Everything posted by Kavi arunasalam
-
சித்திரப்பேழை...... ஷோபாசக்தி.
நியூசிலாந்தில், எனது அம்மாவின் சாம்பலை அடுத்த நாளே வீட்டுக்கு கொண்டு வந்து தந்தார்கள். யேர்மனி சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் சாம்பலோடு சம்பந்தப்பட்ட விடயம் ஒன்று என்னிடம் கைவசம் இருக்கிறது. எழுதலாம் என்று பார்க்கிறேன். சர்வாதிகார நாட்டுப் பட்டியலிலே போட்டிருப்பார்கள்😛
-
’அந்த நான்கு பேரைப் பற்றி பேசாதே’ : கட்சியினருக்கு சீமான் கட்டளை!
- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
- மரணம்
‘’எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை..” இந்த சினிமா பாட்டு நினைவுக்கு வந்தது- சித்திரப்பேழை...... ஷோபாசக்தி.
ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்தேன். கதை நீளமானதாக இருந்தாலும், வழமை போல, அவரது எழுத்து நடை, கதையை இடைவிடாமல் வாசிக்க வைத்தது. இலங்கை, பிரான்ஸ், கியூபா என்று கதையுடன் சேர்த்து நானும் பயணித்த அனுபவம் கிடைத்தது. அழகாகச் சொல்லி முடித்தார். பிரான்ஸுக்குப் பக்கத்தில்தான் யேர்மனி இருக்கிறது. இரண்டுமே ஐரோப்பிய வலயத்துக்குள்தான் இருக்கின்றன. ஆனால் இறந்தவர்களின் சாம்பல் விடயத்தில், இரண்டு நாடுகளிலும் நடை முறையில் மாற்றங்கள் இருப்பதை, ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்த போது என்னால் அறிய முடிகிறது. யேர்மனியில், பொதுவாக, இறந்தவரின் சாம்பலை மயானத்தில்தான் புதைப்பார்கள். அது மயானத்தில் உடலத்தைப் புதைப்பது போல ஒரு இடத்தில் புதைக்கப்படும். அதற்கான செலவு சில ஆயிரங்கள் ஆகும். அந்தப் பணத்தைச் செலுத்த வசதியில்லாதவர்கள் அதற்கென்று இருக்கும் குறிப்பிட்ட இன்னொரு மயானத்தில் பலரது சாம்பல் பேழைகளுடன் ஒன்றாகப் புதைப்பார்கள். அதற்கான செலவு 400 யூரோக்கள் மட்டுமே! இவ்வளவையும் சம்பந்தப்பட்ட அலுவலகர்களே உரியவர்களின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்வார்கள். அவர்களே நிர்ணயிக்கப்பட்ட நாளில் சாம்பலைக் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் முன்னிலையிலேயே சாம்பல் பேழை அடக்கம் செய்யப்படும். இறந்தவரின் சாம்பலை வீட்டுக்குக் கொண்டு சென்று வைத்திருக்கவோ, கடலிலே கரைக்கவோ, தோட்டத்தில் தாக்கவோ துளியும் அனுமதிக்க மாட்டார்கள். அது சட்டப்படி பிழையானதொரு செயல். சிலர் சுவிஸ் நாட்டுக்கு இறந்தவரின் சாம்பலை அனுப்பச் சொல்லிவிட்டு, ( அதற்குப் பணம் கொடுக்க வேண்டும்) அங்கே சென்று, தங்கள் விருப்பம் போல் செய்து கொள்வார்கள். ஒரு சிலர் தங்கள் நாட்டுக்கு இறந்தவரின் சாம்பலை எடுத்துச் சென்று, சம்பிரதாய முறைப்படி கடமைகள் செய்ய விரும்புவார்கள். இறந்தவரின் சாம்பலை அவர்கள் தம்மோடு எடுத்துச் செல்வதற்கு எந்த அனுமதியும் கிடையாது. சம்பந்தப்பட்ட அலுவலகர்களே சாம்பலை நேரடியாக குறிப்பிட்ட நாட்டுக்கு, குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள். அனுப்புவதற்கான கட்டணம் தனியாக செலுத்த வேண்டும். எந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்கிறோமா அந்த நாட்டுச் சுங்க அலுவலகம் ஊடாகப் பெற்றுக் கொள்ள ஆவன செய்வார்கள். இறந்தவரின் சாம்பலை கியூபாவுக்கு கொண்டு செல்வதையும், அதை விமானத்தில் கையில் வைத்திருப்பதாகவும், ‘சித்திரப் பேழை’யில் சொல்லி இருப்பது எனக்குப் புதுமையாக இருந்தது. பிரான்ஸ் நாட்டு நடைமுறை அப்படி.- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
- வெண்முரசு நாவல் 16: “குருதிச்சாரல்”
பெரிய பெரிய கட்டுரைகளையே ஒரே மூச்சில் வாசிக்கும் உங்களுக்கே, இதை வாசிப்பதற்கு இன்னும் சில வருடங்கள் வேணும் என்றால் எனக்கு இன்னும் ஒரு ஆயுள் வேண்டும்.- “ கப்பு முக்கியம் “ - T. கோபிசங்கர்
