Jump to content

தயா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    11015
  • Joined

  • Last visited

  • Days Won

    24

Everything posted by தயா

  1. யாழ் களம் நீண்ட காலமாக ஒரே பெயரில் இருப்பதினால் சடரீதியான மென்பொருளை பாவிக்க வேண்டிய தேவையினால் மோகன் அண்ணாவினால் தமிழ் யுனிகோட் எழுதியை உள் நுளைக்க முடியாமல் போய் இருக்கலாம் எண்று நினைக்கிறேன்... யாழை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் தனக்கு மிக குறைந்த தொகையாக £1000 ஆவது வேண்டும் எண்று மோகன் அண்ணா சொன்னதில் இருந்து இந்த மாற்றம் இங்கு இருக்கிறது... அதாவது சட்ட ரீதியான மென்பொருள் தேவையையும் அவர் கோடிட்டு இருந்தார்... மற்றது உங்களுக்கு தோண்றும் எழுத்து பிழைகளுக்கான காரணம் உங்களின் தேடு பொறிகளில் நிறுவ பட்டு இருக்கும் எழுத்துரு கட்டமைபே (character encoding) காரணம்... இதை விளக்கமாக சொல்வதாக இருந்தால் நிறைய சொல்ல வேண்டி வரலாம்... சுருக்கமாக சொன்னால் நாங்கள் நாளாந்தம் உபயோகிக்கும் தேடு பொறிகள் 16 bit , 32 bit எண்று முன்னே போய் கொண்டு இருக்க நாங்கள் 8 bit எழுத்துருக்களையே உபயோகித்து கொண்டு இருக்கிறோம்... யாழை குறை சொல்லி புண்ணியம் இல்லை... நீங்கள் உபயோகிப்பது கணனியாக இருந்தால் இந்த மேம்படுத்த பட்ட E-கலப்பையை உபயோகித்து பாருங்கள்... http://thamizha.org/ இல்லை IOS or android ஆக இருந்தால் நல்ல தமிழ் விசைபலகையை தேட வேண்டியதுதான்...
  2. அதெண்ணால் உண்மைதான்... !!! பாட்டிகளுக்கு போய் தண்ணியை போட்டு விட்டு உளறுவதுதானே இப்ப எல்லாம் விமர்சனம்... ! இலங்கையிலை தனக்கு சுதந்திரம் இருக்காது எண்டு போக முன்னம் தெரிந்திருக்காத கவிஞர் நீங்களும் தான் முற்றும் தெரிந்தவர்கள் எண்டு சொன்னால் நம்பவா முடியும்...???
  3. வணக்கம்... கண்டதில் மகிழ்ச்சி.....!!! உங்களின் உரையில் இருந்து ஒண்று மட்டும் எனக்கு புரிகிறது.... நீங்கள் மீண்டும் இலங்கை போக போகிறீர்கள் என்பதுதான் அது... அப்போது நீங்கள் மீண்டும் கைது செய்யபட மாட்டீர்கள்... செய்யப்படாமல் இருக்க ஆவன செய்து கொண்டு இருப்பீர்கள்... !!! உங்களுக்கு தமிழ் வெளிநாட்டு ஊடகங்கள் பெருமளவில் ஆதரவை தந்தன... அது ஜெயபாலன் எனும் தனிமனிதனுக்காக அல்ல... இலங்கை அரசின் அடக்கு முறையில் சிக்கிய ஒருவருக்கு... இதை நீங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும்... அந்த அடக்கு முறையை மழுப்பும் போக்கானது உங்களுக்கான ஆதரவை மீளாய்வு செய்யும் நிலைக்கே எல்லாரையும் கொண்டு செல்லும் என்பதை புரிந்து கொள்ள உங்களால் முடியும் எண்று நம்புகிறேன்... அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ...
  4. இப்படி ஒரு மலினமான விளம்பரமா...?? இருக்கும் இருக்கும்...
  5. சிவா அண்ணை... கவிஞர் தனக்கு இருக்கும் இருந்த அச்சுறுத்தலை மீறி ஊர் போனார் அரசியலமைப்புகளை சந்தித்தார் என்பதுவே போதுமானது அவரின் போர்க்குணத்தையும் துணிவையும் சொல்ல.... !!! விமர்சகர்களில் இரண்டு வகை.... புலிகளை விமர்சிப்பவர்களையும் கூட அப்படி வகைப்படுத்தலாம்.... ஒண்று அரசாங்கத்தை அண்டி நிண்டு கொண்டு தங்கள் தரப்பை நியாயப்படுத்த விமர்சிப்பது... மற்றது புலிகள் மீது அதிகப்படியான ஈடுபாட்டால் வருவது... கவிஞர் புலிகளிடமே போய் புலிகளை விமர்சிக்கும் இரண்டாவது வகை.... !! அதில் சந்தேகம் கிடையாது... இலங்கை அரசு எந்தக்காலத்திலும் கருத்து சுதந்திரத்தையோ தனிமனித சுதந்திரத்தையோ மதிப்பது கிடையாது... இது அனைவருக்கும் தெரிந்த ஒண்று... அங்கு சுதந்திரமாக போய் அரசியல் வேலை செய்யலாம் எண்று கவிஞர் நினைத்து போய் இருந்து இருப்பார் ஆகில் இது அவரின் மிகப்பெரிய தவறு... இல்லை இணக்க அரசியல் செய்து தமிழ் மக்களுக்கு வேண்டியதை பெற போய் இருந்து இருப்பார் ஆயின் அவருக்கு இந்த நிலை வந்து இருக்க வாய்ப்பே இல்லை.... இண்டைக்கு கவிஞர் வெளியால் விடப்பட்டதுக்கும் கூட தமிழ் ஊடகங்களே மிகமுக்கிய காரணம்... கவிஞரின் கைதை செய்தவர்கள் எந்த சீருடையிலும் வரவில்லை என்கிறது தகவல்கள்... வளக்கமான காணமல் போனோர் பட்டியலில் போய் இருந்து இருக்க வேண்டியவரை முக்கிய செய்தியாக்கி காப்பாத்திய அனைத்து ஊடகங்களுக்கும் முதலில் நண்றி...
