-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
ஈழத்தமிழர் அரசியலில் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளியாகவும், பின்னர் செல்வாக்குமிக்க மத்திய அமைச்சராகவும் திகழ்ந்த டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணம் தற்போது கர்மாவின் பிடியில் சிக்கியுள்ளது. அவரது எழுச்சியும் வீழ்ச்சியும் குறித்த சுருக்கமான தொகுப்பு இதோ: 1957-இல் பிறந்த கதிரவேலு தேவானந்தா, தனது இளம் வயதிலேயே இடதுசாரி மற்றும் தமிழ் தேசியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஈரோஸ் (EROS) அமைப்பில் இணைந்து 'டக்ளஸ்' என்ற பெயரில் லெபனானில் இராணுவப் பயிற்சி பெற்றார். பின்னர் ஈபிஆர்எல்எஃப் (EPRLF) அமைப்பில் இணைந்து அதன் இராணுவத் தளபதியாகச் செயல்பட்டார். தேவானந்தாவின் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைகளால் சூழப்பட்டிருந்தது. இவரது ஆரம்பகால நடவடிக்கைகளை மீட்டுபார்க்கையில் 1980-களில் இலங்கையில் பலமுறை சிறை வைக்கப்பட்டார். 1983 வெலிக்கடை சிறைப்படுகொலையில் தப்பிப் பிழைத்து, மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பியோடி இந்தியா சென்றார். சென்னையில் தங்கியிருந்தபோது, சூளைமேடு பகுதியில் ஒரு வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் கடத்தல் புகார்களில் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அமெரிக்கத் தம்பதியினர் கடத்தல் மற்றும் நிதி திரட்டுவதற்காகச் சொந்த மக்களையே கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டன. 1990-களில் ஈபிடிபி (EPDP) கட்சியைத் தொடங்கிய அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்தார். ஒரு துணை இராணுவக் குழுவாகச் செயல்பட்டு, யாழ்ப்பாணத் தீவுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 1994 முதல் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல அரசாங்கங்களில் சக்திவாய்ந்த அமைச்சராகவும் பதவி வகித்தார். புலிகளின் பத்து கொலை முயற்சிகளில் இருந்தும் அவர் உயிர் தப்பினார். 1990-களில் இலங்கை அரசுடன் இணைந்த பிறகு, EPDP ஒரு துணை இராணுவக் குழுவாகச் செயல்பட்டது. இந்த காலகட்டத்தில் நெடுந்தீவு உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகள் EPDP-யின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மீது கப்பம் கோருதல், சித்திரவதை மற்றும் தன்னிச்சையான கொலைகள் செய்தார். 2006-2007 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் 'வெள்ளை வேன்'களில் கடத்தப்பட்ட சம்பவங்களில் EPDP-யினருக்குத் தொடர்பிருப்பதாக Human Rights Watch மற்றும் Amnesty International போன்ற அமைப்புகள் சுட்டிக்காட்டின. யாழ்ப்பாணத்தில் பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் EPDP உறுப்பினர்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டாலும், போதிய ஆதாரங்கள் இன்றி விடுவிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கருதப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தியதாக ஈபிடிபி மீது பல புகார்கள் உள்ளன. குறிப்பாக 2011-ல் யாழ்ப்பாணத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலப்பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்டதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது. அரசியல் ரீதியாகப் பல சவால்களைச் சந்தித்த தேவானந்தாவின் வீழ்ச்சி, 2025-ஆம் ஆண்டின் இறுதியில் உச்சகட்டத்தை எட்டியது. தனது தனிப்பட்ட துப்பாக்கியை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் கைகளுக்குச் செல்ல அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டில், 2025 டிசம்பர் 26 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) அவர் கைது செய்யப்பட்டார். ஒரு காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கத்துடன் நின்ற அவர், தற்போது அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு 72 மணிநேரத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஒரு போராட்ட இயக்கத்தின் தளபதியாகத் தொடங்கி, அதிகாரமிக்க அமைச்சராக வலம் வந்த டக்ளஸ் தேவானந்தா, இன்று சட்டவிரோத கும்பல்களுடனான தொடர்பு மற்றும் ஆயுதக் கையாளுதல் புகார்களால் சிறைவாசம் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தாவின் இந்தத் திடீர் கைது, அவரது தசாப்த கால அரசியல் ஆதிக்கத்தின் வீழ்ச்சியாகக் கருதப்படுவதோடு மட்டுமல்லாமல், ஒரு பிரபஞ்ச நீதியையும் உரக்கச் சொல்லியிருக்கிறது. "நீ விதைத்த வினையெல்லாம் உன்னை ஒருநாள் வேரறுக்கக் காத்திருக்கும்" என்ற முதுமொழிக்கு அவரும் விதிவிலக்கல்ல என்பதை தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அடக்குமுறைகளும், சர்ச்சைக்குரிய கடந்த காலச் செயல்பாடுகளும் இன்று ஒரு சுழற்சியைப் போல அவரிடமே திரும்பி வந்துள்ளன. விதியை மதியால் வெல்லலாம் என்று நினைத்தாலும், ஒரு மனிதன் செய்த வினைகள் காலத்தின் கணக்கில் ஒருபோதும் தப்புவதில்லை என்பதற்கு டக்ளஸின் இன்றைய நிலையும், இந்தத் திடீர்ச் சரிவும் ஒரு வரலாற்றுச் சான்றாக மாறியுள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@கிருபன் 23வது கேள்வியின் பதில் விடுபட்டுள்ளது.ENG மாற்ற முடியுமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
எல்லோரும் கூட்டணிக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கையில் சீமான்தனித்து நிற்கிறார் . தேர்தல்செலவுவும் கொடுத்து கணிசமான தொகுதிகளையும் கொடுக்க சித்தப்பு தயராகவே இருக்கிறார்.முதல்த்தேர்தலில் முதல்வராகும் ஆசையில் ஈருக்கும் காரணத்தால் வியை யாருடனும் கூட்டணி அமைக்க முடியாமல் ஈரக்கிறார்.ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் கூட்ணிக்கு வருவதாக சமிக்ஞை கூட காட்டவில்லை.விஜை தேர்தலில் தனித்து நின்றால் தேர்தல் முடிந்த கையோடு படம் நடிக்க கிளம்பி விடுவார்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிருபன் 23வது கேள்வியின் பதில் விடுபட்டுள்ளது.ENG மாற்ற முடியுமா?- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
இந்திய இராணுவ காலத்தில் டக்ளஸ் பெரிய அளவில் அறியப்படவில்லை. ஈபிஆர் எல்எவ் இராணுவப்பிரிவு தலைவராக இருந்தவர்.இந்தி ஈராணுவத்தின் காலத்தில் சுரேஸ்பிரேமச்சந்திரனே மண்டையன் குழுவின் தலைவராக இருந்து பல கொடுமைகளைச் செய்தவர்.அந்த நேரங்களில் ஏற்பட்ட உள்முரண்பாடுகளால் பிரிந்து சென்று ஈபிடிபியை ஆரம்பித்தார்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
# Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் BAN WI WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி BAN ITA BAN 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA NED 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து BAN ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA NZ 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA NAM 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL AUS 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM IRE 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA USA NED Select NED NED NAM Select NAM NAM 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group A - First குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group A - Second 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE IRE ZIM Select ZIM ZIM OMA Select OMA OMA 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group B - First குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group B - Second 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI WI BAN Select BAN BAN NEP Select NEP NEP ITA Select ITA ITA 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group C - First குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group C - Second 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG AFG CAN Select CAN CAN UAE Select UAE UAE 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group D - First குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group D - Second 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 Y2 Y3 Y3 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 Y1 Y4 Y1 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 X1 X4 X1 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 X2 X3 X2 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 Y1 Y3 Y1 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 Y2 Y4 Y4 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 X3 X4 X4 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 X1 X2 X2 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 Y1 Y2 Y2 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 Y3 Y4 Y4 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 X2 X4 X2 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 X1 X3 X1 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) X1 Select X1 X1 X2 Select X2 X2 X3 Select X3 Select X4 Select X4 Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) Super 8: Group 1 - First சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) Super 8: Group 1 - Second 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Y1 Select Y1 Y1 Y2 Select Y2 Select Y3 Select Y3 Select Y4 Select Y4 Y4 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) Super 8: Group 2 - First சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) Super 8: Group 2 - Second 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Super 8: Group 1 - First Super 8: Group 2 - Second AUS அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Super 8: Group 2 - First Super 8: Group 1 - Second IND அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) AUS IND AUS ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) AUS 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ITA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) VIRAT KOHLI 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JASPRIT BUMPRA 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) ABISEK SHARMA 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KANE WILLIAMSON 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JASPRIT BUMPRA 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) ABISEK SHARMA 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS- தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
நடைமுறைக்கு செல்ல முயற்சிக்கும் பூகோள அரசியல், அரசியல் ஆய்வாளர், சட்டதரணி சி.அ.யோதிலிங்கம் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை ஒரு குழுவாக தமிழ்நாட்டிற்கு பயணம் செய்திருக்கின்றது. இக்குழுவில் தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த கட்சிகளில் ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மட்டும் பங்குபற்றியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கமும், ஜனநாயகத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி தவராஜாவும் சுகவீனம் காரணமாக பங்கு பற்றவில்லை. இந்தப் பயணத்திற்கான ஒழுங்குகளை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஊடாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசனே மேற்கொண்டிருந்தார.; தந்தை செல்வா தலைமையிலான