதுபோல் ஒருவனுடைய புத்ரவாத்ஸல்யத்துக்கு அவன் அப்புத்திரனை விரும்பிப் பெற்றதே காரணமா யிருக்கிற தென்றாற் குற்றமென்னை?

61. ஆகவே கற்பரசிகளின் பிள்ளைகளே உண்மைத் தேசாபிமானிக ளென்பதை யிப்போதாயினுந் தெரிகிறீரா?

62. தன் தேசத்துக்குக் கேடு நேராத அளவில் உலகமனைத்தையும், தன் மாகாணத்துக்குக் கேடு நேராத அளவில் தன் தேசத்தையும், தன் ஜில்லாவுக்குக் கேடு நேராத அளவில் தன் மாகாணத்தையும் இப்படியே கீழ்க் கீழ்க் சென்று அபிமானிப்பதே ஒருவனுக்கு வேண்டப்படு மெப்னது அரசியலறிஞர் துணிபன்றா?

63. அப்படியே ஒடுங்கிக்கொண்டு போகுந் தேசாபிமானத்துக்கு முடிவிடம் ஒவ்வொருவனுக்கும் அவன் தந்தையே யென்பதில் ஐயமென்னை?

64. பாரததேசம் திராவிடநாடு முதலியவற்றை மாதாக்களென்று நீர் எத்துணை யுயர்த்திக் கூறினும் உமக்கு உண்டி உறையுள் முதலியன கொடுத்து உம்மை வாழவைக்க வேண்டுமென்ற பரிவுணர்ச்சி அவற்றிற் குண்டாதல் கூடுமா?

65. அவ்வுணர்ச்சி அறிவுடைச் சென்ம தேசமாகிய உம் தந்தைக்கு உண்டாகாதா?

66. தன் வயிற்றுப் பிள்ளைகளுக்குச் சொத்துத் தேடி வைக்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு அது பற்றியே யுண்டாகிறதென்பது தப்பா?

67. தப்பெனின் யாங்ஙனம்?

VIII.

68. தந்தையைத் தெரிந்த பிள்ளைக்குந் தெரியாதபிள்ளைக்குந் தோற்றத்தில் வித்தியாசமுண்டா?

69. இல்லையாகலின் மனைவியின் கற்பொழுக்கத்தைப் பலவாற்றானுங் காத்துக்கோடல் பிள்ளையாரையுடைய கணவனுக்கு அவசியமாகாதா?

IX.

70. ஆடவர்க்குங் கற்பொழுக்கம் ஏன் வேண்டாமெனவாதிப்பீராயின் பிள்ளைப் பேற்றுக்கு மூலமாய அவரும் அவ்வீதியிற் கட்டுண்டாராயின் ஜன சங்கியா விருத்தியில் மண்விழாதா?

71. பிள்ளை பிறந்த பிறகு தாய்க்கு உளதாகும் புத்ர வாத்ஸல்யமும், பிள்ளைக்கு உளதாகும் மாத்ரு பக்தியும், அவ்விருவர்க்கும் உளதாகும் மாதா புத்ரவுறவும் தந்தையின் கற்புச் சிதைவதாற் கெடுமா?

72. தன் மூலம் பிள்ளை யுதியாதபடி தடை செய்துகொண்டு சாத்தன் இன்பத்தின் பொருட்டுக் கொற்றன் மனைவியைப் புணரலாமென்பீராயின் அவ்வின்பத்தை விரும்புபவர் கொற்றன் மனைவியா? சாத்தனா?

A..

73. கொற்றன் மனைவியெனின் ஆண் தயவை யெதிர்பார்த்துப் புணரும் எளிமையிலுள்ள பெண்ணாகிய அவள் 'உன் மூலம் என் வயிற்றிற் பிள்ளை யுதியாதப்டி ஏதேனுந் தடை செய்து கொண்டு என்னைப் புணர்' என்று அச்சாத்தனுக்கு நிபந்தனையை விதிக்க முடியுமா?

74. அவள் கற்பரசியயின் தன் கணவன் பிள்ளைப் பேற்றோடு புணர்ச்சி யின்பத்தையுங் கொடுத்துவரும்போது அயலாரின் நாடமாட்டாளென்பதை யறிவீரா?

75. மேலும் அவளுக்குப் பிள்ளைப் பேற்றினும் புணர்ச்சியின்பம் ப்ரிதெனவே தோன்றாதென்பதும் உமக்குத் தெரியுமா?

B.

76. சாத்களெனின் 'என் மூலம் பிள்ளை யுதியாவண்ணந் தடை செய்துகொண்டு நான் உன் மனைவியை புணர்வேன்' என்று கொற்றனுக்கே நேரில் அவன் தடையுறுதியைச் செய்து கொடுக்க வேண்டுமன்றா?

77. கொற்றன் மனைவியும் சாத்தனும் புணரும் போதெல்லாம் பேற்றுத் தடையோடு புணர்கின்றனராவென்று காணக் கொற்றன் கண்விழித்துக்கொண்டே யிருக்க வேண்டாமா?

X.

78. சாத்தன் தன் மனைவியையும் அவ்வாறே பிறனுக்குக் கொடுக்க இசைவானென்பது பெறப்படவில்லையா?

79. தம் பெட்டைகளை வேறு ஆண்கள் புணரவரின் சீறி விழுந்து அவற்றைத்துரத்தும் ரோஷம் சில விலங்கு பறவையாதிகளிடமும் உண்டென்பதை யறிவீரா?

XI.

80. பெண்டிருட் சிலர் கற்புக் கெடுதற்கு ஆடவரின் துஷ்டத்தனமே காரணமென்பீராயின் எல்லா ஆடவருமே அல்லது அவருட் பெரும்பாலாராவது துஷ்டத்தனம் சிறிதுமில்லாதிருக்கும் உலகத்தை என்றாவது எதிர் பார்க்கிறீரா?

81. அன்று வரையிலாவது அத்துஷ்டத்தனத்துக் கிரையாகாவண்ணம் ஒவ்வொருத்தியும் ஒவ்வொருவனுக்கே மனைவியாகி அவன் பாதுகாப்பிலோ, கணவனை யடைவதற்கு முன்னரும் விதவையான பின்னரும் அவள் பெற்றோர் உடன்பிறந்தோர் பிள்ளைகள் கணவனின் தாயத்தார் முதலியவர் பாதுகாப்பிலோ இருந்தே தீரவேண்டுமென்பது விளங்கவில்லையா?

82. அதனை விடுத்து ஆடவரைத் துஷ்டர் துஷ்டரெனத் தூஷித்துக்கொண்டே அவர் துஷ்ட கிருத்தியங்கள் எளிதிற் கிளர்ந்தெழுந்து வளருமாறும், பெண்டிர்க்குச் சுதந்திரம் வேண்டுமென்னும் வியாஜத்தால் அவர் கட்டைக் குலைத்து அவரை நடுத் தெருவிற் கொண்டுவந்து திரிய விட்டு அக்கிருத்தியங்களுக்கு வசமாமாறுஞ் செய்வது உமக்கு அடுக்குமா?

83. பெண்டிருள் துஷ்டரே யிலரா?

XII.

84. கற்பரசிகள் தங் கற்பை உலகிற்குக் காட்டவும் பிறர் காணவும் வாயிலுண்டா?

85. இல்லையெனக் கொண்டு பல விபசாரிகள் அக்கற்பரசிகளைப் பார்த்து 'நீவிர் மாத்திரம் யோக்கியர்தாமோ? அதனை யெவர் கண்டார்?' என்று ஒரோ வொருகாற் பிதற்றி மகிழ்வதைக் கேட்டிலீரா?

86. அவர் கற்புக்குச் சான்றாகற்பாலான் ஈசுரனொருவனே யாகலின் சான்றில்லையேல் நிரூபிக்கப்படும் பொருளுமில்லையெனப் பட்டுவிடுமென்னும் உண்மையைக் கடைப்பிடித்து அவர் தங்கற்பே கரியாஅக அவனுண்மையை உடன்பட்டு விசுவசித்து 'ஈசுரனே! அவ்விபசாரிகளுக்குக் கூலியை நீயே கொடுப்பாயாக' வென வேண்டித் தம் நெறியைச் சோர்வின்றிக் காத்து அமைந்து அவ்விபசாரிகளின் முகதரிசனமுஞ் செய்யா தொழிவதையன்றி வேறென்செய வல்லார்?

XIII.

87. ஒருத்தி சிலகாலம் விபசாரியாய்த் திரிந்து பிறகு ஒருவனுக்கு மனைவியாகித் தன் எஞ்சிய வாழ்நாள் முழுதும் ஒழுங்காயிருந்து வருவாளேயாயின் அவளைச் சமூகத்தில் ஏற்றுக் கெளரவிப்பதற்குத் தடையென்னை யென்பீராயின் அவள் பலகாலம் விபசாரியாய்த் திரிந்து பிறகு ஒருவனுக்கு மனைவியாகித் தன் எஞ்சிய வாழ்நாளில் ஒழுங்காயிருந்து வருவாளாயின் அவளை அங்ஙனமே கெளரவிக்க ஒருப்படுவீரா?

88. அவ்ளொழுக்கத்துக்குஞ் சான்றாகற் பாலான் ஈசுரனேயல்லனா?

89. நாத்திகராகிய நீர் அவள் பொருட்டுப் பரிவதேன்?

90. அவளொழுக்கத்துக்கு நீர் சான்றாக வல்லீரா?

