Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜி.எல்.பீரிஸ் பிரித்தானியா வருகை – எதிர்ப்புத் தெரிவிக்குமாறு தமிழர் பேரவை அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜி.எல்.பீரிஸ் பிரித்தானியா வருகை – எதிர்ப்புத் தெரிவிக்குமாறு தமிழர் பேரவை அழைப்பு

http://meenakam.com/?p=10920

சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பிரித்தானியாவிற்குப் பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், அவரது பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் எனவும், தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு தமிழ் மக்களின் நிலை பற்றி விளக்கம் அளித்து, அவர்களையும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க வேண்டும் எனவும், பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுள்ளது.

எதிர்வரும் 19ஆம் நாள் செவ்வாய்க்கிழமை International Institute for Strategic Studies (IISS) என்ற அமைப்பு லண்டனில் நடத்தவுள்ள மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவதற்காக பீரிஸ் பிரித்தானியா வருவதுடன், பயங்கரவாதத்தை முறியடித்தல், நாடுகடந்த பயகரவாத முன்னணி அமைப்புக்கள், இலங்கையில் போருக்குப் பின்னரான அபிவிருத்திச் செயற்பாடுகள், மற்றும் இலங்கை – பிரித்தானிய உறவு போன்ற மூன்று விடயங்கள் பற்றிய பீரிஸ் உரையாற்ற இருக்கின்றார்.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உட்பட மகிந்த அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை பன்னாட்டு சமூகத்தின் மத்தியில் நியாயப்படுத்திவரும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாட்டை முடக்க நினைக்கும் சிறீலங்கா அரசின் முனைப்புக்களிற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் எனவும், போர் நிறைவுபெற்று 18 மாதங்கள் ஆகியும் மக்கள் இதுவரை மீளக் குடியமர்த்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை மீளவில்லை என்பதை வலியுறுத்தவும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுக்கின்றது.

IISS, Arundel House, 13-15 Arundel Street, Temple Place, London, WC2R 3DX என்ற முகவரியில் 19ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரீசிற்கு நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 3:30 மணிவரை தமிழ் மக்கள் அணி திரண்டு தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்ளுகின்றது. (அருகிலுள்ள தொடரூந்து நிலையங்கள் (Temple, Waterloo, Charing Cross)

புலம்பெயர் நாடுகளிலுள்ள சக்தி வாய்ந்த அமைப்புக்களை தமிழ் மக்கள் தம்வசப்படுத்தி தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்பதால், அவற்றுக்கு எதிராகச் செயற்படாது, இந்தப் போராட்டம் சிறீலங்கா அரசுக்கும், அதன் பரப்புரைக்கும் எதிராகவே நடைபெறுகின்றது என்பதை தமிழ் மக்கள் மனதில் கொண்டு, புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை முடக்க நினைக்கும் சிறீலங்கா அரசுக்கு எதிராக தமிழ் மக்கள் அணிதிரண்டு போராட வேண்டும் என தமிழர் பேரவை கேட்டுக்கொள்ளுகின்றது.

அத்துடன், பிரித்தானியாவிலுள்ள தமிழ் மக்கள் தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக, தொலைபேசி ஊடாக அல்லது மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொண்டு போருக்குப் பின்னரான கீழே தரப்பட்டுள்ள விடயங்களை விளக்கிக்கூறி அவர்களையும் தமிழ் மக்களிற்காக குரல்கொடுக்க அழைப்பு விடுக்க வேண்டும் எனவும், பிரித்தானிய வெளிவிவகார அலுவல்கள் அமைச்சை தொடர்புகொண்டு பேசுமாறு அவர்களிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள பிரித்தானிய அரசு 2011ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கொழும்பில் நடத்த விடாது தடுத்திருப்பதையும் எடுத்துக்கூறி, இந்தியா சென்றுள்ள சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ள இருப்பதையும் தெரியப்படுத்துங்கள்.

• சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமையாளர்கள் மீதான அரசின் அடக்குமுறைகள், துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள், படுகொலைகள், மற்றும் காணாமல் போதல்கள்.

