Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. முதல்வர் @ஏராளன் க்கு வாழ்த்துக்கள். நாளைக்கும் நீங்களே முதல்வர்.
  2. https://mob.touchcric.com/#video களவாக போட்டிகள் பார்ப்பவர்களுக்காக முக்கியமாக கணனியில் பார்க்கவும்.
  3. எனது பக்கத்து வீட்டு குடும்ப நண்பர் ஊர்போய் கிளிநொச்சியில் நிற்கிறார். இரவு கதைக்கும்போது கிளிநொச்சி சந்தைக்குள் நின்றபோது இரண்டு போக்குவரத்து பொலிசார் பாய்ந்து விழுந்து ஓடி ஒருவரைப் பிடித்துக் கொண்டு ஓடினார்களாம். என்ன பிரச்சனை என்று கேட்டால் நிற்பாட்டாமல் ஓடிவந்து வியாபாரி போல சந்தைக்குள் ஒழிந்திருக்கிறார். மேலே உள்ள மீம்சும் இரவு கதைத்ததும் ஒத்துப் போகிறது.
  4. பாகிஸ்தான் கோச் @ரசோதரன் தூக்கத்தில் இருந்ததால் துல்லியமான பந்துகளை வீச சொல்லிக் கொடுக்க முடியவில்லை. துடுப்பாட்டத்தின் போது மைதானத்தில் இருந்து உற்சாகப்படுத்துவார்.
  5. எனக்கும் சாதாரண நேரங்களில் எதுவும் வித்தியாசமே தெரியாது. படங்கள் ஏதாவது பார்க்கும் போதுதான் பிரச்சனைகள். வீட்டில இதைப்பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை. நீங்கள் சொல்வது போலவே நானும் எண்ணுவதுண்டு. ஆனாலும் சந்தர்ப்பங்கள் அம்மா எண்ண வைத்துவிடும்.
  6. பரவாயில்லை நன்றாக தூங்குங்கள். ஆனாலும் பரிசில்கள் கொடுக்கும் நேரத்துக்கு எழும்பி வந்தால்ச் சரி. ஊரில் திருவிழாக்களில் சிலர் தூங்குவார்கள். சின்னமேளம் என்றவுடன் துடித்து பதைத்து எழும்பி இருப்பார்கள்.
  7. அடிபாவி குடும்பமாக உள்ளுக்கு இருக்கிற எண்ணமோ? ஆண்,பெண் என்று பிரித்தே விடுவார்கள்.
  8. ஏராளன் அம்மாவுக்கு பக்க பலமாக இருங்கள். அம்மாவின் கவலையும் நியாயமானதே. காலத்தின் கொடுமை.
  9. ஒதுக்கப்பட்ட நிதிகளை ஒழுங்காக ஒற்றுமையாக செலவு செய்யுங்கள். ஒவ்வொன்றும் மக்களை சென்றடையட்டும்.
  10. டெல்ரா கொனக்னசும்(Delta Conection0 அமெரிக்கன் ஈகிளும்(American Eagle) கண்ணில காட்டக் கூடாது.
  11. எடுப்பது என்று முடிவெடுத்தால் எதற்குள் எடுத்தால் என்ன? நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.
  12. உண்மை தான் குமாரசாமி தவறவிடும் எந்த சந்தர்ப்பமும் திரும்ப கிடைக்கப் போவதில்லை. 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் சிறிது மனதை தேற்றக் கூடியவாறு உள்ளது. போரின் தாக்கம் என்றாலும் சிலவேளை அதையும் ஏற்க மறுக்கிறது. பெற்றோர்கள் இருந்த காலத்தில் நீங்கள் இறந்த பின்பு எந்த கொண்டாட்டமும் இருக்காது.இருக்கும் போதே சந்தோசமாக இருங்கள்.ஏதாவது செய்ய வேண்டுமென்றால் சொல்லுங்கள் என்று தேவைகள் வரும்போது சொல்லிக் கொள்வேன்.
