Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஈழப்பிரியன்

  1. சுத்துமாத்து சுமந்திரனுக்கு 99 வீதமான எதிர்ப்பு வாக்குகள்… வெளி நாட்டில்தான் உள்ளது. 🤣 சென்ற நாடுகள் எல்லாம், "செருப்படி" வாங்கிய செம்மல் அவர் அதேநேரம் அர்ச்சுனாவின் வாக்குகள் வெளிநாட்டில்த் தான்.
  2. அமைச்சரவைத் தீர்மானம். வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்! --- --- --- *வாக்களிக்கத் தகுதியானோர் பற்றிய விபரங்கள் தெளிவில்லை... *ஐரோப்பிய, மேற்கு நாடுகளில் வாழ்வோர் வாக்களிக்க முடியுமா? *மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோர் மாத்திரமா? *முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பிய கடிதம்... -- -- --- வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு, தேர்தல் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்வது தொடர்பாக. 23 /09 /2025 இல் இடம்பெற்ற அமைச்சவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. நடவடிக்கை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் -- 26/1 என்று மாத்திரம் குறிப்பிட்டு திகதியிடப்படாமல், ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதத்தை குறித்த குழு அனுப்பியுள்ளது. அதாவது -- தங்கள் பிரதேசங்களில் இருந்து, வெளிநாடுகளில் வாழ்வோர் பற்றிய விபரங்களை வழங்கமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. முடிவுத் திகதி ஜனவரி 31 ஆனால் -- இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை கூட்டம் முடிவடைந்து, இரண்டரை மாதங்களின் பின்னர் அதுவும், முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தான், கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் கடிதங்களை குறித்த குழு அனுப்பியிருக்கிறது. கோரப்பட்டுள்ள நான்கு அம்சங்களும் வருமாறு --- 1) வெளிநாடுகளில் இருக்கிற தேருநர்களை தேர்தல் இடாப்பில் பதிவு செய்தல். 2) தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள். 3) வாக்களித்தல் 4) வாக்கெண்ணுதல். என்ற நான்கு அம்சங்கள் பற்றியும் கட்சிகளின் கருத்துகள் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளன. ஆனால், கடிதத்தில் கோராப்பட்டுள்ள முதலாவது அம்சம் தொடர்பாக கேள்விகள் எழுகின்றன. A) “வெளிநாடுகளில் வாழ்வோர்” என்றால், ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகளில், இலங்கைக் கடவுச் சீட்டுடன் வாழ்வோரும் உள்ளடக்கமா? B) அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் பொறியியலாளர்கள், போன்ற உத்தியோகஸ்த்தர்களாக பணிபுரியும் இலங்கையர்கள் மாத்திரம் வெளிநாடுகளில் வாழ்வோர் என்று அர்த்தப்படுத்தப்படுகிறதா? ஆகவே -- இந்த விடயங்கள் செயலாளர்களுககு அனுப்பியுள்ள கடிதத்தில் விபரமாக இல்லை. அதாவது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்க முடியும் என்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானம் விளக்கமாக கடிதத்தில் இல்லை. இவை பற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் உள்ளிட்ட வேறு எந்தவொரு சிங்களக் கட்சியும் இதுவரை விளக்கம் கோரவுமில்லை. குறிப்பாக -- வடக்கு கிழக்கு தமிழர்கள் அதுவும் யாழ்ப்பாண தமிழர்கள் பலர், ஐரோப்பிய, ஸ்கண்டிநேவிய மற்றும் மேற்கு நாடுகளில், இலங்கைக் கடவுச்சீட்டுடன் வாழ்கின்றனர். வேறு சிலருக்கு இரட்டைப் பிரஜாவுரிமையும் உண்டு... ஆகவே, வாக்களிக்கத் தகுதியான வெளிநாட்டவர்கள் யார் என்பது பற்றி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சு அல்லது வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தெளிவுபடுத்த வேண்டும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0sy9i7wSuEkL3QrrHoM3vE75bMhAMhLtm8YvAKXu4e8zTumtqAe3YfC3PQ33c9b2cl/?
  3. மிககுறைந்த உறைநிலைக்கு தொடர்ந்தும் இருப்பதால் பொழிந்த பனியெல்லாம் கொங்கிறீற் போல இறுகிப் போயுள்ளது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை உறைநிலையாகவே காலநிலை காட்டுகிறது.
