-
என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன்
சிறிதரன் நல்லவரல்லராகவே இருக்கட்டும். அவர்மேல் என்றுமில்லாதளவு விமர்சனம் இப்போ அதுவும் தேர்தலின்பின் எழக்காரணம் என்ன? நானே கட்சியில் எல்லாம் என்று கருத்து சொல்லி, எதேச்சையாக செயற்பட்டவரை விட இவரை மக்கள் தெரிந்தெடுத்துவிட்டனரே எனும் அழுக்காறு, தேர்தல் பயம் என்றுதான் நான் நினைக்கிறன்.
-
பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்!
தேவைக்கேற்ப காவியுடையும் இராணுவ சீருடையும் போர்த்தப்படுபவர்கள் இவர்கள். திஸ்ஸ விகாரையிலேயே இரண்டையும் பார்த்தோமே!
-
பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்!
அது என்ன இன்னொன்று என அறிய ஆவல்! தனது எதிர்காலம் சிறை அல்லது மறைவாகவே இருந்தாகணும் என்று கணித்தே வைத்துள்ளார் மஹிந்தா. இரண்டாம் துட்ட கைமுனுவுக்கு ஏன் இப்படியொரு விபரீத எண்ணம் வந்தது? சிங்களவருக்கு பயந்தே அவர் விகாரையில் இப்படி ஒரு சொகுசு வீட்டை ஏற்பாடு செய்திருக்கிறார்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
படித்தவர்கள் பேச்சில் "நான்" எனும் அகம்பாவம் கண்டேன். அவர்கள் படித்த படிப்பிற்கும் பேசும் பேச்சுக்கும் சம்பந்தமேயில்லை என உணர்ந்தேன்.
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
சிவஞானத்தின் ஆதங்கத்திலும் ஒரு நிஞாயம் இருக்கிறது. முன்பொருதடவை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு மக்கள் பேரணி நடத்தப்பட்டது. அப்போ ஊடகவியலாளர் ஒருவர் அதுபற்றி சுமந்திரனிடம் வினவியபோது; தாங்கள் அதில் பங்கு பற்றப்போவதில்லையென்றும் மக்களை பங்குபற்றும்படி கேட்டுக்கொள்வதில்லை என்றும் பதில் வழங்கினார். ஆனால் மக்கள் அலையலையாய் திரண்டிருந்தனர். பின்னாளில் பொதுமக்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்த பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையில் பேரணியில் புகுந்து தன்னை முதன்மைப்படுத்தினார், அதன்பின் கடற்தொழிலாளர் எதிர்ப்பு போராட்டத்திலும் அதனோடு தொடர்பு படாத தொப்பியணிந்து ஷோ காட்டினார். அவர் நினைத்தது பேரணி, கடையடைப்பு என்று அறிவித்தால்; அது யார் அறிவித்தாலும் மக்கள் திரள்வர் என்று நினைத்து கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்தார். அது பிசுபிசுத்து போனதுடன் எதிர்ப்பும் வெளிப்பட்டது. மக்கள் கோமாளிகளல்ல. அவர்களுக்குரிய காலம், காரணம், அழைப்பு விடுபவரின் நேர்மை, நோக்கம் தெரிந்தே பங்குபற்றுவதா வேண்டாமா என முடிவு செய்வர். இப்போ, தென்னிலங்கையில் இருந்து ஒரு ஜனாதிபதி பொங்கல் கொண்டாட வரும்போது, மக்கள் எதிர்ப்பு ஏதும் செய்யாமல் கூடிக்கொண்டாடியது அவர்களுக்கு வெறுப்பேற்றத்தான் செய்யும். என்ன செய்வது? காற்றுள்ளபோதே தூற்றியிருக்கலாம், இப்படி வாயால் புலம்பிக்கொண்டு திரிய வேண்டியிருந்திருக்காது.
