Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 04 JUN, 2025 | 05:09 PM அலுவலக வளாகங்களில் முகக்கவசம் அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் கூறுகிறார். நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது. எனவே, மேல் மாகாணத்தின் துணைப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வெளியிடப்பட்ட 2025.06.02 திகதியிட்ட கடிதம், மேல் மாகாண சபையின் அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அலுவலக வளாகங்களிலும் பொதுமக்கள் அதிகமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் பணிபுரியும் போது முகக்கவசம் அணியுமாறு அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் தொடர்பாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மேற்கு மாகாண தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, சம்பந்தப்பட்ட கடிதத்தில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை மறுபரிசீலனை செய்யுமாறும், அலுவலகங்களில் முகமூடிகளை அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் முடிவுக்கு வந்த பிறகு, சுவாச நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு செயல்முறையின் கீழ் கொவிட்-19 பிற தொற்று நோய்களின் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, மழைக்காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்கள் அதிகரிப்பதால், கொவிட்-19 அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், பொதுவாக, சுவாச நோய்களை தடுப்பதும் ஒரு பொதுவான வழிமுறையின்படி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த நேரத்தில் கொவிட்-19 தடுப்பு ஒரு ஆபத்தாகக் கருத வேண்டிய அவசியமில்லை என்றும், மேலும், நிறுவனங்களுக்கு இதுபோன்ற பரிந்துரைகளை வழங்குவது தேவையற்ற பயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்றும், எனவே சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே அத்தகைய ஆலோசனையை வழங்குவது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், யாராவது தானாக முன்வந்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்காக மருத்துவ ஆலோசனையின் பேரில் முகக்கவசம் அணிந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இருமல், சளி (காய்ச்சல்) போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே முகக்கவசம் அணிவது முக்கியம் என்றும், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவதற்கும், மற்றையவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பைக் குறைப்பதற்கும் செயலாளரின் கடிதம் மேலும் கூறுகிறது. https://www.virakesari.lk/article/216593
  2. 04 JUN, 2025 | 03:50 PM ஆசியாவில் எச்.ஐ.வி பரவல் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும் நாடாக இலங்கையைக் கருதலாம் எனவும் குறிப்பாக நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது எச்.ஐ.வி.யுடன் வாழும் மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது இது மிகக் குறைவாக இருப்பது பாராட்டத்தக்கது என்றும் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். அரசாங்கத்தின் ஆதரவை தாண்டி அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவு நாட்டின் சுகாதார அமைப்பை சிறந்த முறையில் பராமரிக்க உதவியுள்ளது. சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளும் மிக முக்கியமான காரணிகளாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்தார். பாலியல் உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்ற மன்றத்தின் பிரதிநிதிகள் சார்பாக இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வு சமீபத்தில் கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது. தற்போதைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டத்தை மேலும் வலுப்படுத்த சுகாதார அமைச்சகம் தீவிரமாக பங்களித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம், இந்த நாட்டில் வாழும் முழு மக்களுக்கும் ஒரு சிறந்த நாட்டை - ஒரு அழகான வாழ்க்கையையும், ஆரோக்கியமான தேசத்தையும் உருவாக்குவதற்கு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்த ஐரோப்பிய நாடாளுமன்ற மன்றத்தின் பிரதிநிதிகள் குழு, நாட்டிற்கு ஐந்து நாள் ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது, மேலும் அந்தக் குழு மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் ஆய்வுகளை நடத்தியது. அங்கு, பாலியல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் போக்குகள் குறித்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுடனும், சுகாதாரத் துறை அதிகாரிகளுடனும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தக் குழுவில் டென்மார்க், யுனைடெட் கிங்டம், பின்லாந்து, சுவீடன், ஆஸ்திரியா, பெல்ஜியம் மற்றும் பிற நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பிரதிநிதிகள் உள்ளனர். இந்த நிகழ்வில் இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் தலைவர் அருணி மார்சலின், நிர்வாக இயக்குநர் டாக்டர் ருச்சிதா பெரேரா, சங்கத்தின் மூத்த அதிகாரிகள் குழு மற்றும் சுகாதாரத் துறையின் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/216569
  3. ஆர்.ஸி.பி: வெற்றிக்குத் தகுதியான அணி இந்த ஆண்டு ஐ.பி.எல்லின் கட்டுறுதியான அணிகளாக எனக்குத் தோன்றியவை மும்பையும் ஆர்.ஸி.பியும்தாம். குறிப்பாக ஆர்.ஸி.பி அணியின் தேர்வு சிறப்பாக இருந்தது - நல்ல வலுவான பந்து வீச்சு வரிசை, கீழ்வரிசை மட்டையாட்டம், சுழல் பந்து, ஆல்ரவுண்டர் என எல்லா அலகுகளிலும் சரியான ஆளை வைத்திருந்தார்கள். பழைய தென்னாப்பிரிக்க அணியைப் போல கடுமையாகப் போராடினார்கள். அனேகமாக எல்லா ஆடுதளங்களுக்கும் ஏற்ற அணி. இன்றைய போட்டியில் அவர்கள் முதலில் ஆடி 20 ரன்களாவது குறைவாக எடுத்ததாகவே நினைத்தேன். ஆனால் அடுத்தாடிய பஞ்சாப் அணி முதல் 4 ஓவர்களில் ரிஸ்க் எடுத்து அடிக்கத் தயங்கினார்கள். அவர்கள் அடிக்க ஆரம்பித்த போது ஐந்தாவது ஓவராகியது, ஒரு விக்கெட்டும் கொடுத்தார்கள். கடைசி 6 ஓவர்களில் பந்துகளுக்கும் ரன்களுக்கும் இடையில் இருந்த 20-30 ரன்கள் இடைவெளி முதல் ஆறு ஓவர்களில் ஏற்பட்ட சுணக்கத்தினால் விளைந்ததே. ஆர்.ஸி.பி கூட ஒன்றும் சிறப்பாக ஆரம்பிக்கவில்லை. பத்தாவது ஓவரை எட்டும்போது இரண்டு அணிகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட 5 ரன்கள் இடைவெளியே. ஆனால் பட்டிதாருக்குப் பிறகு வந்த லிவிங்ஸ்டோன் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் அடுத்தடுத்து அடித்த சிக்ஸர்கள், கோலி சரியான நேரத்தில் அவுட் ஆகி ஜித்தேஷ் ஷர்மாவும் லிவிங்ஸ்டோனுமாக ஜேமிஸன் ஓவரில் அடித்த பெரிய சிக்ஸர்கள் முக்கியமான திருப்புமுனை. அதனாலே 15வது ஓவரில் ஆர்.ஸி.பி 132 எடுத்திருக்க, பஞ்சாப் நான்கு விக்கெட்டுகளுக்கு 119க்கு மட்டுமே எடுத்தது. 17வது ஓவரில் பஞ்சாப் 144க்கு 6 விக்கெட்டுகள். ஆனால் ஆர்.ஸி.பியோ 17வது ஓவரில் 5 விக்கெட்டுகளுக்கு 168 ரன்கள். அதாவது 15வது ஓவரில் 13 ரன்கள் வித்தியாசம் எனில், 17வது ஓவரில் 24 ரன்கள் வித்தியாசம். ஆர்.ஸி.பி இன்னும் சற்று சுதாரித்து ஆடியிருந்தால் 200 எடுத்திருக்க முடியும். ஆனால் பஞ்சாப் எவ்வளவு நன்றாக ஆடினாலும் 190ஐத் தாண்டியிருக்காது. ஏனென்றால் 10வது ஓவருக்குப் பிறகு அவர்களால் ஆர்.ஸி.பி பந்துவீச்சை சிக்ஸர் அடிக்க முடியவில்லை. குறிப்பாக குரனால் பாண்டியாவின் பந்து வீச்சை அடிக்க சிரமப்பட்டார்கள். (இந்தப் போட்டியில் மட்டுமல்ல இத்தொடர் முழுக்கவே குரனால் பாண்டியா தான் ஆர்.ஸி.பியின் துருப்புச்சீட்டு.) லிவிங்ஸ்டோனும், ஜித்தேஷும் செய்ததை வதேராவால் முடியவில்லை. அவர் 18 பந்துகளில் அடித்த 15 ரன்கள் ஆட்டத்தை மாற்றின. அவருக்கு ஆர்.ஸி.பி வீச்சாளர்கள் குறைநீளத்தில் வைடாக வீசியது நல்ல உத்தி. ஷஷாங் சிங் தோனி ஸ்டைலில் கடைசி வரை ஆட்டத்தைக் கொண்டு போக முயன்றதும் தவறாகியது. அவரது ஒற்றை ரன்னெடுக்கும் தடுப்பாட்ட பாணி பஞ்சாபை ஆட்டத்தில் இருந்து விரைவில் வெளியேற்றியது. ஆட்டம் முடிந்த நிலையில் அவர் அடித்த சிக்ஸர்கள் ஏதோ பாடையைச் சுற்றி நின்று டான்ஸ் ஆடுவதைப் போல இருந்தது. இவர்களுடைய கூட்டணியில் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடித்திருந்தால் அல்லது வதேரா தான் ஆடிய முதல் ஐந்து பந்துகளுக்குள் வெளியேறி ஸ்டாயினிஸ் அப்போது வந்து வேகமாக அடித்திருந்தாலோ 17வது ஓவரில் ஆட்டம் இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். ரிக்கி பாண்டிங் துணிச்சலாக வதேராவை ரிட்டையர்ட் அவுட் ஆக்கியிருக்கலாமோ? ஒருவேளை ஆட்டத்தின் முக்கியான திருப்புமுனையாக அது அமைந்திருக்கலாம். ஆனால் அவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கினார்கள். இன்னொரு பக்கம், இதைச் சாத்தியமாக்கியது ஆர்.ஸி.பியும் அற்புதமான பந்துவீச்சும்தான். ஒருவேளை அவர்கள் ஸ்குவாடை அமைக்கும்போது பந்துவீச்சை அலட்சியமாக கருதியிருந்தால் இந்த கட்டத்தில் போட்டியில் பின்வாங்கியிருப்பார்கள். கையை விட்டுப் போயிருக்கும். பஞ்சாபுக்கு வதேராவின் திணறல், ஆர்.ஸி.பிக்கு அவரைவிட சற்று மேலாக ஆடினாலும் பவுண்டரி கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த கோலி சரியான சமயத்தில் வெளியேறியது, குரனாலின் காயத்துக்கு தையல் போடுவதைப் போன்ற பந்துவீச்சு, இம்மாதிரி சின்னச்சின்ன விசயங்களே இறுதிப் போட்டியின் வெற்றியைத் தீர்மானித்தன. சொல்லப்போனால் ஆர்.ஸி.பிக்கு சாதகமாக இல்லாத ஆடுதளம் இது - ஆனால் இதற்கும் ஏற்ப தகவமைத்துக்கொண்டு அவர்கள் போராடியது, உத்தியை மாற்றிக் கொண்டது பாராட்டத்தக்கது. இம்முறை கோப்பையை வெல்ல முழுமையான தகுதி கொண்ட அணிதான் ஆர்.ஸி.பி. இத்தொடர் முழுக்க விராத் கோலி மத்திய ஓவர்களில் சுழல் பந்தை ஸ்லாக் ஸ்வீப்பிலும் இறங்கி வந்தும் தொடர்ந்து சிக்ஸர்கள் விளாசி 144 ஸ்டிரைக் ரேட்டில் ஆடியது, 657 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தகுந்தது - 2024இல் அவர் கூடுதலான ரன்களை இன்னும் மேலான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்திருந்தாலும் மத்திய ஓவர்களில் அவரால் சுழலர்களை விளாச முடியவில்லை, இம்முறை இந்த வயதில் அவர் தன் ஆட்டத்தை மாற்றிக் காட்டியது அபாரமானது. அவரது ஆட்டம் கொடுத்த உத்தரவாதம் முதல் பத்து ஓவர்களுக்குள் பட்டிதாரும், அதற்குப்பின் டேவிட், லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ், ஷெப்பர்ட் ஆகியோரும் ரெண்டு கைகளிலும் மத்தாப்பு கொளுத்தி வாயில் சரவெடி வெடிப்பதைப் போல ஆட உதவியது. ஆர்.