91. வாழ்நாள் முழுவதுங் கற்பரசியா யிருப்பாளையே பகைமை, பொறாமை முதலிய காரணங்களாற் சம்சயித்துப் பேசத் துணியும் நீர் சிலகாலமோ பலகாலமோ விபசரித்த வொருத்தி பிறகு எவனுக்காவது மனைவியாகி ஒழுங்காய்க் காலந் தள்ளுகிறாளென அவளுக்கு நற்சாட்சிப் பத்திரங் கொடுக்க முன்வருவது உமக்கு வெட்கமின்மையைக் காட்டாதா?

XIV.

92. ஒருத்தி விபசரித்துப் பெற்ற பிள்ளையும், பிறகு ஒழுங்காய் வாழ்கிறாளென நீர் கூறுங் காலத்திற்பெற்ற பிள்ளையும் பிறப்பாற் சம கெளரவ முடையர்தாமா?

93. அவ்விருவருஞ் சகோதர ராகலாமா?

94. தாய் விபரித்துப் பெற்ற பிள்ளை அவள் விபசாரத்துக்குக் காரண னல்லனெனக் கொண்டு அவன் தன் பிறப்புப்பற்றி அகெளரவம்டையா னென்பீராயின் ஒவ்வொருவனுக்கும் பிறப்புத் தற்செயல், அல்லது அவனவன் ஈட்டிவைத்ததொரு காரணத்தின் வழித்தாயது என்பவற்றுள் உண்மையாவ திதுவெனத் தீர விசாரித்திருக்கிறீரா?

ஆக அநுவாதம் 22 க்கு ஆசங்கை 1489

Posted

6. சாதி

அநுவாதம்.

உயர்ந்த சாதியிற் பிறந்தவரும் தாழ்ந்த சாதியிற் பிறந்தவரும் மக்களே. சாதிப்பிரிவுகளை ஆக்கினவரும் அவர்தான். அவருள்ளும் பார்ப்பனரே அப்பிரிவுகளுக்குப் பெரும்பான்மைக் காரணர். அப்பிரிவுகள் மக்களின் நல்வாழ்வைக் கெடுக்கின்றன. அவை அறியாமையின் விளைவே. பிறப்புப்பற்றிச் சாதிகளை வகுத்து ஒரு சாதியினரை உயர்ந்தோரென்றும் மற்றொரு சாதியினரைத் தாழ்ந்தோரென்றுங் கூறுவது கொடுமை. அப்பிரிவுகள் மக்களுக்குட் சம சந்தர்ப்பம் அளிக்கமாட்டா; ஒற்றுமையைக் குலைக்கும்: ஆகலின் ஒழியவேண்டும்.

ஆசங்கை.

I.

1. மக்களென்று அவருடலைச் சொல்கிறீரா? அறிவைச் சொல்கிறீரா?

A..

2. உடலையெனின் விலங்கின் உடலைப் பகுத்திடுங்காற காணப்படுங் குருதி எலும்பு முதலிய மூலப்பொருள்களே மக்களின் உடலைப் பகுத்திடுங்கால் அதனிடையுங் காணப்படாவா?

3. அதனோடு இதனிடைவேற்றுமை யென்னை?

4. அறிவு விளங்குவதற்கு ஏற்ற முறையில் மக்களுடல் அமைந்திருப்பது அதற்கொரு சிறப்பெனில் விளங்கிய அறிவு பெறாத மக்கள் என்றுமே பலரா யிருப்பதற்குக் காரணமென்னை?

5. அவ்வெல்லாரும் மக்கள் வடிவுகொண்ட விலங்குகளாகாரா?

B.

6. அறிவையெனின் அவ்விலங்குகளின் அறிவுக்கும் பிறவி விலங்குகளின் அறிவுக்கும் வேற்றுமை யென்னை?

7. விளங்கிய அறிவுடையாரெனப்படும் இரண்டொருவரைத் தவிர்த்துப் பிறரனைவரையும் மக்களென நீர் சிறப்பித்து ஓதுவதேன்?

II.

8. சாதி முந்தியதா? சாதியினர் முந்தியவரா? இரண்டும் முற்பிற்பா டில்லாதனவேயா?

A..

9. சாதி முந்தியதெனின் பார்ப்பனச் சாதியும் அச்சாதியினர்க்கு முந்தியதாகாதா?

10. ஆயின் பார்ப்பனருக்கு முந்திய பார்ப்பனச் சாதியைப் பார்ப்பனரே ஆக்கிக்கோடல் எப்படிக்கூடும்?

11. மற்றைச் சாதிகளைத்தான் பார்ப்பனர் வகுத்தனரெனின் பார்ப்பனச் சாதியை வகுத்தவர் யார்?

B.

12. சாதியினரே முந்தியவரெனின் சாதிக்கு முன்னர்ச் சாதியினர் எப்படி உளராயினர்?

C.

13. இரண்டும் முற்பிற்பா டில்லாதனவேயெனின் ஒரு சாதியிலும் அகப்படாதவர் தான் பார்ப்பனசாதி முதல் எல்லாச் சாதிகளையும் ஆக்கியிருத்தல் வேண்டுமென்பது புலப்படவில்லையா?

III.

14. பார்ப்பனருள்ளும் பல பிரிவுகள் உளவாகி அவை தம்முள் உடனுண்ணல் கொண்டுகொடுத்தல் தீண்டுதல் முதலியன செய்யாமையை யறிவீரா?

15. அப்பிரிவுகளுக்குக் காரணம் யார்?

IV.

16. சாதிகளெல்லாம் ஒரே காலத்தில் உளவாயினவா? முன்பின்னாக உளவாயினவா?

A..

17. ஒரே காலத்திலெனின் அக்காலத்துக்கு முன் ஒன்றுபட்டிருந்த மக்களெல்லாருமே சாதிகளை உளவாக்கி ஒவ்வொரு சாதியிலும் பலர் பலராய் நுழைந்துகொண்டவரென்பதே சித்தமன்றா?

18. ஆயின் அவ்வொன்றுபட்ட காலத்தில் முறையே சிரைப்பு, வெளுப்பு, மேய்ப்பு, கொல், உழவு முதலிய வுத்தியோகங்களை வகித்துவந்த அப்பன், மகன், ஐயன், தம்பி, மாமன் முதலியோர் சாதிப்பிரிவுகள் உளவானதும் எதிர்காலத்தில் தமக்குள் உறவு முறிந்தேவிடுமாறு பிரிந்து விடுதல் சாத்தியந்தானா?

B.

19. முன்பின்னாகவெனின் அவற்றிற்குக் காலவரிசை காட்டுவீரா?

20. ஒரு காலத்தில் ஒரு சாதி யுண்டாயின் அச்சாதியினரோடு பிறமக்களும் அக்காலத்திலேயே உளரென்பது பெறப்படாதா?

21. ஆயின் அவர்களுக்கு வேறு சாதிமக்களாயினதிற் சந்தேகமென்னை?

V.

22. சாதிப்பன்மை விளைந்தது அறிவிலா? அறிவுப்போலியிலா? அறியாமையிலா?

A..

23. அறிவிலெனின் அதனைப் போற்றவேண்டுவது உம் கடனாகாதா?

B.

24. அறிவுப் போலியிலெனின் அறிவின் விளைவு யாதாகற் பாலது?

25. அப்பன்மையின் ஒழிவே யாகற்பாலதெனின் அவ்வொழிந்த நிலை விலங்கு முதலியவற்றினிடமே உள்ளதன்றா?

26. மக்களையும் மாக்களாக்குவது அறிவாமா?

C.

27. அறியாமையிலெனின் விலங்கு முதலியவற்றினிடம் அ·து ஏன் விளையவில்லை?

VI.

28. விலங்குயிர் மனிதவுயிர் என உயிர்களில் வேறுபாடுளதா?

29. இல்லையாகலின் மக்களினப்பற்று (Love of Humanity) என்பது பிறப்பொப்புப்பற்றிய செருக்காகாதா?

30. மக்கட் பிறப்பே உயர்ந்தது, விலங்குப் பிறப்புத் தாழ்ந்தது என்று பிறப்புப்பற்றிய வுயர்வு தாழ்வைக்கொண்டு உலகமனைத்தையும் ஏனையவுயிர்களுக்கு இலதாக்கி மக்களுக்கே தம் வடிவ விலங்குகளுக்கும் விலக்கின்றி உரித்தாமாறு வளைந்து கொள்ள நீர் எத்தனீப்பது அச்செருக்கின் வழித்தாய வன்கண்மையாகாதா?

31. அவ்விலங்காதியவற்றையும் உமக்கு உடைமையாக்கிக் கொள்ள நீர் யார்?

32. மாக்களை மக்கள் கொன்றுதின்பது அதிகமா? மக்களை மாக்கள் கொன்றுதின்பது அதிகமா?

33. மக்கள் மாக்களுக்கும், மாக்கள் மக்களுக்கும் செய்கிற பொல்லாங்குகளை இவ்வளவெனக் கணக்கெடுத்து அவற்றின் ஒரு நாட் சராசரி விழுக்காடு இத்துணையெனக்கண்டு அதைக் கொண்டு மக்கள் பொல்லாதவரா அல்லது மாக்கள் பொல்லாதனவா என்ற வினாக்களுக்குச் சரியான விடை கூறுவீரா?

VII.

34. தொழில்களெல்லாம் உலகவாழ்வை யொட்டியனவே யல்லவா?

35. அவை தம்மளவிற் சாதிப்பிரிவையாக்க வல்லனவா?

36. கவர்னர்கள் மருத்துவர்களை மடைத்தொழிலாளர்களை அவரவரின் உத்தியோகங்கள் தனித்தனிச் சாதியினராகப் பிரித்து விடுமா?

