-
"ஹோர்மூஸ் நீரிணை திறக்கும், ஆனால் டிரம்புக்கு அல்ல" - இரான் எம்பி பேசியது என்ன?
ஐயோ, நோபல் பரிசு கனவு போய்ச்சா? "ஆடாதடா ஆடாதடா மனிதா, ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவாய் முழுசா."
-
ஈரானுக்கு இழப்பீடு வழங்கப்படும் வரை போர் தொடரும் - ஈரான்
அப்போ, இந்தப்போர் முடிய வாய்ப்பேயில்லை எண்டுறியள். தெரியாத்தனமாக காலை விட்டு அதை எப்படி வெளியே எடுப்பது என்று தத்தளிக்கிறார்கள் அவர்கள். உங்களை சேதப்படுத்தி, நிம்மதியாக இருக்கலாமென கனவு கண்டவர்களுக்கு அதி சேதாரத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அவர்களிடம் ஆயுதமே முடிந்து விட்டதாம், இப்போ பதவியும் அந்தரத்தில், எங்கிருந்து யார் இழப்பீடு வழங்குவது? யாரை யார் தண்டிப்பது? அப்படி ஒரு நிலைப்பாடு இருந்திருந்தால்; இப்படி தான்தோன்றித்தனமாக எந்த ஆலோசனையும் அறிவுறுத்தலுமில்லாமல் போரை தொடங்கியிருப்பார்களா என்ன? அவர்கள் உங்களுக்கு எதை செய்ய நினைத்தார்களோ, அதை அவர்களுக்கு செய்து அந்த வலியை, இழப்பை அவர்கள் உள்ளளவும் மறக்காதபடி நினைத்து வருந்த செய்யுங்கள். மற்றபடி அவர்களது மக்களும் நீதித்துறையும் வரலாறும் அவர்களை தண்டிக்கும். தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு நாடுகளை மிரட்டியதும் அக்கிரமித்ததும் தனக்கு நோபல் பரிசு தரவேண்டுமென்று அடம் பிடித்ததும் இப்படியான அழிவிற்குத்தான்.
-
மத்திய கிழக்கில் போரில் இருந்து விடுபடமுடியாமல் தடமாறும் ட்ரம்ப்
நெத்தன்யாகு அமெரிக்காவை உசுப்பி, ஈரானில் தனது பழிவாங்கலை நிறைவேற்றி, எதிர்கால அச்சுறுத்தலில் இருந்து தப்பி விடலாமென நினைக்கிறார். அவரது ஈரானுக்கெதிரான போரை நிறுத்தக்கோரி உள்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தொடரும் காலங்கள்தான் அவை சரியா, தவறா என்பதை நிரூபிக்கும்.
-
போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில்’ முடிவடையும் என டிரம்ப் தெரிவித்தார்.
அதை தீர்மானிக்கப்போவது இரானேயொழிய இவரல்லர்.
-
ரஷ்யா, சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பகிரங்க எச்சரிக்கை!
சீனா ரஷ்யாவும் அமெரிக்காவின் இன்னொரு முகங்கள்தான் ஆனால், டிரம்புக்கு இப்போ, தாம் தனித்து விடப்பட்டு விட்டோம், நாடுகளுக்கு அச்சுறுத்தல் விட முடியாது, கொள்ளையடிக்க முடியாது, தமது பொய் பிம்பம் கலைந்து, வேறொருநாட்டின் கையில் போய்விடுமோ என்கிற கடுப்பு. அமெரிக்காவை அழிக்க ட்ரம்ப் தான் சிறந்த ஆள்! ஆமா..... இன்று, அமெரிக்க தாக்குதலில் முக்கியமான ஒன்றை மறந்து விட்டீர்கள் போலுள்ளது. நல்லவேளை, கந்தையர் நினைவூட்டி விட்டார். ஹா ஹா...... நான் உஷார்!
-
ஈரானுக்கு எதிரான போரில் இணையாத நாடுகள் மீது ட்ரம்ப் கடும் விமர்சனம்
சலுகைகளுக்காக அநிஞாயத்திற்கு அடிபணிந்தால், அது நமது கதவருகே காத்திருக்கும் நம்மை பழிவாங்க.
