இந்தி(ய)ராணி கதை
இந்தியாவின் சகல டிவி, ரேடியோ, தின, வார, மாத சஞ்சிகைகள் எல்லாம் கல்லா கட்டும் இன்றைய ஒரே நட்சத்திரம் இந்திராணி.
இந்த ராணியின் தகிடு தத்தங்கள், கொலையினால் (சொந்த மகளையே ) இந்திய தாய்க்குலமே அரண்டு போய் நிற்கின்றது.
தாய், பெத்த மகளைக் கொலை செய்வது புதிது இல்லை தான் அதுவும் இந்தியாவில். ஆனால், இங்கே அதற்கான காரணம், அய்யய்யோ ரகம்.
பணம், பதவி அந்தஸ்து காரணமாக செய்த ஜில்மார்ட் வேலைகளினால் நடந்த கொலை.
இந்த ராணி இளவயதில் ஒருவருடன் வாழ்ந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார். ஒரு ஆண் (மிகைல்) , ஒரு பெண் (ஷீனா)
அந்த கணவரை பிரிந்து இரண்டாவது கலியாணம். அங்கேயும் ஒரு பெண் குழந்தை (விதி).
எல்லாம் வளர்ந்து பெரியவர்கள் ஆகி விட்டார்கள்.
அழகிய ராணியும் வேலை தேடினார். கிடைத்தது.
ஸ்டார் இந்தியா என்னும் மிகப் பெரிய நிறுவனத்தின் CEO பீட்டர் முகர்ஜி என்பவரின் பிரத்தியேக செயலாளர்.
அவ்வளவுதான்.
முகர்ஜியையே மடக்கி விட்டார். என்னத்தைக் செய்து தொலைத்தாரோ...
ஆனால் தனக்கு இன்னும் கல்யாணமே நடக்கவில்லை என்று கதை சொல்லி இருப்பார் போல, பார்க்கும் போது இளமையாக தோன்றும் அம்மணி.
பெரும் பணக்கார வர்க்கத்தினை சேர்ந்த முகர்ஜியோ தனது முதல் மனைவியை விவாகரத்து பண்ணி, இவரை கட்டிக் கொண்டார்.
இந்திராணி முகர்ஜி ஆனார், நம்ம அம்மணி. பெரும் பணக்கரராகும் கனவுடன்.
முகர்ஜிக்கும் இரண்டு பிள்ளைகள்.
ஒரு ஆண் (ராகுல் ), ஒரு பெண்.
இந்திராணியின் பிள்ளைகள் தாயை தேடி வருவார்கள் தானே. அதற்கு முதலே எச்சரிகை செய்து விட்டார் அம்மணி: "பிள்ளைகளே அம்மா, நம்ம எதிர்காலத்துக்கு நாலு காசு சேர்க்க, ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு அடிமாட்டு விலைக்கு 'ஒரு பொருளை' வாங்கிப் போட்டு இருக்கிறேன். கெடுத்துடாதீங்க செல்லங்கள். உங்களை என் தம்பி தங்கைங்க என்னு அவிங்க கிட்ட சொல்லி வைக்கிறேன். அப்படியே சூதனமா இருந்து, அதையே மைண்டைன் பண்ணனும், ஓகே" என்று சொல்லிவிட்டார்.
ஆனால் விதியின் விளையாட்டு வேறு மாதிரி இருந்தது.
சித்தியின், தங்கை (?) மீது காதல் கொண்டார், முகர்ஜியின் மகன் ராகுல்.
பாலச்சந்தர் அபூர்வ ராகங்கள் பட புதிர் போன்ற உறவு முறை.....
அப்படியே ஆடிப் போனார் ராணி. உண்மையை சொல்லி விலகிப் போயிருக்கலாம்.
ஆனால், ஆடம்பர வாழ்க்கை, பணம், அந்தஸ்த்து: விட முடியுமா?
மகளைக்.. ச.. தங்கையை கூப்பிட்டு, கத்தி துளைத்து விட்டார். உனக்கு சொல்லி வைத்தேனே, ஏன் இப்படி செய்து தொலைத்தாய் என்று அழுதார்.
மகளில் பிழை தானே.
இருந்ததாலும், தாயே எட்டடி பாய்ந்தால், மோள் 16 அடி பாயாவிட்டால் எப்படி ?
ஷீனா
ஆனால் காதலுக்கு தான் கண் இல்லையே !
அதற்குள் காதல் தொடர்பு எகிறி கட்டில் வரை போக, உன் தங்கை தானே, என் மகனும் விரும்புகிறானே, கட்டி வைச்சிரலாமே என்றார் முகர்ஜி.
அவ்வளவு தான். ஒரு முடிவு எடுத்து விட்டார் அம்மா ராணி.
இவள் நம்ம ராணி வாழ்க்கைக்கே உலை வைத்து விடுவாள் போலிருக்கிறதே.
முடிவெடுத்தார் .... கொலை முடிவு... சொந்த மகளை....
இரண்டாவது கணவரை (முன்னால்) அழைத்தார்.
நம்ம மகள் விதியை ராகுலுக்கு கட்டி வைப்போம் என்றால், ஷீனா இடையிலே புகுந்து.....
சின்ன வயதில் இருந்து அவளை எனக்குத் தெரியும். தனக்குத் தேவையானதைப் பெற கொலையும் செய்வாள். விதியை அவளிடம் இருந்து காப்பாத்த வேண்டும்...