குழுவினர் 1970களில் ஆரம்பத்தில் குழுவாக பயணம் செய்து தமிழ்நாட்டுத் தலைவர்களை சந்தித்த பின்னர் குழுவாக சந்தித்தமை இந்தத் தடவையே ஆகும். தந்தை செல்வா தலைமையிலான குழுவின் பயணத்திற்கும், கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவின் பயணத்திற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. தமிழ்நாட்டின் கட்சி அரசியலுக்குள் மாட்டுப்படாமல் தமிழ்நாட்டுத் தலைவர்களை சந்தித்துள்ளனர். அனைவரிiயேயும் பொதுவான கோரிக்கைகளையே முன்வைத்தனர். பிரதான கோரிக்கை சமஸ்டி ஆட்சி முறைக்கு ஆட்சி அளிக்க வேண்டும் என்பதேயாகும.; இந்தத் தடைவ மேலதிகமாக தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் பற்றியும் உரையாடியுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி நாம் தமிழர் இயக்கம், திராவிடர் கழகம், பாரதீயஜனதாக்கட்சி என்பன சந்தித்த கட்சிகளில் முக்கியமானவையாகும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் வைகோவும், தமிழீழ ஆதரவாளர் நெடுமாறனும் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இம்மறுப்புக்கு புலம்பெயர் தமிழர் சிலரின் தூண்டுதல்கள் காரணமாக இருக்கலாம். சமஸ்டியை முன்வைப்பதனால் தமிழீழக் கோரிக்கை பலவீனப்பட்டுவிடும் என்ற கருத்து புலம்பெயர் தமிழர் சிலரிடம் இருக்கின்றது. வலைத்தளங்களிலும் இது பற்றிய கருத்துக்கள் வந்திருக்கின்றன. இச்சந்திப்புக்களில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்தமையே முக்கியமானதாகும.; அண்மைக்காலமாக ஈழத் தமிழர் விவகாரத்திலிருந்து சற்று விலகிய போக்கே ஸ்டாலினிடம் காணப்பட்டது. நிவாரண நடவடிக்கைகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பற்றி ஸ்டாலின் எதுவித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை. தாயகத்தில் ஒரு தேக்க நிலை இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். தி.மு.க மட்டுமல்ல ஏனைய தமிழகக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் மௌனமாகவே இருந்தன. சீமானின் “நாம் தமிழர் இயக்கம்”; மட்டும் அவ்வப்போது குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. ஸ்டாலினைச் சந்திக்க முடிந்தமைக்கு திருமாவளவனே பிரதான காரணமாவார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிப்பதால் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்யக்கூடியதாக இருந்தது. இதற்கு முன்னர் சுமந்திரன், சாணக்கியன், செல்வம்அடைக்கலநாதன் ஆகியோர் சென்றபோதும் ஸ்டாலினை சந்தித்து உரையாட முடியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாகவே சந்திக்க முடிந்தது. கனிமொழியுடன் மட்டும் சந்தித்து உரையாட அவர்களினால் முடிந்தது. தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் வர இருப்பதால் அதுவும் சந்திப்பை சாத்தியப்படுத்தியிருக்கலாம். இது விடயத்தில் திருமாவளவனுக்கு தமிழ் மக்கள் நன்றி கூறியேயாக வேண்டும். அவர் கடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்தபோது இக்கட்டுரையாளரும் அவரை சந்தித்திருந்தார். அவரிடம் ஈழத் தமிழர் - தமிழ்நாடு உறவினை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள் என கூட்டாக நாம் கோரிக்கை விடுத்தோம். உடனடியாக அதை செய்வதாக அவர் வாக்குறுதியளித்திருந்தார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகை வாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்த அவர் வடமராட்சியின் கிராமங்கள் தோறும் நடந்து சென்று பனம் விதைகளை நாட்டினார். தமிழ் இளைஞர்களுடனும் மனம் திறந்து உரையாடினார். “நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்கின்றோம். நீங்கள் இங்கு ஒற்றுமையாக குரல் கொடுங்கள்” என தமிழ் இளைஞர்களிடம் கூறினார். சந்திப்புகளின் போது கஜேந்திரகுமார் மத்திய அரசினையும் பகைக்காமல,; தமிழ்நாட்டு மக்களையும் பகைக்காமல் நிதானமாக கருத்துக்களை முன்வைத்தார். இலங்கை - இந்திய