Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. பசப்பு வார்த்தை பேச நான் என்ன அருச்சுனாவா 😂. பதில்கள் கீழே முடியாது மிக முக்கியகாரணம் கட்டமைப்பாக விரிந்துள்ள வர்க, இனவாதம். இங்கே நாம் தோட்ட மக்களை மட்டுமே அலசுகிறோம். அவர்கள் நில உரிமை அற்றவர்கள். அதாவது அவர்கள் இருக்கும் பகுதிகள் அநேகம் உள்ளூராட்சி சபை அன்றி தோட்ட நிர்வாகத்தின் கீழ் வருவன. இது அவர்களை சம பிரஜைகளாக வாழ விடாமல் தடுக்க அமைக்கப்பட்ட திட்டமிட்ட பொறிமுறை. அவர்களுக்கு தொழிலுடன் குடியிருப்பும் இணைக்கப்படுகிறது. எனவே இந்த முறையில் இருந்து வெளி வந்தால், இரெண்டும் போய்விடும். கிராமமங்களுள் அவர்களை நடமாடவே சிங்களவர் அடிக்கடி கெடுபிடி செய்வார்கள். அருகில் உள்ள கிராமங்களில் குடி அமர்த்த, அல்லது இவர்களுக்கு ஒரு கிராமத்தை அமைக்க முனையின் பிக்குகள் தலைமையில் கிராமமே சேர்ந்து எதிர்க்கும். ஆகவே இருக்கும் ஒரே தெரிவு லைன் வீடு, 1000 ரூபாய் சம்பளம் என இவர்களை சந்ததி சந்ததியாக கட்டிப்போட்டுள்ளனர். இதை எதிர்த்து அவர்களை மலையகத்தில் சிங்களவருக்கு நிகரான சம பிரசைகள் ஆக்குவது. தமிழ் ஈழம் எடுப்பதை விட கடினமானது. பலநூற்றாண்டு காலமாக தொர, சாமி என அடிமைபட்டு போன மக்கள் கூட்டம். இன்றும் அதிகாரத்தின் மீது “பெரியவன்” மீது அதீத பயம் இருக்கிறது. தவிர தொழிற்சங்கங்கள், ஈரோஸ், ஈபி, ஜேவிபி எல்லாரும் இவர்களை பயன்படுத்தினரே ஒழிய, அரசியல் ஓர்மத்தை வளர்க்கவில்லை. எந்தளவுக்கு என்றால் மின்னல் ரங்கா போல ஒரு மரம்தாவியை தமது எம்பியாக்குள் அளவுக்கு அரசியல்படுத்த படாத மக்கள். இவர்களின் அரசியல் அனைத்தும், நவீன கங்காணிகளாக இருக்கும் சில குடும்பங்களால் கட்டுப்படுத்தபசுகிறது. எனவே அவர்கள் போராட வாய்ப்பில்லை. எவரும் இல்லை. வாக்குகளுக்காக சில சலுகைகளை பெற்று கொடுப்பார்கள். இவர்கள் தோட்டத்தை விட்டு நாட்டு மக்கள் ஆகி விட்டால் தமது வாக்கு வங்கி, மிராசுத்தனம் பாதிக்கப்படும் என்பதால் இவர்களை இப்படியே வைத்திருக்கவே இவர்களின் அரசியல் தலைமைகளும் விரும்புகிறன.
  2. அந்த வீடியோ எல்லாம் புட்டினுக்கு பொன் முட்டையிடும் வாத்து. என்று அதை வெளியிட்டால் தனக்கு தீமையை விட நன்மை என உணர்கிறாரோ அன்று வெளியிடுவார். அண்டைக்கு MAGA மொக்குகளே தம்பருக்கு உயிரோடு சமாதி கட்டுவார்கள்😂.
  3. அண்ணை, நானும் நீங்களும் இந்த திரியில் எதிர் எண்டால் உக்ரேன் திரியில் ஒரே கருத்து. 2017 முதல் இப்படித்தான். அதேபோல் நீங்களும் யாழை விட்டு ஒதுங்கவில்லை. ஒதுங்கவும் கூடாது. எந்த தனிப்பட்ட உள்நோக்கமும் இல்லை. ஆனால் மலையக மக்களை ஊரில் குடிவைக்க இங்கே சொல்லப்பட்ட எந்த காரணும் தர்க வலு அற்றவை. இந்த எதிர்ப்பின் பின்னால் இருப்பது (நாம் உணரும் (conscious) அல்லது உணரா (unconscious) யாழ் மையவதம் என்பது என் நிலைப்பாடு. இணைந்திருங்கள்.
