Everything posted by தூயவன்
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
கோத்தபாயா அரசு பொருளாதார சிக்கலால் வீழ்ந்தபோது, பெருங்குழப்பம் இலங்கையில் நடந்து கொண்டிருந்த காலத்தில் அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் சென்று அங்கு தமிழ்த் தலைவர்களாக இருந்தவர்களைச் சந்தித்தார். ஏன் சந்தித்தார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த சந்தர்ப்பத்தைப் புத்திசாலித்தனமாகத் தமிழர்கள் பாவிக்கின்றார்களா என்று கூடப் பார்க்க அவர் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் தகுதியற்ற தலைமைகள் காரணமாக அதை நோக்கி நாம் நகரமுடியவில்லை. உலக நாடுகளுக்கு ஒரு தேவை இருக்கின்றது. எங்களுக்கும் ஒரு தேவை இருக்கின்றது. இதைப் புரிந்து நகர்வதே சிறப்பு இன்று பற்றிக் பிரவுண் மாநகர முதல்வராக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அவர் ஒன்ராரியோவுக்கான முதலமைச்சராக வந்திருக்க வேண்டியவர். சில சதிகள் காரணமாக அது கைக்கூடாமல் போய்விட்டிருந்தது . அவர் தமிழ் மக்களுக்கு எந்த அநீதியும் நடக்கவில்லை என்று சொல்கின்ற சிங்களவர்களுக்கு சொன்ன காட்டமான பதில். அவ்வளவே
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமான் எப்படியாகவும் இருக்கட்டும். சரி. நீங்கள் சொல்லுங்கள். இந்தப் 16 வருடத்தில் தேசியத்தலைவரினதும், மாவீரர்களினதும் கனவுக்காக என்ன செய்தீர்கள். செய்யவில்லை என்றால் மூடிட்டு போவது தான் தங்களுக்குச் சரியாக இருக்கும். இந்தப் 16 வருடமும் சீமானோ, நாம் தமிழரோ புலிகள் பெயர் சொல்லாமல் எந்திரிக்கவில்லை. ஏதோ இன்று வரை புலிகளின் பெயரை தியாகத்தை அடுத்த தலைமுறைக்குக் காவிச் சொல்வது அவர்கள் தான். உங்களால் செய்ய முடியாத ஒன்றை மற்றவர்கள் செய்தால் குழப்பாமல் இருங்கள். அவ்வளவு தான் விஜய லட்சுமியும் சீமானும் 2008ம் காலப்பகுதியில் ஆக வாழ்ந்தார்கள். பின்னாடி அந்த வாழ்க்கை சரி வரவில்லை என்று பிரிந்து போய் விட்டார்கள். அதில் உங்களுக்கு ஏதும் பிரச்சனை உள்ளதா? ராமசாமி மணியம்மையைத் திருமணம் செய்தபோது இருந்த நியாயங்களை விடச் சீமான் விஜயலட்சுமி கூட வாழ்ந்ததில் நிறைய உண்டு. அதனால் நீங்கள் வருந்த வேண்டாம்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சமாதான காலத்தில் தினமும் 1 டாலர், என்ற மாதிரி ஒரு திட்டத்தைப் புலிகள் வெளிநாட்டுத் தமிழ் மக்களிடம் கொண்டு வந்தார்கள். அதற்கே பெரும் பிரச்சனை பண்ணி, அந்தந்த நாட்டு அரசுகளிடம் போட்டுக் கொடுத்துப் புலிகளுக்கு தடைகள் விழவும் சிலர் சிறை செல்லவும் காரணங்களை உருவாக்கியவர்கள், சீமானுக்கு ஏதோ புலம்பெயர் நாடுகளில் இருந்து கோடிகளாகப் பணம் போவதாக உருட்டுவது எல்லாம் நகைச்சுவை. ஐயா. பொன் தியாகத்தின் செலவுகளுக்குக் கூட நாம் தமிழர் தான் செய்து கொண்டிருக்கின்றது. இங்கே சீமான் பொய் பேசுகின்றார், புரணி பேசுகின்றார் என்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் 15 வருடங்களாக ஈழத்தையே பேசுகின்றார். வைகோ, கௌத்தூர் மணி எல்லாம் 15 வருடங்களாக