‘சித்தப்பா’ என்றுதான் அவனை அழைப்போம். கடற்தொழிலாளி. எனது நண்பன். மீன்கள் பிடிக்கும்போது அரிதாக இந்த ‘காளை’ மீன் அகப்படும். அதை சந்தைக்கு அனுப்பாமல், தாங்களே சமைத்துச் சாப்பிடுவதாகவும் மிகவும் ருசியாக இருப்பதாகவும் அவன் என்னிடம் சொல்லி இருக்கிறான். நானும் அதை சாப்பிட ஆசைப்பட, எப்பொழுது அந்த மீன் அவன் விரித்த வலையில் விழுந்தாலும் அது என் வீட்டுச் சட்டிக்குள் வந்து விடும். மேற்கொண்டு அந்த காளை மீன் பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியாது. காளை மீன் சாப்பிட்டு நாலு தசாப்தங்களுக்கு மேலாயிற்று. சும்மா இருந்த சங்கை எடுத்து டொக்டர் ஊதிப் போட்டு போட்டார்.- எமது கிராமத்தின் வரலாறு
- பரீட்சை வினாத்தாளில் “ஒரு நாடு இரு தேசம்” என்ற வினாவால் சர்ச்சை
- (தீ) சுவடு
தீ சுடுகிறது- “ கப்பு முக்கியம் “ - T. கோபிசங்கர்
- எமது கிராமத்தின் வரலாறு
அதிபர் இராமர் (ராமு வாத்தியார்) கடந்த வருடம் பெப்ரவரி 8ந்திகதி காலமாகி இருந்தார். அவரின் ஒரு வருட நிகழ்வில், யாழில் இந்தப் பதிவு அவரது சேவையை எங்களுக்குச் சொல்கிறது. கிராமத்தை முன்னேற்ற அங்கு வாழ்ந்தவர்கள் (எதிர்ப்புகள் வந்த போதும்) ஒற்றுமையாகச் செயற்பட்டார்கள் என்பதோடு வெற்றியும் கண்டார்கள் என்பதை காணமுடிகிறது. இந்த ஒற்றுமை எங்கள் எல்லோரிடத்திலும் இருந்தால்… ராமு வாத்தியாரை மட்டும் அல்ல அவரது மகனையும் பாராட்டுகிறேன் 👍- புதனும் புதிரும்
தமிழ்வானண் கதைகளை நான் வாசித்தது குறைவு. என் காலத்தில் (கபொத சாதாரணம் படித்த நேரம்) அதிகம் வாசித்தது பி.டி.சாமி என்பவர் எழுதிய மர்ம நாவல்கள்தான். அவர் எழுதும் பாணி எனக்குப் பிடித்திருந்தது. பிற்பாடு “அனிதா - இளம் மனைவி’ என்று பத்து வாரங்களில் குமுதம் சஞ்சிகையில் சுஜாதா வேகமாக எழுதிய கதை பிடித்துப் போய் அவர் பக்கம் விழுந்து விட்டேன்.- சுமந்திரனின் சுயபரிசோதனை
- புதனும் புதிரும்
Kandiah57, உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் இங்கே குற்றவாளி பிடிபட்டிருக்கிறான் என்பது ஆறுதலான விடயம்- வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்
- புதனும் புதிரும்
7 31ந்திகதி குற்றவாளியைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் துரிதமாக நடந்தேறின. குற்றம் சாட்டப்பட்டவரது விபரங்கள், கொலைக்கான ஆதாரங்களை எல்லாம் ஆராய்ந்த ஸ்வேபிஸ் ஹால் மூத்த அரச சட்டத்தரணி லுஸ்ரிக், ‘குற்றவாளி என சந்தேகிக்கப்படுவரை கைது செய்து விசாரிக்கலாம்’ என பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார். எந்த இடத்தில் இலக்கத் தகடு இல்லாமல் சில்வர் நிற VW கார் நின்றதோ அதற்கு முன்னாலேயே குற்றவாளி என சந்தேகிக்கப்படுபவருடைய வீடும் இருந்தது. அந்தக் காருக்குப் பக்கத்தில் இருந்து ஆராய்ந்த இரண்டு பொலிஸாருக்கும் அன்று அது தெரிந்திருக்கவில்லை. பொலிஸார் வீட்டுக்குள் சென்ற போது டானியல் ஷோபாவில் அமர்ந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்தான். பொலிஸாரைக் கண்டதும் எழுந்து கொண்டான். அவனது பத்து மற்றும் பன்னிரண்டு வயதான இரு பெண் குழந்தைகளும் தங்கள் அறையில் நித்திரையில் இருந்தார்கள். அறையை விட்டு வெளியே வந்த டானியலின் மனைவி ஆயுதங்களுடன் இருந்த பொலிஸாரைக் கண்டு பயந்து நின்றாள். வீட்டில் இருந்த அலுமாரிகள் எல்லாம் வெறுமையாக இருந்தன. தரையில் இருந்த சூட்கேஸுகள் நிரம்பி இருந்தன. சேர்பியாவுக்குப் பயணிப்பதற்கு தயாராக எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு, கொஞ்சம் ஆற அமர இருந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்த டானியல் மாட்டிக் கொண்டான். பொலிஸ் கொமிஸனர் Inge (41) டானியலைக் கைது செய்யும் போது, அவன் எந்த எதிர்ப்பும் காட்டாது அமைதியா இருந்தான். அவனைக் கைது செய்யும் போது