Everything posted by Kavi arunasalam
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கம்பராமாயணம் படித்ததால் கண்ணதாசன் ஆத்திகரானார் என்பதெல்லாம் சும்மா. ஆனால் கம்பராமாயணத்தில் இருந்து எடுத்து பல திரைப்பாடல்களை எழுதி கண்ணதாசன் பணம் பார்த்தார் என்பதுதான் உண்மை. உதாரணத்துக்கு, பால் வண்ணம் பருவம் கண்டு…. நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமில்லை… இட்ட அடி சிவந்திருக்க எடுத்த அடி கனிந்திருக்க… இப்படிப் பல இருக்கிறது
-
கருத்து படங்கள்
- தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
- கருத்து படங்கள்
- தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
யேர்மனியப் பத்திரிகைகளிலும் இந்த யானையைப் பற்றிய செய்தி வந்திருக்கிறது. அவர்கள் யானையின் பெயர் சாக் சூரின்(Sak Surin) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். நீண்ட இழுபறியான இராஜதந்திரப் பேச்சுவாலர்த்தைகளுக்குப் பிறகு சிறிலங்காவில் இருந்து, தவறாகப் பயன் படுத்திய யானை மீண்டும் தனது தாய் நாடான தாய்லாந்தைப் பத்திரமாக வந்தடைந்திருக்கிறது. அது இப்பொழுது ஒரு சிறப்பு நிலையத்தில் வைத்து பராமரிக்கப் படுகின்றது என ‘பாங்கொக் போஸ்ற்’ திங்கட்கிழமை செய்தி வெளியிட்டிருக்கிறது. மாதக் கணக்கான பயண ஆயத்தங்களுக்குப் பின்னர், தனது நீண்ட தந்தங்கள் மூலம் பெரிதும் அறியப்பட்ட 29 வயதான சாக் சூரின் ரஸ்ய போக்குவரத்து விமானம் மூலம் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து சியாங் மாய்க்கு வந்தது.. 2001இல் தாய்லாந்து அரசு சிறிலங்காவுக்கு அந்த யானையை அன்பளிப்பு செய்திருந்தது. முன்னர் சிலொன் என்று அழைக்கப்பட்ட அங்கே, பாகனால் அந்த யானை கடுமையாக வேலை வாங்கப் பட்டதுடன் தவறாகவும் பயன்படுத்தப்பட்டது.- குட்டிக் கதைகள்.
நீதிபதி என்னவோ இங்கே சொல்லியிரிக்கிறார்- குட்டிக் கதைகள்.
இரண்டு பேரும் இருக்கச் சந்தர்ப்பம் இல்லை.- இலங்கையில் ஆறு மாதங்கள்
சுமேரியர், வேதநாயகம் தபேந்திரன் புலத்தில் உள்ளவர்களுக்கு ஏதோ சொல்ல வருகிறார் கவனித்தீர்களா? குறிப்பாக 09,10,11 என்று இலக்கங்களில் உள்ள வரிகள்- இலங்கையில் ஆறு மாதங்கள்
- கோயிலை கட்டுவது எதனாலே?