  4. அமெரிக்காவில் பனிப்புயலில் பலியோனோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு. அமெரிக்காவின் பல பகுதிகளை பெரும் பனிப்புயல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பனிப்புயல் காரணமாக குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மின்சார வசதியின்றி அவதியுறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நியூயார்க், டென்னிசி, லூசியானா, மாசாசூசெட்ஸ், கன்சாஸ், பென்சில்வேனியா மற்றும் டெக்சாஸ் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்புயலினால் மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், 10,000-க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, பாடசாலைகள் மற்றும் சாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இன்றயை தினம் பனிப்பொழிவு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது, ஆனால் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடும் குளிர் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தெற்கில் டெக்சாஸ் முதல் வடகிழக்கில் நியூ இங்கிலாந்து வரை காலநிலை சீர்கேடு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவிலும் இந்த பனிப்புயல் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Tamilwinஅமெரிக்காவில் பனிப்புயலில் பலியோனோர் எண்ணிக்கை 17 ஆக உயர்...அமெரிக்காவின் பல பகுதிகளை பெரும் பனிப்புயல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பனிப்புயல் காரணமாக குறைந்தது 17 ப... ஆயிரக் கணக்கானோர் அல்ல எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர்.
  5. சீன வாகனங்களும் ஐரோப்பிய சந்தையைப் பிடித்து விட்டதாக சொல்கிறார்களே? கனடாவுக்கும் வந்து இறங்கப் போகுது. எல்லை தாண்ட ரம் விடுவாரா தெரியவில்லை.
  6. கொழும்பில் நடக்கும் போட்டிக்கு ரிக்கட் விற்று முடிந்துவிட்டது.😂
  7. Deadly cold settles in: At least 11 people have died in the coldest temperatures of the winter. Over 250 million people are under cold alerts for frigid temps that will linger for days, raising fears for those without shelter or power. • Crippling blow: More than 800,000 customers are still without power after damaging ice knocked it out. Here’s what to do if you’re without power. • No travel, no school: Sunday was the worst day for flight cancellations since the pandemic. Over 19,000 flights have been canceled during this storm. Schools in major cities have canceled classes or moved to remote learning for Monday. • Over a foot of snow: A staggering 31 inches of snow fell during the storm and 17 states have seen snow pile up a foot or higher. See all our maps and charts of the storm here. https://www.cnn.com/weather/live-news/winter-storm-forecast-snow-ice-01-25-26-climate
  8. ஏற்கனவே பதிந்தவர்களும் புதிதாக பதியலாமா சார்?
  9. ட்ரம்ப் உருவாக்கிய புதிய “Board of Peace” ஐநாவுக்கு எதிரானதா? -- -- --- *ஐரோப்பிய நாடுகளை நோக்கி நேசக்கரம் நீட்டும் சீனா! *இலங்கையை முழுக் கட்டுப்பாட்டில் எடுக்க இந்தியா முயற்சி *தமிழ்தரப்பின் உள்ளக மோதல்கள் டில்லிக்கும் கொழும்புக்கும் சாதகம்! --- --- --- சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார சபையின், சர்வதேசத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகளுடன் பதை்துக் கொள்ளும் முறையில் வெளியிட்ட கருத்துக்கள், சீனாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. நேட்டோ இராணுவக் கூட்டணி