  6. சிவா அண்ணை ..! எனக்கு நீங்கள் சொல்வதில் பூரணமாக உடன் பாடு இருக்கிறது... ஆனால் உள்ளுக்குள் பலரை போல் கேள்வியும் இன்னும் பதில் இல்லாமல் இருக்கிறது... அதை அவர் திரும்பி வரும் போது அவரிடமே காரசாரமாக கேட்கலாம் எண்று இருந்தேன்... அதை பொதுவாக கேட்கிறேன் திரும்பி வந்து அவர் பதில் அளிக்கட்டும் ... அவரின் மீதான மரியாதையை நிலைத்து வைத்திருக்க எனக்கு இதற்கு பதில் வேண்டும்... !!! கேள்வி 1 ஊர் அறிந்த அரசியல் செயற்பாட்டாளர், உலகறிந்த கவிஞர் எந்த பாதுகாப்பு முனேற்பாடும் இல்லாது ஏன் இலங்கை போனார்...??? இலங்கையில் இராணுவத்தால் நடந்த நடக்கும் கொடுமைகளை இந்த தமிழ் சர்வதேச ஊடகங்கள் சொன்னவைகளையும் அவர் நம்பவில்லையா...?? இதில் விடுதலை புலிகளின் முன் யோசனையும் தந்திரமும் போதாது எண்ற கவிஞருக்கு இப்படி என்பதை நம்பமுடியாமல் இருக்கிறமையை தவிர்க்க முடியவில்லை... கேள்வி 2 கைது செய்த பின் கவிஞரின் பேட்டியை கேட்டேன்... தனது கைதை அவர் எதிர்பார்த்து இருந்து இருக்கவில்லை என்பது புலப்பட்டது... இப்போ கேள்வி என்ன எண்றால் புலிகளை விமர்ச்சித்து புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் போய் வந்த போது புலிகள் கொடுத்த அதே மரியாதையையும் முக்கியத்துவத்தையும் அரசாங்கம் தனக்கு தரும் எண்று எதிர்பார்த்தாரா...??
  7. மன்னிக்கோணும் பிள்ளை... நான் வைகோவுக்குதான் ஆதரவு... தமிழாக்கள் ஆட்சிக்கு வாறதை நான் விரும்பவில்லை.... இல்லை சாதிக்கட்சிகள் ஏதாவது தலைமை ஏற்கலாம் முடியாவிட்டால் திராவிட கட்ச்சிதான் ஆட்ச்சிக்கு தமிழ் நாட்டி வர முடியும்... தமிழன் எல்லாம் சுயநல வாதிகள்... ( அடிமை புத்தி பாருங்கோ இப்படி மட்டும் தான் என்னாலை சிந்திக்க முடியும்... )
  8. இப்ப என்ன பதில் எண்டால்... சீமான் தேவையே இல்லாமல் தமிழ் மக்களுக்காக நாடகம் போடுகிறார்... நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தை வல்வளைப்பு செய்தமையாலேயே சுவர் இடிக்கப்பட்டது.... சீமான் தனது வளர்ச்சிக்காக அரசியல் செய்கிறார்... வராவிட்டால் ஏன் வரவில்லை...?? வந்தால் அரசியல் செய்கிறார்...! இதுதான் எங்களின் பதில்... முடிஞ்சால் மோதிப்பாருங்கள்....
  9. அப்படி இல்லை எண்றால் [img= படத்தினுடைய லிங் ] எண்று இடைவெளி இல்லாது எழுதுங்கள்..
  10. இனிமேல் வருவன் எண்டு தான் நினைக்கிறன்... இதிலை எது எங்கட கையிலை இருக்கு... இருக்கிறது பத்து விரல் மட்டும் தானே....
  11. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ்...
  12. MP4 (லிங்கை) வீடியோவை எப்படி நேரடியாக யாழில் இணைப்பது...?? நான் நினைக்கிறேன் யாழ்அன்பு வின் அவதாரில் இருந்த படம் வேலை செயாததால் வந்த பிரச்சினையாக இருக்க வேண்டும் நெடுக்கு... அனேகமாக யாழ்அன்பு தான் சரி செய்ய வேண்டும்.
  13. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் கு.சா அண்ணை....!
  14. 1780 களில் சிவகங்கையில் வேலுநாச்சியார் தலைமையில் போராடி வீரச்சாவடைந்த முதல் தமிழ் தற்கொடை போராளி குயிலி க்கும் வீரவணக்கங்கள்...
  15. அஞ்சலிகள்... அராலி சந்தியில் வைத்து வட மாகான கட்டளை தளபதிகளான கொப்பேகடுவ கூட்டத்துக்கு குண்டு வைத்தமைக்காக தலைவரிடம் பரிசு வாங்கியவர்கள் கப்ரன் துரை அண்ணை தலைமயிலான ஏழு பேரில் ஒருவன் வீரமணி...! விசேட வேவுப்பிரிவு ஆரம்பிக்க பட்டதின் பின்னர் அவர்களால் செய்யப்பட்ட முதலாவது தாக்குதலும் அதுதான்...
  16. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்..

