Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

S. Karunanandarajah

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by S. Karunanandarajah

  1. சில வேளை ஐஸ் வைக்க வந்திருக்கலாம். இப்படித்தான் யுத்தம் முடிந்த கையோடு கனிமொழி திருமா போன்றோரும் வந்தனர் (ஐஸ் வைக்க). அதற்கான மூலப்பொருள்கள் இலங்கையில்தானேயுள்ளன. (உற்பத்தியாளர்) யாவாரிமார் கலந்து விற்றால் நல்ல கிக் இருக்கும். குறைந்த விலையிலும் சப்ளை செய்யலாம்.
  2. யாரப்பா இந்த ஐலண்ட் என்கிற பக்திமான். அதீத சிங்கள தேசியவுணர்வில் ஊறிக்கிடக்கிறார் போலத் தெரிகிறது.
  3. நடிகர் ராஜேஷ் ஜனரஞ்சகமான யுரியூப் புரோகிராம்களையும் வெளியிட்டு வந்தார். மாஜிக் செய்யும் இளைஞர்களையும் அழைத்துப் பேட்டிகண்டு வெளியிட்டார். அவற்றில் சிலவற்றை பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டடியது. அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு குடும்பத்தாருக்கு ஆழ்ந்த ஆனதாபங்களைத் தெரிவிக்கிறேன்.
  4. ஆமைகளோடு ஆமைத்துறுமார்களுக்கும் தலையில் எண்ணெய் தடவ வேண்டும்.
  5. சீமான் - சாட்டை முரண்பாடு யாழிலுள்ள கருத்து வறியோருக்கு வாயில் கருவாடு கிடைத்த மாதிரி இருக்கிறது.
  6. தயவு செய்து அந்தக் கோளுக்குப் போகக்கூடிய வழிவகைகளைப் பற்றியும் அறியத்தாருங்கள்.
  7. தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டுக் கிடக்குமிந்தப் பைந்தமிழ் இனத்திற்குற்ற ஊழ்வினையகற்றவந்த உத்தமன் நித்தி. ஆளவோர் நாடுகண்டு அன்னையெம் தமிழை அங்கே வாழ்விக்க முயலும் போது வஞ்சகர் அவனை வீழ்த்த கோழைகளாக நின்று குரைப்பதேன்? வேண்டாமிந்தக் கீழ்நிலை.
  8. UK இன் முப்படைகளும் மூன்றாம் உலக யுத்தத்தை எதிர்கொள்ளத் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
  9. இன்றைய நாகரீகமடைந்த மனித சமுதாயத்துக்கு குத்துச்சண்டை அவசியமற்ற ஒன்றாகும். ஒருவர் முகத்தில் ஒருவர் பாய்ந்து குத்தித் தம்வீரத்தை நிலைநாட்டப் போட்டியிடும் இத்தகைய விளையாட்டுகள் உயிராபத்தை விளைவிக்க்க்கூடியவை ஆதலால் எதிர் காலததில் சர்வதேச மட்டத்தில் இதனைத் தடைசெய்தல் வேண்டும். பாதிக்கப்பட்ட வீரருக்கு அஞ்சலிகள். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.
  10. இலங்கை சுதந்திரமடைந்த காலத்துக்கும் முந்திய காலத்திலிருந்து தமிழர் பேரம் பேசிக்கொண்டு தானிருக்கின்றனர். தற்போதுதான் அந்த நிலை மாறி பேரம்பேசும் சக்தியிழநு்து போய்விட்டனர். இன்றுவரை ஒரு பயனும்கிட்டவில்லை.
  11. நான் வாழ்வது இங்கிலாந்தின் கிழக்குக் கரையோரம். ரஷ்யாவுக்கு இலகுவாகத் தாக்குவதற்கேற்ற பிரதேசம். நினைத்தால் வயிற்றைக்கலக்குகிறது. அடித்தால் கூண்டோடு - குடும்பததோடு அழிய வேண்டியதுதான்.
