Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3034
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88827
    Posts
  3. Cruso

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1887
    Posts
  4. நியானி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    5
    Points
    3076
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/16/23 in Posts

  1. இனி என்ன நடக்கலாம்? அதற்கு முன் - கவனிக்க. இந்த XRP பங்கா, நாணயமா என்ற குழறுபடி அமெரிக்காவில் மட்டும்தான். யூகே, ஈயூ, சிங்கப்பூர் என பல நாடுகள் கிரிப்டோ கரன்சியை பங்கு அல்ல என ஏற்றுகொண்டு விட்டன. 1. ரிப்பிள் பெரு நிறுவனங்களுக்கு விற்றது பங்கு என தீர்ப்பு ஆனது என முன்னர் பார்த்தோம் அல்லவா? ஆகவே இனி ரிப்பிளால் அப்படி விற்பதும் முடியாது. ஆனால் பெரு நிறுவனங்கள் வாங்கினால்தானே XRP விலை கூடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ரிப்பிளிடம் நேரடியா வாங்க முடியாவிடில் பெரு நிறுவனங்கள் எங்கே XRP ஐ வாங்கலாம்? 1. வெளிநாடுகளில் (பின்னர் தம் அமெரிக்க கணக்குக்கு மாற்றலாம்) 2. அல்லது அமெரிக்காவில் வாங்குவதாயின் எம்மை போல சாதாரண சில்லறை வர்தகர்களிடம், அமெரிக்க கிரிப்டோ எக்ஸ்சேஞ்களில். உண்மையில் இப்படி நடந்தால் - சில்லறை XRP வைத்திருப்போர் காட்டில்- பண மழை கொட்ட வாய்பிருக்கிறது. 2. பெரு நிறுவனங்கள் programic sales இல் வாங்கலாம். 3. Escrow என்று மாதாதந்தம் தானியங்கியாக XRP பெருந்தொகை சந்தைக்கு திறந்து விடப்பட்டு, சிறிது நேரத்தில் மீண்டும் உபரி XRP பூட்டப்படும். இந்த முறை தொடரலாமா இல்லையா என்பதில் யாருக்கும் தெளிவில்லை. ரிப்பிளின் முதன்மை தொழிநுட்ப அதிகாரி கூட - இதை நாம் இன்னும் ஆராய்ந்து கொண்டே இருக்கிறோம் என்கிறார். இந்த முறை தடைப்பட்டாலும், XRP விலை சடுதியாக கூட வாய்ப்புண்டு. ஆனால் போதிய அளவு XRP circulation இல் இல்லாவிடில் அது பரிவர்த்தனையை கடுமையாக்கும், நேரம் எடுக்கும் இது XRP யின் விலையை குறைக்கும். 4. வழக்குக்கு என்ன நடக்கும். 785 மில்லியன் வித்த வழக்கு - தன்பாட்டில் நடக்கும். இரு பகுதியும் சமரசமாய் போகவும் கூடும். ஆனால் அது ரிப்பிளின் முந்தைய நடவடிக்கை பற்றியது. இதனால் XRP விலை அதிகம் பாதிக்கப்படாது. 5. XRP பங்கு இல்லை, மற்றும் ஏனைய 3 முகாந்திரங்களில் - கிடைத்த தீர்ப்பை எதிர்த்து SEC அடுத்த appellate court, அதன் பின் Supreme Court போகலாம். ஆனால் பல சட்ட வல்லுனர் கருத்துப்படி அப்பீல் வெல்வது கடினம் என்கிறார்கள். நீதிபதியின் காரணங்கள் காற்றுபுகாத அளவுக்கு இறுக்கமாகவே எனக்கும் படுகிறது. அப்படியே அப்பீல் செய்தாலும் அதில் முடிவு வர 2025 க்கு மேல் ஆகும். அதற்குள் ஆட்சி மாறலாம். பல விடயங்கள் நடக்கலாம். காங்கிரஸே சட்டம் மூலம் - கிரிப்டோவை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதுவரை பிட்காயினும், XRP யும் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோ சொத்துக்களாய் இருக்கும்(ஏனைய பல காயின்கள் மீது SEC கண் வைத்துள்ளது) . 6. அதே போல் இந்த தீர்ப்பு எதூரம் தவிர்ந்த ஏனைய கிரிப்டோக்களுக்கு ஒரு நல்ல செய்தியே. அதேபோல் அங்கீகரிக்கப்படாத பங்கு விற்பனையில் ஈடுபட்டதாக SEC வழக்கு போட்டுள்ள Coinbase போன்ற எக்ஸ்ச்செஞ்சுகளுக்கும் இது நல்ல செய்தியே. 7. மிக முக்கியமாக இப்போ இருக்கும் சட்ட ஆசீர்வாதத்தை (regulatory clarity) பயன்படுத்தி பெரு நிறுவனங்களிடையான உலக நிதி பரிவர்தனை வியாபாரத்தை XRP கைப்பற்றினால் ! இதற்கு கணிசமான வாய்ப்பு உள்ளது.