  17. பிந்திய வாழ்த்துக்கள்... சில சமூக வளி செய்திகள் எனது மண்டைக்குள் காலதாமதமாகவே உறைக்கின்றது... அதனால் வந்த வழு இது... மன்னிக்கவும்... மற்றும் இந்த வாரம் பிறந்தநாள் கொண்டாடும் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்...
  18. வீரனுக்கு வணக்கங்கள்... படத்துக்கு நண்றி மின்னல்...
  19. அடையாளப்படுத்துவது கொஞ்சம் கடினமாக இருப்பது மிகவும் உண்மை... காலம் எல்லா பாம்புகளையும் வெளியில் கொண்டு வரும் எண்டு நம்புகிறன்... KP க்கு ஒருவருசம் எண்டால் இவர்களுக்கும் எண்டும் காலம் இருக்கும்...
  20. உண்மையை சொன்னால் அவருடன் கூட வேலை செய்தவர்களால் அவர் விலக்க பட்ட பின்னர் கூட அவர் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்து இருந்தார்கள்... அவர் பிழையாக செயற்படுவார் எண்று யாரும் நினைத்து கூட பார்த்து இருக்கவில்லை... அதுதான் உண்மை...! KP எந்த விதமான பெரிய பிரச்சினையாலும் விலக்கி வைக்கப்படவில்லை... நீண்டகாலமாக அதிகப்படியான செலவுகளும் அதுக்கான கணக்குகளை கொடுக்காமையும் தான், நீயே இப்படி செய்தால் உனக்கு கீழை இருப்பவங்கள் எப்படி ஒழுங்கா இருப்பாங்கள் எண்டு கேட்டு அவரிடம் இருந்து பொறுப்புக்கள் வாங்கப்பட்டன...! தாய்லாந்தில் நடந்த பேச்சுக்களின் போது கருணாவுக்கும் KP க்கும் நேரடியாக ஏற்பட்டு இருந்த தொடர்பு தொடர்ந்ததை யாரும் தெரிந்து கொள்ள இல்லை... KP யின் மாற்றத்துக்கு கருணாவின் பங்கு அளப்பரியது... KP மட்டும் அல்ல வேறு யாராக இருந்தாலும் நீங்கள் விசுவாசமாக தான் இருக்கிறார்களா எண்று பார்க்க யாராலும் பரீட்சை வைத்து கொண்டு இருக்க முடியாது... இருந்த ஆள் பற்றாக்குறைக்குள் இதவேறை செய்து இருக்க வேண்டும் எண்டு சொல்வது நடக்க கூடிய விடயமும் இல்லை...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.