  12. முதலில தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கண்டு அவர்களின் மாநில சுயாட்சி அதிகாரத்தை அவர்களின் கையில் கொடுத்தால் மாநில அரசே சமூகப்பிரச்சனையைப் பற்றி ஆராயந்து செயற்திட்டங்களை முன்னெடுக்கும்.
  13. அதென்ன டிஜிட்டல் முறை சுயநிர்யணம்? பாட்டலி சம்பிக்க அவர்கள் இதனை விளக்கிச் சொல்ல முடியமா? யாராவது தமிழ்த்தலைவர்கள் அவரிடம் இதைப்பற்றிக் கேட்டுப் பொதுத்தளத்தில் மக்களிடம் விட்டால் சிலவேளை தமிழர்கள் கருத்திலெடுக்கக்கூடும். எல்லாம் நமது தலைவிதி.
  14. தேர்தலுக்குப் பின்னரல்ல, தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படல் வேண்டும். மீண்டும் ஏமாற்றுவதற்குத்தான் ரணில் முயற்சிக்கிறார். அதனைத் தமிழர்கள் நன்கறிவார்கள். சுமந்திரனுக்கு இதில் ஏதாவது இலாபம் கிடைக்கலாம், அதனால் ரணிலுடன் சேர்ந்து தமிழர்களை எமாற்றப் பார்க்கிறார்.
  15. ஈழத்தமிழர்கள்மீது இலங்கை இராணுவத்தினராலும், இஸ்லாமிய மதவெறியர்களாலும் நிகழ்த்தப்பட்ட இனவன்முறைகளை ஆவணப்படுத்தும் திரு நன்னிச் சோழன் அவர்களின் செயற்பாட்டுக்கு மிகுந்த நன்றிகளை நானும் தெரிவிக்கிறேன். தொடர்க உங்கள் பணி. வரலாற்றிலிருந்து நீக்கப்படமுடியாத, மன்னிக்கப்பட முடியாத கொடியவர்களின் வன்மத்துக்கு என்ன பிராயச்சித்தமுள்ளது. என்றும் இவர்கள் எதிரிகளே.
  16. டியர் நன்னிச் சோழன் யுகசாரதியின் ஈழத்தாய் சபதம் நூலிலும் பக்கம் 91 இல் தூயவரிப்புலியே நீ தூங்கிடு என்மகனே! கல்லறை மெத்தையிலே நீகண்துயில்வாய் மகனே! ஆராரோ1 ஆராரோ ! ....என்று தொடங்கும் பாடலொன்று உண்டு. முடிந்தால் அதையும் தங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  17. கார்த்திகைப் பூ முருகனுக்குரியது. கார்த்திகேயனான முருகனை சிங்களவர்களும் வணங்குகிறார்கள். அவர்கள் அர்ச்சனை செய்ய வேண்டிய முருகனின் பூவை அவர்களே காலில் போட்டு மிதிக்கிறார்கள். நமக்கென்ன செய்துவிட்டுப் போகட்டும்.
  18. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி வெங்காயங்களுக்கே வரமுடியும். யார் அல்லது எது கடவுள் என்ற வரைவிலக்கணத்தைச் சரியாகக் கூறாமல் அவர், அவள் அல்லது அது இருக்கிறதா? என்று எப்படிக் கூறமுடியும்? பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரன் என்கிறது திருவாசகம். ஆக, கடவுள் இருக்கிறாரா? அல்லது கடவுளில் நாமிருக்கிறோமா என்ற கேள்வியே மிகச் சரியானது. நாமிருப்பதால் நம்மில் கடவுள் இருக்கிறார் என்பதே சரியான விடையாகும்.
  19. சமீபத்தில் எனது மகளின் தோழி காய்ச்சித்தந்த ஒடியற்கூழை இரசித்துச் சுவைக்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது.
  20. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சுவி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.