அவனது பணப் பையில் பல 100, 200 ரூபா யூரோ தாள்கள் இருந்தன. டானியலுடன் யேர்மனிய மொழியில் உரையாட முடியவில்லை. அவனைக் கைது செய்து பயணிக்கும் போது, பொலிஸ் கொமிஸனர், “குற்றம் செய்ததாக சந்தேகித்து உன்னைக் கைது செய்து விசாரணைக்காக கொண்டு செல்கிறோம்” என எழுதி அதை கூகுளில் சேர்பிய மொழியில் மொழி பெயர்த்து டானியலுக்குக் காட்டிய போதும் டானியல் அதை வாசித்து விட்டு அமைதியாக இருந்தான். டானியல் மேல் சுமத்தப்பட்ட கொலை வழக்கு பன்னிரண்டு தடவைகளாக ஹைல்புறோன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு நடந்த ஒவ்வொரு தடவையும் அவனது பெற்றோர், சகோதரிகள், மனைவி ஆகியோர் சேர்பியாவில் இருந்து வந்து பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார்கள். கை விலங்கிடப்பட்ட நிலையிலேயே டானியல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தான். வழக்கில் மொத்தமாக எழுபத்தி இரண்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். வழக்கின் 12வது அமர்வு 29.09.2023 அன்று நடைபெற்றது. அன்று டானியலின் 32வது பிறந்த தினம். தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர், மூத்த அரச தரப்பு சட்டத்தரணி லுஸ்ரிக் தனது வாதத்தின் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தார். “எடித்லாங்கின் மரணமும் ஒரு கொலைதான். போதுமான தடயங்களை சேகரித்து வைக்காததும், எடித்லாங்கின் உடல் தகனம் செய்யப் பட்டதாலும் விசாரணைகளை தொடர்ந்து செய்ய முடியாமல் போனதாகவும் பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் குற்றம் சுமத்தப்பட்ட டானியலின் டீஎன்ஏ பரிசோதனையில், அவர் கொலை நடந்த இடத்தில் இருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் தரப்படவில்லை. ஆகவே அந்தக் கொலையில் டானியலை குற்றவாளியாகச் சேர்க்க முடியாது. ஹைடமேரியின் கொலையில், கொலை நடந்த அன்று, டானியலை முதலாவது மாடியில் கண்டதாக சாட்சியங்கள் சொல்கின்றன. அன்று அவரது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள் இருந்ததையும் கண்டிருக்கிறார்கள். கொலை நடந்த இடத்தில் டானியல் இருந்தார் என்பதற்கான தடயங்களை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். டானியலின் ‘டீஎன்ஏ’யும் கொலை நடந்த இடத்தில் எடுத்த ‘டீஎன்ஏ’யும் பொருந்துகின்றன. டானியல் அணிந்திருந்த வெள்ளை அடிடாஸ் சப்பாத்தின் அடையாளங்களும், அது டானியலுடையதுதான் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. கொலைக்கான ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. இல்ஸ்கொபனில், முதியவரைத் தாக்கியது, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட முதியவர், டானியல்தான் அதைச் செய்தது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும், முதியவர் டானியலின் மாதிரிப் படத்தை வரைய உதவி செய்திருக்கிறார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து வரையப்பட்ட மாதிரிப் படம் தொண்ணூறு சதவீதம் டானியலின் முகத்துடன் ஒத்துப் போயிருக்கிறது. அந்தப்படம் பின்னாளில் டானியலை இனம் காண பெரிதும் உதவியாகவும் இருந்திருக்கிறது. முதியவர் வீட்டின் அழைப்பு மணி, மற்றும் புதருக்குள் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி,லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள், ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட தடயங்களை பரிசோதித்த போது அவை டானியலின் ‘டீஎன்ஏ” உடன் பொருந்தின. அன்று டானியல் பயணித்த கார் அவர், 29.12.2022 இல் ஹூஸைனிடம் இருந்து 350 யூரோக்களுக்கு வாங்கியது நிரூபிக்கப் பட்டது. காரை வாங்கும் போது, டானியல் விற்பனைக்கான ஒப்பந்தத்தை செய்ய விரும்பாததால், ஹூஸைன், தன்னுடைய பாது காப்புக்காக டானியலை அவரது