Jump to content

தூயவன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8398
  • Joined

  • Last visited

  • Days Won

    8

தூயவன் last won the day on November 5 2014

தூயவன் had the most liked content!

About தூயவன்

  • Birthday 05/02/1984

Contact Methods

  • MSN
    yarlthuyawan@hotmail.com
  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    யாழ்களம்

Recent Profile Visitors

10207 profile views

தூயவன்'s Achievements

Experienced

Experienced (11/14)

  • Very Popular Rare
  • Week One Done
  • One Month Later
  • One Year In
  • Conversation Starter

Recent Badges

342

Reputation

  1. இஸ்ரேலில் 20 வீதம் முஸ்லீம்கள் தான். இஸ்ரேல் என்ற நாட்டை அங்கிகரிப்பவர்களுக்கும், அங்கிகரிக்காதவர்களுக்கும் தான் இங்கே பிரச்சனை. அவர்கள் பணம் கொடுக்கின்றார்கள் என்பதற்காக பணத்தை வாங்கி நிலத்தை விற்றுவிட்டு தாம்- தூம் என்று ஆடக்கூடாதல்லவா? இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியா, இலங்கை. ஈரான் உற்பட்ட பல நாடுகள் இஸ்ரேல் உருவான காலமும் இஸ்ரேல் உருவானதும் ஒரே காலப்பகுதி தான். இலங்கையில் வெள்ளைக்காரர் கைப்பற்றாவிடின் 3 தனிநாடுகளாக இருந்திருக்கும். இந்தியா கூட அப்படித் தானே இருந்தது. ஆனால் எல்லோருக்கும் இஸ்ரேல் தான் பிரச்சனை
  2. மொசாட் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுத்தது. அமெரிக்காவைப் பொறுத்தவரை எவன் தனக்கு இசைவாக வருவான் என்று பார்க்கும். அந்தச் சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பாவிக்காவிடின் அவ்வளவு தான். சரி உங்களிடம் ஒரு கேள்வி. சிங்கள அரச பயங்கரவாதத்தின் செயலால் இன்று தமிழர்கள் வடக்குக் கிழக்கை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றோம். உங்களுக்குச் சொந்தமாக நிலம் இருந்தும் அடுத்தடுத்த தலைமுறை அங்கே செல்லவில்லை. அப்படியே அந்த நிலத்தைச் சிங்களவர்கள் ஆக்கிரமிக்கின்றார்கள். உங்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை திருப்தியாக இருந்தததால் இப்படியே இருந்து விடுகின்றீர்கள். 100 வருடம் கழித்து இங்கே புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டு உங்களின் பூட்டக் குழந்தைகள் மீளவும் வடக்குக் கிழக்கில் குடியேற, போராடி தமிழீழத்தைப் பெற்றால் அவர்களின் நிலை என்ன? ஏன் கேட்கின்றேன் என்றால் ஹட்லர் கொல்லும்வரை வெளிநாட்டு வாழ்க்கை சரி என்று வாழ்ந்த யூதர் பின்னாடி தான் தங்களின் மூதாதையர் வாழ்ந்ததாக நம்பும் நிலத்துக்கு மீளச் செல்கின்றனர். அதைப் பணம் கொடுத்து வாங்கிமீள உருவாக்குகின்றனர். அதில் தவறுண்டா?
  3. ஏன் அவர் தற்கொலை செய்திருக்கலாமே. இஸ்ரேல் அதைச் சொல்ல முன் வராது. அவர் தியாகி ஆகிவிடுவார் என்பதால். மற்றும்படி எங்களின் தலைவர் அவர்கள் வீரமரணம் அடையும்போது எப்படித் தலையில் இருந்ததோ, அது போலத் தான் சின்வார் தலையும் இருந்தது. கீழ்த் தாடையில் சுட்டுத் தற்கொலை செய்தால் தலை அப்படித் தான் ஆகும் என்று தலைவர் சொன்னதாக ஒரு பதிவு முன்னாடி படித்திருந்தேன். சின்வாருக்கும் தெரியும், தன்னைக் கண்டுவிட்டார்கள் தப்பவே முடியாது என்று.
  4. மகிந்த, கோத்தபாh ஆட்சிக்கு வரும்போது பௌம்மிக் கொண்டு இருப்பதும் ரணில் காலத்தில் வீர வசனம் பேசுவதும் ஏற்புடையதா என்ன?
