Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ராஜன் விஷ்வா

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    5
    Points
    664
    Posts
  2. விகடகவி

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    2
    Points
    2978
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    33600
    Posts
  4. seyon yazhvaendhan

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    2
    Points
    391
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/17/15 in Posts

  1. மாவீரர் தினம் 2015 நினைவுகளும், நிகழ்வுகளும் நம் தேசத்திட்காய் உயிர்நீத்த உறவுகளுக்கு மரியாதை செலுத்துமுகமாக இத்திரியை ஆரம்பித்துவைக்கின்றேன். வித்தாகிப்போன மாவீரச்செல்வங்கள் பற்றிய குறிப்புக்கள், மாவீர்களுக்குரிய சிறப்புப்பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் 2015 மாவீரர்தின நிகழ்வுகளை இத்திரியில் என்னுடன் இணைந்து பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். இம்முறை யாழில் மாவீர்கள் தினத்தை பற்றிய கதையே இல்லாதது பெரும் வருத்தத்தை கொடுக்கின்றது. ------- நன்றி
  2. யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச மேலாளரைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு வகையான பார்வையைக் கொடுக்கவில்லை. அமைதியும் கவர்ச்சியும் கொண்ட அவரது தோற்றத்தைப் போலவே அவரது அணுகுமுறைகளும் அமைந்திருந்தன. 8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் செயலாணை(நிர்வாக) ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன. யாழ். இந்துக் கல்லூரியில் மாணவ தலைவர்கட்கு முதன்மை மாணவத் தலைவனாக இருந்த ராதா வகுப்பறைகளின் நடைபாதைகளில் நடந்து வந்தாலே மாணவர்கள் பள்ளி முதல்வரைக் கண்டதுபோல் அமைதியாகி விடுவார்கள். இது ராதா மாணவப் பருவத்து நினைவுகள். கல்வி, விளையாட்டு, செயலாணை என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ராதா தனது கல்லூரி வாழ்வை முடித்துக் கொண்டு கொழும்பில் வைப்பகம் ஒன்றில் பணிபுரிந்தார். 1983ல் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்களினால் கண்ட ஹரிச்சந்திரா உடனடியாகத் தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார். அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் ஒருங்கே கொண்ட ஒரு வித்தகனை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது. இந்த வேறுபாடுடைய வீரனை, நடமாடும் பல்கலைக் கழகத்தினை இனங்கண்டுகொண்ட தேசியத்தலைவர், ராதாவின் ஆற்றலும், ஆளுமையும் அவரைப் போல பல நூறு போராளிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டு பயிற்சி முகாமினை நடாத்தும் பணியினை ராதாவிடம் ஒப்படைத்தார். அந்தப் பல்கலைக் கழகத்திடம் இருந்து விடுதலைப்புலிப் போராளிகள் படித்துக்கொண்ட பாடங்கள் தான் எத்தனை? எத்தனை? பயிற்சி முகாமில் புலிக்கொடி பறக்கிறது. போராளிகள் அணிவகுத்து நிற்கின்றார்கள். இப்போது கல்லூரியில், வீதிகளில் கண்ட ஹரிசந்திராவை அங்கே காணமுடியவில்லை. ஆங்கிலப் படங்களில் வெறுமனே வேசமிட்டு வரும் ஒரு பெரிய படை மேலாளரைப்போல் ஒருவனை அங்கே காணமுடிந்தது. "Scout Attention" என்ற மேலாண்மை அறைகூவலும், உருமறைப்பு உடைகள் உரசும் சத்தத்துடனான படைய நடையும் அவருக்கே உரியவை. பயிற்சிக் கழகத்தில் ராதாவைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவ்வளவு கடுமை, மிக வேகம்.