ஸி.பி யாரையும் சார்ந்திருக்கவில்லை. 11 பேர்களும் நல்ல ஆட்டநிலையில் தொடர்ச்சியாக அதிரடியாக ஆடினார்கள். எல்லா சவால்களுக்கும் யாராவது ஒருவர் எழுந்து நின்று தீர்வைக் கண்டடைந்தார்கள். பட்டிதார் அணித்தலைவராக நல்ல தேர்வல்ல என்று நான் துவக்கத்தில் நினைத்தேன். ஆனால் அது தவறான கணிப்பு என்பதை அவரது புத்திசாலித்தனத்தையும் நிதானத்தையும் பார்த்தபோது உணர்ந்தேன். தலைமையால் அவரது ஆட்டமும் மேம்பட்டது. காயமிருந்தும் கூட தயங்காமல் அதிரடியாக ஆடினார். சுயநலமற்ற ஆட்டம். பாதி தொடரில் பட்டிதார் காயமுற்றபோதும் கூட அவர்களால் பின்வாங்காமல் தளராமல் ஆட முடிந்ததைப் பார்க்கையில் அணியின் வலுவான கட்டமைப்புப் புலப்பட்டது. மயங்க் அகர்வால் பாதி தொடரில் அணிக்குள் வந்து நன்றாக ஆடினார். இதையெல்லாம் பார்க்கையில் அடிப்படையில் அவர்கள் மகிழ்ச்சியான நிம்மதியான அணியாக இருந்தார்கள் என்பது தெரிகிறது - உள்ளார்ந்த மகிழ்ச்சியும் தன்னிறைவும் தரும் தன்னம்பிக்கை அவர்களைச் செலுத்தியது. இவ்வெற்றியில் அவர்களுடைய நிர்வாகமும் பயிற்சியாளர்களின் அணியும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். இன்னொரு முறை இப்படி எல்லாம் அமைந்து வருமா எனத் தெரியவில்லை. ஆர்.ஸி.பிக்கு வாழ்த்துகள்! https://thiruttusavi.blogspot.com/2025/06/blog-post_3.html
  4. யாழ் மருத்துவமனை குருதிப்பெருக்கின் மத்தியில் ஒரு கலங்கரை விளக்கம் - யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம் Published By: RAJEEBAN 04 JUN, 2025 | 04:33 PM A beacon amidst the bleeding: What Jaffna’s doctors taught me about life — Abbi Kanthasamy malay mail எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் பொருட்களை தேடுவதில் செலவிட்டுள்ளேன். வணிகம் பிராண்ட்கள் வீடுகள் வாக்குவாதங்கள் - எப்போதும் எதனையாவது துரத்துவது, துரத்திக்கொண்டேயிருப்பது. அடுத்த இலக்கு அடுத்த ஒப்பந்தம் மைல்கற்கள் இலாபங்களை வைத்து மதிப்பிடும் இந்த உலகில். ஆனால் கடந்தவாரம் இலங்கையின் வடபகுதியில் உள்ள சிறிய மருத்துவனையொன்றில் எனது தாயார் உயிருக்காக போராடுவதை பார்த்தபின்னர் எனக்கு ஒரு விடயம் நினைவிற்கு வந்தது - எல்லா வீரர்களும் கதாநாயர்களும் எப்போதும் எதனையும் துரத்திக்கொண்டிருப்பவர்கள் இல்லை எதன் பின்னாலும் ஓடிக்கொண்டிருப்பவர்கள் இல்லை. அது குமுழமுனையில் ஆரம்பமானது. மாரடைப்பு, உண்மையானது அமைதியானது ஆனால் கடும் ஆபத்தானது. நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாயார் முழுமையான அடைப்பினால் பாதிக்கப்பட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். வலது தமனியில் கிட்டத்தட்ட 99 வீத அடைப்பு காணப்பட்டது. அவர் பல நாட்களாக ஆபத்தான நிலையைநோக்கி அமைதியாக சென்றுகொண்டிருந்தார். மருத்துவ நூல்களில் - புத்தகங்களில் தெரிவிக்கப்படும் அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. ஒரு ஆபத்தான பாறையின் நுனியை நோக்கி அமைதியான பயணம். முல்லைத்தீவு மருத்துவமனையின் வைத்தியர்கள் குழுவினர் வேகமாகவும் உறுதியாகவும் செயற்பட்டனர். அவர்கள் ஒரு த்ரோம்பொலிடிக்கை அம்மாவிற்கு செலுத்தினர். நாங்கள் இதனை இரத்த ஓட்டத்தை தடுக்கும் இரத்த கட்டிகளை கரைக்க உடைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் என இதனை அழைப்போம். அம்மாவிற்கு தேவையாகயிருந்த மிகவும் விலைமதிப்பற்ற் நேரத்தை முல்லைத்தீவு மருத்துவர்கள் வழங்கினார்கள். பின்னர் அம்மாவை யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மாற்றினார்கள்.அங்கு போதுமான கையுறைகள் கூட இல்லாத மருத்துவர்கள் மற்றும் தாதிமார் குழுவினர் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட அம்மாவிற்கு அஞ்சியோபிளாஸ்டி சத்திரசிகிச்சையை செய்தனர். ஒரு ஸ்டெண்டை வைத்து உயிரை காப்பாற்றினார்கள். அவர்களின் வாயிலிருந்து 'மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம்" என்ற வார்த்தையை ஒரு தடவை கூடநான் கேட்கவில்லை. அந்த மருத்துவர்களின் திறமை குறித்து ஒருமுறை கூட எனக்கு சந்தேகம் எழவில்லை. எனக்கு கடும் ஆச்சரியத்தை அளித்த விடயம் இதுதான் - கடந்த மூன்றுவருட காலப்பகுதியில் இரண்டாயிரம் மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் பிரிட்டன், அவுஸ்திரேலியா மத்திய கிழக்கிற்கு சென்றுவிட்டனர். சிறந்த ஊதியத்தை வழங்கும் சிறந்த நேரத்தை வழங்கும் சிறந்த விடயங்கள் அனைத்தையும் வழங்கும் எல்லா இடங்களிற்கும் அவர்கள் சென்றுவிட்டனர். இலங்கையிலிருந்து வெளியேறாமலிருந்த மருத்துவர்கள் - பிடிவாதக்காரர்கள் சுயநலமற்றவர்கள் - ஊதியம் சலுகைகளை விட குறிக்கோளிற்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள். நான் அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட்டேன். அவர்கள் தங்கள் பணிகளை இடைநிறுத்தாமல் ஆரவாரம் இல்லாமல் புகார் சொல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தனர். ஒரு இருதயநோய் நிபுணர் ஒருவர் ஒரு நோயாளிக்கு (முதியவர்) அருள்பாலிக்கும் நினைப்பு எதுவுமின்றி சரளமாக தமிழிலில் விளங்கப்படுத்திக்கொண்டிருந்ததை பார்த்தேன். ஒரு மருத்துவதாதியொருவர் தனது சொந்த குழந்தையை போல தலையணையை கவனமாக சரிசெய்வதை பார்த்தேன். குணப்படுத்துதலில் அவர்கள் மகிழ்ச்சியடைவதை பார்த்தேன். உண்மையான மகிழ்ச்சி. நான் ஒன்றை உணர்ந்தேன் - இந்த மக்கள் எங்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். நோக்கத்திலேயே அமைதி உள்ளது நோக்கமே அமைதியை ஏற்படுத்துகின்றது. எண்ணிக்கையில் காணமுடியாத செல்வம் ஆனால் கௌரவத்தில் காணக்கூடிய செல்வம். அது இங்கு தாரளமாக கிடைக்கின்றது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் எனது தாயார் கனடாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயர் இரத்த அழுத்தம் கவலையளிக்கும் அறிகுறிகள். ஆனால் நெறிமுறைகள் மற்றும் அதிகளவான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் சுகாதார கட்டமைப்பு எனது தாயார் மாரடைப்பினால் பாதிக்கப்படலாம் என்பதை தவறவிட்டுவிட்டது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள அரசமருத்துவமனை ஆபத்தை உடனடியாக இனம் கண்டு ஒரு சத்திரசிகிச்சையின்; துல்லியத்துடன் சிகிச்சையளித்தது. https://www.virakesari.lk/article/216581
  5. புதிய இணைப்பு மட்டக்களப்பு நகரில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மூன்று பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதுவரை 86 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பிலுள்ள புனிதமைக்கல் கனிஷ்ட பாடசாலையை சேர்ந்த மாணவர்களும், கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த , கல்லடி வினாயகர் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலாம் இணைப்பு மட்டக்களப்பு நகரில் மூன்று பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையினால் 44 மாணவர்கள்வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று வெவ்வேறு பாடசாலைகளில் இடைவேளையின்போது குறித்த பாடசாலைகளில் அமைந்துள்ள சிற்றுண்டி சாலைகளில் உணவு வாங்கி மாணவர்கள் உட்கொண்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதி அவ்வாறு மாணவர்கள் வாக்கி உட்கொண்ட உணவு ஒவ்வாமையினால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவ்வுணவை உட்கொண்ட மாணவர்களுக்கு, வாந்தி, தலைசுற்று, ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தினர் துரிதமான நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக நோய்காவு வண்டிகளில் துரிதமாக மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவை தொற்றா நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். பொலிஸார் விசாரணை இதுதொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த பாடசாலைகளில் இயங்கிவரும் சிற்றுண்டிச் சாலைகளுக்கு ஒரு இடத்திலிருந்தே உணவுகள் விநியோகித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மாணவர்கள் குறித்த பாடசாலைகளில் பிட்டு வாங்கி அருந்தியுள்ளதாகவும் அந்த உணவு ஒவ்வாமை நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் https://tamilwin.com/article/food-allergy-44-hospitalized-in-batticaloa-schools-1749023774
  6. 2025 ஐபிஎல் தொடரில் இலங்கை வீரருக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்! ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கிண்ணத்தை வென்றுள்ளது. அதனைதொடர்ந்து, நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், மிகசிறந்த பிடியெடுப்புக்கான விருதை சன்ரைஸஸ் ஐதராபாத் அணியில் விளையாடிய இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார். விருது ஐபிஎலில் இலங்கை வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தமை பாராட்டுக்களுடன் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது. அதன்படி, ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிக சிறந்த பிடியெடுப்பு என பேசப்பட்டு வருகின்றதுடன், அதற்கு இறுதி விருது வழங்கும் விழாவின் போது அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. விருது வென்றவர்களின் முழு பட்டியல்: சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரர்: சூர்யகுமார் யாதவ் செம்மஞ்சள் தொப்பி வென்றவர்(Orange Cap): சாய் சுதர்சன் (759 ஓட்டங்கள்) தொடரின் சிறந்த பிடிப்பு (கேட்ச்) : கமிந்து மெண்டிஸ் ஊதா தொப்பி வென்றவர்(Purple Cap): பிரசித் கிருஷ்ணா (25 விக்கெட்டுகள்) ஃபேர்பிளே விருது(Fairplay Award): சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தொடரின் வளர்ந்து வரும் வீரர்: சாய் சுதர்சன் https://ibctamil.com/article/catch-of-the-season-ipl-2025-kamindu-mendis-1749020194#google_vignette @கிருபன்அண்ணை இன்னும் இரு கேள்விகளை அடுத்த ஆண்டு சேர்க்கலாமா?