  2. XRP வழக்கு - ஒரு பின்னோட்டம் கலைச்சொற்கள்: 1. பாதுகாப்பு-முதலீடு -security - இலகுவாக விளங்கி கொள்ள ஒரு வியாபாரத்தின் பங்குகள் - பாதுகாப்பு-முதலீடுகள். 2. நாணயம் - currency வழக்கின் பின்புலம் நிதி வர்த்தகம் பொதுவாக மூவகைப்படும். 1. பாதுகாப்பு முதலீடுகள் shares, security tradings - உதாரணம் ஒரு நிறுவனத்தின் பங்குகள். 2. நாணய வர்த்தகம் currency trading - உதாரணம் டாலர் வர்த்தகம், பிட்காயின் வர்த்தகம். 3. நுகர்பொருள் வர்த்தகம் - commodity trading - உதாரணம் - பெற்றோல், கோதுமை. கடைசி இரண்டையும் விட பாதுகாப்பு-முதலீடு வர்த்தகம், பங்கு விற்பனை என்பன அதிகம் அரசால் கண்காணிக்கப்படுவன. அதற்கு பல விதிமுறைகள் உண்டு. இதை கண்காணிக்கும் அமெரிக்க அரச நிறுவனம் Securities & Exchanges Commission. சுருக்கமாக SEC. என்ன வழக்கு? XRP என்பது ஒரு கிரிப்டோ சொத்து crypto asset. Ripple என்பது ஒரு நிறுவனம். இதன் உலகளாவிய, மிக விரைவான நாணய பரிவர்த்தன வலையமைப்பு - Ripple net. இந்த பரிவர்தனையில் பயன்படுத்த ரிப்பிள் உருவாக்கிய கிரிப்டோ குற்றி (crypto coin) தான் XRP. XRP யை ரிப்பிள் விற்பனை செய்தது ஒரு வகை - பங்கு/பாதுகாப்பு/security வர்தகம் என்று கூறி SEC ரிப்பிள் நிறுவனம், அதன் நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு போட்டது. XRP வழக்கில் XRP யின் விற்பனை ஒரு பங்கு விற்பனையா? இல்லையா என்பதையே நியூயார்க் சேர்கிட் நீதிபதி டொரேஸ் முடிவு செய்ய வேண்டி இருந்தது வழக்கின் முகாந்திரம் என்ன? SEC பின் வரும் முகாந்திரங்களில் வழக்கு தொடர்ந்தது 1. XRP காயினை, institutional investors எனப்படும் பெரிய நிதி நிறுவனங்களுக்கு ரிப்பிள் 785 மில்லியன் அளவில் விற்பனை செய்தத்து- இது ஒரு பங்கு வர்த்தகம். 2. XRP யை programic sales எனப்படும், தானியங்கி முறையில் ரிப்பிள் விற்றது. இதுவும் ஒரு பங்கு வர்த்தகம். 3. XRP ஐ - ரிப்பிள் ஊழியர்கள் வாங்கி விற்றனர். இதுவும் ஒரு பங்கு வர்த்தகம். 4. XRP ஐ, கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில், சில்லறை வர்தகர்கள் வாங்கி விற்றனர். இதுவும் ஒரு பங்கு வர்த்தகம் (secondary sales). தீர்ப்பு என்ன? மேலே குறிப்பிட்ட 4 முகாந்திரங்களில் கடைசி 3 இல் XRP ஒரு பங்கு/பாதுகாப்பு இல்லை என தீர்ப்பு வந்துள்ளது. முதலாவது முகாந்திரமான ரிப்பிள், நிறுவனமயபட்ட முதலீட்டாளருக்கு விற்ற 785 மில்லியன் பெறுமதியான XRP பரிவர்த்தனை மட்டுமே