-
ஈரானுக்கு எதிரான போரில் இணையாத நாடுகள் மீது ட்ரம்ப் கடும் விமர்சனம்
ம். அந்நிய நாட்டுக்குள் பலாத்காரமாக புகுந்து, கொலை செய்து, அவர்களின் வளங்களை கொள்ளையடித்துக்கொண்டு வருவாராம், இவருக்கு மற்றவர்கள் செங்கம்பளம் விரித்து பாதுகாப்பு வழங்க வேண்டுமாம்! இந்த நாடெல்லாம் உலக வல்லரசாம். நாடுகளை மிரட்டி, அடிபணிய வைத்து, அவர்களது சொத்தில் வல்லரசு கனவு. அது தகர்க்கப்படும் காலமும் இதுவே.
-
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைச் சட்டமூலம்! - பல நாடுகள் கண்டனம்
அப்போ, ஈரானில் அப்பாவிக்குழந்தைகளை கொன்ற நெத்தன்யாகுவுக்கு என்ன தண்டனை? பாலஸ்தீனியர்களுக்கு ஒரு நீதி, நெத்தென்யாகுவுக்கு வேறொரு நீதியா? சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்!
-
ரஷ்யா, சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பகிரங்க எச்சரிக்கை!
ஆமாம் ஈரானை தாக்குவதற்கான காரணத்தை அறிவித்தார்கள் ஆனால் வேறொரு காரணமே உண்மையானது என்பதை காலந்தாழ்த்தியே அறிவிக்கிறார்கள், அந்த நாடுகள் மீதான உங்கள் எச்சரிக்கை அமெரிக்கருக்கு பயம் வந்துவிட்டதென தெரிவிக்கிறது. இவர்கள் இஸ்ரேலுடன் கூட்டுச்சேரலாம் நட்ப்பு நாடுகள்இவர்களுக்கு உதவ வேண்டுமென எச்சரிக்கிறார்கள் நச்சரிக்கிறார்கள். சீனா, ரஷ்யா ஈரானுக்கு உதவினால் என்ன தப்பு? சரி, சீனா ரஷ்யாவை தொட்டுத்தான் பார்க்கட்டுமேன், சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துத்தான் அவர்களும் இவர்களின் அழைப்ப்பிற்காக காத்திருக்கிறார்கள். இந்த ஈரானை வெல்லவே முடியவில்லை, கோழை அமெரிக்கா சமாதானம், போர்நிறுத்தம் என பேசிக்கொண்டு வானில் மிக மோசமான தாக்குதல்களை கொண்டு அவர்களின் வளங்களை தாக்குவது பெரும் வெற்றி. இதற்குள் சீனா, ரஷ்யாவுக்கு எச்சரிக்கை வேறு!
-
நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
யார் சுழியோடிகள் கைப்பற்றினரா? நீருக்கடியில் உற்பத்தி நிலையமாம், போலீசார் கைப்பற்றினராம், கதை நன்றாகத்தான் இருக்கிறது.
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
உண்மையைச்சொல்லப்போனால்; உலகமகா பெரிய திருடன், தன் திருட்டுக்குக்கு, ஜனநாயகம் பேசியதும் அணுஆயுத தயாரிப்பு குற்றம் சாட்டியதும் தன்னைத்தானே ஏமாற்றிய செயல் ஆனால், உலகத்திற்கு தெரியும் இவரின் உண்மையான உள்நோக்கம். வீட்டுக்காரனை கொலைசெய்து, காயப்படுத்தி, கட்டிப்போட்டு திருட வேண்டுமாம். இப்போ தன் வாயாலேயே கக்கிவிட்டார். பேச்சுவார்த்தை நடக்கும்போது, உங்கள் ஆட்களை அனுப்பி ஆராய்ந்து உண்மையை விளங்கிக்கொள்ளுங்கள், நாங்கள் அணுஆயுத உற்பத்தியை நிறுத்திவிட்டோம் என்று கூறும்போதே, அவசரமாக ஏன் தாக்குதல் நடத்த வேண்டும்? இத்தனை அழிவுகளை சந்தித்தும் ஈரான் ஏன் அணு ஆயுதங்களை பாவிக்கவில்லை? இல்லாத ஆயுதத்தை அதனால் எப்படி பாவிக்க முடியும்? இன்னொருவன் நாட்டுக்குள் புகுந்து, அவர்களுக்கு இயற்கை வழங்கிய வளங்களை அழிக்க