37. குடித்தனம், மணமாகாதவளை மணத்தல், சைவவுணவு முதலியன சதாசாரங்களெனச் சிலராலோ பலராலோ கொள்ளப்படுவன அல்லவா?

38. அவற்றை அவர் தத்தமுள் ஒன்றுபட்டுப் பரம்பரையாகப் பரிபாலித்து வரவில்லையா?

39. அவற்றுக்கு மாறான விபசாரம், விபசாரிகளை மணத்தல், மணந்தவளை மணத்தல், புலாலுணவு முதலியவற்றைத் துராசாரங்களென அவர் ஒதுக்குவதில்லையா?

40. அவற்றை வேறு சிலரோ பலரோ தம்முட்கூடிப் பரம்பரையாகப் போற்றிவர வில்லையா?

41. சதாசாரமுடையார் துராசார முடையாரோடு கலந்து கொண்டு தம் அசாரங்களைக் காத்துவர முடியுமா?

42. 'நிலத்தியல்பால்...' என்ற குறளை யறிவீரா?

43. எளிதிற் படிவன துராசாரங்களா? சதாசாரங்களா?

44. ஆகவே துராசாரமுடையாரினின்றும் சதாசார முடையார் தம்மாசார பரிபாலனத்தின் பொருட்டே விலகி வாழ்கின்றரென்பதும், துராசார முடையாரும் அச்சதாசாரங்களின் மேல் வைத்த கெளரவ புத்தியாலேயே அவ்வாழ்க்கைக்கு இடங் கொடுத்துளா ரென்பதும் புலப்படவில்லையா?

45. உலகிற்கு அவ்வுண்மையை மறைத்துத் துராசார கூட்டத்தினரை விலங்கினுங் கடையரென அவர் அவமதித்தே விலகி வாழலாயினரென்று தூர்த்தப் பிரசாரஞ் செய்வது யோக்கியமா?

46. அங்ஙனம் அவமதித்தொழுகும் புத்தி அவருக் கிருந்திருக்குமாயின் அவர் அன்றே துராசாரமுடைய கூட்டத்தினரால் நாசமாக்கப் பட்டிராரா?

47. சதாசார கூட்டத்தினர் தம்முட் கூடிவாழ்ந்து பரஸ்பரம் உதவிசெய்துகொள்வதாற்றான் அவ்வாசரங்கள் நிலையுதல் கூடுமென்பது உமக்கு விளங்கிலதா?

48. அவர் தம் ஆசாரங்களுக்கியைந்த தொழில்களையே உலகவாழ்வின் பொருட்டுச் செய்துவர விரும்புவரென்பது தெரிகிறதா

49. அவ்வாசாரம் தொழில் என்னும் இரண்டையும் ஒரு சமூகம் பரம்பரையாகக் கையாண்டு வருமாயின் அது தனிக் கூட்டமாவதில் தடையென்ன?

50. ஆகவே ஆசாரம். அதற்கேற்புடைய தொழில். அவ்விரண்டற்குந் துணைபோய பரம்பரையென்னும் பிறப்பு என்னும் மூன்றுஞ் சேர்ந்துள்ள கூட்டமே சாதியெனப்படுமென்பதைக் காண முடியவில்லையா?

51. துராசாரம், அதற்கியைந்த தொழில், அவ்விரண்டற்குந் துணைபோய பரம்பரையென்னும் பிறப்பு என்பன சேர்ந்துள்ள கூட்டம் ஏன் வேறு சாதியாதல் கூடாது?

VIII.

52. உலகில் துராசார கூட்டத்தினர் மிகப் பெரும்பாலாரல்லரா?

53. சதாசார கூட்டத்தினர் மிகச்சிறுபாலா ரல்லரா?

54. அப்பெரும்பாலார் பகையாத காலத்திற்றானும் அவரின் நெருக்கத்தி லிருந்துகொண்டு அச்சிறுபாலார் தம் ஆசாரத்தை அரும்பாடுபட்டுப் போற்றி வந்திருபாரென்பதை யுணர உம் உள்ளத்தில் ஆற்ற லில்லையா?

55. பகைமையை வளர்த்துக்கொண்டு சாதி வேற்றுமையை யொழிக்க வேண்டுமென்ற வியாஜத்தால் அப்பெரும்பாலாரை அச்சிறுபாலார்மேற் பாயவிட்டு அவருடைய சதாசார வாழ்வுக்கு ஹானி சூழ்வதுதான் மக்களியல்பா?

56. சாதியை யொழிக்கவேண்டுமென்கிற நீர் முதலில் துராசாரங்களை அப்பெரும்பாலாரிட மிருந்து களையவேண்டாமா?

57. துராசாரங்களை யொழித்த பிறகாவது சாதிகளை யொழிக்க முயலலாகாதா?

58. துராசாரங்களைச் சதாசாரங்களேயெனப் பிரசங்கி யாமலாவ திருக்கின்றீரா?

59. 'டாக்டர் வரதராஜலுவும் யானும் குறிப்பிட்ட வேறு சிலரும் ஆர்.கே.சண்முகஞ் செட்டியார் விருந்தினரா யிருந்தோம்......டாக்டர் வரதராஜலு நாயுடு பந்தியிலே தமக்கென்று புலாலுணவை வரவழைத்தார். தண்டபாணி அதைத் தடுக்க முயன்றார். பந்தியில் எல்லோருஞ் சைவ வுணவு கொள்ளும் வேளையில் ஒருவர்மட்டும் புலால் வரவழைப்பது நாகரிகமாகுமா என்பதைப்பற்றிப் பெரிய விவாதம் மூண்டது,' 'புலாலுண்ணதாருடன் சாப்பிடும்போதும் நாயுடு புலாலுணவைக் கொணாவித்து உண்பவரென்று கேள்வியுற்ற துண்டு. அக்கேள்வி கோவையிலும், ஆர்க்காட்டிலும் காட்சியாயிற்று. ஆர்க்காட்டில் அதுபற்றிப் பெருத்த விவாதம் எங்களுக்குள் நடந்தது,' "யான் 'விருந்தில் சைவ மணங்கமழ்தல் வேண்டும்....சாதியைப்பற்றிய கவலை எனக்குக் கிடையாது. யான் சாதி கடந்தவன்' என்றேன். தோழர் வாடியா சைவப்பகுதியில் என்னுடன் உணவருந்தினர். அவர் இலையில் கோழிமுட்டை காணப்பட்டது. அதைப்பற்றி அவரும் யானும் உரையாடினோம்" என்று திரு.வி.க.தம் 'வாழ்க்கைக் குறிப்புக்க'ளிற் சொல்லி யுள்ளதை யறிவீரா?

60. அவரே, அவர்போன்றாரே நாள் ஏற ஏற உள்ளத்தில் உரங்கெட்டு அப்பெரும்பாலாரின் துராசாரங்களையே தமக்கும் ஆசாரங்களாமெனக் கொண்டு ஏன் தம் வாழ்வை யிழக்க மாட்டார்?

61. இதுவரை அவர் அங்ஙனம் ஆகவிலையென்றுதான் எப்படிச் சொல்லமுடியும்?

62. இவ்வுலகில் ஆசாரவாழ்க்கைக்கு இடமே யில்லையா?

IX.

63. தாழ்ந்த சாதியினருள் இரண்டொருவர் சதாசாரமுடையரா யிருந்தால் அவரை உயர்ந்த சாதியனரோடு சேர்த்து விடலாமே யென்பீராயின் தாழ்ந்த சாதியினரை நீரே யவமதிக்கின்றீரென்பது விளங்கவில்லையா?

64. அம்மனவலியுடையர் தம் சாதியினரோடிருந்துகொண்டு அவரையுந் திருத்துவதே முறையாகாதா?

65. அம்முறையில் உயர்ந்த சாதியினருள்ளும் சிற்சில துராசாரமுடையார் காணப்படலாமாகலின் அம்மனவலி குன்றியார் விரைவில் திருத்தம் பெறாவிடில் அவரை அச்சாதியிலிருந்து ஒதுக்கிவிடலா மன்றா?

66. மக்களின் நலத்தின்பொருட்டே சதாசாரங்கள் உளவாயின வல்லவா?

67. அவற்றை அவர் குலைக்கலாமா?

68. கால தேச வர்த்தமானங்கட் கேற்ப அவை மாற்றிக் கொள்ளப்படும் அத்துணையேயெனின் குலைத்த வென்பதற்கும் அதற்கும் வேற்றுமை யென்னை?

69. முக்காலத்துக்கும் வேண்டப்படும் அவ்வாசாரங்களை அவ்வக்காலத்துத் தோன்றியொழியும் மக்கள் தாமுள்ளளவும் ஓம்பித் தம் சந்ததிகளுக்கு வழங்கிப்போவதன்மேல் அவர் ஏதேனுஞ் செய்தற்கு எங்ஙனம் அதிகார முடையார்?

70. சாதிப் பிரிவில்லாத நாடுகளில் சதாசாரங்களுக்கு உரிய மதிப்புக் கொடுக்கப்படுகிறதா?

71. எல்லாரும் மக்கள்தானே யென்னும் பொதுமையைக் காட்டிச் சதாசாரமுடையாரின் வாழ்க்கையில் மண்போடத் துணிவது துராசாரமுடையாரின் அழுக்காற்றுள்ளத்தைக் காட்டாதா?

72. தன் தாய்க்கும் மனைவிக்கும் பெண்மையென்னும் பொதுமை யிருப்பதை ஒருவன் தன் தாய்க்கு எடுத்துக்காட்டி அவளைப் பெண்டாளுவதும், தன் மனைவிக்கு எடுத்துக்காட்டி அவள் காலில் வீழ்ந்து வணங்குவதும் செய்யலாமா?