இனிமேல் தேவையற்றது என்ற தொனியும், அந்த அணிக்கான செலவை நூறுவீதமும் அமெரிக்கா தான் வழங்கி வருவதாகவும் கூறியமை, ஏனைய நோட்டோ அங்கத்துவ நாடுகளின் கௌரவத்துக்கு பெரும் இழுக்காக அமைந்துள்ளது. அதாவது -- டொனால்ட் ட்ரம்ப் பொதுவெளியில் பொய் கூறுகிறார் என்றும், அமெரிக்கா இல்லையேல் ஐரோப்பிய நாடுகள் இயங்காது என்ற அவருடைய பார்வையும் மிக அழுக்கானது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை, ஒரு "சிறிய கோரிக்கை" என்று டொனால்ட் ட்ரப் விளக்கம் அளித்தமை, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன. 1940 களிற்கு முன்னர் டென்மார்க் ஜேர்மனியிடம் சரணடைந்தது. இதனால் நாஜிக்கள் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக, அதனை அமெரிக்காவிற்கு கையளிக்கும் ஒப்பந்தத்தில் டென்மார்க் பிரதிநிதிகள் கையெழுத்திட்டிருந்தனர். ஆனால் -- கிரீன்லாந்தின் தனி இறைமை கிரீன்லாந்துக்கு உரியது என்றும், அமெரிக்காவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி அல்ல என்பதும் ஒப்பந்தத்தின் உள்ளடக்கம். ஆனாலும் ஒப்பந்தத்தின் பிரகாரம், கிரீன்லாந்தில், அமெரிக்க இராணுவத் தளங்கள், படைகள் அங்கு அமைக்கப்பட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டு தான், ட்ரம்ப் கிரீன்லாந்து தீவை மீண்டும் கைப்பற்ற தற்போது முற்படுகிறார். ஆகவே -- அமெரிக்க வெளியுறவுக் கொள்கை தவறுகிறதா அல்லது டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக முடிவெடுக்கிறாரா என்ற கேள்வி நியாயமானது. ஐநா சபை அவசியம் அற்ற ஒன்று என ட்ரம்ப் கூறியிருக்கின்றமை, தன்னிச்சையான முடிவை பகிரங்கப்படுத்தியுமுள்ளது. ஆகவே -- பலமுள்ள மேற்கு நாடான கனடாவும், ஐரோப்பிய நாடுகளும், டொனால்ட் ட்ரம்பின் இத்தகைய செயற்பாடுகளுக்கு அஞ்சும் ஒரு சூழலில் அல்லது தயக்கம் காண்பிக்கும் பின்னணியில், வளர்ச்சியடைந்து வரும் மற்றும் இலங்கை போன்ற வளர்ச்சியடையாத நாடுகள் மத்தியில் சீனா தனது செல்வாக்கை காண்பிக்க முயற்சிக்கிறது. சீனாவின் குளோபல்ரைம்ஸ் (globaltimes) ஆங்கில செய்தி ஊடகத்தில் சென்ற வியாழக்கிழமை வெளியான ஆசிரியர் தலையங்கம், ஐரோப்பிய நாடுகளை நோக்கி நேசக் கரம் நீட்டியுள்ளது. அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடந்த சில வாரங்களாக சீனாவுடன் நெருக்கமாக உறவுகளை கையாள ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே வர்த்தக உறவு இந்த நாடுகளுடன் சீனாவுக்கு இருந்தது. ஆனால்-- மிகச் சமீபகாலங்களில், அரசியல் ரீதியான உறவுக்கும் அதனை மையப்படுத்திய இராணுவ தொடர்புகளுக்கும் வழி வகுக்கக் கூடிய ஏதுநிலைகள் தென்படுகின்றன. குறிப்பாக -- அஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தபோது, முரண்பாடுகளை தவிர்த்து இணக்கப்பாடான அம்சங்களில் ஒன்றித்துச் செயலாற்றுவது என கூறியிருந்தார். ஆனால் -- சீனாவுக்கு எதிராக இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகளை மையப்படுத்தி 2021 ஆம் ஆண்டு அமெரிக்கா உருவாக்கிய அக்கியுஸ் (Aukus) ஒப்பந்தம் அவுஸ்திரேலியா அரசுக்கு முக்கியமாக இருந்தது. ஆனால் -- டொன்ல்ட் ட்ரம்ப் சுவிஸ்லாந்தில் நிகழ்த்திய உரையின் பின்னர், சீனா நோக்கிய கரிசனை உருவாகியுள்ளது போல் தெரிகின்றது. குளோபல் ரைம்ஸ் ஊடகத்தின் சர்வதேசச் செய்திகளில் இத் தொனி வெளிவர ஆரம்பித்துள்ளது. அஸ்திரேலியா தனது நாட்டின் நலன்களைக் கருத்தில் கொள்வதன் மூலம், சீனா மீதான கொள்கையை வரையறுத்துப் பிராந்திய நாடுகள், சீனாவுடனான உறவைக் கையாள்வதற்குரிய மாதிரியை வழங்கும் என்று சீன வெளியுறவு விவகார பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லீஹைய்தோங் தெரிவித்திருக்கிறார். அதேநேரம் -- பொருளாதாரம் சார்ந்த