கைத் தொலைபேசியில் படம் பிடித்திருக்கிறார். அந்தப் படம், பொலிஸ் திணைக்களத்தினால் வரையப்பட்ட மாதிரிப் படத்துடன் ஒத்துப் போயிருந்ததை கவனிக்க வேண்டும். அத்தோடு குற்றவாளியான டானியலையும் கண்டறிய அந்தப் படம் உதவி இருக்கிறது. ஹேரயுற்றேயின் மரணத்தில், அவர் தாக்கப்பட்டு கொலை செய்த ஆயுதமான சுத்தியல், ஹேரயுற்றேயின் வீட்டில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப் பட்டிருந்தது. அந்தக் கொலையில் சேகரிக்கப்பட்ட தடயங்களில் டானியலின் டீஎன்ஏ கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அவர் அணிந்த சப்பாத்தின் பதிவும் கொலை நடந்த இடத்தில் இருந்திருக்கிறது. டானியலைக் கைது செய்து, அவரது வீட்டைச் சோதனை செய்த போது அவரது வெள்ளை அடிடாஸ் சப்பாத்து கழுவப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், சப்பாத்து கட்டும் நாடாவில் இரத்தக்கறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அது ஹேரயுற்றேயின் இரத்தம் என்பது நிரூபிக்கப் பட்டுமிருக்கிறது. கொலைக்கான 100 கிராம் உலோக எடையைக் கொண்ட சுத்தியலை அவர் கட்டிடப் பொருள் விற்பனை நிலையத்தில் இருந்து களவாடி தனது ஜக்கற்றினுள் மறைத்துக் கொண்டு, காசாளர் பகுதியில் தொலைபேசி கதைப்பது போல் வெளியேறியது கமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோ நீதி மன்றத்தில் பார்வையிடப்பட்டிருந்தது….” “நான், எனது இரண்டு பிள்ளைகள் மனைவியுடன் ஸ்வேபிஸ் ஹாலுக்கு வந்தது, வாழ்வதற்காக மட்டுமே. யாரையும் நான் கொல்லவும் இல்லை, யாரிடமும் கொள்ளையடிக்கவும் இல்லை. எனக்கு ஆண்டவன்தான் சாட்சி” என்று டானியல் சொன்னான். “ஆயுள் தண்ட னை . தண்டனை முடிவடைந்ததன் பின்னால் டானியலின் நடவடிக்கை கவனிக்கப்பட்டு, விடுதலைக்கு தகுதியானவர் என்றால் மட்டும் அவர் விடுதலை பெற முடியும். அத்துடன் ஆயுள் தண்டனையை அவர் யேர்மனியிலேயே அனுபவிக்க வேண்டும்” என தீர்ப்பு வந்தது. கொலைகள் நடந்து, குற்றவாளி பிடிபட்டு தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. ஸ்வேபிஸ் ஹால் நகரம் இப்பொழுது அமைதி ஆயிற்றா என்று நீங்கள் கேட்கலாம். 14.10. 2020இல், எல்பிரிடே கூகெரைக் கொன்றது யார் என்று இன்னமும் தெரியவில்லை. அந்தக் கொலையைச் செய்தவர் இன்னமும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டுதானே இருக்கிறார். கொஞ்சம் ஆறப் போட்டு, இரண்டு வருடங்களுக்குப் பின்னாலும் ஏதும் நடக்கலாம். டானியல் கூட ஒருவேளை, கூலிக்குக் கொலை செய்பவனாகவும் இருந்திருக்கலாம். இருந்தால் பார்க்கலாம்.- தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்
- புதனும் புதிரும்
6 17.12.2023இல் இல்ஸ்ஹொபன் கிராமத்தில் தோல்வியில் முடிந்த கொள்ளைக்குப் பின்னர், பொலிஸார் தேடிய காரைப் பற்றிய தகவல்களையும் அவர்களால் திரட்ட முடியாமல் இருந்தது. போக்குவரத்துப் பொலிஸாரின் கண்களில் கூட அந்தக் கார் படாமல் எங்கேயோ ஒழித்திருந்தது. வழக்கம் போல் அன்றும், போக்குவரத்துப் பணியில் இருந்தாள் லூயிஸா(21). காரின் வலது பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவளது வேலைத் தோழன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவர்களது கார் ஹாகன்பாகர் றிங் என்ற இடத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. இங்குதான் எல்பிரிடே கூகெர் 2020இலும் ஹைடமேரி, எடித்லாங் ஆகிய இருவரும் 2022இலும் கொல்லப்பட்டிருந்தார்கள். “ஒருவேளை அன்று இல்ஸ்கொபனில், முதியவரின் மனைவி இல்லாமல் இருந்திருந்தால், அந்த முதியவரையும் அவன் கொன்றிருக்கலாம்” “இருக்கலாம். ஆனால் கொலையாளி தனியாக இருக்கும் முதுமை அடைந்த பெண்களைத்தானே குறி வைக்கிறான். ஒருவேளை இவன் கொள்ளையடிக்க மட்டும் வந்தவனாக இருக்கும் கொலையாளி வேறு