எடுப்பார் கைப்பிள்ளை
அடங்கி நடக்க அம்மா சொன்னார்
பின்னொருநாள் மனைவி சொன்னால் நான் தொடை நடுங்கி என்று
விரும்பாத ஒன்றை விரும்பி படிக்க அப்பா சொன்னார்
பின்னொருநாள் கனவில் வந்த என் பழைய கனவுகள் கை கொட்டி சிரித்தது
காதல் வந்த வேளையில் கவிதை எழுது என்றது இளவட்ட கூட்டம்
கவிதை கற்ற வேளையில் காதல் கிளி கழுதை மேல் ஏற்றப்பட்டது
கம்பியூட்டர் படி என்றான் நண்பன்
காலர் வைக்காத சட்டை பேசன் என்றாள் தோழி
காபி குடித்தால் சுகர் என்றார் டாக்டர்
கடன் வாங்கி வீடு கட்டென்றாள் மனைவி
வாழும் போதெல்லாம் என் வாழ்கையை சமுதாயம் வாழ்ந்தது
நன்றி பரம்பொருளே - சாவை மட்டும்" நான் " சாக கொடுத்தாய்