  4. இஙளவுக்கு செலன்ஸ்கி இராஜதந்திர கேம் ஆடுகிறார் என நீங்கள் எழுதினால், அண்ணன்மாருக்கு பிளட் பிரசர் ஏகிறிவிடும், கவனம். எல்லாரையும் பட்டியல் இட்டீர்கள். குறை சொன்னீர்கள் - எனக்கும் உடன்பாடுதான். ஆனால், தேடிப்பார்த்தேன், ஒரு இறைமையுள்ள நாட்டினுள் படைகளை அனுப்பி போரை ஆரம்பித்த புட்டின் பற்றி ஒரு வரி கூட இல்லை. வீட்டில் யன்னல்கள் அதிகமோ😂 டிரெம்ப் இருக்கும் வரை புட்டினுக்கு வெற்றி மேல் வெற்றிதான். ஈயூ, யூகே, துணையுடன் - அதிக இழப்பு இல்லாமல் டிரம்பின் பதவிகாலத்தை எப்படி கடத்துவது என்பது மட்டுமே இப்போதைக்கு செலன்ஸ்கியின் குறி என நான் எண்ணுகிறேன். பிகு அமெரிக்கன் அரசிடம் இருக்கும் எப்ஸ்டீன் பைலில் டிரம்ப் பற்றிய போட்டோ தான் உள்ளது…. புட்டினிடம் டிரம்பின் எப்ஸ்டீன் விளையாட்டுகளின் வீடியோவே உள்ளதாம்.
  5. வெள்ள நேரம் நாட்டில நிண்டனான் பாருங்கோ… ஈழத்தமிழர் காதில் இப்போ முழுசா அனுரா சுத்துற பூத்தான் பாருங்கோ… ஆமி, நேவி இல்லாட்டில் இனமே வெள்ளத்தில அழிஞ்சிருக்கும் எண்ட அளவுக்கு பூந்தோட்டமே காதில இருக்கு கண்டியளே…. இனி எந்த தமிழ்தலைவரின் பூவும் அங்கே வேலைக்கு ஆகும் போல தெரியவில்லை.
  6. இது பரபரப்புக்காக எழுத பட்ட தலைப்பு போல படுகிறது. சும்மா சந்தோசமான தாம்பத்யத்தில் இருந்த மனைவி - ஒரு நாள் புட்டு கேட்டதற்கா தலையை கொத்துவா? Battered women syndrome போல ஏதோ பிண்ணனி காரணம் இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் கொலைக்கான உண்மை காரணத்தை அல்லது அதற்கு அருகான காரணத்தை நெருங்கி இருக்கலாம் என ஊகிக்கிறேன்.
  7. பரம்பரை பரம்பரையாக லைன் ஒற்றை அறை குடிசைக்குள் மூன்று, நான்கு தலைமுறைகள் ஒன்றாக வாழ்ந்தபடி, எந்த சமூக, காணி, மனித அங்கீகாரம் கூட இன்றி, உழைக்கும் இயந்திரங்களாக, நவீன அடிமைகளாக… வெறும் 100 கிமி தொலைவில்… வாழும்… சக தமிழனை… அவன் சுய விருப்பில்…. எமது இடம் கூட்டி வந்து, அவமாக போகும் எமது மனைகளில் இடம், கொடுத்து, ஒரு தொழிலுக்கான பாதையையும் காட்டலாம் என்கிறோம்… யூதனோ, சிங்களவனோ தன் சக இனத்தை இப்படித்தான் நடத்தி இருப்பான். ஆனால் சுண்ணாம்பு தமிழர்களுக்கு இது வினோதமான கோரிக்கையாக இருக்கிறது. சிங்களவரின் பாரம்பரிய தாயகத்தில் அவன் நாலாம் தர பிரஜையாக இருப்பதே அவனுக்கு நல்லது என்கிறீர்கள் 😂. இந்த மனோநிலை வினோதம் அல்ல… விசம்…விசம்…விசம்.
  8. அதுதான் செலன்ஸ்கியின் குலுக்கல் நடனத்தை பகிர்ந்த கருத்து செழுமையை களமே கண்டதே. சாத்தான் வேதம் ஓதக்கூடாது. வாசகருக்கு, இந்த செலன்ஸ்கி ஒரு கோமாளி பெல்லி டான்ஸ் ஆடுகிறார் என மேற்படி கருத்தாளர் யாழில் பதிந்த வீடியோ ஒரு ஏ ஐ புரட்டு. பச்சை பொய்யர் - பொய் என தெரிந்தே பதிந்தார் என்பது என் குற்றச்சாட்டு. ஆதாரம் இதோ. இதுதான் இவர் ஏ ஐ உலகில் “கருத்தாடும்” இலட்சணம். வெக்கட்கேடு! https://www.reuters.com/article/fact-check/dancer-in-social-media-video-is-not-ukraines-president-zelenskiy-idUSL1N3930VL/
  9. மேலே சொல்லப்பட்டுள்ள “மேற்கு” என்ற ஒற்றை பதமே காலாவதியான ஒண்டு. நமது அண்ணர் 2024 க்கு பின் அப்டேட் ஆகவில்லை போலுள்ளது. அண்மையில் வந்த அமெரிக்க பாதுகாப்பு மூலோபாய ஆவணம் - தற்போதைய ஐரோப்பாவை கடுமையாக சாடி ராஸ்யாவை அரவணைக்கிறது. ரஸ்யாவும் அதை வரவேற்கிறது. டிரம்ப் புட்டின் கைப்பாவை இதன் அடிப்படையில் இப்போ அமரிக்கா+ரஸ்யா சேர்ந்து உக்ரேனை விழுங்க முனைகிறனர். ஐரோப்பா தனித்து விடப்பட்டுள்ளது. யூகேயும் அதேதான். இதுதான் இப்போ உலக ஒழுங்கு. இன்னும் பழைய மேற்கு கிழக்கு பதங்களை பாவிப்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
  10. முன்னரே சொன்னதுதான். உங்கள் சிந்தனை தெளிவு பிரமிக்கத்தக்கது.