எங்கே சென்றுவிட்டார்கள். புலிகள் அழிந்து விட்டார்கள் என்று அப்படியே தூக்கி எறிந்துவிட்டார்கள். ஒரு வேளை சீமான் இல்லை என்றால் இவர்கள் அங்கே ஒரு போராட்டம் நடந்தது என்பதையே தமிழக மக்களிடம் மறைத்திருப்பார்கள் அல்லவா? சீமான் ஈழப் போராட்டத்தில் மற்றவர்கள் போல விளக்கம் உள்ளவர் அல்ல. என்ன, எவற்றை எப்போது பேச வேண்டும் என்ற தெளிவின்மை அவரது குறைபாடு தான். புலிகளின் விருந்துபுசாரத்தை விட, அங்கே நடந்த போரக்குற்றங்களை முன்னிலைப்படுத்தி இருக்க வேண்டும். அவர் பேசிய ஆமைக்கறி விடயம் இப்படி. எதிராக மாற்றப்படும் என்பதை அவர் எதிர்பார்த்து இருக்கமாட்டார். ஆனால் அது ஒன்றும் பெரிய குற்றமல்ல. தலைவர் தமிழகத்தில் ஏற்படுத்த நினைத்த மாற்றத்தை சரியாகவே உருவாக்கினார். புதுவை இரத்தினதுரையின் குரலில் தமிழக ஆதரவை வேண்டி வெளியிடப்பட்ட 2 ஒளிப்பதிவுகளை வன்னியரசு சரியாகத் தமிழக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை. அதைச் சீமான் கிட்ட கொடுத்துவிட்டிருக்கலாம். கருணா, டக்ளஸ் பற்றிப் பேசதா வாய்கள், எதற்காகச் சீமானை விழுத்தத் துடிக்கின்றார்கள்
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
இலங்கையரசு மே 16ம் திகதியை ஏன் தெரிவு செய்தது? இந்தியாவில் காங்கிரஸ்,- திமுக ஆட்சி மாற்றம் வந்துவிட்டதா என்று காத்திருந்து தான் மே 16ம் திகதியைத் தெரிவு செய்தது. ஒருவேளை வேறு அரசுகள் வந்திடக் கூடும் என்ற அவதானிப்புக்காக தேர்தல் முடிவு வரை சிங்கள அரசு பொறுத்திருந்தது. திமுக மற்றும் காங்கிரஸ் முழுமையான ஆதரவோடு தான் சிங்கள அரசு முள்ளிவாய்க்கால் படுகொலையை நடத்தியது. அதனால் தமிழகத்தில் ஏற்பட்டிருந்த எந்தப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்த முடியாது. அவர்கள் இன்னமும் பெரும்போராட்டமாகக் கொண்டு சென்றிருந்தால் மனிதப்படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் ஒரு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்து சில நாட்களில் தான் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, போர் நிறுத்தம் வந்ததாகத் தமிழக மக்களை நம்ப வைத்தார். கருணாநிதிக்குக் கொடுக்கப்பட்ட பணி அது தான். தமிழகத்தில் எந்தவொரு எழுச்சியும் வராமலும், புலிகளுக்கான மருத்துவ உதவிகள் கிடைக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது. அதை அவன் சரியாகவே செய்தான். கடைசிவரை புலிகளால் ஒரு வலிந்த தாக்குதலைச் செய்யவே முடியவில்லை. எல்லாமே. முறியடிப்புத் தாக்குதல் தான். வலிந்த தாக்குதல் செய்து கொள்ளும் அளவு போராளிகளுக்கான மருத்துவ தேவைகளை அறுதிவரை பூர்த்தி செய்ய முடியவில்லை. அது அவர் விருபப்ம். உங்களுக்கு என்ன அதில் பிரச்சனை? அப்படிச் சொல்லலவில்லை என்றால் பெரியார் தான் சொல்லிக் கொடுத்தாக நீங்கள் பெருமை பேசுவீர்கள். அசோகர் காலத்துக் கல்வெட்டில் கூடத் தமிழும் பாளியும் தான் இருக்கின்றது. சமஸ்கிருதம் இல்லவே இல்லை. அப்படி இருந்தும் சமஸ்கிருதம் 20 ஆயிரம் பழையது என்று சங்கிகள் உருட்டும்போது உங்களுக்கு கேள்வி எழவில்லை அல்லவா?