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
இவ்வளவு நடந்த பின்னும், ஆறஅமர்ந்து தமது தவறுகளை சீர்தூக்கி பார்த்து திருந்தும் எண்ணம் இல்லை, மக்களை குறைகூறுவதும் வெற்றியடைந்தோருக்கு சேறடிப்பதும் வறட்டு கௌரவம் பேசுவதும் அவர்களது முட்டாள்தனத்தை காட்டுகிறது. டக்கிலஸை கட்டியணைக்கிறார்கள், ஸ்ரீதரனுக்கு சேறடிக்கிறார்கள். பின், அனுரா கட்சி தங்கள் கட்சி நிலவரங்களை விமர்சிக்கிறார்களாம். இவர்களே தங்கள் கட்சிக்காரரை விமர்சித்தால் கேட்கிறவர்களும் விமர்சிக்கத்தானே செய்வார்கள், அல்லது உண்மையா என தேடத்தான் செய்வார்கள்.
-
"வணக்க தலங்களில் மோதல்": பௌத்த விகாரைகள், தமிழர்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி கூறியது என்ன?
விகாரைக்குரிய காணியை தவிர்த்து, பொதுமக்களின் காணியில் விகாரை கட்ட வேண்டிய தேவை என்ன? அது இந மத நல்லிணக்கமா அல்லது அதிகார தோரணையா? தமிழ் மக்களை நிம்மதியாக வாழவிடுவதில்லை, எல்லாவற்றையும் அடித்து பிடுங்குவது என்பதே இவர்களின் அரசியல் கொள்கை.
-
ஶ்ரீதரன் உடன் பதவி விலக வேண்டும் - தயாசிறி
தயாசிறிக்கே பொறுக்கவில்லை, இராணுவ பின்புலம் கொண்ட இருவரின் நியமனத்திற்கு சிறிதரன் ஆதரவளித்தது. அப்போ மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இராணுவத்தினரை தண்டிக்க தயாசிறி ஆதரவு வழங்குவாரா? அல்லது யாரோ சொல்லிக்கொடுத்து கதைக்கிறாரா? அது இருக்கட்டும், தமிழருக்கெதிரான இந அழிப்பின் தளபதியான பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பதையும் தயாசிறி தெரிவிக்க வேண்டும்.
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
அனுரா யாழ்ப்பாணம் வந்து மக்களுடன் பொங்கல் கொண்டாடி, தனது கட்சி அரசியலை முன்னுக்கு கொண்டுபோக முயற்சிக்கிறார். அவர் எதிர்பாராத அளவு மக்கள் அவருக்கு வாக்குப்போட்டு தெரிந்துள்ளனர். அதை ஏன் சிவஞானம் ஷோ காட்டுகிறார்கள் என நினைக்கவேண்டும்? யாருக்கு ஷோ காட்டினார்கள்? அப்படியெனில் இவர்கள் செய்வதெல்லாம் ஷோ காட்டுவதற்காகத்தானா? இவர்களால் ஏன் மக்களோடு பொங்கல் கொண்டாட முடியவில்லை?
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
இவர்கள் விட்ட தவறே, அனுரா கட்சி வடக்கில் நுழைந்ததும் பொங்கல் விழா கொண்டாடியதும் என்பதையும் ஏற்க முடியவில்லை, அனுரா பொங்கல் கொண்டாடியதை பொறுக்கவும் முடியவில்லை. இவர்கள் இல்லாவிட்டால் என்ன? அவர் மக்களோடு பொங்கல் கொண்டாட வந்தார், கொண்டாடினார், போனார். இவர் ஏன் புலம்புகிறார்? உங்களுக்கு அங்கு என்ன வேலை? உங்களது மரியாதை அவ்வளவுதான். உங்களை கூட்டி வைத்து கும்மாளம் அடித்தவர்கள் எதை சாதித்தார்கள் மக்களுக்கு? அல்லது நீங்கள்தான் எதை சாதித்தீர்கள்? நீங்கள் நிஞாயமாக நடந்திருந்தால் மக்கள் உங்களை தவிர்த்து அனுராவுடன் பொங்கல் கொண்டாடியிருப்பார்களா? மக்களே உங்களை மதிக்கவில்லை, அனுரா ஏன் அழைக்கப்போகிறார்? சிவஞானத்தின் அறிவு அவ்வளவுதான்! இவர்கள் எல்லாம் கட்சி கொள்கை திட்டத்தின் படி அங்கீகாரம் பெற்றா பதவிகளை