  7. யாழில் பல இலட்சத்திற்கு ஏலம் போயுள்ள மாம்பழம் யாழில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்திலே இந்த ஏலம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. வெளிநாடுகளிலும் இருந்தும் இந்த மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது. இதன் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள் குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர். இதனால் மாம்பழத்தின் விலையும் உயர்ந்து கொண்டு சென்றது. இவ்வாறு பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது. 15 நாள் திருவிழா இதன்போது வெளிநாட்டில் அதாவது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் (4 60 000) ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார். இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலையில் அதனையும் அடியவர்கள் ஏலத்தில் வாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த ஆலயத்தின் 15 நாள் திருவிழாவின் தொடராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை பூங்காவனத் திருவிழாவும் புதன்கிழபை வைரவர் உற்சவமும் இடம்பெற்று திருவிழா நிறைவடைய உள்ளது. https://tamilwin.com/article/mango-auctioned-for-millions-in-jaffna-1749027058
  8. மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல் வவுனியாவில் ஆசிரியையான 32 இளம் குடும்ப பெண் கணவனால் கழுத்து வெட்டி கொல்லப்பட்டமைக்கான காணம் வெளியாகியுள்ளது. தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கொடூர சம்பவம் நேற்றையதினம் (03) இடம்பெற்றிருந்தது. பெண்ணின் கணவர் வழங்கிய வாக்கு மூலம் இதனையடுத்து கைது செய்யப்பட்ட 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளம் குடும்பஸ்தரான மரணமடைந்த பெண்ணின் கணவர் வழங்கிய வாக்கு மூலத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவர்ணலதா என்ற 32 வயதான ஆரம்பப் பிரிவு ஆசிரியரான இவர் கணவனால் கொலை செய்யப்பட்டமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த போதிலும் கணவனினால் புளியங்குளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனது மனைவி ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தான் கொழும்பில் தங்கி இருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளம் குடும்பஸ்தர், நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது தொலைபேசிக்கு ஒரு 21 வயது இளைஞனினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்த நிலையில் தான் கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து என் மனைவியுடன் பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியை தாய் சேய் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர், இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும் இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டதன் பிரகாரம் எவ்விதமான பதிலும் கூறவில்லை. மேலதிக விசாரணை நேற்று (03.06) காலை அவர் அதை ஒத்துக் கொண்டதையடுத்து தனது மனைவியை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியே அவர் சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்து வந்திருக்கின்றார் என்றும் தெரிவித்திருந்தார். அந்த காட்டுப் பாதையின் வழியே 200 மீட்டர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் என கேட்டபோது, தான் அந்த குறித்த 21 வயது இளைஞன் இந்த பகுதிக்கு வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்பதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறதாகவும் கூறியதாகவும் பொலிசாரிடம் கூறி இருக்கின்றார். இதன் பின்னர் தான் அவரை கொலை செய்ததாகவும் வந்ததாகவும் புளியங்குளம் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர். இதனை அடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி இருந்தனர். குறித்த பகுதிக்கு தடயவியல் பொலிசாரும் வருகை தந்து அங்கிருந்த சான்று பொருட்களை சேகரித்ததோடு, குறித்த விடயம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://tamilwin.com/article/vavuniya-teacher-murder-shocking-news-1749018816
  9. தமிழகத்தில் கன்னட படங்கள் வெளியாகாது” - கமலின் ‘தக் லைஃப்’ விவகாரத்தில் வேல்முருகன் எச்சரிக்கை 04 JUN, 2025 | 10:01 AM சென்னை: “கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. இதனை கன்னட மொழி திரைப்படங்களாக பார்க்காமல், திரைப்படமாக மட்டுமே தமிழர்கள் பார்த்தனர். ஆனால், கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் மொழி அரசியலாக பார்க்கப்பட்டிருக்கிறது. எனவே, கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக தடை இருக்கும் பட்சத்தில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரு கன்னட திரைப்படமும் வெளியாகாது” என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் மாபெரும் கலைஞன் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி’ என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கமல்ஹாசன் பேசியது சரியே. ஆனால், கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் தமிழ், தமிழர்களுக்கு எதிரான இன வெறியைத் தூண்டும் நோக்கத்துடன் கமல்ஹாசன் உறவாகப் பேசிய செய்திகளை தவறாக சித்தரித்து கர்நாடகத்தில் ஒட்டப்பட்டிருந் ‘தக் லைஃப்’ திரைப்பட சுவரொட்டிகளையும், பேனர்களையும் கிழித்தெறிந்து போராட்டங்களைக் நடத்திக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. கன்னட சினிமா வர்த்தக சபையும் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட அனுமதி கிடையாது எனக் கூறியுள்ளது. அதற்கும் ஒருபடி மேலே சென்று, கன்னட இனவெறி அமைப்புகளை ஆதரிக்கும் வகையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியும், முதல்வருமான சித்தராமையா மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோர், கமல்ஹாசனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, கமல்ஹாசன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது, கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வாளரா? மொழியியல் வல்லுநரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிந்து இருக்கும். கமல்ஹாசனோ அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்த கூடாது. கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதாரம் உள்ளதா என பல்வேறு கேள்விகளை நீதிபதி நாகபிரசன்னா எழுப்புகிறார். அதுமட்டுமின்றி, நானே இந்த திரைப்படத்தை பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் இந்த விவகாரத்தால் பார்க்க முடியாது. கமல்ஹாசன் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். பேசிய கருத்தை திரும்ப பெற முடியாது. மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் படம் ஓட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? மன்னிப்பு ஒன்று தான் தீர்வு. இதுதான் நீதிபதி நாகபிரசன்னாவின் கேள்விகள். அவர் நீதிபதியாக இல்லாமல், ஒரு கன்னடராக இருந்து அக்கேள்விகளை எழுப்பியுள்ளார். கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில், தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் தான், கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையாவும், பாஜக மாநிலத் தலைவரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தான் நீதிபதி நாகபிரசன்னாவும் பேசியிருக்கிறார். இது தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை உருவாக்கி தமிழர் எதிர்ப்பை மேலும் மேலும் தூண்டி விடுகின்ற செயலாகும். நீதிபதியாக இருப்பவர்களுக்கு மொழி, இனம், மதம் வேறுபாடு கிடையாது என்பார்கள். ஆனால், நாகபிரசன்னா ஒரு கன்னடராக மட்டுமே இருந்து தீர்ப்பளித்துள்ளார். அவரது இனப்பற்றை போற்றுகிறோம். கர்நாடகாவில் இதுவரை தமிழர்களுக்கு நீர் தான் மறுக்கப்பட்டு வந்தது. இப்போது நீதியும் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிபதி நாகபிரசன்னா கடந்த கால வரலாற்றை மறந்து விட்டு பேசியுள்ளார். கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. இதனை கன்னட மொழி திரைப்படங்களாக பார்க்காமல், திரைப்படமாக மட்டுமே தமிழர்கள் பார்த்தனர். ஆனால், கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் மொழி அரசியலாக பார்க்கப்பட்டிருக்கிறது. எனவே, கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியாக தடை இருக்கும் பட்சத்தில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரும் கன்னட திரைப்படமும் வெளியாகாது. அதே நேரத்தில், தமிழ் திரைப்படத்துறையில் உள்ள சங்கங்கள் முன்வந்து, கர்நாடகாவில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், தமிழ் திரைப்படங்களில் கன்னட நடிகர்களையோ, தொழில்நுட்ப கலைஞர்களையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாபெரும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தங்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விவகாரத்தை பயன்படுத்தி கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், கர்நாடக தமிழர்களின், தமிழ்நாட்டு தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்வினையாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையோடு கூறிக்கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/216529
  10. கமல்ஹாசன் சொல்வது போல் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததா? மொழியியலாளர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 4 ஜூன் 2025, 01:58 GMT புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ஆனால், எந்த மொழியில் இருந்து எந்த மொழி பிறந்தது எனக் கூறுவது சிக்கலானது என்கிறார்கள் மொழியியலாளர்கள். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து விரைவில் வெளியாகவுள்ள 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தபோது, அந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் பங்கேற்றிருந்தார். கமல்ஹாசன் அவரைப் பற்றிப் பேசும்போது, "ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என் பேச்சைத் தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்" என்று பேசியிருந்தார். சிவராஜ்குமார் இதைக் கேட்டுப் புன்னகைத்தார். ஆனால், கமல்ஹாசனின் கன்னட மொழித் தோற்றம் குறித்த இந்தக் கருத்து கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடக முதலமைச்சரில் துவங்கி, கன்னட அமைப்புகள் வரை இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இருந்தபோதும், தனது பேச்சுக்காகப் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன். இப்போது இந்தப் பிரச்னையின் காரணமாக 'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்றிருக்கிறது. திராவிட மொழிகளில் பல மொழிகள் அல்லது அனைத்து மொழிகளும் தமிழில் இருந்து தோன்றியவை என்ற கருத்து புதிதானதல்ல. நீண்ட காலமாகவே தமிழ்த் தேசிய கருத்தாளர்கள் இந்தக் கருத்தை முன்வைத்து வருகின்றனர். ஆனால், திராவிட மொழிக் குடும்பத்தின் பிற மொழிகளைச் சேர்ந்தவர்கள் இதை ஏற்பதில்லை. திராவிட மொழிகளுக்கு தமிழ் தாய் மொழியா, சகோதர மொழியா? திராவிட மொழிகள் குறித்த ஒரு விரிவான ஒப்பீட்டு ஆய்வை முதன்முதலில் செய்தவராக 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமயப் பரப்பாளரும் மொழியியலாளருமான ராபர்ட் கால்ட்வெல்லை குறிப்பிடலாம். இவருடைய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) நூல் திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகளை முறையாக ஒப்பிட்டு, சில கருத்துகளை முன்வைத்தது. "தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள், இந்தோ - ஆரிய மொழிகளில் இருந்து தோன்றியவை அல்ல. அவை தனித்த, திராவிடம் எனும் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை" என்ற கருத்தை கால்ட்வெல் முன்வைத்தார். மேலும், தொல் திராவிட மொழி என்ற மொழியில் இருந்தே திராவிட மொழிகள் தோன்றின என்றும் இந்த தொல் திராவிட மொழியோடு, தமிழே கூடுதல் நெருக்கம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் ராபர்ட் கால்ட்வெல். ஆனால், 20ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில் தமிழ் திராவிட மொழிகளுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்ற கருத்தை தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் முன்வைத்தனர். இதற்குப் பிறகு தொடர்ந்து இந்தக் கருத்து ஒரு சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், மொழியியல் ஆய்வாளர்கள் இதுகுறித்து மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனேயே பேசுகின்றனர். 