Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'உதயன்' செய்தியேடு, வை.கோ இன்னமும் ஜெயலிதாவுடனான அரசியற்கூட்டணியில் தொடர்வது பற்றி உலகத்தமிழர்களுக்கு விளக்கம் தரவேண்டுமென ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது.

வை.கோ ஜெயலலிதாவுடன் அரசியற்கூட்டணி வைத்திருப்பது தவறாம்; அதன் காரணத்தால் உலகத் தமிழர்களுக்கு அவர் பதில் தரவேண்டுமாம். ஜெயலிதாவுடன் கூட்டணி வைத்தது ஏன் தவறென்றால் அவர் (ஜெயலலிதா) ஈழத்தமிழர்களுக்கு எதிரானவராம். உதயனின் ஆசிரியர் தலையங்கத்தின் இறுதிப் பந்தி இங்குத் தரப்படுகிறது.

ஈழத் தமிழர்களுக்கும், அவர்தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்தகைய ஈழத் தமிழர் விரோதப் போக்குடைய ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்து அவருக்கு வால் பிடிப்பதாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்? உலகத் தமிழர் சமூகத்துக்கு அவர் உரிய பதில் தருவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.

வை.கோ மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள், நையாண்டிகள் வைக்கப்படுகின்றன. யாரும் என்னவும் செய்துவிட்டுப் போகட்டும். வை.கோ தொடர்பில் அவரவருக்குப் பல பிரச்சினைகள். ஆனால் நான் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடுடைய, தன்னைத் தமிழ்த்தேசிய ஊடகமாகக் காட்டிக்கொள்ளுமோர் ஊடகம் இதை எழுதியபோது என்னுணர்வையும் பதிந்து வைக்கும் தேவையுள்ளதாக நினைக்கிறேன். உதயன் எழுதியதாலேயே அது ஈழத்தவர்களின் நிலைப்பாடாகக் கருதப்படக்கூடிய ஏதுநிலைகள் தென்படுவது ஒரு காரணமாகிறது.

போதாததற்கு, அங்கிங்குப் பொறுக்கி ஒட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட - 'டமில்' தேசிய ஊடகங்களாகத் தம்மைக் கட்டமைத்துக்கொண்டவை, உதயனின் இவ்வாசிரியர் தலையங்கத்தைத் தமது இணையத்தளங்களில் ஒட்டிக்கொண்டிருப்பதாலும், அவ்வூடகங்களில் வரும் அனைத்தையும் ஒட்டிக்கொண்டிருக்கும் வலைப்பதிவுகள் சிலவற்றிலும் அத்தலையங்கம் வெளியிடப்பட்டதாலும் தனிப்பட்ட என்னுணர்வைப் பதிவாக்குவது அவசியமாகிறது; அது எவனுக்குமே தேவைப்படாதென்றபோதும்கூட.

உதயன் இப்படியொரு தலையங்கம் எழுதவேண்டிய வந்ததன் முதற்காரணம், அண்மையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி எழுதிய "இரங்கற் பதிவொன்றுக்கு" ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம்தானெனக் கருதமுடிகிறது. அதை முதன்மைப்படுத்தி ஜெயலலிதா, சோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட கும்பலுக்குத் திட்டு விழுகிறது. முதல்வருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் ஜெயலலிதாவோடு அரசியற்கூட்டணி வைத்துக்கொண்டு அவருக்கு 'வால்பிடித்து'க்கொண்டிருக்கம் வை.கோ.வுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு அவர் "உலகத்தமிழர்களுக்கு" விளக்கம் கொடுக்க வேண்டுமென முடிகிறது.