பெற்றுக்கொண்டார்கள்? மக்கள் இவர்களை விட்டு வெகுதூரம் சென்றதே அனுரா வடக்கிற்கு வரக்காரணம் என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை பாவம் இவரால். கட்சிப்பிரச்சனை கட்சிக்குள் இருந்திருந்தால் யாரும் விமர்சிக்கப்போவதில்லை. கட்சிப்பிரச்சனை வெளியில் வந்தால், நீதிமன்றம் வந்தால் யாரும் விமர்சிக்கத்தான் செய்வார்கள். நீங்களே உங்கள் உறுப்பினர்களை பகிரங்கமாக விமர்ச்சிக்கிறீர்கள், அவர்கள் மேல் சேறடிக்கிறீர்கள், தெற்கிற்கு செய்தியனுப்பி விசாரணை செய்யச்சொல்லி கேட்க்கிறீர்கள், உங்கள் தவறுகளை மறைத்துக்கொண்டு மற்றவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கிறீர்கள், ஒரு கட்சியை விமர்சித்து விட்டு உங்கள் தேவைக்காக அந்தக்கட்சியை தேடிச்சென்று கட்டி தழுவுகிறீர்கள், காரணம் என்ன? மக்கள் உங்களை நிராகரித்து விட்டதனாலேயே. இதற்குள் தமிழரசுக்கட்சிக்குள் மறைந்திருந்து போட்ட அட்டகாசம் எல்லாம் போதும். குந்தியிருந்த வீட்டை பூட்டிவிட்டு வேறு எங்கே போய் குந்தப்போகிறார்கள்? சிவஞானத்திற்கு தன் முதுகிலுள்ள அழுக்கும் தெரியவில்லை, கட்சியிலுள்ள சர்வாதிகாரமும் புரியவில்லை, இதற்குள் மற்றவர்களை சாட வெளிக்கிட்டு தலைகுனியப்போகிறார்.
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
ம், அவ அனுமதி பெறாமல் கற்றிருக்கிறார், இவர்கள் அனுமதி கொடுக்காமல் அவரின் பெயரை சரி பார்க்காமல் கற்பித்திருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் மாணவர் தொகை, வருகை சரிபார்க்காமல் கற்பிப்பார்களோ? அது இருக்க, இப்போ மருத்துவ கற்கை சித்தியெய்திய சான்றிதழ் இல்லாமற்கூட தனியார் மருத்துவ நிலையம் நடத்துகிறார்களாம், அவர்கள் பிடிபட்டவுடன் போலி வைத்தியர் என்கிறார்கள்.
-
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
அரியநேந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தற்போதுதான் உத்தியோகபூர்வமாக அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படியிருக்க, ஜோசவ் பரராஜசிங்கத்தின் நினைவு கூரல் கூட்டத்திற்கு அரியநேந்திரனை அழைத்தமைக்காக நீங்களும் சுமந்திரனால் கட்சியிலிருந்து நீக்கவுள்ளதாக கூறுகிறார்களே, அதெப்படி? முதலில் உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவது, பின்தான் காரணம் தேடிக் கண்டுபிடிப்பதா? அரசியல் அறிவு, ஒழுக்கம் இல்லாதவர்களின் செயற்பாடு இப்படித்தான் இருக்கும். கட்சிக்காகவே மக்கள் என்பது இவர்களின் முட்டாள்த்தனமான வாதம். கட்சி உறுப்பினர் யாவரும் சேர்ந்து, சுமந்திரன் கட்சியை விட்டு நீங்கினால் கட்சி கூடுவோமென போராடுங்கள், இல்லையேல் எல்லோரும் கட்சியை விட்டு வெளியேறுங்கள். எப்படியிருந்தாலும் சுமந்திரன் உங்கள் எல்லோரையும் வெளியேற்றி வீட்டைப்பூட்டி திறப்பை எடுப்பார். ஆனால் யாரிடம் கொடுப்பது என்பதே கேள்வி. அவருக்கு இந்தப்பணியை பூர்த்தி செய்யச்சொல்லி அமர்த்தியவர்கள் இப்போ அரசியலில் கேள்விக்குறியாக உள்ளார்கள். இப்போ அறிவற்ற சுமந்திரனின் நிலைதான் தொங்குபொறி!