'அவகாசம் தராமல் அடித்து விரட்டினர்' - அனகாபுத்தூர் மறுகுடியமர்வால் கொந்தளிப்பில் மக்கள் - பிபிசி கள ஆய்வு3 ஜூன் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி என்பதையும் தனித்துவமான இலக்கியங்களைக் கொண்டது என்பதையும் ஏற்கும் இவர்கள், ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியது என்பதை ஏற்பதில்லை. செக் நாட்டைச் சேர்ந்த இந்திய மொழியியல் அறிஞரான கமில் ஸ்வலபில், திராவிட மொழிகளின் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, "கி.மு. 8ஆம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டுக்குள் தொல் தென் திராவிட மொழிகள் சிதற ஆரம்பித்தன. கி.மு. நான்காம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டுக்குள் தமிழ் ஓர் இலக்கிய மொழியாக நிலை பெற ஆரம்பித்தது என்ற கருத்தை திராவிட மொழிகளின் வரலாற்றாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தமிழும் கன்னடமும் பிரியும் இறுதிக் கட்டத்தில், பழங்கால தமிழ் இலக்கியத்தின் ஆரம்பக் கட்டத்தில், செய்யுள் என்ற வடிவத்தை உருவாக்குவதில் இலக்கணவாதிகள் கவனம் செலுத்தினார்கள்," எனத் தன்னுடைய The Smile of Murugan நூலில் குறிப்பிடுகிறார். இவரது இந்தப் புத்தகத்தில், "தமிழும் கன்னடமும் பிரியும் இறுதிக் கட்டத்தில்" என்ற சொற்தொடர் மட்டுமே, தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்ற பொருளைத் தருகிறது. ஆனால் தமிழைத் தவிர, பிற முக்கியமான திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றின் துவக்க கால இலக்கியங்கள் வேறு ஏதோ மொழியில் இருக்கும் இலக்கியங்களைப் பிரதி செய்தவை அல்லது முன்மாதிரியாக எடுத்துக் கொண்டவை என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர். நரசிம்மாச்சார்யா எழுதிய கன்னட மொழியின் வரலாறு (History of Kannada Language) என்ற நூல், அந்த மொழியின் தோற்றம் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், கன்னட மொழி தமிழுடன் கூடுதல் நெருக்கம் கொண்டது என்று குறிப்பிடுகிறது. "கன்னடம் தமிழோடு நெருங்கிய தொடர்புடையது. இலக்கண ரீதியாக இந்த இரு மொழிகளுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. தமிழில் இருந்து கன்னடம் வேறுபடுவதைவிட, தெலுங்கு மொழியிடம் இருந்து கூடுதலாக வேறுபடுகிறது" என்கிறார் ஆர். நரசிம்மாச்சார்யா. தொல் திராவிட மொழியில் இருந்தே, பிற திராவிட மொழிகள் தோன்றியதாக ஒரு கருதுகோள் வைக்கப்படும் நிலையில், அந்தத் தொல் திராவிட மொழிக்கு நெருக்கமான மொழி தமிழ்தான் என்கிறார் நேஷனல் ஃபோக்லோர் சப்போர்ட் சென்டரின் இயக்குநரான எம்.டி. முத்துக்குமாரசாமி. 'தமிழில் பிறந்ததே கன்னடம்': கமல் பேச்சு பற்றி கன்னட நடிகர் சிவராஜ்குமார் கூறியது என்ன? திமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டு கூட்டணியில் சேர்ந்தது ஏன்? கமல்ஹாசன் கூறியது என்ன? 5 ஆண்டுகளில் 100 படங்கள் - தமிழ்த் திரையுலகில் இளையராஜாவின் வருகை எப்படி இருந்தது? எம்ஜிஆர் படத்தில் இருட்டடிக்கப்பட்ட கருணாநிதி பெயர் - கோவையிலிருந்து கோபத்துடன் புறப்பட்ட கதை "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் பிற மொழிகள் தமிழில் இருந்து தோன்றியவை எனக் குறிப்பிடவில்லை. ஆனால், அதற்குப் பதிலாக தொல் திராவிட மொழி என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். அந்தத் தொல் திராவிட மொழிக்கு நெருக்கமான மொழி, தமிழ்தான் என்றார். அவரைப் பொறுத்தவரை, எல்லா திராவிட மொழிகளும் சகோதர மொழிகள் எனக் குறிப்பிட்டார். இவருக்குப் பிறகு வந்த மொழியியலாளர்கள் இந்த தொல் திராவிட மொழிகளை வடக்கு தொல் திராவிடம், தெற்கு தொல் திராவிடம் என்பன உள்படப் பல வகைகளாகப் பிரித்து ஆராய்ந்தனர்," என்று விளக்கினார் எம்.டி.முத்துக்குமாரசாமி. மேலும், "திராவிட வேர்ச்சொல் அகராதி ஒன்று தொகுக்கப்பட்டது. இந்த வேர்ச்சொல் அகராதியில் இடம்பெற்ற பெரும்பாலான சொற்களின் மூலம் தமிழாகவே இருந்தது. அது தவிர, கன்னட மொழியில் உரைநடையே 10ஆம் நூற்றாண்டில்தான் துவங்குகிறது. ஆகவே இப்போதைய கேள்வி, தமிழுக்கு கன்னடம் அக்காவா, அம்மாவா என்பதுதான். அக்கா என்றால் எல்லோரும் ஏற்கிறார்கள். ஆனால், இந்த அக்கா மொழி, அம்மா அளவுக்கு மூத்த மொழி என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது," என்றும் அவர் விவரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன் தமிழிலில் இருந்து பிற திராவிட மொழிகள் தோன்றின என்று கூறுவது சரியான கருத்தல்ல என்கிறார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில், "மூல திராவிட மொழி என்ற ஒன்றிலிருந்து பிற மொழிகள் அனைத்தும் பிரிந்திருக்க வேண்டும் என்னும் மொழியியலாளர் கருத்தையே நானும் ஏற்கிறேன். அப்படியானால் அந்த மூலதிராவிட மொழி எங்கே என்று கேட்கின்றனர். ஒரு கல்லை உடைத்தால் அது பல துண்டுகளாகச் சிதறிவிடும். மூலக்கல் எங்கே என்று கேட்க முடியாது. மொழியிலும் அப்படித்தான். தமிழில் இல்லாத மூல திராவிட மொழியின் சிற்சில கூறுகளைப் பிற திராவிட மொழிகள் தக்க வைத்திருக்கின்றன. ஆகவே இவற்றைச் சகோதர மொழிகள் என்று சொல்வது சரியானது. மேலும் இன்றைய அரசியல் சூழலில் இந்தத் 'தாய்-சேய் உறவு' என்பதை வலியுறுத்துவது நன்மை பயக்காது. எங்கள் மொழியில் இருந்தே உங்கள் மொழி பிறந்தது என்று பிறரை நோக்கிச் சொல்வது ஒரு வகையில் ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது" என்கிறார் அவர். தமிழ்நாட்டில் உள்ள பல மொழியியலாளர்கள் இந்தச் சர்ச்சையில் இருந்து விலகியிருக்கவே விரும்புகிறார்கள். எதிர்பார்த்தபடியே கன்னட மொழியியலாளர்கள் இந்தக் கருத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். "தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்பது முழுக்க முழுக்கத் தவறான கருத்து. தமிழும் கன்னடமும் சகோதர மொழிகள். ஒரு மூத்த மொழியில் இருந்து பிறந்த மொழிகள். தொல் திராவிட மொழியில் இருந்துதான் கன்னடம் தோன்றியதே தவிர, தமிழில் இருந்து தோன்றவில்லை," என்கிறார். இந்த இரு மொழிகளிலும் தொல் திராவிட மொழியின் வார்த்தைகள் ஒரே மாதிரி இருப்பதே இதற்குக் காரணம். "உதாரணமாக, காதைக் குறிப்பிட கன்னடத்தில் கிவி என்கிறோம். தமிழில் செவி என்கிறார்கள். இந்த இரண்டு சொற்களும் ஒரே தொல் திராவிட மொழியில் இருந்து உருவான இருவேறு ஒலிப்புகள். ஆகவே, தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்பது முழுக்க முழுக்கத் தவறானது" என்கிறார் கன்னட மொழி வளர்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவரான பேராசிரியர் எஸ்.ஜி. சித்தராமைய்யா. திராவிட மொழிகள் தென் திராவிட மொழிகள், தென் மத்திய திராவிட மொழிகள், மத்திய திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. தென் திராவிட மொழிகளில் தமிழ், கன்னடம், மலையாளம், இருளா, கொடவா, தோடா, கோட்டா, படகா, கொரகா, துளு உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றுள்ளன. தென் மத்திய திராவிட மொழிப் பிரிவில் தெலுங்கு, கோண்டி, குயி, கோயா உள்ளிட்ட மொழிகளும் மத்திய திராவிட மொழிப் பிரிவில் கோலமி, துருவா, ஒல்லரி, நாய்க்கி ஆகிய மொழிகளும் வட திராவிட மொழிப் பிரிவில் குருக், மால்டோ, ப்ராஹுவி ஆகிய மொழிகளும் இடம்பெற்றுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgq3knznj01o
  11. 04 JUN, 2025 | 09:59 AM இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் செயல்திறனுடைய ஒரு Stabicraft ரக ரோந்துப் படகை வழங்கியுள்ளதுடன் 12 மில்லியன் ரூபா பெறுமதியான உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள், கடல் கண்காணிப்பு உபகரணங்களையும் வழங்க திட்டமிட்டுள்ளது. கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பானது, பல்வேறு வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பிராந்திய கடல்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ‘Disi Rela’ கூட்டு கடல்சார் பாதுகாப்புத் திட்டத்தின் அடுத்த கட்ட அறிமுகத்தின் மூலம் ஒரு வலுவான புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளது. கடந்த வருடத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, விரிவாக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது, எமது திறன்களில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் செயல்திறனுடைய ஒரு Stabicraft ரக ரோந்துப் படகை வழங்கியுள்ளது. ‘Disi Rela’ திட்டத்தின் கீழ் எதிர்கால முயற்சிகளின் ஒரு அங்கமாக, 12 மில்லியன் ரூபா பெறுமதி கொண்ட உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் கடல் கண்காணிப்பு உபகரணங்களை வழங்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இது இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட கடல் பிரதேசங்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும். ‘Disi Rela’ என்பது ‘Keeping a watchful eye over the maritime environment’ (கடல் சூழலைக் கண்காணித்தல்) எனப் பொருள்படும். இது சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையின் கூட்டு அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இரு நாடுகளும் உளவுத்தகவல்களை பகிர்ந்தறிதல், மேம்பட்ட உபகரணங்களின் விநியோகம், சமூக விழிப்புணர்வு முயற்சிகள் மற்றும் திறன் அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் மனிதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடி போன்ற கடல்சார் குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடல்சார் பாதுகாப்பை இணைந்து மேற்கொள்கின்றன. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகக் காணப்படும் சமூக ஈடுபாட்டை வலியுறுத்தி கருத்துத் தெரிவித்த இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் ராஜபிரிய சேரசிங்க, “ ‘Disi Rela’ என்பது வெறுமனே தொழில்நுட்பம் அல்லது ரோந்து நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாகும். இது இரு நாடுகளுக்கிடையேயும், சமூகங்களுடனும் ஏற்படும் ஒத்துழைப்பின் வலிமையை பிரதிபலிக்கிறது. எமது கடல்களை பாதுகாப்பதில் ஒவ்வொரு இலங்கையருக்கும் பங்கு உள்ளது.” என்றார். இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராட்டி கருத்து வெளியிட்ட, Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டு முகவர் நிறுவன) கொமாண்டர் ரியர் அட்மிரல் Brett Sonter, (Royal Australian Navy), “ ‘Disi Rela’ திட்டத்தின் இந்த புதிய கட்டமானது, கடல்சார் பாதுகாப்பு எனும் பொதுவான பொறுப்பை எவ்வளவு தீவிரமாக இருநாடுகளும் எடுத்துக் கொள்கின்றன என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இந்த புதிய வசதிகள் எமது அடைவுகளை விரிவுபடுத்துவதோடு, இதன் மூலம் எமது பிராந்தியத்தை பாதுகாப்பதிலான அர்ப்பணிப்பைநாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.” என்றார். பொதுமக்கள் கடல்சார்ந்த சந்தேகமான நடவடிக்கைகள் பற்றி தெரிந்தால், 24/7 மணி நேரமும் செயற்படும் 106 எனும் பிரத்தியேக அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். இந்த கூட்டு முயற்சியானது அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதோடு, சர்வதேச ரீதியிலான கடல்சார் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பாதுகாப்பான மற்றும் நிலையான கடல்சார் பிராந்தியத்தை உருவாக்க உதவுகின்றது. https://www.virakesari.lk/article/216525