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
ஈழத்தை வைத்து தமிழகத்தில் என்ன அரசியல் எப்படிப் பண்ணலாம்?? சும்மா வாயில் வந்தததை எல்லாம் பிதற்றக் கூடாது. அதையும் மீறிச் சீமான் செய்கின்றார் என்றால் வாழ்த்தப்பட வேண்டியவர் தான். ஈழத்தில் போர் உச்சத்தை அடையும்போது தமிழகத்தில் போராட்டங்கள் செய்து தமிழர் அழிப்பை நிறுத்தப் புலிகள் முயன்றார்கள். அதற்காகத் தான் தமிழகத்தில் இருந்து பிரபல்யமான இயக்குனர்கள், அரசியல்வாதிகளை வன்னிக்கு அழைத்தனர். வந்தவர்களில் சீமான் மட்டுமே உண்மையாகவும், நேர்மையாகவும் இன்று வரை நிற்கின்றார். ஒரு வேளை தமிழக மக்கள் அன்று ஆதரவுப் போராட்டங்களை விரிவுபடுத்தியிருந்தால் இந்தளவு ழப்பு நடந்திருக்காது. காசா மக்களுக்கு இஸ்லாமிய மக்கள் செய்த போராட்டங்களால் எப்படி அழிவு குறைக்கப்பட்டபோதோ அது போல எமக்கும் நடந்திருக்கும்.
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
அப்படி என்ன மாறி மாறிப் பேசுகின்றார். ஒரு கருத்து என்பது அந்த நேரத்தில் அவர்கள் சொல்கின்ற கருத்துக்கு விமர்சனமே தவிர தனிநபர் விரமர்சனம் அல்ல. சீமான் அதை; சரியாகத் தான் செய்கின்றார். அண்ணாமலை, ஸ்ரானின் சொல்லுகின்ற, செய்கின்ற செயல் சரியாக இருப்பதாக அவர் நம்பினால் அதை ஆதரிகின்றார். இல்லை என்றால் எதிர்க்கின்றார். முத்தரசன் போல திமுக கொத்தடிமையாக திமுக செய்கின்ற அனைத்து தவறுகளையும் வாங்கிய 25 கோடிப் பணத்துக்காக அடவு வைக்கவில்லை
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேலில் 20 வீதம் முஸ்லீம்கள் தான். இஸ்ரேல் என்ற நாட்டை அங்கிகரிப்பவர்களுக்கும், அங்கிகரிக்காதவர்களுக்கும் தான் இங்கே பிரச்சனை. அவர்கள் பணம் கொடுக்கின்றார்கள் என்பதற்காக பணத்தை வாங்கி நிலத்தை விற்றுவிட்டு தாம்- தூம் என்று ஆடக்கூடாதல்லவா? இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியா, இலங்கை. ஈரான் உற்பட்ட பல நாடுகள் இஸ்ரேல் உருவான காலமும் இஸ்ரேல் உருவானதும் ஒரே காலப்பகுதி தான். இலங்கையில் வெள்ளைக்காரர் கைப்பற்றாவிடின் 3 தனிநாடுகளாக இருந்திருக்கும். இந்தியா கூட அப்படித் தானே இருந்தது. ஆனால் எல்லோருக்கும் இஸ்ரேல் தான் பிரச்சனை
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
மொசாட் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுத்தது. அமெரிக்காவைப் பொறுத்தவரை எவன் தனக்கு இசைவாக வருவான் என்று பார்க்கும். அந்தச் சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பாவிக்காவிடின் அவ்வளவு தான். சரி உங்களிடம் ஒரு கேள்வி. சிங்கள அரச பயங்கரவாதத்தின் செயலால் இன்று தமிழர்கள் வடக்குக் கிழக்கை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றோம். உங்களுக்குச் சொந்தமாக நிலம் இருந்தும் அடுத்தடுத்த தலைமுறை அங்கே செல்லவில்லை. அப்படியே அந்த நிலத்தைச் சிங்களவர்கள் ஆக்கிரமிக்கின்றார்கள். உங்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை திருப்தியாக இருந்தததால் இப்படியே இருந்து விடுகின்றீர்கள். 100 வருடம் கழித்து இங்கே புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டு உங்களின் பூட்டக் குழந்தைகள் மீளவும் வடக்குக் கிழக்கில் குடியேற, போராடி தமிழீழத்தைப் பெற்றால் அவர்களின் நிலை என்ன? ஏன் கேட்கின்றேன் என்றால் ஹட்லர் கொல்லும்வரை வெளிநாட்டு வாழ்க்கை சரி என்று வாழ்ந்த யூதர் பின்னாடி தான் தங்களின் மூதாதையர் வாழ்ந்ததாக நம்பும் நிலத்துக்கு மீளச் செல்கின்றனர். அதைப் பணம் கொடுத்து வாங்கிமீள உருவாக்குகின்றனர். அதில் தவறுண்டா?