பங்கு வர்த்தகம் என நீதிபதி கூறியுள்ளார். தீர்ப்பின் அடிப்படை என்ன? Howey என்ற ஒரு வழக்கே, எது பங்கு வர்த்தகம், எது பங்கு வர்தகம் இல்லை, என்ற வரையறையை தருகிறது. அதிகம் சட்ட நுணுக்கத்துள் போகாமல் சொல்லுவதாயின் - ஒரு விடயம் பங்கு வியாபாரமாக கருதப்பட - அதை வாங்குபவர், அதை விற்பவர் அல்லது அவரின் முகவர் இந்த பொருளை லாபமீட்ட வைக்க உழைப்பார் என்ற உறுதி மொழி அடிப்படையில் அந்த பொருளை வாங்கி இருக்க வேண்டும். அதாவது நான் இன்று ஒரு XRP ஐ. 1 பவுனுக்கு வாக்கினால், ரிப்பிளின் முயற்சியால் நாளை அது 10 பவுனாகும் என நம்பி நான் வாங்கினால், எனக்கும் ரிப்பிளிக்கும் இடையில் ஒரு முதலீட்டு ஒப்பந்தம் உருவாகி விடும் (investment contract). அது பங்கு வர்த்தகம் ஆகும். XRP வழக்கில் ஒரே ஒரு விடயத்தை தவிர மிகுதி 3 விடயங்களில் ripple நிறுவனம், அதன் இரு நிர்வாகிகள் சார்பாகவே தீர்பு வந்துள்ளது. அந்த ஒரு விடயம் யாதெனில்: ரிப்பில், நிறுவனமயப்பட்ட பெரு நிதி நிறுவனங்களுக்கு XRP விற்ற போது அவர்கள் ரிப்பிளின் முயற்சியை நம்பியே அதை வாங்கினர். ஆகவே இது மட்டுமே - பங்கு வர்த்தகம். இதில் ஈடுபட்டமைக்காக, ரிப்பிள் அபராதம் கட்ட வேண்டி வரும். இரு நிர்வாகிகள் தமது பங்கு பற்றி ஜுரிகள் முன் சிவில் வழக்கை அடுத்த வருடம் சந்திப்பர்கள். ஆனால்…. மிக தெளிவாக அதன் தனிபட்ட நிலையில் XRP ஒரு பங்கு அல்ல என நீதிபதி கூறியுள்ளார். அதேபோல் விற்பது ரிப்பில்தான் என தெரியாமல் வாங்கும் வர்தகங்களான, ஊழியர்களிடையான XRP வர்த்தகம், தானியங்கி வர்த்தகம் programic sales, சில்லறை வர்த்தகம் என்பன பங்கு வர்த்தகம் இல்லை எனவும் கூறியுள்ளது. ஆகவே, XRP ஒரு பங்கு இல்லை (ரிப்பிள் தானான தேடி போய் விற்ற (promote) XRP மட்டுமே பங்கு என கூறியதன் மூலம் வழக்கின் அடிப்படை புள்ளியில் SEC இற்கு எதிராகவே இந்த தீர்ப்பு வந்துள்ளது. ஆகவே SEC இற்கு தோல்வி. ரிப்பிள், சில்லரையாக XRP வைத்திருப்போருக்கு பெரிய, கொண்டாடவேண்டிய வெற்றிதான். XRP/டாலர் விலை 0.47 இல் இருந்து 0.80 க்குமேல் போய் இப்போ 0.72 இல் நிற்பதே இதற்கான சாட்சி எனலாம். (அடுத்த பதிவில் இனி என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் ஜோசியம் போல ஆராய்ந்து பார்க்கலாம்).
  3. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை. இருட்டிலும் ஒரு அழகு.
  4. சின்ன வண்ண ஓவியம் யார் வரவைத் தேடுது?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.