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
ஆரத்தி எடுப்பது தமிழரின் கலாச்சாரம், ஆனால் காலை தொட்டுக்கும்பிடுவது நம் பண்பாட்டில் அப்படி வழக்கில் இல்லை. ஒருவேளை சந்திரசேகரன் அழைத்து வந்தவர்களோ தெரியாது.
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
பொதுவாக ஜனாதிபதி ஒருவர் யாழ்ப்பாணம் வந்தால்; கறுப்பு கொடி எதிர்ப்பு காட்டுவது, போராட்டம் நடத்துவது, பகிஷ்கரிப்பு கடையடைப்பு செய்வது, டக்கியார் மக்களை ஏமாற்றி கூட்டம் சேர்த்துகொண்டுபோய் வரவேற்பது, அவர்களும் இராணுவ, போலீஸ் பாதுகாப்போடு வந்து மேடையில் ஏமாற்று வார்த்தைகளை கூறிவிட்டு தென்பகுதிக்குப்போய் வேறொரு விளக்கம் கொடுப்பார்கள். இவர் என்னடாவெண்டால்; சாதாரண உடையில் வாறார், மக்கள் அவரை பாக்க முண்டியடிக்கிறார்கள், அரசியல் வாதிகளை காணேல, மக்களோட கைகுலுக்குகிறார், நடைப்பயிற்சி செய்கிறார், அவர்களோடு கூட இருந்து பொங்கி சாப்பிடுகிறார். தமிழரை அழித்துவிட்டு பாற்சோறு சாப்பிட்ட நினைவு யாருக்கும் வந்திருக்காது. தமிழ், சிங்கள உறவை பிரிக்க புத்தர் சிலையை கொண்டு ஒரு கூட்டம் அலையுது, இவர் என்னடா என்றால் தமிழரோடு பொங்கல் கொண்டாட வடக்கிற்கு வருகிறார், வழமையாக தேர்தல்காலத்திற்தான் பொய்யான வாக்குறுதிகளோடு வருவார்கள். இந்த உறவு நிலைக்க வேண்டும், தமிழரின் அபிலாசைகள் நிறைவேற்றி வைக்கப்படவேண்டும். அதுசரி.... நான்தான் அனுரா காவடி என்று களத்தில் முத்திரை குற்றினார்கள், இப்போ யாரையும் காணல கருத்துப்பரிமாற. நான்தான் மக்களை திரட்டி வரவேற்பளித்தேன் என்று கூறாதவரை சந்தோசம். பாவம் தமிழர்! அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளே. அடுத்த தேர்தலின் முடிவுகளை மக்களே சொல்லிவிட்டார்கள். இனி வருங்காலத்தில் சவால் விடும்போது இதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
-
முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பெண் கணினி பொறியலாளர் கைது
ஹாஹா..... காலம் மாறிவிட்டது. பெண்களுக்கு மட்டுந்தான் கற்பு, அதுபோனால் வாழமுடியாது என்கிற வாதம் மலையேறிவிட்டது. காலம் எப்படியெல்லாம் மாறுகிறது. இனி இவர் அந்தபெண்ணைதான் கைப்பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட புகைப்படங்களாக இருக்கும், அதுதான் பெடியன் முறைப்பாடு அளித்திருக்கிறான். அதென்ன அசிங்க பழக்கம் நிர்வாண புகைப்படங்களை ஒருவருக்கொருவர் அனுப்புவது? அப்படியே தெருவிலும் போவது, வீட்டிலுள்ளவர்களுக்கும் கொஞ்சம் காட்டி அதன் விளைவு என்னவென்று பார்ப்பது. பெண் முந்திக்கொண்டு விட்டார்!