• போராளிகள் என்ற சந்தேகத்தில் நீதியின் முன் நிறுத்தப்படாது, உறவினர்கள் மற்றும் சட்டவியலாளர்கள், மனிதநேய அiமைப்புக்களின் பிரதிநிதிகளைப் பார்வையிட அனுமதிக்கப்படாது தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8,000 இற்கும் மேற்பட்ட இளைஞர், மற்றும் பெண்கள் (இந்தத் தொகையை ஆரம்பத்தில் 16,000 இற்கும் மேற்பட்டவர்கள் என சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது)

• போர் முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்ற போதிலும், போர் காலத்தில் அமுலில் இருந்த பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் போன்றவை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன (இவற்றை நீக்க வேண்டும் அல்லது திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை நிறுத்தியுள்ளது)

• அரசியல் தரப்படுத்தலுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் இதுவரை எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

• போர்க் குற்றம், மற்றும் மனிதாபிமானக் குற்றங்களிற்கு எதிராக இதுவரை அனைத்துலக சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படவில்லை (சிறீலங்கா அரசு நியமித்துள்ள போரும் கற்றுக்கொண்ட பாடங்களும் என்ற ஆணைக்குழு, போர் நிறுத்த காலத்தில் இடம்பெற்ற குறுகிய கால மனித உரிமை மீறல்களை மட்டுமே விசாரணை செய்வதுடன், இதன் உண்மைத் தன்மை பலராலும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஐ.நா செயலர் பான் கி-மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவையும் சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது)

• அரச அதிபரின் பதவிக் காலம் இரண்டு தடவைகள் மட்டுமே என்ற வரையறையை நீக்கியுள்ள 18வது சட்ட திருத்தத்தின் மூலம், இலங்கையின் நீதித்துறை மற்றும் சனநாயக நடைமுறைகள் கேள்விக்குறிக்கு உள்ளாக்கியுள்ளன.

• தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் அரசாங்கம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவி தமிழர் தாயகத்தை சிங்கள மயப்படுத்தி வரும் அதேவேளை, சிறீலங்கா படைகளின் பாரியளவிலான பிரசன்னம் தொடர்ந்தும் காணப்படுவதுடன், தமிழர் தாயகத்தில் பாரிய படை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

• தமிழர் தாயகத்தின் உண்மை நிலையைக் கண்டறியும் வகையில் ஊடகங்கள், கண்காணிப்பாளர்கள், பன்னாட்டு மனிதநேய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தொடர்ந்தும் சிறீலங்கா அரசினால் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமை.

விடுதலைப் புலிகளுடனான 6 சுற்றுப் பேச்சுக்களின்போது சிறீலங்கா அரசின் தலைமை அதிகாரியாகக் கலந்துகொண்ட பீரிஸ், தனது பேச்சு வல்லமையால் பன்னாட்டு சமூகத்தின் மத்தியில் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிரான கருத்துக்களை வினயமாக விதைத்து வருவதுடன், போர்க்குற்ற விசாரணைக்கான முயற்சிகளில் இருந்து மகிந்த அரசைக் காப்பாற்றி வருகின்றார்.

இவருடன் இணைந்து தமிழ் மக்களிற்கு எதிரான இனவாதக் கருத்துக்களை வெளியிட்டுவரும், பயங்கரவாதத்திற்கு எதிரான வல்லுனர் என சிறீலங்கா அரசு அழைத்துவரும் றொஹான் குணரட்னவும் சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பை நியாயப்படுத்தி இந்த மாநாட்டில் உரையாற்ற இருக்கின்றார்.

தமிழ் மக்களிற்கு எதிரான போரில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி தமிழ் உறவுகளைப் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரசின் முகத்திரையைக் கிழிக்கவும், போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இவ்வாறான போராட்டங்களை மேற்கொள்வது அவசியமாகின்றது.