அதுதான் ராதா. ராதா அசைக்க முடியாத தன்னம்பிக்கை மிக்கவர். அதேபோல் தலைவரும் ராதா மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் போராளிகள் கடுமையான கொமாண்டோ பயிற்சிகளை பெறும்போது அவர்களின் பின்னே போலிக்குண்டுகளைப் பயன்படுத்தி போர்க்கள நிலைமையைப் போன்ற மனமயக்கத்தை உருவாக்கும் போர்ப்பயிற்சி மரபுமுறை. ஆனால் ராதா இந்த மரபுகளை மீறினார். தான் போலிக்குண்டுகளை பயன்படுத்த விரும்பவில்லை, உண்மையான குண்டுகளை பயன்படுத்தப் போவதாக ராதா தலைவரிடம் இசைவு வேண்டினார். ராதாவின் திறமையிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் ராதாவிற்கு இசைவு கொடுத்தார். "படுத்து நிலையெடு" (Down Position) இது ராதாவின் கட்டளை. பயிற்சி பெறும் போராளிகள் வேகமாக நிலை எடுத்து நகர்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னே நின்ற ராதா எம்-16 ரகத் துப்பாக்கியினால் அவர்களின் பாதணிகளைக் குறிபார்த்துச் சுடுகிறார். உண்மையான ரவைகள் பாதணிகளில் பட்டும் படாததுமாய் செல்கின்றன. அருகே நின்று பயிற்சியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொன்னம்மான் சொல்கிறார் "அது தான் ராதா". அன்றைய பயிற்சி முடிந்து போராளிகள் தங்கள் தங்குமிடங்களுக்கு செல்கின்றார்கள். அங்கே தங்களது இரும்பிலான அடிப்பாகங்களைக் கொண்ட பாதணிகளைக் கழற்றிப் பார்க்கிறார்கள். சிலரது பாதணிகளை எம்-16 ரவைகள் துளைத்திருந்தன. இந்த ஓய்வு நேரத்தில் அந்த ”மேலாளரைக் ராதா”வைக் காணவில்லை. ஒரு நல்ல நண்பனை அங்கே காணமுடிந்தது. ”என்ன ஐ சே கஸ்டமா இருக்கா, துன்பந்தான்”. இப்படிக் கதைப்பது ராதாவின் வழமை. பள்ளிக்கால காதல் கதை கேட்கும் அளவிற்கு பழகுவார் ராதா. ஒரு மாலை நேரம் பயிற்சி முடிந்து எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு போராளி தனது பள்ளிக்காதலியின் பெயர் இராசாத்தி என்றும் அவளைப் பற்றிய கதைகளையும் ராதாவோடு கதைத்திருந்தான். சிறிது நேரத்தில் முகாமின் ஒலிபெருக்கி "இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" என்ற பாடல் மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி ராதா வேறுபாடானவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மிசையத்தில்(மேசை) நூல்கள் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு. அடர்ந்த காடு குறிப்பிட்டளவு போராளிகள், பொன்னம்மான், விக்டர் உட்பட சில தளபதிகள் அவர்களோடு தலைவர். இவர்களுடன் கையில் தொலைத் தொடர்பு கருவியுடன் ராதா. எல்லோரும் மிகுந்த மகிழ்வோடு தலைவரும், பொன்னம்மானும் கூறும் கதைகளைக் கேட்டபடியே காட்டின் வழியே நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரோடும் சேர்ந்து சிரித்துக் கதைத்தபடி நடந்து கொண்டிருந்த ராதா திடீரென "Down Postion" என உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். தலைவர் உட்பட எல்லோரும் கட்டளைக்குப் பணிந்தார்கள். தலைவனும் தளபதிகளும் உள்ளிருந்து வெளிநோக்கி வியூகம் அமைக்குமாறு சைகையால் கட்டளை கொடுத்தார்கள். அதுவரை எதுவுமே நடக்கவில்லை. சிறிது சிறிதாக கேட்ட ரீங்கார சத்தம் ஒன்று மட்டும் கூடிக்கொண்டு வந்தது. அதுவரை ராதாவைத் தவிர எவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் காட்டுத் தேனீக்களின் பெரிய கூட்டமொன்று பேரிரைச்சலுடன் எல்லோரையும் கடந்து சென்றது. தேனீக்கள் கண்களில் இருந்து மறைந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். பொன்னம்மானும் தலைவரும் ராதாவைப் பார்த்தார்கள். " காடு பற்றிய புத்தகம் ஒன்றில் படிச்சனான் அண்ணை. சத்தம் சிறிதாக இருக்கும் போதே இதுவா இருக்குமோ என்று நினைச்சுத்தான் கட்டளை (Command) கொடுத்தனான். அதுபோலவே நடந்துவிட்டது. இந்தத் தேனீக்கூட்டம் பாதை மாறாதாம் வந்த வழியே பறக்குமாம். நாங்கள் கீழே படுக்காமல் நடந்து வந்திருந்தா இண்டைக்கு எங்களிலே கனபேருக்குக் கண் பறந்திருக்கும்" என்று ராதா கூறி முடித்தார். ராதாவைத் தொடர்ந்து பொன்னம்மான் போராளிகளைப் பார்த்து " இண்டைக்கு இதிலை இரண்டு விசயம் படித்திருக்கிறியள். ஒரு திடீர் கட்டளை வந்தால் எப்படி நிலை (position) எடுக்கிறது ஒன்று கட்டளை (order) வந்தால் கேள்வி கேட்கக் கூடாது எண்டது இரண்டாவது. ஏன் படுக்க வேணும் எதற்குப் படுக்க வேணும் என்று யாரும் கேட்டுக் கொண்டு நின்றிருந்தால் இப்ப கண் போயிருக்கும் Down என்றால் Down தான்" என்று சொல்லிச் சிரித்தார். இவ்வாறு எண்ணற்ற திறமைகளைக் கொண்டிருந்த ராதா தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற சிறப்புக் கொமாண்டோ அணியிற்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியாளனாக இருந்த ராதா லெப்.கேணல் விக்டருடன் மன்னார்க் களம் நோக்கிச் சென்று சாதனைகள் செய்யத் தொடங்கினான். மன்னார் காவல்துறை நிலையத் தாக்குதலில் ராதாவின் திறமையை விக்டர் பல இடங்களிலும் குறிப்பிடுவது வழக்கம். விக்டர் வீரச்சாவடைந்த பின் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட "பவள்" கவச ஊர்தியைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார். கேணல் கிட்டு அவர்கள் காலை இழந்த பின் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி படைமுகாம், மயிலியதனை படைமுகாம், காங்கேசன்துறை காபர்வியூ படைமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார். பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் பல்கலைக்கழகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால்..... இது தலைவர் உட்பட எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. "சண்டைக்கு எண்டு போய் சாகிறதெண்டால் ஐ சே எங்களுக்கெண்டு ஒரு றவுண்ஸ் அல்லது ஓர் செல் துண்டு இருக்கு அது வந்தால் தான் சா வரும். இல்லையெண்டால் ஒரு போதும் சாகேலாது I say" இது ராதா போராளிகளைப் பார்த்து அடிக்கடி கூறும் வசனம். ஆம் அவர் கூறியது போல் 20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள பல தாண்டிய போதும் அவரது நினைவுகள் எம் மண்ணில் இருக்கும். ராதாவின் சாதனைகளில் இன்னும் ஊமையாய் இருக்கும் உண்மைகள் சில, எம் தேசம் மீண்ட பின்பே பேசப்படும். http://www.veeravengaikal.com/index.php/commanders/16-ltcolonel-ratha-kanagasabapathy-harichandra