[முதலில், உதயன் உலகத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா ஈழத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா எனக் குழப்பம் வந்தது. 'உலகத் தமிழர்கள்' அனைவருமே வை.கோ பதில்சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா என்ற கேள்வியும் வந்தது. "ஈழம் என் வீடு, தெற்காசியா என் முற்றம், உலகம் என் கிராமம்" என்றெழுதிய கவிஞர் ஜெயபாலன் உதயனுக்குள் ஊடுருவிவிட்டாரா, அல்லது கனியன் பூங்குன்றன் சொன்ன 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எண்டநோக்கிலதான் உதயன் சொல்ல வருதோ - அப்பிடிச் சொன்னாலும் ஏன் தமிழரைமட்டும் சொல்லுறாங்கள் எண்டெல்லாம் நிறைய வழிகளில் இதைக் 'கட்டுடைக்க'ப் புறப்பட்டு, அதற்கெல்லாம் நேரமில்லாத காரணத்தால், தட்டச்சும்போது போகிறபோக்கில் உலகத்தமிழர்களென்று தட்டிவிட்டார்களென நினைத்துக்கொண்டேன். ஈழத்தமிழர்களை - குறிப்பாக புலிகளை அரசியற்றலைமையாக ஏற்றுக்கொண்டவர்களையே உதயன் குறிப்பிடுகிறது எனக் கருதிக்கொண்டு எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.]

இங்கு எனக்கொரு குழப்பம் வந்துவிட்டது.

வை.கோ எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கவேண்டும், எப்படி அரசியல் நடத்த வேண்டுமெனச் சொல்வதற்கு ஈழத்தவர்கள் யார்? உதயன் யார்? அது முழுவதும் தமிழக அரசியலோடு தொடர்புடையது. நீங்களா போய் வை.கோ. வின் கட்சிக்கு வாக்களிக்கப்போகிறீர்கள்? தமிழக அரசியலில் ஒருவரோ ஒரு கட்சியோ எடுக்கும் முடிவுக்கும் செயன்முறைக்குக்கும் கட்டளையிட நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? தமது 'தமிழக அரசியல்' செயற்பாடுகளுக்கெல்லாம் ஈழத்தவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய தேவை அவர்களுக்கெங்கே இருக்கிறது?

சரி, இவ்வளவு கதைக்கும் நீங்கள் வை.கோ. வுக்கு இருந்த - இருக்கும் தெரிவுகளை யோசித்தீர்களா? கூட்டணி தொடர்பில் வை.கோ என்ன செய்திருக்க வேண்டுமேனக் கருதுகிறீர்கள்?

தனித்துப் போட்டியிடுவதையா? அல்லது சுந்தரமூர்த்தி போன்ற பதிவர்கள் சொன்ன இன்னொரு தெரிவான கட்சியைக் கலைத்துவிட்டு வாக்கு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதையா? ஈழத்தவர்களுக்கு வை.கோ மூலம் கிடைக்கும் நன்மையே அவர் வாக்கரசியலில் முக்கிய புள்ளியாக இருப்பது மட்டும்தான். வாக்கரசியலை விட்டு வெளியிலே ஈழத்துக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த ஏராளம் திராவிட, பெரியாரிய, இவற்றிலே சேராத தொண்டர்கள் இருக்கிறார்கள்.

தமிழக அரசியலில் ஒருவரின் செயற்பாட்டையும் அவரின் ஈழம் தொடர்பான நிலைப்பாட்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாதென்பதே எனது கருத்து. இதை வலுப்படுத்த, நாங்களெல்லாம் தலையில் தூக்கிவைத்தாடும் ஒருவரைக் கொண்டே விபரிக்கலாம்.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை, புலிகளும் சரி, புலிகளின் ஆதரவாளர்களும் சரி, எப்படிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறா

Edited by வலைஞன்
மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது!

  • 2 weeks later...

தமிழக அரசியலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான அரசியல் தலைவர்கள், தமிழகத்து அரசியல் கள நிலமைகளுக்கு ஏற்ப எடுக்கும் தீர்மானங்களை பற்றி தமிழக அரசியலுக்கு சிறிதும் சம்பந்தப்படாத ஈழத்தமிழர்கள் பலவகையிலும் விமர்சித்து வருவதை பலரும் அவதானித்திருப்பீர்கள்.