X.

73. ஒருவன் பிறந்தது முதற் சாகும்வரையே அவனுயிர் உள்ளதா? அவன் பிறக்குமுன்னும் செத்தபின்னருங்கூட அ·துள்ளதா?

74. அவ்வாராய்ச்சியை யடியாகக்கொண்டே சம சந்தர்ப்பமென்னுந் தொடர் பொருளுடையதாகற் பால தென்பதை யறிவீரா?

75. 'Birth is not just an accident. Every man has to reap the fruits of his 'karma'. Life and death are in God's hands' என்று 31-5-1945 'இந்தியன் எக்ஸ்பிர'ஸில் காந்தி சொன்னது அவ்வுண்மையை வற்புறுத்த வில்லையா?

76. அவ்வச்சாதியினரின் ஆசார வாழ்க்கைக்கு இடையூறு நேராதவாறு எல்லாச்சாதியினர்க்கும் அவரபிவிருத்திப் பொருட்டுச் சமசந்தர்ப்பங் கொடுப்பதைத் தடுப்பவரார்?

XI.

77. சாதிகள் தோன்றிய நாள்தொட்டு இந்நாள்வரை சாதிபற்றிய போர் நிகழ்ந்த காலம் மிகுதியா? நிகழாத காலம் மிகுதியா?

XII.

78. இந்நாட்டில் உயர்ந்த சாதியான் தன் மகளைக்கொடுக்கத் துணிந்தாலும் தாழ்ந்த சாதியான் அவளை மணக்கும் வழக்கம் உண்டா?

79. உயர்ந்த சாதியான் மணந்துகொள்ளத் துணிந்தாலும் தாழ்ந்த சாதியான் தன் மகளை அவனுக்குக் கொடுக்கும் வழக்கம் உண்டா?

80. அதனால் ஒவ்வொரு சாதியும் தன்னாசாரத்தையே குறிக்கோளாகக்கொண்டு வாழ்ந்துவருகிறதென்பது விளங்கவில்லையா?

XIII.

81. உட்பேதங்களை இலவாக்கினாற்றான் பொதுப்பகையை வெல்லவும், பொது நலத்தைப்பெறவும் முடியுமா?

82. பொதுப்பகையென்ற பிரஞ்ஞையும், பொது நலமென்ற ஆசையும் இருப்பது போதாதா?

83. தாழ்ந்த சாதியாரின் உள்ளத்திலுள்ள அழுக்காறும். உயர்ந்த சாதியாரின் உள்ளத்திலுள்ள செருக்கும் நேரிய முறையிற் களையப்பட்டால் சாதிபேதங்கள் அந்தப் பிரஞ்னஞக்கும் ஆசைக்கும் இடையூறு செய்யக்கூடுமா?

XIV.

84. எல்லாச் சாதியினரும் மக்களாவதில் வேறு படாதது போல எல்லா ஆடவரும் பெண்டிரும் முறையே ஆடவராதற் றன்மையிலும் பெண்டிராதற் றன்மையிலும் வேறு படாதவரல்லரா?

85. சாதிப்பிரிவை வேண்டாத வுமக்கு அப்பன் ஐயன் கணவன் தாய் தங்கை மனைவிமுதலிய முறைப்பிரிவு மட்டில் ஏன்?

86. சாதிப்பிரிவாற் பயனொன்று மில்லையென்பீராயின் முறைப்பிரிவாலாவது பயனுண்டா?

87. 'அதுவும் பயனற்றதுதானென்றதே உம் கொள்கை யென்பதற்கு உம் ஈ.வே.ரா 2-6-1945 'குடியர'சில் எழுதிய 'உறவுமுறை' என்ற கட்டுரையே சான்றாகாதா?

88. காதல் மணம் வாழ்வின் உயிர் நிலையென்பது உமக்குக் கொள்கை யன்றா?

89. அம்மணத்துக்குச் சாதிப்பிரிவு செய்யுங் கேட்டினும் முறைப்பிரிவு செய்யுங் கேடு சிறிதோ?

90. கணவன் மனைவியாவோர் தம்முட் காதல்கொள்வதற்கு முன் நன்கு பழகி ஒருவரியல்பை யொருவர் அறிந்தவரா யிருத்தல் வேண்டுமென்று நீர் சொல்வதில்லையா?

91. தமையன் தங்கைமாரிடம் அதற்குரிய அவகாசம் மிகுதியன்றா?

92. தமையன் தங்கையை மணந்தால் 'கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்' அவனுக்கு அவள்மாட் டில்லாமற் போகுமா?

93. சற்புத்திரர் தான் பிறவாமற் போவாரா?

94. பின்னை ஏன் உம்மவருள் தமையன் தங்கையைக் காதலித்து மணப்பதில்லை?

95. முறைப்பிரிவை யொழிப்பதற்கும் நீர் பிரசாரஞ்செய்ய வேண்டாமா?

XIV.

96. அப்பன் சொத்துக்கு மகன் உரியனாதல் பிறப்புப் பற்றியதா? பிறிது பற்றியதா?

XV.

97. பெற்றோர்பாலுள்ள அறிவு அழகு ஆண்மை நோயின்மை பெருந்தகைமை முதலிய நலன்கள் பிள்ளைகள்பாலும் இறங்குதல் உண்டா? அன்றா?

A..

98. உண்டெனின் பிறப்பால் தாரதம்மியங்கோடல் அவசியமாகாதா?

B.

99. அன்றெனின் குழந்தைகளின் உடல்நல முதலிய்வற்றைக் கெடுத்துவிடுமெனக் கூறி இளமணத்தைக் கண்டித்தல், கர்ப்பத்தடையை யாதரித்தல் முதலியவற்றை ஏன் செய்கிறீர்?

XVI.

100. கற்பு வாழ்க்கை கடினமென்பதையும், விபசார வாழ்க்கை சுலபமென்பதையும் அறியமுடிகிறதா?

101. கற்பரசிகளும் விபசாரிகளும் பிறப்பொப்பாற் பெண்டிர்தானே யெனப்பேசிக் கற்பரசிகளின் சமூகத்தில் விபசாரிகளையும் சேரவைத்து மதிக்கலாமா? ஆகாதா?

A..

102. ஆமெனின் கற்பரசிகள் தமக்கும் வேசிகளுக்கும் சமூகத்திற் சமமதிப்புத்தானே யிருக்கிறதெனக் கண்டால் தம் கற்பைக் கஷ்டப்பட்டுக் காத்துந் தமக்குரிய மரியாதை யங்கீகரீக்கப்படவில்லையே யெனக்கருதிச் சோர்வடைதல் கூடுமன்றா?

103. அங்ஙனமாயின் அவர்களும் விபசாரத்தொழிலை மேற்கொள்ள ஏன் துணியார்?

104. துணியட்டுமேயெனின் அங்ஙனங் கூறுவார் தம் தாய் மனைவி மகள் உள்பட உலகத்துப்பெண்டிரனைவருமே வேசிகளாக வேண்டுமென்று விரும்பினவராக மாட்டாரா?

105. அங்ஙனம் விரும்பினாலுங் குற்றமில்லையெனின் 'அப்பன் வருவா னதன்பின் மகன் வருவான் - தப்பு முறையென்று தள்ளாதே' என்றபடி விபசாரிகளான தம் தாய் முதலியவரைத் தாமும் புணர்ந்து மகிழலாமென்ற கொள்கையையுடைய தூர்த்தரல்லரா அவர்?

B.

106. ஆகாதெனின் பிறப்பொப்பென்னும் பொதுமையை நீர் விடுவதுதான் உமக்கு மானம் என்பது ஏன் தெரியவில்லை?

XVIII.

107. உத்தமிமகனுக்கும் வேசிமகனுக்கும் பிறப்புப் பற்றிய உயர்வு தாழ்வில்லையா?

108. 'அயோக்கியத்தனமாய் தன்னைப்பெற்ற தாயாருக்கு பண வரும்படிக்கு மாப்பிள்ளை தேட முச்சந்தியில் நிற்கும் மாஜி குச்சிக்காரிகள் பிள்ளைகள் போல்...' என்று உம் ஈ.வே.ரா சொன்னதைப் 'பகுத்தறிவு' III,8,9, இல் படித்திருக்கிறீரா?

109. அவ்விருவர்க்கும் பிறப்புப்பற்றிய உயர்வு தாழ்வில்லையாயின் 'குச்சிக்காரிகள் பிள்ளைகள்' என்பது அவர் வாயில் ஏன் ஏசற் பிரயோகமாய் வந்தது?

110. வேசிமகன் மானமுள்ளவனாயின் தன் பிறப்பின் இழி தகைமைக்கு நாண மாட்டானா?

111. 'யான் இதனைச் செய்யாதொழிவனேல் என் அப்பனாகிய் இவனுக்குப் பிறக்கவில்லையென உலகம் என்னைப் பழித்திடுக' என்னுஞ் சபதம் பிறப்புப்பற்றிய உயர்வில்லதவனுக்கு ஏது?

112. '----தமிழ் மக்கள்----பல ஜாதியார்க்குப் பிறந்த கூட்டத்தோடு செல்வாரைப் போல ----செந்தமிழின் சிறப்புக்குக் கேடு செய்கின்றனர்' என்று S.S.பாரதியார் M.A.B.L. 'பகுத்தறிவு'III, 11-இல் கூறிச் சாதிக்கலப்பாற் பிறந்த மக்களை அப்பிறப்புப் பற்றிப் பரிகசிப்பானேன்?