அப்போதெல்லாம் “பெடியள், இங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள் அங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள் வந்து போகும். எதிர்பார்த்த இலக்கு வந்தால் பெடியள்களின் கண்ணி வெடிக்கும். அதுவே நீண்ட காத்திருப்பாக இருந்தால் கண்ணியை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். இப்போ எல்லாமே மாறிப் போயிருக்கின்றன. “ பிக்குகள் அங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள். இங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள்தான் வந்து கொண்டிருக்கின்றன. பிக்குகள் வைத்ததை எடுப்பார்களா? இல்லை இதற்கு மேலேயும் வைப்பார்களா? தெரியவில்லை. நான் விடயத்துக்கு வருகிறேன். கடந்த வருடம் தாயகம் போயிருந்தேன். பண்டாரவளை, அப்புத்தளை போய் ‘ஏலா’ நீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு கண்டி நோக்கிப் பயணிக்கும் போது சாரதி லோகேஸ் ஒரு கோயிலுக்கு அருகில் வாகனத்தை நிறுத்தினார். “சீதை அம்மன் கோயிலை இந்திய அரசின் உதவியுடன் கொஞ்சக் காலத்துக்கு முன்னர் புதுசாக்கி இருக்கினம். கும்பிட்டு விட்டு வாறன்” என்று சொன்னவர் கோயிலுக்குள் சென்று விட்டார். என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக நானும் கோயிலுக்குள் சென்றேன். இராமாயணத்தை சுருக்கமாக சுவரில் எழுதி வைத்திருந்தார்கள். குரங்குகள் ஆங்காங்கே காணக் கிடைத்தன. பக்தர்கள் உடைக்கும் தேங்காய்கள் அவைகளுக்கு உணவாக இருந்தன. கோவிலுக்கு வெளியே நதி ஓடிக் கொண்டிருந்து. நதிக்குப் பக்கத்தில் இருந்த கற்களில் ஆங்காங்கே பள்ளங்கள் இருந்தன. அதில் ஒன்றை தங்க நிறத்தில் வட்டமாக ஏறக்குறைய ஒரு பாதம் போல் உரு மாற்றி இருந்தார்கள். மரம் ஒன்றில் பக்தர்களின் வேண்டுதல்கள் முடிச்சுகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன. “இந்த மரத்தின் கீழ்தான் சீதை(அம்மன்) தங்கினவ. வேண்டுதல்களை எழுதி இந்த சீதை அம்மன் மரத்தில் கட்டினால் அது பலிக்கும்” என்னருகே வந்த லோகேஸ் பக்தியோடு சொன்னார். “நீங்கள் கட்டவில்லையா? “ என்றேன். “பொதுவா பிள்ளை வரம் வேண்டித்தான் முடிச்சுகளைக் கட்டுறவையள். எனக்கு இன்னும் கல்யாணமே நடக்க இல்லையே” லோகேஸ் சொன்னபோது, பிள்ளை வரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று சிலருக்கு இன்னும் தெரியவில்லை என்று ஆச்சரியமாக இருந்தது.’ “அந்த நதியிலேதான் சீதை குளித்தவ. அந்தப் பள்ளங்களைப் பாத்தீங்களே? அது அனுமாரின் காலடிகள்” “அனுமார் காலடி ஒன்றுதானே இருக்கு” “அனுமார் பறந்து வந்து அந்த இடத்தில் குதிச்சதாலை தான் அங்கே பள்ளம் வந்திட்டுது” நான் மேற்கொண்டு லோகேஸிடம் எதுவும் கேட்கவில்லை. மீண்டும் கண்டி நோக்கிப் பயணம். “இந்தச் சீதை அம்மன் கோவிலை முத்திரையா சிறீலங்கா வெளியிட்டிருக்கு. இங்கை இருந்து கல் எடுத்து இராமர் கோயிலில் பதிக்க அயோத்திக்கு அனுப்பி இருக்கினம்…..” வழி நெடுக லோகேஸ் சீதை அம்மன் கோயிலைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தான். ‘சலசல என அமைதியாக நீர் ஓடிக் கொண்டிருந்த ஒரு அழகான இடத்தை அசோக வனமாக்கி அதை பின்னர் கோயிலாக மாற்றி பலருக்கு மூளைச் சலவை செய்து பணம் பார்க்கிறார்கள்’ இப்படி ஒரு நினைப்பு எனக்குள் வந்தது. - கவி அருணாசலம்- இலங்கையில் ஆறு மாதங்கள்
- இலங்கையில் ஆறு மாதங்கள்
- இலங்கையில் ஆறு மாதங்கள்
- இலங்கையில் ஆறு மாதங்கள்
- இலங்கையில் ஆறு மாதங்கள்
- இலங்கையில் ஆறு மாதங்கள்
அப்பிடி எண்டால் கிருபன் நல்ல ஆள் இல்லை எண்டு சொல்லுறீங்களோ?- கண்ணன்
- இலங்கையில் ஆறு மாதங்கள்
கட்டாயம் இல்லை. ஆனால் டிப்ஸ் தரும் போது இரு பக்கமும் ஒரு மன நிறைவு வருகிறது. யேர்மனியில் உணவகத்தில் பரிமாறுபவருக்கு பில்லில் ஒரு வீதம் டிப்ஸாகத் தருவது வழமை. அதாவது 100 யூரோவுக்கு சாப்பிட்டால் 10 யோரோ டிப்ஸ். உணவகங்கள்,சிகையலங்காரங்கள், துப்பரவுத் தறைகளில் பணியாற்றுபவர்கள் குறைந்த சம்பளத்தில் (மணித்தியாலத்துக்கு 12 யூரோக்கள்) பணிசெய்கிறார்கள்.- இலங்கையில் ஆறு மாதங்கள்
- கருத்து படங்கள்
- இலங்கையில் ஆறு மாதங்கள்
இது சரியான கேள்வி?- மலருக்கு தென்றல் பகையானால்.........!