ஒப்பந்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளைக் கூறுகின்ற போதும் அதன் விளைவான 13வது திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தவில்லை என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். அவரது கருத்துக்களில் சமஸ்டி கோரிக்கை, ஏக்கிய ராச்சிய தீர்வு யோசனை நிராகரிப்பு, தமிழக மீனவர்களின் அத்துமீறல் என்பனவே முக்கிய விடயப் பொருட்களாக இருந்தன. தமிழக மீனவர்களின் அத்துமீறல் விவகாரம் தமிழ்நாட்டிற்;கும், தாயகத்திற்கும் இடையிலான உறவை பலவீனப்படுத்தும் வகையில் சிறீPலங்கா அரசாங்கத்தினால் கையாளப்படுகின்றது என்பதையும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். ; ஈழத் தமிழருக்கு சார்பாக இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை மாற்றமடையச் செய்யும் ஆற்றல் தமிழ்நாட்டிற்கு உண்டு. இந்த வகையில் டெல்லியை கையாள்வதற்கான திறவு கோல் தமிழ்நாடு தான் என 2006 இலேயே ஆய்வாளர் திருநாவுக்கரசு குறிப்பிட்டிருந்தார். இக்கட்டுரையாளர் சென்னையில் இந்தியா கம்யூனிஸ்ட்கட்சி தமிழ்நாட்டுத் தலைவர்களில் ஒருவரான மகேந்திரனை சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் சந்தித்தபோது அவர் இதனையே கூறியிருந்தார.; “நீங்கள் நேரடியாக மத்திய அரசினை கையாளாதீர்கள் தமிழ்நாட்டினூடாக கையாளுங்கள்” எனக் கூறியிருந்தார். “ஒரு தடவை பிரதமராக இருந்த மன்மோகன்சிங் தமிழ்நாட்டின் விருப்பத்திற்கு மாறாக கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் பங்கு பற்றச் சென்ற போது ஈழத் தமிழர் ஒடுக்கப்படுவதனை சுட்டிக்காட்டி நாம் தடுத்து நிறுத்தினோம்” எனவும் அவர் கூறி இருந்தார். ஈழத் தமிழர் விவகாரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு பலவகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் முதலாவது தமிழ்நாட்டின் கேந்திர ஆற்றல் கொண்ட புவியியல் அமைவிடமாகும். புவிசார் அரசியலைப் பொறுத்தவரை தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு மட்டுமல்ல தமிழ்நாடும் கேந்திர இடத்தில் இருக்கின்றது. தமிழ்நாட்டின் கேந்திர ஆற்றல் தமிழர் தாயக கேந்திர ஆற்றலை விட உயர்வானது ஏனெனில் அதற்கு பின்னே மிகப்பெரிய நிலத் தொடர்ச்சி இருக்கின்றது. இந்திய மத்திய அரசுக்கு மட்டுமல்ல புவிசார அரசியலில் அக்கறை கொண்ட வல்லரசுகளுக்கும் தமிழ்நாடு இது விடயத்தில் முக்கியமானதாக உள்ளது. இரண்டாவது தமிழ்நாட்டின் சனத்தொகையாகும். சுமார் 7 கோடி மக்கள் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். இது இலங்கையில் உள்ள சனத்தொகையை விட ஐந்து மடங்கு அதிகமானதாகும். தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையும் இணைந்தால் இந்தியாவில் வசிக்கும் மொத்த தமிழர்களின் எண்ணிக்கை 8 கோடியையும் தாண்டும். தவிர தமிழக வம்சாவளித்தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் வசிக்கின்றனர். தமிழ்நாட்டின் எழுச்சி அவர்களையும் ஈழத் தமிழர்கள் பால் அக்கறைப் பட வைக்கும். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை மலையக தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், உலகமெங்கும் வாழும் தமிழக வம்சாவளி தமிழர்கள் நல்ல சேமிப்புச் சக்திகளாவர். நாம் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனமாக இருப்பதினால் இச் சேமிப்புச் சக்திகள் எப்போதும் நமக்கு துணையாக நிற்கும். மொறீசியஸ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் அவர்கள் எங்கள்; மீது வைத்திருக்கின்ற அக்கறைக்கு சான்றாகும். ; மூன்றாவது தமிழ்நாடு வரலாற்று ரீதியாக மைய நீரோட்ட அரசியலுக்கு வெளியில் நிற்கின்றமையாகும். திராவிட கருத்து நிலை கொண்ட அரசியலே இதற்கு பிரதான காரணமாகும். தமிழ்நாட்டில் இன்று ஆதிக்கம் செலுத்தும் இரு பிரதான கட்சிகளும் திராவிட அரசியல் மூலம் உருவான கட்சிகளே! இந்தக் கட்சிகளின் ஆதிக்கத்தை மைய நீரோட்ட கட்சிகளினால் சிறிதளவு கூட உடைக்க முடியவில்லை. இவ்வாறு மைய நீரோட்ட