113. 'நாம் ஒரு இனம் என்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் நாம் ஒருவகுப்பு மக்கள் என்று ஆகாமல் ஒரு இனமக்கள் என்று சொல்லிக்கொள்வதால் ஒற்றுமை ஏற்பட்டுவிடாது. ஆதலால் ஒவ்வொருவரும் இம்மாதிரி ஒருவகுப்பாக ஆக முயல வேண்டும். பிரியவேண்டிய அளவுக்குமேல் பிரிந்து விட்டோம்' என்று உம் ஈ.வே.ரா. 9-6-1945 'குடியர' சிற் கூறியது மக்களுக்குள் வகுப்புப்பேதம் வேண்டுமென்பதை ஆதரிக்கவில்லையா?

XIX.

114. திராவிடர் ஆரியர் என்ற வகுப்புப் பேதத்தை நீர் கொண்டது அதன்படிதானா?

115. ஆயின் அப்பேதம் பிறப்புப் பற்றியதா? பிறிது பற்றியதா?

A..

116. பிறப்புப் பற்றியதெனின் உம் கொள்கைக்கு அ·து ஏற்புடைத்தாமா?

117. திராவிடப் பெண்டிருள் வேசிக்கூட்டத்தினர் இலரா?

118. அவருட் சிலர் ஆங்கிலேயரைக் கூடிப்பெற்ற சந்ததிகள் ஆங்கிலோ திராவிடரும், மற்றுஞ் சிலர் ஆரியரைக் கூடிப் பெற்ற சந்ததிகள் பார்ப்பனரும் ஆவாரென்று உம் ஈ.வே.ரா 25-2-1945 'திராவிட நாடு' விற் கண்டீரா?

119. தமிழ்நாட்டிற் பின்னருள்ள திராவிட வேசியர் அவ்வாங்கிலோ திராவிடரையோ, பார்ப்பனரையோ மற்றுள்ள வேற்றினத்தாரையோ கூடிச் சந்ததிகளைப் பெறுகின்றாரல்லரா?

120. திராவிடரல்லாத பிறவினத்துப் பெண்டிராகிய பார்ப்பனிகள் முதலியோருள்ளும் விபசாரிகளாய்ப் போனவர் திராவிடராதி பல இனத்தவரைக் கூடிச் சந்ததிகளைப் பெறுவதின்றா?

121. அவ்விருவகைச் சந்ததியினரையும் திராவிடரேயெனக் கருதி நீர் உம் கூட்டத்திற் சேர்த்துக் கொள்ளவில்லையா?

122. அவரெல்லாந் தூய திராவிடர் தானா?

123. தூயகுலத் திராவிடர் உம் கூட்டத்திற் சேர்ந்தால் அவருக்கு மானந் தங்குமா?

124. நீர் ஒருவகுப்பாரை ஆதித்திராவிடரெனக் கூறுவதேன்?

125. மீதித்திராவிட ரெல்லாரும் மத்தியத் திராவிடரா?

126. அவர் கலப்புப் பிறப்பினரென்பதை நீர் அங்கீகரித்தீராக மாட்டீரா?

127. எந்த எந்த வகுப்பார் கலப்பு மணத்தையாவது செய்து கொண்டு அவரைப் பெற்றனர்?

128. அந்த மனம் நடந்தமைக்கு ஆதாரமென்ன?

129. மணத்தின் வழியன்றிப் பிறந்த கலவைப் பிறப்பினரெல்லாம் விபசாரி மக்களல்லரா?

130. ஆதித்திராவிடரென ஒரு சாரார் பிரிக்கப்பட்டதைச் சரியென நீர் உடன்பட்டீராயின் மீதித் திராவிடரனைவரும் அன்னர்தா வென்பதையும் உடன் பட்டீராக மாட்டீரா?

131. அங்ஙனமாயின அத்திராவிடர் சூத்திரர்தானென்று சூத்திரரென்னும் பதத்திற்கு நீர் கற்பிக்கும் பொருளையே வைத்துப் பார்ப்பனர் கூறினாற் குற்ற மென்னை?

132. ஒருக்கால் அம்மீதித்திராவிடர் வெளிநாட்டிலிருந்து இத்தமிழ்நாட்டில் வந்து குடியேறியவரென்பீராயின் இக்காலை அரசியல் உலகில் ஏற்கப்பட்டிருக்கும் Quit India Policy, Quit Asia Policy என்பவற்றின்படி அவரும் இத்தமிழ்நாட்டை அவ்வாதித்திராவிடரிடங் கொடுத்துவிட்டு வெளியில் ஓடவேண்டுபவரே யல்லரா?

B..

133. பிறிது பற்றியதெனின் அ·தெது?

134. 'நான்....திராவிடர் ஆரியர் என்று உடல்கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப்பேசுவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச்சொல்லி அதைச் சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும்---சரி நம்மை இன்றைய இழிவிலிருந்து----தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல்வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக்குறிக்கிறது? மோக்ஷம் என்றால் எதைக்குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒருகருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப்போல் நம்மை இழிவிலிருந்து விடுதலைசெய்து ஒரு முற்போக்கை---குறிப்பிட ஏற்படுத்தியிருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை-----ஆகவே திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச்சொல் ஆகும்----ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மை தத்துவமாகும்' என்று உம் ஈ.வே.ரா. 14-7-1945 'குடியர'சில் திராவிடம் என்பதற்கு ஒரு புதுப்பொருள் கற்பித்துக் கூறினாரே; அதுவா?

135. மாற்றிக்கோடல் என்பது புரட்சி அல்லது புரட்டு என்பதாகாதா?

136. இங்கிலாந்து பிரான்சு ரஷியா முதலிய தேசங்களில் அப் புரட்டர்கள் இலரா?

137. அவ்வத் தேசத்துப் புரட்டர் தத்தம் தேசத்தையே தமக்குச் சொந்தமாகக் கொண்டிலரா?

138. அங்வெல்லாத் தேசங்களீலுமுள்ள புரட்டரனைவருங் கூடித் தமக்கென ஏதேனுமொரு பொதுஸ்தானத்தை விரும்புகின்றனரா?

139. அவ்வத்தேசத்துப் புரட்டர் தம் தம் தேசப்பெயர்க்குப் புரட்டு எனப்பொருள் கூறித்திரிகின்றனரா?

140. திராவிடர்மட்டில் திராவிடம் என்பதற்குப் புரட்டெனப் பொருள் கற்பித்துக்கொண்டு தமக்கொரு திராவிடஸ்தானை ஏன் விரும்பவேண்டும்?

ஆக அநுவாதம் 6 க்கு ஆசங்கை 437

Posted

20. சுயமரியாதை யியக்க மணம்

அநுவாதம்.

ஆடவரும் பெண்டிரும் சுருங்கிய செலவில் குறைந்த காலத்தில் சடங்குகளை யெல்லாம் நீக்கி இயற்கை யின்ப நுகர்ச்சிப் பொருட்டுத் தமக்குட் செய்துகொள்ளும் வாழ்க்கை யொப்பந்தமே சுயமரியாதை யியக்க மண மாகும். அம்மணமே திருந்திய மணமென்க.

ஆசங்கை.

I.

1. 'ஆண் பெண் என்பது இயற்கை இன்பநுகர்ச்சிக்கே ஒழிய புருஷன் பெண்ஜாதியாய் குடும்பம் நடத்த் பிள்ளைகள் பெற்று சொத்துக்கள் சம்பாதித்து பிள்ளைகளுக்கு வைத்துவிட்டு போவதற்கு அல்ல என்பதை உணர்ந்தவர்களே உண்மை இன்பம் நுகருகின்றவர்களாவார்கள்' என்று 24-11-1929 'குடியர'சிற் பத்திரிகாசிரியர் கூறியிருப்பதை யறிவீரா?

2. விலங்கு பறவைகள் நுகர்வதும் இயற்கை யின்பமே யன்றா?

3. அதற்கென அவை மணஞ் செய்துகொள்கின்றனவா?

4. உமக்குமட்டில் அந்நுகர்ச்சிப்பொருட்டு வாழ்க்கை யொப்பந்த மேன்?

II.

5. நீர் மணத்துக்குப் பெயரென வைத்துள்ள 'வாழ்க்கை யொப்பந்தம்' என்னும் தொடரிற்கண்ட வாழ்க்கை யென்னுஞ் சொல் இடக்கரடக்கலாய் நின்று புணர்ச்சியென்னும் பொருளைத் தருவதா? வேறு பொருளைத் தருவதா?

A..

6. புணர்ச்சி யென்னும் பொருளையே தருவதெனின் ஒருவன் மனைவி அயலானையும் புணர்ந்தால் அவளுக்கு வரக்கூடிய நஷ்டமென்னை?

7. அவள் கணவனுக்குத்தான் வரக்கூடிய நஷ்டம் யாது?

8. மாறுதலே மக்களுக்கு மகிழ்ச்சி தருமென்னும் பொருளையுடைய 'Variety is the spice of human beings' என்ற ஆங்கிலப் பழமொழியை யறிவீரா?

9. ஒருத்தியையே ஒருவனும், ஒருவனையே ஒருத்தியும் தம் ஆயுள் கால முழுவதும் புணர்ந்துவந்தால் அதனாற் கிடைக்குமின்பம் அப்பழமொழிப்படி விரும்பப்படுவ தாமா?

10. ஒருவன் வேறு வேறு அரிவையரையும், ஒருத்தி வேறு வேறு ஆடவரையுங் கூடிச் சுகிப்பதே பரமசுக மென்பதை அப்பழமொழி கொண்டு நிரூபிப்பவரை உம் கொள்கைக்கு மாறில்லாத வகையில் எங்ஙனம் மறுப்பீர்?