அவ்வாறான விமர்சனம் சம்பந்தமாக ஏற்கனவே வசந்தனின் பதிவு மேலே உள்ளது.

அது சம்பந்தமாக பெயரிலி எழுதிய பதிவை இங்கு இணைக்கிறேன். பெயரிலியின் எழுத்து நடை இலகுவில் விளங்கக்கூடியது அல்ல. எனவே அங்கும் இங்கும் வாசித்துவிட்டு கருத்து சொல்வதிலும் முழுமையாக வாசித்து புரிந்து கொண்ட பின் கருத்துக்களை வைப்பது தான் நல்லது என நினைக்கிறேன்.

சற்றே சும்மா க/கிடவும் பிள்ளாய்

"America is about to enter a presidential election year. Although the outcome is of course impossible to predict at this stage, certain features of the campaign are easy to foresee. The candidates will inevitably differ on various domestic issues - health cre, abortion, gay marriage, taxes, education, immigration - and spirited debates are certain to erupt on a host of foreign policy questions as well........

Yet on one subject, we can be equally confident that the candidates will speak with one voice. In 2008, as in previous election years, serious candidates for the highest office in the land will go to cosiderable lengths to express their deep personal commitment to one foreign country - Israel-as well as their determination to maintain unyielding U.S. support for the Jewish state. Each candidate will emphasize that he or she fully appreciates the multitude of threats facing Israel and make it clear that, ig elescted, the United States will remain firmly committed to defending Israel's interests under any and all circumstances. None of the candidates is likely to criticize Israel in any significant way or suggest that the United Sates ought to pursue a more evenhanded policy in the region. Any who will probably fall by the wayside"

-John J. Mearsheimer and Stephen Walt, in the Introduction of their book, "The Israel Lobby and U.S. Foreign Policy"

வைகோ-கருணாநிதி இடையேயான சிக்கல் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் என்பது எனது கருத்து; அவர்களுக்குத் தம்மைத் தக்கித்து வைத்துக்கொள்ளத் தேவைப்படும் உள்நாட்டு அரசியல் ஈழத்தமிழர்களுக்கு அவசியமானதல்ல என்பதும் வெறும் அரசியற்பார்வையாளர் என்பதற்கப்பால், ஈழத்தின் பிரச்சனையையும் உள்ளே ஊறப்போட்டு, உள்ளூரசியலிலே வைகோ என்ன செய்யவேண்டும், கருணாநிதி என்ன செய்யவேண்டும் என்று மூக்கை நுழைத்துக் கருத்துச் சொல்லும் உரிமையும் தேவையும் ஈழத்தமிழர்களுக்கு இல்லை என்பதும் என் உறுதியான நம்பிக்கை. மேலும் நம்பிக்கை என்பதிலும்விட, அப்படித்தான் இருக்கவேண்டுமெனும் கட்டாயத்தேவையென்றே சொல்வேன். (எனக்குத் தனிப்பட்ட அளவிலே, ஜெயலலிதா + சோ + ராம் + சுசுவாமி + எஸ்வி சேகர் என்ற மந்தைவரிசையிலே எழுதப்படாத புரிந்துணர்வுடன் இயங்கும் கூட்டணி எக்காலகட்டத்திலும் ஈழத்தமிழர்களுக்குப் பயன் தராதென்ற முழு நம்பிக்கை.)