கண்ணோட்டத்தில், பல ஆண்டுகளாக, சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 'விரிவான ஆலோசனை, கூட்டு பங்களிப்பு மற்றும் பகிரப்பட்ட நன்மைகள்' (extensive consultation, joint contribution, and shared benefits,) என்ற கொள்கைகளை கடைபிடித்துள்ளன, இருதரப்பு வர்த்தகம் இராஜதந்திர உறவுகளின் தொடக்கத்தில் $ 2.4 பில்லியனில் இருந்து 2025 இல் $828.1 பில்லியனாகவும், பரஸ்பர முதலீட்டு பங்கு கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திலிருந்து $280 பில்லியனாகவும் அதிகரித்தாக குளோபல்ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் சேவை 120,000 பயணங்களை இயக்கியுள்ளது, 26 ஐரோப்பிய நாடுகளில் 200க்கும் மேற்பட்ட நகரங்களை சென்றடைந்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முக்கிய வகிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீன மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், காலநிலை மாற்றம் குறித்த கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் நலன்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்கியுள்ளதாகவும் அந்த ஊடகம் புள்ளி விபரங்களை காண்பித்துள்ளது. இப் புள்ளி விபரங்கள், சீனாவுடன் வர்த்தக உறவில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதரக இணையங்களிலும் உண்டு. ஆகவே -- இப் பின்னணியில் டொனால்ட் ட்ரம்பின் தற்போதைய தன்னிச்சையான அணுகு முறைகள், சர்வதேச உலக ஒழுங்கில் புதிய மாற்றத்துக்கு வழி வகுக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை. ரசிய - உக்ரெய்ன் போர், இஸ்ரேல் காசா மோதல் போன்ற விவகாரங்களில், டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாடுகள் ஐரோப்பிய நாடுகளுக்குச் சாதகமாக இல்லை. ட்ரம்ப் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு அறிக்கையை ரசியா வரவேற்றுள்ள பின்னணியில், உக்ரெய்ன் அரசை அமெரிக்கா கைவிட்டுள்ளது என்ற செய்தி வெளிப்பட்டுள்ளது. அதேநேரம் -- வெனிசுலா ஜனாதிபதியை கடத்திச் சென்ற விவகாரம். டென்மார்க் உள்ளிட்ட அனைத்து சர்வதேச நாடுகளையும் அமெரிக்கா கட்டுப்படுத்தும் அல்லது சொல்வதை செய்யுங்கள் அல்லது ஒத்துழைக்கவும் என்ற அதிகாரத் தொனியை புடம் போட்டுக் காண்பித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவுடன் பல விடயங்களில் இணங்கிச் செல்ல மறுத்த பிரான்ஸ், ட்ரம்பின் செயற்பாடுகளின் பின்னர், சீனாவுடன் இணைந்தால் என்ன என்ற மன நிலைக்கு வந்துள்ளது. இந்த இடத்தில்தான் -- அமெரிக்க - சீன - ரசிய அரசுகளுடன் சமாந்தரமான முறையில் அதாவது சர்வதேசரீதியாக இரட்டை வெளியுறவுக் கொள்கையை இந்திரா காந்தி காலத்தில் இருந்து பின்பற்றி வந்த இந்திய அரசுக்கு, வாய்ப்பான ஒரு புவிசார் அரசியல் பின்ணியை உருவாகி வருகிறது. ரசிய - உக்ரெய்ன் போரில் இருந்து வெனிசுலா ஜனாதிபதி கடத்தப்பட்டது வரையும் அடக்கமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த இந்தியா, அமெரிக்காவையும் பகைக்காமல், ஐரோப்பிய நாடுகளையும் கையாளக் கூடிய தனது இராஜதந்திர உத்தியை தொடர்ந்து பின்பற்றக் கூடிய வாய்ப்பு தடையின்றி கிடைத்திருக்கிறது. இந்தோ - பசுபிக் விவகாரத்தில் அமரிக்கா செய்து கொண்ட அக்கியுஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீறி பிராந்திய இராணுவ விவகாரத்தில் அவுஸ்ரேலிய அரசு, சீனாவுடன் பகைக்காமல் இருக்கக் கூடிய உத்தி பற்றி ஆராயும் நிலையில், அது இந்திய அரசுக்கு வாய்ப்பை ஏற்படுத்தலாம். இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செயற்பாடுகளை அவதானிக்கவும் தடுக்கவும் உருவாக்கப்பட்ட குவாட் இராணுவ அணியில் இந்தியா பிரதான