11. உம் வாழ்க்கை யொப்பந்தம் இருபாலார்க்கும் அப்பரமசுகத்தைத் தடுக்கவில்லையா?

12. ஆகவே புணர்ச்சி யின்பத்துக்கு உம் ஒப்பந்தப்புணர்ச்சி முட்டுக்கட்டை யென்பதை இப்போதாயினும் உணர்கிறீரா?

B.

13. வேறு பொருளைத் தருவதெனின் அ·தெது?

14. அதன் பொருட்டு ஆடவர் ஆடவரோடும், பெண்டிர் பெண்டிரோடும் வாழ்க்கை யொப்பந்தஞ் செய்து கொண்டாலென்னை?

III.

15. உமக்குக் குடும்பத்தில் விருப்பமில்லை யென்பதும் அக்குடியரசு வசனத்தில் வெளியன்றா?

16. குடும்பத்தை வெறுப்பது உறவின் முறையாரையே வெறுப்ப தாகாதா?

17. உறவின்முறைக ளில்லாமை காணப்படுவது விலங்கு பறவையாதிகளிடமே யன்றா?

18. அவைகளிடம் விபசார மிருப்பதற்கு அ·தொரு முக்கிய காரண மாகாதா?

19. மக்களுள்ளும் குடும்ப முறைகளில்லாவிட்டால் அவரும் விலங்குகளாகி விபசார நிலயங்களாக மாட்டாரா?

20. அவ் விபசாரத்தை உம் வாழ்க்கை யொப்பந்தந் தடுப்ப தெப்படி?

IV.

21. குடும்பங்களை உருப்படுத்தாமலே விபசாரத்தைத் தடுக்க மணத்துக்கு வலி யுண்டா?

V.

22. மேலும் 'ஆண் பெண் என்பது இயற்கை இன்ப நுகர்ச்சிக்கே ஒழிய - அல்ல' என்கிற உமக்கு விபசாரத்தைக் காட்டிலும் வாழ்க்கை யொப்பந்தம் அநுகூலமாவ தெப்படி?

23. நோய் முதலியவற்றைப் பரப்புமே விபசாரமென்பீராயின் செத்தவனைப் பிழைப்பிக்கவல்ல மருத்துவர்கூட இப்போது மேல்நாட்டில் தோன்றியிருக்கின்றாரென நீவிர் நினைத்துத்தள்ளி விழவில்லையா?

24. உம் சகாக்களாகிய பேற்றுத்தடை (Birth Control) இயக்கத்தார் புணர்ச்சிக் காலத்திற் குறிகளுக்கு உறைகள் போட்டுக்கொள்ளச் சொல்லவில்லையா?

25. ஆகலின் விபசாரம் நோய்களைப் பரப்பி இயற்கையின்ப நுகர்ச்சிக்குத் தடை செய்யுமென நீவிர் அஞ்சுவதேன்?

26. அம் மருத்துவரும் உறைகள் முதலிய காப்புக்களும் இன்னும் உலகில் அதிகப்படவில்லையே யென்பீராயின் அவை அதிகப்பட்டுவிட்டால் உம்மவர்க்குள் வாழ்க்கை யொப்பந்தங்கள் வேண்டாமல்லவா?

27. தன் சாமர்த்தியத்தால் நோய்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவல்ல ஒருவனோ ஒருத்தியோ விபசரிப்பதுபற்றி உம்மாற் குறை கூற முடியுமா?

28. முடியாதாகலின் விபசாரமே உம் இயக்கத்துக்கு நோக்க மென்பதிற் சந்தேகமென்னை?

29. விபசரிப்போரை நன்மக்கள் அலர் தூற்றுவரே யென்பீராயின் உம்மவரே பல்கி, அதிகாரத்தையும் பெற்று விஞ்ஞானம் வளர்ந்த இக்காலத்தில் இதுவே பரமசுகந் தருவதென விபசாரத்தைச் சட்ட மூலம் அங்கீகரித்துப் பழக்கத்திலுங் கொண்டு வந்துவிடுவாராகில் அவரினும் நன்மக்களென வேறுயாரிருப்பார்?

30. இராராகலின் அவருக் கிடமேது?

31. இக்காலை நன்மக்களாற் பழிக்கப்படுகிற அறுதலிமண முதலியவற்றை நீர் மதிப்பதோடு அந் நன்மக்களையும் இகழவில்லையா?

VI.

32. சுருங்கிய செலவு, குறைந்த காலம் என்னும் இவற்றுக்கும் உம் வாழ்க்கை யொப்பந்தத்துக்கு மெனத் தனிப்பட்ட இயை யென்னை?

33. சுருங்கிய செலவு, குறைந்த காலம் என்பவற்றோடு பொருந்த வேறு மணங்களைச் செய்ய முடியாதா?

34. அச்செலவும் அக்காலமுங்கூட இல்லாமலே உம் வாழ்க்கை யொப்பந்தங்களை நீர் ஏன் செய்துகொள்ளக் கூடாது?

35. வாழ்க்கை யொப்பந்த வோலைபோக்கல், பந்தரமைத்தல், கூட்டங்கூட்டல், உம்மவரில் ஒருவன் தலைவனாகவோ நடத்தி வைப்பவனாகவோ இருந்து புரோகிதனாதல், மோதிரம் மாலையாதியனமாற்றல், வாழ்த்துரை வழங்கல், சொற்பொழி வாற்றல், விருந்து செய்தல் முதலியன உம் வாழ்க்கை யொப்பந்தங்களில் நடைபெறுதலில்லையா?

36. அவை சடங்குக ளாகாவா?

37. அவற்றையும் நீக்கி விட்டாலென்னை?

38. ஒருவனும் ஒருத்தியும் எழுத்துமூலமோ சாட்சிகள் முன்பிலோ தம்முள் ஒப்பந்தஞ் செய்து கொள்வது போதாதா?

39. போதுமென்பீராயின் அவ்வொப்பந்தமும் அவன் மனமாவது அவள் மனமாவது வேறுபடும் வரையிற்றான் செல்லுபடியாகுமென்பது மெய்தானா?

40. மனத்தை வேறுபடாமல் இருத்திவைக்க அதற்கு வலியுண்டா?

41. சாட்சிகளுக்குத்தான் அவ்வலியுண்டா?

42. இல்லையாகலின் 'நீ சாகும்வரை, உயிரோடிருக்க இதோ மருந்து தருகிறேன்' என்று கூறி ஒருவன் கொடுக்கும் மருந்துக்கும் 'ஒப்பந்தக்கார ஒப்பந்தக்காரிகளின் மனம் வேறுபடும் வரையுமே இவ்வொப்பந்தம் இருப்பதாகுக' என்று கூறி நீர் செய்து வைக்கும் வாழ்க்கை யொப்பந்தங்களுக்கும் வித்தியாசமென்னை?

43. அவ்வொப்பந்தங்களுக்கு எழுத்தோ சாட்சிகளோ ஏன்?

44. அவ்வொப்பந்தங்களே தான் ஏன்?

VII.

45. புணர்ச்சி யின்பத்தை யுத்தேசித்ததே வாழ்க்கையொப்பந்தம் என்கிற உம் கூட்டத்திலுள்ள ஆடவனுக்குப் பிள்ளை பிறந்துவிடின் அப்பிள்ளை அவனுக்கு வீண்சுமை யாகாதா?

46. அதனை அவன் தந்தையா யிருந்து பராமரிப்பானா?

A..

47. பராமரிப்பா னெனின் வீண்சுமையைத் தாங்குகிற அவன் மூடனல்லனா?

B.

48. மாட்டானெனின் புத்ரவாத்ஸல்ய மில்லாத அவன் மூர்க்க னல்லனா?

49. பிறந்துவிட்ட பிள்ளையைத்தான் என் செய்வது?

VIII.

50. வாழ்க்கை யொப்பந்தஞ் செய்துகொண்டு அதனை நடத்திவருங் காலத்தில் அவ்வொப்பந்தக்காரனோ ஒப்பந்தக்காரியோ நோய் முதலிய சில பல காரணங்களாற் புணருஞ் சக்தி குறைந்து சிலகாலம் புணராம லிருக்கும்படி நேரக்கூடுமன்றா?

51. அ·து அவ்வொப்பந்தக்காரனுக்கு நேர்ந்தால் அவ்வொப்பந்தக்காரியும், அவ்வொப்பந்தக்காரிக்கு நேர்ந்தால் அவ்வொப்பந்தக்காரனும் அது நீங்கும்வரைப் பொறுத்திருக்கவேண்டுமா?

52. அ·தில்லாதவரால் அக்காலங்களில் புணர்ச்சி விருப்பத்தை யெப்படிப் பொறுத்துக்கொண்டிருக்கமுடிய

Posted

23. கலியாணம்

அநுவாதம்.

பிள்ளை வேண்டுமென்ற ஆசையுடையான் கூலி கொடுத்து ஒருத்தியை நியமித்து அவள் வழியே பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம். அப்படியே பிள்ளை வேண்டுமென்ற ஆசையுடையாள் கூலி கொடுத்து ஒருவனை நியமித்து அவனைக் கொண்டு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம். ஆகலிற் கலியாணம் பிள்ளைப் பேற்றின் பொருட்டன்று. அன்பின் பொருட்டேயாம்.

ஆசங்கை.

I.

1. அக்கூலிக்காரிக்கு அவள் பெற்ற பிள்ளையிடம் அன்பு பிறக்குமா? பிறவாதா?