  5. 2016 தேர்தல் நேரம் நான் தமிழகத்தில் இருப்பேன் என நினைக்கின்றேன். ஒரு பிரச்சாரமும் செய்யப் போவதில்லை. ஆனால் சில உதவிகள் செய்வேன்....
  6. இந்தியா என்ற வெறுப்பு என்பது எம் மீது இருக்கின்றது தான். அதை 87களில் இந்தியாவே ஆரம்பி வைத்தது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகாலத் தமிழர் என்ற தொடர்பினை வெறும் இந்தியக் குடியரசு என்று நூற்றாண்டு தாண்டாத ஒரு அடையாளம் தடுத்து விடும் என்றால் எப்படி ஏற்பது? தமிழகம் வளர்ச்சி உற்றால் அது எங்களுக்கும் பெருமை தானே! கொசுறு- சோழர்வழி எனத் தமிழகத்தை விட அதிகமாக எம்மை நம்பிக் கொள்பவர்கள் நாங்கள்.
  7. தமிழகத்தில் தடை செய்யப்பட வேண்டிய முதலாவது விடயம் விளப்படப் ”போஸ்டர்”கள். நகரையே அலங்கோலம் செய்கின்றன. இரண்டாவது முக்கியமாகச் செய்யப்பட வேண்டியது கழிவுநீர் வாய்க்கால்கள். இது இல்லாமல் நிறையப் பிரச்சனைகள். தண்ணீர் தேங்கி நிற்றல், ஆற்றுநீர் மாசுபடுதல்... உற்பட பல. பல உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் கழிவுகளை ஆற்றில் கலக்க இதுவே காரணமும் ஆகும். மேற்கு நாடுகளில் இவ்வளவு அநியாயத்துக்குப் புல் வளர்க்கின்றார்கள். அழகுக்காக இப்படிச் செலவளிக்க வேண்டுமா என்று யோசித்ததுண்டு. ஆனால் உண்மையில் கழிவுநீர் வாய்க்கால்களில் சேறு கலக்காமல் இருக்க புல் வளர்ப்பது பெரும்பங்கு வகிக்கின்றது. அத்தோடு புற்கள் நிலத்தடி நீரை உறுஞ்சாமல் இருப்பதும் ஒருவகையான நன்மையானதே. மரங்கள் வளர்ப்பதைக் காட்டிலும் புற்களின் தேவை, நல்லது என்றே நினைக்கின்றேன். தமிழ்நாடு இந்தியாவில் ஒரு தலைசிறந்த மாநிலமாக மாற வேண்டும். பொருளாதாரரீதியாகத் தமிழர்கள் உயர்வடைந்தால் எவனாலும் எங்களை ஏவல் செய்ய முடியாது. பெற்றோலியப் பொருட்களின் விலை அதிகரிக்கும்போது, ஒரு காலத்தில் பணம்படைத்தவர்கள் மட்டுமே வாங்கும் நிலை உருவாக்கும். அப்போது உலகத்தின் பொருளாதரம் ஒருசில நாடுகளின் கைகளுக்குச் சென்றுவிடும். அப்போது நம்மவர்கள் தொடர்ச்சியாக இப்படி மானியம், இலவசம் என்ற சொற்களின் அர்த்தங்கள் மறந்துவிடக்கூடும். அதைத் தவிர்க்க எங்களின் வருவாய்களை உயர்த்த வேண்டும்.
  8. அப்படி ஏன் கிறிஸ்தவர்கள் ஏற்கமறுக்கின்றார்கள். இஸ்மயில் ஐ வைப்பாட்டிக்குப் பிறந்தவராக அசிங்கப்படுத்த வேண்டும்?
  9. எனக்கா சொல்கின்றீர்கள் மருதங்கேணி? பிரச்சனையில்லை.. இந்தப் பிள்ளைபிடிகாரர்கள் குழந்தைகளை மதம் மாற்றத் தான் வெளிநாட்டில் உதவி பெறுகின்றோம் என்று பணம் பெறுவரகளிடம் சொல்லி வாங்க வேண்டியது தானே...உதவுகின்ற எவருமே சாதி, மதம் பாற்று உதவுவதில்லை. ஆனால் தரகர்கள் தங்களின் புத்தியைக் காட்டி விடுகின்றார்கள்....
  10. இஸ்லாமியத் தமிழருக்கும், எமக்கும் பிரச்சனை என்பது இந்தியப் பார்ப்பானிகள் தானாம் பிரச்சனை எங்கே போய்த் தலையை முட்ட? ஏதாவது வைத்தியசாலையில் இருந்து தப்பிய மாதிரி செய்தி யாராச்சும் படித்தீர்களா? சிவசேனை என்பது, சிவனுடைய சேனையல்ல, மராட்டிய அரசன் வீரசிவாஜி சேனை என்பதே அர்த்தமாகும். விளலுக்கு நீர் இறைக்க நேரமில்லை... எனக்கு காலையில் வடிவாகப் போகாததற்கும், இந்து பார்ப்பான, ஆதிக்க, மதவெறி.....க்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்கா என ஆராய வேண்டும். நன்றி வணக்கம்.