  12. கைது செய்யப்பட்ட விவசாயியை விடுவிக்கக் கோரியும், குருந்தூர் மலையில் நில அபகரிப்புகளை நிறுத்தக் கோரியும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் போராட்டம் Published By: VISHNU 04 JUN, 2025 | 02:23 AM முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால் 04ஆம் திகதி புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பாக புதன்கிழமை (4) மதியம் 12 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/216517
  13. ஆர்சிபி-யின் 18 ஆண்டுகள் கனவு நனவாக வித்திட்ட பில் சால்டின் அற்புத கேட்ச் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் "ஈசாலா கப் நம்தே" இந்த கோஷம், 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி ரசிகர்களுக்கு இறுதியாக நனவாகிவிட்டது. ஒருமுறை அல்ல, 3 முறை இறுதிப்போட்டி, 18 ஆண்டுகள் போராட்டம், வலி, காயம், வேதனை அனைத்தும் இந்த சீசனில் ஆர்சிபிக்கு ஆற்றப்பட்டுவிட்டது. இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றுள்ளது. ஐபிஎல் கோப்பையில் 8வது அணியாக இனிமேல் தன்னுடைய பெயரையும் ஆர்சிபி அணி பொறித்து வரலாற்றில் இடம் பிடித்தது. ராகுல் திராவிட், அணில் கும்ப்ளே, விராட் கோலி, டூப்ளெஸ்ஸி என ஜாம்பவான்களால் நிகழ்த்த முடியாத சாதனையை அன்கேப்டு, சர்வதேச அனுபவமே இல்லாத வீரர் ரஜத் பட்டிதார் ஆர்சிபிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக ஒரே அணிக்காக ஆடி 10 ஆண்டுகள் கேப்டன் பொறுப்பேற்று பலமுறை இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையைத் தவறவிட்ட விராட் கோலிக்கு இந்த வெற்றியின் ஆழம், மதிப்பு என்னவென்று தெரியும். அதனால்தான் கடைசிப் பந்து வீசப்பட்டவுடன் மைதானத்தின் தரையில் தலை கவிழ்ந்து கோலி தன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கண்ணீர் சிந்தி அழுதார். இதுபோல் விராட் கோலியை அதீத உணர்ச்சியுடன் ரசிகர்கள் பார்த்தது இல்லை. 18 ஆண்டுகள் கனவு நனவாகும்போது ஏற்படும் மகிழ்ச்சி, உழைப்பின் மதிப்பு, அர்ப்பணிப்பின் பலன் அனைத்தும் கண்ணீராக கோலியின் முகத்தில் வெளிப்பட்டது. கோலி மகிழ்ச்சியில் "என் இளமைக் காலம், உச்சபட்ச காலம், அனுபவம் அனைத்தையும் ஆர்சிபி அணிக்காக அர்ப்பணித்துள்ளேன்" என்று தெரிவிக்கும் போது இந்த வெற்றியின் மகத்துவம் புரிந்திருக்கும். பஞ்சாப் பேட்டர்களுக்கு கடிவாளமிட்ட ஆர்சிபி காணொளிக் குறிப்பு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் உள்ள 6வது ஆடுகளத்தில் சர்வசாதாரணமாக முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களை கடந்துவிடும். அந்த வகையில் ஆர்சிபி அணியை 190 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு சிறப்பானது. அந்த 190 ரன்களையும் டிபெண்ட் செய்து பஞ்சாப் அணியை 184 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, 6 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் உழைப்பு அதைவிட பாராட்டுதலுக்குரியது. குறிப்பாக ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் குர்னல் பாண்டியா, யஷ் தயால், புவனேஷ்வர் குமார் ஆகியோரின் பந்துவீச்சு இறுதிப்போட்டியில் ஆகச் சிறந்ததாக இருந்தது. இந்த 3 வீரர்களும் ஏற்கெனவே சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் இடம் பெற்று இருந்ததால், அதில் கிடைத்த அனுபவங்களை ஆர்சிபிக்காக அள்ளிக் கொடுத்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இதில் குர்னல் பாண்டியா ஐபிஎல் இறுதிப்போட்டியில் 2வது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தபோது, பைனலில் சிறப்பாகப் பந்து வீசியதற்காக குர்னல் பாண்டியா முதன்முதலில் ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில் இந்த விருது அவருக்கு இரண்டாவதாகும். கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. பஞ்சாப் அணியும் வெற்றியை விடாது துரத்தி வந்தது. ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க நேர்ந்தது, அதன் ஓட்டத்திற்குக் கடிவாளமிட்டது. ஹேசல்வுட் வீசிய முதல் இரு பந்துகள் டாட் பந்துகளாக மாறிய உடனே ஆர்சிபியின் வெற்றி கணிதரீதியாக உறுதியானது. கடைசி ஓவரில் ஸ்டிரைக்கை தக்கவைத்த சஷாங் சிங் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து அணியை கடைசிக் கட்டம் வரை அழைத்து வந்தும் பயனில்லாமல் பஞ்சாப் 6 ரன்களில் தோற்றது. சஷாங் சிங் 30 பந்துகளில் 61 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலியும் 18ஆம் எண்ணும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்சிபி கோப்பை வென்ற மகிழ்ச்சியில் விராட் கோலி மைதானத்தில் அனைவரின் பார்வையும் 18ஆம் எண் அச்சடிக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்திருந்த நபர் மீதுதான் குவிந்திருந்தது. 18வது சீசனில்தான் ஆர்சிபி அணிக்கு கோப்பை கிடைத்திருக்கிறது, கோலியின் ஜெர்ஸியிலும் 18. ஆகவே 18வது சீசன்தான் ஆர்சிபிக்கு அதிர்ஷ்டமாக மாறியிருக்கிறது. இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பைனலில் கோலி சேர்த்த 77 ரன்கள் எந்த அளவுக்கு முக்கியமானதாக இருந்ததோ அதே அளவுக்கு இந்தப் போட்டியில் அவர் சேர்த்த 43 ரன்களும் முக்கியமானது. விராட் கோலியின் ரன்வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் ஸ்லோவர் பந்துகளை அதிகமாக வீசினர். ஷார்ட் பிட்ச் பந்துகளையும், ஷார்ட் பவுன்ஸர்களையும் அதிகமாக வீசி கோலியின் ரன்சேர்ப்புக்கு கடினமான தடைகளை அமைத்தனர். ஆனால், அவர் அதையும் மீறி அவ்வப்போது ஃபுல்ஷாட்களை அடித்து ரன்களை சேர்த்தார். பில் சால்ட், அகர்வால், பட்டிதாருடன் சேர்ந்து 131 ரன்கள் வரை கோலி சேர்த்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானத்தது. ரன் சேர்க்க வேண்டும் என்ற கோலியின் தீர்க்கமான எண்ணம்தான் ஆர்சிபி ரன்ரேட்டை குறையவிடாமல் வைத்திருந்தது. கோலி ஆட்டமிழந்த பிறகுதான் பஞ்சாப் அணி விக்கெட் வீழ்த்தும் வேகத்தை அதிகப்படுத்தியது. இந்த சீசனில் மட்டும் கோலி, 15 போட்டிகளில் ஆடி 657 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 8 அரைசதங்களும் அடங்கும். குர்னல் பாண்டியாவின் அனுபவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணி 3 சாம்பியன் பட்டங்களை வென்ற போட்டிகளில் கிடைத்த அனுபவத்தை குர்னல் பாண்டியாவுக்கு இந்த இறுதி ஆட்டத்தில் காண்பித்தார் மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டம் வென்றபோது, அந்த அணியில் குர்னல் பாண்டியா இடம் பெற்றிருந்தார். அதில் கிடைத்த அனுபவம், பந்துவீச்சு ஆகியவற்றைத்தான் இந்த இறுதி ஆட்டத்தில் காண்பித்துள்ளார். குர்னல் பாண்டியா சுழற்பந்துவீச்சாளர் என்றபோதிலும், களத்தில் இவர் வீசும் பந்து பெரிதாக டர்ன் ஆகாது. ஏனென்றால், குர்னல் பாண்டியா சராசரியாக 90 முதல் 100 கி.மீ வேகத்தில் பந்துவீசுவதால், பந்தில் டர்ன் இருக்காது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக, இறுதிப் போட்டியில் குர்னல் பாண்டியா தனது பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்து 80 முதல் 85 கி.மீ வேகத்தில் பந்து வீசியதால், அவரால் ரன்கள் கொடுப்பதும் கட்டுப்படுத்தப்பட்து. பேட்டர்கள் பெரிய ஷாட்களை குர்னல் பந்தவீச்சில் அடிப்பதும் கடினமாக இருந்தது. அவ்வாறு ஷாட் சரியாக கிடைக்கவில்லையெனில், அது கேட்சாகவும் மாறிவிடும் நிலை இருந்தது. 4 ஓவர்களை வீசிய குர்னல் பாண்டியா, 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட்டுக்கு 55 ரன்கள் இருந்தற்கு இணையாக பஞ்சாப் அணியும் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் என நெருக்கடியின்றி இருந்தது. ஆனால் குர்னல் பாண்டியாவுக்கு பந்துவீச வாய்ப்பு கொடுப்பட்டதும், வழக்கமான பந்துவீச்சை வீசாமல் பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களையும், வேகத்தை மாற்றி அமைத்தும் பந்துவீசி குர்னல் பாண்டியா, பஞ்சாப் பேட்டர்களை திணறவிட்டார். குர்னல் பாண்டியாவின் பந்துவீச்சை சரியாகக் கணிக்க முடியததால்தான், பிரப்சிம்ரன் தேவையற்ற ஷாட்டை ஆடி விக்கெட்டை இழந்தார். ஜோஷ் இங்லிஸ் செட்டில் ஆகி அடிக்கத் தொடங்கும் நிலையில் அவரது விக்கெட்டையும் குர்னல் பாண்டியா வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். குர்னல் பாண்டியா எடுத்த 2 விக்கெட்டுகளும் வீசிய 4 ஓவர்களும் ஆட்டத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி 12 டாட் பந்துகளையும் குர்னல் பாண்டியா வீசித் தனது பந்துவீச்சைத் துல்லியமாக்கினார். ஆட்டத்தைப் புரட்டிப்போட்ட புவியின் அனுபவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புவனேஷ்வர் குமார் வீழ்த்திய இரண்டு பெரிய விக்கெட்டுகள் ஆர்சிபி வெற்றி பெறப் பெரிதும் உதவியது ஆர்சிபி அணிக்கு எளிதான வெற்றி கிடைப்பதற்கு புவனேஷ்வர் குமாரின் கடைசிக் கட்ட பந்துவீச்சு முக்கியமானதாக அமைந்தது. புவனேஷ்வர் வீசிய 17வது ஓவரில் வைடு பந்தை அடித்து, வதேரா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டோய்னிஷ் புவியின் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தவுடன், அடுத்த பந்தில் தேர்டுமேன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். புவி ஒரே ஓவரில் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். ஜிதேஷின் கேமியோ ஜிதேஷ் ஷர்மா 10 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜித்தேஷின் இந்த கேமியோ, ஆர்சிபி ரன்ரேட்டை சட்டென உயர்த்தியது. ஜிதேஷ் ஷர்மா வரும்வரை பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் ஜேமிஸன், ஓமர்சாய், வைசாக் ஆகியோர் ஆர்சிபி பேட்டர்களுக்கு ஸ்லோவர் பந்துகளையும், ஆஃப் கட்டர்களையும், ஸ்லோ பவுன்சரையும் வீசித் திணற வைத்தனர். ஆனால், ஜிதேஷ் வந்தவுடன் கார்டு லென்த்தில் பந்து வீசியவர்களின் பந்துவீச்சை "ரூம் கொடுத்தும்", ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் எனத் தேர்ந்தெடுத்தும் அடித்ததால் ரன்ரேட் உயர்ந்தது. ஜிதேஷ் அடித்த 24 ரன்கள், ஆர்சிபி அணி 190 ரன்களை எட்டுவதற்கு முக்கிய உதவியாக இருந்தது. ஆர்சிபி அணியில் ஒரு பேட்டர்கூட அரைசதம் அடிக்காவிட்டாலும்கூட ஜிதேஷ் கடைசி நேரத்தில் கேமியோ ஆடியதுதான் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஹேசல்வுட் வருகை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பில் சால்ட் பிடித்த இந்த கேட்ச்தான் ஆர்சிபி பந்துவீச்சாளர்ளுக்கு நம்பிக்கையளித்தது ஆர்சிபி அணிக்குள் ப்ளே ஆஃப் சுற்றில் ஹேசல்வுட் விளையாடுகிறார் என்ற செய்தியே ஆர்சிபி அணிக்குப் பெரிய உற்சாகத்தையும், கூடுதல் பலத்தையும் உண்டாக்கியது. இதனால்தான் முதல் தகுசிச் சுற்றில் ஸ்ரேயாஸ் பேட் செய்ய வந்தவுடன் ஹேசல்வுட்டுக்கு பந்துவீச வாய்ப்பளித்து விரைவாக வீழ்த்த முடிந்தது. இந்த ஆட்டத்தில் ஹேசல்வுட் ஒரு விக்கெட் வீழ்த்தி 54 ரன்களை வாரி வழங்கினாலும் ஹேசல்வுட் அணிக்குள் இருந்ததே சக பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. பில்சால்ட் பிடித்த கேட்ச் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இருவருமே அதிரடியான தொடக்கத்தை அளித்து வெற்றியை நோக்கி அணியை விரைவுபடுத்தினர். இதனால் இருவரையும் பிரிக்க முடியாமல் ஆர்சிபி அணி திணறியது. ஹேசல்வுட் ஓவரில் பிரயன்ஸ் ஆர்யா தூக்கி அடித்த பந்து டீப் ஸ்குயர் லெக்திசையில் சிக்ஸருக்குப் பறக்கவே அங்கிருந்த சால்ட் அருமையாக கேட்ச் பிடித்தார். அந்த கேட்சை பிடித்த பிறகு நிலைதடுமாறி பவுண்டரி எல்லைக்குள் அவர் செல்லவே பந்தை மேலே தூக்கி வீசி பின்னர் மைதானத்துக்குள் வந்து சால்ட் அற்புதமாக கேட்ச் பிடித்து ஆர்சிபிக்கு நம்பிக்கையளித்தார். சால்ட் பிடித்த இந்த கேட்ச்தான் ஆர்சிபி பந்துவீச்சாளர்ளுக்கு நம்பிக்கையளித்தது, மற்ற வீரர்களுக்கும் அது கடத்தப்பட்டது. இறுதியாக 18 ஆண்டுகள் காத்திருப்பும் ஏக்கமும் முடிவுக்கு வந்து ஆர்சிபி ரசிகர்களின் கனவு நனவானது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gkddpk7r4o
  14. இருவரின் வாழ்வும் தொலைந்தது. எமது சமூகத்தில் பெண் ஒழுக்கமீறலில் ஈடுபடக்கூடாது. ஆண் ஈடுபட்டால் பெரிதுபடுத்தமாட்டார்கள்!