A..

2. பிறக்குமெனின் அவளுக்குக் கண் பிள்ளைமேலா? கூலி மேலா?

a..

3. பிள்ளைமேலெனின் அவளைக் கூலிக்காரியெனல் யாங்ஙனம்?

b.

4. கூலிமே லெனின் அவள் முதலிற் கூலி கொடுத்தவனை விட்டு அதிகக் கூலிகொடுப்பவன் அகப்பட்டால் அவனிடம் ஏன் ஓடமாட்டாள்?

5. கூலிக்காரியும் எசமானனும் புணரலாமா?

B.

6. பிறவாரெனின் விலங்குபறவைகளி லாயினுங் குட்டி குஞ்சுகண்டால் அன்புபிறவாத தாய் உண்டா?

7. கள்ளப்பிள்ளை பெற்றவளுக்குத் தானும் அதனிடம் அன்பு பிறவா தென்னலாமா?

8. அவளுந் தன் மானம் போய்விடுமே யென்றஞ்சித்தான் அப் பிள்ளையை யழிக்கவோ வீசியெறியவோ செய்கின்றாளென்பது தெரியவில்லையா?

9. மேலும் அக் கூலிக்காரி தன் வயிற்றிற் பிறந்த பிள்ளைக்கு அம்மையாக மாட்டாளா?

10. அவன் ஒருவனுக்குப் பிள்ளைபெற்றுக் கொடுத்துவிட்டு வேறெங்கேனுங் கூலிகொடுப்பவனுக்குப் பிள்ளை பெற்றுக் கொடுக்கப்போனால் அம் முதற்பிள்ளை அறிவு வந்தபிறகு மானக்கேடடையானா?

11. கூலிக்காரத் தாய்வயிற்றிற் பிறந்த வொருவன் திராவிட நாட்டானாயின் அவன் தன் நாட்டைத் திராவிடத்தாயென எங்ஙனம் போற்றக்கூடும்?

II.

12. விபசாரிகள் எவனுக்கேனுங் கூலிகொடுத்துப் பிள்ளையைத் தம் வயிற்றில் வாங்கிக்கொள்கின்றனரா?

13. கூலிவாங்கிக்கொண்டு பிள்ளை கொடுப்பதற்கு உழைக்கிற வோராடவன் அங்ஙனம் பல பெண்டிரைத் தனக்குக் கூலி தரும்படி ஏககாலத்தில் அமர்த்திக்கொள்ள மாட்டானா?

14. கூலிக்காரனும் எசமானியும் புணரலாமா?

15. கூலிக்காரனென ஒருவனையே நியமித்துக் கொள்ள வேண்டுமென்ற அவசியம் எசமானிக் குண்டா?

16. கூலிக்காரத் தந்தைக்குப் பிள்ளைப்பாச மிருக்குமா?

17. இங்ஙனம் தாய் வேண்டாத பிள்ளைகளுந் தந்தை வேண்டாத பிள்ளைகளும் பல்கியா உலகத்தை நிரப்பவேண்டும்?

III.

18. விலங்குபறவைகளுள் குட்டிகுஞ்சுகளைத் தன் வயிற்றிற் பெற்ற ஆண் விலங்குபறவை எதுவாயினும் அவை தன் வயிற்றிற் பிறந்ததேபற்றி அத் தாய்விலங்கு பறவை அவற்றின் மாட் டன்புகாட்ட வில்லையா?

19. விபசாரித் தாயுங் கூடத் தன் வயிற்றுப் பிள்ளையைப் பெற்றவள் இவனென அறியாமலிருந்துந் தான் பெற்றபின் அப்பிள்ளையிடம் வாத்ஸல்யங் கொள்வதில்லையா?

20. ஆகவே தாய்க்குப் பிள்ளைபால் அன்பு அப்பிள்ளை தன் வயிற்றிற் பிறந்ததேபற்றிப் பிரத்தியேகமாய் இயற்கையாலேயே யுண்டென்பதை யறிகிறீரா?

21. இங்ஙனம் தம் வயிற்றிற் பிறந்ததே காரணமாகக் குட்டி குஞ்சு பிள்ளைகளிடம் அன்பு வையாத பெண்கள் எந்த வர்க்கத்திலு மில்லையென்பது முடிந்த வுண்மையன்றா?

22. ஆனால் ஆண்விலங்கு பறவைகள் குட்டி குஞ்சுகளிடம் பற்றுச் செலுத்துகின்றனவா?

23. ஆமென்பீராயின் அவை மிகமிகச் சிலவேயென்பதும் அவையும் அக்குட்டிகுஞ்சுகள் தம் வயிற்றிற் பிறந்தன வென்பதை யறிந்து அதுவே காரணமாகக்கொண்டு பற்றுச்செலுத்தவில்லை யென்பதும், தாம் நேசிக்கும் பெண்விலங்கு பறவைகளின் வயிற்றிற் பிறந்தன வென்பதையே காரணமாகக்கொண்டு பற்றுச் செலுத்துகின்றன வென்பதும் உம்மாற் கண்டுகொள்ள முடியவில்லையா?

24. மிகமிகப் பெரும்பான்மை விலங்குபறவைகளில் ஆண்களுக்கு அப்பற்றுச் சிறிது மில்லையென்பது தெரியுமா?

25. அ·தெனில்லை?

26. ஒரு வர்க்கத்திற் பெரும்பகுதிக்குரிய வியல்பே அவ்வர்க்க முழுவதற்கு மியல்பாமெனக் கருதப்படவேண்டு மென்னும் நியாயத்தை யறிவீரா?

27. அவ் விலங்கு பறவைகளுள் தாய்தானுந் தன் குட்டி குஞ்சுகளிடம் அவை பிறந்ததிலிருந்து சிறிதே வளர்ந்து யதேச்சையை யடையும் வரையுமே பற்றுச் செலுத்திவருவதைக் காண்கிலீரா?

28. அப்பாசப் பெருங்கயிற்றுக்கு அங்ஙனங் கால அளவு ஏன் குறுகியதா யிருக்கவேண்டும்?

29. விலங்குபறவைகள் இன்பத்தை மாத்திரம் விரும்பிக் கொண்டு புணர்கின்றனவென்பது தெரியவருமா?

30. எந்த விலங்காவது பறவையாவது அவற்றுட் பெண்தானும் தனக்குக் குட்டியோ குஞ்சோ வேண்டுமென்று புணர்ச்சிக்கு முன் விரும்புவதுண்டா?

31. அப்பெண்ணும் தனக்கு அவைகள் பிறந்த பின்னர்த்தான் அவற்றிடம் அன்பு வைக்கின்ற தென்பதை யறிவீரா?

32. வேண்டிப்பெறாத அவற்றிடம் அத்துணைக் காலமாவது அத்தாய்க்கு அன்பிருக்கட்டு மென்று இயற்கையன்னை அவற்றின்மேல் வைத்துள்ள கருணையன்றா அது?

33. விலங்கு பறவைகளுள் தாய் தனக்குக் குட்டி குஞ்சுகள் பிறந்த பின்னராவது அவற்றின்பாற் பற்றுச் செலுத்துவது கண்கூடாயிருப்ப மக்களுள் யார்தான் தம் பிள்ளையின்பால் அன்பு செலுத்த விரும்பாதவர்?

34. அன்றியும் இருபால் மக்களுமே தமக்குப் பிள்ளை வேண்டுமென்ற விருப்பத்தைப் புணர்ச்சிக்கு முன்னரேயே கொள்வதில்லையா?

35. விலங்கு பறவைகளிடங் காணப்படாத அவ்விருப்பம் மக்களிடமே காணப்படுதலின் அது மக்களுக்கே யுரிய சிறப்பியல்பன்றா?

36. ஆகவே இன்பம் பேறு என்னும் புணர்ச்சிப்பய னிரண்டனுள் பேற்றை விரும்பாமல் இன்பத்தை மட்டில் விரும்பிப் புணர்வன விலங்கு பறவைகளும் மக்களுள் விபசாரம் பண்ணுகிற ஆடவரும் பெண்டிருமே யென்பதும், இன்பத்தை வரைசெய்து நுகர்ந்துகொண்டு பேற்றையே விரும்பிப் புணர்பவர் மக்களுள் ஏனையோ ரென்பதும் விளங்குகின்றனவா?

IV.

37. இனித் தனக்குப் பிள்ளைவேண்டுமென்று விரும்புகிறவோரரிவை ஒருவனையே தன் காலமெல்லாம் புணரவேண்டுமென்ற அவசிய முண்டா?

38. அவன் வேறிடங்களிற் போய் விபசரித்தால் அவள் வயிற்றுப் பிள்ளையை அவள் பிள்ளை யில்லையென்று சொல்லிவிட முடியுமா?

39. ஆனால் தனக்குப் பிள்ளைவேண்டுமென்று விரும்புகிற வோராடவன் தனக்கென வொருத்தியை நியமித்துக்கொண்டாலன்றி அவனாற் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியுமா?

40. ஆகவே கலியாணமென்பது தனக்குப் பிள்ளைவேண்டுமென்ற ஆசையை யியல்பாகவுடைய வோராடவன் அதனைப் பெற்று மகிழ்தற்பொருட்டு ஓரரிவையைத் தனக்கேயென நியமித்து அவளுக்கே யுரிய கற்பொழுக்கத்தில் நிறுத்திவைத்து அவளாயுள்கால முழுவதும் தான் பல கஷ்டநஷ்டங்களுக் குள்ளாகியும் அன்பால் ஆதரித்துவரப் பிரதிஞ்ஞை செய்துகொள்வதேயாமென்பதை யறிகிறீரா?

