ஆண்கள் பெண்களின் மார்புகளை இரசிக்கவிடின், அவன் தன்னினச் செயற்கையாளனாகத் தான் இருப்பான் என்றோ, அல்லது பச்சைப் பொய் சொல்லுவனாகத் தான் இருப்பான் என்ற கருத்தினையும், உங்களின் எழுமாந்தமான முடிவுக்காகத் தான் அந்தப் பதில் சொல்ல வேண்டி ஏற்பட்டது. அப்படி ஒரு முடிவினை எடுக்க நீங்கள் யார்?? அது ஒரு வகையில் ஆண்கள் பெண்களின் அங்கங்களை ரசிக்கச் சொல்லிச் செய்கின்ற தூண்டுதலே....
அப்படி ரசிப்பது தப்பில்லை எனில், உங்களின் குடும்பத்தினரை முதலில் நினைத்துக் கொண்டு கதையங்கள்
நான் சுத்தமானவனாகக் காட்டவரவில்லை. ஆனால் அந்த உணர்வினைப் பொது இடத்தில் வெளிப்படுத்த வேண்டிய தேவையில்லை. கலவி எல்லோரும் தான் கொள்கின்றார்கள் . அதற்காக அதை இங்கே வெளிப்படுத்த முடியுமா? அதற்கென்று தளங்கள் இருக்கின்றன. அவ்வகையான தளங்களில் யாழும் இணைந்து கொள்ளுமாயின், வெளிப்படுத்துங்கள்.
பெண்களின் உடலில் உள்ள அங்கங்களையோ, அல்லது ஆணின் உடலில் உள்ள அங்கங்களையோ பாலியல்ரீதியாக வர்ணிப்பது, கதைப்பது எல்லாம் சரியாகத் தோன்றவில்லை.
உங்களுக்கு ஏதாவது பாலியல் பிரச்சனை என்றால் தகுந்த வைத்தியரை நாடுங்கள்... அதை விட்டு விட்டு, ஆண்கள் இப்படி, அப்படி என வரையறை எங்களுக்குத் தரத் தேவையில்லை