  11. எனக்கு சுமன் தலைவர் இல்லை. ஆனால் உங்களுக்கு பைத்தியர்தான் ஆதர்ச புருடர் என்பதை களம் அறியும். மிக தெளிவாக மேலே சொல்லி உள்ளேன் சுமன் சும்மா வாய்ப்பேச்சுக்கு சொல்லி உள்ளார். ஆனால் அவர் சொன்ன கருத்து மிக சரியானது. சுமனை விட்டு விட்டு நாம் கருத்தைதான் ஆராயவேண்டும். நீங்கள் இஸ்ரேலின், தென் கொரியாவின் right to return பற்றி கேள்விபடவில்லையா? எந்த யூதனும், எந்த கொரியனும் எங்கே இருந்தும் அங்கு போய் வாழ முடியும். அப்படித்தான் தலைவர் கண்ட தமிழீழம் தமிழருக்கு இருந்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கை தமிழ் பிரசைகளுக்காவது வடக்கை இப்படி ஒரு இடமாக வைத்திருக்க வேண்டும் என்பது உன்னத நோக்கம். 200 வருடமாக செய்த உழைப்புக்கான பலனை இந்த மக்களுக்கு இலங்கை கொடுத்து விட்டதா? இல்லவே இல்லை. மலையகத்தை விட்டு வன்னி, மேல்மாகாணம் என வெளிக்கிட்ட மக்கள், பெருந்தோட்டங்களில் தங்கிவிட்ட மக்களிலும் எவ்வளவோ மேம்பட்டு உள்ளார்கள். 1000 வருடம் ஆனாலும் பெருந்தோட்டத்தில் உள்ள மக்கள் நவீன அடிமைகள்தான். இதை ஒரு இனமாக எம்மால் உடைக்க முடியும். வடக்கில் எம் இனப்பரம்பலையும் பேண முடியும். ஆனால்…. “என்னது உவயள் யாழ்பாணத்துக்கு, கரம்பனுக்கு வந்து வாழுறதோ?” எண்ட சுண்ணாம்பு சக்குகட்டிய சிந்தனை அதை தடுக்கிறது.
  12. ஓம் தெரியும். ஆக நீங்கள் சொல்வது? புங்குடுதீவு/யாழ்/வடக்கு மக்கள் கெட்டிக்காரர் அவர்கள் எந்த ஊர், நாடு போனாலும் அந்த ஊருக்கு ஏற்ப பிழைத்து நல்லா வருவார்கள். ஆனால் மலையக மக்களுக்கு கரம்பனில் இருக்க இடமும், தொழிலுக்கு உதவியும் கொடுத்தாலும் அவர்களால் முடியாது. ஏனெனில் அவர்கள் மொக்கர். சரியாக புரிந்துள்ளேந்தானே? தாங்காளும் போய் இருக்காயினம்🤦‍♂️ ஆதாரம் எங்கே?
  13. இல்லை ஐக்கிய அமெரிக்க நாட்டில் இருந்து அரிப்பு, சிலாவத்துறை, முந்தல் போன்ற பதங்கள் பாவிக்கப்பட்டதால், பாவிப்பவரின் முன்னைய யோக்கியதை என்ன எனபதை நினைவூட்டினேன். அதை மறுக்க திராணி இல்லைதானே? அதன் கீழ் தலைப்பை ஒட்டி கருத்தும் எழுதியுள்ளேன். வாசிப்பு மங்குகிறதோ?
  14. இதனால்தான் சொல்கிறேன் சிங்களவர் கூர்ப்பில் முன்னேறிய இனம். இதை சொன்னால் கூட விளங்கி கொள்ள முடியாது ஈழதமிழ் சுண்ணாம்பு குவளைகளால்.
  15. Pedo க்களை ஆதரித்து யாழில் கருத்து எழுதும், பெட்டியில் ஏறும் வயதில், மகள் வயது நடிகைகள் மீது ஜொல்லு வழிக்கும், பீடோ ஆதரவு மாமாக்களிடம் அரிப்பு பற்றிய தகவல்கள் அபரிமிதமாக இருப்பது வியப்பல்ல. ஆனால் எமது விடுதலை போராட்டத்தையும், இதே போல் “இந்தியாவின் துண்டுதலால், புலிகள் “அரிப்பு” எடுத்து நடத்தினார்கள் என எழுதுவோரும் உளர். தேசிய இனங்களின் சுயநிர்ணயத்துக்கான “வேட்கை” சகல இனவழி தேசிய இனங்களுக்கும் ஒன்றே. எமக்கு வந்தால் விடுதலை வேட்கை, உக்ரேனியனுக்கு வந்தால் அரிப்பு என்பது வடிவேல் ஜோக்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.