அரசியலிருந்து விலகி நிற்பது ஈழத் தமிழர் போராட்டத்திற்கு சார்பானதாகும். தவிர தமிழ் மக்கள் இன்று நாள்தோறும் பச்சை ஆக்கிரமிப்புக்கும் முகம் கொடுத்து வருகின்றனர.; இதற்கு இடதுசாரி முகமூடி போர்த்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்காக இல்லை. இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாம் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆக்கிரமிப்பின்; மையமாக இன்று விளங்குவது முல்லைத்தீவு மாவட்டம் தான். இதனை எப்படியாவது தடுத்து நிறுத்தியாக வேண்டும். தமிழ்நாடு இதில் பாரிய பங்களிப்பை ஆற்றக்கூடியதாக இருக்கும். யாழ் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூவி அழிக்கப்பட்டபோது பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். இப் போராட்டம் தமிழ் நாட்டிலும் பரவத் தொடங்கியது. அப்போது தேர்தல் காலமாக இருந்தபடியால் இந்தியத் தூதுவர் உடனடியாக பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சவினைச் சந்தித்து உண்ணாவிரதத்தை நிறுத்தி நினைவுத்தூபியினை மீளக் கட்ட அனுமதிக்குமாறு வேண்டினார். அதன் பின்னரே அரசாங்கம் அனுமதி வழங்க நினைவுத்தூபி மீளக் கட்டப்பட்டது. இது தமிழ்நாட்டின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகின்றது. இன்று பூகோள ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்தியாவின் பிடிக்குள் இலங்கை இருக்கின்றது. டித்வா புயல் பேரிடரின் பின்னர் இந்தப்பிடி அதிகமாக இருக்கின்றது எனலாம.; எனவே சென்னைக்கூடாக புதுடில்லிக்கு அழுத்தம் கொடுத்தால் சில விடயங்களை வெற்றிகொள்ளக் கூடியதாக இருக்கும். இன்று புது டில்லி தமிழ் மக்கள் தொடர்பாக பாராமுகமாக இருக்கின்றது என்றால் தமிழ்நாடு கொந்தளிக்கவில்லை என்பதே அர்த்தமாகும். இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டிற் கூடாக அணுகுவதை விரும்பப்போவதில்லை. அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பதே இதற்கு காரணமாகும். ஈழத் தமிழர்களில் சிலரும்; தமிழ்நாட்டிற்கூடாக அணுகாமல் மத்திய அரசினை நேரடியாக அணுக வேண்டும் எனக் கூறப் பார்க்கின்றனர். நேரடியாக அணுகும் போது இந்திய மத்திய அரசிற்கு பலமான அழுத்தங்களை ஒருபோதும் கொடுக்க முடியாது. அண்மைக்கால தேக்க நிலைக்கு நேரடியாக அணுகியமையை காரணம் எனலாம். இன்று மாநில அரசுகள் மத்திய அரசில் பலமான செல்வாக்கை செலுத்துகின்றன. இதனால் ஏனைய மாநிலங்களையும் இணைத்து பயணித்தால் அழுத்தங்களை மேலும் பலமாக கொடுக்கக் கூடியதாக இருக்கும். கருணாநிதியின் ரெசோ அமைப்பினை மீளவும் புதுப்பிப்பது இது விடயத்தில் ஆரோக்கியமான பயன்களை தரக்கூடியதாக இருக்கும். இன்று இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் இலங்கையின் இறைமை, ஆள்புலம்; பேணப்படுவதோடு தமிழ் மக்களின் சமத்துவம், சமூகநீதி பேணப்பட வேண்டும் என்று பெயருக்காகவாவது இருப்பது தமிழ்நாட்டின் அழுத்தங்களின் விளைவு என்றே கூற வேண்டும். தமிழ்த் தேசிய பேரவையின் தமிழ்நாட்டுப் பயணத்திற்கு எதிர்வினைகளும் வந்துள்ளன. ஈழத் தமிழர்களில் சிலர் முன்னரும் கூறியது போல தமிழ்நாட்டுடன் பேசி பயனில்லை. மத்திய அரசுடன் தான் பேச வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர் இங்கு மத்திய அரசுடன் இதுவரை நேரடியாக பேசி எந்தவித முன்னேற்றத்தையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அழுத்தம் பலமாக இல்லாததே இதற்கு காரணமாகும.; மத்திய அரசுடன் பேசத்தான் வேண்டும். அழுத்தம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டுடன் இணைந்து பேசுவதே ஆரோக்கியமானதாக இருக்கும். இரண்டாவது எதிர்வினை புலம்பெயர் தமிழர் சிலரிடம் இருந்து வந்துள்ளது. இது பற்றியும் முன்னர் கூறியிருக்கின்றேன். தமிழீழக் கோரிக்கை பலவீனமடைந்து விடும் என்பதே இதற்கு பின்னால் உள்ள நியாயப்பாடு ஆகும். தாயகத்தில் 6 வது திருத்தச் சட்டம் அமுலில் உள்ளது. தாயகத்தில் இருப்பவர்களினால் தமிமீழக்; கோரிக்கையை