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
ஏன் அவர் தற்கொலை செய்திருக்கலாமே. இஸ்ரேல் அதைச் சொல்ல முன் வராது. அவர் தியாகி ஆகிவிடுவார் என்பதால். மற்றும்படி எங்களின் தலைவர் அவர்கள் வீரமரணம் அடையும்போது எப்படித் தலையில் இருந்ததோ, அது போலத் தான் சின்வார் தலையும் இருந்தது. கீழ்த் தாடையில் சுட்டுத் தற்கொலை செய்தால் தலை அப்படித் தான் ஆகும் என்று தலைவர் சொன்னதாக ஒரு பதிவு முன்னாடி படித்திருந்தேன். சின்வாருக்கும் தெரியும், தன்னைக் கண்டுவிட்டார்கள் தப்பவே முடியாது என்று.
-
யாழ்ப்பாணம் வந்தாராம் ரணிலார்- பா.உதயன்
மகிந்த, கோத்தபாh ஆட்சிக்கு வரும்போது பௌம்மிக் கொண்டு இருப்பதும் ரணில் காலத்தில் வீர வசனம் பேசுவதும் ஏற்புடையதா என்ன?
-
சென்னை மெட்ரோ ரயில்...
2016 தேர்தல் நேரம் நான் தமிழகத்தில் இருப்பேன் என நினைக்கின்றேன். ஒரு பிரச்சாரமும் செய்யப் போவதில்லை. ஆனால் சில உதவிகள் செய்வேன்....
-
சென்னை மெட்ரோ ரயில்...
இந்தியா என்ற வெறுப்பு என்பது எம் மீது இருக்கின்றது தான். அதை 87களில் இந்தியாவே ஆரம்பி வைத்தது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகாலத் தமிழர் என்ற தொடர்பினை வெறும் இந்தியக் குடியரசு என்று நூற்றாண்டு தாண்டாத ஒரு அடையாளம் தடுத்து விடும் என்றால் எப்படி ஏற்பது? தமிழகம் வளர்ச்சி உற்றால் அது எங்களுக்கும் பெருமை தானே! கொசுறு- சோழர்வழி எனத் தமிழகத்தை விட அதிகமாக எம்மை நம்பிக் கொள்பவர்கள் நாங்கள்.
-
சென்னை மெட்ரோ ரயில்...
தமிழகத்தில் தடை செய்யப்பட வேண்டிய முதலாவது விடயம் விளப்படப் ”போஸ்டர்”கள். நகரையே அலங்கோலம் செய்கின்றன. இரண்டாவது முக்கியமாகச் செய்யப்பட வேண்டியது கழிவுநீர் வாய்க்கால்கள். இது இல்லாமல் நிறையப் பிரச்சனைகள். தண்ணீர் தேங்கி நிற்றல், ஆற்றுநீர் மாசுபடுதல்... உற்பட பல. பல உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் கழிவுகளை ஆற்றில் கலக்க இதுவே காரணமும் ஆகும். மேற்கு நாடுகளில் இவ்வளவு அநியாயத்துக்குப் புல் வளர்க்கின்றார்கள். அழகுக்காக இப்படிச் செலவளிக்க வேண்டுமா என்று யோசித்ததுண்டு. ஆனால் உண்மையில் கழிவுநீர் வாய்க்கால்களில் சேறு கலக்காமல் இருக்க புல் வளர்ப்பது பெரும்பங்கு வகிக்கின்றது. அத்தோடு புற்கள் நிலத்தடி நீரை உறுஞ்சாமல் இருப்பதும் ஒருவகையான நன்மையானதே. மரங்கள் வளர்ப்பதைக் காட்டிலும் புற்களின் தேவை, நல்லது என்றே நினைக்கின்றேன். தமிழ்நாடு இந்தியாவில் ஒரு தலைசிறந்த மாநிலமாக மாற வேண்டும். பொருளாதாரரீதியாகத் தமிழர்கள் உயர்வடைந்தால் எவனாலும் எங்களை ஏவல் செய்ய முடியாது. பெற்றோலியப் பொருட்களின் விலை அதிகரிக்கும்போது, ஒரு காலத்தில் பணம்படைத்தவர்கள் மட்டுமே வாங்கும் நிலை உருவாக்கும். அப்போது உலகத்தின் பொருளாதரம் ஒருசில நாடுகளின் கைகளுக்குச் சென்றுவிடும். அப்போது நம்மவர்கள் தொடர்ச்சியாக இப்படி மானியம், இலவசம் என்ற சொற்களின் அர்த்தங்கள் மறந்துவிடக்கூடும். அதைத் தவிர்க்க எங்களின் வருவாய்களை உயர்த்த வேண்டும்.