ஒத்துக்கொள்கிறேன்- புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
இணையவன், உங்களைப் போல்தான் நானும் வேலையில் இருந்து ஓய்வவெடுத்த பின் தாயகத்தில் போய் இருக்கலாம் என எண்ணங்கள், கனவுகளுடன் இருந்தேன். ஓய்வு கிடைத்தும் உடன் போக முடியவில்லை. கடந்த வருட இறுதியில்தான் அங்கு போக சாத்தியமாயிற்று. எனது ஊரில் இருந்தவர்களில் 98 வீதமானவர்கள் இப்போது இல்லை. எனது பால்ய நண்பனை தேடிப் போனேன். அவனது நட்பு. வட்டாரத்தில் எனக்குத் தெரியாத பலர் இருந்தார்கள். எனது நட்பைக் கூட அவனிடம் நான் புதிதாக்க வேண்டி இருந்தது. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பணம் காய்க்கும் மரம் என்பது அங்குள்ளவர்களின் பார்வையாக இருந்தது. மரமாக நின்று கொள் அதில் உள்ள பயன்களை அவரவர்கள் வந்து தாங்களாகவே எடுத்துக் கொள்வார்கள். பயன் தருகிறது என்பதற்காக ஒருசிலர் வந்து தண்ணீர் ஊற்றிப் போன சம்பவங்களும் இருந்திருக்கிறது. சுத்தம்,சுகாதாரம் இங்குள்ளது போல் அங்கில்லை. தீபாவளியில் பெய்த கடும் மழையில் நன்றாக நனைந்ததில் இருமல் வந்து மருத்துவரைப் போய்ப் பார்த்தேன். குளிசைகளை எழுதித் தந்து ரூபா 1400 வாங்கிக் கொண்டார். அவர் எழுதிய துண்டைக் கொண்டு போய் மருந்துக் கடையில் குளிசை வாங்கிய போதுதான் கவனித்தேன். எனக்கு முன்னால் நின்றவருக்கு என்ன கொடுக்கப் பட்டதோ அதே குளிசைகள் எனக்கும் தரப்பட்டது. அவரும் தீபாவளியில் நனைந்தாரோ என்று நினைத்துக் கொண்டேன். அறபதுகளில் மந்திகை போதனா வைத்தியசாலையில் பச்சை, சிகப்பு,ஒரேஜ் நிறங்களில் நாளுக்கு ஒரு மருந்துக் கலவை வைத்திருப்பார்கள்.காய்ச்சல், இருமல்,தடிமன் என்று வைத்தியசாலைக்கு போகிறவர்களுக்கு அந்தக் கலவை கிடைக்கும். இந்த நினைவு எனக்கு அப்போது வந்து போனது. இன்னும் பல அசொளகரியங்கள். விடயங்களைச் சொன்னால் நீண்டுவிடும். மொத்தத்தில் எனது பயணம் எனக்கு திருப்தி தரவில்லை. ஆக விடுமுறைக்குச் சென்று வரலாமே தவிர தங்கிவிட நினைப்பது என்பது எனக்கு சரிப்பட்டுவரவில்லை.- காலத்தின் பதிவேட்டில்
பரணி, அன்றைய கருத்தாடல்களை நினைத்தபடி நான் வரைந்த கோடுகளுடன் நகர்கிறேன் மூனா/முல்லைImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்