V.

41. '------சாத்தனுக்கு------கொற்றியை விவாகஞ் செய்விப்பதாக----' என்று கலியாண பத்திரிகையில் எழுது முறை தமிழ் நாட்டில் நெடுங்காலமா யுள்ளதன்றா?

42. அதிலுள்ள நான்காம் வேற்றுமைக்குக் கோடற்பொருளும், இரண்டாம் வேற்றுமைக்குக் கொடைப் பொருளுமல்லாமல் வேறு பொருளுண்டா?

43. ஆடவர் விரும்பும் பிள்ளைப் பேற்றிற்கே கலியாணமென்பது அதனாலும் விளங்க வில்லையா?

44. '------சாத்தனுக்கும்------கொற்றிக்கும் விவாகஞ் செய்விப்பதாக-------' என்றெழுதுமுறையும் சில விடங்களிற் காணப்படுகின்றதே யென்பீராயின் 'நேற்றுச் சாத்தனுக்குங் கொற்றனுக்குங் கலியாணம் நடந்தது. நாளைச் சாத்திக்குங் கொற்றிக்குங் கலியாணம் நடக்கும்' என்று வழங்குவதைக் கேட்டுளீரா?

45. அவ் வழக்குக்குப் பொருளென்னை?

46. அதற்கு வேறான பொருள் சாத்தனுக்குங் கொற்றிக்குங் கலியாணமென்னும் வழக்கிலுண்டா?

47. உண்டாயின் அதனை யிலக்கணத்தோ டியைந்து விளக்குவீரா?

48. பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்குமுள்ள கொண்டான் கொடுத்தான் சம்பந்தம் அதில் விளங்க வேண்டாமா?

49. மேலும் அவ்விரண்டாம் அழைப்பு முறையும் ஆடவன் செய்துகொள்ளும் பிள்ளைப்பேற்றிற்கே கலியாண மென்பதை மறுக்கவல்லதா?

50. ஆகவே அதற்கும் அம்முதலாம் அழைப்புமுறைப் பொருளைக் காட்டவே முற்படமாட்டீரா?

51. I gave my daughter in marriage to him என்று சொல்லுவதுபோல் I gave my son in marriage to her என்று சொல்வது ஆங்கிலேயர் டந்தானு முண்டா?

52. '-----கொற்றிக்கு-----சாத்தனை விவாகஞ் செய்விப்பதாக----'என்ற வேறோர் அழைப்பு முறையுங் கையாளலாம் என்பீரா? மாட்டீரா?

A.

53. என்பேமெனின் ஆடவன் கோடற் பொருளாயிருக்கும் போது முதலில் மனைவியாகக் கொண்ட வொருத்தி வயிற்றிற் பிள்ளை யுதியாவிடின் இன்னொருத்தியையும் மனைவியாகக்கொண்டு அவளிடத்திற் பிள்ளையைப் பெற்றுக்கொள்ளலாமன்றா?

54. அம் மூத்தமனைவி அவனிடம் பற்றுள்ளவளாயின் அப்பிள்ளையைத் தன் பிள்ளை யெனக் கருதிப் பெருமித மடையாளா?

55. அம் மூன்றாம் அழைப்பு முறைப்படி மனைவி கோடற் பொருளானால் அவனால் தன் வயிற்றிற் பிள்ளை யுதியாவிடின் வேறோருவனையுங் கணவனாகக்கொண்டு அவனாற் பிள்ளையைப் பெற்றுத் தன் முதற் கணவனுக்குக் கொடுக்கலாமா?

56. அவனும் அவளிடம் பற்று வைத்துக்கொண்டு அப்பிள்ளையைத் தோள்மே லேற்றித் திரிவானா?

57. குட்டிகுஞ்சுகளைக் கோடலாயிருந்து பெண் பெறக் கொடையாயிருந்து ஆண் ஏற்றல் விலங்கு பறவைகளிடமாயினு முண்டா?

58. இல்லையாகலின் மனைவியைக் கோடலாக்கித் தான் கொடையாகித் திரிபவன் விலங்குபறவைகளிலுங் கடையனல் லனா?

B.

59. மாட்டேமெனின் ஆடவன் செய்யும் பிள்ளைப் பேற்றிற்கே கலியாணமென்பது உளதாயிற்றென்ற வுண்மையை நீருஞ் சம்மதித்தீ ராயிலீரா?

60. ஆகவே பிள்ளைப்பேற்றின் பொருட்டே மணமென்பதிலுள்ள பிள்ளைப்பேறு கணவன் பிள்ளை பெற்றுக் கொள்வதென்பதைக் குறிக்குமன்றி மனைவி பிள்ளைப்பெற்றுக் கொள்வதென்பதைக் குறியாதென்ற வுண்மை யிப்போதாயினும் விளங்கிற்றா?

61. ஆனால் அக் கலியாணம் பெண்டிர்பக்கல் செய்யத்தக்க தொன்று மில்லையோ வென்பிராயின் கணவன் தன் மனைவிக்கும் பிள்ளையாமாறுதன் பிள்ளையை அவள் வயிற்றிற் கொடுத்தலாகிய வேறெதனாலும் ஈடுசெய்ய முடியாததாகிய நன்றியையும். கணவனிடமிருந்து தனக்கும் பிள்ளையாமாறு அவன் பிள்ளையைத் தன் வயிற்றில் வாங்கிக்கொள்ளுதலாகிய அவன் வயத்துநிற்றலாலன்றிப் பிறிதோராற்றல் தீர்க்கமுடியாததாகிய கடனையும் அம்மனைவியிடம் சதா வுறுத்திக் கொண்டிருப்பதற்குக் கணவனோடு தொடர்பு படுத்திவைப்பதுதான் கலியாணம் பெண்டிர்பக்கல் செய்யத்தக்கது என்பதன்றி வேறென்?

62. அங்ஙனமாக அவள் சென்ற வழியில் அவன் ஏன் செல்லவேண்டும்?

63. பிரஞ்சு மன்னனாகிய நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் நடுங்கவைத்த ஆண்டகை யல்லனா?

64. அப்பெருவீரன் தன் மனைவியிடம் 'நான் உன்னை மணந்து கொண்டது உன்னிடமிருந்து குழந்தைகள் யடைவதற்குத்தான்' என்று கூறியதையும் இத்தாலிய பிரதம மந்திரி பெனிடா முசோலினி அதனை யாதரித்ததையும் பம்பாய் 'டைம்ஸ் ஆப் இந்தியா' விலிருந்து தமிழில் மொழி பெயர்த்து 6-2-1930 'தமிழரசு' காட்டியுள்ளதை யறிவீரா?

65. அந்தக்காலத்தில் உடன்கட்டை யேறியவர் மனைவியரா? கணவன்மாரா?

VI.

66. ஓராடவன் ஓ ரறுதலியிடம் பிள்ளை பெற்றுக்கொள்ளலாமா வென்பீராயின் அவள் முதலில் ஒருவனாலோ பலராலோ பலபடியாலும் அசுத்தப்படுத்தப் பட்டவ ளல்லளா?

67. அவளிடம் அவள் பெற்றெடுத்த பிள்ளை அறிவு வந்த பிறகு அவனைப் பார்த்து 'நீ என்னைப் பெற்றெடுப்பதற்கு இவ்வசுத்தைதான் அகப்பட்டாளா? இவளுடம்பிற் பல அயலாரின் இரத்தங்கள் புகுந்து ஊறியிருப்பது உனக்குத் தெரியாதா? அத்தனை யிரத்தங்களிலுங் கிடந்து வந்த என்னுடம்பு உனக்கே முற்றிலுஞ் சொந்த்மென்று எப்படிச் சொல்ல முடியும்? இத்தகைய மானங்கெட்ட பிறப்பையுந் தாயையுந் தந்த வுன்னைப் புத்ரத்ரோகி யென்று ஏன் சொல்லக்கூடாது? முன் ஒருவனாலுந் தீண்டித் தூய்மை கெடப்பெறாத வோருத்தமி என்னை வயிற்றில் தாங்க உனக்கு அகப்பட்டிலளா?' என்று கடியமாட்டானா?

VII.

68. இக்கலியாணமே யில்லாவிட்டால் பெண்டிர்க்குக் கர்ப்பம், பிரசவம் முதலிய வேதனைகளோடு விலங்கு, பறவை, விபசாரிகளுக்குப்போற் பிள்ளைகளைப் போஷிக்கும் வேதனையும் வந்துவிட்டதா?

VIII.

69. கலியாணம் அன்பின் பொருட்டேயாமாயின் புணர்ச்சிக்குத் தகுதியில்லாதார் அன்பின் பொருட்டுத் தம்முன் மணந்து கொள்ளலாமா?

IX.

70. பல புதல்வர்களுக்கு Unmarried mothers உளராகி ஆர் இவர்தான் என்று காணவும் அப்புதல்வரால் மதிக்கவும் பட்டு வருதல் போன்று Unmarried Fathers உளராயினும் அவர் இவர் தான் என்று காணவும் அப்புதல்வரால் மதிக்கவும் பட்டு வருதல் உண்டா?

71. இன்றாகலின் அதுகொண்டும் கலியாணம் ஆடவர் பிதாக்களாதற் பொருட்டு அவர்க்கே வேண்டப்படுவதென்பதும் பெண்டிர் மாதாக்களாதற் பொருட்டு அவர்க்கு வேண்டப்படுவ தன்றென்பதும் விளங்கவில்லையா?

ஆக அநுவாதம் 23 க்கு ஆசங்கை 1560.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.