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
அப்படி ஏன் கிறிஸ்தவர்கள் ஏற்கமறுக்கின்றார்கள். இஸ்மயில் ஐ வைப்பாட்டிக்குப் பிறந்தவராக அசிங்கப்படுத்த வேண்டும்?
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
எனக்கா சொல்கின்றீர்கள் மருதங்கேணி? பிரச்சனையில்லை.. இந்தப் பிள்ளைபிடிகாரர்கள் குழந்தைகளை மதம் மாற்றத் தான் வெளிநாட்டில் உதவி பெறுகின்றோம் என்று பணம் பெறுவரகளிடம் சொல்லி வாங்க வேண்டியது தானே...உதவுகின்ற எவருமே சாதி, மதம் பாற்று உதவுவதில்லை. ஆனால் தரகர்கள் தங்களின் புத்தியைக் காட்டி விடுகின்றார்கள்....
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
இஸ்லாமியத் தமிழருக்கும், எமக்கும் பிரச்சனை என்பது இந்தியப் பார்ப்பானிகள் தானாம் பிரச்சனை எங்கே போய்த் தலையை முட்ட? ஏதாவது வைத்தியசாலையில் இருந்து தப்பிய மாதிரி செய்தி யாராச்சும் படித்தீர்களா? சிவசேனை என்பது, சிவனுடைய சேனையல்ல, மராட்டிய அரசன் வீரசிவாஜி சேனை என்பதே அர்த்தமாகும். விளலுக்கு நீர் இறைக்க நேரமில்லை... எனக்கு காலையில் வடிவாகப் போகாததற்கும், இந்து பார்ப்பான, ஆதிக்க, மதவெறி.....க்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்கா என ஆராய வேண்டும். நன்றி வணக்கம்.
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
இல்லாடடில் மெக்காவுக்குச் சிலரை அனுப்பலாம்...
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சாண்டமருதன் வழக்கம் போல புசத்துகின்றார். இந்தியா ஒரு தேசமாக மாற்றம் பெற்றது ஐரோப்பியர் வருகைக்குப் பிற்பாடு என்ற ஒரு அடிப்படை அறிவு இல்லாத ஒருவரோடு விவாதம் செய்வது என்பது ஒரு முட்டாள்தனமான செயலாகவே உணர்கின்றேன். அதற்கு ஆமாம் போடும் கூட்டம் வேறு.... அதற்கு முதல் பிரிந்திருந்த அரசர்கள் மொழிவாரியான இனமாகப் போராடவில்லை. ஆனால் இந்துக்களாக இருந்ததற்காக ஒரே தேசமாக நினைத்து வாழவில்லை. இஸ்லாமை இவர் பின்பற்றுகின்றார் யாரோ எழுதியிருந்தனர்... பிடித்திருந்தால் சுன்னத் செய்யுங்கள்... இங்கு வந்து சொறியாதீர்கள்...