  13. ஓணாண்டி உங்கள் முடிவு நல்ல முடிவு. நானும் அமெரிக்கா போகும்போது எவ்வளவு சீக்கிரம் திரும்ப வர இயலுமோ எவ்வளவு சீக்கிரம் ஊர் திரும்ப வேண்டும் என்றே எண்ணினேன். உங்களுக்கு காலூன்றக் கூடியளவு போதிய கால அவகாசம் கிடைத்தது. நான் வந்து இரண்டே வருடம்.hயணம் செய்யக் கூடிய நிலையிலும் இருக்கவில்லை. என்ன நடந்ததென்று முழுமையாக அறியவே பல நாட்களாகி விட்டது. ரசோ அம்மாவின் இழப்பிற்குப் பின்பு ஒரு படமோ நாடகமோ எந்த ஒரு சோகக் கட்டம் வந்தாலும் இப்போது வரை கண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். குடும்பமாக இருந்து படம் பார்த்தால் திரையில் யாராவது அழுதால் மனைவி பிள்ளைகள் உடனே என்னைத் தான் திரும்பி பார்ப்பார்கள். அந்தளவுக்கு ஒரு அழுகுனியாகிப் போனேன்.
  14. யுவர் ஆனர் விஜயலட்சுமிக்கு சீமான் முதல் கணவனா என்றும் கேட்க வேண்டுகிறேன்.
  15. விமானம் தரையிறங்கும் போது வலதுபக்க செட்டை தரையில் முட்டியதால் துடைந்து தலைகீழாக செல்கிறது. கூடுதலான காற்று தான் காரணம் என்கிறார்கள்.
  16. ஏராளனா நானா நாளைய முதல்வர்? நேரம் லண்டன் நேரமா? கிருபனா கந்தப்புவா சுமைதாங்கி? ஓ பிரித்தானிய நேரப்படி என்று ஏற்கனவே போட்டிருக்கிறீர்கள். நான் தான் கண்டு கொள்ளவில்லை.
  17. இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்? இதை அடிக்கடி சொல்லிக் கொள்வது வேறு யாருமல்ல.என்னைப் பெற்ற தாய் தான்.சில இடங்களில் எனக்கு முன்னாலேயே சொல்ல கொஞ்சம் சங்கடமாகவே இருக்கும். அப்பா பெரிய வாத்தியார்.அம்மா ஆசிரியை.ஒரே ஒரு அண்ணன்.எனக்கு இரண்டு வயது மூத்தவன்.அண்ணனுடன் இப்போதும் வா போ என்று தான் பேசுவேன்.என்னடா அண்ணனை ஒருமையில் பேசுகிறானே என்று எண்ணினால் அதற்கு விடை சொல்லத் தெரியவில்லை.இப்போதும் பிள்ளைகள் பேரப் பிள்ளைகளை ஒருமையில்த் தான் அழைப்பேன். கிராமப் புறங்களில் எந்த கொண்டாட்டமாக இருந்தாலென்ன துக்க வீடாக இருந்தாலென்ன இப்போது போல மண்டபத்துடன் குசலம் விசாரித்துவிட்டுப் போவதில்லை. கொண்டாட்டம் என்றால் 4-5 நாட்களுக்கு முதலே ஊர் பெண்கள் கூடி தூள் இடிப்பது மாவு இடிப்பது பலகார சூடு என்று பரபரப்பாக இருக்கும். ஆண்களுக்கு காணிகள் துப்பரவாக்கிறதில் இருந்து பந்தல் போடுவது யாரிடம் வாழை குலையோடு இருக்கிறது என்று அதுகளைக் கவனிப்பார்கள். சிறியவர்களுக்கு யார் வீட்டில் என்னென்ன சாமான்கள் எடுக்க வேண்டும்.எடுக்கிற சாமான்களில் பெயர் இல்லாவிட்டால் பெயர் போட்டு எடுத்து வரவேண்டும். எத்தனை மணிக்கு வந்து கூட்டிப் போக வேண்டும் என்று ஏதாவது ஒருநேரம் அம்மா சொல்லியிருப்பா. அண்ணன் மூத்தவன் ஆனதாலோ என்னவோ இரவு என்றால் தனியே திரியமாட்டான்.