IISS அமைப்பு கடந்த ஜூன் மாதம் 6ஆம் நாள் சிங்கப்பூரில் நடத்திய இதேபோன்ற மாநாட்டிலும் ஜி.எல்.பீரிஸ் கலந்துகொண்டு தமிழ் மக்களிற்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டிருந்ததுடன், மீண்டும் அதேபோன்ற மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றார்.

1958ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட IISS அமைப்பு பிரித்தானியாவில் தலைமையகத்தையும், அமெரிக்கா, சிங்கப்பூர், மற்றும் பஹ்ரெயின் போன்ற நாடுகளில் கிளைகளையும் கொண்டு இயங்கி வெளிநாடுகளின் அரசியல் மற்றும் ஆயுதப் பிரச்சினை தொடர்பாக ஆராயும் முன்னணி அமைப்பு என்பதுடன், இவற்றின் கருத்துக்களை வெளிநாடுகள் செவிமடுக்கும் தன்மை இருப்பதால், அதனூடாக சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் பரப்புரையை முறியடிக்க வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

http://meenakam.com/?p=10920

புதிதாக வெளிவந்துள்ள போர்க்குற்ற படம் பீரிசின் பயணத்தையும் அதன் நோக்கத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது

-- தங்களுக்கு இந்த படங்கள் சிறிலங்க புலனாய்வு துறை இடமிருந்து பணம் கொடுத்து பெறப்பட்டது - உலக தமிழர் பேரவை

-- ஒரு ஆண் ஒரு பெண் போராளிகள் படங்கள் இதில் உள்ளன.

-- இதை சுற்றி சிங்கள இராணுவத்தினர் நிற்கின்றனர்.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/8071271/New-Sri-Lankan-civil-war-photos-threaten-to-overshadow-Britain-visit.html

New Sri Lankan civil war photos threaten to overshadow Britain visit

The campaign for a war-crimes tribunal to investigate alleged atrocities in the Sri Lankan civil war has intensified following the release of photographs which appeared to show a massacre of Tamils.

The photographs, which showed blood stained bodies of young men and women who had been blindfolded and had their hands tied behind their backs, were released by the Global Tamil Forum (GTF), a group which includes former supporters of the Tamil Tiger rebels.

Their release was timed to coincide with the visit of Professor G.L Peiris, the Sri Lankan foreign minister, who will meet William Hague on Wednesday. A foreign office spokesman said Mr Hague will reiterate Britain's demand for a "credible and transparent investigation" into alleged war crimes. The United Nations estimates between 8,000 and 10,000 civilians died between January and May 2009 and claims the Sri Lankan army shelled a civilian 'no-fire zone'.

The GTF said these latest photographs had been passed to them by a Liberation Tigers of Tamil Elaam (LTTE) intelligence official who said he'd acquired them from within the Sri Lankan Army.

A group spokesman said the pictures had not been verified but raised serious questions which only an independent investigation could address. He said some of the photographs of Sri Lankan Army officers inspecting rows of dead bodies suggested the pictures may have been taken as 'souvenirs'.

One showed a semi-naked young woman lying, apparently dead, with blood trickling from her nose. She is surrounded by dead bodies of other young men, some naked, and all blindfolded and bound.

Father S.J Emmanuel of the Global Tamil Forum, said the pictures showed a "blatant disregard for humanity" and while he did not know if they were authentic, the possibility that they might be highlighted the need for a UN war crimes investigation.

"If Government of Sri Lanka has nothing to hide, why wouldn't they at least now admit to allowing the UN to investigate?" he said.

The Sri Lankan government said the photographs had been released to discredit it during Prof Peiris’s visit to London by a pro-LTTE group which admitted it could not verify them.

The defeat of the LTTE had given Tamils new freedoms while a 'Lessons Learnt and Reconciliation Commission’ “will consider matters relating to international humanitarian law, reconciliation and governance.”

A spokesman for the Foreign Office said: "We have consistently called for a credible, independent and transparent investigation into allegations of violations of human rights and humanitarian law. These allegations will haunt the country for many years to come, and will hinder much needed reconciliation between the communities, unless there is an honest process of accountability for the past."

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.