பங்கு வகித்திருந்தது. ஆனால் -- சில வருடங்களாக அதன் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி வரும் நிலையில், ட்ரம்பினுடைய சமீபகால உத்திகள், சீனாவுடன் முரண்பாட்டில் உடன்பாடாக செல்லக் கூடிய சூழலை உருவாக்கலாம். ஏற்கனவே சீன - இந்திய வர்த்தகம் உலகில் முன்னிலை பெற்றுள்ளது. எல்லை விவகாரத்தை தவிர, இந்தியாவுடன் வேறு பிரச்சினை இல்லை என்று சீன ஊடகங்கள் கூறி வருகின்றன. ஆனால் இந்தியா அதனை மறுக்கிறது. இப் பின்புலத்திலே தான் -- தலைகீழாக ட்ரம்ப் நின்றாலும், இந்தோ - பசுபிக் விவகாரத்தில், அவுஸ்திரேலிய - இந்தியா ஒத்துழைப்பு அவசியமானது. ஆகவே, இதனையே ட்ரம்ப்புடனான பலமான உறவுக்கு இந்தியா பயன்படுத்தும் சாத்தியம் உண்டு. ரசியா ஊடாக சீனாவையும் கையாள முடியும். ஆனால், இந்தியாவின் இந்த நிலைப்பாடு தான், இப்போது இலங்கைக்கு குறிப்பாக ஜனாதிபதி அநுரவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. உலகில் மேலும் குழப்பங்களை ட்ரம்ப் உருவாக்க முன்னர், இந்தோ - பசுபிக் விவகாரத்தில் தனக்கு சாதகமான, அதேநேரம் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட தற்போது இந்தியா தீவிரமாக ஈடுபடுகிறது. இதன் காரண- காரியமாக சிறிய நாடாக இருந்தாலும், இலங்கை அரசை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா விரும்புகிறது. 1980 களில் இருந்து இந்தியாவின் நிலைப்பாடு இதுதான். ஆனாலும், ட்ரம்பின் தற்போதைய குழப்பமான நகர்வுகளுக்கு மத்தியில், அந்த நிலைப்பாட்டை இந்தியா மிகவும் அவசர அவசியமாக தீவிரப்படு்த்தியுள்ளது. ஏனெனில் -- ஐரோப்பிய நாடுகளுடன் சீரான உறவை வலுப்படுத்த சீனா கையாளவுள்ள நகர்வு, தமக்கு ஆபத்தானதாக இருக்கும் என்று இந்தியா கருதக் கூடும். இப் பின்னணியில் தான் -- இலங்கையில் புதிய அரசியல் யாப்பு என்ற கதைகள் உலாவுகின்றன. வடக்கு - கிழக்கு இணைப்பு, சுயாட்சி என்ற தமிழ்த்தரப்பின் உறுதியான கோரிக்கைகளுக்கு முன்னர், சும்மா ஒப்பாசாரத்துக்கு மீள் நல்லிணக்கம் என்று கதை சொல்லக் கூடிய புதிய அரசியல் யாப்பு அல்லது யாப்புத் திருத்தம் பற்றி கொழும்பில் சில உரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கவனத்தை திசை திருப்ப தமிழ்தரப்பின் மத்தியில் பிளவுகள் - மோதல்கள் திட்டமிட்டுத் தூண்டப்படுகின்றன. அதற்குப் பலியாகி சமகால புவிசார் அரசியல் சூழலை அவதானித்துத் திட்டமிட்டுச் செயற்பட தமிழ்த்தரப்பும் தவறியுள்ளது. ஆகவே --- இப்பின்னணி விளைவுகளும், தேர்தல் அரசியலில் மாத்திரம் அக்கறை செலுத்தியமையும், இந்திய - இலங்கை அரசுகளுக்குத் தமது தேவைகளை நிறைவேற்றச் சாதகமாக்கியுள்ளன. --- --- குறிப்பு ---இக் கட்டுரை வெள்ளிக்கிழமை எழுதப்பட்டது. ஆனால் சனிக்கிழமை காலை தான், அதாவது சுவிஸ் நேரப்படி வெள்ளி மாலை தான் Board of Peace என்ற புதிய சபை ட்ரம்பினால் அறிவிக்கப்பட்ட செய்தி வெளியானது. 1) சுவிஸ்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொருளாதார மன்றக் கூட்டத்தில் டொனால்ட் ரம்ப், தனது புதிய 'சமாதான சபை' (Board of Peace) ஒன்றை உருவாக்கியுள்ளார். 2) ஐநாவில் வீட்டோ அதிகாரமுள்ள ஏனைய நான்கு நாடுகள் இதில் கைச்சாத்திடவில்லை. 12 நாடுகள் சிறிய கைச்சாத்திட்டுள்ளன. 3) இஸ்ரேல் - காசா போன்ற மோதல்கள் மற்றும் உலகின் ஏனைய விவகாரங்களை தீர்ப்பது இச் சபையின் நோக்கம் 4) தலைவராக ட்ரம்ப், அதாவது அமெரிக்கா... 5) ஐநா சபை உடைந்ததா என்ற கேள்வியுடன் சீன - ரசிய, கனடா மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் கடும் விமர்சனம். -அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
  10. சீனாவுடன் உறவு கொண்டதற்காக கனடாவுக்கு 100 வீதவரி விதிக்க ரம் தீர்மானித்துள்ளார்.