தனது மகளுக்காக இணங்கினார் விதியின் தந்தை.
ஷீனாவை அழைத்தார் தாய், ஊருக்கு போய் வருவோம் வா...
போகும் வழியில், இரண்டாவது கணவன் ஏறிக் கொண்டார். கழுத்தை நெரித்து கொலை செய்து, காட்டுக்குள் பெற்றோல் ஊத்தி எரித்து விட்டனர்.
ஆனால், காரின் டிரைவர் கூட இருந்தார். பெரிய, மிகப் பெரிய இடம்..... வாயைத் திறந்தால் நமக்கும் இதே கதி தான்....
பணத்தினை வாங்கிக் கொண்டு கமுக்கமாக இருந்து விட்டார். இரண்டு.... மூன்று வருடங்கள் ஆகி விட்டன.
அதற்குள் பீட்டர் முகர்ஜியுடன் சேர்ந்து வேறு நிறுவனம் தொடங்கி, அதுவும் பணத்தைக் கொட்டியது. ராணி வந்த நேரம், நல்ல நேரம், அக மகிழ்ந்தார் முகர்ஜி.
தங்கை (மகள்) தன்னுடன் கோபித்துக் கொண்டு அமெரிக்கா போய் விட்டார் என்று சொல்லி விட்டார் அம்மா... ச.. சா ... அக்கா .
இடையே, கொலை நடந்திருக்கும் என சந்தேகம் கொண்டு, மிகைல் பணம் கேட்டு 'அக்காவை' நச்சரிக்க, உன்னையும் போடுவது பெரிய வேலை இல்லை, ஓடிப் போடா 'தம்பி' என்று எச்சரிக்கை.
மிகைல்
எல்லாமே நல்லாத் தான் போய்க் கொண்டிருந்தது இந்திராணிக்கு.
டிரைவருக்கு அப்பப்போ பணம் வந்து கொண்டிருந்தது. அவர் நண்பர்களுக்கு அப்பப்போ பார்ட்டி வைத்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் பப்பில் நல்ல மப்பில், நண்பர்கள் கேட்டார்கள்... 'ஏதோ பெரிய சுறா சிக்கி விட்டது என்று கதை விடாதே, தூள் பிசினஸ் ஏதாவது செய்கிறாய் எண்டால் சொல்லுப்பா, இந்த மாதிரி காசு பிளங்குகிறதே '....
அவ்வளவு தான் வெகுண்டு போன டிரைவர்தம்பி, "யார் என்று கேட்காதீங்க, ஆனா... ஒரு பெரிய புள்ளி கொலை செய்த கதை"... இது என்று சொல்ல....
நம்ம ராணியின் துரதிஸ்டம், அங்கே அந்த டிரைவரின் கதிரைக்கு பின்னால் , வேறு ஒருவரை பின் தொடர்ந்து வந்து இருந்த, போலிஸ் உளவாளியின் காதில் இது விழுந்து விட்டது.
டிரைவரை பொலிசார் ரகசியமாக மோப்பம் பிடித்து, பின் தொடர்ந்து, யார் அவர் உடன் தொடர்பில் இருக்கும் பெரும் புள்ளி என கண்டு கொண்டனர்.
அதே வேளை இந்திராணி, கணவருடன் (மூன்றாவது) ஸ்பெயின் நாட்டில் விடுமுறை, வியாபார பயணத்தில் இருந்தார்.
திரும்பியதும் கைது செய்யப் பட்டு உள்ளார்.
தினம் ஒரு திருப்பங்களுடன் இந்த கொலைக் கதை இந்தியர்களை அதிர வைத்துக் கொண்டிருகிறது.
இந்த 'பெரும் பொய்' ஒன்றுடன் வாழ்ந்து இருக்கிறோமே என்று அதிர்ந்து போய் இருக்கிறார் அப்பாவி பீட்டர் முகர்ஜி.
நல்ல காலம், அம்மணிக்கும், முகர்ஜிக்கும் பிள்ளைகள் இல்லை.
பணத்துக்காக இந்திராணி செய்த செயல்களால், இந்திய பணக்கார வர்க்கமே அதிர்ந்து போய் கிடக்கிறது.
அதே வேளை , மகள் அமெரிக்காவில் தான் இருக்கிறார். அவரது காதலுக்கு தடை செய்து, வேறு ஒருவரை கட்டி வைத்து, அமெரிக்கா அனுப்பிய கோபத்தில், தொடர்பு கொண்டு தான் உயிருடன் இருப்பதாய் சொல்லி தன்னைக் காப்பாத்த மறுக்கிறாள் என்று போலிசுக்கு 'வேறு கதை' விடுகிறாராம்.
ஆனால் , டிரைவரும், இரண்டாவது கணவரும் உள்ளுக்குள் இருப்பதால், இவரது கதை பொய் என்று பொலிசாருக்கு தெரிகிறது.
நாளை என்ன புதுக் கதை வருகிறதோ தெரிய வில்லை.
அழகு என்றுமே ஆபத்தானது என்று பீட்டர் முகர்ஜி அனுபவ பூர்வமாக அறிந்திருப்பார் .
பீட்டர் முகர்ஜி & இந்திராணி
மிகைல், இந்திராணி, பீட்டர் முகர்ஜி, ராகுல் & ஷீனா