ஒருத்தனாகவும் இருக்கலாம்” திடீரென லூயிஸா, “ நிறுத்து நிறுத்து. காரை நிறுத்து” என்று சென்னாள். “ஏன்? என்ன பிரச்சினை?” “அதிலே ஒரு சில்வர் கலரிலே VW கார் பார்க் பண்ணியிருந்தது. ஒருவேளை நாங்கள் தேடுற காராகக் கூட இருக்கலாம். வா பாத்திட்டு வருவம்” அந்த சில்வர் கலர் காருக்கு முன்னால் லூயிஸாவும் அவளது சக தோழனும் நின்றார்கள். இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் ஒட்டிய தடயங்கள், VW station wagon, Silver நிறம் என அவர்கள் தேடும் காரின் அடையாளங்கள் அத்தனையும் பொருந்தி இருந்தன. ஆனால் காரின் இலக்கத் தகடு மட்டும் இல்லை. பொதுவாக இலக்கத் தகடு இல்லாத கார்களை வீதிகளின் ஓரத்தில் நிறுத்தி வைக்க முடியாது. அத்துடன் இலக்கத் தகடு இல்லாவிட்டால் அது பதிவில் இல்லை என்பது மட்டுமல்ல பயணிக்கவும் முடியாது. கார் பூட்டி இருந்தது. கார் கண்ணாடியூடாக உள்ளை பார்த்தார்கள். ‘ரெட் புள்’ குடிபான ரின்கள், பொதிகளை ஒட்டும் நாடாக்கள் என்பன காருக்குள் இருந்தன. ஆக, கார் பாவனையில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று இருவரும் தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்களால் காரின் போனற்றைத் திறக்க முடிந்தது. இயந்திரத்தின் இலக்கத்தை எழுதிக் கொண்டு தங்கள் காருக்குத் திரும்பினார்கள். காரில் அமர்ந்து கொண்டே, தங்கள் வேலைத் தோழனைத் தொடர்பு கொண்டார்கள். “கார் எஞ்சின் ஒன்றின்ரை நம்பர் அனுப்பிறன். அதைப் பற்றி தகவல் வேணும்” தகவல் உடனேயே வந்தது, “அந்தக் கார் இப்ப பதிவிலை இல்லை” “கடைசிப் பதிவு ஆரின்ரை பேரிலை இருந்தது?” “அது… ஹூஸைன் என்றவரின்ரை பேரிலைதான் கடைசியா இருந்திருக்கு. ஆளின்ரை இடம் ஒப்பன் வைலர்” “இந்த விபரத்தை மேலதிகாரிக்குச் சொல்லிவிடு” ஒப்பன் வைலர் ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து பதினைந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது. திடீரென பொலிஸாரைக் கண்டதும் ஹூஸைனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சம்பிராதய கேள்விகளுக்குப் பிறகு, “VW station wagon, கார் எங்கே?” அந்தக் காரைப் பற்றிக் கேட்ட போது, ஹூஸைனின் முகம் இன்னும் வெளிறியது. “வித்துப் போட்டன்” “யாருக்கு வித்தனீ?” ஹூஸைனின் தலை மெதுவாக நிலத்தை நோக்கி குனிய ஆரம்பித்தது. “ சரி கார் விற்ற ஒப்பந்தத்தைக் காட்டு” “கார் விக்குற போது ஒப்பந்தம் ஒண்டும் போட இல்லை” “அதெப்படி ஒப்பந்தம் இல்லாமல் கார் கை மாறிச்சு?” “வாங்கினவர் அதை, தான் பதிவு செய்யிறன் எண்டு சொன்னவர்” “ஓ, அப்பிடியோ? சரி என்ன விலைக்கு வித்தனீ?” “350 யூரோக்களுக்கு” பொலிஸாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஹூஸைன் தடுமாறிக் கொண்டிருந்தான். பொலிஸார் அங்கிருந்தே “நாங்கள் குற்றவாளியை அடையாளம் கண்டு விட்டோம்” என்று தங்கள் தலைமை அதிகாரிக்கு அறிவித்தார்கள், 01.02.2023 புதன்கிழமை. அதற்கு முதல் நாள் செவ்வாய்க் கிழமை காலையில் டானியலின் மனைவி, குழந்தைகளின் அறையை விட்டு வெளியே வந்த போது அதிர்ந்து விட்டாள். அவள் முன்னால் ஆயுதத்துடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்- பொழப்புத் தேடி - மலையகத்தான் கதடா
மாரி செல்வராஜா பாணியில் பாடல் படமாக்கப் பட்டிருக்கிறது. நன்றாக இருக்கிறது.- பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம்
அக்கறையோடு காத்திருக்கிறேன். எழுதுங்கள்- இந்தியாதான் காப்பாற்றியது - இந்திய ஊடகத்திற்கான பேட்டியில் ரணில்
- புதனும் புதிரும்