முன்வைக்க முடியாது. தவிர இந்திய மத்திய அரசாங்கத்திற்கு முழு இலங்கைத் தீவும் தேவையாக உள்ளது. இதனால் இந்திய நலன்களையும் ஈழத் தமிழர் நலன்களையும் சந்திக்கின்ற புள்ளியை கட்டமைக்க முடியாது. சமஸ்டிக் கோரிக்கையின் மூலம் நடுப்புள்ளியை கண்டுபிடித்து பலப்படுத்தலாம். தவிர தமிழீழக் கோரிக்கை தொடர்பாக ஒரு எழுச்சியை தமிழ் நாட்டில் கொண்டுவர புலம்பெயர் தரப்பினரால் முடியவில்லை. சீமானின் நாம் தமிழர் கட்சியோடு அவர்களது அரசியல் சுருங்கிப் போயுள்ளது. மொத்தத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் பயணம் எதிர்காலத்தில் ஆரோக்கியமான பயன்களைக் கொண்டு வரலாம். இதற்கு தொடர் செயற்பாடுகள் தேவை. தமிழ்நாட்டில் ஒரு தொடர்பு அலுவலகத்தை உருவாக்குவது அவசியம். தமிழர் அரசியலில் பூகோள, புவிசார் அரசியல் பற்றி அதிகம் பேசிய அரசியல்வாதி கஜேந்திரகுமார் தான். அவரது அரசியலின் மையமே அதுதான். இதற்காக அவர் பல தடவைகள் கிண்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றார். இன்று தனது புவிசார் , பூகோள அரசியலை நடைமுறைச் செயற்பாட்டிற்கு கொண்டுவர அவர் முயற்சிக்கின்றார். அவரது முயற்சிகள் வெற்றி பெறுமா என்பதை எதிர்கால வரலாறு தான் கூறக்கூடியதாக இருக்கும். எல்லாவற்றுக்கும் முதன்மையானது தாயகத்தில் பலமான, ஒருங்கிணைந்த அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதே! இதனை உருவாக்காமல் தமிழ் நாட்டில் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியளிக்கப் போவதில்லை. தமிழ்த்; தேசிய சக்திகள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.https://www.facebook.com/share/1hR98CBVxW/?mibextid=wwXIfr- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
டக்ளசுக்கு எதிராக எத்தனையோ வழக்குகளைத் தொடுக்கலாம் அப்படியிருக்க இப்படி ஒரு பலவீனமான வழக்கில் கைது செய்திருப்பது. தாங்கள் நீதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதில்லை கண்துடைப்பிற்காகத்தான்.ரணிலின்கைதுபோல் மற்றுமொரு நாடகம்.- தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
- தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை
திமுகவின் கூட்டணிக்கட்சிகளின் அறிக்கை இதுவென்பதால் அவர்கள்சீமானைச் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள்.திராவிடத்தைக்கைவிட்டு தமிழ்த்தேசியத்துக்குள் ஐக்கியமாகி விட்டார்களா?எல்லாம் தேர்தல் நேர சித்து விளையாட்டுக்கள்.திமுக நேரடியாக இறங்காமல் அல்லக்கைகறை வைத்து அரசியல் செய்கிறது.- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
யாழ்ப்பாணம் பழைய பூங்கா பூங்காகவே இருக்கட்டும். உள்ளக விளையாட்டரங்கையாழ்நகரை அண்டிய பல அரச காணிகள் இருக்கின்றன. அவ்வாறான ஒரு இடத்தில் அமைக்கலாம். அதை விட கந்தையா வைத்தியநாதனின் பேத்தி தங்களுக்கு சொந்தமான காணியை விளையாட்டரங்கு அமைப்பதற்கு இலவசமாகத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்அங்கே கட்டலாம். பழைய பூங்காவுக்குள்தான் கட்ட வேண்டும் என்று அடம்பிடிப்பது ஏன்?மிகவும் பழைமையாக மரங்களை வெட்டி யாழ்நகரை பாலவனமாக்க விரும்புகிறார்களா?ஒருமரத்தை உருவாக்க எவ்வளவு கஸ்ரப்பட வேண்டும். அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்.சுமத்திரன் கட்சிகளுக்குள் வழக்குப் போட்டுத் தடைகளை விதிக்கவைப்பதில்தான் கெட்டிக்காரர்.இப்படியான வழக்குகளில் கோட்டை விட்டுவிடுவார் போலிருக்கிறது.அல்லது வழக்குத் தோற்கவேண்டும் என்று வேண்டுமென்றே அவ்வாறான தவறை விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.ஏனெ;னறால் சுமத்திரனின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. இன்று கூட சுமத்தரனின் ஆதரவாளர்களால் தமிழ்த்தேசியக்கட்சிக்கு ஆட்சியமைக்க விடாமல் தமிழருக்கட்சியினர் என்பிபிக்கு வாக்களித்து சபையை என்பிபியிடம் தாரை வார்த்துள்ளனர்.- இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்!