இவர் யார்? இரான் உயிரே அழிந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டாது, கொடுக்கவும் கூடாது. ஒருவேளை அந்த நிலை வந்தால்; அதற்காக அமெரிக்கா முழுவதும் வருந்தும் நிலை ஏற்படும். இது, எத்தனை மூடத்தனமான பேச்சு என விளங்கிக்கொள்ள அவருக்கே சுய அறிவு இல்லை. அவர்களிடம் எந்த வசதியும் இல்லை என்றால்; எப்படி இத்தனை வாரங்களாக போர் நடக்கிறது? ஏன் மேலதிக படைகளை அமெரிக்கா அனுப்ப வேண்டும்? நட்பு நாடுகளை அழைக்க வேண்டும்? நட்பு நாடுகள் மட்டுமல்ல சொந்த மக்களே இவரை கைவிட்டு இவரை வீட்டுக்கு போகும்படி போராடுகிறார்கள். அதையும் புரிந்து கொள்ளும் திறன் இவரிடம் இல்லை. "மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது." இவரின் நாட்டுக்குள் யாரும் உள்நுழைந்து அவரது வளங்களை திருட ட்ரம்ப் அனுமதிப்பாரா அல்லது உலகம் அனுமதிக்குமா? நெதன்யாகு என்கிற விஷப்பாம்பின் அறிவுரையை கேட்டு மாட்டிக்கொண்டார் ட்ரம்ப். இப்போ இருவரும் முழிக்கிறார்கள். ஈரானை அழிக்க நினைத்து இஸ்ரேலும் சேர்ந்து அழிகிறது.
-
வடக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செயற்திறனற்றவர்கள் – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு
ஹா ஹா ..... இவையெல்லாம் திடீரென முளைத்தவை போல் இவர் கதை விடுகிறார். இவர்களின் காலத்தில் தனிப்பட்ட பழிவாங்கல் கொலை, கடத்திக்கொலை, ஆட்கடத்தல், மணற்கொள்ளை இவற்றை மூடி மறைக்க இவற்றை பயன்படுத்துகிறாரா பன்னீர்ச்செல்வம் ஸ்ரீகாந்த்? அதைவிட மின்வாரியத்திற்கு கட்டணம் செலுத்தாமை, பொதுமக்களின் கட்டிடங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தல் இவையெல்லாம் சட்டத்திற்கு உடபட்டவையா? சரி இத்தனை மக்களுக்கு சேவை செய்யும் சேவையாளனை மக்கள் ஏன் தொடர்ந்து நிராகரிக்கிறார்கள்?
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
-
அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றில் கேதீஸ்வரன் சாட்சியம்!
இவரின் வாயால் ஒருநாள் மாட்டுவார் என எதிர்பார்த்திருந்தேன். ஒரு வைத்தியராகவும் சரியாக பணியாற்ற முடியவில்லை, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் மக்களுக்காக செயற்பட முடியவில்லை, மொத்தத்தில் ஒரு பண்பாளனாக பேசவும் தெரியவில்லை. அவர் மக்களுக்காக பாராளுமன்றம் போகவில்லை, வைத்தியர் சத்தியமூர்த்தியை பாழிவாங்கப்போய் தன்னை தாழ்த்திக்கொள்கிறார். எத்தனை தடவை போலீஸ் நிலையம் அழைக்கப்பட்டிருக்கிறார், நீதிமன்றம் சென்றிருக்கிறார்? அத்தனையும் அவரது பிழையான தனி நடத்தைக்காகவே. இவர் அடுத்த சிலோன் ட்ரம்ப். ஒருநாளைக்கு நாமலை புகழ்ந்து அடுத்த ஜனாதிபதி என்பார், இன்னொருநாள் சஜித்துக்கு பின்னால் ஓடுவார், சுயமாக தன் இருப்பை தக்க வைக்க முடியாத கோமாளி, இவருக்கு வாக்கு போட்ட மக்கள் வெட்க்கித் தலை குனிய வேண்டும். இதில, நடிகர் விஜய்க்கு வக்காலத்து வேறு.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026