  15. முதலிடம் பெற்ற @நந்தன்அண்ணைக்கும் இரண்டாமிடம் பெற்ற @ரசோதரன்அண்ணைக்கும் மூன்றாமிடம் பெற்ற @புலவர்அண்ணைக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடத்திய @கிருபன்அண்ணைக்கு வாழ்த்துகள். போட்டியில் பங்குபற்றிய 23 உறவுகளுக்கும் வாழ்த்துகள்.
  16. 03 JUN, 2025 | 01:30 PM காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில்இராணுவ முகாம் அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்களை காணவில்லை. சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான கிராங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பாலங்களும் சேதம் அடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி லாசென் லாசுங் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான மக்களும் ஆங்காங்கே தவித்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு சிக்கிம் சாட்டன் எனும் பகுதியில் உள்ளஇராணுவ முகாம் அருகில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்களை காணவில்லை. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில் “இதுவரை நிலச்சரிவில் சிக்கிய 3 வீரர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 4 வீரர்கள் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். காணாமல்போன 6 வீரர்களை மீட்கும் பணி தொடர்கிறது. சவாலான வானிலைக்கு மத்தியில் இப்பணியில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன" என்று தெரிவித்தனர். நிலச்சரிவில் இறந்த வீரர்கள் ஹவில்தார் லக்விந்தர் சிங் லான்ஸ் நாயக் முனிஷ் தாக்குர் போர்ட்டர் அபிஷேக் லகடா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/216441
  17. சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்தியருக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன? பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு, கிட்டத்தட்ட ஈர்ப்பு விசையே இல்லாத நிலையில் வாழ்வதற்கான பயிற்சி ஆக்ஸியம் 4 குழுவின் விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 1 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 ஜூன் 2025 விண்வெளி மீதான மனிதர்களின் நாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் வல்லரசுகள் மட்டுமே ஈடுபட்டிருந்த நிலை மாறி, இன்று மூன்றாம் உலக நாடுகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் கூட முனைப்புடன் ஈடுபட்டுள்ளன. விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டான ஒரு விண்வெளித் திட்டம் தான் ஆக்ஸியம் 4. ஒரு இந்தியர் உள்பட நான்கு விண்வெளி வீரர்களைச் சுமந்துகொண்டு ஆக்ஸியம் 4 விண்கலம் ஜூன் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கிறது. இந்திய விமானப்படையின் கேப்டன் சுபான்ஷு சுக்லா, இந்தக் குழுவின் கமாண்டராக விண்வெளிக்குச் செல்கிறார். கடந்த 1984ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த ராகேஷ் ஷர்மா சோவியத் விண்கலமான சோயுஸ் டி-11இல் விண்வெளிக்குப் பயணித்தார். அவருக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லப்போகும் இரண்டாவது இந்தியரும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லப்போகும் முதல் இந்தியரும் சுபான்ஷு சுக்லாதான். ஆக்ஸியம் 4 திட்டத்தில் அவர் பங்கேற்பது இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கும் ககன்யான் திட்டத்திற்கும் சுபான்ஷுவின் இந்தப் பயணத்தில் கிடைக்கும் அனுபவம் உதவிகரமாக இருக்கும். விண்வெளியின் சூழலில், குறிப்பாக விண்வெளி நிலையத்தில் தங்கிப் பணிபுரிவதற்காக முதல்முறை அங்கு செல்லும் அவருக்கு என்ன மாதிரியான சவால்கள் இருக்கும்? அவற்றில் கிடைக்கும் அனுபவம் ககன்யான் திட்டத்திற்கு எத்தகைய நுண்ணறிவுகளை வழங்கும்? முதல் விண்வெளிப் பயணத்தில் உள்ள சவால்கள் என்ன? சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதில் இருக்கும் மிகப்பெரிய சவால், நுண்ணீர்ப்பு விசையில், அதாவது கிட்டத்தட்ட ஈர்ப்பு விசையே இல்லாத சூழலில் பணியாற்ற வேண்டும். அதோடு, விண்வெளி நிலையத்தின் பணிகளையும் அங்கு சென்ற நோக்கம் தொடர்பான பணிகளையும் அதே சூழலில் தினசரி மேற்கொள்ள வேண்டும். நுண்ணீர்ப்பு விசை சூழலில் வாழ்வதை, தண்ணீருக்குள் இருப்பதோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம் என்கிறார், மொஹாலி இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முன்னாள் விஞ்ஞானியுமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். அதுகுறித்துப் பேசிய அவர், "தண்ணீருக்குள் ஒருவர் மூழ்கிவிட்டால், அவரது உடலுக்கு உறுதியாக நிற்கவோ செயல்படவோ எந்தப் பிடிமானமும் இருக்காது. இப்படிப்பட்ட சூழலில் உடல் சுய உந்துதலின்பேரில் எதிலாவது கால்களை ஊன்றிக்கொள்ளவோ அல்லது கைகளால் பிடித்துக்கொண்டு சமாளிக்கவோ முயலும். அப்படித்தான் கிட்டத்தட்ட ஈர்ப்பு விசையற்ற சூழலில் இருக்கும். உறுதியாக நிற்கவோ, செயல்படவோ முடியாமல் மிதந்துகொண்டே தனது அன்றாடப் பணிகளை மேற்கொள்வது சிரமமாக இருக்கும். இதற்கென சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு இருந்தாலும்கூட, முதன்முதலில் அத்தகைய உண்மையான சூழலை எதிர்கொள்ளும்போது அதற்கேற்ப தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ள சிறிது நேரம் பிடிக்கும்," என்று விளக்கினார். பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு,சுபான்ஷு சுக்லா ஆக்ஸியம் 4 திட்டத்தின் கமாண்டராக செயல்பட்டு விண்கலத்தை இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, விண்வெளி நிலையத்தில் உள்ள கருவிகளை நுண்ணீர்ப்பு விசை சூழ்நிலையில் இயக்குவதிலும் முதல் முறை செல்லும் விண்வெளி வீரர் சவால்களைச் சந்திக்கக்கூடும். பூமியைப் போன்று ஈர்ப்பு விசையுள்ள இடத்தில் கருவிகளை இயக்குவதில் பெரிய சிக்கல் இருக்காது. ஆனால், விண்வெளியில் ஒரு லிவரை திருகினால்கூட, அதை இயக்கும் நபர் மிதந்துகொண்டே இருப்பதால் அவரும் அதனுடன் சேர்ந்து சுற்றுவார். அதனால் கருவிகளைச் சரிவர இயக்குவது சவாலாகவே இருக்கும். அதைத் தவிர்க்கவே, சர்வதேச விண்வெளி நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கைப்பிடிகள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் த.வி.வெங்கடேஸ்வரன். "ஒருவர் ஏதேனும் கருவியை இயக்கும்போது, ஒரு கையால் அந்தக் கைப்பிடிகளில் ஒன்றைப் பிடித்து, தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, மற்றொரு கையால் கருவியை இயக்குவார்." இதுபோக, ஆக்ஸியம் 4 திட்டத்தில், நாசா, ஐரோப்பிய விண்வெளி நிலையம், இஸ்ரோ எனப் பல்வேறு விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆகவே, விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள், அந்தந்த நாட்டின் நிறுவனங்களுக்கான சர்வதேச விண்வெளி நிலையத்தின் மாடியூல்களை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதே வேளையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உபகரணங்களும் அங்கு இருக்கும் என்பதால், அவற்றை இயக்குவதற்கான நுண்ணறிவையும் பெற்றிருக்க வேண்டும். ஆக்ஸியம் 4 விண்வெளிப் பயணம் ககன்யான் திட்டத்திற்கு எப்படி உதவும்? பட மூலாதாரம்,ISRO/ANI படக்குறிப்பு,ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லப்போகும் இந்தியர்கள். பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்ஷு சுக்லா. கடந்த ஜனவரி மாதம், ஆக்ஸியம் 4 விண்வெளிப் பயணம் குறித்துப் பேசிய குழுவின் கமாண்டர் சுபான்ஷு சுக்லா, இதில் கிடைக்கும் அனுபவங்களும் படிப்பினைகளும் ககன்யான் திட்டத்திற்குப் பேருதவியாக இருக்குமென்று தெரிவித்தார். "ஆக்ஸியம் 4 திட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு மிக முக்கியமான தருணத்தில் கிடைத்துள்ளது" எனக் குறிப்பிட்ட சுக்லா, "கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவின் மகன் அல்லது மகள் விண்வெளிக்குச் செல்வார் என்று உத்தரவாதம் அளித்தார். அதைத் தொடர்ந்து ககன்யான் திட்டம் தொடங்கியது" என்றார். அந்தக் கனவை நனவாக்க பலரும் ஓய்வின்றி உழைத்து வரும் நிலையில், ஆக்ஸியம் 4 பயணத்தில் கிடைக்கும் விலைமதிப்பற்ற படிப்பினைகள் அதற்குப் பெரிதும் உதவும் என்று முழு நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு, இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதும் அங்கு 2 வாரங்கள் தங்கிப் பணியாற்றுவதில் கிடைக்கும் அனுபவமும் ககன்யான் திட்டத்தை முழுமைப்படுத்துவதில் இருக்கக்கூடிய சவால்களைச் சரிசெய்யக் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்," என்றும் கூறினார் சுக்லா. ககன்யான் திட்டத்தின் கீழ் இந்தியா விண்வெளி அனுப்பவுள்ள குழுவிலும் சுபான்ஷு சுக்லா இருப்பதால், இந்தப் பயணத்தில் அவருக்குக் கிடைக்கும் அனுபவம், ககன்யான் பயணத்தை எளிதாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, நுண்ணீர்ப்பு விசையில் பணியாற்றுவது, கருவிகளை இயக்குவது, விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்வது, அன்றாட வாழ்வை இயல்பாகக் கொண்டு செல்வது போன்றவற்றில் கிடைக்கும் நுண்ணறிவு, ககன்யான் பயணத்தை எளிதாக்கும் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். "மனிதர்கள் பூமியில் இருப்பதைப் போல் அங்கு சராசரி வாழ்வை மேற்கொள்ள இயலாது. நுண்ணீர்ப்பு விசையில், சாப்பிடுவது, கழிவறை பயன்படுத்துவது போன்ற சாதாரண செயல்பாடுகளுக்கே தனிப் பயிற்சி அவசியம். அத்தகைய பயிற்சிகள் இருந்தாலும்கூட, அவற்றை முதல்முறை அங்கு செய்யும்போது சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். அப்படிப்பட்ட பயிற்சிகளை நேரடியாக விண்வெளியிலேயே பெறுவதற்கான வாய்ப்பு இது. அவை ககன்யான் பயணத்திற்குப் பெரிதும் உதவும்" என்கிறார் வெங்கடேஸ்வரன். ஆக்ஸியம் 4 குழுவினருக்கு வழங்கப்படும் பயிற்சிகள் யாவை? பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு,ஆக்ஸியம் 4 குழுவினர் ஜூன் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணிக்கின்றனர் விண்வெளிப் பயணத்தில் இருக்கும் நடைமுறை சவால்களைச் சமாளிக்க, ஆக்ஸியம் 4 குழுவினருக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நுண்ணீர்ப்பு விசையின் விளைவுகளை எதிர்கொள்ளவும், தங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் தேவையான உடற்பயிற்சிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்டை இயக்குவதற்கு சுற்றுப்பாதை இயக்கவியல், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டாக்-இன் செய்வதற்கான நடைமுறைகள், அவசர கால நெறிமுறைகள் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது. ஆக்ஸியம் 4 பயணத்தில், சுபான்ஷு சுக்லா தான் விண்கலத்தின் விமானியாகச் செயல்படப் போகிறார். ஆகவே, இந்தச் சிக்கலான அமைப்புகளில் அவர் அனுபவப்பூர்வமாகத் தேர்ச்சி பெறுவது இந்தியாவின் எதிர்கால திட்டத்திற்குப் பயனளிக்கும். இதுபோக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் வீரர்கள், கேபினில் காற்றழுத்தம் குறைவது, தீ விபத்து அல்லது நச்சு வாயுக்கள் கசிவது போன்ற அவசர நிலைகளையும் எதிர்கொள்ளும் சூழல் ஏற்படலாம். அதற்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும். இதற்கென, அத்தகைய சூழ்நிலைகளை செயற்கையாக உருவகப்படுத்தி தீவிர பயிற்சிகள் விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆக்ஸியம் 4 பயணத்தில் சுபான்ஷு சுக்லா என்ன செய்வார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாசிப் பன்றிகள், நுண்பாசிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார். சுபான்ஷு சுக்லா குறித்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்று உண்டு. அவர் இந்திய விமானப் படையின் விமானியும் விண்வெளி வீரரும் மட்டுமல்ல, சுக்லா ஒரு ஆராய்ச்சியாளரும்கூட. சுபான்ஷு சுக்லா, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் (IISc) இருந்தபோது இரண்டு ஆய்வுக் கட்டுரைகளின் இணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அதில் ஓர் ஆய்வு, சந்திரன் மற்றும் செவ்வாய் கோள்களுக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் தேவையான விண்வெளி வாழ்விடங்களை உருவாக்குவது குறித்தானது. பீம் (BHEEM) எனப் பெயரிடப்பட்ட வேற்றுக்கிரகங்களில் விரிவாக்கிப் பயன்படுத்தவல்ல மாதிரி வாழ்விடத்தை வடிவமைப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆய்வுக் குழுவில் சுபான்ஷு சுக்லாவும் இடம் பெற்றிருந்தார். . இந்நிலையில், தற்போதைய பயணத்தில் அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார். அவற்றில் முக்கியமான ஆய்வு பாசிப் பன்றிகள் பற்றியது. எட்டு கால்களைக் கொண்ட, உருளை வடிவத்திலான ஒரு நுண்ணுயிர்தான் இந்த பாசிப் பன்றிகள்(Tardigrade). பாசிப் பன்றிகள், அதிகபட்ச கதிர்வீச்சு, சுமார் 140 டிகிரி செல்ஷியஸுக்கு மேற்பட்ட வெப்பநிலை, ஆழ்கடல் பகுதிகளில் காணப்படும் அழுத்தத்தைவிட ஆறு மடங்கு அதிக அழுத்தம் என மிகக் கடுமையான சூழல்களிலும் உயிர் பிழைக்கக்கூடியவை. ககன்யான்: இந்தியாவின் விண்கலத்தில் பறக்கப் போகும் வீரர்கள் யார் யார்? சர்வதேச விண்வெளி நிலையம் 29000 கி.