  3. மனங்களில் என்றும் மறக்காத மேஜர் சிட்டு எந்நிலைவரிலும் இலக்கை நோக்கியே எமது பாதையில் கால்கள் நடக்கும் இன்னொரு முறை நான் பிறக்கப் போவதுமில்லை. ‘இப்பிறப்பில் என் அன்னை மண்ணை மீட்கும் போரில் என்றும் பின்வாங்கப் போவதுமில்லை’ என்ற இலட்சிய வேட்கையுடன் வீர களமாடிய வேங்கை மாவீரர்களின் வரிசையில் மேஜர் சிட்டுவும் ஒருவன்….! இன்று இவனது பிறந்த நாள் வாழ்த்துக் கூற இவன் இன்றெம் அருகிலில்லை என்ற உணர்வு வலித்தாலும் எங்களுடன் வாழும் கலைஞனாய் எங்களோடு சிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான். தாயக விடுதலைக்காய் போராடத் தன்னை அர்ப்பணிக்க இவன் புறப்பட்ட நாளைத் தொடர்ந்து 1990,1991,ஆண்டுகளில் அரசியல் பள்ளிகளில் உன்னோடு பழகும் வாய்ப்பு மட்டுவில்,இருபாலை அரசியல் பள்ளிகளில் என்றும் நமது பசுமையான நிகழ்வுகள் …….. இங்கு தான் உனது அறிவு,திறன்,ஆற்றல் புடம் போட்டு எடுக்கப்பட்டன. தலைமைத்துவத்தின் அத்தனை பண்புகளும் கலைஞனாக,கவிஞனாக,பாடகனாக நடிகனாக,பேச்சாளனாக,அறிவிப்பாளனாக பரப்புரையாளனாக சிறந்த நிர்வாகியாக இனங்காணப்பட்டவன் நீ. கலை பண்பாட்டு கழக பொறுப்பாளனாக யாழ் மாவட்டத்திலும் தமிழீழ தேசியதின்குரலாம் புலிகளின்குரல் வானொலியின் நிர்வாகியாகவும் அரசியல் பணியை செம்மையாய் செய்த போராளியாய் எங்களோடு பயணித்தாய்…….. ‘மக்களின் துன்பதுயரங்களில் பங்கு கொண்டு அவர்களது துன்பங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் பணி’ என்ற தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தாய்…… மக்கள் மனங்களில் மனம்நிறந்த போராளியாக இடம்பிடித்தாய் 1997ம் ஆண்டு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம் வன்னிப்பெரு நிலப்பரப்பை துண்டாட தீவிரமாக போர்தொடுத்துக் கொண்டிருந்தது எதிரிப்படை …………. மாங்குளம் சந்தியைக் கைப்பற்றுவதற்காக பல பகுதிகளால் புதிய போர்முனைகளைத் திறந்து முன்னேற முயற்சித்தது பெரும்படை. மறுபுறம் புலிகளின் அணியும் புதிய முனைகளில் முன்னேறி இராணுவத்தினர் மீது உக்கிரமான மறிப்புத்தாக்குதலையும் முன்னெடுத்தது… ஆனால் தினசரி வீரச்சாவும் காயப்பட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றதால் படையணிகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து கொண்டிருந்தது…. மீண்டும் மீண்டும் காயம் பட்டு காயம் ஆறி முழுமையாக குணமடைவதற்கு முன் களமுனைக்கு வந்து பணியாற்றியவர்கள் பலர் அதில் சிலர் வீரச்சாவடைந்தோரும் பலர். நிர்வாகத்திலிருந்தும் முடிந்ததளவுக்கு ஆட் குறைப்புச்செய்து முன்னரங்க நிலைபோட்டு மறிப்புச்சண்டை செய்வதற்கு ஆட்கள் அனுப்பப்பட்டனர் இவ்வாறான காலகட்டத்தில் தான் மேஜர் சிட்டுவும் களமுனைக்கு செல்கின்றான் சென்ற காலப்பகுதியில் இருந்துதான் 01ஃ08ஃ1997ல் வீரச்சாவடையும் ஓமந்தை ஊடறுப்பு சமர்க்களம் வரை போராளிகளின் மத்தியில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை மாற்றியமைத்தான் ஆம்… மக்களுக்காகவும் தேசத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்தான் மேஜர் சிட்டுவாக இன்றும் என்றும் மக்களின் மனங்களில் வாழ்கின்றான். ‘வருக எங்கள் மக்களே வெற்றி பெறுவதுதெங்கள் பக்கமே’ உனது கானம் இன்றும் எங்கள் உள்ளங்களில்…… வாழ்த்துக்கள் சிட்டு வாழ்த்துவதற்கு நாங்கள் மட்டும் இருக்கிறோம் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்ள நீயிங்கில்லை. வெல்லுவோம் எங்கள் தேசத்தின் விடுதலையை அன்று வீழ்ந்தோரின் கனவுகளும் நனவாக. - போராளி தணிகைக்குயில் - http://chiddu.com/chiddu.196.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.