பைப் என்னுடைய நல்லதொரு நண்பன். 85 ம் ஆண்டு ஒரு மேதலில் காயமடைந்து சிகிச்சைக்காக யெர்மனிக்கு அனுப்பட்டு பின்னர் பல வருடங்கள் வெளி வலையமைப்பில் வேலை செய்தவன். 95 ம் ஆண்டு மீண்டும் நாடு திரும்பியிருந்தவன் மரணமடைந்த செய்தி எனக்கு கிடைத்தது. இவனும் நீர்வேலி அக்காச்சியும் பள்ளி தோழர்கள்.முழங்காலில் காயமடைந்ததால் காலை மடித்து நடக்க முடியாதவன். தானாக வெளிநாட்டிற்கு வந்தவர்களை விட இயக்கமே வெளிநாட்டிற்கு அனுப்பி சிகிச்சை கொடுத்தபின்னர் தானாக தாயகம் திரும்பி போரிட்வன். கல்விக்கென வெளிநாடுகளிற்கு இயக்தால் அனுப்பப் பட்டவர்களில் இறுதி யுத்தத்தின் போது அனைவரையும் நாடு திரும்பும்படி கேட்கப்பட்டனர் அதில் 5 மட்டும்தான் திரும்பியிருந்தனர். மிகுதி 80 பேரிற்கு மேல் அவர்கள்தான்இப்பொழுது வெளிநாட்டிலிருந்து அறிக்கைகள் விடுகின்றனர்.