மீ. வேகத்தில் விழுந்து நொறுங்கப் போவது ஏன்? சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களின் ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? விண்வெளியில் வீரர்கள் எப்படி உடல்கழிவுகளை அகற்றுகின்றனர்? பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு,ஆக்ஸியம் 4 திட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கிறார்கள். பூமியில் சுமார் 600 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நுண்ணுயிர்கள், விண்வெளியில் காணப்படும் நுண்ணீர்ப்பு விசையில் அவற்றின் உயிர் பிழைக்கும் திறன், இனப்பெருக்க நடத்தைகள் போன்றவற்றை சுக்லா ஆய்வு செய்யப் போகிறார். விண்வெளியில் பாசிப் பன்றிகளின் தகவமைப்பு செயல்பாடுகளை ஆராய்வது, நீண்டதூர விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதற்கான உயிரி தொழில்நுட்பங்களை உருவாக்க உதவலாம் என்று நம்பப்படுகிறது. அதேபோல, நுண்ணீர்ப்பு விசையில் நுண்பாசிகளின்(Micro algae) வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றங்களையும் இஸ்ரோ ஆய்வு செய்யும். இவை புரதச்சத்து மிக்கவை என்பதால், நீண்டதூர விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும்போது இவற்றை வளர்த்து உணவாகப் பயன்படுத்த முடியுமா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும், மைக்ரோகிராவிட்டி சூழலில் எலும்புத்தசை செயலிழப்பு (Skeletal muscle dysfunction) குறித்தும் அதற்கான சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்வதும் இந்தப் பயணத்தின் நோக்கமாக உள்ளது. அதோடு, நுண்ணீர்ப்பு விசை சூழலில் பயிர் விதைகள் எப்படி முளைவிடுகின்றன என்பதை ஆராய்ந்து விண்வெளி விவசாயத்திற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறியும் முயற்சியையும் நாசாவுடன் இணைந்து இஸ்ரோ மேற்கொள்ளவிருக்கிறது. இந்த விண்வெளிப் பயணம், இந்தியாவின் கனவுத் திட்டமான ககன்யானுக்கு, ஆக்ஸியம் 4 விண்வெளிப் பயணத்தில் கிடைக்கும் படிப்பினைகள் உறுதுணையாக இருக்கும் என்பதால் இஸ்ரோவுக்கு மிக முக்கியமான திட்டமாகப் பார்க்கப்படுகிறது. ஆக்ஸியம் 4 திட்டத்தின் முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள: ஆக்ஸியம் 4 திட்டம் என்றால் என்ன? சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தக் குழுவினர் என்ன செய்யப் போகிறார்கள்? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgqy15594go
  18. INNINGS BREAK Final (N), Ahmedabad, June 03, 2025, Indian Premier League PBKS chose to field. Royal Challengers Bengaluru (20 ov) 190/9 Current RR: 9.50 • Last 5 ov (RR): 58/5 (11.60) Punjab Kings Win Probability: RCB 43.40% • PBKS 56.60%
  19. செம்மணி மனிதப் புதைகுழி - இன்று ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்பு Published By: VISHNU 03 JUN, 2025 | 08:39 PM யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அதனை அடுத்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது. இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக , மண்டையோடு ஒன்றும், கை எலும்பு ஒன்றும் அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது, ஐந்து மண்டையோடுகளுடன், எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதன் அடிப்படையில் அவை, அவசர அவசரமாக புதைக்கப்பட்டவையாக இருக்கலாம் எனும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இது வரையிலான அகழ்வு பணிகளில் 07 மனித மண்டையோடுகளுடன் கூடிய, எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்ட மனித எலும்பு கூட்டு தொகுதியில் ஒரு எலும்பு கூட்டு தொகுதி முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/216509
  20. 03 JUN, 2025 | 05:00 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கடந்த அரசாங்கத்தினால் ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தில் 23 பாடசாலைகளே தேசிய பாடசாலைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறன. ஏனைய பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு அதுதொடர்பில் மீளாாய்வு செய்தே நடவடிக்கை எடுக்க வேண்டி இருகிறது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ரோஹித்த எம்.பி தனது கேள்வியின்போது, கடந்த அரசாங்க காலத்தில் மாகாணசபைக்கு கீழ் இருந்த ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றி, அந்த பாடசாலைகளின் பெயர் பலகையையும் தேசிய பாடசாலையாக மாற்றியமைத்து, அந்த பாடசாலைகளில் இருக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவித்து, அதுதொடர்பான நிகழ்வும் நடத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் அந்த பாடசாலைகளில், அதாவது, வலயத்துக்கு ஒரு தேசிய பாடசாலையாக பெயரிடப்பட்டிருக்கிறது. அதனால் தேசிய பாடசாலைகளாக தெரிவுசெய்யப்பட்ட ஆயிரம் பாடசாலைகள் தற்போதும் தேசியப்பாடசாலைகளாக செயற்படுத்தப்படுகிறதா? அல்லது அந்த பாடசாலைகளை மீண்டும் மாகாணசபைக்கு கீழ் கொண்டுவரப்படுமா என கேட்கிறேன். ஏனெனில் குறித்த ஆயிரம் பாடசாாலை திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டிருக்கும் பாடசாலை அதிபர்களுக்கு அண்மையில் அரசாங்கத்தினால் சுற்றுநிருபம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. அதில் குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலையாக எழுத்து மூலமான நடவடிக்கைகளில் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் அதற்கு பொறுப்பு கூறவேண்டி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் உங்களின் கருத்து என்ன? பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில், கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலைகளாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீண்டும் மாகாணசபைக்கு கீழ் கொண்டுவரும் எண்ணம் இல்லை. என்றாலும் தேசிய பாடசாலையாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகள், பெயர் பலகையில் மாத்திரமே தேசிய பாடசாலையாக இருந்ததே தவிர தேசிய பாடசாலையாக முன்னேற்ற எந்த வேலைத்திட்டமும் இருந்ததில்லை. அந்த பாடசாலைகளை தெரிவு செய்து தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கே நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டும் இருக்கிறது. தற்போது தேசிய பாடசாலைகளாக 23 பாடசாலைகளே பெயரிடப்பட்டிருக்கிறது. அந்த 23 பாடசாலைகளை மாத்திரமே தேசிய பாடசாலைகளாக நாங்கள் ஏற்றுக்காெள்கிறோம். பெயரளவில் தேசிய பாடசாலையாக கொண்டுசெல்ல நாங்கள் தயாரில்லை. அந்த பாடசாலைகளை மாகாணசபையால் நல்லமுறையில் நிர்வகித்து வருவதாக இருந்தால், அதனை அவர்கள் முன்னெடுத்துச்செல்வதில் பிரச்சினை இல்லை என்றார். https://www.virakesari.lk/article/216468
  21. பட மூலாதாரம்,@RKFI படக்குறிப்பு, நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார் 50 நிமிடங்களுக்கு முன்னர் கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, கர்நாடகாவில் "தக் லைஃப்" திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. "தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்" என 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. வரும் ஜூன் 5ஆம் தேதி, தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இதுகுறித்து பேசிய கர்நாடகாவின் கன்னடம் மற்றும் கலாச்சார அமைச்சர், "கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரின் படத்தைக் கர்நாடகாவில் தடை செய்வோம்" எனத் தெரிவித்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை (மே 30) அன்று, கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்காவிட்டால், ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தினை புறக்கணிப்போம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், "இதற்கு முன்பும் மிரட்டப்பட்டிருக்கிறேன். நான் தவறு செய்திருந்தால், மன்னிப்பு கேட்பேன். இல்லையென்றால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இது என்னுடைய வாழ்க்கை முறை, தயவுசெய்து இதில் தலையிடாதீர்கள்." என்று கூறியிருந்தார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு பட மூலாதாரம்,@RKFI படக்குறிப்பு, வரும் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் தக் லைஃப் திரைப்படம், கர்நாடக மாநிலத்தில் மட்டும் வெளியாகாது இதையடுத்து 'தக் லைஃப்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 2) மனு தாக்கல் செய்தது. "கர்நாடகாவில் தக் லைஃப் படத்தைத் திரையிட தடை விதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. எனவே, தடையை நீக்கி, திரையிட அனுமதிக்க வேண்டும். திரையரங்கங்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக அரசுக்கும், போலீஸுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. லைவ் லா (Live Law) இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் படி, இந்த மனுவை இன்று காலை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா விசாரித்தார். கமல்ஹாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா ஆஜரானார். அப்போது பேசிய நீதிபதி எம். நாகபிரசன்னா, "இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு பேசக் கூடாது." எனக் கூறினார். மேலும், "கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். தற்போது நீங்கள் பாதுகாப்புத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலை கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது. மேலும், அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இதைச் செய்தீர்கள்? நீங்கள் வரலாற்றாய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதி எம். நாகபிரசன்னா, 'கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதால், தன்னுடைய கருத்துக்களுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டுமென' அறிவுறுத்தினார். மீண்டும் மதிய வேளையில் நீதிமன்றம் கூடியபோது, நடிகர் கமல்ஹாசனின் வழக்கறிஞர் தியான் சின்னப்பா, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். கடிதத்தில் கமல்ஹாசன் கூறியது என்ன? படக்குறிப்பு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதம் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் இன்று (ஜூன் 3) எழுதியுள்ள கடிதத்தில், கன்னடம் குறித்த தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில், "புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் 'தக் லைஃப்' ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது என் நோக்கம் அல்ல என்பதையும் தெரிவிப்பதுதான் நான் சொன்ன வார்த்தைகள். கன்னட மொழியின் வளமான பாரம்பரியத்தில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், "தமிழ், கன்னடம், தெலுகு, மலையாளம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து மொழிகளுடனும் எனக்குள்ள பிணைப்பு நிலையானது மற்றும் இதயப்பூர்வமானது." என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், "சினிமா என்பது மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும். ஒருபோதும் அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது இந்த அறிக்கையின் நோக்கம்." என்று தெரிவித்துள்ளார். "எனது வார்த்தைகள், அவற்றுக்கான உண்மையான நோக்கத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கர்நாடகா, அதன் மக்கள் மற்றும் அவர்களின் மொழி மீதான எனது உண்மையான பாசம் அங்கீகரிக்கப்படும் என்றும் நான் மனதார நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். ஜூன் 10ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு பட மூலாதாரம்,@RKFI கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தை மேற்கோள் காட்டி பேசிய கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா, "இந்த கடிதத்தில் 'மன்னிப்பு' என்ற வார்த்தை காணப்படவில்லை" என்று கூறினார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா, "கட்டாயப்படுத்துவது என்பது இருக்கக்கூடாது" என்றார். "இது கட்டாயப்படுத்துவது அல்ல, அவருக்கு இருக்கவேண்டிய பண்பு. அவர் ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறார்?" என்று கேள்வியெழுப்பினார் நீதிபதி. அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் "கன்னட மொழியின் மீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பது தான் அவரது நிலைப்பாடு." என்று கூறினார், "அதைத் தெளிவுபடுத்த பல வழிகள் உள்ளன. மன்னிப்பு கேட்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. இங்குதான் நீங்கள் ஈகோவை பற்றிக்கொண்டிருக்கிறீர்கள். மாநில மக்களின் உணர்வுகள் தான் குறைமதிப்பிற்கு உள்படுத்தப்பட்டுள்ளன. பிரச்னையின் அளவை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது வேறு எதற்கோ வழிவகுக்கும். மன்னிப்புக் கேட்டு இந்த விஷயத்தை முடித்து வைத்தால் என்ன?" என்று கூறினார் நீதிபதி. "கமல் ஹாசன் சொல்ல வேண்டிய அனைத்தையும் தெரிவித்துவிட்டார். நிலைமை இப்படியே தொடர்ந்தால், அவர் கர்நாடகாவில் தனது படத்தை வெளியிட விரும்பவில்லை" என்று வழக்கறிஞர் தியான் வாதத்தை முடித்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, மனுதாரர் தனது படத்தை தற்போது கர்நாடகாவில் வெளியிட விரும்பவில்லை என்பதை பதிவு செய்து கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம், அனைத்து தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை வழக்கை ஒத்திவைக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வரும் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் தக் லைஃப் திரைப்படம், கர்நாடகா மாநிலத்தில் மட்டும் வெளியாகாது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cev4k22ngvko
  22. Published By: DIGITAL DESK 3 03 JUN, 2025 | 11:04 AM மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரான 69 வயதுடைய பில் கேட்ஸ் தனது சொத்தில் பெரும்பகுதியை அடுத்த 20 ஆண்டுகளில் ஆபிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை அபிவிருத்தி செய்யப் பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். சுகாதாரம், கல்வி முன்னேற்றம் முதலியவற்றின் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு நாடும் செழிப்பை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு மூலம் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும் வழிகளைச் சிந்திக்கும்படி அவர் இளையர்களைக் கேட்டுக்கொண்டார். அடுத்த 20 ஆண்டுகளில் தமது சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்கபோவதாகவும், 2045 ஆம் ஆண்டுக்குள் தமது சொத்தின் மதிப்பு 200 பில்லியன் டொலரை எட்டிவிடும் எனவும் கேட்ஸ் சென்ற மாதம் தெரிவித்திருந்தார். 20 ஆண்டுகளின் இறுதியில் தமது அறக்கட்டளையின் செயல்பாடுகள் நிறுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/216416
  23. LIVE Final (N), Ahmedabad, June 03, 2025, Indian Premier League PBKS chose to field. Royal Challengers Bengaluru (10/20 ov) 87/2 Current RR: 8.70 • Last 5 ov (RR): 41/1 (8.20) Live Forecast: RCB 198 Punjab Kings
  24. நீங்கள் என்ன மொழியியல் அறிஞரா?'' : கன்னடம் குறித்த கருத்துக்கு கமல் ஹாசனை சாடிய உயர் நீதிமன்றம் 03 JUN, 2025 | 02:11 PM பெங்களூரு: கமல் ஹாசனின் கன்னடம் குறித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவர் தாக்கல் செய்த மனு ஒன்றினை விசாரித்த உயர்நீதிமன்றம், "நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?" என்று கடுமையாக சாடியுள்ளது. வரவிருக்கும் தனது புதிய படமான தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதையும், திரையிடப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று கமல் ஹாசன் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணையின் போது உயர் நீதிமன்றம் கமல்ஹாசனை இவ்வாறு சாடியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி கூறுகையில், இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு பேசக்கூடாது. கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். தற்போது நீங்கள் பாதுகாப்புத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலை கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது. மேலும் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இதைச் செய்தீர்கள் நீங்கள் வரலாற்றாய்வாளரா? அல்லது மொழியியல் அறிஞரா? (நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லையென்றால்) கர்நாடகாவில் உங்கள் படம் ஓட வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள். கருத்துச் சுதந்திரம் மக்களின் மனதினைப் புண்படுத்துவதற்காக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மன்னிப்புக்கேளுங்கள் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் கர்நாடகாவிலிருந்தும் சில கோடிகளை சம்பாதிக்க விரும்புகிறீர்கள்." என்று தெரிவித்தார். முன்னதாக, கமல்ஹாசன் மன்னிப்புக்கேட்காவிட்டால், ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ள கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தினை புறக்கணிப்போம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனது திரைப்பட வெளியீட்டுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதிய நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், படத்தினை அமைதியாக வெளியிடுவதற்கும், அப்படம் திரையிட திட்டமிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு போதுமான பாதுகாப்பினை உறுதி செய்யவதில் அவசரமாக தலையிடுமாறு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்திருந்தார். கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா, படத்தின் வெளியிட்டு தேதியை நிறுத்த முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். என்ன பிரச்சினை?: ‘தக் லைஃப்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், ‘‘தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது” என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராகப் போராட்டங்களில் குதித்துள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/216446
  25. RCB Vs PBKS: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் - கோப்பை யாருக்கு? பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார் 31 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) 2025 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு ஆமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் பலப்பரிட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களில், இரு அணிகளும் அதிகபட்சமாக இறுதிப்போட்டிவரை தான் முன்னேறியுள்ளன. ஆனால், ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை. ஆதலால், இரு அணிகளுக்கும் 18 ஆண்டுகால காத்திருப்பு நனவாகப்போகிறதா, அல்லது கனவாகவே இருக்கப் போகிறதா என்பது இன்று தெரிந்துவிடும். ஆர்சிபி அணி கடந்த 2009, 2011, 2016 ஆகிய 3 சீசன்களில் பைனலுக்கு முன்னேறி தோல்வியடைந்து 4வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 2014ம் ஆண்டு பைனலுக்கு முன்னேறியபின் 10 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஈ சாலா கப் நமதே- இந்த ஆண்டாவது நனவாகுமா? பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,இதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களில், இரு அணிகளும் அதிகபட்சமாக இறுதிப்போட்டிவரை தான் முன்னேறியுள்ளன. ஆர்சிபி ரசிகர்களும், அணியினரும் கடந்த 18 ஆண்டுகளாக ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். "ஈ சாலா கப் நமதே" என்ற வாசகம் இந்த ஆண்டாவது நனவாகுமா என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஆர்சிபியின் நம்பிக்கை வீரர் விராட் கோலி, இந்த ஆண்டு இருக்கும் ஃபார்ம், அர்ப்பணிப்பு, பேட்டிங்கில் உற்சாகம் ஆகியவை எந்த சீசனிலும் இல்லாத அளவு இருப்பதால் கோப்பையை ஆர்சிபி அணிக்காக வென்றுகொடுப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். ஆர்சிபி அணியும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் சமகலவையில் வீரர்களைக் கொண்டிருப்பது கூடுதல் சாதகமான அம்சமாகும். 8-வது வரிசை பேட்டர்கள் வரை நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்களை ஆர்சிபி அணி வைத்திருக்கிறது. அதேபோல, ஹேசல்வுட், யஷ் தயால், புவி ஆகியோரின் வேகப்பந்துவீச்சு எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது. சுழற்பந்துவீச்சில் சூயஷ் சர்மா, க்ருனால் பாண்டியா இருவரும் சிறப்பாக செயல்படுவதால், பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தசைப்பிடிப்பால் கடந்த 2 போட்டிகளில் களமிறங்காத டிம் டேவிட் இன்று விளையாடுவார் எனத் தெரிகிறது. முதல் தகுசிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எளிதாக சுருட்டி வீழ்த்திய ஆர்சிபி அணி மீண்டும் இறுதிப்போட்டியில் மோதுகிறது. ஷ்ரேயாஸ் அய்யரை 4 முறை ஹேசல்வுட் ஆட்டமிழக்கச் செய்திருப்பதால், இன்று இருவருக்கும் இடையிலான ஆட்டம் சவாலாக இருக்கும். ஹேசல்வுட் பந்துவீச்சில் 22 பந்துகளைச் சந்தித்த ஷ்ரேயாஸ் 11 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 முறை ஆட்டமிழந்துள்ளது கவனிக்கத்தக்கது. அதேபோல அர்ஷ்தீப் சிங் புதிய பந்தில் ஸ்விங் செய்யும்போது, அதை ஆர்சிபி வீரர் பில் சால்ட் எவ்வாறு சமாளித்து ஆடுவார் என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பஞ்சாப் அணியைப் பொருத்தவரை அதிரடியான தொடக்கம், கேப்டன் ஷ்ரேயாஸின் ஆகச்சிறந்த ஆட்டம் ஆர்சிபிக்கு பெரிய சவாலாக அமையும். பஞ்சாப் அணியும் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் ஆர்சிபிக்கு இணையாக சமபலத்துடன் இருக்கிறது. பஞ்சாப் அணியில் யுவேந்திர சஹலுக்கு கையில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததால் அவருக்குப் பதிலாக ஹர்பிரித் பிரார் களமிறங்குவார் எனத் தெரிகிறது. ஆடுகளம் எப்படி? பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,நரேந்திர மோதி மைதானம் நரேந்திர மோதி மைதானத்தில் நடுப்பகுதியில் இருக்கும் ஆடுகளத்தில் ஆட்டம் நடக்கிறது. இந்த ஆடுகளம் செம்மண், கரிசல் மண் கலந்து வடிவமைக்கப்பட்ட ஆடுகளமாகும். பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளமாகவும், தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். இந்த சீசனில் இதே ஆடுகளத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத் அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்து பெரிய இலக்காக நிர்ணயித்தால்தான் தப்பிக்க முடியும். அதிகாலை 3 மணிக்குவந்த பில் சால்ட் ஆர்சிபி தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்டுக்கு குழந்தை பிறந்திருக்கும் செய்து கிடைத்ததால் அவர் இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்குத்தான் ஆமதாபாத் விமானநிலையத்தில் சால்ட் வந்திறங்கினார். கடந்த சில நாட்களாக பயிற்சியில் பங்கேற்காமல் நேரடியாக போட்டியில் சால்ட் பங்கேற்கிறார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8jgkp383v0o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.