  11. சாண்டமருதன் வழக்கம் போல புசத்துகின்றார். இந்தியா ஒரு தேசமாக மாற்றம் பெற்றது ஐரோப்பியர் வருகைக்குப் பிற்பாடு என்ற ஒரு அடிப்படை அறிவு இல்லாத ஒருவரோடு விவாதம் செய்வது என்பது ஒரு முட்டாள்தனமான செயலாகவே உணர்கின்றேன். அதற்கு ஆமாம் போடும் கூட்டம் வேறு.... அதற்கு முதல் பிரிந்திருந்த அரசர்கள் மொழிவாரியான இனமாகப் போராடவில்லை. ஆனால் இந்துக்களாக இருந்ததற்காக ஒரே தேசமாக நினைத்து வாழவில்லை. இஸ்லாமை இவர் பின்பற்றுகின்றார் யாரோ எழுதியிருந்தனர்... பிடித்திருந்தால் சுன்னத் செய்யுங்கள்... இங்கு வந்து சொறியாதீர்கள்...
  12. ஏழைகளுக்கு உதவ என்பது வேறு, ஆள்பிடிக்க என்பது வேறு... நீங்கள் சுயமாக ஒரு உணர்வோடு முடிவுக்கு வந்து எந்த மதத்தையும் பின்பற்றுங்கள். ஆனால் ஆள்பிடிப்பவர்களின் பணத்துக்காகப் போகாதீர்கள். அவ்வளவு தான்... சிலர் தாங்கள் புதுமையானவர்கள் என்று காட்டவும் சில மதம் பின்பற்றுவர்கள் எனவும் அறிந்துள்ளேன்
  13. இதே வேளை இந்து மதத்தில் மீளாய்வு என்பது அவசியம். ஒரு விடுதலைப் போராட்டமாகட்டும், ஒரு சீர்திருத்தமாகட்டும் மீளாய்வு செய்யாது விடின் அழிந்துவிடும். பாதிரிமார்களின் குழந்தைகளோடு பாலியல் வன்முறைகளை வத்திக்கான் கண்டு கொள்ளாது விடுவது போன்றே, சில சாமிகளின் பாலியல் நடவடிக்கைகளை நாங்கள் கண்டு கொள்ளாது விடுவதுமாகும். குறித்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். குப்பைகளுக்கு மத்தியில் இருந்தால் குப்பைகள் போலவே எல்லாமே தோன்றும், அடுத்தது சாதி... சாதி என்பது எப்படி நீக்கலாம் என்பதை ப் பெரிய தத்துவஞானிகள் தான் பதில் சொல்ல வேஷ்டும். சாதிப் பிரச்சனை சாதிப் பிரச்சனை என்று சத்தமிடுகின்றார்களே தவிர, அதை நீக்குவதற்கு வழி சொன்னால் நன்றாக இருக்கும்... இது வரை என் வாழ்வில் நான் என் நண்பர்கள், பழகியவர்கள் எவரிடமும் சாதி பற்றி அறியவோ, அது பற்றிக் கதைக்கவோ நினைத்ததில்லை. அப்படி நினைத்து யார் கூடவும் பழகியதில்லை. எதிர்வரும் காலத்திலும் அப்படித் தான் இருப்பேன். திருமணம் என்பதிலும் அப்படியே இருக்க முயற்சி செய்வேன். இது தான் ஒரு தனிமனிதனாக என்னால் முடியக்கூடிய ஒரு விடயம்...
  14. கத்தோலிக்கம் பற்றி வெள்ளையடிக்க முயல்பவர்களுக்கு ஒரு விடயம். கத்தோலிக்கம் எப்படிப் பரப்பப்பட்டது ஈழத்தில் என்பதை வரலாற்றில் மறைக்க முடியாது என நினைக்கின்றேன். ஈழத்தில் உள்ள பெரும்பாலான இந்துக்கோவில்களை இடித்துத் தானே கத்தோலிக்கம் பரப்பப்பட்டது. பலருடைய கிணறுகளில் கோவில் விக்கிரகங்கள் முதல், சைவ அடையாளங்கள் ஒளித்து வைக்கப்பட்டன. அப்படி ஒரு செயலைத் தான் போத்துக்கேயரும், ஒல்லாந்தரும் நடத்தி மதப் பிரச்சாரம் செய்தனர். அப்படியிருக்கும்போது எம்மை ஆதிக்கம் செலுத்த வந்தவர்களின் பின்னால் போய்விட்டு, அதற்கு நன்றாகத் தான் வெள்ளை அடிக்கின்றீர்கள். இதைப் பற்றிக் கதை்ததால் சாத்தான் , மதவாதம் அது இது என்பார்கள். செய்தவர்கள் தப்பில்லை,செய்ததைச் சொன்னால் மட்டும் தப்பு ஆகுமா சில வருடங்களுக்கு முன்பு ஒரு விடயம் பற்றி அறிந்து கொண்டேன். அது உண்மையானதா இருக்குமா என்று தெரியவில்லை. கிழக்கில் வற்றாப்பளை அம்மன் போல மேற்கில் இருந்த அம்மன் கோவில் மீது தான் மடுத் தேவாலயம் கட்டப்பட்டதாக. அதற்கு எந்த ஆதாரமும் சொன்னவரால் சொல்லப்படவில்லை என்பதால் அதைப் பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை...... யாரிடமாவது அது பற்றி ஏதும் தகவல் உண்டா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.