  11. என்ன இது ?குண்டக்க மண்டக்க? பதில்களை திரும்பவும் பதிய வேண்டுமே?
  12. @ஏராளன் இன் ஏரியா விடுவிக்கப்பட்டுள்ளது. சந்தோசம்.
  13. எவ்வளவு இளமையான வயதில் கணவனை பறி கொடுத்துள்ளார் என்று அம்மாவையும் கணவனின் படத்தையும் பார்க்கும் போது புரிகிறது. ரொம்ப கஸ்டமாகவும் உள்ளது. சிங்கள தேசத்தில் தமிழருக்கு எப்போது தான் நீதி நிஞாயம் கிடைத்துள்ளது. ஆழ்ந்த நினைவஞ்வலிகள்.
  14. அநுர அரசில் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராகும் எம்.ஏ.சுமந்திரன் அநுர தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று (31.10.2024) நடத்திய ஊடக சந்திப்பின் போது அமைச்சுப் பதவிகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முன்னைய காலத்தில் நாங்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்கக்கூடாது, ஒரு நிலையான தீர்வு வருகின்ற வரைக்கும் மத்திய அரசில் நாங்கள் பங்குபெறக் கூடாது என்கின்ற கருத்துக்கள் நிலவின. கட்சியினுடைய கொள்கை ஆனால், அது கட்சியினுடைய கொள்கை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை எடுத்த ஒரு காலகட்டமும் இருந்திருக்கிறது. ஆகவே, அப்படியான ஒரு சூழ்நிலை வருகின்ற போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அந்த நேரத்தில் தான் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். எனினும் என்னுடைய சொந்த நிலைப்பாடு செல்லையா குமார சூரியரைப் போலவோ அல்லது லக்ஸ்மன் கதிர்காமரைப் போலவோ அல்லது டக்ளஸ் தேவானந்தாவைப் போலவோ தனி ஒரு அமைச்சராக அமைச்சரவையில் போய் சேருவதென்பது மக்களுக்கு நன்மை பயக்காது. அமைச்சுப் பதவி ஆனால், முருகேசு திருச்செல்வம் போல் கட்சி சார்பாக – கட்சியினுடைய தீர்மானமாக மக்களும் அதனை ஏற்றுக் கொண்டு அமைச்சரவையில் சேர்ந்தார். ஆனால், அமைச்சராக இருந்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனத் தெரிந்த உடனேயே கட்சியின் கட்டளைப்படி அரைவாசிக் காலத்திலேயே அமைச்சுப் பதவியை அவர் பதவிவிலகல் செய்து வெளியே வந்தார். அது வித்தியாசமான ஒரு விடயம். எங்களுடைய மக்களையும் கட்சியையும் பிரபலப்படுத்தி இரண்டோ, மூன்று பேர் அமைச்சரவையில் சேர்ந்திருந்து செயற்பட்டு எங்களுக்கான தீர்வுகளைப் பெறுவதென்பதும் நாங்கள் கண்கொண்டும் பார்க்க மாட்டோம். அப்படியான தெரிவு எங்களுக்குக் கிடையாது என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது என எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran ) தெரிவித்துள்ளார். https://www.athirady.com/tamil-news/news/1740963.html
  15. பயங்கரவாத சட்டத்தை நீக்க வேண்டுமென போராடிய ஜேவிபி இப்போது இருப்பதை விட கூடுதலான இறுக்கமான சட்டங்களுடன் புதிய பயங்கரவாத சட்டம் நடைமுறைக்கு வருகிறது. குற்றத்தை கண்டும் முறையிடாமல் போவோருக்கு 7 வருடம்.
  16. இதில பெயர் இல்லாதபடியால தமிழனாக இருக்க வாய்ப்பில்லை.
  17. வீடு-சங்கு தேர்தல் கூட்டணியும் ஏமாற்று அரசியலும் முதலமைச்சர் பதவி ரெடி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.