5 டானியல்(32), சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன். வேலை வாய்ப்புத் தேடி தனது மனைவி நத்தலி, பத்து, பன்னிரண்டு வயதான இரண்டு பிள்ளைகளுடன், 2022 செப்ரெம்பரில் யேர்மனிக்கு வந்தவன். தெரிந்தவர்கள் மூலமாக ஸ்வேபிஸ்ஹால் நகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவர்களுடன் சேர்ந்தே கட்டிட வேலைகள், தோட்ட வேலைகள் என்று கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். வேலை வாய்ப்புகளுக்காக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பலர் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இதில் அநேகமானவர்கள் கட்டிடத் தொழிலிலேயே கவனம் செலுத்துகிறார்கள். சிலர் அஸ்பாரகஸ் பிடுங்கி எடுப்பது ஸ்ரோபரி பழங்கள் பறிப்பது போன்ற வேலைகளை தோட்டங்களிலும் செய்வதுண்டு. கறுப்பு வேலை செய்து துரிதமாக பணம் சம்பாதித்துக் கொண்டு தங்கள் நாட்டுக்குப் போய் விடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் டானியல் குடும்பமாக யேர்மனிக்கு வந்தது, நிரந்தரமாகத் தங்குவதற்கான எண்ணமாக இருந்திருக்கலாம். டானியலின் மனைவி நத்தலி, அவுஸ்திரியாவில் சில காலம் வசித்ததால் அவளுக்கு யேர்மனிய மொழி தெரிந்திருந்தது. வேலைகள் ஓரளவுக்குக் கிடைக்க, வாழ்வதற்கு ஓரளவு பணம் அவர்களுக்கு வர ஆரம்பித்தது. தெரிந்தவர்களுடன் தங்கியிருந்தாலும் தங்கள் குடும்பத்துக்கு என்று தனி வீடு தேவை என்பதை உணர்ந்து, அவர்கள் வீடு தேட ஆரம்பித்தார்கள். அப்பொழுதுதான் டானியல் குடும்பத்துக்கு ரன்ஜா (34) அறிமுகமானார். ரன்ஜாவும் அவளது கணவரும் ஸ்வேபிஸ் ஹாலுக்கு அடுத்த நகரத்தில் புதிதாக ஒரு வீட்டை வாங்கியிருந்தார்கள். அங்கு சென்று வாழ்வதற்காக, தற்போது அவர்கள் வாழும் வீட்டை வாடகைக்கு, அதுவும் தற்காலி கமாக யாருக்காவது கொடுக்கலாம் என்று விளம்பரம் செய்ய, முதலாவதாக அவர்கள் முன் வந்து நின்றது டானியலும், அவனது மனைவி, பிள்ளைகளுமே. 1300 யூரோக்கள் மாத வாடகைக்கு அந்த வீடு டானியலுக்குக் கிடைத்தது. நத்தலிக்கு மொழி தெரிந்ததால் டானியலுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வேலைக்குப் போவது. மாலையில் நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பது என்று அவன் எப்பொழுதும் வெளியிலேதான் இருந்தான். நத்தலி மட்டும் வீட்டில் இருந்தாள். ஹைடமேரியின் கொலையாளியைக் கண்டு பிடிக்க முடியாமல் பொலிஸார் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். சில தடயங்களை அவர்கள் சேகரித்து வைத்திருந்தாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். நாட்கள் ஒவ்வொன்றாகக் கடக்க, 2020இல் நடந்த கொலையையே துப்புத் துலக்கி கண்டு பிடிக்காதவர்கள், இதைக் கண்டு பிடித்து விடுவார்களா? என்ற ஏளனப் பேச்சு வரத் தொடங்கியது. அதாவது பொலிஸ் துறையின் கையாலகத் தன்மையைக் குறித்து விமர்சனம் பெரிதாக வர ஆரம்பித்தது. மீண்டும் ஒரு புதன்கிழமை. 25.01.2023 ஸ்வேபிஸ் ஹாலில் இருந்து பத்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மிஹேல் பாக் என்ற கிராமம் அல்லோலகலப்பட்டது.” ஹேரயுற்றே (83) என்ற மூதாட்டி கொல்லப்பட்டார் " என்ற செய்தி வந்தது. இருந்த தலையிடி காணாதென்று பொலிஸாருக்கு மேலும் தலையிடி கூடியது? ஹேரயுற்றே சாவியால், தனது வீட்டுக் கதவைத் திறந்து உள் நுளையும் போது, பல தடவைகள் மறந்து போய் சாவியை கதவிலே விட்டு விடுவதுண்டு. அதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு மூதாட்டி இதை அவதானித்து ஹேரயுற்றேயிடம் பல தடவைகள் எச்சரித்தும் இருக்கிறார். “இங்கை யார் வரப்போயினம்?” என்று ஹேரயுற்றே அவருக்குப் பதில் சொல்லியிருக்கிறார். ஆனால் கொலையாளி வந்திருந்தான். கதிரையில் சாய்ந்தபடி அவர் உடல் இருந்தது. அவரைச் சுற்றி இரத்தங்கள் தெறித்திருந்தன. தலை சிதைக்கப்பட்டிருந்தது. கை,தோள்பட்டை, தலை ஆகிய பகுதிகளில் குறைந்தது 26 தடவைகள், தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பபட்டிருப்பதாக அறிக்கை வந்தது. ஹேரயுற்றே வீட்டுக்கு வெளியே வெறும் 100 மீற்றர் தூரத்தில் ஒரு புதருக்குள் இரண்டு கையுறைகளையும், ஒரு சுத்தியலையைம் பொலிஸார் கண்டெடுத்தார்கள். ஹைடமேரியின் கொலைக்கான ஆயுதம் கிடைக்காது திணறிக் கொண்டிருந்த பொலிஸார் , ஹேரயுற்றேயின் கொலைக்கான ஆயுதம் கிடைத்த போது மிகுந்த உசாரானார்கள். அதைத் துப்புத்துலக்குதலுக்கான பெரும் உந்துதலாக அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். புதிதாக வாங்கிய சுத்தியல்.