பாடல்: ஆகாய சூரியனை
http://www.youtube.com/watch?v=D5lkJs612A8
படம்: சாமுராய்..
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி
ஓ..ஓ..ஓ..ஓ...
ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கொடி நான் உன்தேகம் முற்றும் சுற்றிக்கொண்ட கொடி நான்
என் எண்ணம் எதுவோ
கிளி நான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்
உன்னை கொஞ்சும் எண்ணமோ
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
அடியே என்தேகம் முற்றும் சுற்றிக்கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே
என்னை கொல்லும் எண்ணமோ
காதல் பந்தியில் நாமே உணவுதான்
உண்ணும் பொருளே விண்ணை உண்ணும் விந்தை இங்கேதான்
காதல் பார்வையில் பூமி நேர் தான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கேதான்
உன் குளிருக்கு இதமாய் என்னை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகம்தான் உன்வேர்வையில் நனைந்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது
ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்
டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கி நான் எங்கே செல்வது
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொள்வேனே
அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி
நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி
கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்
பாரம் குறைந்தது ஏதோ நிம்மதி