விடுதலைப்புலிகளின் எம்ஜிஆருடனான அருகாமையும் கருணாநிதியின் மற்றைய ஈழ இயக்கங்களுடனுமான (டெலோ குறிப்பாக) அருகாமையுங்கூட கருணாநிதியினை விடுதலைப்புலிகளுடன் முற்றிலும் நெருங்கவிடவில்லை என்பதிலும் ஓரளவுக்கு உண்மையுண்டு. ஆனாலும், ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னால், ஐபிகேஎப் காலத்திலே கருணாநிதியின் ஈழத்தமிழர் நிலைப்பாடு, விடுதலைப்புலிகளுடனுங்கூட அத்துணை மோசமாக இருக்கவில்லை என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும். (உலகத்தமிழினத்தலைவர் என்ற கோதாவிலே வம்புக்கு கருணாநிதி.எதிர்.பிரபாகரன் என்று நிறுத்தவும் சில உதிரிகள் கமல்.எதிர்.ரஜனி என்ற பாணியிலே நிறுத்தும் குரங்குத்தனத்தினை விட்டுவிடலாம்; அதைக் கருணாநிதியே கணக்கிலே எடுத்திருக்கமாட்டார்) இன்றைய நிலையிலே, ஈழம் தொடர்பான ஆதரவிலே ஆட்சியிலிருக்கும் கருணாநிதிக்கு இருக்கும் சிக்கல்கள், எதிரணியிலேயிருக்கும் வைகோவுக்கிருக்கும் சிக்கல்களை விட அதிகமானதுதான்; கருணாநிதிக்கு இழக்க ஆட்சியிருக்கின்றது; வைகோவுக்குத் தனிப்பட்டச் சிறைப்படவே வாய்ப்புண்டு. அதனால், ஆட்சியிலிருக்கும் கருணாநிதி, தமிழ்ச்செல்வன் இறப்புக்கு அவ்வசனவொழுக்கினை (கவிதை என்று எழுத ஒப்பமில்லை; அது கவிதையா இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகக்கூட முக்கியமற்ற விடயமிங்கே) எழுதியதும் தொடர்ந்து "தமிழிரத்தத்தொடர்பு" (இவ்விதமான உணர்ச்சிப்பேச்சுகள் தனிப்பட இப்போதெல்லாம் எனக்குப் புல்லரிக்கவோ ஹாப் அரிக்கவோ செய்வதில்லை என்றபோதுங்கூட) பற்றிப் பேசியதும் வைகோ தமிழ்ச்செல்வன் நினைவுப்பேரணியிலே கலந்ததிலும்விடப் பெரியவிடயமென்பதிலே எனக்கேதும் சந்தேகமில்லை.

[தனிப்பட்ட, வைகோவினைக் கருணாநிதியினைவிட எனக்குப் பிடிக்கும் என்பதினையும் இவ்விடத்திலே சொல்லிக்கொள்ளவேண்டும்; அவர் ஜெஜெ என்றவரிடத்திலே சேர்ந்திருப்பது பிடிக்கவில்லையென்றபோதுங்கூ

Edited by KULAKADDAN

உதயனின் அந்த கட்டுரை வாசித்திருந்தேன் தேவையில்லாத ஒன்று அந்த கட்டூரை

  • 1 month later...

நன்றி குளக்காட்டன் பெயரிலியின் பதிவை இங்கு இணைத்தமைக்கு.

பெயரிலியின் பதிவு தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமானது. ஆனால் அவர் சொல்ல வந்த விடயத்தை சுற்றிவளைத்துச் சொல்லியிருப்பது பதிவை வாசித்து முடிக்கும் போது மனதில் பலவிடயங்கள் மறந்து போகின்றன. எதிர் காலத்தில் பெயரிலி தனது பதிவை சுருக்கமாகவும் சொல்லவந்த விடயத்தை நேரடியாகவும் சொல்வாரானால் இன்னும் பலரை அவரது பதிவு சென்றடையும் வாய்ப்பும், பதிவும் சிறப்பாக அமையுமென்றும் நான் நினைக்கின்றேன்.

வைகோ அவர்களின் தமிழக அரசியல் நிலைத்தன்மை என்பது வேறு, ஈழ ஆதரவு என்பது வெவ்வேறு என்பதை இக்கட்டுறையாளர் கூறி இருக்கிரார். கொஞ்சம் சுறுக்கமாக சொன்னால் நன்றாக இருந்து இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.