Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தினால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை யார் பாதுகாப்பார்கள்?

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தினால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை யார் பாதுகாப்பார்கள்?

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தச் சவாலை, நாடும் சிங்கள மக்களும் எதிர்கொள்வார்கள். ஆனால் இதனால் பாதிக்கப்படப்போகும் அப்பாவித் தமிழ் மக்களை யார் பாதுக்காப்பார்கள் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நாட்டிற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் ஐந்து சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுகின்றன. அதே போன்று அமெரிக்கா மிகவும் மோசமான முறையில் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றது. எவ்வாறாயினும் நாட்டிற்கு எதிரான அனைத்து தீர்மானங்களுக்கு எதிராகவும் இலங்கை தயார் நிலையிலேயே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில் :

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளுள் சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் செயற்படுகின்றன. இதற்கு மேலும் துணை போகும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 47 சர்வதேச நாடுகளுக்கு கடிதம் அனுப்பி இலங்கைக்கு எதிராக செயற்படும் வகையில் கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கள மக்கள் தாய் நாட்டிற்கு எதிராகவரும் அனைத்து சவால்களில் இருந்தும் நாட்டைப் பாதுகாப்பார்கள். ஆனால் இதனால் மீண்டும் பின்னடைவுகளையும் ஆபத்துக்களையும் சந்திக்கப் போகின்றவர்கள் இலங்கையில் வாழும் தமிழ் மக்களேயாவர்.

ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் புலிகளினதும் பிரிவினைவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டது இந்நாட்டு தமிழ் மக்களேயாவார். இந்நிலை மீண்டும் தொடரக் கூடாது என்பதே நம் அனைவரினதும் விருப்பமாகும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய மேற்குலக நாடுகளுடன் இணைந்துகொண்டு நாட்டிற்கு எதிரான தீர்மானங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. இதனைத் தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றார். _

  • தொடங்கியவர்

ஆபத்தை சந்திக்கப் போகின்றவர்கள் இந்நாட்டின் தமிழர்கள் என அமைச்சர் சம்பிக்க பயமுறுத்துகிறாரா?: குமரகுருபரன்

வடக்கு, கிழக்கு தமிழர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமை பேரவையின் 47 சர்வதேச நாடுகளுக்கும் கடிதம் எழுதியதால் ஆபத்தை சந்திக்க போகின்றவர்கள் தமிழர்கள் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க கூறியிருப்பதை ஜனநாயக மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்நாட்டின் அனைத்து தமிழ் மக்களையும் பயமுறுத்துகிறாரா?

தமிழர்கள் நிறையவே சந்தித்துவிட்டோம். பல மோசமான திட்டமிட்ட இனக்கலவரங்களை கண்டது இந்நாட்டின் தமிழினம். அப்படி ஒரு நிலைமையை நம் நாடு இனியும் அரசியல் ரீதியாக தாங்காது என்பதை தேசபிரேமிகள் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெனீவாவிற்கு செல்லாத நல்லெண்ண சமிக்ஞையை வரவேற்கவில்லையே.

பல மோசமான திட்டமிட்ட இனக்கலவரங்களையும் யுத்தத்தையும் கண்டது இந்நாட்டின் தமிழினம். இந்நாட்டின் இறுதிப் போரில் குறைந்தது 8,000 மக்கள் மாண்டார்கள் என்பது காலம் கடந்து இப்போது அரசு வெளியிட்டுள்ள தகவல். இதனை சம்பிக்க அறிவாரா? இந்நாடு சிங்களவர்களுக்கு முன்னரே தமிழருக்கு சொந்தமானது. பல்லினம் வாழும் நாடு என்பதை ஏன் புரிய மறுக்கின்றீர்கள். அரசின் பங்காளிக் கட்சிகளின் இப்படியான நிலைப்பாடுகளை ஆளும் கட்சி கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் தான் பிரிவினைவாதிகள். சிங்கள இனவாதிகள் பேசினால் தேசபிரேமி. ஒரு தமிழன் இப்படி பேசினால் இனவாதி. அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இனவாதத்தினால் நாடாளுமன்ற ஆசனத்தை தக்கவைத்துக்கொள்ளவா இனவாதம் பேசுகிறீர்கள்? அரசின் பங்காளிக் கட்சிகளின் இப்படியான நிலைப்பாடுகளை ஆளும் கட்சி கவனத்தில் கொள்ளவேண்டும்.

போர்க்குற்றம் என்பதே ஒரு பொழுதும் ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. யுத்தக்குற்றம் புரிந்த தனிநபர்களுக்கே உரியது எதிரானது என்பதை இவர்கள் அறிவார்களா? ஜெனீவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றும் என்று தெரிவிக்கையில், அமைச்சர் பாட்டலி சம்பிக்கவும் டாக்டர் குணதாச அமரசேகரவும் தமது அரச விரோத பரஸ்பர இன சௌஜன்ய விரோத கருத்துக்களை கூறிவருவதையும் இவர்கள் போன்ற இனவாதிகள் தான் சமாதான விரோதிகள் என்பதையும் அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். இதை சமாதானத்தை விரும்பும் சிங்கள மக்கள் நன்கே புரிந்துகொள்வார்கள்.

நாடு இன்னொரு இனக்கலவரத்தை சந்திக்க முடியாது என்பதை தேசபிரேமிகள் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியானால் சர்வதேச அளவில் இன்றைய ஜெனீவா மாநாட்டை விட மோசமான நிலையை இலங்கை அரசு சந்திக்க நேரிடும். அப்பொழுதும் இவர்கள் இப்படியே இனவாதம் பேசிக்கொண்டே இருப்பார்கள். அரசை மீட்க முன்வரமுடியாது முழிப்பார்கள். இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெனீவாவிற்கு செல்லாத நல்லெண்ண சமிக்ஞையை வரவேற்கவில்லையே. நல்லெண்ணமும் நல்லிணக்கமும் விசுவாசமாக உளத்திலிருந்து அடி மனதில் உருவாகவேண்டும்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/37090-2012-03-06-07-12-19.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.