அதன்மேல் ஒட்டப்பட்டிருந்த விலை கூட இன்னமும் அகற்றப்படவில்லை. பழுப்பு நிறமான கைப்பிடியின் பிற்பகுதி சிவப்பு நிறத்தில் இருந்தது. அந்த சுத்தியலைத் தயாரித்த நிறுவனம் கோனெக்ஸ் என்றிருந்தது. அதை ஸ்வேபிஸ்ஹாலில் விற்பனை செய்பவர்கள் ‘ஹேசெலே’ கட்டிட பொருட்கள் விற்பனை நிலையம் என்பதும் தெரிந்தது. இரண்டு பொலிஸார் ஹேசெலே கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்துக்குச் சென்றார்கள். “சமீபத்தில் இந்தவகையான சுத்தியலை யாராவது வாங்கியிருக்கிறார்களா? என்று பார்த்துச் சொல்லுங்கள்” என உரியவர்களிடம் கேட்டார்கள். கணினியில் நன்றாக அலசிப் பார்த்த அவர்கள் சொன்னார்கள், “யாரும் சமீபத்தில் இந்தச் சுத்தியலை வாங்கவில்லை” என்று “வேறு எங்கே வாங்கலாம்” பொலிசார் கேட்டார்கள். “ஒன் லைனில் கிடைக்கிறது” என்றார்கள்.- புதனும் புதிரும்
4 ஸ்வேபிஸ் ஹால் நகரசபைக்கு உட்பட்டதுதான் இல்ஸ்கொபன் கிராமம். இது ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் இன்னுமொரு அமைதியான கிராமம். 87 சதவீதமான விவசாய நிலப்பரப்பைக் கொண்டது, இங்கு 6000க்கு சற்று அதிகமான மக்களே வசிக்கிறார்கள். பெரிய தொடர்மாடிக் குடியிருப்புகள் அதிகம் இல்லாத இந்தக் கிராமத்தில் தனித்தனி வீடுகளிலேயே பெரும்பாலானோர் வசிக்கிறார்கள். ஜனவரி 16, திங்கட்கிழமை அன்று, வீட்டின் அழைப்புமணிச் சத்தம் கேட்டு, முதியவர் (86) வந்து கதவைத் திறந்து பார்த்தால் அங்கே, கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் தனது கையில் லீடில் (Lidl super market) சுப்பர் மார்க்கெற்றின் வாராந்த பிரசுரங்களுடன் நின்றார். பனி விழும் குளிர்காலம். சூரியன் ஓய்வெடுக்கும் தருணம். கறுப்புக் கண்ணாடியுடன், சிரித்துக் கொண்டே, தன் வீட்டுக்கு முன்னால் நின்ற அந்நபரைக் கண்டதும், முதியவருக்கு ஆச்சரியமாக இருந்தது. “என்ன வேண்டும்?” என்று கேட்டார் அவன் கையில் இருந்த லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களைத் தூக்கிக் காண்பித்தான். “இதெற்கெல்லாம் பெல் அடிக்கத் தேவையில்லை. இந்தத் தபால் பெட்டிக்குள் போட்டு விட்டுப் போ” என்றார். அவன் அவரை நெருங்கி வந்தான். ஏதும் பேசவில்லை அவர் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்தப் பிரசுரத்தைத் திணித்துவிட்டுப் போனான். “யாராயிருக்கும்? நான் சொன்னது இவனுக்கு விளங்கவில்லையா? வின்ரரிலும் கூலிங்கிளாஸ் போட்டிருக்கிறான். தலையில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ?” மனதில் எழுந்த கேள்விகளுடன் முதியவர் வாசல் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார். அடுத்தநாள் மதிய நேரம். முதியவர், உணவை முடித்து விட்டு வரவேற்பறையில் இருந்தார். ஒரு குட்டித் தூக்கத்துக்காக அவரது மனைவி ஷோபாவில் படுத்திருந்தார். வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. வழமையாக இந்த நேரங்களில் யாரும் அழைப்பு மணியை அழுத்துவதில்லையே என்ற கேள்வி எழுந்தாலும், எழுந்து வந்து கதவைத் திறந்தார். அதே கறுப்புக் கண்ணாடி அணிந்த மனிதன். அதே உடுப்பு. நேற்றையைப் போல் இன்றும் அவன் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள். வீட்டின் வாசலில் நின்றபடியே,“நேற்றுத்தானே தந்துவிட்டுப் போனாய். பிறகு எதுக்கு இப்ப? அதுவும் மத்தியான