நான் தான் ராஜா.இதுவும் எனக்கு சுற்றுவதற்கு வசதியாக போய்விட்டது. கூட்டிவரப் போனாலே என்னடா உங்களைப் பற்றித் தான் கொம்மா புளுகிக் கொண்டிருக்கிறா என்பார்கள். அப்படி இருந்த அம்மா கடைசியில் .................... 1985இல் அண்ணன் குடும்பத்துடன் அவுஸ்திரேலியா போய் விட்டான். அப்பாவும் 89இல் காலமாகிவிட்டார். எனக்கும் வெளிநாடு போக விருப்பம் இல்லாவிட்டாலும் கட்டாயம் போகவேண்டிய சூழ்நிலை. 1990 களில் நானும் அமெரிக்கா வந்து சேர்ந்து விட்டேன். 1992 இல் இரு பிள்ளைகளோடு மனைவிக்கும் ஸ்பொன்சர் செய்து சித்திரை மாதம் அவர்களும் இங்கு வந்து சேர்ந்து விட்டனர். அம்மா வீட்டில் தனியாளாக தெரிந்தாலும் பார்த்துக் கொள்ள நிறைய பேர் இருந்தார்கள். 1993 இல் நல்ல சுகமாக இருந்தவ அன்று எனது மனைவிவீடு(நடைதூரம்)பக்கத்தில் கோவில் இன்னும் ஓரிரு உறவினர்கள் வீட்டுக்கும் போய்வந்து படுத்தவ படுத்தது தான். மனைவியின் தம்பி ஒருவன் எந்த நாளும் போய் படுப்பான்.வேண்டிதெல்லாம் செய்வான். இரவு 2 மணிபோல விக்கல் சத்தம் கேட்டது.ஆள் முடிந்தது என்றான். அடுத்தநாள்த் தான் எனக்கு ரெட்குறோஸ் மூலம் அறிவித்தார்கள். இரண்டு ஆண்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தைரியமாகவும் திமிராகவும் பேசிய அம்மாவுக்கு கொள்ளிவைக்க பிள்ளை இல்லை. அண்ணனோ நானோ போக முடியவில்லை. இன்றுவரை இது ஒரு பெரும் தண்டனையாகவே எண்ணுகிறேன்.
  18. விளையாட்டுச் சாமானுகள் வைக்கவும் இடம் தேவைதானே? காருக்குள்ள இருக்கிறதெல்லாத்தையும் வீட்டுக்குள் கொண்டுவந்து வைக்கப் போகிறேன் என்று சொல்லிப் பாருங்கள். விளையாட்டுச் சாமானுகளுடன் சேர்ந்து தூங்க வேண்டியும் வரலாம். காரை வெளியே கொண்டுபோய் விட்டு பெரியதொரு Everything Free என்று விளம்பரம் போட்டுப் பாருங்கள்.
  19. வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு விமானம் தலைகீழாக பிரண்டு கிடப்பதைக் காண்கிறேன். நம்ம தலைவர ரம் வந்தபின் இதோடு 7வது விமான விபத்து என்றே எண்ணுகிறேன். பெரும் பனிப் படலத்துக்குள் ஏன் விமானத்தை இறங்க விட்டார்களோ தெரியவில்லை. இதை வைத்தே ரம் பெரியதொரு நஸ்டஈடு கோரலாம்.
  20. பழுதடைந்த ராணுவ தளபாடங்களை மோடியை வெருட்டியது போல இன்னும் கொஞ்ச நாடுகளை வெருட்டு விற்றுவிட்டால் சரிதானே? அமெரிக்கா காசாவை கட்டியெழுப்புமாக இருந்தால் அதிலிருந்தும் ஊலகம் மழுவதும் கொடுக்கும் பணத்தில் அமெரிக்கா பல கொந்தராத்துக்களை எடுத்து பணக்காரன் ஆகிவிடலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.