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
ஏழைகளுக்கு உதவ என்பது வேறு, ஆள்பிடிக்க என்பது வேறு... நீங்கள் சுயமாக ஒரு உணர்வோடு முடிவுக்கு வந்து எந்த மதத்தையும் பின்பற்றுங்கள். ஆனால் ஆள்பிடிப்பவர்களின் பணத்துக்காகப் போகாதீர்கள். அவ்வளவு தான்... சிலர் தாங்கள் புதுமையானவர்கள் என்று காட்டவும் சில மதம் பின்பற்றுவர்கள் எனவும் அறிந்துள்ளேன்
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
இதே வேளை இந்து மதத்தில் மீளாய்வு என்பது அவசியம். ஒரு விடுதலைப் போராட்டமாகட்டும், ஒரு சீர்திருத்தமாகட்டும் மீளாய்வு செய்யாது விடின் அழிந்துவிடும். பாதிரிமார்களின் குழந்தைகளோடு பாலியல் வன்முறைகளை வத்திக்கான் கண்டு கொள்ளாது விடுவது போன்றே, சில சாமிகளின் பாலியல் நடவடிக்கைகளை நாங்கள் கண்டு கொள்ளாது விடுவதுமாகும். குறித்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். குப்பைகளுக்கு மத்தியில் இருந்தால் குப்பைகள் போலவே எல்லாமே தோன்றும், அடுத்தது சாதி... சாதி என்பது எப்படி நீக்கலாம் என்பதை ப் பெரிய தத்துவஞானிகள் தான் பதில் சொல்ல வேஷ்டும். சாதிப் பிரச்சனை சாதிப் பிரச்சனை என்று சத்தமிடுகின்றார்களே தவிர, அதை நீக்குவதற்கு வழி சொன்னால் நன்றாக இருக்கும்... இது வரை என் வாழ்வில் நான் என் நண்பர்கள், பழகியவர்கள் எவரிடமும் சாதி பற்றி அறியவோ, அது பற்றிக் கதைக்கவோ நினைத்ததில்லை. அப்படி நினைத்து யார் கூடவும் பழகியதில்லை. எதிர்வரும் காலத்திலும் அப்படித் தான் இருப்பேன். திருமணம் என்பதிலும் அப்படியே இருக்க முயற்சி செய்வேன். இது தான் ஒரு தனிமனிதனாக என்னால் முடியக்கூடிய ஒரு விடயம்...
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
கத்தோலிக்கம் பற்றி வெள்ளையடிக்க முயல்பவர்களுக்கு ஒரு விடயம். கத்தோலிக்கம் எப்படிப் பரப்பப்பட்டது ஈழத்தில் என்பதை வரலாற்றில் மறைக்க முடியாது என நினைக்கின்றேன். ஈழத்தில் உள்ள பெரும்பாலான இந்துக்கோவில்களை இடித்துத் தானே கத்தோலிக்கம் பரப்பப்பட்டது. பலருடைய கிணறுகளில் கோவில் விக்கிரகங்கள் முதல், சைவ அடையாளங்கள் ஒளித்து வைக்கப்பட்டன. அப்படி ஒரு செயலைத் தான் போத்துக்கேயரும், ஒல்லாந்தரும் நடத்தி மதப் பிரச்சாரம் செய்தனர். அப்படியிருக்கும்போது எம்மை ஆதிக்கம் செலுத்த வந்தவர்களின் பின்னால் போய்விட்டு, அதற்கு நன்றாகத் தான் வெள்ளை அடிக்கின்றீர்கள். இதைப் பற்றிக் கதை்ததால் சாத்தான் , மதவாதம் அது இது என்பார்கள். செய்தவர்கள் தப்பில்லை,செய்ததைச் சொன்னால் மட்டும் தப்பு ஆகுமா சில வருடங்களுக்கு முன்பு ஒரு விடயம் பற்றி அறிந்து கொண்டேன். அது உண்மையானதா இருக்குமா என்று தெரியவில்லை. கிழக்கில் வற்றாப்பளை அம்மன் போல மேற்கில் இருந்த அம்மன் கோவில் மீது தான் மடுத் தேவாலயம் கட்டப்பட்டதாக. அதற்கு எந்த ஆதாரமும் சொன்னவரால் சொல்லப்படவில்லை என்பதால் அதைப் பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை...... யாரிடமாவது அது பற்றி ஏதும் தகவல் உண்டா?
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
ஓ சாண்டமருதன் என்பது பழைய சுகனா? எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கின்றது. 2009 இல், கேபி முகத்தை மறைத்துக் கொண்டு ஒரு தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார். அதற்கு யாழில் வந்து அடுத்த தலைவர் அப்படிச் செய்யலாமா, இப்படிச் செய்யலாமா என்று அவர் முகம் மறைத்தது ஒரு தலைமறைவுத் தலைவர் அது இது என்றெல்லாம் விளாசினார். கேபி இதைப் படித்தாரோ தெரியாது. ஆனால் சிலநாட்களில் தன் படத்தை வெளியில் விட்டிருந்தார். சில நாட்களில் சிங்கள அரசு அப்பிக் கொண்டு போய்விட்டது. அந்தளவு வீரியமான கருத்துக்காராக இருந்தார். கேபி யாழ்படித்தாரோ என்பது ஒரு காலத்தில் என் சந்தேகம். அது சுகனின் கருத்தினால் வந்தது மட்டுமல்லாமல், சபேசன் யாழ்களத்தில் முதலில் எழுதிய வெளிநாட்டு அரசு, புலத்தமிழீழம் அப்படி ஏதோ ஒன்றைத் தான், கேபி நாடுகடந்த அரசு என்று தொடங்கியிருக்கக் கூடும் என்பது என் அவதானம்..