நேரம்” என்று எரிச்சல் கலந்த குரலில் முதியவர் கேட்டார் முதியவரின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. முதல்நாள் போலவே இன்றும் அவரை நெருங்கி வந்தான். தனது வலது கரத்தால் அவன் விட்ட குத்து, அவர் கண்ணாடிக்குக் கீழ், மூக்கின் மேல் வேகமாக வந்து விழுந்தது. வாசல் படியில் நின்ற முதியவர், நிலைதடுமாறி, வீட்டினுள்ளே விழுந்தார். வீழ்ந்தவர் அதிர்ச்சியில் இருந்து மீள முன்னரே அவரது நெற்றியில் அவனது துப்பாக்கி முனை இருந்தது. வெளியில் கேட்ட சத்தங்கள், முதியவரின் மனைவியின் சிறு தூக்கத்தைக் கலைத்து விட்டிருந்தது. ஷோபாவில் இருந்து எழுந்தவரை, கணவனின் “உதவி, உதவி செய்யுங்கள்” என்ற கூப்பாடு விரைவு படுத்தியது. விழுந்திருந்த முதியவரை அவன் காலால் உதைக்க எத்தனித்தபோது, வாசலோடு ஒட்டியிருந்த அறையின் ஒளி புகாத கண்ணாடிக் கதவினூடாக ஒருவர்( முதியவரின்மனைவி ) ஓடி வருவதை அவதானித்தான். யாரோ வருகிறார்கள் என்ற பதட்டத்தில் அவன் கால் ஒரு அடி பின் வைக்க, அந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி, தரையில் விழுந்திருந்த முதியவர் தன் காலால் பலம் கொண்ட மட்டும் கதவைத் தள்ள வாசல் கதவு மூடிக் கொண்டது. அவன் வெளியே. அவர்கள் உள்ளே. தகவல் கிடைத்து பொலிஸார் வந்திருந்தனர். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தான் என்பதை முதியவர் மறக்காமல் சொன்னார். அவன் என் நெற்றியில் துப்பாக்கியை அழுத்திப் பிடித்த போது “நீ பணம்” என்று சொன்னான், என்பதையும் சொன்னார். பொலிஸாருக்குப் புரிந்து விட்டது. வந்தவன் வெளிநாட்டுக்காரன் மட்டுமல்ல, சமிபத்தில்தான் யேர்மனிக்கு வந்திருக்கிறான் என்பதுவும். இல்ஸ்கொபன் கிராமத்தின் வீதிகள், பூங்காவனம், விளையாட்டு மைதானம் என்று எல்லா இடங்களிலும் பொலிஸார் தேடினார்கள். அவன் அகப்படவில்லை. “கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் கறுப்புக் கண்ணாடியுடன் யாராவது நடமாடியதைப் பார்த்தீர்களா? “ என விசாரித்துப் பார்த்தார்கள். ஒரு பெண் சொன்னாள். “இன்று ஹோம் ஒபீஸ். மதிய இடைவேளைக்கு கொஞ்சம் காற்றாட வெளியே வந்த போது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் ஒருவனைக் கண்டேன். கனிவான முகத்துடன்… “ஹலோ” சொல்லிச் சிரித்தான். நானும் ‘ஹலோ’ சொல்லிவிட்டுப் போனேன்” என்று. ஹேபாப் கடை வைத்திருந்தவர் சொன்னார், “ இங்கு உணவருந்த வருபவர்களை, அவர்கள் வெளியூரா, உள்ளூரா என என்னால் இனம் கண்டு கொள்ள முடியும். அவன் வெளிநாட்டவன்” என்று. ‘வந்தவன் கிராமத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவன் நிச்சயமாக இல்ஸ்கொபனை விட்டு வெளியே போயிருப்பான்’ என்று பொலிஸருக்குப் புலப்பட்டது. “புதிதாக, சந்தேகப்படும்படியான, வெளியாருடைய வாகனங்களை யாராவது கண்டீர்களா?” என்று கேட்டுப் பார்த்தார்கள். கொஞ்சம் பலன் கிடைத்தது. ஒரு கார். அதன் இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் ( duct tape)ஒட்டிய தடயங்கள் இருந்தன. அந்தக் கார் VW station wagon, Silver நிறம் என அடையாளங்களைத் திரட்டிக் கொண்டார்கள். தேடுதலின் போது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 250 மீற்றர் தூரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை அண்டிய பகுதியின் புதர்களுக்குள் இருந்து ஒரு சோடி கையுறைகளையும் ஒரு விளையாட்டுத் துப்பாக்கியையும், லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களையும் பொலிஸார் கண்டெடுத்தார்கள். அவனுடைய அங்க அடையாளங்களை முதியவரிடம் பெற்று, ஒரு கற்பனை முகத்தை (Fandom image) வரைய ஏற்பாடு செய்தார்கள்.Important Information
By using this site, you agree to our Terms of Use.
- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.