இந்தப்பேச்சு வார்த்தைகளால் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. சிலவேளைகளில் சீமான் மட்டும் ஒரு சில கருத்துக்களைச் சொல்லக்கூடும். கடந்த 16 ஆண்டுகளாக அறிவு ஜீவிகள் சொல்லி வந்த கருத்தையும் புறக்கணிக்காமல் அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இந்தச்சந்திப்புக்கள் சொல்ல வரும் செய்தி. இந்தியாவை எமக்குத் தெரியும். இந்தியா ஒரு போதுமே தமிழ்ர்நலன்பற்றிச் சிந்தித்தது கிடையாது. தமிழக அரசியல் கட்சிகளும் மத்திய அரசிற்கு விரோதமான போக்கை ஒரு போதும் எடுக்க மாட்டார்கள். உண்மையான தமிழ்த்தேசியவாதிகளின் கைகளில் தமிழக ஆட்சி மலர்ந்தால் அவர்கள் மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் நெருக்கடி கொடுப்பார்கள்.தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக் கொண்டு மத்திய ஆட்சிக்கு முண்டு கொடுத்த திராவிடக்கட்சிகளைப்போல் இருக்க மாட்டார்கள். ஆகவே புத்தியீவிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுப் பரீட்சித்துப்பார்க்கப்பட்டுள்ளது.- தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
இந்தப்பேச்சு வார்ததைகளால் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. சிலவேளைகளில் சீமான் மட்டும் ஒரு சில கருத்துக்களைச் சொல்லக்கூடும். கடந்த 16 ஆண்டுகளாக அறிவு ஜீவிகள் சொல்லி வந்த கருத்தையும் புறக்கணிக்காமல் அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இந்தச்சந்திப்புக்கள் சொல்ல வரும் செய்தி. இந்தியாவை எமக்குத் தெரியும். இந்தியா ஒரு போதுமே தமிழ்ர்நலன்பற்றிச் சிந்தித்தது கிடையாது. தமிழக அரசியல் கட்சிகளும் மத்திய அரசிற்கு விரோதமான போக்கை ஒரு போதும் எடுக்க மாட்டார்கள். உண்மையான தமிழ்த்தேசியவாதிகளின் கைகளில் தமிழக ஆட்சி மலர்ந்தால் அவர்கள் மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் நெருக்கடி கொடுப்பார்கள்.தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக் கொண்டு மத்திய ஆட்சிக்கு முண்டு கொடுத்த திராவிடக்கட்சிகளைப்போல் இருக்க மாட்டார்கள். ஆகவே புத்தியீவிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுப் பரீட்சித்துப்பார்க்கப்பட்டுள்ளது.- தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
இந்தியாவை இப்பொழுதும் நம்பவில்லை.புட்டின் இந்தியா போன அடுத்த நாளே அமெரிக்க அதன் மிகப்பெரிய விமானத்தை அதுவும் புயலால் பெரிதும் பாதிக்கப்படாத யாழ்ப்பாணத்தில் தரையிறக்குகிறது.யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியதூதரகம் அகற்றப்படவேண்டும் என போராட்டங்கள் நடக்கிறது.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உடைந்து தமிழரசுக்கட்சியும் உடைந்து என்பிபி வடமாகாணத்தில் வலுவாக காலூன்ற அடித்தளம் போடுகிறது. தனக்குள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்து ஒற்றையாட்சிக்குள்ளே அரசியலைமப்பு மாற்றத்தை நிறைவேற்ற ஆயத்தமாகிறது. இது ஒரு ஆபத்தான நிலை தமிழர்களுக்கு அதே வேளை இந்தியாவுக்குப் பிடிக்காத சார்பு நிலைகளை அனுரஅரசு எடுக்கிறது.இந்தப் புறச்சூழலில் தான் அதுவும் தமிழகத்தில் தேர்தல் காய்ச்சல் அடிக்கும் நேரத்தில் இப்ப தும்முனாத்தான் அது தேர்தல் மேடைகளில் ஊறுகாயாக அவது பயன்படுத்தப்படலாம். மற்றும்படி தமிழக அரசியல் கட்சிகளில் நாம்தமிழர் பாமக தவிர யாரும் ஈழத்தமிழர் விகாரததைக் கையில் எடுக்கப் போவதில்லை. அன்பு மணி பாமக தலைமைப் பொறுப்பில் இருப்பதால் பாமகவும் இந்த விவகாரத்தை கவனத்தில் பெரிதாக எடுக்காது.சீமானை மட்டும் சந்திப்பது தமிழக மக்களை உதாசீனம் செய்வதாகும். - “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
Important Information
By using this site, you agree to our Terms of Use.