இன்று அடையார் ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்களும் தமிழர் நலன் சார்ந்த கட்சிகளும் பங்கு கொண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு பொது வாக்கெடுப்பு கோரியும், இலங்கையில் சர்வதேச விசாரணை கோரியும் ஐ.நா அதிகாரிகளான பான் கீ மூன் , விஜய் நம்பியார் , ஜான் ஹோல்ம்ஸ் மற்றும் ஐ.நா விற்கு எதிராக முழக்கங்களும் ஐ.நா மன்ற கொடியை எரித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கைதாகினர்.
நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சாகுல் ஹமீது , மதிமுக சார்பாக அண்ணன் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி அண்ணன் குடந்தை அரசன் , மே 17 இயக்க தோழர் திருமுருகன், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இயக்கத் தோழர் உமர்கயான்,அய்யா பொழிலன் .இன்னும் பல இயக்கங்கள்(விடுபட்ட இயக்கங்கள் இருந்தால் மன்னிக்கவும்) ஒன்றாக இணைந்தது பெரும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. கொள்கை அளவில் முரண்பட்டாலும் தமிழர் பிரச்சினைகளுக்காக நாம் அனைவரும் ஒரே அணியில் திரண்டால் எதிரிகளை எளிதாக வீழ்த்திவிடலாம் . இது போன்ற ஒருங்கிணைந்த போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் .
போராட்டத்தை ஒருங்கிணைத்த மே 17 இயக்கத்திற்கும் கலந்து கொண்ட அனைத்து இயக்கங்கள் கட்சிகள் மற்றும் உணர்வாளர்களுக்கும் எனது நன்றிகளும் புரட்சி வாழ்த்துக்களும்.
(facebook)