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
நிச்சயமாக அக்கருத்து உங்களைப் பாதித்திருப்பின் வருந்துகின்றேன். ஆனால் அந்தக் கருத்தில் உண்மைத்தன்மை இல்லையா என்பதை நிச்சயம் மறுக்கவே முடியாது. நான் தத்தெடுக்க கேட்ட குழந்தைகளைத் தரமுடியவில்லை என்பது அதற்கு உதாரணம். ஒவ்வொரு மனிதனுக்கும், கிடைக்கின்ற அனுபவங்கள் தானே செயலைத் தீர்மானிக்க வைக்கின்றன. உங்களுக்குக் கருத்துக் கூறத் தோன்றுவதும், தோன்றாததும் உங்களின் பிரச்சனை. சாத்தனின் சாயலுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும். சாத்தான்கள் அதை எதிர்பார்ப்பதுமில்லை. மற்றும்படி பிள்ளை பிடிக்கவும், ஆட்கள் சேர்க்கவும் தான் அனைத்து கிறிஸ்தவ மத. Inc அல்லது Ltd கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.அவர்கள் செய்கின்ற எல்லாச் சேவைகளுக்குப் பின்னால் அது ஒளிந்திருக்கின்றன. முடிந்தால் யாராவது மறுத்துப் பாருங்கள்....
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
யுவன் மதம் மாறியதை யார் இங்கு தப்பு என்றார்கள்? தவிர யுவன் மதம் மாறியதை ஏன் செய்திக்குச் சொல்ல வேண்டும். மாறினால் பொத்திக் கொண்டு இருக்க வேண்டியது தானே... அதைச் செய்தியாக்க வைத்தது யார்? சாண்டமருதன் தான் மதச் சார்பில்லை என்கின்றார். ஆனால் அடித்துச் சொல்கின்றேன். அவர் கிறிஸ்தவ பின்புலம் கொண்டிருக்கின்றார். யாழ்களத்தில் இப்படி முகமூடி போட்ட பலரின் முகத்திரைகள் பிற்பாடு கிழிந்திருக்கின்றன. கடைசியாக நண்பர் ரகுநாதன் உற்பட. எதிர்காலத்தில் இந்தப் பிள்ளைபிடிகாரர்களுக்கு ஏதாவது செய்யத் தான் வேண்டும்...
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
எங்கோ படித்த ஞாபகம். மனிதனைப் போல என்னுமொரு இனமும்(பெயர் ஞாபகமில்லை) இருந்ததாகவும் அவர்கள் மனிதனை விட அறிவிலும் பலத்திலும் மேலானவர்களாக இருந்தார்களாம். அவர் யாரையைக் கூட ஈட்டியால் குத்தி விழுத்தக்கூடிய பலமானவர்கள். ஆனால் அவர்கள் ஏன் அழிந்து போனார்கள் என்றால் அவர்களின் கழுத்து குள்ளமாகவும், கையை ஈட்டி எறியும் வண்ணம் விசுக்க முடியாதவர்கள். அதனால் அவர்களால் மனிதர்களோடு போட்டி போட்டு வாழ முடியவில்லை. அழிந்துவிட்டார்களாம். அவர்களை வைத்து அடிமைகளாக மனிதர்கள் உபயோகித்து இவற்றை கட்டுவித்திருக்கலாம்...இது எவ்வளவு துாரம் உண்மை என்று தெரியாது. எங்கோ அறிந்த ஞாபகம்... எனவே நாகரீகமான பலமான சமூதாயம் அப்போது இருந்திருக்காது என்று சொல்ல முடியவில்லை. வானத்தை நோக்கிக் கூம்பக வடிவில் கட்ட மழை தான் கரணமாக இருக்கும் என நினைக்கின்றேன். நீர் வழிந்தோடும் வண்ணமே அவ்வாறு கட்டியிருக்கலாம்.