செய்திகள்
நாளேடு: ஈழநாதம்
திகதி: 12/07/1990
பக்கம்: 1
கல்முனையில் இராணுவம் - ஜிகாத் காட்டுத் தர்பார்; 31 தமிழர் படுகொலை
(கல்முனை)
கல்முனையில் நேற்று முன்னம் மாலை முப்பத்தியாரு தமிழர்களைச் சிறிலங்கா இராணுவத்தினரும் ஜிகாத் இயக்கத்தினரும் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் கொலை செய்யப்பட்டவர்கள் தீ வைத்துக் கொழுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைகளில் கறுப்புச் சட்டைகளுடன் இருந்த சிறிலங்கா அரசின் மறைமுக கொலைகாரப் படையினர் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
டாக்டர் சண்முகநாதனும், அவரது மனைவியும் இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றார்கள்.
அதேவேளை கல்முனை வாடிவீட்டிற்கு அருகிலிருந்த வீடுகளுக்குச் சொந்தமான தமிழர்கள் கொலை செய்யப்பட்டு வீடுகள் யாவும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அத்தோடு சிறிலங்கா இராணுவத்தினர் அங்கு முகாம் அமைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கல்முனைக்கும் நிலாவரைக்கும் இடையில் தமிழர் எவரும் இல்லை என்றும், அவர்கள் ஜிகாத்தால் துரத்தப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
*****